இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -127 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 18-09-2024

Total Views: 1308

இரண்டு நாட்கள் சென்றது.

இந்த இரண்டு நாளில் நிலாவிடம் இருந்து தினம் இருமுறை அழைப்பு வந்துவிடும். மனம் உடைந்து இருந்தவளுக்கு நிலா ஒரு ஊன்றுக் கோலாக இருந்தாள்.

இரண்டு நாளும் அறைக்குள் அடங்கி கிடைந்த கவி. நிலாவின் வார்த்தைகளில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேக் கொண்டு வந்தாள்.

"எங்கையாவது வெளியே போவமா கவி.?"

"நான் வரல நிலா"

"வா. சும்மா ரூமுக்குள்ள நாலு சுவத்தைப் பார்த்துட்டே இருந்து என்னப் பண்ணப் போற.?"

"ம்ம் எங்கப் போலாம்".

"கோவிலுக்கு".

"ம்ம்"

"சரி கிளம்பி இரு என் புருஷனையும் உன் புருஷனையும் இழுத்து வரேன்."

"அவரும் வராரா?".

"ஏன் அவன் வந்தா நீ வர மாட்டியா?".

"நான் வரல நிலா, அவர் முகத்தை திருப்பறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கும்".

"அதெல்லாம் திருப்ப மாட்டான் வா" என எவ்வளவோ பேசி சம்மதம் வாங்கினாள்.

அவளால் தானே யுகியின் வாழ்க்கை சீரற்று கிடைக்கிறது அதை சீரமைக்க வேண்டியது அவள் பொறுப்பாக நினைத்து தான் அனைத்தையும் செய்தாள்.

நந்தன் இங்கு வேலை விஷயமாக சுற்றிக் கொண்டிருக்க. அவனிற்கு அழைத்தாள்.

"என்ன"

"கோவிலுக்கு போகணும்"

"போ"

"நீங்களும் வாங்க."

"எனக்கு வேலை இருக்கு"

"என்னைக்கு தான் உங்களுக்கு வேலை இல்லை. கிளம்பி வாங்க சேர்ந்து கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது".

"ஏதாவது வில்லத்தனம் பண்றியா?" காவல்காரன் மோப்பம் பிடித்து விட்டான்.

"இல்லையே ஏன் கேக்கறீங்க.?"

"உன்னைய பத்தி எனக்கு தெரியும்டி. ஒழுங்கா சொல்லு".

"இல்ல விஜய்."

"ம்ம் பத்து நிமிசத்துல வரேன்". என அவன் அழைப்பை துண்டிக்க. "ஸ்ப்பா ஒரு ஜோடி சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு?". என அடுத்தது யுகிக்கு அழைத்தாள்.

"என்ன பூனை."

"கோவிலுக்கு போகணும் ஒரு வேண்டுதல் இருக்கு, நீயும் வரனும் அதுக்கு தான் கால் பண்ணேன் எப்போ வர?இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பிடுவேன் நீயும் வந்து சேர்ந்துக்கோ" என வேகமாக ஒப்பித்து விட்டு அவன் பதில் சொல்வதற்கு முன் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

"என்ன இவ?, கால் பண்ணுனா வா ன்னு சொல்லிட்டு வெச்சுட்டா. இந்த பூனை ஏதாவது திருட்டு வேலைப் பார்க்குதோ" என எண்ணாமல் இல்லை. இருந்தாலும் கிளம்பினான்.

மூவரையும் கோவிலுக்குள் கொண்டு வருவதற்குள் நிலாவிற்கு விழிப் பிதுங்கிவிட்டது.

கவியைப் பார்த்ததும் யுகி முறைத்தானோ இல்லையோ நந்தன் முறைத்தான்.

"நீங்க எதுக்கு முறைக்கிறீங்க.?".

"அவளை எதுக்கு இங்க வர சொன்ன?".

"கோவிலுன்னு இருந்தா சாமி கும்பிட நாலுப் பேர் வர தான் செய்வாங்க. வர கூடாதுன்னு சொல்லுவீங்களா நீங்க" என்றவள்.

"வா கவி. இப்போதான் வந்தியா?".

"ம்ம்."

"அப்புறம் வேண்டுதலை ஆரம்பிச்சிடலாமா.?"

"என்ன வேண்டுதல் என்கிட்ட சொல்லலையே."

"இது யுகிக்காக வேண்டுனதுங்க உங்ககிட்டலையா சொல்லக்கூடாது".

"இது எப்போ வேண்டுன?".

"அவன் கல்யாணம் ஆனப்ப வேண்டுனேன் எதுக்கு கேள்வியா கேட்டு கொல்லறீங்க? சத்த நேரம் சும்மா இருங்க" என்றாள்.

"என்னமோ பண்ற.. வீட்டுக்கு வா பேசிக்கறேன்" என நந்தன் அமைதியாகிவிட்டான்.

இந்த பிரிவில் தான் காதல் அதிகம் ஆகும் என்பது போல் கவிக்கு இப்போது தான் யுகியின் மீது கொள்ளை காதல் வந்தது.

அவனை நேரடியாகப் பார்க்க முடியாமல் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்ததாள்.

"யுகி கவியை தூக்கிக்க"

"என்னது?" என இருவரும் ஒருசேர அதிர.

"ஆமா உங்களுக்கு கல்யாணம் ஆனப்ப நீங்க நல்லபடியா வாழ்ந்தா யுகி கவியை தூக்கிட்டு கோவிலை மூனு சுத்து சுத்துவான்னு வேண்டிக்கிட்டேன். அந்த வேண்டுதலை செய்யாததால தான் என்ன என்னமோ நடந்துடுச்சிப் போல.. இப்போ செஞ்சிடலாம் யுகி தூக்கிக்க, இந்த கோவில விசேஷமான வேண்டுதல் இதுதான். தூக்கிட்டு சுத்துனா காலம் முழுக்க ஒருத்தரை ஒருத்தர் பிரியாம இருப்பாங்களா" என நிலா கதை கதையாக அளந்து விட.

"முடியாது". என்றான் யுகி.

"என்ன முடியாது?. வேண்டியதை செய்யலைன்னா கடவுள் கண்ணை குத்திடுவாரு,அதும் வேண்டுனவீங்க கண்ணை தான் குத்துவாரு, ஆல்ரெடி உடம்பு நொந்துப் போய் கிடக்கறேன் இதுல கண்ணும் தெரியாம கிடக்கனுங்கறது தான் உன்னோட ஆசைன்னா அதையேப் பண்ணு" . என நிலா கண்ணைக் கசக்க.

"அழாத பண்ணித் தொலையிறேன்". என்றான் வெடுகென்று.

"ம்ம் தூக்கு" என்றதும் யுகி கவியை வேண்டா வெறுப்பாக தூக்க, அவளோ அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.

கழுத்தை சுத்தி கையைப் போட்டு அவன் மார்போடு ஒன்றிக் கொண்டவள்.

"சாரி மாமா. உங்களை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்,அந்த பொஸ்ஸஸிவ்ல தான் அந்த சரஸ்வதி சொன்ன எல்லாத்தையும் பண்ணிட்டேன் . என்மேல தப்பு தான் இனி எப்போமே அந்த தப்பைப் பண்ண மாட்டேன் நம்புங்க மாமா" என அழுதாள்.

யுகியை அவளது கண்ணீர் கரைக்கவே இல்லை.பல்லைக் கடித்துக் கொண்டு சுற்றினான்.

யுகி என்ன செய்ய போகிறான் என உணர்ந்துக் கொண்ட நிலா, "டேய் கீழே இறக்கி விட்டா வேண்டுதல் தடைப்பட்டுடும், இறக்காம சுத்து" என கத்த

அவளது காதைப் பிடித்து திருகிய நந்தன்.

"என்னடி வேண்டுதல் இது?.எங்க இருந்துடி இப்படிலாம் வேண்டுதல் புடிக்கிற.?"

"எத்தனை நாடகம் பார்க்கறோம் புருஷனையும் பொண்டாட்டியையும் சேர்த்து வைக்க இப்டிலாம் செய்யனும் விஜய். ஆஆஆஆ வலிக்குது விடுங்க".

"திருட்டு நாய் அவங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு என்னடி வந்துச்சி?. இதுல என்னையும் கூட்டு சேர்த்து வெச்சிருக்க. எதுக்குடி என்னய வர சொன்ன?".

"அவன் கோவிலை மூனு ரவுண்டு அடிக்கிற வரைக்கும் எனக்கு போர் அடிக்கும்ல விஜய் அதுக்கு தான் நீங்க. வேணுனா என்னையும் தூக்கிட்டு சுத்தறீங்களா இன்னும் லவ் ரொம்ப ஸ்டராங் ஆகும்".

"நிறைய தேவையில்லாத வேலையைப் பாத்து வைக்கற வியா.நாளைக்கு மாட்டிகிட்டு முழிக்கப் போறப் பாரு."

"கவி பண்ணது தப்பு தான்."

"தெரிஞ்சும் மறுபடியும் பாம்புக்கு பால் வார்க்கற."

"விடுங்க விஜய். இப்போ நீங்க தூக்கறீங்களா இல்லையா.?"

"தூக்குறதுக்கு மட்டும் அலோ பண்ணுவ. மத்ததுக்கும் ஓகேன்னா சொல்லு இல்லனா தூக்க முடியாது". என்றுவிட.

நிலா அவன் நெஞ்சி நிமிண்டினாள்.

"பல்லை உடைச்சிடுவேன்டி தள்ளிப் போ" என அவளை தள்ள, இருவரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமியை தரிசித்து வந்தனர்.

அதுவரைக்கும் யுகி கோவிலை சுற்றினான்.

"என்ன வேண்டுதல் இது புதுசா இருக்கே". என பூஜை செய்பவர் கேக்க.

"இங்க செய்வாங்கன்னு சொன்னாங்களே சாமி" என்றான் யுகி.

"யாரு சொன்னா?".

"அது.."

"எதுக்கு இதை செய்யறீங்கன்னு தெரியுமா.?"

"அது கல்யாணம் ஆனவீங்க அவங்க பொண்டாட்டியை இப்படி தூக்கி சுத்துனா அவங்க வாழ்க்கை முழுக்க சந்தோசமா வாழுவாங்கன்னு."

"எந்த முட்டா பையன் சொன்னது?". என்றவர். "சரி சுத்த ஆரம்பிச்சிடிங்க முடிச்சிட்டு வாங்க"என அவர் கோவலின் உள்ளே செல்ல.

"பூனை....... " என பல்லைக் கடித்தவன், "இதெல்லாம் உன் வேலையாடி". என்று கவியிடம் காய்ந்தான்.

"எனக்கு எதும் தெரியாதுங்க?"

"தெரியும்டி. கூட்டு களவாணிங்களா...? நீ பண்ணது சின்னக் காரியமில்ல உன்னைய மன்னிச்சு ஏத்துக்க. ஒரு உயிரைக் கொல்லப் பார்த்துருக்க. அவ சாவக்கிடந்தது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். அவ செத்தே ஆகணும்ன்னு உள்ளே விட்டு வெளியே தாழ் போட்டுட்டு போனது எனக்கும் வளவனுக்கும் மட்டும் தான் தெரியும். நாங்க மட்டும் ரெண்டு நிமிஷம் லேட்டா வந்துருந்தோம்ன்னா அவளை உயிரோடவேப் பார்த்துருக்க முடியாது. இதுமட்டும் நந்துக்கு தெரிஞ்சிது நீ ஆயுசுக்கும் வெளியே வர முடியாத மாதிரி பண்ணிருப்பான்" என்றவன். "இப்போவும் உன்னய எதுக்கு தூக்கி சுத்தறேன் தெரியுமா? வேண்டுனது அவங்கறதால தான். அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்துச்சி அடுத்த சாவு நீயா தான் இருந்திருப்ப" என்றவன் நிலா மீதுக் கொண்ட அன்பில் நெக்குருகி தான் போனாள் கவி.

என்ன மாதிரியான அன்பு இது என்று புரியாமல் 

"மாமா."

"அவ மேல இருக்க அன்பு உன்மேலயும் வேணும்னு நினைக்கறது தப்பில்ல, அவளைக் கொன்னுட்டு அந்த அன்பை அடையனும்ன்னு நினைக்கறது தான் தப்பு. நான் எந்த இடத்துல உனக்கு சரியான புருஷனா நடக்கல. அவ்வளவு பேரையும் தூக்கி எறிஞ்சிப் பேசுனப்பக் கூட அவங்ககிட்ட உன்னைய விட்டுக் குடுத்துடக் கூடாதுன்னு நினைச்சேன், நான் சொன்ன ஒரு வார்த்தையை நம்பி வந்த அவளை எதுக்காகவும் கலங்க விட்டுடக் கூடாதுன்னு நினைச்சேன், உன்கிட்ட நான் உண்மையைச் சொல்லி கொஞ்சம் டைம் தானே கேட்டேன். அதைக் கொடுக்க முடியாம என்ன என்ன பண்ணி வெச்சிருக்க, அவளைக் கொல்லப் பண்ண முயற்சி பண்ணவன்னு தெரிஞ்சும் உன்ன வாழவைக்கணும்னு இந்த பாடு படுறா அந்த மனசு யாருக்குடி வரும் அவளைப் போய் கொல்லப் பார்த்தியே ச்சீ " என்றவன், மூன்று சுற்றையும் சுற்றி விட்டு அவளை கோவிலின் முன்புறம் இறக்கி விட்டான்.

கவியின் கண்கள் கலங்கி இருந்தது. இவ்வளவு நாள் கூட தவறு செய்தோம் என்று தான் நினைத்திருந்தாள் இப்போது தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என புரிந்தது..

அவனிற்கு தான் தகுதியானவள், இல்லையோ என புதிதாக தோன்ற ஆரம்பித்து விட்டது.

"கவி உள்ளே வந்து சாமிக் கும்பிடுங்க! நிலா உள்ளே இருந்து கத்த.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. ஏனோ நிலா இப்போது அவள் மனதில் கோபுரத்தின் உச்சில் இருந்தாள்.

யார் செய்வார்கள் நிலா செய்கிறாளே மனம் வேதனையடைய.கூனிகுறுகி போய் நிலாவின் அருகில் போனாள்.

"சாமி கும்பிடு கவி" என்றவள் தீபாராதனை தொட்டு கும்பிட்டு நந்தனின் நெற்றியில் தீருநீற்றை இட்டாள்.

அவனும் குனிந்து நெற்றியைக் காட்ட.. கையே குறுக்கே வைத்து ஊதிவிட்டவள். அவளது நெற்றியைக் காட்டினாள்.

இருவருக்குள்ளும் சண்டை தான் ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். நந்தன் நிலாவின் முகத்தை தாங்கி அவள் நெற்றில் குங்குமமத்தை இட்டு விட்டான்.

"யுகி நீயும் வெச்சி விடு" என்றாள் நிலா ஆர்வமாக.

"இல்லை வேண்டாம் நானே வெச்சிக்கறேன்" என கவியே வைத்துக்கொள்ள. அவள் காதில்

"இதெல்லாம் வாய்ப்பு எதுக்கு விடற?" என்றாள் நிலா.

"இல்லை நான் பண்ண தப்போட அளவு இப்போதான் எனக்கு புரிஞ்சிது அதுக்கு இது தண்டனையா ஏத்துக்கறேன்" என்றாள்.

"என்ன பேசற கவி?".

"ப்ளீஸ் நிலா விட்டுட்டேன்" என்றதும் நிலாவின் முகத்தைப் பார்த்த நந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"பெரிய தியாகி செம்மல்ன்னு நினைப்பு வெச்சாப் பாரு ஆப்பு" என உள்ளுக்குள் சிரிக்க.

"வாடி குட்டி வீட்டுக்குப் போகலாம், இதெல்லாம் உனக்கு தேவையா?" என்றான் அவள் காதில்

"அதுங்க.."

"ஒரு நொதுங்களும் இல்லை. ஹா ட்ரமா சிறப்பா முடிஞ்சிடுச்சி எல்லோரும் கிளம்புங்க" . என கவியை அனுப்பி வைத்துவிட்டு, "அவ வீட்டுக்கு தான் போறோம் வா இறக்கி விட்டுடறேன்" என்றான் யுகிடம்.

அவனும் மறுப்பு சொல்லாமல் ஏறிக்கொள்ள, கார் நிலாவின் வீட்டில் சென்று நின்றது.


Leave a comment


Comments


Related Post