Total Views: 1543
"ஆயா இந்த பூவை ரெண்டா வெச்சிக் கட்டுனா நெருக்கமா இருக்கும்ல" என சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தவள் நந்தனின் கார் சத்தம் கேட்டதும் துள்ளிக் குதித்து எழுந்து நின்றாள்.
"என்ன நிலாம்மா?".
"அவர் கார் வந்துருக்கு.இவ்வளவு நாளும் நான் தூங்குனதுக்கு அப்புறம் தானே வருவாரு". என துள்ளலுடன் சொன்னவள் வெளியே ஓடினாள்.
"ஏய் பார்த்துடி".
"விஜய் நேரமாவே வந்துட்டீங்க.."
"வீட்டுக்குப் போலாமா.?"
"நம்ப வீட்டுக்கா".
"ம்ம்.."
"போலாமே.. "என்றவளின் கண்கள் அதீத ஆர்வத்தில் மின்னியது.
"என்னடி.?"
"உங்களைப் பார்க்கவே முடியல விஜய், நான் ஹாஸ்பிடல்ல வந்ததுல இருந்து உங்களை பிடிக்கறதே கஷ்டமா இருக்கு. இன்னைக்கு நீங்களா வந்து போலாம்னதும் குமுதா ஹாப்பி அண்ணாச்சி"என்றாள் அவன் கன்னத்தை கிள்ளியவாரு
"மேடம்க்கு இப்போல்லாம் என்மேல பயம் விட்டுப் போச்சுப் போல". என்றான் அவளிடம் கன்னத்தைக் கொடுத்தவாறே.
"அதெல்லாம் எனக்கு எங்க இருக்கு?". என்றவள். "ஒரு நியூஸ் கேள்விப் பட்டேன் உண்மையா?" என்றாள் முகம் முழுவதும் பூரிப்புடன்.
"என்ன கேள்விப்பட்ட. உன்னோட ஸ்பேஸ் ரியாக்சனே சரியில்லையே". என அவன் தாடையை தடவ.
"நான் இங்க ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நீங்க அழுதீங்களாமே?"
"இல்லையே யார் சொன்னா?".
"யாரும் சொல்லல.. காட்டுனாங்க".
"எதை?"
"சிசிடிவி கேமரா புட்டேஜை".
"ஓ மை காட் இந்த வேலையை எந்த நாய் பார்த்து வெச்சிது?".
"யாரோ பார்த்துட்டுப் போறாங்க. நீங்க எனக்காக அழுதீங்களா விஜய்?". என்றவளின் கண்களும் கலங்கி விட்டது.
"ஏய் என்னடி?".
"இந்த விஜய்க்கு அழ தெரியும்ன்னே இன்னைக்கு தான் தெரியும், அந்த விலைமதிக்க முடியாதக் கண்ணீர் எனக்காக வந்துருக்குன்னு நினைக்கும் போதும் சொல்ல வார்த்தை இல்ல விஜய்.மிஸ் பண்ணிட்டேன்".
"இந்த நந்தனோட எல்லா உணர்வுகளுக்கும் நிலா ஒருத்தி தான் சொந்தக்காரி.இதைக் கூட கதையே முடியப் போகறப்ப தான் தெரிஞ்சிப்பியாடி" . என அவன் தலையுடன் முட்டினான்.
"அன்னைக்கு இந்த விஜய் பக்கத்துல இல்லைன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சு, இன்னைக்கு இந்த விஜய் இல்லைனா நான் என்ன ஆவேனோன்னு தோணுது". என மனம் உகந்துக் கூறினாள்.
இது தானே அவனுக்கும் வேண்டும். அவன் மீதுக் கொண்ட பயம் போய் எல்லோரிடமும் பேசுவது போல் தன்னிடமும் பேசவேண்டும், நீ இல்லாமல் நான் இல்லை என சொல்ல வேண்டும் இவை அனைத்திற்கும் தானே ஆசைப்பட்டான்.
'சரி சரி ரொம்ப எமோஸ்னல் ஆகி இன்னைக்கு பட்டினிப் போட்டுடாத தாயே, ஆல்ரெடி ஒரு மாசம் பட்டினி இருந்ததுல செம பசியில இருக்கேன்" என்று,அவள் தோளில் கைப் போட்டு உள்ளே அழைத்து சென்றவன் பெரியவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பப் போனான்.
"ஐயா ராசா அடிக்கடி வாய்யா, என்ற பேத்தி ஷாலுனிக் குட்டியையும் ஒரு தடவைக் கூட்டிட்டு வாயா.கண்ணையும் பார்க்கணும் போல இருக்கு."
"வருவா அம்மாயி . நாங்க கிளம்பறோம்ன்னு தாத்தா மாமா ரெண்டுபேருகிட்டையும் சொல்லிப்புடுங்க."
"ராசா அன்னிக்கு நான் சொன்னேனே".
"உன்ற மகன்கிட்ட எவ்வளவு தான் பேசறது அவரே இறங்கி வந்தா தான் உண்டு அம்மாயி."
"அந்தப் பொண்ணு ரதி பாவம்ய்யா. அந்த பாவத்தை நம்ப வாங்கக் கூடாதுல ராசா."
"சொல்ல முடியாது அம்மாயி அந்த புள்ளைக்கு ஒரு ஹாஸ்பிடல் கட்டிக் குடுத்துட்டுக் கூட உன்ற மகன் கல்யாணம் கட்டுனாலும் கட்டிப்பாரு". என்றவன், "நேரமாச்சு போய்ட்டு வரோம்". என்றான்.
"சரி ராசா" என்றவர் நிலாவின் கன்னம் வழித்து நெட்டி முறித்தவர். அவள் கன்னத்தில் இதழ் பதித்து அனுப்பி வைத்தார்.
"எவ்வளவு பாசமானவீங்க தெரியுமா விஜய்.?"
"ம்ம்"
"அத்தை தான் இவங்க பாசத்தை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க".
"அதெல்லாம் பண்ண மாட்டாங்க எல்லாம் திருட்டு வேலைப் பார்க்கறவீங்க தான்."
"என்ன திருட்டு வேலைப் பார்க்கறாங்க, புரியலையே". என நிலா நந்தனின் தோளைச் சுரண்ட.
"ஆயாவுக்கும் அப்பாவுக்கு தெரியாம கோவில், கடைவீதின்னு பார்த்து பாசப் பயிரை வளர்க்கறாங்க அப்புறம் என்ன?".
"சொந்த அம்மா அப்பாவையே இப்படி திருட்டுத் தனமாக பார்க்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா விஜய்..?" என அடுத்தக் காரணத்தைக் கண்டுபிடித்தாள்.
"அதுக்கு என்ன பண்ண முடியும்? அவங்க அவங்க உரிமைக்காக போராடுனா தான் இந்தக் காலத்துல நியாயம் கிடைக்கும். என்னைக்காவது நமக்கு நியாயம் கிடைக்கும்ன்னு அமைதியா இருந்தா கடைசி வரைக்கும் அமைதியாவே இருக்க வேண்டியது தான்". என்றவன் பேசிக்கொண்டே காரை வீட்டின் முன் நிறுத்தினான்.
நிலா பையுடன் கீழே இறங்க.வாசலில் இருந்த மார்த்தி அதை வாங்கிக் கொண்டார்.
"குடு நிலாம்மா"
"இருக்கட்டும் மாமா".
"உடம்பு இன்னு தேராம வெயிட்லாம் தூக்கக் கூடாது சாமி" என அவளிடம் இருந்து பையை பறிக்க.
"அடேங்கப்பா இது உங்களுக்கே ஓவரா இல்லை.. அந்த பை என்ன அவ்வளவு வையிட்டாவா இருக்கு" என கேட்டுக்கொண்டே வெளியே வந்த யுகியின் முகம் இப்போது தான் தெளிந்த நீரோடைப் போல் தெளிவாக இருந்தது.
பின்ன ராசா மனைவியை விழுந்து விழுந்து காதலிக்கறார் இல்லையா? அதில் வந்த தெளிவு.
மனைவியை காதலிப்பதில் கூட சுக வேதனையாக தான் இருந்தது யுகிக்கு . ஒரு தடவை தான் காதல் மலரும் என் வாழ்வில், அது மலர்ந்து உதிர்ந்துவிட்டது இனி மலராது என்று சுற்றத்தையும் தன்னையும் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், எதுவுமே நல்லதாக அமையாது. யாருமே சந்தோசமாகவும் இருக்க முடியாது.
கவி அலுவலகம் வந்த அடுத்த நாளே யுகி நந்தனை தேடி அவனது அலுவலகம் சென்று விட்டான்.
"என்னடா இங்க வந்துருக்க?".
"உங்கிட்ட பேசணும்".
"பேசு."
"எனக்கு சில குழப்பம் இருக்கு".
"ம்ம்"
"அது உன்கிட்ட தெளிவாக பதில் கிடைக்கும்ன்னு நினைக்கறேன்"
"கேளு".
"என்னால கவி பண்ணதை மன்னிக்கவும் முடியல,அதே சமயம் அவ வாழ்க்கை என்னால கெட்டுப் போய்டுச்சேன்னு நினைக்கும் போதும் வேதனையாவும் இருக்கு. பூனைக்கிட்ட கேட்டா அவ எப்படியும் சேர்ந்து வாழ தான் சொல்லுவா.அவளால கொலைப் பண்ண வந்தவளைக் கூட மன்னிக்க முடியுது . என்னால முடியமாட்டிங்கிதே. இப்போ அவ திருந்திட்டேன்னு சொல்றதைக் கூட என்னால முழுசா நம்ப முடியலை ஜெயில போட்டதுக்காக பழிவாங்கக் கூட அமைதியா இருக்கலாமோன்னு தோணிட்டே இருக்கு, இன்னொரு தடவை அவளை உள்ளேக் கொண்டு வந்தா யாரையாவது இழந்துடுவேன்னோன்னு பயமா இருக்கு, ரெண்டு மனசாக் கடந்து தவிக்கிறேன்.என்ன முடிவு எடுக்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு."
"இது தான் உன் பிரச்சனையா?".
"ம்ம்"
"அவ இனி அப்படி பண்ண மாட்டா.. தைரியமாக நீ சேர்ந்து வாழு, சேரதுக்கு முன்னாடி லவ் பண்ணு. லவ் தான் எல்லாத்தையும் மறக்க வைக்கவும் கடமைக்காக பண்ற விஷயம் எதும் சரியா இருக்காது. இதே காதலா பண்ணிப் பாரு, சரியா இல்லைன்னாலும் சரியாகிடும்" என சிட்டி காதல் வசனம் பேசியது.
"அவ இனி அப்படி பண்ண மாட்டான்னு எப்படி சொல்ற, ?"
"இப்போ அவ உண்மையாலுமே குற்றவுணரவுல தான் தவிக்கிறா. என் பொண்டாட்டி இருக்காளே அவ,
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
ங்கற மாதிரி விஷம் வெச்சவளையே மன்னிச்சி, இது தான் நான்னு காட்டிருக்கா, அதுவே கவியை வாட்டி வதைக்குது. இப்படி பட்ட பொண்ணுக்கு தப்பு செஞ்சிட்டோமேனு இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் ரியலைஸ் பண்ணிட்டு இருக்கா, அன்னிக்கு வியா சொன்னது தான் தப்பு செய்யாத மனுஷங்களே கிடையாது.செஞ்ச தப்பை திரும்ப செய்யாம பார்த்துக்க வேண்டியது தான் நம்மளோட கடமை அதனால நடந்ததை மறந்துடு. இவ்வளவு நாள் பிரிஞ்சி இருந்து தண்டிச்சிட்ட. கொஞ்ச நாள் அவளோட நடவடிக்கையை கவனி உனக்கு திருப்தி தர மாதிரி இருந்துச்சின்னா அதுவே போதும். இனி சேர்ந்து வாழுங்க". என்று தம்பிக்கு ஆசானாக இருந்து வழிகாட்ட. யுகி அதை பிடித்துக் கொண்டான்..
"சரி பார்க்கறேன்" என கிளம்பியவன்.
"ஒரு சந்தேகம?" என திரும்ப.
"இனி அட்வைஸ் பண்ணா கன்சல்டன்சி பீஸ் 1000 ரூபாய் சார்ஜ் பண்ணுவேன் எப்படி வசதி?" .
"உன்னோட அட்வைஸ் யாருக்கு வேணும் போடா?" என்றவன் "அவ கில்டியா பீல் பண்றான்னு உனக்கு எப்படி தெரியும்.?" என்றான்.
"ஒரு தடவை தான் அசால்ட்டா இருந்து ஏமாந்துட்டேன் அதே தப்பை இன்னொரு தடவைப் பண்ண மாட்டேன்.அதான் கண்காணிக்க ஆள் வெச்சேன்" என்றான்.
"ஓ":என்றவனுக்கு முதன்முறையாக கவியின் விசயத்தில் நந்தன் மீது கோவம் வந்தது
"என்ன இருந்தாலும் என் பொண்டாட்டியை கவனிக்க எப்படி ஆள் வைக்கலாம்?" என்று.அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டான்.