இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -131 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-09-2024

Total Views: 1374

அதை நந்தனிடம் காட்டினாள்.

"டேய் நல்லவனே இப்படி வந்து உக்கார்,  அப்பறம் எப்ப உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தப் போற?".என்றான் நந்தன்.

"அதுக்கு  இப்போ என்ன அவசரம்?" யுகி முகத்தைக் காட்டுவதை வைத்தை அவன் மனநிலையை உணர்ந்துக் கொண்டான் நந்தன்.

"என்னடா அன்னிக்கு என்னமோ அப்படி பேசிட்டு போன?"

"என்னைக்குங்க..?மனசு மாறிட்டியா யுகி, கவியைக் கூட்டிட்டு வரப் போறியா?" என ஆவலாக கேட்டாள் நிலா.

"இல்ல,  உன்னால இப்போ நடக்கக் கூட முடியாம போனதுக்கு அவ தானே காரணம், எப்படி அவளைக் கூட்டிட்டுவர சொல்ற?" என்றான்.

'என்ன இவன்? மறுபடியும் முருங்கை மரத்துல வேதாளம் ஏறுன மாதிரி திரும்ப ஆரம்பிச்சிட்டான்'.என நிலா நொந்துக்கொள்ள.

அவள் கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்தவன்."ஜூஸைக் குடி"  என்று விட்டு யுகியை தனியாக அழைத்துக்கொண்டுப் போனான்.

"எதுக்கு தனியா கூட்டிட்டு வந்த?" 

"என்ன பண்ற நீ?"

"நான் என்ன பண்ணேன்? ".

"உன்னோட பூனையோட உடம்பு சீக்கிரம் சரியாக வேண்டாமா.?"

"ம்ம்".

"இந்த தடவை செக்அப் போனப்ப டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா? அவ உடம்புல பிரச்சனை இல்லை மனசுல தான் பிரச்சனை இருக்குன்னு சொல்றாங்க, அவ சோர்ந்துப் போய் உக்காரத்துக்கே நீதான் காரணம். உன்னைய நினைச்சி தான் இப்படி இருக்கா, ஒழுங்கா சேர்ந்து வாழப் பாரு. கண்டதையும் யோசிச்சிட்டு அவளைக் கஷ்டப்படுத்தாத, எனக்கு நீயா அவளான்னு வந்தா அவன்னு தான் நிற்பேன்" என்றவன். "அப்கோர்ஸ் எனக்கு உன் பொண்டாட்டி மேல  கொலைப் பண்ற அளவுக்கு கோவம் இருக்குது தான். அந்த கோவத்தால பாதிக்கப்படறது என்னோட குட்டின்னா கண்டிப்பா அதை தூக்கிப் போடவும் நான் தயங்க மாட்டேன். உனக்கு பூனை முக்கியம்ன்னு நினைச்சா நான் சொன்னதைப் பண்ணு என்று யுகியின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

யுகி யோசித்துக் கொண்டு அதே இடத்தில் நிற்க.

என்னங்க சொல்றான். கவிக் கூட சேரேன்னு சொன்னானா என்று ஆர்வமாக கேட்டாள் நிலா.

அவன் சேராம எங்கப் போகப்போறேன். நீ எதுக்கு அவனையே யோசிச்சு உன் உடம்பைக் கெடுத்துக்கற.

அதில்ல. என அவள் இழுக்க

ஒரு இதுவும் இருக்க வேண்டாம்,ஜூஸ் அப்படியே இருக்குப் பாரு குடி என அவளது வாயில்  கொண்டுப் போய் கிளாஸை வைக்க.

ம்ம்ம் ம்ம்ம்ம்  என முனவிக் கொண்டே குடித்தாள்.

அன்று முழுவதும் கவிக்கு எந்த மெசேஜையும் யுகி அனுப்பவேயில்லை.

கவியோ ஹாய் மாமா என இருபது தடவைக்கு மேல் அனுப்பி விட்டாள். முதல் தடவை மட்டும் பார்த்தவன்  அதற்கு பிறகு வந்ததை பார்க்காமல் தவிர்த்து விட்டான்.

என்னாச்சி இவருக்கு. நல்லா தானே பேசிட்டு இருந்தாரு என குழப்பத்துடனே அவனுக்கு அழைக்க கையிலையே அலைபேசியை வைத்திருந்தும் அழைப்பை ஏற்கவில்லை யுகி.

முன்பு இருந்த கோவம் இல்லை. சொல்லப்போனால் காதல் முளையிடத் தொடங்கியிருந்தது.  காதல் வந்தப் பிறகு அவளிடம் பேசாமல் இருப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.  இருந்தாலும் காதலா பூனையா என்றால் கண்டிப்பாக பூனை என்று விடுவான்

கவியை நம்பி இங்கு அழைத்து வந்தப் பிறகு மறுபடியும் அவளது குணத்தைக் காட்டிவிட்டாள் அவன் என்ன செய்வான். அந்த ஒரேப் பயம் தான்.

அதேச்சமயம் தனிக்குடித்தனம்  போகவும் விருப்பமில்லை. எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும்.  அந்த மகிழ்ச்சிகாக தான் மனதுக்குள் இவ்வளவும் போராடுகிறான்.

கவி அழைத்து அழைத்து ஓய்ந்துப் போனவள்.. அவன் எதோ வேலையாக இருப்பான் போல என மனதைத் தேற்றிக் கொண்டாள்..

கோவிலுக்கு போயிருந்த மணியும்  கிருஷ்ணம்மாளும்  வந்தவர்கள். நிலாவை அங்குப் பார்த்ததும் மிகுந்த சந்தோசமடைந்தனர்.

எப்போ நிலாம்மா வந்தீங்க. இதைக் கேட்டது மணி இல்லை கிருஷ்ணம்மாள் தான்.

ஆயா.. என்றவளுக்கு அவ்வளவு ஆச்சரியம் சனியனே மூதேவி உன் மூஞ்சில முழிச்சுட்டுப் போனா விளங்குமா என சிறு வயதில் நிறைய நாட்கள்  திட்டியிருக்கிறார். அவர் வாயில் நிலாம்மா என்ற வார்த்தையைக் கேக்கிறாள் ஆச்சரியம் எழாமல் இருக்குமா..

இனி இங்கதாம்மா இருக்கப் போற

ஆமா ஆயா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க நந்தன் தோசையுடன் வந்துவிட்டான்.

சாப்பிடு.

மணி ஏழு தானே ஆகுது விஜய்.

மாத்திரை போடணும் சீக்கிரம் சாப்பிட்டு தூங்கப் போ என அவன் உள்ளர்த்ததுடன் சொல்ல.

எலி எதுக்கு ஏரோ கப்பல் ஓட்டுதுன்னு தெரியும் விஜய் என்றாள் அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில்.

எனக்கு மட்டும் தான்  அந்த ஆசை இருக்கா என்று கேட்டவனின் கண்கள் ஆசையில் சிவந்து கிடந்தது.

எனக்கும் தான் என்றவளின் முகமோ வெட்கத்தில் சிவக்க.

சீக்கிரம் சாப்பிடு என்றான் கரகரப்பான குரலில்.

நிலா  உனக்கு கார சட்டினி புடிக்கும் தானே வைக்கவா என மணி வேகமாக எழ..

சரி அத்தை என்றாள்  

அவரது கையைப் பிடித்து உக்கார வைத்தவன் அவ காரமா சாப்பிடக்கூடாது

விஜய் இது உங்களுக்கே ஓவரா இல்லையா. ஒரு மாசம் ஆகிடுச்சு  எதையும் கண்ணுல காட்டாம வெறும் ஜூஸ், மோர் தயிருன்னு கொடுத்து உயிரை வாங்கறீங்க.

இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் அப்புறம் சாப்பிட்டுக்கலாம் என்றவன் பேசியவாறே அவளுக்கு மூன்று தோசை ஊட்டிவிட்டான்.

நந்தனனின் இயல்பு இது  இல்லை என்று அனைவருக்கும் தெரிந்தாலும் மனைவிடம் நடந்துக் கொள்வதை யாருமே பொறாமையுடன் பார்க்கவில்லை.

சாப்பிட வைத்து தண்ணீருடன் மாத்திரையும் கொடுத்து இரவு உணவை முடித்துவிட்டான்.

ஆயா தாத்தாவுக்கு சோறு கொடுத்தீங்களா

ஆச்சி  கண்ணு

அப்புறம் என்ன எல்லோரும் சாப்பிட்டு தூங்குங்க நாங்களும் தூங்கப் போறோம்.

நீங்க சாப்பிடலையா விஜய்.

எனக்கு இப்போ வேற பசி தான். அந்த பசி தீர்ந்தா தான் இந்த பசி எடுக்கும் என மெதுவாக சொன்னவன். அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குப் போனான்

தம்பி சாப்புட்டுப் போப்பா.

இவளைத் தூங்க வெச்சிட்டு வரேன், நீங்க ரெண்டு தோசை மட்டும் சுட்டு வைங்க என்றவன்  கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்று இறக்கி விட்டான்.

எனக்கு கால் இல்லையா இல்ல நடக்க தான் முடியாதா எதுக்கு இப்படி எல்லோருக்கும் முன்னாடி தூக்கிட்டுப் போறீங்க

இப்போ தூக்குனதுனால என்ன பிரச்சனை.

என்னைய நீங்க பேசன்ட் மாதிரி ட்ரீட் பண்றது எனக்கு புடிக்கல.

சொன்னாலும் சொல்லலைனாலும் நீ பேஷண்ட் தான். என்றவன் ஒழுங்கா ஆடாம படு  என சொல்லிவிட்டு உடைகளை மாற்றச் சென்று விட்டான்.

அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என  நிலாவும் படுத்துவிட்டாள்.

குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவன். குட்டி என்றான் ஆழ்ந்த குரலில்.

அவன் ஆழ்ந்த குரலும் குட்டி என்ற அழைப்பும் உடலில் ஏதோ குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

அடிவயிற்றில் மின்சாரம் பாயிந்தது போல்  வெட்டி வெட்டி இழுத்தது.

ம்ம்

முடியும் தானே .. முடியலைன்னா இன்னோர் நாள் கூடப் பார்த்துக்கலாம் என அவளுக்கு வலித்தது விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அவன் கூற்றில் பட்டென்று கண்ணை திறந்து .. இதுக்கு தான் சொன்னேன் என்னைய பேஷண்ட் மாதிரி பார்க்காதீங்கன்னு.. என்றவள் அவன் சட்டையை பிடித்து இழுத்து இதழோடு இதழ் கவ்வி கவிப்பாட ஆரம்பித்துவிட்டாள்.

காதலில் கொடுப்பதை விட பெருவதில் பேரானந்தம் தான். நந்தனுக்கும் பேரானந்தமாக இருந்தது.

அவன் தலை முடிக்குள் கைகளை விட்டு அலைந்தவாறு கீழ் இதழை கவ்வி இழுக்க அவளிடம் தன்னை பொம்மையாகக் கொடுத்து  நின்றான்  நந்தன்.

அவனது கைகள் எல்லை மீறி  உடலில் ஊர்வலம் போக,  இருவரும் உணர்வு கடலுக்கு மூழ்கி முத்தெடுக்க தொடங்கி விட்டனர்.

குட்டி

ம்ம்

வலிச்சா சொல்லிடுடி.

ம்ம்

வலிக்குதா

ஹும்ஹும்

அவளின் முகத்தைப் பார்த்து பார்த்து தேடலை ஆரம்பித்தான்.கூடி முடிந்து விலகிப் படுக்கும் போதும் உடலில் புது ரத்தம் பாயிந்ததுப் போல்  புத்துணர்வாக இருந்தது.

குட்டி என அவள் நெற்றியில் இதழ் பதிக்கும் போதும்.. விஜய் நான் உங்ககிட்ட நிறைய கேக்கனும் நினைப்பேன் அப்புறம் அப்படியே மறந்துடுவேன். என்றாள்.

கேளு.

நீங்க  எப்போல்ல இருந்து என்னைய லவ் பண்றீங்க

தெரியலையே.

தெரியலையா

ஆமா.. எனக்கே தெரியல.. உன்னைய பிடிக்காது  நெனச்சிட்டு இருந்துருக்கேன் ஆனா உன்னைய  மட்டும் தான் பிடிருந்துருக்கு. அது தெரியாம உன்னய ரொம்ப காயப்படுத்திட்டேன்.  உன்மேல எவ்வளவு  கோவமிருந்தாலும் மனசு உங்கிட்டயே தான் வந்து நிற்கும் உன்னைய பார்க்காம என்னோட நாள் முடிஞ்சதே இல்லை. இதெல்லாம் தெரியாம காலேஜ் வெளியே போய் படிக்க ஆசைப்பட்டேன் அதுக்கு அப்பறம் தான் கொஞ்ச கொஞ்சம் உன்னைய எனக்குள்ள  தேட ஆரம்பிச்சேன் அந்த பேக்கரி விசயத்துக்கு அப்புறம் தான் என்னோட மனசு முழுசா புரிஞ்சிது நீதான் அதுக்குள்ள  பெங்களூரு போய்ட்டியே

ஓ..

ம்ம்

அப்போ உஷா... என்றவளின் மனமோ  எந்த குண்டையும்  போட்டுடக்கூடாது என வேண்டிக் கொண்டது.

அந்த பேக்கரி விஷயத்துக்கு அப்பறம் நானே வேண்டாம்னு சொல்லி விலகிட்டேன்

அப்போவேவா

ஆமா ஏன்.

அப்புறம் இப்போ அவ.. என இழுத்தவள் இந்த விஷயத்தை சொல்லலாம வேண்டாமா என்று தெரியாமல் மென்று முழுங்க.

என்ன சொன்னா உன்கிட்ட.

இல்ல நம்ப கல்யாணத்துலக் கூடப் பார்த்தேனே.

ஆமா அன்னிக்கு நைட் வந்துருந்தா அவ புருஷன் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான். அவன்கிட்ட இருந்து அப்போதான் தப்பிச்சி வந்துருக்கா. மண்டபத்துல நம்ப பேரைப் பார்த்ததும் என்னைய பார்க்கனும் சொல்லிருக்கா.கூட்டிட்டு வந்து விட்டுருப்பாங்க போல. நான் போலீஸ்னதும் என்கிட்ட அவ புருஷன் பண்ண எல்லாத்தையும் சொல்லி கேஸ் போடச் சொன்னா.

வெயிட் பண்ணு போடலாம் அவனுக்கு எதிரா எவிடென்ஸ் எடுத்துட்டு வான்னு சொன்னேன்..

ம்ம் அன்னிக்கு நைட் அவதானே போன் பண்ணி உங்களை வரச் சொன்னது என தயங்கி தயங்கி கேக்க நந்தனின் கண்கள் இடுங்கியது

என்ன சந்தேகப்பட்டியா

இல்லையே என  தலையை வேகமாக ஆட்டியவள் லைட்டா என்றாள் விரல் இரண்டையும் குவித்து.

தெரியும்டி.நீ தூண்டி துருவும் போதே என்றவன் அன்னிக்கு நைட்  அவ புருஷன் வந்து கொன்னுடுவேன்னு பயமுறுத்துறான் நீ வா நந்துன்னு சொல்லி  அழுதா அதான் போனேன்.

அபபோ கோர்ட் அப்போ

அப்போ மாசமா இருந்தாளா அதான் அவன் குழந்தை வேண்டா நான் அப்பார்ட் பண்ணப்போறேன்னு சொன்னா. அதுக்காக தான் போனேன் என பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல.

நிலாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது  இதற்கு மேல் கேட்டால் அடித்து விடுவானோ என பயந்தவள்.

சரி விடுங்க எல்லாம் முடிஞ்சிடுச்சி என அவன் மார்பில் சாயப் போக அவளை தள்ளி விட்டவன் மனசுல இவ்வளவும் வெச்சிட்டு தான் அன்னிக்கு என்னோட ஒன்னா இருந்தியா என அழுத்தமாக அவன் குரல் வரவும்.

மறுபடியும் முதல்ல இருந்தா ஏற்கனவே 5 பார்டா சண்டை தான் விஜய் போட்டுருக்கோம் இதுக்கு மேல  படிக்கறவீங்க தாங்க மாட்டாங்க விட்டுடுங்களேன் என கெஞ்சவும் நந்தன் திரும்பிப் படுத்துக் கொண்டு அவன்  இதுநாள் வரைக்கும் அவள் விசயத்தில் என்ன என்ன செய்தான் என விளாவாரியாக சொல்லிவிட்டான்.

விஜய்...

என்மேல சந்தேகம்ன்னு வந்ததுக்கு அப்புறம் மறைச்சி என்ன பண்ண.

ஐ லவ் யூ மாமா என அவன் இதழைக் கவ்விக் கொண்டாள்

அன்று ஆசையாக சொல்ல சொல்லிகேக்கும் போதும் மாட்டேன் என்றவள் இன்று அவளாக சொல்லும் போதும்  திணறி தான் போனான் விஜயநந்தன்.

யுகி  அங்கு இங்கு இரவு முழுவதும் நடந்து. ஒரு முடிவு எடுத்தவன் நேரம் காலம் பார்க்காமல் வளவனிற்கு அழைத்தான்.

என்னடா இந்நேரத்துக்கு கூப்பிட்டு இருக்க

மணி ஒன்னு தானே ஆகுது

ஒன்னு ஆகுதுடா.

ம்ம் நாளைக்குப் போய் கவியை வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம் இருக்கேன்.

அதை காலையில சொன்னா ஆகாதா.. என நொந்துக் கொண்டவன்.

சந்தோசமான விஷயம்டா போய்ட்டு வா.


சத்தம் கேட்டு ஷாலினி எழுந்தவள். இந்நேரத்துல யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.

உன் அண்ணன்தாம்மா

அவன் இந்நேரத்துக்கு கூப்பிட மாட்டானே எங்க குடுங்க பாப்போம் என ஷாலினி போனைப் புடிங்கிப் பார்க்க அந்தப் பக்கம் சத்தமே இல்லை.

என்ன சத்தத்தைக் காண..

ஏய் உண்மையாவே அவன்தாண்டி. என்னமோ நான் வேற ஒருத்திக் கிட்ட பேசுனா மாதிரி சொல்ற.

யாரு கண்டா.. வள்ளு வர வர நீங்க ரொம்ப பொய் பேசறீங்க பார்த்துக்கோங்க என்று கோவமாக சொல்ல.

இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம பொறாமை படுவா என்றவன் அண்ணனும் தங்கச்சியும் வந்து வாச்சிருக்குப் பாரு நமக்கு என தலையில் அடித்துக் கொண்டு திரும்பிப் படுத்தான்.

ஏனோ தூக்கம் வர மாட்டேன் என அடம்பிடிக்க அவன் தூக்கத்தைக் கெடுத்தவனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்

காலை அழகாக விடிந்தது.. எழும் போதே கவியிடம் இருந்து அழைப்பும் மெசேஜூம் வந்துக் கொண்டே இருந்தது.

அதைப் பார்த்தவன்  முகத்தில் இளம் நகை  தோன்ற  அழைப்பை ஏற்காமலே குளிக்கச் சென்று விட்டான்.

விஜய் காபி...

எப்போ எழுந்த குட்டி.

நீங்க இப்பலாம் ரொம்ப பேட் பாய் ஆகிட்டீங்க. நேரமா எழுந்து  வாக்கிங் போறதில்ல. எழுங்க முதல்ல.

நேத்து ஐயா ஹெவி டூட்டி பார்த்து டையார்டா இருக்கேண்டி.. என அவளை வளைத்து தன் மேல் போட்டவன்.

மேடமுக்கு சந்தேகமெல்லாம் போய்டுச்சா என்றான்.

அது ஏதோ அப்போ தோணுச்சு எதுக்கு கேக்காம  அப்படி இருக்குமோன்னு யோசிக்கனும் அதான் கேட்டுட்டேன் தப்பா.

தப்புன்னு எப்போ சொன்னேன் என அவள் மூக்கை தன் மூக்கால் தேய்த்தவன் இப்போல்லாம் நல்லா என்கிட்ட பேசறடி. இப்படியே இருந்தின்னா  நானும் எந்த சேட்டையும் செய்யாம சமத்தா இருப்பேன்.

இப்படி இருக்கலைன்னா.

அப்புறம் அப்போ அப்போ பழைய நந்து வந்துட்டு வந்துட்டு போவான்.

ஓ பழசுன்னா எவ்வளவு பழசு.

காட்டுல கழுத்தை நெரிச்சான்ல அந்த நந்து என அவள் கன்னத்தைக் கடிக்க.. கீழே இருந்து போன் செய்து அழைத்தார்கள்.

மாமா தான் கூப்பிடறாரு.

அவருக்கு என்னவாம் அவரும் அவர் பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாரு நம்பலையும் சந்தோசமா இருக்க விட மாட்டாரு என்றவன் சட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழேப் போக.

அங்கு மொத்தக் குடும்பமுமே நின்றிருந்தது.

என்னாச்சி. இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ணியே  ஒரு வழியாகிடுவேன் போல.. என உள்ளுக்குள் சொன்னாலும் வெளியே விரைப்பாக நின்றான்.

ஷாலினி காலையில் மயக்கம் போட்டுட்டா

ஹாஸ்பிடல் போகமா கூடி நின்னு பேசிட்டு இருக்கீங்க என்றவன் கார் சாவி எடுத்துட்டு வா  என நிலாவிடம் கத்தினான்.

அதில்ல நந்து. நீ மாமாவாகப் போற.. நான் தாத்தா ஆகப்போறேன் என்றார் மார்த்தி.

ஒரு நொடி என்றாலும் நந்தனுக்கு அந்த உணர்வு மிகவும் பிடித்து இருந்தது தாய்மாமன் உறவு என்பது  இன்னொரு தாயைப் போன்றது தானே. மருமகனையோ மருமகளையோ கையில் ஏந்தப் போகிறான்.

ஷாலு எங்க

அவ வெட்கப்பட்டுட்டு இங்க வர மாட்டேன்ன்னு சொல்லிட்டாப்பா என மணி மனநிறைவுடன் சொல்ல.

நானேப்  போய் பார்க்கறேன் என்றான்.

நந்தன் முகத்தில் வந்துப் போன சந்தோசப்பார்த்த நிலாவிற்கு மூச்சு அடைத்தது.

இருவருக்கும் ஒரே நாளில் தான் திருமணம். அவள் தாய்மையடைந்திருக்க இவள் வயிறு காலியாக இருக்கிறது என யாராவது சொல்லிவிடுவார்களோ.. அப்படி சொன்னால் அவர்களை நந்தன் சும்மா விடுவான்னா.

கடவுளே இப்போதான் எல்லாம் சரியாகிட்டு வருது. அதுக்குள்ள புது பிரச்சனை எதுவும் கிளம்பிடக் கூடாது என கடவுளிடம் அவசரமாக வேண்டுதல் ஒன்றை வைத்துவிட்டு ஷாலினியைப் பார்க்கப் போனாள்.

அண்ணி... வாழ்த்துக்கள் என்னைய அத்தையாகிட்டிங்க... என மனமுவந்து சொல்ல.

ஷாலினிக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது

நந்தன் ஷாலினியின் தலையை மட்டும் தடவிக் கொடுத்து அவனது அன்பை வெளிக்காட்டியவன் வளவனின் தோளில் தட்டிக் கொடுத்து வாழ்த்துக்கள் மச்சான் என அழுத்தமாக சொன்னான்.

யுகிக்கே அவனது வாழ்த்துக்கள் அச்சத்தை தான் கொடுத்தது. ஆனால் வளவனிற்கு மிகவும் சந்தோசதைக் கொடுத்தது.

நந்தன் அழுத்தமாக சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அவனை மிகவும் பாதித்திருக்கிறது என நிலாவைப் போல் வளவனும் இப்போதெல்லாம் நந்தனைப் படிக்க பழகி இருந்தான்.

தாய்மாமன் உறவை யுகி அறியாமல் இருக்கலாம். அவனுக்கும் சங்கருக்கும் இடையே பெரிய உறவு இருந்ததில்லை, ஆனால் நந்தனுக்கும் சங்கருக்கும் இடையே  பெரிய பிணைப்பு இருந்தது. அன்று தாய் செய்யாததை தாய்மாமன் செய்து தான் நந்தனின் வாழ்க்கையை நேர் படுத்திருந்தான். அதேபோல்  கடமை நந்தனுக்கும் இருக்கிறது அல்லவா.

குழந்தையாக இருக்கும் போதும் மட்டும் கடமைகளும் சுமைகளும் சிறிதாக இருக்கும் வயது ஆக. ஆண் என்றாலும் பெண் என்றாலும் அந்த உறவுக்கு ஏற்ப கடமைகளை அணிவகுத்து நிற்க தான் செய்வன, அவைகளை தூக்கி சுமக்க பயந்து உறவுகளே வேண்டாம் என நினைக்கக் கூடாது. தூக்கி சுமப்பதுக் கூட ஒரு சுகமான சுமை தான்.

ஹாஸ்பிடல் போகனும்ல

போகணும், இப்போதான் எங்களுக்கே தெரிஞ்சிது இனி தான் குளிச்சிட்டு டாக்டர்கிட்ட அப்பொய்ன்மெண்ட் வாங்கிட்டுப் போகணும்.

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், கிளம்பி வாங்க..

நம்மளும் போறமா விஜய்.

பின்ன மாமன் நான் இல்லாம எப்படி.

அப்போ அத்தை மட்டும் வேண்டாமா என நிலா சிணுங்க..

நானும் தான் மாமா நானும் வருவேன் என்றான் யுகி.

அடேய் நல்லவனே ஒருமணிக்கு எழுப்பி என்னமோ சொன்னியே முதல்ல அதைப் போய் செய் அப்புறம் ஹாஸ்பிடல் வருவ..

அதுவும் செய்யணும் தான்

என்ன  இழுக்கற. குழந்தைக்கு ரெண்டு தாய்மாமனும் அவங்க பொண்டாட்டியோட இருந்தா இன்னும் சந்தோசமா இருக்குமா என வளவன் யுகியின் தோளில் தட்ட..

நீ அங்கேப் போ.. நான் பார்த்துக்கறேன் என்றான் நந்தன்.

அப்போ பூனையைக் கூட்டிட்டுப் போறேன்

அவ எதுக்குடா. என்னோட அவளும் வரணும் நீ வேணா உன் மச்சானை இழுத்துட்டுப் போ என ஷாலினி நிலாவின் கையைப் பிடிக்க.நிலாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.அதை நந்தன் மட்டும் பார்த்தால் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான் என கண்ணீரை உள் இழுத்துக் கொண்டாள்.

கடைசியில் மார்த்தி மணி யுகி மூவரும் கவியை அழைக்கவும், நந்தன் நிலா ஷாலினி வளவன் நால்வரும் மருத்துவமனைக்கு செல்வதாகவும் முடிவு ஆகி அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பி சென்றனர்.

திருப்பூரின் மிகப்பெரிய மருத்துவமனை..

ம்ஹும்.. இப்போதைக்கு கன்பார்ம் மட்டும் இங்கப் பண்ணிப்போம்.. மன்திலி செக்கப் கோயம்பத்தூர்ல பார்த்துக்கலாம்

அத பேர் சொல்லி கூப்பிட்டு சொல்ல மாட்டாராக்கோ துரை என வளவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.

அது என்ன அண்ணாவை கனைச்சி கூப்பிடறீங்க ஒன்னு பேர் சொல்லிக் கூப்பிடனும் இல்லையா மச்சான்னு உரிமையா சொல்லணும் ரென்டும் இல்லாம இது என்ன?  கேவலமா இருக்கு என்றாள் நிலா.

நிலாவின் கேள்விக்கு நந்தன் பதில் சொல்லவில்லை.

விஜய் உங்களை தான் கேக்கறேன்.

இப்படி தான் வரும்.

ஓ அப்போ நானும் அப்படியே கூப்பிடறேன் என்றவள் முகத்தைத் திருப்ப.. அவள் கண்ட காட்சியில் உச்சப் பட்ச அதிர்ச்சியானாள்.



Leave a comment


Comments


Related Post