இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை 132 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-09-2024

Total Views: 1372

அருகில் இருந்த ஷாலினியின் கையை சுரண்டியவள்.

ஷாலு இது அந்த சரஸ்வதி தானே என்றாள் அதிர்ச்சியில் பேச்சுக் கூட வரவில்லை.

பார்த்தா அப்படி தான் தெரியுது என்று ஷாலினியும் சொல்ல.

முன்னாள் சென்றுக் கொண்டிருந்த நந்தனின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

இப்போ உனக்கு என்னடி பிரச்சனை மச்சான்னு சொல்லணுமா சொல்லி தொலையறேன் போதுமா  என கத்தியவன் நிலாவின் பார்வை போன இடத்தைப் பார்த்தான்.

சரஸ்வதி தான் செங்களை அடுக்கி தலையில் தூக்கிக் கொண்டிருந்தாள்.

உடல் மெலிந்து முகம் கறுத்து, உடுத்த ஒரு நல்ல உடை இல்லாமல் என பார்க்கவே அடையாளம் தெரியாதவாறு வேலைச் செய்தவளை நிலாவின் கண்கள் இன்னும் அதிர்ச்சி விலகாமல் பார்த்தது.

என்னடி.

ஏன் விஜய் இவ்வளவு பெரிய தண்டனைக் கொடுத்தீங்க.

இதோட விட்டுட்டேன்னு சந்தோசப்படு.

விஜய்

பேசாம வரியா என உள்ளே இழுத்துச் சென்று விட்டான்.

அதில் இருந்து நிலாவின் முகத்தில் ஒளியே இல்லை. எதோ இழந்ததைப் போலவே இருந்தாள்.

ஷாலினியை பரிசோதித்து  மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

இன்னும் நிலாவின் முகம் தெளியாமல் இருக்க அவள் அருகில் அமர்ந்தவன்.

இப்போ உனக்கு என்ன பிரச்சனை குட்டி என்றான் அவள் முகம் லேசாக வாடியிருந்தால் கூட அவன் நெஞ்சில் நெருஞ்சியாக குத்தியது

இவ்வளவு பெரிய தண்டனைக் குடுத்துருக்க வேண்டாம் விஜய். அவங்க உங்களை காதலிச்சாங்க அவ்வளவு தான். அதுக்காக எதாவது பண்ணி விரும்பிய பொருளை அடையப் பார்த்துருக்காங்க. நீங்களும் அதையே தானே செஞ்சீங்க நீங்க செஞ்சா தப்பில்ல அவங்க செஞ்சா தப்பா விஜய்.

இங்கப் பாரு குட்டி நான் என்னைய சுத்தி இருக்க யாரையும். காயப்படுத்தி எனக்கு வேணுங்கறதை அடையல. அதேமாதிரி உன்னைய மிரட்டுனதும் கூட  உன் மனசுல யாரும் இல்லைன்னு தெரிஞ்சப் பிறகு தான்.
அதுவே உன் மனசுல யாராவது இருக்காங்கன்னு தெரிஞ்சி இருந்தா கண்டிப்பா விலகிப் போயிருப்பேன், என் மனசுல நீதான் இருக்கேனு தெரிஞ்சும் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் கூட என்னைய அடைய நினைச்சி இவ்வளவு கேவலமான வேலையை செஞ்சவளை எப்படி மன்னிக்க சொல்ற, என்னால அது முடியாது என்றான்.

அவன் சொல்லும் காரணமும் சரியாக தான் பட்டது நிலாவிற்கு.

இருந்தாலும் போலீஸா இருந்தவீங்கள இப்படி கல்லு மண்ணு சுமக்க வைக்காதீங்க விஜய் ஏதாவது வேலைப் போட்டுக் குடுங்க. அப்படியாவது   நல்லா இருந்துட்டுப் போகட்டும் என்றாள்.

ம்ம்

என்ன ம்ம் ,.. அவ்வளவு கோவம் இருந்தா ஒன்னும் போட வேண்டாம் போங்க.. என பழையக் குரl மீண்டு வர..

அம்மிணி கேட்டு இல்லைன்னு சொல்லுவனா.. என அவளது கன்னத்தைப் பிடித்து ஆட்டியவன்.

வியா என்றான் அழுத்தமாக.

ஏதோ சொல்லப்போகிறான் என அந்த அழுத்தமே சொன்னது.

ம்ம்

நீ சொல்ற எல்லாத்தையும் செய்வேன்ங்கறதுக்காக கண்டதையும் செய் சொல்லக்கூடாது. இதுதான் லாஸ்ட்டா இருக்கனும். நான் எது செஞ்சாலும் பல தடவை யோசிச்சு தான் செய்வேன். அது தப்பா இருக்க வாய்ப்பே இல்ல. இன்னொரு முறை இப்படி கேட்டுட்டு நிற்காத.. உனக்காக பல இடத்துல என்னோட கவுருவத்தையையே விட்டுக் குடுத்துருக்கேன் என எழுந்துப் போய்விட்டான்.

இருவரும் பேசும்போது ராஜி சமையலறையில் இருந்து  இவர்களின் பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டீருந்தார்

நந்தன் போனதும் வெளியே வந்தவர். ஏதாவது குடிக்கிறியா அம்மு.

ஜூஸ் குடுங்கம்மா இல்லனா வந்து அதுக்கும் காய்வாரு.

தம்பி உன் நல்லதுக்கு தானே சொல்லுது.

ஆமா தம்பி பெரிய தங்கக் கம்பி என நிலா முறுக்க.

தம்பி சொல்றது சரிதான். மூங்கில் வளையுதுன்னு ஓவரா வளைக்கக் கூடாது.அப்புறம் உடைஞ்சிடும் தம்பி மூங்கில் மாதிரி பார்த்து இருந்துக்கோ என உள்ளேச் சென்று விட்டார்.

யுகி கவியை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் என அழைக்க. ஷாலினியும் நிலாவும் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இதுக்கு எல்லாம் காரணம் நீதாண்டி. என ஷாலினி முறைக்க 

அப்படியா அப்போ சந்தோசம் தானே.

நான் அவளுக்கு டிவோர்ஸ் குடுக்க வெச்சுடனும்ன்னு நினைச்சேன்

எதுக்கு.

அவளும் ஆளும் எனக்கு அவளை சுத்தமாப் புடிக்கல

உன் அத்தைப் பொண்ணு தானேடி

அதுக்குன்னு இந்த அளவுக்கு பண்ணுவாளா. யுகிதான் பாவம். வேற நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிருக்கலாம்.. நீ கெடுத்துட்ட என்றாள் கோவமாக.

அது பாவம் ஷாலு. பாவத்தைப் பண்ணக்கூடாது.. பழசை பேசாம நார்த்தனாரா என்ன பண்ணணுமோ அதைப் பண்ணு வா என ஷாலுவை அழைத்துச் சென்று ஆரத்தி எடுக்க வைத்து விட்டாள் நிலா.

கவி உள்ளே வலதுக் காலை எடுத்து வைக்க. வீட்டின்னுள் இருந்தப்படி அதப் பார்த்துக்கொண்டிருந்தான் நந்தன்.

அவனுக்கு சரஸ்வதியும் கவியும் ஒன்று தான். வாழ்நாளில் மன்னிக்க முடியாத இரு மனிதர்கள்... கவியைப் பார்த்ததும் எழுந்து உள்ளேச் சென்று விட்டான்.

எப்போதும் போல் இப்போதுன் செல்வராணி அவரது அதிகாரத்தை மணியிடம் செலுத்தினார்.

இரண்டு வாரம் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு காலம் நகரத் தொடங்கிவிட்டது.

முன்பு போல் தனி தனியாக என்று எதுவுமே இல்லை மொத்தக் குடும்பமும் ஒன்றாக தான் சாப்பிட வேண்டும் அவரவர் மனைவிகளை அவர்வர்கள் பாத்துக்கொள்ள வேண்டும் இந்த சட்டம் மார்த்தி ஒருவருக்காக மட்டுமே போடப்பட்டது.

உஷாவிற்கு குழந்தை பிறந்தது விட்டதாக நந்தனிற்கு செய்திப் போனது ஆனாலும் அவன் பார்க்கப் போகவில்லை. நம்பிக்கை தோரோகம் செய்தவளை எப்படி மன்னிப்பான்.

அதோ இதோ என ஏழு மாதங்கள் ஓடிவிட.. ஷாலினிக்கு வளைகாப்பு வைத்தனர்.

கவி  இரண்டு மாதமாக இருந்தாள்.நிலா  மாசமாக இல்லாததால் அவளை எல்லோரும் கேக்க ஆரம்பித்து விட்டனர்.

நிலாவிற்குள் உள்ளுக்குள் வேதனையாக இருந்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

குட்டி எழுந்திரி வளையல் போட நேரமாகிடும் போய் குளி..

போலாம் என்றவள் சோர்வாக.

என்னடாம்மா..

ஏன் விஜய் நமக்கு  மட்டும் பாப்பா வரல

வரும்டா இப்போ என்ன அவசரம் இப்போ இல்லனா அடுத்த மாசம் வரும் அதுக்காக பீல் பண்ணுவியா.

என்னமோ தெரியல விஜய் மனசு வலிக்குது.

சரியாகிடும் குட்டி. என அவள் நெற்றியை நீவி முத்தம் கொடுக்க

அங்கப் போனா ஏதாவது பேசுவாங்கன்னு பயமா இருக்கு விஜய்.

யார் என்ன பேசிடுவாங்க நீ என்ன லூசா.. இந்த நந்தனோட பொண்டாட்டியை பேச யாருக்காவது தைரியம் இருக்கா.

அவங்க பேசலைன்னாலும் அதானே நிஜம்.

அப்பா சாமி முடியல இப்போ நீ குளிக்கப் போறியா இல்ல நானே தூக்கிட்டுப் போய் குளிக்க வைக்கவா..

எது பண்ணாலும் எனக்கு ஓகே தான் என நிலா கையை விரிக்க. அழகாக அள்ளிக் கொண்டான் அவளவன்.

குளிக்க வைத்து வெளியே அழைத்து வந்தவன். ட்ரெஸ் மாத்து குட்டி நான் வெளியே போய் சாப்பாடு ரெடியான்னு பார்த்துட்டி வந்துடறேன்  அப்படியே அந்த வைர  வளையலையும் எடுத்து வை என சொல்லிக் கொண்டே வெளியேப் போய்விட்டான்.

அவன் சொன்னது போலவே வளையலை எடுத்து மேலே வைத்து விட்டு புடவைக் கட்டி முடியை தளரப் பின்னி பூ வைக்க அதற்குள் ஷாலினியிடம்  இருந்து அழைப்பு வந்துவிட்டது..

என்ன இன்னும் வராம என்ன பண்ற.

வரேன் ஷாலு.

என்னாச்சி அம்மு ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு

அதெல்லாம் ஒன்னுமில்ல. என்றவள் கிளம்பி  வளையலை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.

முக வாட்டம் மட்டும் சற்று தெரிந்தாலும் அதையும் தாண்டி அழகில் மிளிர்ந்தாள். பழச்சாறாக குடிப்பதால் முகம் பளபளவென்று இருந்தது.கீழே இறங்கி வந்தவளை விழியகற்றாமல் நந்தன் பார்த்தான்.

பூனை இந்த பூவை ஷாலுக்கிட்ட கொடுத்துடு.. என தட்டு நிறைய பூவைக் கொண்டு வந்து யுகிக் கொடுக்க.

கவியைக் குடுக்கச் சொல்லு.. என்றவள் அவன் முகம் கூடப் பார்க்காமல் நகர்ந்து விட்டாள்.

குட்டி

ம்ம்

நில்லு, கல்யாணமாகி  பத்து மாதம் ஆகப் போகுது இன்னும் சேலை ஒழுங்கா கட்ட மாட்டிங்கிற என்றவன் கீழே மண்டியிட்டு  சேலை மடிப்பை சரி செய்ய..நிலா யாராவது பார்க்கிறார்களா என சுற்றி சுற்றிப் பார்த்தவள்.

விஜய் எந்திரிங்க முதல்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க..

என்ன பண்ணேன். என் பொண்டாட்டியோட கவுரவம் எனக்கு ரொம்ப முக்கியம்மா என எழுந்து நின்றவன்

எதுக்குடி கலங்கற.. நமக்கும் பாப்பா  வரும்டி என அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

ம்ம் நான் பீல் பன்றேன்னு யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதீங்க விஜய் அப்புறம் அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க என பயந்தாள்.

ம்ம் சரி வா. வளையல் எங்க.

இங்க இருக்கு, டிசைன் நல்லா இருக்கு என  மனம் மகிழ்ந்து சொல்ல..

உனக்கு இது மாதிரி ஒன்னு செய்வோமா என்றான்.

எதுக்கு ஏற்கனவே வாங்குனதையே போட முடியல இதுல புதுசா வேறையா என்றவள் வாங்க போகலாம் என்றாள்.

அவ்வளவு நேரமும் கணவன் மனைவுக்கு இடையில் போகக்கூடாது என  யுகி தள்ளி நிற்க

நீ வரலையா என்றாள்.

வரணும்.

அப்போ வா.

நான் குடுத்ததை தான் நீ வாங்க மாட்டேன்னு சொல்லிட்டியே.

கவி போய்ட்டாளா..

இன்னும் இல்ல

அப்போ அவகிட்ட குடுடா,  அது தான் நல்லது, ஒன்னும் இல்லாம நிற்கர என்கிட்ட குடுத்து ஷாலுக்கு எதாவது ஆகிட்டா என்னப் பண்ணுவ  என்று நிலா சாதாரணமாக சொல்ல

அருகில் நின்ற இரு ஆண்களும் பதறி விட்டனர்

குட்டி,  பூனை என இருவரும் கத்த..

சும்மா தான் சொன்னேன் வாங்க என முன்னால் சென்றவளின் கண்கள் கலங்கி இருந்தது. நந்தன் ஒருவனுக்காக மட்டும் தான் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டிருந்தாள்.

ஷாலினிக்கு வளைகாப்பு என்றதும் முதல் ஆளாக துள்ளிக் குதித்தது நிலா தான்.

இத்தனை சாப்பாடு போடணும், இத்தனை தட்டு வைக்கணும் அது இப்படி எல்லாம் அலங்காரம் செய்திருக்க வேண்டும்.  என அவள் ஆசையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தயார் செய்தாள்.

நேற்று இரவு தட்டையை அலங்கரிக்க இரவு ஒரு மணிக்கு மேலாகி விட்டது.

ஆண்கள் அனைவரும் பொறுமை இல்லாமல் தூங்கச் சென்று விட. இன்றைய நிகழ்வுக்கு நேற்றே வந்த சொந்தங்கள் சிலர் கூடத்தில் அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்தனர்.

கவியும்  மசக்கையின் காரணமாக படுத்துவிட. நிலா மட்டும் தான் கடைசியாக இருந்தது.

ஏக்கா நான் சொல்லக்கூடாதுன்னு தான் பார்த்தேன் இப்படி நைட்டும் பகலும்மா இந்தப் பொண்ணு செய்யும் போது சொல்லாம இருக்க முடியல என ஒரு கிழவி ஆரம்பிக்க.

நீ என்ன சொல்ல வரேன்னு  புரியுதுடி ரெண்டுப் பேருக்கும் ஒன்னா தான் கல்யாணம் ஆச்சி. அவளுக்கு இதை வளைகாப்பு போடப்போறாங்க. இவளோ  ஒன்னும் இல்லாம காலி வயித்தோடல சுத்திட்டு திரியுறா..

அதைச் சொல்லுங்க.. இவ வந்த நேரமோ என்னவோ இந்த வூடே வெலங்கள, முதல்ல யுகி பையனை வெட்டிப் போட்டாங்க ரெண்டாவது அண்ணனுக்கு அட்டாக் வந்துச்சு, மூணாவது இவளுக்கு எவளோ விஷத்தை வெச்சிட்டா நாலாவது வாழற பசங்க பிரிஞ்சி நின்னாங்க இப்போ அவங்க வயிறுலா நிறைஞ்சிப் போச்சி இவ தானே  ஒன்னும் இல்லாம நிற்குறா. இப்படி பட்ட அதிர்ஸ்டக் கட்டைக் கிட்ட போய் இதெல்லாம் பண்ணச் சொல்லிருக்காங்களே அந்த புள்ள தாச்சிக்கு ஏதாவது ஆகிப் போச்சுன்னா என்ன பண்ணுவாங்க. என வாய் ஓயாமல் பேச..

நிலாவிற்கு அவர்கள் பேசிய அனைத்தும் வார்த்தை மாறாமல் கேட்டது. கேட்டதும் கைகள் வேலை நிறுத்தம் செய்ய. மூளை வேகமாக வேலை செய்தது.

கல்யாணம் ஆன நாளில் இருந்து யோசிக்க ஆரம்பித்து விட்டாள் அவர்கள் சொன்னது போல தானே நடந்திருக்கு என தனை தானே இழிவாக நினைத்துக் கொண்டிருக்க..  கிருஷ்ணம்மாளின் சத்தத்தில் தான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

யாரடி பேசுனீங்க பீத்த சிறுக்கிங்களா அப்படியே முடியை புடிச்சி ஆஞ்சிப்புடுவேன் ஆஞ்சி விசேஷதுக்கு கூப்பிட்டா வந்தமா தின்னமா போனமான்னு இருக்கனும் அதை வுட்டுபுட்டு என்ற பேத்தியப் பேச நீங்க யாருடி.  அவ இந்த வூட்டு குலதெய்வம்டி. ஆரை அதிஷ்ட கட்டைன்னு சொன்னிங்க சொன்ன வாயை கிழிச்சி தைச்சுப் புடுவேன் ஜாக்கிரதை என மிரட்ட..  பேசிய இருவரும் ஆடிப்போய்விட்டார்கள் கிருஷ்ணமாளின் ஒன்று விட்ட தங்கைகள் தான் இவர்கள். அக்காவே தங்களை இப்படி பேசவும் உடனே மன்னிப்பு கேட்டுவிட்டார்கள்

அக்கா நாங்க பேசுனது தப்பு  தான் இனி இப்படி பேச மாட்டோம் நந்தன் தம்பிகிட்ட எதுவும் சொல்லிப்புடாதக்கா என்று கெஞ்ச

என்னையவா பேசுனீங்க என்கிட்ட மன்னிப்பு கேக்க அவகிட்ட மன்னிப்பு கேளுங்கடி..

இல்லை ஆயா வேண்டா அவங்க வயசுல பெரியவீங்க மன்னிப்புலாம் கேக்க வேண்டாம் என்றவளின் கண்ணீர் மட்டும் நிற்காமல் அருவியாகக் கொட்டியது.

கண்ணு எதுக்கு அழற அவளுங்க சொன்னா அப்படி ஆகிடும்மா அழாத கண்ணு..

ம்ம்

இதை ராசாக்கிட்ட சொல்ல வேண்டா கண்ணு அப்புறம் இந்த விசேஷமே நடக்காது.

சொல்ல மாட்டேன் ஆயா என அறைக்குப் போனவள் தான் இரவு முழுவதும் அழுது அழுது ஓய்ந்து காலையில் தூங்க.

மனம் கேக்காமல் நந்தனிடம் குழந்தையைப் பற்றி கேட்டது.

தட்டெல்லாம் அருகில் இருந்த விநாயகர் கோவிலில் வைத்து அங்கிருந்து எடுத்து வருவதாக தான் ஏற்பாடு செய்யப்பட்டது..

நிலாவைத் தட்டை எடுத்துக் கொள்ள சொல்ல. ஒரு மாதிரி இருக்கு. நீங்க எடுத்துட்டுப் போங்க என வந்த உறவுகளிடம் கொடுத்து அனுப்பிவிட்டாள்.

இதைப் பார்த்த நந்தனின் நெற்றி சுருங்கியது.

நேத்து வரைக்கும் வேலையை இழுத்துப் போட்டு செய்தவள் இன்று எதிலும் ஆர்வம் இல்லாததுப் போல் தள்ளி தள்ளி நிற்கவும் என்னவோ ஒன்று அவனை நெருடியது.

ஷாலினியை மனையில் உக்கார வைக்க நிலா அவளைவிட்டு தள்ளி நந்தன் அருகில் வந்து நின்றுக்கொண்டாள்.

இங்க  எதுக்கு நிற்கர வியா அங்கப் போய் ஷாலு பக்கத்துல நில்லு

இல்ல இங்கையே நின்னுக்கறேன் என்றவள் அதன்பிறகு யார் அழைத்தும்  இல்ல நீங்களே வைங்க என ஒதுங்கிக் கொண்டாள்.

நேற்று நடந்த உரையாடலை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை ஒருவேளை அவர்கள் சொன்னது போல் நடந்து ஷாலினிக்கு குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக தான் ஷாலினியை நெருங்காமல் இருந்தாள்.

இதை குழந்தை பெறாத ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் வேதனை தான். குழந்தை இல்லை என்றதும் உடனே அவர்களுக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்து விலக்கி வைத்துவிடுகிறார்கள்.அதனால் அந்தப் பெண் எவ்வளவு பாதிக்கப்படுவாள் என யோசிப்பதில்லை.

மனம் நொந்துப் போய் தற்கொலை செய்துக் கொள்வது வரைக்கும் ஒரு வார்த்தைக் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

அதைப் புரிந்துக் கொள்ளாமல்  சமூகம் அவர்களைப்  தூற்றிவிட்டு சென்றுவிடுகிறது.

வைர வளையல்  கொடுக்க நந்தன் நிலாவைப் பிடித்து இழுக்க அவளோ நீங்க போங்க விஜய் என்றாள்

இப்போ வரியா என்ன என்று அவன் மிரட்டவும் தான் வேறு வழியில்லாமல்  அவனுடன் சென்றாள்.

அம்மு என்மேல ஏதாவது கோபமா என் பக்கத்துல வராம அங்க நிற்கர..

அதில்ல ஷாலு.  எல்லோரும் வைக்கும் போது நான் எதுக்குன்னு  தான் அங்க நின்னுட்டேன் என்றவள். அவள் கையில் வளையலைப் போடவே பயமாக இருந்தது இருந்தாலும் நந்தனின் பேச்சிக்கு பயந்து போட்டுவிட்டவள்.

பசிக்குதுங்க அங்கப் போலாமா என நந்தனையும் அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடத்திற்கு சென்று விட்டாள்.

என்னடி பிரச்சனை என அவள் கையை விலக்கி விட 

எதும் இல்லைங்க  என்றாள்.
அவர்கள் பின்னாலையே யுகியும் கவியும் வந்து விட்டனர்.

இப்பதெல்லாம் கவி நிலாவின் மிகப்  பெரிய ரசிகை என்பது போல்.. நிலாவை தாங்கும் குழுவில் அவளும் ஒரு அங்கமாக மாறிக் கொண்டாள்.

இப்போ சொல்றியா இல்லையா நேத்து வரைக்கும் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்ச இன்னைக்கு என்ன வந்துச்சி. என காட்டமாக  நந்தன் கேக்க..

அது.... என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் இப்பவோ அப்பவோ   விழப் போகிறேன்  என்றது.

சொல்லு என அவளைப் போட்டு உலுக்க

இருடா அவ சொல்லுவா என்ற யுகியோ... நேத்து நைட் நீதான் தனியா தட்டு ரெடி பண்ணுன அப்போ இருந்த கிழவிங்க ஏதாவது சொன்னுச்சா என யுகி  சரியாக கணித்து கேட்டான்.

நிலா பதில் சொல்லாமல் நிற்க

அப்போ அவங்க தான் சொல்லிருக்காங்க. என்ன சொன்னாங்க என்றான் இந்த முறை யுகியிடமும் வார்த்தை அழுத்தமாக வந்தது.

இதற்கு மேல் சொல்லாமல் இருந்தால் சண்டை வந்துவிடுமோ என பயந்து நிலா அனைத்தையும் சொல்ல.நந்தன்  கை நரம்புகள் முருகேரி கோவத்தில் கண்கள் சிவந்து நின்றது.

வா கேக்கலாம்.

ஐயோஓஓ அதெல்லாம் வேண்டா விஜய் விடுங்க வயசானவீங்க பேசதான் செய்வாங்க அதையிலா கேட்டுட்டு இருப்பிங்களா

அப்புறம் எதுக்கு ஒதுங்கி நிற்கர

அவங்க சொன்னது போல ஷாலுக்கு ஏதாவது நடந்துடுச்சின்னா என்ன பண்றது அவங்க சொல்ல மாதிரி தானே.. நான் வந்ததும் இங்க எல்லாமே நடந்துச்சி நான் ஒரு அதிர்ஷ்டக் கெட்டவ என்ற அடுத்த நொடி நந்தனின் கை இடியென நிலாவின் கன்னத்ததில் இறங்கி இருந்தது.

விஜய்...

என்னடி விஜய் கண்டவீங்க சொன்னா உனக்கு எங்கடி போச்சி புத்தி நீ இப்படி நினைக்கறேன்னு தெரிஞ்சா சுத்தி இருக்கவீங்க  எவ்வளவு கவலைப்படுவாங்கன்னு ஏதாவது யோசனை இருக்கா உனக்கு என நந்தன் மீண்டும் அடிக்கப் போக யுகி இழுத்து தன் பின் நிறுத்திக் கொண்டான்

எதுக்குடா இப்போ அவளை அடிக்கிற அவளே  பீல் பண்ணிட்டு இருக்கா..

அது தான் எதுக்கு பண்ரா 

அவங்க சொல்ற மாதிரி  எனக்கு குழந்தைப் பொறக்காதுல விஜய் என மீண்டும் சொன்னதையே சொல்ல.

ஏய் கொஞ்சம் நேரம் வாயை மூடு அவன் தான் அடிக்க வரான்னு தெரியுதுல அப்புறம் எதுக்கு பேசற. என யுகி தடுக்க தடுக்க அவளை  இழுத்து முன் விட்ட நந்தன்.

உனக்கு குழந்தை பிறக்காதுன்னு யாரும் சொல்லல.

அப்புறம் ஏன் பொறக்கல நம்பதான் தினம் ஒன்னா இருக்கோம்ல என அவனுக்கு மட்டும் கேக்க சொல்ல.

அதுக்கு..

அப்போ எதோ குறை இருக்கப் போய் தான் குழந்தை வரல என சொன்னவளை நந்தன் மீண்டும் அடிக்கப் போக யஇந்த முறை வளவன் தடுத்து விட்டான்.

இவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்கிறார்கள் பிரச்சனை போல என்று தான் வளவன் வந்தது.

என்ன நடந்துச்சின்னு தெரியலழ் என்ன நடந்தாலும் அடிக்கற அளவுக்கு போறது தப்பு என்றவன்.

டேய் நீ போய் உன் வேலைப் பாரு என்றவன்.

பிரச்சனை உனக்கு இல்ல  எனக்கு தான் நான்தான் இப்போ குழந்தை வேண்டாம்னு தள்ளிப் போட்டுருக்கேன் போதுமா என நந்தன் நிலாவைப் பிடித்து சொல்ல

சுற்றி இருந்த அனைவருக்குமே இது அதிர்ச்சி தான்.

என்ன சொல்றிங்க விஜய்.  நீங்க வேண்டாம்னு தள்ளிப் போட்டுருக்கிங்களா.

ம்ம்

ஏன் விஜய் உங்க குழந்தையை சுமக்கற அளவுக்கு  எனக்கு தகுதி இல்லையா

ஏதாவது பேசுன பல்லைத் தட்டிடுவேன். நாயே.விஷம் ஏறுனதுல   உடம்பு ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு குழந்தையை தாங்கற அளவுக்கு சக்தி வேணும்ன்னு தான் கொஞ்ச நாள் தள்ளிப் போடச் சொல்லி டாக்டர் சொன்னாங்க. அவர் கொஞ்ச நாள்ன்னு சொன்னதை நான்  ஒரு வருஷம்  ஆகட்டும்னு விட்டு வெச்சிருக்கேன் என்றான்.

அதைக் கேட்டதும் கவி குற்றவுணர்வில் தலையை குனிந்தாள்.

இங்கபாருடி என நந்தன் நிலாவைப் பிடித்து நிமிர்த்தியவன்  ஒரு காபி டீ கூட உன்னால குடிக்காம இருக்க முடியல அப்புறம் எங்க நான் சொல்றதைக் கேக்கப் போற. நீ அடம்பிடிச்சி கேட்டா என்னால மறுக்க முடியாதுன்னு தான் நான்  உன்கிட்ட சொல்லல போதுமா.. மத்தபடி மறைக்கணும்ன்னு நினைக்கல. என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

யுகியின் கண்கள் கலங்கிவிட்டது.



Leave a comment


Comments


Related Post