Total Views: 1671
அவளை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.
"என்ன எதுமே செய்யல". என எட்டி அவன் முகம் பார்க்க, இந்த ஒரு மாதமும் தூங்காமல் அழைப்புற்றவன் இன்று தான் இளைப்பாற இடம் கிடைத்ததுப் போல் தூங்க ஆரம்பித்து விட்டான்.
"ஏங்க.?"
"ம்ம்"
"எதும்.." என்றவளுக்கு எப்படி கேப்பது என்று தெரியவில்லை.மென்று முழுங்கியவள்.
"ஏதும் பண்ணலையா?" ஒரு வழியாக கேட்டே விட்டாள்.
"நோம்பி முடியட்டும் பார்த்துக்கலாம், லிவிங்ன்னா அது மட்டும் தான் பண்ணுவாங்கன்னு இல்ல, சரியா?"
"அதுவரைக்கும் அந்த உஷா வீட்டுக்குப் போக மாட்டீங்க தானே "என்றவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் விரக்தியாக புன்னகைத்துக் கொண்டான்.
'தன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக அவளையே கொடுக்கத் தயாராக இருக்கிறாளே' என்று சந்தோசப் படுவதா..? 'அவளை தவிர வேறுப் பொண்ணை ஏறேடுத்தும் பார்க்க மாட்டேன்' என்ற தன் காதலை புரிந்துக் கொள்ளாமல் பேசுகிறாளே என கோவப்படுவதா? என்று தெரியவில்லை.
"என்ன சிரிக்கிறீங்க போக மாட்டீங்க தானே".
"கம்முனு படு, இன்னைக்கு ஒரு நாள் தான் இங்க இருப்பேன். அந்த ஒருநாளாவது நிம்மதியா தூங்க விடரியா?" என்றவன் அவள் இடையில் கைப் போட்டு படுத்து விட்டான்.
அவன் மீது நம்பிக்கை இருக்கிறது இருந்தாலும் உஷாவின் பெயரைக் கேட்டாலே அவளுக்குள் எரிச்சல் தான் உண்டாகியது. அதும் இல்லாம இதைக் காரணமாக வைத்து நந்தனின் அருகில்லையே இருக்கலாம் என்ற ஆசையில் தான் அவன் என்னச் சொன்னாலும் சரி என்றாள்.
நந்தனுக்கு அதெல்லாம் பொருட்டே இல்லை படுத்தவன் நன்றாக உறங்கிவிட்டான். வெகுநேரம் கழித்து உறங்கினாள் நிலா.
காலையில் எழும்போது நந்தன் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்குள் சென்றாள்.
அவள் திரும்பி வரும் போது நந்தன் எழுந்து படுக்கையில் காலை நீட்டி ஆட்டிக் கொண்டிருந்தான்.
"எழுந்திடுங்களா நான் போய் காபி கொண்டு வரேன்".
"அதெல்லாம் வேண்டா"
"நீங்க காபி குடுப்பிங்க தானே".
"ம்ம் இப்போ வேண்டா" என்றவன். "அப்புறம் எப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லப்போற?"
'திரும்ப முதல்ல இருந்தா..' என்பது போல் நிலாப் பார்க்க.
"நான் நேத்து சொன்னதைக் கேட்கல. ஒரு மாசத்துக்கு முன்னாடி சொன்னேனே" என்றவன் அவள் மேஜையின் மீது வைத்திருந்த யுகியின் நோட்டைத் தூக்கிக் காட்டினான்.
அவன் என்ன கேக்கிறான் என இப்போது நிலாவிற்கு புரிந்து விட.'அவன் உடம்பு சரியானதும் கேக்கறேன்' என்றாள்.
"அதுக்குள்ள எதாவது காரணம் கண்டுபிடிச்சி சொல்லவா?".
"இப்போ எப்படி கேக்க முடியும்?".
"வாயிலைன்னு மொக்கை காமெடி போட விருப்பமில்லை."
"கேக்கறேன்"
"இன்னைக்கே"
"இன்னைக்கேவா.கொஞ்ச நாள் போகட்டுமே" என்றாள் பாவமாக.
"இன்னைக்கே கேக்கணும்". என்றவனைப் பார்க்கும் போது நிலாவிற்குப் பார்க்க பக்கா வில்லனாக தெரிந்தான் நந்தன்.
"அவன் உங்க தம்பி தானே ஏதோ எதிரியைப் பார்க்க மாதிரி பார்க்கறீங்க?".
"கேக்க முடியுமா? முடியாதா?" என்றான் அழுத்தமாக, அவனுக்கு தானே தெரியும் நிலா விஷயத்தில் எல்லோருமே அவனுக்கு எதிரி தான் என்று.
"கேக்கறேன்".
"இப்போவே"
"இப்போவேவா இன்னும் அவன் எந்திருச்சிருக்கவே மாட்டான், எழுந்ததும் எதுக்கு ஷாக் குடுக்கணும்?"
அவன் அழுத்தமாக பார்க்க,
முடியுமா? முடியாதா? இதான கேக்கப் போறிங்க கேக்கறேன் போதுமா? " என்றாள்.
நந்தன் சொல்லவில்லை என்றாலும் நிலாவே கேட்டிருப்பாள். யுகி சற்று சரியானப் பின்பு கேக்கலாம் என எண்ணிருந்தாள்,அதற்குலாம் அவகாசம் கொடுக்க முடியாது என வீராப்பாய் நிற்பவனை என்ன செய்வது?.
"நடக்க முடியுமா? தூக்கிட்டுப் போகணுமா?"
"ஆமா ரொம்ப தான் அக்கறை இருக்கற மாதிரி கால் புண்ணாகி கிடக்கு என்னாச்சி ஏதாச்சின்னு ஒத்த வார்த்தை கேக்க முடியல. இப்ப வந்து தூக்கிட்டு போறானா?" என முனவிக்கொண்டே முன்னாள் நடந்தாள்.
"கேட்டதுக்கு பதில் வரல". என நந்தன் அதே இடத்தில் அமர்ந்திருக்க.
"படுபாவிப் பையன் எல்லோரும் கல்யாணம் ஆனா நிலா காலடியில் நந்தன் கிடைப்பான்னு அத்தனை பில்டப் கொடுத்தாங்க, இவன் என்ன என்னைய ட்ரில் வாங்கிட்டு இருக்கான்" என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவனை நோக்கி திரும்பியவள்.
"நல்லா இருக்குய்யா காலு, நான் நடந்தே வந்துக்கறேங்கைய்யா போதுமாய்யா இப்போ வாரீங்களா?".
"ரொம்ப கொழுப்புடி உனக்கு, சீக்கிரம் கரைக்கிறேன்" என்றவன் வேகமாக இறங்கி அவன் வீட்டிற்குச் சென்று விட்டான்.
நிலா மெதுவாக நடந்து வந்து சேரும் போது, யுகி சோபாவில் அமர்ந்து காபிக் குடித்துக் கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தான் நந்தன்.
வேறு யாரும் அங்கு இல்லை, மணிமேகலை சமையலறையில் இருக்க நிலாவிற்கு எப்படி ஆரம்பிப்பது என்று தயக்கமாக இருந்தது.
கண்டிப்பாக அவள் கேக்கும் கேள்வியால் யுகியின் மனம் வேதனையடையும்,
அவர்கள் நினைத்ததுப் போல் இல்லாமல் இருந்தால் அவன் முகத்தில் எப்படி முழிப்பாள்?. அந்த தயக்கம் தான் நிலாவிற்கு.
அவள் நிற்பதை செய்தித்தாளை விலக்கி விட்டு நந்தன் பார்க்க, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் அவனே ஏதாவது முகத்தில் அடித்ததுப் போல் பேசிவிடுவான் என பயந்து நிலாவே ஆரம்பித்து விட்டாள்.
"யுகி"
"வா பூனை. காபி குடி"
"அது இருக்கட்டும், ஹாஸ்பிடல இருக்கும் போது உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு சொன்னேன்ல" என்றதும், படபடப்பில் யுகியின் இதயம் எகிறி குதித்தது.
"ம்ம் ஆ...மா" அதை சொல்வதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவனுக்கு.
"அதை கேக்கணும்."
"கேளு".
"இந்த நோட்டைப் பாரு" என அவன் எழுதியப் பக்கத்தை பிரித்துக் கொடுத்தாள்.
"என்ன இது?" என்றவாறே வாங்கியவன், அதில் இருக்கும் வார்த்தைகளைப் பார்த்ததும் அப்படியே நிலைக்குத்தி நின்றுவிட்டான்.
இவ்வளவு நாள் நடக்க முடியாமல் தடுமாறியவன், இன்று அதிர்ச்சியில் அவனே எழுந்து நின்று விட்டான்.
"என்னது யுகி இதெல்லாம்? நீ என்னைய லவ் பண்ணியா..?" என்றாள் கோவமாக.
நந்தனை வைத்துக்கொண்டு இப்படி கேப்பாள் என்று அவன் என்ன கனவா கண்டான்? .தனியாக இருந்திருந்தால் கூட ஏதாவது சொல்லி சமாளித்திருப்பான்.
தன்னை சமன் செய்துக் கொண்டவன்.
"உன்னய லவ் பண்ணுனனா யார் சொன்னா?"
"இதுல அப்படி தானே எழுதிருக்கு".
"அதுல எழுதிருந்தா அது நீயாகிடுமா?, நிலான்னு என்னைக்கு உன்னைய நான் கூப்புட்டுருக்கேன். ஊர் உலகத்துல இருக்கற நிலா எல்லாம் நீயாகிடுவியா?"
"அப்போ இது யாரு?".
"அது எதுக்கு உனக்கு?".
"பொய் சொல்றியா யுகி?".
"நான் எதுக்கு பொய் சொல்லணும்?, உன்னைய அந்த மாதிரிலாம் யோசிச்சதில்ல. இது வேற ஒருத்தி".
"அப்போ யாருனு சொல்லு எனக்கு தெரியாமல் நீ யார லவ் பண்ண?"
"உன்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாமே பண்ணனும்னு இருக்கா?, நீ லவ் பண்ணதை என்கிட்ட சொல்லிட்டா செஞ்ச?" என அவன் எதிர் கேள்வி கேக்க. நிலாவினால் பதில் சொல்ல முடியவில்லை.
"என்ன பதிலையே காணா.."
"சரி நீ லவ் பண்றதை என்கிட்ட சொல்லணும்னு இல்ல, ஆள் யாருனு காட்டு பார்க்கறேன்"
"நேரம் வரும்போது காட்டுவேன்".
"இப்போ நேரத்துக்கு என்ன பிரச்சனை? இந்த வீட்டுல லவ்க்கு எதிர்ப்புச் சொல்ல மாட்டாங்கல."
"அவ வீட்டுல சொல்லுவாங்க" என்றவன் மெதுவாக நடக்க,நிலா நந்தனை தான் பார்த்தாள்.
"இப்போ உங்க சந்தேகம் தீர்ந்துடுச்சா?".
"அவன் சொன்னதை நீ நம்பு நான் நம்பணும்னு அவசியமில்ல" என்றவன் யுகியிடம் திரும்பி.
"நீ என்ன சொன்னாலும் அவ நம்புவா, நான் போலீஸ்காரன் எவன் பொய் சொல்லுவான், எவன் உண்மையை சொல்றான்னுக் கூடாது தெரியாம அந்த பீல்ட்டுல லீட் பண்ண முடியாது, உன் லவரைக் கூட்டிட்டு வா" என்று சொல்ல.
"சரி நம்பலைன்னா விடுங்க யாரும் நம்பறதுக்காக நான் லவ் பண்ண முடியாது" என்று சொன்னவன் அறைக்குள் புகுந்துக் கதவை அடைத்துக் கொண்டான்.
கதவின் மீது சாய்ந்து பெரும் மூச்சை விட்டவனுக்கு அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நின்றது போல் இருந்தது.
எது நடக்கக் கூடாது என நினைத்தானோ, அது நடந்துவிட்டது. எப்படியோ சமாளித்துவிட்டு வந்துவிட்டான்.இப்போது காதலிக்கு எங்கேப் போவான்? மண்டை காய்ந்தது.
நிலாவை இழந்து விடுவோமோ என புதிய பயம் வேறு தொற்றிக் கொள்ள வளவனிற்கு அழைத்தான்.
காலை வரை அவனுடன் தான் இருந்தான், இப்போது தான் நடைப்பயிற்சி செல்கிறேன் என வெளியே சென்றயிருக்க உடனே அழைத்துவிட்டான் யுகி.
"ஹெலோ சொல்லுடா"
"எங்க இருக்க?"
"இப்போதான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன் ஏண்டா?".
"சீக்கிரம் வா"
"என்னாச்சுன்னு சொல்லு?"
"வா சொல்றேன்."
"டேய் பதறிட்டு ஓடி வரணும்னுடா என்னனு சொல்லு".எனக் கேட்டுக்கொண்டே வேக வேகமாக ஓடி வந்தான்.
"பூனைக்கு விசியம் தெரிஞ்சிடுச்சிடா" என்றதும் வளவனின் நடை தடைப்பட.
"என்ன விஷயம்?".என்றான் அவனுக்கு நியாபகமே இல்லை இப்படி ஒரு விசியம் இருக்கிறது என்பதே.
"அதான் லவ் மேட்டர்".
"அவ்வளவு தானா,நான் கூட நீ கீழே விழுந்துட்டியோன்னு பயந்துட்டேன்டா" என்ற வளவன் இழுத்து வைத்த மூச்சை விட்டான்.
"நாயே இது அதை விட பயங்கரமான விஷயம் டா"
"சரி வரேன் வை."
"சீக்கிரம் வா" என அழைப்பைத் துண்டித்துவிட்டவனுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
"அவன் என்னைய லவ் பண்ணலைன்னு இப்போவாது புரிஞ்சிகிட்டீங்களா?. இதுக்குமேல எங்க உறவை சந்தேகப்படாதீங்க" என நிலா பட்டென்று நந்தனிடம் சொல்ல.
"அவன் லவ் பண்ண பொண்ணைக் கூட்டிட்டு வரட்டும் நான் நம்பறேன்". என்றான் அசால்ட்டாக.
"நீங்க நம்புனா என்ன? நம்பலைன்னா என்ன? அவன் என்னைய லவ் பண்ணல" என்றவள் "வீட்டுக்குப் போறேன்" என்றாள்.
"போ அத எதுக்கு என்கிட்ட சொல்ற?"
"காலு வலிக்குது கொண்டு வந்து விடுங்க."
"உனக்கு என்ன நான் வேலைக்காரனா.?"
"இல்ல வீட்டுக்காரன்", என அவன் அருகில் சென்று அமர்ந்தவளுக்கு அவன் தடித்த கீழ் அதரத்தை சுவீங்கம் போல் சுவைக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
வெட்கம் விட்டு நடுக் கூடத்தில் அவன் இதழை கவ்வும் தைரியமில்லாததால்,அவன் முகத்தையும் இதழையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன். "இன்னும் நீ கிளம்பலையா?". என்றான்.
"அது வேணும்"
"எது?"
"இது" என அவன் கீழுதட்டை இழுத்துக் காட்டியவள். அவன் காதில் எதையோச் சொல்ல, அவள் பேச்சில் நந்தனின் காது மடல் சிவந்து போனது.
"வர வர மோசமா பேசற வாயை உடைச்சா சரியாப் போய்டும் போடி.."
"தந்தா போறேன்."
"என்ன பயம் விட்டுப் போச்சா.?"
"அதுலாம் எப்போவோ போயிடுச்சி. இனி இந்த நந்தன் நிலாவோட சுருக்கு பையில தான்" என்றாள் கிண்டலாக.
"அதுக்கு வேற ஆளைப் பாரு. நான் கேட்டது கிடைக்காம நீ தலைகீழா நின்னாலும் ஒரு புரோஜனமும் இல்ல".
"என் மாமன் மதுரவீரன் கணக்கா இவ்வளவு கம்பீரமா இருக்கும் போது நான் எதுக்கு வேற ஆளைப் பார்க்கப் போறேன்?" என்றவள் அவனது கீழ் அதரத்தை கையில் பிடித்து இழுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவள் சென்றும் கூட அந்த இடம் முழுவதும் அவள் வாசனையே வீசிக் கொண்டியிருந்தது.
அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் கூட காதில் ஒலிக்க
"ராட்சசி நான் சும்மா இருந்தாலும் நியாபகப் படுத்தி என்னைய சும்மா இருக்கவிட மாட்டா போல" என்று மீசையை நீவியவனுக்கு சுகமாக வீசியது அவனின் தென்றல் வாசம்.
யுகி சொன்னதை நந்தன் நம்பவில்லை என்பது வேறு விஷயம், ஆனால் அதைப் பற்றிய கவலை இப்போ இல்லை. அவனது ராட்சசி அவனிடம் வந்து சேர்ந்துவிட்டாள். அதுப் போதாதா அவனுக்கு?.
புன்னகையுடன் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தவனை எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டுப் போனான் வளவன்.
"யுகி"
"ம்ம்" என்றவன் கதவை திறக்க.
உள்ளே வந்த வளவன். "என்னடா உன் அண்ணன் எப்போமே மூஞ்சுல முள்ளைக் கட்டுன மாதிரி இருப்பான் இப்போல அடிக்கடி சிரிக்கிறான் ஏதாவது விசியமா இருக்குமா?"
"நாயே என்னோட பிரச்சனைக்கு வழி சொல்லுனா, நீ அவன் கிட்ட போய்ட்டியா ஒழுங்கா சொல்லு".
"என்னடா சொல்றது?"
"இப்போ நிலாங்கற பேர்ல எங்க போய் பொண்ணு தேடறது?".
"பொண்ணுலா கிடைக்கும் ஆனா அது உனக்கு ஒத்து வராது"
"ஏன் அப்படி சொல்ற?".
"நீ என்ன வேலைக்காகப் பொண்ணு தேடற?, நீ கேட்ட பேர் இருந்தா போதும்ன்னு சொல்ல. நீ லவ் பண்ண பொண்ணு தேடற?"
"வாயைக் கழுவு, லவ் பண்ண பொண்ணுன்னு காட்ட தான் தேடறேன்".என்றவனை வினோதமாக பார்த்தான் வளவன்.
"என்னடா அப்படி பார்க்கற.?"
"நீ இன்னும் அம்முவையே நினைச்சிட்டு இருக்கியா?".
"அவளை எப்போ மறந்துருக்கேன். காதலியா என் மனசுல இருந்து போய்ட்டா.இனி அவ நந்தனோட பொண்டாட்டி.மத்தபடி எனக்கு எல்லாமே அவ தான்"
"அப்புறம் என்ன?".
"அவ இருந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் இன்னொருத்திக்குக் குடுக்க என்னால முடியாது".
"அதை நீ வாய் வார்த்தைக்குக் கூட சொல்ல விரும்பாதப்பையே தெரிஞ்சிகிட்டேன்".
"லவ்ங்கற கேட்டகரியை விட்டுட்டுப் பார்த்தா எனக்கு எல்லாமே அவ தான்".
"இதை நந்தனுக்கு முன்னாடி சொல்லிடாத".
"ஏன் சொன்னா என்ன பண்ணிடுவான்? நியாயப்படிப் பார்த்தா அவன்தான் இப்போ வந்தவன்", என்றவன், "அந்தக் கதையை அப்புறம் பேசுவோம் இப்போ எனக்கு நிலாங்கற பேர்ல பொண்ணு வேணும். நடிக்கிறதுக்கு பணம் கூடக் கொடுத்துடலாம் ஏதாவது பண்ணுடா."
"நடிக்க யாருடா வருவா? அப்படியே வந்தாலும் நாளப் பின்னால இதை வெச்சி பிளாக் மெயில் பண்ணா என்ன பண்ணுவ?".
"ஹா ஆமா"
"நடிக்கலா வேண்டா நிலாங்கற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ".
"வாழ ஐடியா கேட்டா சாக ஐடியா கொடுக்கறியா?"
"ஒரு தடவை சாகர வரைக்கும் போனவன் தானே இதையும். செஞ்சிப் பாரு"
"முடியாது".
"அப்போ வாய்ப்பில்லை, அவ நாளைக்குப் பொண்ணை காமின்னும் சொல்லுவா மாட்டிக்கிட்டு சாவு."
"அப்போ வழி சொல்ல மாட்ட"
"இருந்த வழியை சொல்லிட்டேன் யுகி இதுக்கு மேல நீதான் முடிவு பண்ணனனும், அவ உன் மனசுல இல்லைன்னு சொல்ற,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு?".
"அவளால உண்டான காயத்தை யாராலயும் சரிப் பண்ண முடியாது வள்ளு புரிஞ்சிக்கோ".
"எல்லா காயத்துக்கும் மருந்து இருக்கு, வரப் பொண்ணு உனக்கு மருந்தா இருக்கலாம்ல".
"நீ நல்லா பிரைன் வாஷ் பண்ற?"
"நான் சரியா தான் பண்றேன் ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ".
"என்னோட மனவலியை அவகிட்ட காட்டி அவளை கஷ்டப் படுத்திடுவனோன்னு பயமா இருக்குடா"
"என்னோட யுகியால ஒரு பொண்ணை காயப்படுத்த முடியாதுடா, கொஞ்ச நாள் விலகி இருப்ப அப்புறம் சரியாகிடும்"
"இல்ல வள்ளு இது சரியா வராது".
"அப்போ என்னமோ பண்ணு. போ" என்றவன் கதவை திறந்துக் கொண்டு வெளியே வர. அப்போதும் அங்கேயே இருந்த நந்தன்.
"என்ன பொண்ணை தேடற படலம் பயங்கரமாக நடக்கும் போல.."என நந்தன் புருவத்தை உயர்த்த.
"இவனுக்கு எப்படி தெரியும் ஒட்டு கேட்டுருப்பானோ,?" என வளவன் சந்தேகமாகப் பார்க்க
"போலீஸ்காரனுக்கு நாலுப் பக்கமும் கண்ணு இருக்கு" என வளவனின் எண்ணவோட்டத்தை வைத்து நந்தன் சொல்ல,
"இங்க இருந்தா என்னோட வாயை புடுங்கிடுவான்" என்று வளவன் பதிலும் சொல்லாமல், நிற்கவும் செய்யாமல் செல்ல
"அவன்கிட்ட சொல்லு எந்த பிராடு வேலைப் பார்த்தாலும் என்னைய மீறி தான் பார்க்கணும்னு" என்றான்.
வளவன் அவனை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.
நிலா பேசியது, யுகி பேசியது என இன்றைய நாள் ஏதோ மனதில் ஒருவித இனிமையான மனநிலை தோன்ற சந்தோஷமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் நந்தன்.