இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -113 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-08-2024

Total Views: 1294

"என்ன கூட்டம்? இங்க என்னாச்சி?". எனக் கேட்டுக்கொண்டே அவன் அருகில் ரதி சென்றாள்.

நந்தன் அவளை அழைத்துக் கொண்டு அந்த குழந்தை இருந்த இடத்திற்குச் சென்றவன்.

"இவளை நீதான் காப்பாத்தி தரணும்".என்றான்.

"என்னாச்சி?" என்றவாறு குழந்தையை ஆராய்ச்சி செய்தவள்.

"ஓ மை காட்.. எந்த பொறுக்கிப் பார்த்த வேலை இது".

"உன்னால முடியுமா முடியாதா? அதை சொல்லு".

"ம்ம் ஆம்பூலன்ஸ் ரெடி பண்ணு".

"வளவனை கார் கொண்டு வர சொல்றேன். எங்க இருக்கீங்கன்னு எனக்குக் கூட தெரிய வேண்டாம் பத்திரமா கொண்டுப் போ.."

"ம்ம் சரி. கொஞ்சம் கஷ்டம் தான் நந்து."

"காப்பாத்தனும் "

"ஐ வில் ட்ரை". என்றவளை எரிச்சலாக பார்த்தவன்

"ட்ரை பண்ண உன்னைய வர சொல்லல" என ஆக்ரோசமாக கத்தினான்.

"சரி கத்தாத"

உடனே நந்தன் வளவனுக்கு அழைத்து விட்டான்.

இருவரது எண்ணும்,இருவரின் அலைபேசியிலும் இவ்வளவு நாள் வெட்டியாக தான் இருந்தது. இன்று தான் அதற்கு வேலை வந்திருக்க.

எப்போதும் அழைக்காதவன் அழைக்கவும், உடனே அழைப்பை ஏற்ற வளவன் "என்னாச்சி?" என்றான்

"கார் எடுத்துட்டு நான் சொல்ற லோக்கேசனுக்கு வா."

"உனக்கு"

"எனக்கு எதுவும் இல்ல பத்து நிமிசத்துல வர" என அழைப்பைத் துண்டித்தவன்.

எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்தக் குழந்தையின் அம்மாவிடம் சென்றான்.

"நான் ஒன்னு கேப்பேன்.உங்களால செய்ய முடியுமா?".

"சொல்லுங்க சார்."

"உங்க பொண்ணு செத்துட்டான்னு நினைச்சிக்கோங்க. "

"சார்............"

"உங்க பொண்ணை நான் காப்பாத்தி தரேன். ஆனா நீங்க அவ செத்ததா சொல்லி சடங்கு செய்யணும் முடியுமா?".

"எப்படி சார்...?"

"உங்களுக்கு பொண்ணு வேணுமா?வேண்டாமா?"

"வேணும் சார் வேணும்.".

"அப்போ நான் சொன்னதை செய்ங்க., இல்லனா அவன்ங்க வெளிய வரமாட்டாங்க. அவன்ங்களை வெளியே கொண்டு வரணும்" என்றவன் அடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை தனி ஒருவனாக திட்டம் போட்டு அந்த குழந்தையின் தாயிடம் எடுத்து கூறினான்.

அவரும் "சரிங்க செய்யறேன்" என்று சொல்ல. நந்தன் அனுப்பிய இடத்திற்கு வளவன் காரோடு வந்துவிட்டான். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதவாறு பார்த்துக் கொண்ட நந்தன்,அந்தக் குழந்தையையும் தேவரதியையும் காரில் ஏற்றி அனுப்பி வைக்க, அடுத்த பத்தாவது நிமிடம் அந்தக் குழந்தையைப் போலவே உருவம் கொண்ட பாடியை கொண்டு வந்துவிட்டனர்.

இதையெல்லாத்தையும் செய்ய நந்தனுக்கு அவன் தாய் மாமன் சங்கர் உதவி செய்ய, அந்தக் குழந்தை முகத்தைப் போல் சிலிக்கானில் செய்து அங்கு படுக்க வைத்துவிட்டனர்.

நந்தன் இந்த அளவுற்கு ரிஸ்க் எடுக்க இரண்டு காரணம் இருந்தது.

ஒன்று அந்தக் குழந்தையை பிழைக்க வைக்க வேண்டும். இங்கு இருந்தால் கண்டிப்பாக காப்பாற்ற முடியாது குழந்தை இல்லை என்றதுமே தேட ஆரம்பித்துவிடுவார்கள். இன்னொருக் காரணம் குழந்தை இங்கு பிழைத்தாலும் அதனால் மனதளவில் மீண்டு வர முடியாதவாறு சமூகம் அடிக்க ஆரம்பித்து விடும், தழைக்க ஆரம்பித்த தளிரை தழைக்க விட மாட்டார்கள்.

சற்று நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக செய்தி பரவ ஆரம்பித்தது.

அதில் உண்டான கலவரத்தில் ஊர் முழுவதும் ரத்தக்காடாக மிதக்க.

நந்தனை தவிர மற்ற போலீஸ்க்காரர்கள் அனைவரும் ஓடி ஓடி வேலைப் பார்த்தனர். நந்தன் மட்டும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த சமயம் வளவனின் கார் கேரளா எல்லையைத் தொட்டிருந்தது.

நந்தன் வர சொன்னதும் வந்து விட்டான் ஒரு முகவரியைச் சொல்லி அங்கப் போய் விட்டுவிடு என்று சொன்னதும் எதுவும் பேசாமல் அழைத்துச் சென்றான், இருந்தாலும் படுத்திருக்கும் குழந்தையின் நிலையை யாரும் சொல்லிதான் புரியவைக்க வேண்டும் என்று இல்லை.அவனே புரிந்துக் கொண்டவன் ரதியிடம்.

"நீங்க டாக்டரா?" என்றான்.

"ம்ம்"

"ரொம்ப கஷ்டப்படுத்திட்டான்ங்க போல.பார்க்கவே கஷ்டமா இருக்கு காப்பாத்திடுவீங்க தானே" என்றான் பரிதவிப்புடன்

"முயற்சி பன்றேன்னு சொன்னா நந்தன் என்னைய கொன்னுடுவான்" என சகஜமாக ரதி சொல்லவும் வளவனின் கண்கள் இடுங்கியது.

"அவனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமோ".

"ம்ம் நல்லாவே தெரியும் உங்களையும் கூட தெரியும் உங்களுக்கு தான் என்னைய தெரியாது."

"என்னைய எப்படி இதுக்கு முன்னாடி நான் உங்களைய பார்த்ததில்லையே.மேர்ஜ்க்கு வந்துருந்திங்களா?"

"நந்தன் அதுக்குலாம் வேண்டாம்னு சொல்லிட்டான்".

"நீங்க பேசறது எதும் புரியல கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க" .

"அது நந்தன் மாமா இருக்கார்ல"

ஆமா சங்கர் அண்ணா"

"ம்ம் அவரோட லவர்."

"என்னது லவ்வரா.!!!!"  என்றவன் அதிர்ச்சியாக.

"ஏன் லவ்வரா இருக்கக் கூடாதா?".

"அவருக்கு 35 வயசு உங்களைப் பார்த்தா சின்னப் பொண்ணு மாதிரி இருக்கு எப்படி லவ்ன்னு யோசிக்கிறேன்.?"

"எனக்கும் 25 வயசு ஆகிடுச்சுப்பா."

"இருந்தாலும்".

"அந்தக் காரணத்தைச் சொல்லிதான் அந்த எருமை என்னைய அவொய்ட் பன்றான்".

"அப்போ சீக்கிரம் கல்யாணம் சாப்பாடு இருக்குன்னு சொல்லுங்க".

"அதுக்கு தலைவரு மனசு இறங்கி வரணும்ல"

"உங்களுக்கு என்ன?". என்றவனின் மனதோ,  "நீ அந்தப் பொண்ணை சைட் அடிக்கிறேன்னு ஷாலினிக்கு தெரியட்டும் முதுகுல டின்னு கட்டிடுவா".என்க ரோட்டைப் பார்த்து வண்டியை ஓடினான்.

கார் சித்த மருத்துவச் சாலையில் நிற்க,அந்தக் குழந்தையை இறக்கிவிட்டு மருத்துவரைப் பார்த்து பேசினர் வளவனும் ரதியும்

"எப்படியோ குழந்தையைக் காப்பாத்திடுங்க டாக்டர்."

"நந்தன் எல்லாத்தையும் சொன்னாரு. இப்போதைக்கு அந்தக் குழந்தைக்கான மருத்துவத்தை ஆரம்பிக்கறோம்.அதுக்கு அப்புறம் நடக்கறது எல்லாம் கடவுள் கையில இருக்கு."

அவர்கள் குழந்தைக்கான பரிசோதனையை ஆரம்பித்து விட.ரதியை கேரளாவில் மார்த்தாண்டத்திற்கு என இருந்த பண்ணை வீட்டில் தங்க வைத்தான் வளவன்.

"நீங்களும் இங்கையே இருக்கீங்களா வளவா?"

"இல்ல ரதி. கிளம்பனும், பாப்பாவைப் பத்திரமாக பார்த்துக்கோங்க,  உங்க அவரை இங்க வர வைக்க நந்தன் ஏதாவது ஏற்பாடு பண்ணிடுவான்."

"அந்த அவர் வந்துட்டு தான் வதுலு வேலைப்பார்க்கப் போறாரு போங்க தம்பி".

"என்ன பொசுக்குன்னு தம்பின்னு சொல்லிட்டீங்க?. நான் உங்களைய விடப் பெரியவன் பார்த்துக்கோங்க".

"இருந்துட்டுப் போங்க." என்றவள் வீட்டைச் சுத்தப் படுத்தினாள், ஒருவேளை அவளவன் வந்தாலும் வருவான் என்று.

"நான் கிளம்பறேன், உனக்கு துணைக்கு தோட்டக் காரனோடா பொண்டாட்டி வந்து இருக்கும். அதுவே சமைச்சிக் குடுத்துடும்" என கிளம்பிவிட்டான்.

நந்தன் இங்கு கலவரத்தை அடக்க,எந்த முயற்சியும் செய்யாமல் இருக்க, அதை அறிந்து கமிஷனர் போன் மேல் போன் போட்டார். அவர் எவ்வளவு போன் போட்டாலும் நந்தன் எடுத்தால் தானே. அவன் நினைத்ததை தான் செய்வான்.

ஆள் வைத்து எம்எல்ஏ பையனை தூக்கிவிட்டான்.ஆனால் அதை அவன் தான் செய்தான் என யாருக்குமே தெரியாதவாறு நாசுக்காக காயை நகர்த்தியிருந்தான்.

கமிஷ்னர் சுத்தலில் விட்டவன். அவர் மெசேஜ் போட்டு போனை எடுக்குமாறு கெஞ்சவும் தான், போனால் போகிறது என அழைப்பை ஏற்றான்.

"நந்து வாட்ஸ் ஹேப்பினிங் என்ன பண்ணிட்டு இருக்க அங்க?"

"நான் என்ன பண்ண முடியும்?. அந்த கேசையே எடுக்கக் கூடாதுன்னு மேல் இடத்துல இருந்து பிரஷர் வருது. இப்போ கேஸை எடு, கலவரத்தை அடக்குனு சொன்னா நீங்க சொல்ற மாதிரிலாம் ஆட முடியாது வேணுனா என்னய டிஸ்மிஸ் பண்ணிக்கோங்க" என பதிலுக்கு  கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

இங்கு நடக்கும் பிரச்சனை எதுமே தெரியாமல், நந்தன் வருவான் அவன் அள்ளிக் கொடுக்காமல் சாப்பிட மாட்டேன் என நிலா காலையில் இருந்து சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தாள்.

மாலை தாண்டி இரவு வந்து விட்டது, நந்தன் இன்னும் வீடு வந்து சேரவில்லை, நிலாவிற்கு வேறு பசி வயிற்றைக் கிள்ள, காலையில் வேறு, வீராப்பாக 'நீ வந்து கொடுத்தால் தான் சாப்புடுவேன்' என சொல்லிவிட்டாள். அந்த ஒருக் காரணத்திற்காகவே சாப்பிடாமல் இருக்க இதற்கு மேல் பசி தாங்க முடியாது என அவளே நந்தனுக்கு அழைத்துவிட்டாள்.

நாலு அழைப்புக்கு மேல் போயும் நந்தன் எடுக்காமல் போக. நிலாவிற்கு கோவம் சுர்ரென்று வந்தது, அதை அடக்க முயற்சிக்க அதன் விளைவாக கண்ணீர் துளிர்த்து விட்டது.

அவன் எடுக்கும் வரைக்கும் விடக்கூடாது என தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தாள்.

கலவரத்தில் அலைபேசி அலறிய சத்தமே  கேட்கவில்லை நந்தனுக்கு. காது கேட்டதும் உடனே அலைபேசியைப் பார்க்க.

நிலா மட்டும் பத்து தடவைக்கு மேல் அழைத்திருந்தாள்.

அழைப்பை ஏற்றவன்.

"என்னடி.?"என்றான் ஆவேசமாக.

அவனை விட கோவமாக இருந்த நிலா "நீங்க ஏன் போனையே எடுக்கல.?" என்றாள் அவனுக்கு சற்றும் குறையாக குரலில்.

"ப்ச் வேலையா இருந்தேன்"

"வேலையா இருந்திங்களா, இல்லை என்னைய அவாய்டு பண்றீங்களா?".

டென்ஷனில் இருந்தவன், "ரெண்டுமே தான் இப்போ உனக்கு என்ன வேணும்.?"

"ஓ" என்றவளுக்கு அடக்கி வைத்த அழுகை வெளியே வந்துவிடும் போல் மூக்கு புடைக்க.

"நான் காலையில இருந்து சாப்புடல".

"ஏன் சோறு எல்லாத்தையும் மூட்டைக் கட்டி நான் எடுத்துட்டா வந்துட்டேன்?. பசிச்சா திங்க வேண்டியது தானே?".

"காலையில நான் என்ன சொன்னேன்?".

அவன் இருந்த பிரச்சனையில அதெல்லாம் எங்கு நியாபகம் இருக்கிறது.?

"நியாபகம் இல்ல".

"ஓ நான் சொன்னது தான் நியாபகம் இல்லையா? இல்லை என்னையவே நியாபகம் இல்லையா?" என்றவளின் வார்த்தை திக்கு முக்காடி வர

இவ்வளவு நேரம் இருந்த பொறுமை பறந்து விட்டது.

"இன்னாப் நிலா, நானும் சின்னப் பொண்ணுன்னு நீ பண்ற எல்லாத்துக்கும் பொறுமையா போனா, ஓவரா துள்ளிட்டு திரியுற. வந்தேன்னு வை கன்னம் கன்னமாக சாத்தி எடுத்துடுவேன், அவனவனுக்கு ஆயிரம் டென்ஷன் இதுல போனைப் போட்டுட்டு  திங்களா  தொங்கலைன்னுட்டு, மூடிட்டு போனை வைடி. வந்துட்டா" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டான்.

இப்போது அவன் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்ற ஒன்றில் மட்டும் தான் இருந்தது.

எப்போதும் எது நடந்தாலும் அது நிலாவிற்கு நடந்தது போல் தானே அவனுக்கு இருக்கும்,  இதுவும் அப்படி தான் இருந்தது, நிலாவிற்கு இப்படி ஆகியிருந்தால் அவன் எந்த அளவிற்கு நொறுங்கிப் போயிருப்பான், அதே அளவிற்கு தான் நொறுங்கி நின்றான்.

யோசித்துப் பார்க்க முடியவில்லை. எந்த அளவிற்கு சைக்கோ தனம் அவர்களிடம் இருந்திருந்தால் குழந்தையை இந்த அளவிற்கு காயப்படுத்திருப்பார்கள் . நந்தனால் அந்தக் குழந்தையின் உயிரை மீட்டு எடுத்துவிட முடியும்,  உணர்வுகளை என்ன செய்வது.எதைக் கொண்டு மறிந்த உணர்வுகளை மீட்டு எடுப்பது.

பாதிக்கப்பட்ட பெண்களின் உடல் ஆறுமாதத்திலோ ஒருவருடத்திலோ சரியாகிவிடும்,   மனம் அதை எப்படி சரி செய்வது?. முடியுமா மீண்டும் அந்தக் குழந்தையை உணர்வு பூர்வமாக சிரிக்க வைக்க முடியுமா?. வயது ஆனப் பிறகு அந்தக் குழந்தையை மணவாழ்க்கையில் ஈடுப்படுத்திவிட முடியுமா?. எதுமே செய்ய முடியாது. எவ்வளவு கவுன்சிலின் கொடுத்தாலும் மனதால் மறிந்தவர்களை பழைய பெண்ணாக மீட்டு எடுப்பது என்பது ஆகாத ஒன்று.

இதைப் பற்றி மட்டும் தான் நந்தனின் கவலை.

அவனுக்கு தான் நன்கு தெரியுமே பெண்களில் மனம் எந்த அளவிற்கு மென்மையானது என்று. நிலாவைக் காயப்படுத்தும் போது அவள் மனதளவில் காயப்பட்டு தானே தன்னைக் கண்டாலே பயந்து பயந்து ஒளிந்தாள். அதை சரிச் செய்ய அவன் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது. சாதாரணமான விசியத்திற்கே இது என்றால் அந்தக் குழந்தையின் விசியம் எவ்வளவு பெரிது. இதை எல்லாம் நினைக்கும் போது அவ்வளவு வேதனையாக இருந்தது.

இரவு எட்டு மணி என்னும் போது பலக் கலவரங்களுக்கு பின் நந்தன் கொண்டு வந்த உடலை அடக்கம் செய்தனர்.

அந்தக் குழந்தையின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் வீட்டில் இருந்த எதுவும் அவருக்கு தெரியவில்லை.

எல்லாம் முடிந்து நந்தன் வீட்டிற்கு வர இரவு மணி பத்தை தாண்டிவிட. அப்போது தான் வளவனும் வீடு வந்து சேர்ந்தான்.

வளவன் தன் வீட்டின் வெளியே காரை நிறுத்திவிட்டு நந்தனுக்கு அழைக்க, அவன் அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்தவன் அழைப்பை ஏற்றான்.

"வீட்டுக்கு வந்துட்டேன்" என்றான் வளவன்.

ம்ம் நானும் வந்துட்டேன்.இங்க "எல்லோரும் தூங்கிட்டாங்க.

"இங்க அம்மு மட்டும் முழிச்சுட்டு இருக்கா."

"நான் அங்க வரேன்" என அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

ராஜியும். ஷாலினியும் படுத்துவிட்டனர், நிலா மட்டும் தான் பேய் மாதிரி உலாத்திக் கொண்டிருந்தாள். பசியால் உண்டான களைப்பா இல்லை மன்னவன் கண்டுக்கொள்ளாத களைப்பா என்று தெரியாமல்  முழித்துக் கிடந்தாள்.

"அண்ணா".

"சொல்லு அம்மு".

"ஏன் இவ்வளவு லேட்,சாப்புட்டியா?"

"இன்னும் இல்ல,"

"அண்ணியும் அம்மாவும் படுத்துட்டாங்க,நான் சாப்பாடு எடுத்து வைக்கவா?'

"ம்ம்"

"சரி வா தோசை ஊத்துறேன்".

"உன் புருசனுக்கும் சேர்த்து ஊத்து" என்று குளிக்கச் சென்று விட்டான்.

"அவன் வந்துட்டாலும் வானம் பொத்துகிட்டுல கொட்டும்".என முனவியபடியே தோசையை ஊத்தி தக்காளி சட்னி அரைத்தாள்.

நந்தன் கதவை தட்டவும், "சொன்ன மாதிரியே வந்துட்டானே. இப்போ மட்டும் பொண்டாட்டி நியாபகத்துலையா வந்துருப்பான்". என கதவை திறக்க

அங்கு நந்தன் தான் நின்றிருந்தான். மேலே துண்டு ஒன்றைப் போர்த்தி இருக்க, தலையை வேறு ஒரு துண்டை வைத்து துவட்டிக் கொண்டிருந்தவன். நிலாவைப் பார்த்ததும் அவள் மீது துண்டைத் தூக்கிப் போட்டு,  "துவட்டி விடு" என்றான் அதிகாரமாக.

"நான் எதுக்கு துவட்டணும் மொதல்ல யாரு நீ.?"

"என்னடி பொசுக்குன்னு இப்படி பேசிட்ட..?"

"அப்படி தான் பேசுவேன் எந்த உரிமையில துவட்ட சொல்ற?"

"நீ என்னோட பொண்டாட்டி இல்லையா, டிவோர்ஸ் ஆகற வரைக்கும் எல்லா உரிமையும் எனக்கு இருக்கு."

"ஹான் அப்போ பொண்டாட்டியை திங்க வைக்கற கடமையை மட்டும் காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சோ".

"இன்னுமா நீ சாப்பிடல?". என்றவனின் வாய் வளவன் வரவும் இறுக மூடிக் கொண்டது.

அதன் பிறகு சாப்பிடவதை தவிர எதற்கும் நந்தன் வாயைத் திறக்கவேயில்லை.நிலா கேக்கும் கேள்விகளுக்கு மட்டும் தலையை தலையை ஆட்டினான்.

"அண்ணா நீ எங்கப் போனீன்னு இன்னும் சொல்லல. ஆபிஸ் வரலைன்னு வாட்மேன் ஆங்கிள் சொல்லிட்டாரு.சொல்லு."

வளவன் நந்தனைப் பார்க்க.

அவனோ, "என்னமோ சொல்லு எனக்கு என்ன?" என்பது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"வேலை விசியமா கேரளா போயிருந்தேன்".

"அண்ணிக்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலா,ம் இல்லனா கால் பண்ணி சொல்லிருக்கலாம்ல."

"எதிர்ப்பார்க்கல திடீர்னு கிளம்பிட்டேன், அங்கேப் போன டவர் இல்லை₹ வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.

இல்லை என்றால் கேள்வி கேட்டே கொல்லுவாள் என்ற பயம்.

நந்தன இரண்டு தோசையில் எழுந்துக் கொள்ள.. வளவனும் சட்டென்று எழுந்துக் கொண்டான். இருவருக்குமே சாப்பிட பிடிக்கவேயில்லை.

இப்போதும் கூட நந்தன் சாப்பிட்டானே தவிர நிலாவை சாப்பிட வைக்க வேண்டும் என்பதையே மறந்து போய்விட.

நிலா இப்போதும் சாப்பிடாமல் தான் மேலே அறைக்குள் சென்றாள்.

நந்தன் வளவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மேலே நிலாவின் அறைக்குப் போக,அவன் போகும் போது நிலா படுத்து கண்களை மூடி இருக்க தூங்கி விட்டாள் என நினைத்தவன்.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆதங்கம் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டான்.

இன்று நடந்த விஷயம் எந்த அளவுக்கு அவன் மனதை பாதித்திருக்கிறது என அவன் பேச்சை வைத்தே சொல்லிவிடலாம்.

"அந்தக் குழந்தை உன்னைய மாதிரியே இருந்துச்சிடி, நீ சின்ன வயசுல அழகா குண்டு கண்ணை உருட்டி உருட்டிப் பார்ப்ப.. அதே மாதிரி தான் அந்தப் பாப்பாவும் உருத்து உருத்து முழிக்குது.

அந்த பொண்ணைப் பார்க்கும் போது எப்போ நீ தெரிஞ்சியோ அதுக்கு அப்புறமும் அதை காப்பாத்தாம விட்டா,என்னோட குட்டியை நான் விட்ட மாதிரி தானே" என மனம் திறந்து பேசினான். பேசினான் பேசிக்கொண்டே இருந்தான் என்பது போல. அவன் பேச்சில் துக்கத்தை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.



Leave a comment


Comments


Related Post