இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -3 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 07-02-2024

Total Views: 30632

நிலாவை தூக்கிக் கொண்டு வந்த வளவன்

"அம்மா இப்போ வந்துடுவாங்க அம்மு, தயவு செஞ்சி இனி அவங்கிட்ட சாப்பாடுன்னு போய் நிற்காத"  என்றவன் பசியில் அழும் நிலாவைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

நந்தன் வீடு அல்லாமல்  பக்கத்தில் இருக்கும் மற்ற வீட்டில் சென்று உணவு கேக்கலாம். ஆனால் வளவனுக்கு அப்படி போய் கேக்க மனம் வரவில்லை. நேராக நிலாவைத் தூக்கிக் கொண்டு கடைக்குப் போனான்.

"அண்ணா"

"சொல்லுடா என்ன வேணும்?"

"அம்மா கூர மேய ஆளுப் பார்க்க போயிருக்காங்க, அதுக்குள்ள பாப்பாவுக்கு பசி எடுத்துச்சி".

"அதுக்கு"

"நீங்க பிஸ்கட் பாக்கெட்  குடுங்கண்ணா அம்மா வந்ததும் காசு வாங்கி தரேன்"என சிறு வயதானாலும் தயங்கி தயங்கித் தான் கேட்டான். யாரிடமும் யாசகம் பெற்றுவிடக்கூடாது என்பது தானே ஒவ்வொரு மனிதனின்  எண்ணமும். அதில் வளவன் மட்டும் விதிவிலக்கா என்ன. அவர்கள் பணத்தில் ஏழையாக இருந்தாலும் அவர்களுக்கு சுயகவுருவமும் சுயமரியாதையும் மிகவும் அதிகம்.

பசியோடு இருப்பவனை விருந்துக்கு காவலாக வைத்துச் சென்றாலும் ஒரு வாய் யாருக்கும் தெரியாமல் உண்ண மாட்டார்கள்.

ஒற்றை வார்த்தையில் தர முடியாது என சொல்லிவிட்டால் தங்கைக்கு என்ன செய்து பசியாற்றுவது என பத்து வயது பையன் கவலைக் கொண்டான்.

வயதுக்கு மீறிய சுமை தான் இது, எந்த கவலையும் இல்லாமல் துள்ளி விளையாட வேண்டிய வயதில் வறுமையின் மறுப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் வயதில் இருக்கும் விஜயநந்தனுக்கு பசி என்றால் என்ன என்றுக் கூட தெரியாது, அவன் சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் போது துரத்தி துரத்தி உணவை ஊட்டுவார் கிருஷ்ணம்மாள்.உடனே அதை துப்பி உணவை வீண் செய்வான் 

எப்போதுமே வேண்டாம் என சொல்பவருக்கும் அதன் அருமை தெரியாதவர்களுக்கும் தான் கடவுள் கேக்காமலையே வாரி  வாரி வழங்குவார்.

"எத்தனை வேணும்" என்றார் கடைக்காரர்.

அந்த தெருவில் தான் வளவன் குடும்பம் இருந்ததால் ராஜி பணம் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது, எனவே பயபடாமல்  வளவன் கேட்டதைக் கொடுக்க முன் வந்தார்.

"ஹா ஒன்னு போதும் அண்ணா.."

"ஒன்னு எப்பிடிடா போதும். ரெண்டு வாங்கிக்கோ உங்க அம்மா எப்ப வந்து நீ எப்போ சாப்பிடறது உனக்கும் சேர்த்தே வாங்கிக்கோ."

"இல்லை அண்ணா எனக்கு பசிக்கல, பாப்பாவுக்கு மட்டும் குடுங்க அண்ணா, அவ தான் பசி தாங்க மாட்டா" என்றவனுக்கும் பசி தான்,

வாங்குவதே கடன் அதில் எவ்வளவு தான் வாங்குவது என அந்த வயதிலையே வளவனுக்கு சுயமரியாதை எட்டிப் பார்த்தது.

"என்னமோ இந்த வாங்கிக்கோ" என ஒரு பிஸ்கட் பாக்கெட்டை நீட்ட அதை வாங்கி பிரித்து நிலாவின் கையில் கொடுத்தான்.

"வா அம்மு போக போக சாப்புட்டுக்கலாம் அம்மா வந்துட்டா காணாமன்னு தேடுவாங்க" என்று சொல்ல, அந்த சின்ன மழலை தலையை ஆட்டி அண்ணன் கைக்குள் அடங்கிக் கொண்டது.

அண்ணன் தங்கை பாசம் என்பது அலாதியான ஒன்று. அண்ணனும் தங்கையும் அடித்துக் கொண்டாலும் அழகு, பாசம் காட்டி ஒருவருக்காக மற்றொருவர் பரிதவித்தாலும் அழகு, அண்ணனுக்கு தங்கை  இன்னொரு அம்மா என்றால், தங்கைக்கு அண்ணன் இன்னொரு அப்பா.வளவன் நிலாவிற்கு இன்னொரு அப்பாவாக தான் இருந்தான்.

"அண்ணா இந்த இந்த எடுத்துக்கோ"  என தன் கையில் இருந்த பிஸ்கட்டை வளவனின் வாயில் திணிக்க.

எனக்கு வேண்டா அம்மு 

இருவரும் வீட்டிற்கு வந்துப் பார்க்கும் போதும் ராஜி வந்திருக்கவில்லை,ஆனால் கையில் உணவு டப்பாவுடன்  யுகி தான் நின்றிருந்தான்.

"என்ன யுகி?".

"எங்க போனீங்க?" என்றவன் கண் நிலாவின் கையில் இருந்த பிஸ்கட்டின் மீது போக.

"அம்மு யுகிக்கு பிஸ்கட் தா.. எது சாப்பிட்டாலும் குடுத்துட்டு சாப்பிடணும்னு அம்மா சொல்லிருக்காங்கள".

"இந்தா" என நிலா யுகியைப் பார்த்து கையை நீட்ட,

"நான் இதை எடுத்துக்கணும்னா நீ இந்த சாப்பாடை சாப்பிடணும்".

"வேண்டா யுகி திரும்பவும் உங்க பாட்டி சத்தம் போடுவாங்க, இப்போதைக்கு அம்முக்கு இந்த பிஸ்கட்டே போதும்" என்றான்.

வளவனுக்கு எப்போதும்  ஒரு சுயமரியாதை இருக்கும் அவர்களுக்கு ராஜி வேலை செய்யும் போதுக் கூட   அவர்கள் இடத்தில் கை ஏந்தக் கூடாது என்று எண்ணுவான்.இப்போ தங்கையின் பசிக்கு உணவு கொடுக்காதப் போது எதற்காக அவர்களிடம் கை ஏந்தப் போகிறான்.

"அப்போ உனக்கு ஆயா மேல தானே கோவம், இது அம்மா செஞ்சது சாப்பிடு ப்ளீஸ். பூனை பசியா இருப்பா" என யுகி அழத் தொடங்கிவிட

அவனுக்காக வாங்கிக் கொண்டான் வளவன்.

மூவரும் ஒன்றாக ஒரேத் தட்டில் சாப்பிட்டனர்.

நிலா, வளவன் மடியில் இருந்துக் கொண்டே  யுகி வாயை திறக்க திறக்க அவனுக்கு கொடுத்தாள்.

வளவன் தன் தங்கைக்குக் கொடுத்தான்.

யுகி சிரித்துக்கொண்டே நிலாவின் கையில் வாங்கி வாங்கி சாப்பிட்டான்.பணம் கொடுக்க தான் பணக்காரனாக இருக்கவேண்டும் பாசம் கொடுக்க எதுவுமே தேவையில்லை.நிலாவும் வளவனும்  பாசத்தில் பணக்காரர்களாக இருந்தனர்.

இரண்டு மணி நேரம் கழித்து தான் ராஜி ஆட்களுடனும் கூரை மேயும் கரும்புத் தோகையுடன் வந்தார்.

கரும்புத் தோகையில்  ஓரிரண்டு  கரும்புகளும் வரும். வளவன் அதை தேடி எடுத்து யுகிக்கும் நிலவிற்கும் கொடுத்துவிட்டு தானும் உண்டான்.

இதை எல்லாம் ஒரு வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் நந்தன்.

"அம்மா"

"சொல்லு வளவா"

"நீ வர நேரமாகிடுச்சுன்னு கடைக்காரன் அண்ணாகிட்ட ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினேன். அதுக்கு காசு குடுக்கணும்மா"

"எதுக்கு சாமி வாங்கின?"

"பாப்பா பசிக்குதுன்னு சொல்லுச்சும்மா" என்றவன்  கிருஷ்ணம்மாள் நடந்துக் கொண்ட விதத்தை சொல்லவில்லை.

சின்னக் குழந்தைகள் பார்த்ததை அப்படியே சொல்லிவிடுவார்கள் வளவன் அதிலும் வித்தியாசமாக இருந்தான். சொல்வதால் நடந்தது இல்லை என்று ஆகிவிடாது, ஆனால் விஷயம் தெரிந்து தாயின் மனம் வேதனை அடையுமே என்பது தான் அந்த சிறுக் குழந்தையில் மனப் பக்குவமாக இருந்தது.

"இந்தா" என  தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்து வளவனிடம் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ஓடினான்.

"அண்ணா இந்தாங்க பணம்"  ஹா என மூச்சி இரைக்க

"இவ்வளவு அவசரமா கொடுக்காட்டி என்ன நீதான் ஊரை விட்டு ஓடிடுவியா இல்ல நான்தான் கடையை காலிப் பண்ணிட்டு போய்டுவனா.. ஏண்டா."

"அதில்ல அண்ணா  நான் கேக்கும் போது யோசிக்காம குடுத்தீங்கள, இல்லைன்னு சொல்லிருந்தா பாப்பா பசியோட இருந்துருக்கும்" என்றவனின் கன்னத்தை இருக் கைகளாலும் தடவி.

"கொண்டா"  என வாங்கிக் கொண்டார்.

அன்று இரவு யுகியை பள்ளிப்பாடத்தைப் படிக்கச் சொல்லிவிட்டு தன்  பெண் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் மணிமேகலை.

"அம்மா."

"என்ன நந்து?".

"எனக்கும் பசிக்குது"

"அதை ஏண்டா உன் அம்மாகிட்ட கேக்கற, நான் எதுக்கு இருக்கேன் தங்கம் வா போட்டுத் தரேன்" என நந்துவை மணிமேகலையிடம் அண்டவே விடாமல் அழைத்துச் சென்றார் கிருஷ்ணம்மாள்.

அதைப் பார்த்த மணி ஒரு பெரும்மூச்சி விட்டுவிட்டு தன் வேலையை தொடர..

அம்மா இதென்னாதுன்னு மிஸ் கேட்டுட்டு வரச் சொன்னாங்க சொல்லுங்கம்மா என பாடப் புத்தகத்தை அவரிடம் நீட்டினார்.

அதில்.

தீண்டாமை ஒரு பாவச்செயல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்

தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்

என எழுதியிருக்க இதை எப்படி 8 வயது சிறுவனுக்கு சொல்லிப் புரியவைப்பது என ஒரு நொடி கலங்கிநின்ற மணிமேகலை.

அடுத்த நொடியே தன்னை சமன் படுத்திக் கொண்டார் 


Leave a comment


Comments


Related Post