இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -122 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 09-09-2024

Total Views: 1454

நிலாவை மருத்துவமனையில் இருந்து  ஒரு வாரம் கழித்து அனுப்பி விட அவன் அவளை சங்கருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டான்.

மருத்துவமனையில் இருந்த வரையிலும் நிலாவிடம் ஒற்றை வார்த்தைப் பேசவில்லை நந்தன்.

நிலா எழுவதும் தூங்குவதுமாக இருந்ததால் நந்தனின் விலகல் பெரிதாக பாதிக்கவில்லை. தூக்கம் தூரப் போனதும் தான் நந்தன் பேசாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது.

"விஜய்."

------

'ப்ளீஸ் பேசுங்களே.'

அவளுக்கு தேவையான அனைத்தையும் ஓடி ஓடிச் செய்வானே தவிர ஒற்றை வார்த்தை பேசமாட்டான்..

ரதியும் சங்கரும் கூட  நிலாவைப் பார்க்க மருத்துவமனை வந்திருந்தனர். அவர்களுக்கு கொடுத்த அனுமதியை யுகி வளவனுக்கு கூடக் கொடுக்க மாட்டேன் என்று விட்டான்.

சங்கர் தனியாகவும், ரதி தனியாகவும் வந்திருக்க.

"இங்க தானே வராரு  என்னையும் கூட்டிட்டு வந்தா என்ன?, சரியான ஆளு" என ரதி புலம்ப.

"எம்மா நானே என் பொண்டாட்டி இப்படி கடக்கறாளேன்னு நொந்துப் போய் கிடக்கறேன், நீ சந்துக் கேப்புல ரொமான்ஸ் பண்ண ரூட் போட்டுட்டு இருக்கியா?" என பத்து நாளைக்குப் பிறகு ரதியிடம் சகஜமாகப் பேசினான் நந்தன்.

நந்தன்,  அம்மாயி தாத்தாவைப் பார்க்கப் போகும் போதெல்லாம் ரதியுடன் தான் விளையாடுவான். அந்த தோழமை  அவளிடம் சகஜமாக பேச வைத்தது.

"என்னம்மா என்னாச்சி? நீங்க நல்லா தானே சந்தோஷமா இருந்திங்க?. உங்க ரெண்டுபேருக்குள்ளையும் எந்த பிரச்சனையும் இல்லையே" என சங்கரப் பாண்டியன் நிலாவிடம் கேக்க.

நந்தன் நிலாவை அழுத்தமாகப் பார்த்தான்.

அதைப் பார்த்த ரதி. "மாமனுக்கும் மருமகனுக்கும் முறைக்கிறதுல மட்டும் குறைச்சல் இல்ல, டேய் அண்ணா, அவளே அத்துப் போட்ட கொடி மாதிரி இருக்கா அவளைப் அப்படி முறைக்கி". என நந்தனின் கையை சுரண்ட.

"நீ அமைதியா இரு.." என்று அழுத்தமாக சொன்னவன், "கேளு" என்பது போல் சங்கரைப் பார்த்தான்.

"சொல்லும்மா  எதுக்கு இப்படி பண்ணுன.?"

"அது அண்ணா". என்றவளுக்கு யுகியின்  முகம் கண் முன் தோன்றியது.

அவளுக்கு தெரியும் கவிக் கொடுத்த ஜூஸைக் குடித்ததில் தான் எதோ பிரச்சனை, அதில் தான் ஏதோ கலந்திருக்க வேண்டும் என புரிந்தது. புரிந்து என்ன புரோஜனம். கவியை மாட்டிவிட்டால் யுகியின் சந்தோசம் மகிழ்ச்சி நிம்மதி அனைத்தையும் குழித் தோன்றி அல்லவா புதைக்க வேண்டும்.

தனக்கு இப்படி ஒன்றை கவி செய்தால் என்று தெரிந்தால் இனி யுகி அவளது முகத்தில் கூட முழிக்க மாட்டான். இதனால் இரண்டு ஜீவனின் வாழ்க்கை கெட்டுபோகும் அவன் அப்படி இருக்கும் போது தான் மட்டும் சந்தோசமாகவா இருப்போம் என கண்டதையும்  யோசித்தவள்.

"சும்மா விளையாட்டுக்கு, போன் பேசிட்டே கவனமில்லாம அரளி பூவை தின்னுட்டேன், அதான் . என்றாள்.அவர்கள் நம்ப என்று தெரியும். இருந்தாலும் கவியைக் காட்டிக் கொடுக்க மனமில்லாமல் இவ்வாறு சொன்னாள்.

மூவருக்கும் அவள் பதில் உவகையாக இல்லை, அதில் பல்லைக் கடித்தனர்.

"பொய் சொல்லி என்னைய மிருகமாக்காத,  யாரை காப்பாத்த  இப்படி பொய் சொல்ற?"  என நந்தன் எகிறிக்கொண்டு வர.

"நீ சும்மா இருடா, நான்தான் பேசிட்டு இருக்கேன்ல, புள்ளையே நொந்துப் போய் கிடக்குது அதை  மேல நோக அடிச்சிட்டு, அமைதியா இரு நான் கேட்டுச் சொல்றேன்" என நந்தனை பிடித்து நிறுத்தியவன்.

"இங்க பாரு நிலாம்மா".

"ம்ம் அண்ணா "

"உனக்கு இப்படி ஆனதுல  இவன் ரொம்ப பயந்துட்டான், இந்த  ஒருவாரமா அவன் அவனாவே இல்ல, "

"ம்ம்"  என ம்ம் கொட்டவும் நந்தனுக்கு வெறியாகிவிட்டது.

"அவளுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கியா நீ.?"

"டேய் அமைதியா இருடா.நான் பேசறேன்" என சங்கரப் பாண்டியன் நந்தனை அமைதி படுத்த முயல.

"கொலைவெறியில இருக்கேன் நீ என்னமோ பொறுமையா சொல்லிட்டு இருக்க.நீ நகரு நானேப் பார்த்துக்கறேன்" என அவனை தள்ளிகொண்டு முன்னாள் வந்தவன்.

"இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லப்போறியா? இல்லையா?"என்றான் கோவமாக.

நந்தனின் முகத்தில் அனல் தெறிப்பது போல் கோவம் தெறித்தது. அதைப் பார்த்த நிலாக்குள் அள்ளு விட்டாலும் , யுகி மட்டும் தான் அப்பதைக்கு அவளுக்கு முக்கியமாக தெரிந்தான்.

"அதான் விளையாட்டா"  என்றவளுக்கு நந்தன் அய்யனாராக நிற்பதைப் பார்த்து தொண்டை வறண்டது.

"என்னடி விளையாட்டு" என அருகில் இருந்த கண்ணாடியைத் தூக்கி சுவரில் எறிய அது நந்தனின் மனம் போல சில்லு சில்லாக உடைந்தது

அவள் மீது தூசுப் பட்டால் கூட அதை அடித்து நொறுக்கும் குணம் கொண்டவன் தான். உயிரே இருக்கா? இல்லையா? என்று தெரியாமல் நாலு நாட்கள் அலைமோதியவனுக்கு எந்த அளவிற்கு வேதனை இருக்கும். அந்த நிலையில் நந்தன் இருந்தான்.

இந்த நேரத்தில் யாருடைய அன்பு சிறந்தது என்று ஆராயும் நேரமா?.யார் வாழ்க்கையும்  பாதிக்கப்படாமல் எப்படி இந்த பிரச்சனையை முடிப்பது   என்று தானே யோசிக்க வேண்டும்.

நிலாவிற்கோ, தானும் வாழ வேண்டும்,தன்னை சார்ந்தவர்களும் வாழ வேண்டும், ஒருவரை நிற்கதியாக நிற்க வைத்து தான் மட்டும் வாழ்ந்தால் அந்த வாழ்விற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்ற கவலை. 

"ஐயோஓஓஓ" என பெண்கள் இருவரும் கத்த, . "நந்தா என்ன பண்ற? கொஞ்சம் அமைதியா இருன்னு சொன்னா புரியாதா உனக்கு?" என அவனை அடக்க முயன்றான் சங்கர்.

நந்தன் என்ற காட்டாற்று வெள்ளம் அணைக்களுக்கு அடங்குமா? கோவத்தை நெருப்பாக ஆர்பரித்துக் கொட்டத் தயாராக இருந்தது.

நந்தனின் கோபத்துக்கு பயந்து தான் நிலா சொல்ல மறுத்தாள். யுகியை கொல்ல முயன்றவர்களை என்ன கதியாக்கினானோ, அதேக் கதி தானே தன்னைக் கொல்ல நினைத்தவர்களுக்கும். நினைக்கும்  போதே உள்ளம் பதற, எத்தனை அடித்தாலும் சொல்லக்கூடாது என முடிவு பண்ணிவிட்டாள்.

"சொல்ல மாட்ட?" 

"அதான்.." என அவ ஆரம்பிக்கும் போதே. அவளை நோக்கி கையை நீட்டியவன்.

"போதும் நிறுத்து நீ என்ன சொல்லுவன்னு  எனக்கு தெரியும்,நான் போலீஸ் தானே கண்டுபிடிச்சிக்கறேன். நானா கண்டுபிடிச்சேன் சேதாரம் ரொம்ப  அதிகமா இருக்கும் சொல்லிட்டேன்" என்றுவிட்டவன் அதற்கு பிறகு ஒற்றை வார்த்தை பேசவில்லை.

நால்வரும் சேர்ந்து தான் திருப்பூர் வந்தார்கள்..

"சரி நந்து நீங்க கிளம்புங்க. நேரம் இருந்தா அப்பா அம்மாவை வந்து பார்த்துட்டுப் போ". என்றான் சங்கர்.

"ம்ம் ரதி அந்த பாப்பாவை ஸ்கூல் சேர்த்த சொல்லிருந்தனே". என நந்தன் ரதியிடம் கேட்டான்.

கயவர்களின் கையில் பாதிக்கப்பட்ட  குழந்தையின் உயிரை மீட்டுக் கொண்டு வருவதற்குள்  ஒரு வழியாகிவிட்டனர்.

குழந்தையின் காயங்கள் சரியாகிக் கொண்டே வந்தது. குழந்தையின் முழுப்பொறுப்பையும் நந்தன் தன் கையில் எடுத்துக்கொண்டான்.

அதனுடய தந்தையின் மருத்துவசெலவையும் நந்தனே ஏற்றுக் கொண்டான் ஆனால் அது வெளியே தெரியாதவாறும் பார்த்துக்கொண்டான் காவலன்.

"இன்னும் எழுந்து நடக்கவேயில்ல அதுக்குள்ள ஸ்கூலுக்கு என்ன அவசரம்.?"

"நீ சேரு நான் பார்த்துக்கறேன்" என்றவன்.சிறிது யோசித்து விட்டு. "இவளை உன்னோட கூட்டிட்டுப் போ மாமா" என்றான் சங்கரிடம்.

"எதுக்கு?.நான் போகமாட்டேன்" என நிலா அலற.

"போறியா இல்லையான்னு பெர்மிஸ்ஸன் கேக்கல,  போன்னு சொன்னேன்" . என நந்தனின் குரல் அழுத்தமாக வரவும், நிலா பேந்த பேந்த முழித்தாள்.

அவள் பார்வைக்காகவும், அவளுக்காகவும் இரும்பு மனிதன் இளகலாம், அடுத்தவர்கள் செய்த பாவத்திற்கு எதற்கு இளக வேண்டும்?. நந்தன் மட்டும் சுதாரிக்கவில்லை என்றால் அவன் உயிரை அல்லவா இழந்திருக்க வேண்டும்.

"இப்படி பார்த்தா மயங்குற நந்தன்னு நினைச்சியா?  ஒழுங்கா அங்கப் போய் இரு. முடிக்க வேண்டியதை முடிச்சிட்டு உன்னைய கூப்புட்டுக்கறேன்"

"நீங்க அங்கப் போய் சண்டைப் போடுவீங்க"

"இல்ல, தூக்கி மடியில வெச்சிக் கொஞ்சுவேன்"

"ஹா."

"கூட்டிட்டுப் போ மாமா".

"வாம்மா"

"அண்ணா,  யுகியையும் அண்ணாவையும் ஒரு தடவைப் பார்த்துக்கறேன், எனக்கு இப்படி ஆனது அவங்க ரொம்ப பயந்துப் போயிருப்பாங்க. எனக்கு ஒன்னும் ஆகலைன்னு தெரிஞ்சா சந்தோசப்படுவாங்க,அதும் இல்லாம ஒருவாரமா ரெண்டுபேரையும் பார்க்கவே இல்ல மனசு  ஒரு மாதிரி இருக்கு"   என்றாள்.

"அப்படியே அறைஞ்சேனா வெச்சிக்கோ, கிடக்கறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வையுங்கற மாதிரி என்ன பேசிட்டு இருக்க?" என நந்தன் நிலாவை அடிக்க வர,   சங்கர் அவளை இழுத்து தன் பின்னால் நிறுத்திக் கொண்டான்.

"என்னடா  இது?, அவளே" என ஆரம்பிக்க.

"போதும் நிறுத்து நீ உன் தங்கச்சிப் புராணம் பாடாத, கூட்டிட்டுப் போ இல்லனா என் கையாலையே அடிவாங்கி செத்துடுவா, ஏற்கனவே கொலைக் காண்டுல இருக்கேன்"  என சங்கரை மிரட்ட.

"டேய் நான் சட்டத்துறை அமைச்சர்டா  சங்கரப் பாண்டியனா ஜில்லாவே நடுங்கும்."

"நான் நடுங்க மாட்டேன்" என நந்தன் வெடுகென்று சொன்னான்.

"விஜய் ப்ளீஸ் நான் சொல்றதைப் புரிஞ்சிக்க முயற்சிப் பண்ணுங்க. எதோ நடந்தது நடந்துடுச்சு. இதைக் கேக்கப் போனா நிறையப் பேர்த்தோட நிம்மதிப் போய்டும்."

"என்னோட உயிரே போய்டுச்சு இனி எவன் நிம்மதி போனா எனக்கு என்ன?. மாமா நீ கூட்டிட்டுப் போறியா இல்லையா?.

"டேய் கொஞ்சமாவது  லா மினிஸ்டர்கிட்ட பேசறோம்ன்னு  நியாபகத்துல வைடா" என்றவனுக்கு அவன் கவலை. யாராவது நந்தன் பேசும்  முறையைப் பார்த்துவிட்டால் நாளை சுட சுட செய்திகள் அனைத்திலும் இவனும் நந்தனும் தான் இருப்பார்கள்.

"இந்த நேரத்துல உன்னைய காமெடி பண்ண சொன்னாங்களா?"   என்றவன் "போய்ட்டு வாங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு முடிச்சிட்டு அம்மாயி தாத்தாவை வந்து பார்க்கறேன்"  என அவர்களை தனிக் காரில் அனுப்பி வைத்துவிட்டு,  இவன் இவனுடைய காரில் வீடு வந்து சேர்ந்தான்.

நந்தன் இன்று நிலாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவதை யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் ரதி வளவனிற்கு அழைத்து சொல்லிவிட்டாள்.

அதனால் யாரும் எங்கும் நகராமல் இருக்க. கவிக்கு குற்ற உணர்வோ பயமோ எதுவுமில்லாமல் அசால்ட்டாக நின்றாள்.

நிலா வருகிறாள் அவளைப் பார்க்கப் போகிறோம் என ஆவலாக காத்திருந்த அனைவருக்குமே ஆப்பை சொருகிவிட்டான் நந்தன்.

நந்தன் கார் வேகமாக  உள்ளே வர ஆரத்தி தட்டுடன் ஓடி வந்தார் மணிமேகலை.

"யாருக்கு இது?" என்றவாறே இறங்கியவன். யாரையும் நின்றுக் கூட பார்க்காமல் நேராக வீட்டுக் கூடத்திற்குச் சென்று சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

எல்லோரும் அவனை கேள்வியாகப் பார்த்தனர்.

"நந்து நிலா  எங்கப்பா..?புள்ளையப் பார்க்க தான் காத்துட்டு இருக்கேன்" என மார்த்தி முதலில் வாயைவிட.

"எதுக்கு எப்படி சாகடிக்கலாம்ன்னு பார்க்கவா.?"

"நந்து.....!"

"இந்த நந்து பொந்துலா வேண்டாம், எல்லோரும் வந்து நில்லுங்க நான் விசாரிக்கணும்."  போலீசாக அவன் வேலையை  ஈவு இரக்கமின்றி அனைவரையும் காயப்படுத்தினான்.

"நந்து , நிலாவுக்கு இப்படி ஆகும் போது நான் வீட்டுலயே இல்லடா"என்றார் அதிர்ச்சிக் குரலில் அவரால் நந்தன் சந்தேகப்படுவதை தாங்க முடியவில்லை.

"ஏன் வீட்டுல இல்லைன்னா ஆள் வெச்சி இதைப் பண்ண முடியாதா?".

"என்னையவா சந்தேகப்படற?" என மார்த்தி குரல் உடைந்து கேக்க.

"அவ விசயத்துல நான் என்னையவே சந்தேகப்படுவேன் உங்களைய சந்தேகப்பட மாட்டனா?. எனக்கு அவளை தவிர யாரும் முக்கியமில்ல.அவ தலை தொங்கி பார்த்தப்ப என்னோட உயிரேப் போயிடுச்சி, நீங்க வேணுனா உங்கப் பொண்டாட்டி மேல பாசமில்லாம இருக்கலாம், என்னால அப்படி இருக்க முடியாது. அவளை தாண்டி தான் எனக்கு மத்தவீங்க"  என்றவன்.

"சொல்லுங்க யார் இந்த வேலையைப் பார்த்தது? நீங்களா ஒத்துக்கிட்ட உயிரோடவாது இருப்பிங்க, நானா கண்டுப் பிடிச்சா அப்புறம் சொல்றதுக்கு இல்ல" என்றான் அழுத்தமாக.

நந்தன் குரலில் என்றுமில்லா அளவுக்கு அழுத்தமாக வந்த அளவிற்கு, குரல் உடைந்தும் வந்தது.ஒரு நொடியில் தன்னை சரி செய்துக் கொண்டவன்.

"அன்னிக்கு அவக் குடிச்ச ஜூஸ்ல தான் பாய்சன் மிக்ஸாகிருக்குன்னு சொல்லிட்டாங்க. யார் அவளுக்கு ஜூஸ் குடுத்தது?".

"நான் இல்லை, நான் இல்லை" என ஆள் ஆளுக்குச் சொல்லு  ஷாலினி கவியை தான் சந்தேகமாகப் பார்த்தாள்.

"யாரும் இல்லைன்னா  அவளே எடுத்து குடிச்சிட்டாளா?" என்றவன்.

"அம்மா..?"

"தம்பி"

"அன்னிக்கு மதியம் வரைக்கும் அவ எந்த ஜூசும் குடிக்கல."

"எப்படி சொல்றிங்க?" என வாலன்றியாக வந்து நின்றாள் கவி

எல்லோரின் பார்வையும் அவள் மீது  தான் விழுந்தது.

"ஏன்னா  அவளுக்கு இப்படியாகறதுக்கு  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் என்கிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தா" என வளவன் முன் வந்து சொன்னான்.

நிலா வளவனிடம் யுகி சாப்பிடாமல் போனதை சொல்லி சாப்பிட வைக்கச் சொல்லிருந்தாள். அப்போது எந்த கோவமுமோ வெறுப்போ கவலையோ அவள் பேச்சில் தெரியாதப் போது அடுத்த அரைமணி நேரத்தில் அவள் தொய்ந்து போய் கிடந்ததை யாரால் நம்ப முடியும்?.

"தம்பி யாரோ என்னமோ பண்ணிட்டாங்க, இப்போ என் புள்ளை எங்கப்பா? அவளை நான் எப்போப்பாப் பார்க்கறது?" என்று ராஜி மகளை காண முடியாத ஏக்கத்தில் தேம்பி தேம்பி அழுதார்.

பின்ன கவலையும் வேதனையும் இருக்காதா,  பெற்ற மகள் உயிருக்கு போராடுகிறாள் என தெரிந்தும் தாயால் குழந்தையைப் பார்க்க முடியவில்லை என்றால் பெற்ற வயிறு கலங்கதானே செய்யும்.

"அவளைப் பார்க்க யாரையும் அலோ பண்ண மாட்டேன். இதுக்கு மேலையும் உங்களை நம்பிட்டு இருந்தா நான் அவளை  எமனுக்கு தூக்கிக் குடுத்துட்டு தான் போகணும், இனிஅவ முழுக்க முழுக்க என் பொறுப்புல தான் இருப்பா" எனக் கோபமாக பேச.

"அதுக்குன்னு பெத்தவளையும் கூடப் பொறந்தவளையும் பார்க்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம் தம்பி"

"பார்க்கக் கூடாதுன்னு தான் அர்த்தம்" என முடித்துவிட்டான்.

இதுக்கு மேல அமைதியா இருந்தா சரியாகாது  என எழுந்தவன்,  யுகியின் கன்னத்தில் இரண்டு அறை மாறி மாறி வைத்தான்.

எல்லோரும்  அதிர்ச்சியில் பார்க்க.

"எதுக்குடா அவளுக்கு விஷம் குடுத்த?" என்றான் அழுத்தமாக.

அவ்வளவு நேரமும் யுகி எதுமே பேசவில்லை. இந்த  ஒரு வாரத்தில் உடல் பாதியாக இளைத்து இருந்தது. அவன் கண்கள் ஜீவன் இழந்து ஒளியற்று இருந்தது. நிலாவைப் பார்க்க முடியாத ஏக்கமும், நம்பினவர்களின் நம்பிக்கை துரோகமும் அவனை உயிரற்ற ஜடமாக நிற்க வைத்தது.

"மச்சான் நிலாவுக்கு இப்படியாகும் போது அவர் இங்கையே இல்ல". என கவி தடுக்கப் போக , நந்தன் யுகியை மறுபுறம் இழுத்து நிறுத்தியவன். மீண்டும் அடித்தான்.

"அவரை எதுக்கு அடிக்கிறிங்க?, எப்போ பாரு பூனை பூனைன்னு இருந்தவரு தான் அவளுக்கு விஷம் வைப்பாரா?" என கவி தான் அங்கு கத்திக் கொண்டிருக்க, மற்ற யாருமே பேசாமல் நின்றனர்.

நந்தன்  எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர்களுக்கு தெரியாதா யுகி நிலாவின் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி.

"என்ன எல்லோரும் இப்படி வேடிக்கைப் பார்க்கறீங்க?, அவர் செஞ்சிப்பாரா?"  என்றவளால் யுகி அடி வாங்குவதைப் பார்க்க முடியவில்லை.

தடுக்கப் போனாளே தவிர, தான் தான் செய்தேன் என சொல்ல முன் வரவில்லை.

யுகி நந்தன் கொடுத்த அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அமைதியா நின்றானே தவிர  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தடுக்கக் கூட இல்லை.

"உங்களுக்கு கிறுக்கு ஏதாவது புடிச்சிடுச்சா மாமா? அவர் அடிக்கிறாரு நீங்க வாங்கிட்டு நிற்கறீங்க.எதிர்த்து அடிங்க இல்லை உங்கப்பக்க நியாயத்தைச் சொல்லுங்க" என யுகியிடம் சண்டைக்குப் போக.

அவ்வளவு நேரமும் அவளைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தவன்,  இப்போது சுட்டெரிப்பது போல் பார்த்தான்.

"என்னய எதுக்கு முறைக்கறீங்க,  அவங்களை தடுங்க"  என்றவள். நந்தனை தள்ளப் போகணும் 

"என்னய தொட்ட அவமானப் பட்டு தான் நிற்கனும்"  என நந்தன் கவியிடம் இருந்து விலகி நின்றுக் கொண்டான்.

எப்போது தன் மனதில் நிலா தான் இருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டானோ,  அன்றில் இருந்து மற்றப் பெண்களின் விரல் நுனிக் கூட தன் மேல் படாமல் பார்த்துக்கொண்ட  மீ காதல் கள்வனவன், அவளவனை தவிர வேற யாரும்  அவனை  தீண்டவோ, இழகவோ.சாந்தப்படுத்தவோ காதல் செய்ய வைக்கவோ முடியாது.

அவன் வார்த்தையை கவியை சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை.

யுகிக்குக் கவியைப் பார்க்கும்  போதெல்லாம் அசிங்கத்தை தன் மேல் பூசியது போல் அருவருப்பாக இருந்தது..

நந்தன் இவ்வளவு அசிங்கமாகப் பேசுகிறான் அப்படி இருந்தும் கொஞ்சம் கூட கூச்சமோ கவலையோ இல்லாமல் நின்றாள் கவி.

"உங்களைய நான் தொடல நீங்க அவரை எதுக்கு அடிக்கறீங்க வாய் பேசாத புள்ளைன்னா போறவன் வரவனாலாம் அடிக்கலாம்ன்னு இருக்கா..?" என்று நந்தனை யாரோப் போல் பேசினாள்.

"யாரு போறவன்? வரவன்?. அவன் என்னோட அண்ணன் அவனுககு எல்லா உரிமையும் இருக்கு, நீ யாரு கேக்கறதுக்கு முதல்ல?" 

"நான் உங்க பொண்டாட்டிங்க."

"ஹா நான் பண்ண என் வாழ்நாள்ல பெரிய தப்பே உன்னய கல்யாணம் பண்ணிகிட்டது தான், பொண்ணாடி நீ? சரியான பிசாசு  உயிரைக் குடிக்கிற ரத்தக் காட்டேரி, அவ எறும்புக்குக் கூட வலிக்கும்லன்னு பாவம் பார்க்கறவளைப் போய் விஷம் வெச்சிக் கொல்லப் பார்த்துருக்க. அவ துடிச்ச துடிப்பை உன்னைய துடிக்க விடல நான் யுகி இல்லடி, உன்னையிலா உயிர் இருக்கற வரைக்கும் மன்னிக்கவே மாட்டேன். என்னோட மூஞ்சுல முழிச்சிடாத போய்டு" என யுகி கத்த.

பெரியவர்கள் தான் அதிர்ந்துப் பார்த்தனர் சிறியவர்கள் அனைவரும் ஏற்கனவே  தெரியும் என்பது போல் அமைதியாக இருந்தனர். அதில் வளவன் ஷாலினியும் கூட அடக்கம்.

"என்னடா யுகி சொல்ற? என் பேத்தி அப்படிலாம் பண்ண மாட்டாடா". என கிருஷ்ணம்மாள் நெஞ்சில் அடித்துக் கொள்ள.

"உன்னைய கொன்னுட்டா எல்லாம் சரியா போய்டும் கிழவி, உன்னால தான் இவன் இப்படி வளர்ந்தான், பெத்த புள்ளைக்கும் உன் புத்தியையே சொல்லிக் குடுத்து வளர்த்து அது விசமா வளர்ந்ததும் இல்லாம, அது பெத்ததையும் விசமா வளர்த்து வெச்சிருக்கு. இதுக்கு எல்லாம் மூலக் காரணம் நீ மட்டும் தான், நீ செத்துப் போய்ட்டா இனி வர தலைமுறையாவது ஒழுக்கமா இருக்கும்" என கிருஷ்ணமாளின் கழுத்தைப் பிடிக்கப் போன யுகியை வளவன் பிடித்துக் கொள்ள.

"விடுடா எதும் பண்ண மாட்டேன்" என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்.

"இவ எனக்கு வேண்டா நீ இவ மேல என்ன கேஸ் போடுவியோ போட்டுக்கோ. எத்தனை வருஷம் உள்ள தள்ள முடியுமோ தள்ளிக்கோ. இனி இவளுக்கும்  எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, இவ செத்தாக் கூட நான் ஏன்னு கேக்க மாட்டேன்"என்றான் நந்தனிடம்.

இவ்வளவு சண்டையில் கவியை எந்த வார்த்தை பாதித்ததோ இல்லையோ யுகி சொன்ன நீ செத்தாலும்  கவலைப்படமாட்டேன் என்ற வார்த்தை  மனதை சுக்கு நூறாக உடைத்தது.

அவன் அவளிடம் மட்டும் அன்பு காட்டிருந்தால் இந்த அளவிற்கு போயிருக்க மாட்டாளே. காதலிக்கிறேன் என்றான் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான் அவன் சொன்ன அனைத்திற்கும் ஆசையாக தலையை ஆட்டி அவளது வாழ்க்கையையே அவனிடம் கொடுத்தவள் அவள். அவளுடன் சந்தோசமாக வாழ்ந்திருந்தாலே இந்த அளவிற்கு இறங்கிப் போயிருக்க மாட்டாள். யாரையும் காப்பாற்ற யார் வாழ்க்கையிலும் விளையாடக் கூடாது வாழ்வில் காதல் என்பது கூட ஒரு முறை இல்லை என்றால் இன்னொரு முறை வந்துவிடும் ஆனால் வாழ்நாளில் ஒருமுறை மட்டும் நடக்க வேண்டிய திருமணத்தை யாருக்காகவும் செய்துகொள்ளக் கூடாது. அன்று கவியை அவசரமாக திருமணம் செய்துகொண்டதற்கு பதிலாக நிலாவிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டிற்கலாம் எல்லோருடைய வாழ்க்கையையும் சிறப்பாக அமைந்திருக்கும்.


Leave a comment


Comments


Related Post