இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -112 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 23-08-2024

Total Views: 1495


"பரவால்ல நந்து நான் தப்பு பண்ணா தானே அடிப்ப. அப்படி ஏதும் பண்ணாம பார்த்துக்கறேன்" 

"இவ்வளவு சொல்றேன் புரிஞ்சிக்க மாட்டியா?"  என்றவனுக்கு சலிப்பு ஏற்பட்டது.

"நீ இல்லாம என்னால வாழ முடியாது செத்துடலாம் போல இருக்கு நந்து ப்ளீஸ்."

"உன்னோட சேர்ந்தா நான் செத்துடுவேன்" .

"நான் எந்த டார்ச்சரும் பண்ண மாட்டேன் நந்து".

"இங்கப் பாரு இதுதான் என்னோட முடிவு. நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ"  என நகர்ந்து விட்டான்

அடுத்து வந்த நாட்களில் நந்தனின் காலில் கூட விழுந்து கெஞ்சிப் பார்த்தாள்.காலேஜ் ஹீரோவை காதலிக்கிறோம் என இவ்வளவு நாள் கெத்தாக சுத்தி வந்தாகிவிட்டது,  இப்போது பிரேக்அப் ஆகிவிட்டது என்று தெரிந்தால் எல்லோரும் தன்னை கேவலமாகப் பார்ப்பார்களே என்ற கவலை தான் அவளுக்கு, மற்றபடி காலில் விழுந்து கெஞ்சி காதலை வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை. 'நீ இல்லனா இன்னொருத்தன், ஊர் உலகத்தில் நீ மட்டும் தான் ஹேண்ட்சம்மா இருக்கியா என்ன?' . என்ற எண்ணம் 

கல்லூரி முடியும் வரையிலுமே கெஞ்சிப் பார்த்து நந்தன் முடியாது என்றதும் "போடா"  என்று போய்விட்டாள்.

இவள் நாயாக கெஞ்சிய விஷயம் எப்படியோ அவளது வீட்டிற்கு தெரிந்து,  உடனே மாப்பிள்ளைப் பார்த்து கட்டி வைத்து விட்டனர்.

பார்த்த மாப்பிள்ளையும், இவளுடன்  ஒருவாரம் குடும்பம் நடத்தி விட்டு வெளிநாடு சென்றவன் நான்கு வருடம் கழித்து தான் வந்தான்.

வந்ததும் உஷாவை அவன்  பயங்கரமாக பாலியல் வன்கொடுமை செய்ய அதில் இருந்து வெளியே  வர இப்போது நந்தன் தான் உதவினான். வெளியே வந்து விட்டாலும் அவனால் உண்டான குழந்தையை அழிக்க முயற்சி செய்தாள் உஷா.

நந்தன் தான் குழந்தையை அழிப்பது குற்றம் அது இது என பேசி பேசியே அவள் மனதை மாற்றி பெற்றுக்கொள்ளச் செய்திருந்தான்.

சரஸ்வதிக்கு உஷாவின் காதல் விஷயம் தெரியும், ஆனால் எப்படி பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. உஷா உஷாராக அதை மட்டும் மறைத்துவிட்டாள்.

நந்தன் பிஸ்னஸ் வேண்டாம் என காவல்துறையில் சேர்ந்து விட,அவனது அழகும் கம்பீரமும் இன்னும் பலமடங்கு கூடியது. அதை அவன் அருகில் இருந்து பார்த்த சரஸ்வதியின் மனம் தடுமாறாமல் இருந்தால் தானே அதிசயம். அவன் தன் காதலை ஏற்றுக் கொள்வான் என்ற நப்பாசையில் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு இதோ இப்போது இதுவரைக்கும் வந்து நிற்கிறது.

எப்போதும் கைதிகளை அடித்து வெளுக்கும் நந்தன். நிலா பேசிய வார்த்தையின் தாக்கத்தில் இன்று தடவிக் கொண்டிருந்தான்.

"சார்"

"ம்ம்"

"அடிக்கலையா தடவி குடுத்துட்டு இருக்கீங்க?" என கைதியே கேட்டுவிட்டான்

"டேய் வெண்ணை அடிக்க சரியான இடமான்னு பார்த்துட்டு இருக்கேன்டா, நான் அடிச்சி செத்துப் போயிட்டீன்னா என்ன பண்றது.

"என்னது செத்துப் போய்டுவனா.?"

"பின்ன என்ன சந்தைக்கா போவ, ஒழுங்கா சொல்லுடி எடுத்த 50 பவுனை எங்க வெச்சிருக்க.?"

"நான் எடுக்கல.."

"இதையே எத்தனை தடவைடா சொல்லுவ.. எதோ இன்னைக்கு என்னோட மூடு கொஞ்சம் நல்லா இருக்கப் போய் அமைதியா பேசிட்டு இருக்கேன்"  என தடவிக் கொடுத்த இடத்தை அழுத்திப் பிடிக்க.

அவன் வலியில் கத்தினான்.

"பிடியே இப்படி இருக்கே இவர் அடிச்சா நான் தாங்குவனா?"  என நினைத்தானோ? என்னவோ? உயிர் தான் முக்கியம் என எடுத்த நகையை எங்கு வைத்திருக்கிறான்என இடத்தைச் சொல்லிவிட்டான்.

"இவர் மட்டும் எப்பிடிடா அடிக்காமலே உண்மையை வாங்கிடறாரு" என மற்றவர்கள் ஆச்சரியப்பட..

"இவருலாம் பக்கவான போலீஸ் மெட்ரியல்டா, அதான் இந்த வேலைக்கு அப்படியே ஆப்ட்டா செட்டாகராரு" என்றான் ஒருவன்.

அவர்களின் பேச்சு நந்தனிற்கு கேட்டது. அவன் இதழ்கள் லேசாக வளைந்துக் கொண்டன. அவ்வளவு தான் அவனது ரியாக்சன் என்பது போல் சென்று நாற்காலியில் அமர்ந்தவனின் கண்ணில் மேஜையின் மேல் இருந்த கோப்பு பட்டுவிட அதை எடுத்துப் பிரித்துப் படித்தான்.

இவ்வளவு நேரமும் குடிக்கொண்ட மென்மையும் காதலும்  எங்கோ பறந்துப் போய்விட,  நந்தனின் கண்கள் ரத்தமாக சிவந்து நின்றது கோவத்தில்.

"இன்ச் அந்த 13 வயசு பொண்ணு ரேப் கேஸ் என்னாச்சி?"  என்றான்.

கடுமையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

"கை வைச்ச இடம் ரொம்ப பெருசுன்னு சொல்லிக்கிறாங்க சார்."

"யாரு.?"

"ஆளுங்கட்சி எம்எல்ஏ ஜெகநாதனோட பையன்".

"நான் மந்திரியையேப் பார்த்துட்டேன்.எம்எல்ஏ லா எனக்கு கால் தூசு மாதிரி". என்றவன்  "அந்த குழந்தையை பார்க்க  ஹாஸ்பிடல்ல ஏற்பாடு பண்ணு". என்றவனின் முக தசைகள் அளவுக்கு அதிகமாக இறுகிப்  போயிருந்தது.

"குழந்தை.."

"என்னாச்சி"

"சீரியஸ்ன்னு" என அவர் தயங்க.

"சீரியஸ்ன்னு சொல்லுங்க."

"வீட்டுக்கே கொண்டு வந்துட்டாங்க. இல்லாதப்பட்டவீங்களால செலவு பண்ண முடியல. பொண்ணு பொழைச்சிக்கும்னு நம்பிக்கை இருந்தாக் கூட தைரியமா டிரீட்மென்ட் பார்ப்பாங்க. அதும் இல்லைனதும்" என அவர் வார்த்தையை திக்கி திக்கிப் பேசினார்.

அவருக்கு நந்தனைப் பற்றியும் தெரியும்,  அந்த எம்எல்ஏவைப் பற்றியும் தெரியும், யாரோ ஒருப் பக்கம் போனாலும், இன்னொரு பக்கம் சாவடித்துவிடுவார்கள் என்று.

"வீட்டுக்கு வண்டியை விடு" என்றவன், வேகமாக வேகமாக கிளம்பினான். அவனின் நடையில் கூட கோபம் தெரிந்தது.

"எப்படி எப்படி 13 வயசு குழந்தைக்கிட்ட தப்பா நடக்க முடிஞ்சிது" என கையை ஜீப்பில் ஓங்கிக் குத்தினான்.

"சார் போலா."

"ம்ம்" என்றவன் ஏறி அமர்ந்த தோரணையில் எம்எல்ஏ மகன் மட்டும் கிடைத்திருந்தால், குறுக்கில் மிதித்தே கொன்றிருப்பான் என புரிய, காரை வேகமாக ஓட்டினார்.

பயங்கமான கிராமம், ஊர் எல்லையில் மட்டும் நெருக்கி ஒன்றுடன் ஒன்று மோதிவிடும் என்பது போல் வீடுகள் இருக்க, மற்ற இடம் முழுவதும் வெறும் காடாகத் தான் இருந்தது.

போலீஸ் ஜீப் உள்ளே வரவும் கூடியிருந்த மக்கள் ஓடி வந்து வழி மறைத்தனர்.

"எதுக்கு மறைக்கிறீங்க?"

"நீங்க எதுக்கு உள்ள வரீங்க.? உள்ளே வரக்கூடாது" என இளைஞர்களும் முதியவர்களும் வழி விட மாட்டோம் என போராட்டம் செய்தனர்.

"ஏன் வரக்கூடாது?".

"பொண்ணுக்கு இப்படியாகிடுச்சின்னு கம்பளைண்ட் குடுத்தப்ப எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு வறீங்க.? உங்க அக்கறை ஒன்னும் எங்களுக்கு தேவையில்ல. இதுக்கு காரணமானவீங்களை என்னப் பண்ணனும் நாங்க பார்த்துக்கறோம் நீங்க போய்ட்டு வாங்க" ஊர் மக்கள் முடிவாக சொல்லிவிட்டனர்.

"யார் எடுக்க முடியாதுன்னு சொன்னது?"நந்தனின் குரல் தான் அங்கு ஓங்கி இருந்தது. கூட வந்த இன்ஸ்பெக்டர் பேசவே இல்லை.

"இதோ இவர் தான்"  என இன்ஸ்பெக்டரை மக்கள் கையைக் காட்ட.

அவரைத் திரும்பிப் பார்த்தான்.

இன்ஸ்பெக்டர் பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கினார்,

மறுபடியும் மக்களைப் பார்த்த நந்தன்.

"அவரை விடுங்க,அவர் சூழ்நிலை அது. உங்க பொண்ணுக்கு நான் நியாயம் வாங்கி தரேன், நம்பிக்கை இருந்தா மட்டும் உள்ளே விடுங்க இல்லனா அந்தப் பொண்ணைப் பார்க்காமக் கூட,  நான் செய்ய நினைக்கிறதை செய்ய முடியும். உங்க விருப்பம் தான்"  என்றவன் வண்டி பேனட்டின் மீது ஏறி அமர்ந்து விட்டான் 

"அந்த சார் தான் சொல்லுதுல அப்புறம் என்ன விடுங்கய்யா.. நம்ப பொண்ணுக்கு நீதி வாங்கி கொடுக்கலைன்னா அப்புறம் இருக்குது. இவங்களுக்கும் புள்ளைக் குட்டிங்க இருக்கும்ல" என்று ஒருக் குரல் வர இன்ஸ்பெக்டருக்கு தான் சுருக்கென்றது அவர்களின் வார்த்தை.

வழி மறைத்தவர்கள் தள்ளி நிற்க நந்தனின் கார் அந்தப் பெண் இருந்த வீட்டை நோக்கிச் சென்றது.

மிகவும் சிறிய வீடு, தாழ்வான நுழைவு வாயில் கீழே குனிந்து தான் செல்ல வேண்டும். நந்தன் உள்ளேச் செல்ல.

அந்த 13 வயதுக் குழந்தையை நடுக் கூடத்தில் போட்டு வைத்திருந்தனர். ஒரே ஒரு கற்றாடி, அதும் சுற்ற முடியாமல் சுற்றிக் கொண்டிருக்க. அந்தக் குழந்தையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்திருந்தனர்.

'எல்லோரும் வெளியே போங்க. பொண்ணோட அம்மா அப்பா ரெண்டுபேரும் மட்டும் இருங்க" என நந்தன் குரல் கணீர் என்று வரவும் எல்லோரும் தெறித்து ஓடினர்.

ஒரு பெண் மட்டும் அழுது அழுது முகம் வீங்கிய நிலையில் நின்றது.

"நீ யாரும்மா?"

"பொண்ணோட அம்மாங்க".

"அப்பா எங்க?"

"அவர் ஆஸ்பத்திரில இருக்காருங்க".

"என்னாச்சி?"

"புள்ளைக்கு இப்படி ஆனதுல நெஞ்சு வலி வந்துடுச்சிங்க" என அந்தப் பெண் கதறி அழுக.இரும்பு இதயம் கூட ஆடிதான் போனது.

"யாருன்னு தெரியுமா?"

"தெரியாம என்னங்க நான் வேலைக்கு போன இடத்துல தான் அந்த எம்எல்ஏ பையன் இப்படி பண்ணிப்புட்டான்."

"அவன் மட்டுமா?" என்றவனின் பார்வை இப்போது தான் குழந்தையின் மீது அழுத்தமாக படிந்தது.

கழுத்தின் இருப்பக்கமும் நாய் மாதிரி கடித்து குதறி வைத்திருந்தனர்.அதில் இருந்து ரத்தம் வெளியாகி அதற்கு கட்டுக் கூடப் போடாமல் இருந்தது.

கைகால்கள் முழுவதும் சிகரெட் சூடும்,நகக் கீறலும் தான் தென்பட்டது.

"என்ன இது?".

"அந்த பாவி பையன் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து புள்ளையை கொடுமைப் படுத்திட்டான் சார்,  என் புள்ள இப்போ எனக்குஉயிரோட கிடைச்சா போதும்ன்னு இருக்கு" என தாய் மண்டியிட்டு கதறி அழுக, நந்தனிற்கு என்னவோ போல் மனம் துடித்தது.

"இன்ச்."

"சார்"

"பாப்பாவை ட்ரீட் பண்ண டாக்டரை உடனே இங்க வரச் சொல்லுங்க," என கட்டளைப் போட்டு விட்டு.

அந்தக் குழந்தையைப் பார்த்தான்.

அவன்,நிலாவை எந்த அளவிற்கு மென்மையாக கையாள முடியுமோ அந்த அளவிற்கு மென்மையாக கையாண்டான் அப்படி இருந்து பல இடத்தில் நிலா வலியால் கத்தினாள்.

ஒரு வயதுப் பெண்ணிற்கே அந்த அளவிற்கு வலி இருக்கும் போது,நாலு மிருகங்கள் மேலே பாயிந்து கொதறி வைத்திற்கும் குழந்தைக்கு எந்த அளவிற்கு வலித்திருக்கும். அதும் சிகரெட் சூடு வேறு நந்தனின் மனம் பொறுக்கவில்லை.

ஒருமணி நேரத்தில் மருத்துவர் வந்து சேர்ந்து விட்டார்.

"நந்தன் சார்".

"என்ன டாக்டர் இதெல்லாம், உயிர் போற வரைக்கும் டிரீட்மென்ட் தரதுதானே தர்மம் இப்படி பாதிலையில முடியாம அனுப்பி வெச்சிருக்கீங்க?"

"மேல் இடத்துக்கு பிரஷர் நந்தன்.நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க.?"

"உயிரைக் காப்பாத்துற தானே உங்க கடமை".என்றவன் அவர் பேய் முழி முழிக்கவும், "சரி சொல்லுங்க என்ன என்ன பண்ணிருக்கான்க.?"

"சார்."

"உண்மையை மட்டும் சொல்லணும், எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க, அவங்களை வெச்சி பார்த்து நீங்க சொல்லாததை சொன்னாங்க அப்புறம் உங்களைய என்ன பண்ணுவேனே தெரியாது" என வெளிப்படையாகவே மிரட்டினான். 

"பிறப்பு உறுப்புலையும் சிகரெட் சூடு வெச்சிருக்காங்க.அப்புறம் நிறைய டூல்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க" என்றவரின் கண்கள் கலங்கி விட்டது. 

"வாட்."

"ஆமா சார் இது பக்கா பிளான். ஒரே நாள்ல பார்த்ததும் இப்படி பண்ண முடியாது.இப்படி இப்படிலாம் டார்ச்சர் பண்ணனும்னு பிளான் பண்ணி தான் பன்னிருக்காங்க."

"ஓ..."

"டூல்ஸ் எல்லாம் சொல்ற மாதிரி இல்லை அவங்க நாலுப் பேரும் வாழ்வே தகுதி இல்லாதவீங்க சார்.சைக்கோ தனமா அந்தப் பொண்ணை ஹேண்டில் பண்ணிருக்காங்க".

"ம்ம்" என்றவனின் கழுத்து நரம்பு புடைத்துக் கொண்டு நின்றது.

"சார் நான் சொன்னேனேன்னு"

"கண்டிப்பா சொல்லுவேன்" என்று முடித்தவன் தேவரதி என்ற பெண்ணிற்கு அழைத்தான்.

"நந்து."

"உடனே கிளம்பி நான் அனுப்பியிருக்க லோக்கேசனுக்கு வா."

"என்ன விஷயம்ன்னு சொல்லவே இல்ல."

"வான்னு சொன்னேன்."

"ம்ம்" என்றவள் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு இருந்தாள்.


Leave a comment


Comments


Related Post