Total Views: 1407
இந்த ஒரு வாரத்தில் நிலாவை சங்கரின் வீட்டில் விட்டுவிட்டு தன்னுடைய வேலை விஷயமாக அலைந்துக் கொண்டிருந்தவன். மதிய இடைவெளியில் நிலாவிற்கு அழைக்க.
"எனக்கு எதுக்கு கூப்பிடறீங்க? முடியாத பொண்டாட்டியைப் பக்கத்துல இருந்து பார்த்துக்கறதை விட்டுட்டு. வேலை வேலைன்னு ஓடறீங்கள.. இப்போ மட்டும் என்ன அக்கறை வந்துடுச்சு?".
"எங்கப் போனாலும் நைட் வீட்டுக்கு வந்துடறேன்லடி".
"எங்க?, நான் தூங்குனதுக்கு அப்புறமா..?"
"நான் வரதுக்குள்ள உன்னைய யார் தூங்க சொன்னா?".
"சார் நைட் ஒரு மணிக்கு வருவீங்க, அது வரைக்கும் தூங்காம இருக்க நான் என்ன பேயா?".
"இல்லை குட்டிசாத்தான்?"
"என்னது?"
"என்னோட குட்டி சாத்தான்னு சொன்னேன்".
"ம்ம் இப்போ எதுக்கு கூப்பிடறீங்க?".
"இது என்னடி கொடுமையா போச்சி?,புருஷன் பொண்டாட்டிக்கு கூப்பிடாம இருப்பானா?".
"ஆமா சொல்லிக்கிட்டாங்க" என்றவள் "விஜய்......." என சிணுங்கினாள்.
"என்ன காரியம் ஆகணுமோ தெரியலையே என நினைத்தவன்
"என்ன?" என்றான்.
"அது கவியை எப்படியாவது?"
"சாமி ஆளை விடு"
"ப்ளீஸ் விஜய் உங்களை விட்டு என்னால தள்ளி இருக்க முடியல, உங்க மேல படுத்து தூங்கணும் போல ஆசையா இருக்கு.'
"உன் ஆசைக்கும் அவங்க சேரதுக்கும் என்னடி இருக்கு? எனக்கும் நிறைய ஆசை இருக்கு வரவா..."
"அவங்க ஒன்னு சேராம நம்ப எப்படி?".
"அப்போ அன்னிக்கு நிஜமா தான் சொன்னியா?, செருப்பு பிஞ்சிடும் பார்த்துக்கோ, நான்தான் உனக்கு உடம்பு சரியாகட்டும்ன்னு விட்டு வெச்சிருக்கேன், பாவம் ஒரு வாரம் படுக்கையில கடந்த உடம்பு, வாயில வயித்துல டியூப்பைச் சொருகி புண்ணாக்கி வெச்சிருக்காங்களேன்னு பாவம் பார்த்தா, நீ அடி மடியில்லையே கையை வைக்கற, எவன் சேர்ந்தா எனக்கு என்ன சேரலைன்னா எனக்கு என்ன. நான் நினைச்சா வந்துருவேன்"
"நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கப் போறதில்ல".
"அதை வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்" என அழைப்பைத் துண்டித்தவன் தான் வளவனிற்கு அழைத்து விசயத்தைக் கூறியிருந்தான்.
யுகியும் கவியும் சேர்வதில் நந்தனுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் நிலா கவியை மன்னித்ததைப் போல் நந்தன் என்றுமே மன்னிக்க மாட்டான்.
நிலாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொல்லி தான் அனுப்பியிருந்தார். "அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, பிசிக்கல் ரிலேஷன்ஷிப்பை தாங்கிக்கற அளவுக்கு அவங்க உடம்பு ரெடியாக இன்னும் ஒரு மாசமாவது ஆகும், அதுவரைக்கும் அவங்களை கண்ணாடி பொருள் மாதிரி ஹேண்டில் பண்ணுங்க" என சொல்லி தான் அனுப்பி இருந்தார்கள்
அதற்காக தான் அவளைக் கொண்டுப் போய் சங்கரின் வீட்டில் விட்டு வைத்திருக்கிறான். அவனது அம்மாயி கை வைத்தியம் பார்த்து சிறந்த உணவுகளைக் கொடுப்பதில் வல்லவர். அதில் சீக்கிரம் தேறி விடுவாள் என்ற நம்பிக்கையில் தான் இங்கு கொண்டு வந்து விட்டான்.
அருகில் அவளை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் தான் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தான், அதற்கு வேலையைக் காரணம் காட்டினாலும் நிலா தண்ணீர் குடித்தால் கூட அவனுக்கு தெரியும் அளவிற்கு அவளைப் பத்திரமாகவும் பார்த்துக் கொண்டான்.
நந்தன் அன்பை காட்ட ஆரம்பித்து விட்டால் அது காட்டாறை மிஞ்சிவிடும் என அவன் அன்பை பெற்றவர்களுக்கு தான் தெரியும். ஆனால் என்ன? இதுநாள் வரையிலும் நிலாவை தவிர வேற யாராலும் அவனின் மீ அன்பை பெற முடிந்ததில்லை என்பது தான் உண்மை.
இன்றோடு நிலா மருத்துவமனையில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுநாள் வரையிலும் அவளை தூர இருந்துப் பார்த்துக்கொண்டான் இரவு அவள் உறங்கியப் பின்பு தான் வீடு வந்து சேர்பவன், விடியும் வரையிலும் அவளை கண் எடுக்காமல் பார்ப்பான் , ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று தான் தன்னவளை நெருங்கப் போகிறான்,
ஏதோ புதிதாக நெருங்கப்போவது போல் உள்ளுக்குள் ஒருவிதப் படபடப்பு.. மனைவியைப் பார்க்க மல்லிகைப் பூவும், சில தின்பண்டங்களையும் வாங்கிக் கொண்டு ஆவலாக வீட்டிற்குக் கிளம்பினான்.