இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -120 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 05-09-2024

Total Views: 1522

இந்த அம்மா சப்போர்ட் இருக்குன்னு தானே வாயை வுட்டுப்புட்டேன்  கொஞ்சநாளைக்கு அடக்கி வாசிக்கணும் என்று எண்ணிக் கொண்டார்.

நாளைக்கு பூக் குழி இறங்குதல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்திக் கொள்வார்கள்.

இன்று மாவிளக்கு முடிந்ததும் சாமி வீட்டிற்கு வீடு வந்து பூஜை வாங்கும்.அதற்காக வீட்டின் பெண் பிள்ளைகளை திருவிழாவிற்கு முன்பே அழைப்பார்கள்.

அப்படி வந்தவர் தான் செல்வராணி.

அவரே இங்கு இருக்கும் போது முறைப்படிப் பார்த்தால் நிலாவும் ஷாலினி அவரவர் வீட்டில் தான் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அருகில் இருந்ததால் சாமி வரும்போது மட்டும் சென்று பார்த்துக் கொள்ளலாம் என புகுந்த வீட்டிலையே இருந்துக் கொண்டனர்.

நந்தன் முத்தம் கொடுத்ததால் மீண்டும் குளித்துவிட்டு கீழே வந்தாள்.

"ஏண்டி இப்போ குளிச்ச?".

"ஏன் அத்தை?"

"கோவிலுக்கு தானே போய்ட்டு வந்தோம்."

"பரவாயில்ல சாமி வரும்போது வியர்வை வடிய நிற்க முடியாதுல" என்றவளுக்கு தானே தெரியும்.

"சரி போய் பூஜை பொருளை எடுத்து வை நிலா"

"நான் வைக்கல,கவிய வைக்கச் சொல்லுங்க" என்று நகரப் போனவளை கைப் பிடித்து இழுத்து அருகில் விட்டவர்.

"அவ வெளியேப் போயிருக்கா"

"நோம்பியப்ப யாராவது வெளியேப் போவாங்களா.?"

"உன்புருசனும், என் புருசனும் போகல."

"என்ன மருமகளுக்கு சப்போட்ட"என்றவள்   "மறுபடியும் பிரச்சனை ஆகும் அத்தை வேண்டா. வேணும்னா ஷாலுவை வரச் சொல்றேன்"  என்று நிற்காமல் சொல்லிக்கொண்டே அவளது வீட்டிற்குச் சென்று விட்டாள்.

அதன் பிறகு சாமி வரும்போது தான் அனைவரும் சொல்லிவைத்ததுப் போல் வீட்டிற்கு வந்தனர்.

அதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு வெறுமையாக இருந்த வீடு இப்போது   நிறைந்திருக்க, இதுப் போலவே எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார் மணிமேகலை.

"ஏய் குட்டி".

"சாமி கும்பிடும் போது அங்கப் பாருங்க,என்னய எதுக்கு பாக்கறீங்க?" 

"என் சாமி இங்க தானே இருக்கு".

"யாரு அது?" என நிலா திரும்பி திரும்பிப் பார்க்க.

"ஒரு டைலாக் பேச விடறீயாடி". என்று அவள் நெற்றியில்லையே தட்டினான்.

அவர்கள் நெருக்கத்தை ஷாலினி வளவனிடம் காட்டி.

"என்னமோ என் அண்ணன் பார்த்துக்கவே மாட்டாங்கற மாதிரி குதிச்சீங்க, இப்போ பார்த்தீங்கள அவளை எப்படி தாங்குறான்னு."

"உன் கண்ணே பட்டுடும் போல.". என்றவன், "ஷாலு ஹனிமூன் போவோமா?" என்றான் குரல் கரகரக்க

"சாமி பார்த்து கும்பிடுங்க வள்ளு.".

"அதெல்லாம் கடவுள் வரம் கொடுத்துட்டாரு, அம்மிணி தான் கொடுக்கணும்" என்றவன் அவள் காலை வருட.

"டேய் நாயே அது என் காலுடா, ,பொண்டாட்டி மயக்கத்துல அந்தக் காலு கூட யாருதுன்னு அடையாளம் தெரியலையாக்கம்" என்று நந்தன் சத்தமாகவே சொல்லிவிட.

அனைவரும் சிரித்துவிட்டனர்.

இங்கு சிரிக்காமல் இருந்தது என்னவோ யுகியும், கவியும் தான்.

யுகிக்கு ஏனோ அவர்களுடன் ஒன்ற சங்கடமாக இருந்தது. கவிக்கோ இவர்களின் நெருக்கம் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது.

"அண்ணாவது காலை தான் மாத்தி தடவுனாரு,  சாரு  என்ன பண்ணீங்கன்னு சொல்லவா?".என நிலா கண்கள் மின்ன சொல்ல.

"சொல்லு அம்மு, என்னய மட்டும் கிண்டல் பண்ணுனான்ல நீ சொல்லு"

"கம்முனு இருடி மானத்தை வாங்காத" என்ற நந்தனிற்கே அவன் செயல் நினைத்து வெட்கமாக இருந்தது.

"டேய் நந்து வெட்கப்படறான்டா.". என்று கத்திய வளவன்.

"சொல்லு அம்மு,  காவல்துறையே வெட்கப்பட அளவுக்கு என்ன நடந்துச்சி.?"

"தலகாணிய நான்தான்னு நினைச்சி கட்டிப் புடிச்சி உருண்டுருக்காருண்ணா" என்று நிலா சொல்லியே விட்டாள்.

"ஐயோஓஓ.."என  ஷாலினி வாயில் கையை வைக்க 

"அடிங்க  எருமை மானத்தை வாங்கிட்டலடி.." என்றவன் நிலாவின் தலையில் கொட்டினான்.

சிறியவர்கள் கண்டதையும் பேசிக் கொள்வார்கள்,தாங்கள் எதற்கு என்று இங்கிதம் கருதி  பெரியவர்கள் விலகி அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட.

இவர்களுக்கு மேலும் வசதியாகப் போனது.

இவ்வளவு நாள் செய்யாத சேட்டை,கிண்டல்,நக்கல் அனைத்தையும் செய்து மகிழ்ந்தனர்.

யுகியும்  அவன் கூட்டில் இருந்து வெளியே வந்து இவர்களுடன் ஒன்ற ஆரம்பித்து விட்டான்.

இரண்டு நாள் உறவினர்கள் வருகை, திருவிழாவிற்கு செல்வது,என வீடே சந்தோசம் நிறைந்து இருந்தது.கவி செல்வராணியை எதுவும் பேசவேண்டாம் என தடுத்துவைத்திருந்ததால் அவரும் எதுவும் பேசவில்லை.

கவியின் அமைதிக்கு பின்னால் பெரிய புயலே அடிக்கப் போகிறது என தெரிந்திருந்தால் நந்தன் உஷாரா இருந்திருப்பான்.

திருவிழாவின் கடைசி நாளான இன்று மஞ்சள் நீரு நந்தன் அலுவலகம் சென்று சீக்கிரமே வந்துவிட்டான்.

"ஏன் விஜய் ஆபிஸ் போகலைய".

"இன்னைக்கு மஞ்சநீரு தானே"

"அதுக்கு நீங்க இங்க இருந்து என்ன பண்ண போறீங்க.?"

"ம்ம் உன்னைய மஞ்ச குளிக்க வைக்கப் போறேன்".

"ஓடிடுங்க. நானே இப்போதான் குளிச்சிட்டு வந்துருக்கேன்" என்று சொல்ல.

"எனக்காக இன்னொரு தடவை குளிச்சா தப்பில்ல குட்டி வா" என்றவனுக்கு, அன்று அவள் தெரியாமல் ஊற்றிய நீரை இன்று தெரிந்தே தன் மேல ஊற்ற வேண்டும் என்ற ஆசை,அதற்காக தான் ஓடி வந்தான்.

அவனது ஆசையைப் புரிந்துக் கொண்ட நிலாவும்,வீதியில் இறங்கி அவன் கையைப் பிடிக்க. நடு வீதியில் வைக்கப்பட்ட மஞ்ச நீரில் இருந்த குண்டாவையே தூக்கி நிலாவின் மீது ஊத்திவன்.

"இது முதலும் கடைசியுமா மஞ்ச தண்ணி  ஊத்துறேன்".

"நான் மட்டும் பத்து பேருக்கு ஊத்திருக்கேன் பாருங்க. அப்போல இருந்து இப்போ வரைக்கும் நான் யாருமேல ஊத்தப் போனாலும் குறுக்க வந்து வாங்கிக்க வேண்டியது. இதுல என்னைய கண்டாலே புடிக்காத மாதிரி ரியாக்சன் வேற." என்றவள் அவளும் அருகில் இருந்த நீரை எடுத்து ஊத்தினாள்

இருவரும்  குழந்தைப் பருவத்தில் இழந்த அனைத்து சந்தோசத்தையும் இளமை பருவத்தில் மீட்டு எடுத்துக் கொண்டிருந்தனர்.

"போதும் வா குளிக்கப் போவோம் இதுக்கு மேல இருந்தா உனக்கு சளிப் பிடிச்சிடும்".

"எனக்கு தான் புடிக்குமா உங்களுக்கு புடிக்காதா?".

"நான் இரும்பு மனிதன்டி".

"இந்த இரும்பயும் இளக வைக்கற நெருப்பு நான்" என்று அவன் கன்னம் பிடிக்க அவளை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

"யாராவது பார்ப்ப்பார்கள்" என்ற  எண்ணமோ கூச்சமோ,நந்தனிடம் இல்லை. நிலாவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

"ஏங்க  எல்லோரும் பார்க்கறாங்க இறக்கி விடுங்க."

"பார்த்தா பார்த்துட்டு போகட்டும்"

"ஏதாவது  சொல்லுவாங்க."என்றவள் அவன் என்ன சொல்லுவான்  என அறிந்து அவளே சொல்லி விட்டாள்.

நேராக குளியலறைக்குச் சென்று தான் இறக்கி விட்டான் நிலாவை.

"நீங்க வெளியேப் போங்க நான் குளிச்சிட்டு வரேன்"

"டைம் ஆகிடும் ரெண்டுபேரும் சேர்ந்து குளிச்சா சீக்கிரம் கிளம்பிடுவேன்" என்றவன் கதவை மூட.

"விஜய் இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு."

"அடியே உனக்கே மனசாட்சி இருக்கா கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகப்போகுது  இதுவரைக்கும் ஒரே ஒரு தடவை தான்  கருணைக் காட்டி இருக்க, இப்படியே போனா நான் சன்னியாசம்டி தான் போகனும்".

"போங்க யார் வேண்டானது?". என நிலா  உதட்டை கடித்தவாறு சொல்ல.

"எங்க போனாலும் உன்னையும் கூட்டிட்டு தாண்டி போவேன்" என்றவன் அவளது இதழைக் கவ்விக் கொண்டான்.

இருவருக்கும் இடையேயான முத்தப் போராட்டம் அது. நீயா? நானா? யார்  பெரியவர் என காட்ட போட்டிப் போட்டு இதழ் கவ்வினர்.

இருவருக்குமான  காதலை  யார் வந்தும் கெடுக்க முடியாது, நந்தன் நினைத்தால் மட்டும் தான் நிலாவை தள்ளி வைக்க முடியும்.

இருவரும்  குளித்துவிட்டு வெளியே வர.. ஒரு பெரிய டீசர்ட்டை எடுத்து போட்டவன் அதில் நிலாவையும் நுழைத்துக் கொண்டான்.

"என்ன விஜய் பண்றீங்க?".

"லவ் பண்றேன்"

"ஓ இதுக்கு பேர் தான் லவ்வா?"

"இதுமாதிரி டைம் கிடைக்கும் போது அதை வேஸ்ட் பண்ணக்கூடாது குட்டி," என்றவன் அவளோடு  சேர்ந்து படுக்கையில் விழுந்தான்.

அன்றைய நாள் நிலாவிற்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை வாரி வழங்கியதோ அதற்கு எதிர்மறையாக இருந்தது அடுத்தநாள்.

நீண்ட நாட்களுக்கு பின்  நிலாவை நாடினான்.

குட்டி குட்டி  என கொண்டாடினான் அன்று இருந்த மென்மை சற்று விலகி வன்மை குடிக் கொண்டது. இதுவும் நிலாவிற்கு பிடித்திருக்க. அவள் முகம் மாற்றங்களைப் பார்த்து பார்த்து தான்  கூடலைக் கூட அரங்கேற்றினான்.

சிறிய வயதில் படுத்திப் பாடுகள் கூட அவன் இப்போது தாங்குவதில் மறந்து மறைந்துப் போனது நிலாவிற்கு..

"விஜய் பகல்".

"லைட்டை ஆப் பண்ணி கர்ட்டனை இழுத்து விட்டா நைட் ஆகிடும்."

"விஜய்".

"குட்டி."

"நான் உங்களைய ரொம்ப காயப்படுத்திட்டேனா?" 

"நான் எப்போ  சொன்னேன்"

"உங்களை விட்டுப் போயிருக்கக் கூடாது."

"ம்ம் நீ யுகியை லவ் பண்ணிடுவியோன்னு பயந்துட்டேன்".

"அவனை நான் அப்பாவா தான் பார்த்தேன்". 

"ம்ம்."

"கவி அவனை நல்லாப் பார்த்துப்பாள"

"பார்க்காம எங்கப் போய்டுவா பார்த்துப்பா நீ பயப்படாத"

"ம்ம்".

அவனை அணைத்துக் கொண்டே உறங்கி விட்டாள்.

மதியம் போல் எழுந்த நிலா,அருகில் நந்தனை தேட அவனோ அங்கு இல்லை.

மீண்டும் குளித்து விட்டு கீழேப் போக.

யுகி மட்டும் அமர்ந்து  சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அவனுக்கு உணவு வைக்க ஆள் இல்லாம எட்டி எட்டி ஒவ்வொன்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க.

"கவி எங்க?" என்றுக் கேட்டுக்கொண்டே நிலா அவன் அருகில் சென்றாள்.

"அவங்க அம்மாவை விடப் போயிருக்கா".

"ம்ம் நான் வைக்கிறேன் குடு."

"வேண்டா நானே வெச்சிக்கறேன்"

"என்ன ஓவரா பண்ற? மூஞ்சை உடைச்சிடுவேன் மூடிட்டு தின்னு" என்றவள்,  அவனுக்கு பிடித்ததாகப் பார்த்து பார்த்து வைத்தாள்.

"அவருக்கு நான்தானே பொண்டாட்டி.  என்னமோ நீ பொண்டாட்டி மாதிரி பண்ணிட்டு இருக்க?" என நிலாவின் பின்னால் குரல் கேக்க நிலா யுகி இருவருமே திரும்பி பார்த்தனர்.

கவி தான் நின்றிருந்தாள்.

"ஏய் என்னடி பேசற?".

"உண்மை தான் பேசறேன், என் புருசனுக்கு சோறு வைக்க இவ யாரு?. இவளுக்கு ஒருத்தன் பத்தலையா,உங்களையும் வளைச்சுப் போட்டு வெச்சிக்கப் பார்க்கறா?" என கவி வரம்பு மீறி பேச யுகி கவியை அறைந்து விட்டான்.

"ஒழுங்கா  அவ.. அண்ணிகிட்ட மன்னிப்பு கேளு. கேளுடி."

"என்ன யுகி எதுக்கு இப்போ அடிச்ச?" என நிலா பதற..

"நீ வாயை மூடு, அவ இவ்வளவு பேசறா திரும்ப அவளுக்கே சப்போர்ட் பண்ற. இங்கபாரு எல்லோரையும் அனுசரிச்சு போற மாதிரி இருந்தா இங்க இரு,இல்லனா கிளம்பி போயிட்டே இரு. யாரு உன்னைய புடுச்சித் தொங்கிட்டு இருக்கல" என நிலாவிடம் ஆரம்பித்து கவியிடம் முடித்த யுகி அங்கிருந்து சென்று விட்டான்..

யுகி இப்படி பேசியது வேறு  மேலும் வெறியை உண்டாக்க.. கவி, நிலாவை முறைத்தவாறே நின்றாள்.

"இதெண்டா கொடுமையா போச்சி, சோறு போடப் புருஷனா தான் இருக்கனுமா என்ன? இவ வேணும்னு தான் இவ்வளவும் பேசறா. என்னாலே இவங்க அடிச்சிட்டு இருக்கறது என்னமோ மாதிரி இருக்கு" என அங்கையே அமர்ந்து விட்டாள்.

அன்று இரவு வந்த நந்தனிடம்..

"விஜய்  உங்களுக்கு வேற ஊருக்கு ட்ரான்பர் கிடைக்குமா?" என்றாள் நிலா

"என்னாச்சு.?"

"சும்மா தான் கேட்டேன். நீங்களும் மாறி மாறி வேலைப் பார்த்தாதானே நானும் உங்கப் பேரைச் சொல்லிட்டு நாலு ஊரைச் சுத்திப் பார்க்க முடியும்" என ஓரளவிற்கு அவனிற்கு சந்தேகம் வராதவாறு சொல்லி விட்டாள்.

"நம்ப நினைக்கறது தான், எங்கப் போகணும்ன்னு சொல்லு போய்டுவோம்."

"ஊட்டி."

"இது நல்லா இருக்கே சங்கருக்கு போனைப் போடு."

"அவர் உங்க மாமா தானே இங்க வரவே இல்ல".

'கூப்பிட்ட இடத்துக்கு தான் யாரா இருந்தாலும் போவாங்க" என்றவன், "சின்ன கேஸ் முடியற நிலைமையில 
இருக்கு அது முடிஞ்சதும் பார்க்கலாம்"

"ம்ம்" என அவனை அணைத்துக் கொண்டுப் படுத்து விட்டாள்

அடுத்த நாள் காலையில் நந்தனுக்காக நேரமாக எழுந்து சமைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றாள் கவி.

அவளை திரும்பிப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நிலா அவள் வேலையை செய்துக் கொண்டிருக்க,

"நிலா நேத்து நான் அப்படி பேசியிருக்கக் கூடாது சாரி" என்றாள் தன்மையாக.

"உன் ரூமில போதிமரம் எதுவும் இருக்கா?"

நிலா கேட்டது புரிந்து விட,  இப்போது தன் கோவத்தைக் காட்டுவது முட்டாள் தனம் என நினைத்து அடக்கிக் கொண்டவள்.

"இருக்கலாம் ஏன் எனக்கு  புத்தி வரக்கூடாதா?". என்றாள் சிணுங்களாக

அவளின் சிணுங்களில் உண்மை இல்லை என நிலாவிற்கும் புரிந்தது 

"யாரும் சாரி கேக்கணும்ன்னு அவசியமில்ல கவி. அவங்க அவங்க தப்பை உணர்ந்தாளே போதும்"  என அங்கிருந்து சென்று அடுத்த வேலையைப் பார்த்தாள்.

"உன்னை விடுவேனாப் பாரு" என்பது போல் நிலாவை பின் தொடர்ந்து சென்றுக் கொண்டே இருந்த கவி.

"என்னைய மன்னிச்சிட்டேன்னு சொல்லேன் ப்ளீஸ்" என்றாள்.கெஞ்சலாக.

அவளைப் பார்க்கவும் பாவமாக இருக்க. "சரி நீ பேசுனதை மறந்துட்டேன் விடு" என்றவள் நந்தனிற்கு உணவு பரிமாறப் போய்விட்டாள்.

யுகியும் அங்கிருக்க  அவனுக்கு வைக்காமல் நந்தனுக்கு மட்டும் வைத்தாள்.

"ஏன் நிலா  யுகி அத்தானுக்கு வைக்கல , அவருக்கும் வை" என கவியே  சொல்ல , யுகியும் நிலாவும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் பார்வையை நந்தனும் குறித்துக் கொண்டான்.

"இல்லம்மா உன் புருசனுக்கு நீயே வை.எனக்கு இவரைப் பார்க்க தான் சரியா இருக்கு" என்றவள் நந்தனுக்கு அள்ளி அள்ளி வைத்தாள்.

"என்னடி பண்ற?".

"சாப்புடுங்க விஜய் . அப்போதான் நாலு திருடனை தொரத்திப் புடிக்க முடியும்."

"அதுக்குன்னு தட்டு வழியா யாராவது சாப்புடுவாங்களா?, இது வயிறுன்னு நினைச்சியா  இல்ல வேற ஏதாவதுன்னு நினைச்சியா?".

"நீங்க சாப்புட்டு வெச்சிட்டுப் போங்க மீதியை நான் சாப்புட்டுக்கறேன்". என அவனிடம் ரகசியம் பேச.

"அவருக்கும் வெச்சா நான் என சொல்லிடப் போறேன்" என கவி நிலாவை வற்புறுத்தி வைக்கச் சொல்ல ,யுகி சாப்பிடாமல் எழுந்துச் சென்று விட்டான்.

நந்தன் எதுவும் பேசாமல் நிலாவையே தான் பார்த்திருந்தான். அவன் மனம் ஏதோ போல் பிசைய. தவறு நடக்கபோவது போல் உள் மனம் எச்சரித்துக் கொண்டே  இருந்தது.

"வியா. இன்னைக்கு வெளியேப் போவோம் கிளம்பு".

"எதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னிங்க"

"அது இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம் கிளம்பு" என்று விடாப்பிடியாக இருந்தான்.

அவன் நிலாவை அழைத்துச் சென்று விட்டாள் கவி நினைப்பதை எப்படி செய்ய முடியும்?.

"மச்சான் நானும் உங்கக் கூட வரேன் எனக்கும்  எங்கையாவது வெளியப் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணுது" எனச் சொல்ல

நிலா நந்தனைப் பார்க்க

அவனோ "யுகியைக் கூட்டிட்டுப் போம்மா நானும் என் பொண்டாட்டியும் போய்கறோம்."என பட்டென்று சொல்லிவிட்டான்.

"என்ன மச்சான் இப்படி சொல்றீங்க நான் வந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை.?"

"எங்க நீங்க மீட்டிங் போங்க இன்னொரு நாள் போயிக்கலாம்" என்ற நிலா உள்ளேப்  போய்விட்டாள்.

"ஏம்மா அவ அவ புருஷன் கூடப் போறதை விட்டுட்டு எங்கக் கூட எதுக்கும்மா வரேன்னு நிற்கர?". என முகத்தில் அடித்ததுப்  போல் கேட்டுவிட்டு, நிலா வர மாட்டேன் என்றக் கோவத்தில் கிளம்பி விட்டான்.

திரும்பி வரும்போது அவன் ஆரூயிர் காதலியின் உயிர் ஊசலாடும் என அறியவில்லை அவன்.

நந்தன் கிளம்பிவிட. உடனே நிலாவைப் போய் பார்த்தால் சந்தேகம் வந்துவிடும் என மதியம் வரைக்கும் சுற்றிக் கொண்டிருந்தவள்.மதியத்திற்கு மேல் 

ஒரு பழச்சாறைப் போட்டவள், அதில் சரஸ்வதிக் கொடுத்த விஷத்தைக் கலந்தாள்.

"வீட்டுலையே போலீஸ் இருக்கான் கண்டுபிடிச்சிடுவான்னு தெரிஞ்சும் விஷம் வைக்கறியே நீ  பலே கில்லாடி தான்" என மனசாட்சி உறுத்தியது.

"அவ பொழைக்காம பார்த்துக்கிட்டாப் போதும் அதுக்கு மேல வரப் பிரச்சனையை சரஸ்வதி மேல தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன்" என சாதாரணக் கையை தட்டிக் கொண்டாள்.

கையில் பழச்சாறை எடுத்துக் கொண்டு நிலாவின் அறைக்குப் போனாள்.

"நிலா நிலா"

"வா கவி".

"இந்தா, எனக்கு ஜீஸ் போட்டேன் அப்படியே உனக்கும் கொண்டு வந்தேன் குடி".

"எனக்கு வேண்டா கவி".

"ஏன் இன்னும் என்னைய மன்னிக்கலையா நீ?".

"அப்படிலாம் இல்ல".

"அப்புறம் என்ன குடி?".

"எனக்கு வேண்டா கவி.சொன்னாக் கேளு இப்போதான் சாப்பிட்டேன்"

"சரி விடு நான் என்னமோ விஷம் கலந்து உன்னைய குடிக்க வெக்க மாதிரி பண்ற?". என்றவள் "நான் வேணுமா குடிச்சிக் காட்டவா?"

"நீ சொல்ற மாதிரிலாம் எதுவும் இல்ல. எனக்கு பசிக்கல கவி".

"அதுக்குன்னு கொஞ்சம் கூடவா குடிக்கக்கூடாது. என்னமோ நேத்து புத்திக் கெட்டுப் போய் பேசிட்டேன், அதுக்குன்னு எல்லோரும் என்னைய துரோகி மாதிரி விலக்கி வெச்சா என்னப் பண்றது?"  என அழுவது போல் பேச.

"அம்மா தாயே அழாத நான் குடிக்கிறேன் " என்று நிலாவே வாங்கி குடித்துவிட்டாள்.

"ம்ம் இப்போதான் நிம்மதியா இருக்கு".

"என்ன..?"

"ஒன்னுமில்ல நீ போய்  ரெஸ்ட் எடும்மா."

"ம்ம்"  என்றவள் கதவை லேசாக மூடிவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டு அலைபேசிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


Leave a comment


Comments


Related Post