Total Views: 1547
நிலா அதிர்ச்சியாக அவனைப் பார்க்க.நந்தன் இதழ்கள் வளைந்துக் கொண்டது.நந்தன் தனியா சென்று விடுவதில் உறுதியாக இருந்தான்.
கிருஷ்ணம்மாள், மணி,மார்த்தி மூவரும் தான் மாத்தி மாத்தி நிலாவிடம் கேட்டனர்.
வேறு வழில்லாமல் நிலா நந்தனைப் பாவமாக பார்த்தவள்.
"ப்ளீஸ் விஜய் பெரியவீங்க கேக்கறாங்கள.. அவங்களுக்காக, இந்த ஒருமுறை மட்டும் இருக்கலாம் அதுக்கு அப்புறமும் இப்படி ஏதாவது நீங்க முடிவு பண்ணுனா நான் கேக்கவே மாட்டேன் நீங்க என்ன சொன்னாலும் ஓகே தான்" . என்றாள்.
"இதுதான் கடைசி இதுக்கு மேல அவளை யாராவது இப்படி பேசுனீங்க அப்புறம் நடக்கறதே வேற?" என்றவன் "போய் இதெல்லாம் கழட்டி வை வளையலை மட்டும் போட்டுக்கோ" என்றான்.
அவன் சொன்ன அனைத்திற்கும் தலையை ஆட்டியவள், வளையலை மட்டும் போட்டுக் கொண்டு மற்றதைக் கழட்டி நந்தனின் பீரோவில் வைத்துவிட்டாள்.
"விஜய்".
படுக்கையில் கண் மூடி மேலே வலது கையை குறுக்கே வைத்துப் படுத்திருந்த நந்தன் "ம்ம்" என்றான்.
"நீங்க பண்றது அதிகமா இருக்கு. கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நீங்களும் இதை தானே பண்ணிட்டு இருந்திங்க" என்றாள்.
பட்டென்று கையை விலக்கிக் கொண்டு அவளைப் பார்த்தவன். "இங்க வா" என்று எழுந்து அமர்ந்து நிலாவையும் அருகில் அழைத்தான்.
"சொல்லுங்க. "என அவன் அருகில் நிற்க
அவள் கைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்துக்கொண்டவன்.
"நீ சொன்னது உண்மை தான், நான் இல்லைன்னு சொல்லலையே. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த நந்தன் மாதிரியா இந்த நந்தன் இருக்கான்".
"இல்லை" என தலையை ஆட்டினாள்.
"என்கிட்ட இருக்க மாற்றம் உனக்கு தெரியுதா?"
"ம்ம்."
"என்னன்னு சொல்லு சரியா இருக்கான்னு பார்ப்போம்?" என அவளை விழுங்குவதுப் போல் பார்த்தான்.
"நீங்க முன்ன மாதிரி ஹார்சா நடந்துக்கறது இல்ல, எல்லோர் மேலையும் பாசமா இருக்கீங்க."
"அவ்வளவு தானா?"
"ம்ம்"
"உன்கிட்ட எப்படி?"
"எப்படின்னா?"
"உன்கிட்ட நான் நடந்துங்கற விதத்துல வித்தியாசம் இருக்கா?"
"ம்ம்"
"என்ன.?"
"என்னைய ரொம்ப கேர் பண்ணிக்கிறிங்க, முன்னாடிலா எப்போமே அடிப்பீங்க இப்போ எப்பாவது அடிக்கறீங்க."
"அவ்வளவு தான்"
"அது"
"சொல்லு"
"அது.. என்னைய..?"
"உன்னைய"
"லவ்..."
"வாடா போடான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாய் கிழிஞ்சிது இப்போ பேசவே யோசிக்கிற?"
"அது நீங்க என்னய லவ் பண்றிங்களோன்னு."
"யாரு உன்னைய.?" என்றதும் விருக்கென்று அவனைப் பார்க்க,இதழின் ஓரம் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பு அவள் பார்வையில் பீறிட்டு வந்தது
ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.
என்னாச்சி. ஏன் சிரிக்கிறீங்க? ".
"
சிரிப்பை நிறுத்திவிட்டு மூச்சை இழுத்து விட்டவன்.சட்டென்று அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.
"குட்டி."
"என்ன பண்றீங்க?எழுந்து மேலே உக்காருங்க."
"உக்காறேன் நான் பேசறதை முதல்ல கேளு."
"ம்ம்"
அவள் கையைப் பிடித்து நீவி விட்டுக் கொண்டிருந்தவனுக்கே 'இது எப்படி ஆரம்பிப்பது?' என்று தெரியாமல் தடுமாறினான். நந்தனின் தடுமாற்றம் நிலாவிற்கு புதிதாக இருந்தது
"சொல்லுங்க"
"எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்குதுடி."
"ஓ"
"என்னடி அவ்வளவு தான் ரியாக்சனா.?"
"இது எனக்கு தான் முன்னாடியே தெரியுங்களே"
"ம்ம் எவ்வளவு புடிக்கும்ன்னு சொல்ல வேண்டாமா?"
"இந்த உலகத்துல எனக்கு அப்புறம் தான் எல்லாருமேங்கற அளவுக்கு புடிக்கும்" என்றாள் வெட்கத்துடன்.
"எப்படிடி தெரியும்?".
"அன்னிக்கு நான் தூங்கிட்டு இருந்தேன்னு நினைச்சி சொன்னிங்க."
"ம்ம்.."
இருவருமே மொவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர்.
அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் மொவுனம் அங்கு ஆட்சி செய்ய.
"ஒப்பனா சொல்லனும்னா நீதாண்டி என்னோட உயிரு, உன்னைய விட்டுட்டு என்னால இருக்க முடியாதுங்கறதை விட, இருக்க முடியலங்கிறது தான் உண்மை. அதுக்காக தான் உனக்கு என்னய புடிக்கலைன்னாலும் மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன், வேற எந்தக் காரணமும் இல்ல" என்றவன் குரல் கரகரத்தது
அவன் கையை அழுத்திக் கொடுத்தாள்.
"குட்டி"
"ம்ம்"
"இப்போவும் என்னய புடிக்கலையாடி?" இந்த வார்த்தையை கேக்கும் போது அப்படி எதையும் சொல்லிவிடாதே நான் மறிந்தே .போய்விடுவேன் என்பது போல் இருக்க.
அவன் இருக் கன்னத்தையும் இருக்கைகளால் தாங்கியவள்,"உன்னைய புடிக்காம இருக்குமாடா என் புருஷா.." என்றவள் அவன் இதழைக் கவ்விக்கொண்டாள்.
நீண்ட நாளுக்குப் பின் ஒரு இதழ் முத்தம், இருவரையும் மனம் உணர்வுகளால் தழும்பியது. அவன் கீழ் இதழை மட்டும் கவ்வி இழுத்தாள்.
நந்தன் கண் மூடி கிறங்கியிருந்தவனிற்கு அவளிடம் பொம்மையாக மிகவும் பிடித்திருந்தது.
அவனை விட்டு விலகிக் கொண்டவளின் முகம் அந்திவானமே தோற்று விடுவது போல் சிவந்து கிடந்தது.
அவள் சிவப்பை அள்ளி அப்பிக்கொள்ள ஆசைப்பட்டவன் போல் ஒற்றை விரலால் கன்னத்தை தடவிப் பார்த்தான்.
"விஜய்."
"எப்படி இப்படி சிவக்கற.?"
"விஜய்" என அவள் சிணுங்க, "சரி சொல்லு எப்போல்ல இருந்து என்னைய புடிச்சிது.கல்யாணம் முன்னாடியே புடிக்குமா கல்யாணத்துக்கு அப்புறம் புடிக்குமா?"
"முன்னாடியே".
"அடிபாவி"
"என்னாச்சி? ".
"முன்னாடியே புடிக்கும்ன்னு சொல்லிருந்தா, சொல்லக்கூட வேண்டா ஒரு ஜாடைக் காட்டிருந்தாலே போதுமேடி இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துருக்க மாட்டேனே.."
"அது"
"அப்போ காய்ச்சல் வந்துதுலா.? ".
"அது உங்க மேல இருக்கற பயத்துல வந்தது தான். உங்களைய சின்ன வயசுல இருந்தே ரொம்ப புடிக்கும் உங்களுக்கு தான் என்னைய புடிக்காம அடிச்சிட்டே இருப்பிங்க. உங்க அடி தாங்க முடியாம தான் உங்களைக் கண்டாலே பயந்து ஓடி ஒளிஞ்சேன், அந்தப் பயம் அப்படியே தான் இப்போ வரைக்கும் இருந்தது. உங்களோட கம்பீரம் புடிக்கும், உங்க ஸ்டைல் புடிக்கும், பேச்சுப் புடிக்கும்ன்னு உங்ககிட்ட எல்லாமே புடிக்கும், ஒருநாள் பாசமா பேச மாட்டிங்களான்னு நிறைய டைம் ஆசையா உங்களை மறஞ்சு இருந்து பார்த்துருக்கேன். கல்யாணம்ன்னு வரும்போது உங்களைய பக்கத்துல பார்க்கணுமே அதை நினைச்சாலே உடம்பு உதறுது, அதான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் அன்னைக்கு நைட்டே காய்ச்சல் வந்துடுச்சு". என்றவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள, இருவருமே சேர்ந்ததுப் போல் கீழே விழுந்துவிட.
முகம் முழுவதும் முத்தாடிவிட்டான்.அவளும் தன்னை விரும்பிருக்கிறாள் என்ற ஒன்று போதாதா..? அவளைக் கொண்டாட..
"குட்டி முடியலடி இப்போவே எடுத்துக்கவா?".
"ம்ம்" என்றவள் அவன் கையில் உருக.
"இன்னும் கொஞ்ச வேலை பாக்கி இருக்குடி முடிச்சிட்டு வரேன்" என்றவன் அவளை எழும்பு நொறுங்க அணைத்துக் கொண்டான்.
இருவருக்குமே அந்த அணைப்பு தேவைப்பட்டது.
"சீக்கிரம் எல்லா வேலையையும் முடிச்சிடுங்க விஜய்."
"இதுக்கு மேல விட்டு வைப்பனாடி. குட்டி எனக்கு ஒரு குட்டி ஆசை".
"சொல்லுங்க"
"மாமா சொல்லு".
"மாமாவா..!! என்ன புது புதுஸா ஆசை வருது துரைக்கு?" என அவன் மீசையை பிடித்து ஆட்டினாள்.
"இதுலாம் பழைய ஆசை" என்றவனின் அலைபேசி அலறியது.
எடுத்துப் பார்த்தவன் அழைப்பை ஏற்று காதில் வைக்க.
அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ.. "ஓகே உடனே வரேன்" என அழைப்புத் துண்டித்தவன்.
"குட்டி ஒரு அர்ஜென்ட் வேலை போயாகனும்."
"இன்னும் என்ன என்ன ஆசை இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லையே?".
உடை மாற்றிக் கொண்டே, "வசீகரா பாட்டு கேளு அதுல இருக்க எல்லாமே என்னோட ஆசை தான். லிரிக்ஸ்க்கு காப்பி ரைட்ஸ் கேட்டு கேஸ் போடலாம்ன்னு இருக்கேன்" என கிளம்பியவன். "அந்தப் பாட்டைக் கேட்டுப் பக்காவா ரெடியாகி இரு வந்து கச்சேரி வெச்சிக்கறேன்" என கீழே அவசர அவசரமாக ஓடினான்.
நந்தன் சொன்னப் பாட்டை நிலா கேட்டிருக்கிறாள் தான்,ஆனால் உள்ளேச் சென்று ஆழ்ந்து கேட்டதில்லை.
அப்படி என்ன இருக்கிறது என நினைத்தவள். அந்த பாடலைப் போட்டாள்.
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
—
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு
சினேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்
தினம் நீ குளித்ததும் என்னைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை.
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே.
பாடல் முழுவதையும் திரும்ப திரும்ப போட்டு இருபது முறைக்கு மேல் கேட்டுவிட்டவளுக்கு கன்னக்கதுப்புகள் சூடேறியது.
ஒரே ஆடைக்குள் இருவரும் என்னும் போது அதை நினைத்துப் பார்க்கவே அவ்வளவு கூச்சமாக இருந்தது.
நிலா இங்கு வெட்கப்பட்டு நந்தனுடன் இரவில் நடக்கப்போகும் கூடலுக்கு கனா கண்டுக் கொண்டிருக்க.
நிலைவைப் போட்டு தள்ளும் எண்ணத்துடன் சுற்றிக் கொண்டிருந்தாள் சரஸ்வதி.
அவளது கடைசி துருப்புசீட்டு கவி தான்.
அவளை வைத்துதான் நிலாவைப் போட வேண்டும் , அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராது அதற்கான வேலையாக சுமார் ஒரு வாரமாக கவியின் மண்டையைக் கழுவிக் கொண்டிருந்தாள் சரஸ்வதி.
"கவி எங்க ராணி?"
"அவ யாரோ பிரண்டைப் பார்க்கப் போறேன்னு போயிருக்காம்மா ஏன்?"
"காணாமேன்னு கேட்டேன், இங்க பாரு ராணி இவ்வளவு நாள் எனக்கும் நிலாக் குடும்பத்தைப் புடிக்காது அதனால உங்கக்கூட சேர்ந்து நானும் பேசுனேன். இப்போ பொண்ணுக் குடுத்து பொண்ணு எடுத்துருக்கோம் அவங்க வீட்டுப் பொண்ணு இங்க நல்லா இருந்தா தான் நம்ப வீட்டுப் பொண்ணு அங்க நல்லா இருக்கும். நிலா மாதிரி மருமக கிடைக்கலா நாங்க குடுத்து வெச்சிருக்கணும். உன் பொண்ணுக் கூட யுகிய அப்படிப் பார்த்துக்க மாட்டா. ஆனா நிலாப் பார்த்துகிட்டா. அவளைப் போய் கோவில நாலுப் பேர்த்துக்கு முன்னாடி அசிங்கமா பேசிட்ட.
என்னம்மா நீ அப்படியே மாறிட்ட.
முன்னாடி நானும் உன்னய மாதிரி தான் இருந்தேன் அதுக்காக இப்போவும் அப்படியே இருக்க முடியாது, எங்க இந்த வீட்டுக்கு மருமகளா வந்துடுவாளோன்னு அன்னிக்கு அப்படி பேசுனேன் இன்னைக்கு வந்ததுக்கு அப்புறம் பேசி என்ன பண்ண முடியும், நாளைக்கு மருமகளும் மாமியாரும் ஒன்னு சேர்ந்துட்டு கடைசிக் காலத்துல எனக்கு சோறுப் போட மாட்டேன்னு சொல்லிட்டா நீயா வந்துப் பார்க்கப் போற. வாய்க்கு தான் அம்மா அப்பான்னு சொல்லுவ, இங்க இருக்கறதை எதையாவது புடுங்கிட்டுப் போகணும்ன்னா வருவ இல்லனா. அம்மாலும் அப்பனும் இருக்கறதுக் கூட உனக்கு நியாபகம் இருக்காது.
அந்த கிழவன் படுத்துக் கிடக்கறானே ஒருநாள் பிள்ளைன்னு வந்து சோறு தண்ணி குடுத்துருப்பியா. இப்போ வரைக்கும் மணி தான் பார்க்கறா அவளா இருக்கப் போய் பார்க்கறா ஏதோ நாங்க வாங்கி வந்த வரம் மருமக வாய் இல்லாத பூச்சியா இத்தனை வருஷம் குடும்பம் நடத்திட்டா, அது கடைசி வரைக்கும் நடக்கனோம்னா அவ வழியில்லையே போட வேண்டியது தான் என மூச்சு வாங்க பேசியவர்.
நீ இதுக்கு மேல நிலாவை பேசுனீனா என்ற ராசா அதுக்கு மேல அவளை தலையில தூக்கி வெச்சி சுத்துவான் என்று அங்கிருந்து சென்று விட்டார்.