இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
டைட்டில் -1 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 13-02-2024

Total Views: 21536

இந்த புத்தாண்டுல  சந்தோசமான செய்தியோட வந்துட்டோம்.

நம்ப தளத்தின் தொடக்க விழாவைப் போட்டியோட கொண்டாடலாம்ன்னு ஓடி வந்துட்டோம்.

இது ஒரு பெயர் சொல்லாத போட்டிக் கதை. அண்ட்  காதலர் தினத்தை முன்னிட்டு கதையோட தீம் லவ் லவ் முழுக்க முழுக்க லவ் மட்டும் தாங்க .காதல் கதை மிக மிக ஆரோக்கியமான அழகான காதல் கதையா இருக்கனும்,

கதைக்குள்ள உங்களோட கற்பனை வளத்தை புகுத்தி புகுந்து விளையாடலாம்.

கணவன் மனைவி காதலாகவும் இருக்கலாம், திரில்லர் காதலாகவும் இருக்கலாம், சஸ்பென்ஸ் காதலாகவும் இருக்கலாம், மொத்தத்துல காதலா இருக்கனும் எங்கும் காதல் எதிலும் காதல்.

காதல் கதையில் ரொமான்ஸ் இருக்கலாம் அது விரசமில்லாமலும் யாரும் முகம் சுளிக்கா வண்ணமும் இருப்பது மிக மிக அவசியம்.

படைப்பு முழுக்க முழுக்க உங்களுடைய சொந்தக் கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும்.

கதை இதற்கு முன்பு எந்த தளத்திலும் வெளி வந்ததாக இருத்தல் கூடாது. முக்கியமாக சொந்தக்கதையாக இருக்க வேண்டும்.

ஒரு எபிசோடு தான் போட்டுருக்கிறேன் இங்கு தொடரலாமா என்றால்  கண்டிப்பாக கூடாது.

போட்டி பிப்ரவரி 14 தொடங்கி மே 31 நிறைவடையும்.மூன்றரை மாதக் காலம்.போட்டி நடைபெறும்

எக்காரணம் கொண்டும் போட்டியின் கால அளவு நீட்டிக்கப்படாது.

தள பாகுபாடு என்பது இல்லை யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம்.

நாங்கள் போட்டியை நேர்மையாக நடத்துவோம்  என உறுதியளிக்கிறோம், எங்கள் மீது நம்பிக்கை இருப்பின் போட்டியில் கலந்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர் விருப்பம் இருந்தால் போட்டி முடிந்தப் பின்பும் தளத்தில் இருக்கலாம், இல்லை என்றால் போட்டி முடிவுகள் அறிவித்தப் பிறகு ஒரு மாதம் கழித்து கதை நீக்கிக் கொள்ளலாம்.

போட்டியின் வெற்றி  நடுவர்களின் முடிவு வைத்து அறிவிக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெருபவர்களுக்கான பரிசுகள்.

முதல் பரிசு- 5000 ரூபாய் பரிசுதொகை,+ வெற்றி பெரும் புத்தகம் பிரியாமெகன் பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளியே வரும் + ஃபிரேம் செய்யப்பட்ட வெற்றி சான்றிதழ் வழங்கப்படும்.

இரண்டாம் பரிசு - 3000 ரூபாய் பரிசுதொகை.+ பிரியாமெகன் பதிப்பகம்  மூலம் புத்தகமாக வெளியே வரும் + ஃபிரேம் செய்யப்பட்ட வெற்றி சான்றிதழ்

மூன்றாம் பரிசு- 2000 ரூபாய் பரிசுத் தொகை
+பிரியாமெகன் பதிப்பகம்  மூலம் புத்தகமாக வெளியே வரும் + ஃபிரேம் செய்யப்பட்ட வெற்றி சான்றிதழ்

இதையும் தாண்டி ஆறுதல் பரிசுகளும் ஐந்து  பேருக்கு வழங்கப்படும்.

வாசகர்களுக்கு பரிசு இல்லாமலா.

போட்டி கதைகளை படித்து அதிகம் விமர்சனம்  செய்யும் சிறந்த வாசகர் இருவரை தேர்ந்தெடுத்து
தலா 1000 ரூபாய் பரிசுத்தொகையும், வெற்றி பெரும் புத்தகத்தின் அச்சு பிரதியும் வழங்கப்படும்

போட்டித் தொடங்கும் நாள். 14.2.2024

போட்டி முடியும் நாள். -  31.5.2024

போட்டியில் உங்களை 13.2.2024 வரை பதிவு செய்துக் கொள்ளலாம் 

கதை  35000  (அ)35k  (அ)முப்பதியைந்தாயிரம்  வார்த்தைகளுக்கு அதிகமாகவும், 
ஐம்பதாயிரம் வார்த்தைகளுக்கு மிகமாலும் இருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை நினைவுப் படுத்துகிறேன்

கதை முழுக்க முழுக்க காதல் கதையாக இருத்தல் வேண்டும் ரொமான்ஸ் இருக்கலாம் விரசம் இல்லாமலும் முகம் சுளிக்கா வண்ணமும் இருத்தல் அவசியம், எழுத்து பிழைகள் இருத்தல் கூடாது ஒன்னு ரெண்டு எழுத்துப் பிழைகளை ஏற்றுக்கொள்ளலாம் அதை தாண்டி பிழைகளை தவிர்த்துவிடுதல் நலம்.

அதிக எழுத்து பிழைகளின் இருப்பின் கதை எந்த அளவிற்கு  நன்றாக இருந்தாலும் அது வெற்றிக் கனியை எட்டுவது இயலாத ஒன்று என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள்.

Priyamehannovels@gmail.com என்ற மெயில் id க்கு  உங்கள் விவரங்களை அனுப்பி வைக்கவும்.

உங்களுக்கு என தனி மெயில் id கொடுப்போம் அதை வைத்து login பண்ணிக்கலாம்  எக்காரணம் கொண்டு தங்கள் பெயர் வெளியே தெரியக்கூடாது விதியை மீறி பெயர்கள் வெளியிடப்பட்டால் அவர்களை போட்டியில் இருந்து விலக்கிவிடுவோம் என்பதை உறுதியாக அறிவிக்கப்படுகிறது.



Leave a comment


Comments


Related Post