இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை-130 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 22-09-2024

Total Views: 1491

கவி அலுவலகம் வந்த அடுத்த நாளே யுகி நந்தனை தேடி அவனது அலுவலகம் சென்று விட்டான்.

"என்னடா இங்க வந்துருக்க?".

"உங்கிட்ட பேசணும்".

"பேசு."

"எனக்கு சில குழப்பம் இருக்கு".

"ம்ம்"

"அது உன்கிட்ட தெளிவாக பதில் கிடைக்கும்ன்னு நினைக்கறேன்"

"கேளு".

"என்னால கவி பண்ணதை மன்னிக்கவும் முடியல,அதே சமயம் அவ வாழ்க்கை என்னால கெட்டுப் போய்டுச்சேன்னு நினைக்கும் போதும் வேதனையாவும் இருக்கு. பூனைக்கிட்ட கேட்டா அவ எப்படியும் சேர்ந்து வாழ தான் சொல்லுவா.அவளால கொலைப் பண்ண வந்தவளைக் கூட மன்னிக்க முடியுது . என்னால முடியமாட்டிங்கிதே. இப்போ அவ திருந்திட்டேன்னு சொல்றதைக் கூட என்னால முழுசா நம்ப முடியலை ஜெயில போட்டதுக்காக பழிவாங்கக் கூட அமைதியா இருக்கலாமோன்னு தோணிட்டே இருக்கு, இன்னொரு தடவை அவளை உள்ளேக் கொண்டு வந்தா யாரையாவது இழந்துடுவேன்னோன்னு பயமா இருக்கு, ரெண்டு மனசாக் கடந்து தவிக்கிறேன்.என்ன முடிவு எடுக்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு."

"இது தான் உன் பிரச்சனையா?".

"ம்ம்"

"அவ இனி அப்படி பண்ண மாட்டா.. தைரியமாக நீ சேர்ந்து வாழு, சேரதுக்கு முன்னாடி லவ் பண்ணு. லவ் தான் எல்லாத்தையும் மறக்க வைக்கவும் கடமைக்காக பண்ற விஷயம் எதும் சரியா இருக்காது. இதே காதலா பண்ணிப் பாரு, சரியா இல்லைன்னாலும் சரியாகிடும்" என சிட்டி காதல் வசனம் பேசியது.

"அவ இனி அப்படி பண்ண மாட்டான்னு எப்படி சொல்ற, ?" 

"இப்போ அவ உண்மையாலுமே குற்றவுணரவுல தான் தவிக்கிறா. என் பொண்டாட்டி இருக்காளே அவ,

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.

ங்கற மாதிரி விஷம் வெச்சவளையே மன்னிச்சி, இது தான் நான்னு காட்டிருக்கா, அதுவே கவியை வாட்டி வதைக்குது. இப்படி பட்ட பொண்ணுக்கு தப்பு செஞ்சிட்டோமேனு இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் ரியலைஸ் பண்ணிட்டு இருக்கா, அன்னிக்கு வியா சொன்னது தான் தப்பு செய்யாத மனுஷங்களே கிடையாது.செஞ்ச தப்பை திரும்ப செய்யாம பார்த்துக்க வேண்டியது தான் நம்மளோட கடமை அதனால நடந்ததை மறந்துடு. இவ்வளவு நாள் பிரிஞ்சி இருந்து தண்டிச்சிட்ட. கொஞ்ச நாள் அவளோட நடவடிக்கையை கவனி உனக்கு திருப்தி தர மாதிரி இருந்துச்சின்னா அதுவே போதும். இனி சேர்ந்து வாழுங்க". என்று தம்பிக்கு ஆசானாக இருந்து வழிகாட்ட. யுகி அதை பிடித்துக் கொண்டான்..

"சரி பார்க்கறேன்" என கிளம்பியவன்.

"ஒரு சந்தேகம?" என திரும்ப.

"இனி அட்வைஸ் பண்ணா கன்சல்டன்சி பீஸ் 1000 ரூபாய் சார்ஜ் பண்ணுவேன் எப்படி வசதி?" .

"உன்னோட அட்வைஸ் யாருக்கு வேணும் போடா?" என்றவன் "அவ கில்டியா பீல் பண்றான்னு உனக்கு எப்படி தெரியும்.?" என்றான்.

"ஒரு தடவை தான் அசால்ட்டா இருந்து ஏமாந்துட்டேன் அதே தப்பை இன்னொரு தடவைப் பண்ண மாட்டேன்.அதான் கண்காணிக்க ஆள் வெச்சேன்" என்றான்.

"ஓ":என்றவனுக்கு முதன்முறையாக கவியின் விசயத்தில் நந்தன் மீது கோவம் வந்தது

"என்ன இருந்தாலும் என் பொண்டாட்டியை கவனிக்க எப்படி ஆள் வைக்கலாம்?" என்று.அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டான்.









அடுத்த நாளில் இருந்து ஒருவாரம் தன் மனைவியின் நடவடிக்கையை அவனே கவனிக்கத் தொடங்கினான்.

நடவடிக்கையை கவனிக்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆளையே கவனிக்கத் தொடங்கியது கண்கள்.

கண்ணில் நுழைந்து கருத்தில் பதிந்தது அவளது அழகு முகம். இவ்வளவு நாள் கோரமாக தெரிந்த அனைத்தும் இப்போது வண்ணமாக தெரிந்தது.

காதல் என்பது அழகைப் பார்த்து வருவதில்லை அவர்களின் குணத்தைப் பார்த்து வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் யுகி தான்.

அன்று இருந்த முகம் தான் இன்றும் இருக்கிறது,அன்று அகோரமாக தெரிந்த ஒன்று இன்று அழகாக தெரிகிறது என்றால் எதிரில் இருப்பவரின் குணமும் அழகாகிக் கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.

தினம் காலையில் கவியைக் காண்பதற்காகவே ஸ்பெஷலாக தயாராகி அலுவலகம் போவான்.

அவளும் இவன் வரவை தான் எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.

"கண்களால் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுவிட்டாள், தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறாள். யுகி அவள் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டாலும் அதற்கு எதிர்வினை ஆட்டமாட்டான்.

அன்று மாலை கவி கிளம்பும் போது அலுவலகத்தில் யாருமே இல்லை. வளவன் ஷாலினிக்கு உடம்பு சரியில்லை என நேரமாகவே கிளம்பிவிட்டான்.. யுகியும் கவியும் தான் இருந்தனர்

கவியின் வண்டி அன்று சர்வீஸ் சென்றிருந்ததால் ஆட்டோவில் தான் அலுவலகம் வந்திருந்தாள். திரும்ப ஆட்டோவில் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றதும் சலிப்பு வந்தது கவிக்கு.

நேராக ஆட்டோ ஸ்டாண்ட் சென்று நின்றவள். வெகுநேரம் ஆட்டோவிற்காக காத்திருக்க,அவள் முன் தன் வண்டியை நிறுத்தினான் யுகி.

"மாமா..."

"ஏறு".

"இல்லை ஆட்டோல போய்டுவேன்"

"அது நாளைக்குப் போ இப்போ ஏறு."

"ம்ம்" என்றவளுக்கு உள்ளுக்குள் அவ்வளவு சந்தோசம்.அதை முகத்தில் காட்டினால் எங்கு இறங்கி விட்டுவிடுவானோ என்று பயந்து முகத்தில் காட்டவில்லை.

வண்டி மேடு பள்ளங்களில் வஞ்சனை இன்றி செல்ல. இருவருமே உணர்ந்த முதல் பரிசம் எங்கையோ அழைத்துச் சென்றது.

இந்த பயணம் நீண்டுக் கொண்டே சொல்லாதா? என ஏக்கமாக இருந்தது கவிக்கு.

அவளது வீட்டின் முன் இறக்கி விட்டவன். "உன்னோட வண்டி நாளைக்கு வந்துடுமா?" என்றான்

"வரக்கூடாது" என யுகியும், "நானே வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுங்க மாமா" என கவியும் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க..

வண்டி சத்தம் கேட்டு செல்வராணி வெளியே வந்தவர் யுகியைப் பார்த்ததும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.

"வா யுகி உள்ளே வா".

"இன்னொரு நாள் வரேன்" என்றவன் கவியைப் பார்க்க.

"தெரியல மாமா" என்றாள்.

"கேட்டுட்டு போன் பண்ணு" என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்று விட்டான்.

"என்னடி சொன்னான்?".

"வண்டி நாளைக்கு வந்துடுமான்னு கேட்டாரு."

"நீ என்ன சொன்ன?"

"அதான் தெரியலைன்னு உன் முன்னாடி தானேம்மா சொன்னேன்" என அவள் இழுக்க.

"மெக்கானிக் ஷாப்புக்கு கூப்பிட்டு இன்னும் ஒரு வாரத்துக்கு வண்டியைக் கொண்டு வர வேண்டாம்னு சொல்லிடறேன்... நீயும் அதையே அவன்கிட்ட சொல்லிடு".

பொய் சொல்ல சொல்றியா?".

"நல்லவளா மாறலாம், ஓவர் நல்லவளா மாறாதடி உலகம் தாங்காது". என்றவர் "புருஷன் கூட சேரத்துக்கு கொஞ்சம் பொய் சொன்னா தப்பில்ல" என்றார்

"ம்ம்" என்றவள் உள்ளே சென்று உடை மாற்றி விட்டு. அலைபேசியுடன் படுக்கையில் விழுந்தாள்.

செல்வராணி சொன்னதை அப்படியே எழுத்தில் வடித்து செய்தி ஒன்றை யுகிக்கு அனுப்பி வைக்க, அதைப் பார்த்தவனிற்கு மீசையின் ஓரம் துடித்தது,அவளிடம் வண்டியைப் பற்றி கேட்டாலும்,வரும் வழியில் அவள் வண்டியை விட்ட மெக்கானிக் கடையைப் பார்த்து கேட்டுவிட்டு அங்கு தான் நின்றான். இன்று கிடைத்த இனிமை நாளையும் கிடைக்குமா என்ற எண்ணத்தில் அவன் கேக்க. 

'வண்டியோ தயாராக இருக்கிறது இன்றே எடுத்துக் கொள்ளலாம்' என சொல்ல, அவனே ஒருவாரத்திற்கு வண்டியைக் கொடுக்க வேண்டாம் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தான். அதற்குள் கவியிடம் இருந்து அதேப் பதில் வரவும் ஆசையில் மீசை முடி துடித்தது.

இது புதுவிதமான உணர்வாக இருந்தது.அன்றில் இருந்து இன்று வரை யுகி தான் கவியை அழைத்து வருவதும் மீண்டும் கொண்டுபோய் விடுவதுமாக இருந்தான்.

அந்த பயணத்தில் இருவரையும் தீண்டும் சிறு சிறுத் தொடுகைகள் தான் மனதை உல்லாசமாக வைத்திருக்கிறது. அதையும் தாண்டி இருவரும் செல்ல வேண்டும் என்றோ, இல்லை கவியை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றோ இன்னும் யுகி முடிவு எடுக்கவில்லை.

"என் மருமகளுது நான் வாங்கறேன் உனக்கு என்னடா பிரச்சனை?". என ஆர்ப்பாட்டமாக கேட்டார் மார்த்தி.

"வாங்குங்க வாங்குங்க, அவன் வரான்". என்றவன் நிலாவை உச்சி முதல் பாதம் வரை அவளின் ஆரோக்கியத்தை நோட்டம் விட்டான்.

"என்ன ரெண்டுபேரும் என் பொண்டாட்டிகிட்ட வம்பு இழுக்குறிங்களா?" என நந்தன் வந்துவிட. சோர்வில் நிலா நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.

"உன் பொண்டாட்டியை வம்பு இழுத்தா நீதான் சும்மா விட்டுருவியா?". என்றவன் "இன்னும் உடம்பு சரியாகலையா பூனை?" என்றான் வாஞ்சையாக.

"நல்லா தான் இருக்கேன், ஆனா அப்போ அப்போ டையார்ட் ஆகிடுது. அங்க ஆயா நடக்கவே விட மாட்டாங்க எந்நேரமும் ஏதாவது குடிக்க கொடுத்துட்டே இருப்பாங்க..ரொம்ப நடக்காததால அப்படி இருக்குப் போல.."என்றாள்.

விஷத்தின் வீரியம் அவள் உடல் முழுவதும் நஞ்சாக்கி வைத்திருந்தது.

தூக்கிட்டுப் போறேன் என்றெல்லாம் சொல்லாமல் வந்ததும் தூக்கி விட்டான் நந்தன்.

"இருங்க விஜய் கொஞ்சம் நேரம் இப்படி உக்கார்ந்துகறேன் நீங்க தூக்குனா நேர ரூம்லக் கொண்டுப் போய் அடைச்சிப் போட்டுடுவீங்க" என்றாள்.

"சரி அப்போ இங்க உக்காரு உனக்கு ஜூஸ் எடுத்து வரேன்" என நிலாவை மறுபடியும் நாற்காலியில் அமரவைத்து விட்டு உள்ளே செல்ல.

"என்னமா என் பையன் தாங்குவான் போலையே."

"பின்ன எல்லோரும் உங்களைய மாதிரி இருப்பாங்களாப்பா..?" என யுகி சந்துக் கேப்பில் மார்த்தியின் காலை வாரிவிட.

"டேய் ஆனா வூனா அண்ணனுக்கும் தம்பிக்கும் என்னைய வாரலைன்னா தூக்கம் வராதே."

"விடுங்க மாமா அவங்களுக்கு நேரம் போக உங்களைய வெச்சி டைம் பாஸ் பண்ணிக்கறாங்க". என்றவளின் குரலில் முன்பு இருந்த துள்ளல் இல்லை மிகவும் சோர்வாக இருந்தாள். அது யுகியின் மனதில் மீண்டும் வேதாளத்தை ஏற்றியது.

"என் பூனை இவ்வளவு கஷ்டப்பட அவதானே காரணம் எப்படி இருந்தவ சிட்டு மாதிரி பறந்ந்துகிட்டு இருந்தவ இப்போ நடக்கவே சத்து இல்லாம இப்படி இருக்கானா அதுக்கு காரணம் அவதானே" என மனம் முரண்டு பிடித்தது.

நிலாவைப் பார்க்கும் வரைக்கும் அமைதியாக இருந்தவன் தான், பார்த்ததும் அவன் மனதே அவனை கொன்றது.

"என்னால தானே இதெல்லாம் நடந்துச்சு". என கண்டதையும் யோசித்து மீண்டும் கவியின் மீது கோவமானான்.

"இந்த ஜூஸைக் குடி" . என அவள் கையில் பழச்சாறைக் கொடுத்தவன்.அவள் காலைப் பிடிக்கப் போக

சட்டென்று காலை உள் இழுத்துக்கொண்ட நிலா. "என்ன பண்றீங்க விஜய்?". என்றாள் பதட்டத்துடன்.

"உன் காலு வீங்கி இருக்குடி."

"அதுக்கு."

"காலை நீவி விடறேன்".

"ஒன்னும் வேண்டாம் சாமி" என்றவள் காலையை குறுக்கி சம்மணம் இட்டு அமர.யுகியின் முகம் யோசனையாகவே இருந்தது.



Leave a comment


Comments


Related Post