இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நிறங்கள் தந்த நிஜம் அவள் அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK015 Published on 14-02-2024

Total Views: 16989

நிறங்கள் தந்த நிஜம் அவள்!  1

ஆயிரம் கோவில்களில் நகரமான காஞ்சிபுரத்தில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ அரசானால் கட்டப்பட்டு இன்றும் நிமிர்ந்து நின்று பல்லவ கட்டிட கலையை உலகிற்கு எடுத்து காட்டும் படி அமைந்திருக்கும் கைலாச நாதர் கோவிலில் இன்னிசை முழங்க, தன் பிஞ்சு பாதத்தில் சலங்கை பூட்டி பூமிக்கு அன்னைக்கு வலிக்காமல் தன் பாதத்தை அழுத்தி ஊன்றி நடனம் ஆடி கொண்டிருந்தவளின் நாட்டியத்தில் நயம், தளம், நாதம் என்னவென்று அறியாதவர்களும் இசைந்து கரைந்துருகி கொண்டிருந்தனர்.

பால் நிலா போன்ற அவள் முகத்தில் குடியேறி நின்ற நயன பாவங்களும், மடக்கி நீட்டும் விரல் பிடிக்கும் அபிநயத்திலும், விழி வீசும் நவரசங்களிலும், இதழ் சிந்தும் மென்நகையிலும், வில்லாக வளைந்த நெற்றி புருவங்கள் நெளிவிலும், தங்க தூண் உடல் அசைவுகளிலும் மதி மயங்கியதை போல இமைக்கவும் மறந்து பெண்ணவள் நாட்டியத்தை பார்த்து கொண்டிருந்தனர். நிமிடங்கள் கரைந்து சென்றதை கூட அறியாமல் பார்த்து கொண்டிருந்தவர்கள் இறுதியாக அவள் நாட்டியத்தின் நிறைவில் உயிர் பெற்று கரவோசை எழுப்பினர்.

கரம் கூப்பி வணக்கம் கூறி நாட்டியத்தை முடித்தாள் ஆதிரா.. கலை தாயின் செல்ல பிள்ளை. ஐந்து வயதில் பூட்டிய சலங்கை  அவளோடு ஒட்டி கொண்டது. இருப்பத்தி மூன்று வயதிலும் சலங்கை கழற்ற மனமில்லாமல் நாட்டியத்தை காதலித்து வருகிறாள். அவள் முதல் காதல் நாட்டியம் தான்.

வயதுக்கு வந்த பெண்ணை பொது இடத்தில் ஆட வைப்பதா?? என்று அவள் பெற்றோர்கள் மறுக்க, ஆதிராவின் அண்ணன் கிருபா தான் அவர்களிடம்  பேசி நாட்டியம் மீது அவள் கொண்ட காதலை புரிய வைத்தான். அதன் பின் பெற்றோர்கள் எதிர் தெரிவிக்காத நிலையில் தன் நாட்டியத்தை தொடர்ந்தாள்.

இப்போது முதல் வரிசையில் அமர்ந்து கை தட்டி மகள் நாட்டியத்தை கண்டு ரசித்தனர். மேக்கப் அறைக்கு சென்ற அவள் தாய் சங்கவி மகளை அணைத்து கொண்டார். "வழக்கம் போல சூப்பர்.." என்றார்.

"தேங்க்யு மா.." என்று அவளும் அணைத்து கொண்டாள்.

வாழ்த்துக்கள் கூறிய மற்றவர்களுக்கும் நன்றி கூறிவிட்டு தங்கள் வீட்டிற்க்கு புறப்பட்டு சென்றனர்.

ஆதிராவின் தந்தை முரளி முகத்தை தூக்கி வைத்து கொண்டு வர "என்னாச்சு ப்பா.. இன்னும் கோபம் போகலையா??" என்று கேட்க மிரர் வழியாக அவளை முறைத்து பார்த்துவிட்டு சாலையில் கவனம் செலுத்தினார்.

ஆதிராவிற்கு திருமணத்திற்காக வரன் பார்க்க எதுவுமே சரியாக அமைந்து வராத நிலையில் நேற்று பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையுடன் தனியாக பேச சென்றவள் என்ன சொன்னாளோ அவன் எனக்கு இந்த பொண்ண பிடிக்கல.. என்று ஓடிவிட்டான்..

"என்னாச்சு??" என்று கேட்க "இவன் மேல எனக்கு எந்த பீலிங்ஸ் இல்ல வரல.." என்றாள் கூலாக.

"சரி.. அதுக்கு ஏன் டி மாப்பிளை இப்டி ஓடுறான்.." சங்கவி புரியாமல் கேட்க "உங்க மேல எனக்கு எந்த பீலிங்ஸ் வரல.. ஆனாலும் நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?? நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வேற யார் மேலயாவது பீலிங் வந்துச்சுனா அவங்க கூட போயிருவேன்.. நீங்க தப்பா எடுத்துக்க கூடாது.." என்று கூற அதிர்ந்து போன மாப்பிளை ஓடியேவிட்டான்.

அதனால் வந்த கோபம் தன் முரளிக்கு. "ப்பா.. எனக்காக ஒருத்தன் இனிமே பொறக்க போறது இல்ல. எனக்குன்னு பொறந்தவன் என்ன தேடி வருவான்.. அவனுக்கே தெரியாம நான் அவனோட மனசுல இருப்பேன். அவனோட பார்வை, கற்பனை, நிழல், நிஜம் எல்லாத்துலயும் நான் இருப்பேன். அப்டி ஒருத்தன் என்ன தேடி வரும் போது நானே அவன் கை பிடிச்சு கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறேன்.. அதுவரைக்கும் ப்ளீஸ் மாப்பிளை பாக்குற வேலைய விட்டுடுங்க.." என்று கூற முறைப்பு பார்வையோடு தான் இருந்தார் முரளி.

"நல்லா இருக்கு ஆதி.. உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கிவேன்னு உன் அண்ணன் பிடிவாதமா இருக்கான்.. ஆனா நீ ஏதோ கற்பனைல பேசிட்டு இருக்க..  நீ சொல்ற மாதிரி எல்லாம் சங்க இலக்கியங்கல்ல வர்ற பாட்டுல தான் இருக்கும்.. நிஜத்துல இருக்காது.. நடக்காது.." என்றார் சங்கவி.

"நடக்கும் மா.. எனக்காக பொறந்தவன் கற்பனை, நிழல், நிஜம்னு எல்லாத்துலயும் நான் வாழ்வேன்.. என்ன தேடி வருவான்.. இல்ல நானே அவனை தேடி போவேன்.." என்றவள் மை பூசிய விழி மூடி சீட்டில் சாய்ந்து கொண்டு தனக்காக படைக்க பட்டவனின் வரவை நோக்கி கனவு காண துவங்கினாள்.

ஆதிராக்காகவே பூமியில் பிறப்பேடுத்த தூரிகை பிடித்த வல்லோன் தன் சித்திர கூடத்தில் ரசித்து ரசித்து ஒரு சித்திரத்தை வரைந்த கொண்டிருந்தான். அவன் பெயர் துருவன். பெரும்பாலும் அவன் ஓவியங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். பெயிண்ட் உபயோக படுத்தி வரைந்திருந்தாலும் கருப்பு வெள்ளையிலே அவன் ஓவியங்கள் வரைவதால் அவனுக்கு சார்க்கோல் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்ட பெயரும் உண்டு.

ஆனால் இன்று அவன் வண்ணங்களில் வரைந்து கொண்டிருக்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு ஏதோ தோன்ற அதை வண்ணங்களில் வரைந்த கொண்டிருக்கிறான். மூன்று மணி நேர வேலைக்கு பிறகு துணியால் கையில் பட்டிருந்த பெயிண்ட்டை துடைத்த படி அவன் வரைந்ததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தான். அது அழகிய பெண்ணின் உருவம். கருப்பு லாங் ஸ்கர்ட், சிவப்பு நிற டாப் அணிந்த பெண் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகளை பிடிப்பது போன்ற ஓவியம். அவள் காதணி முதல் கால் கொலுசு வரை நுனூக்கமாக வரைந்து வைத்திருந்தான்.

அவனுக்கே ஆச்சர்யம் தான். பெரும்பாலும் அவனுடைய ஓவியங்கள் தனிமை, விரக்தி, காதல் தோல்வி பற்றி தான் இருக்கும். ஆனால் இன்று அவனுக்கே தெரியவில்லை இந்த ஓவியம் ஏன் வரைந்தேன் என்று. அதற்கு எதிரில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தவன் அப்படியே உறங்கி போனான்.

மறுநாள் காலை அவன் தந்தை பாஸ்கர் வந்து எழுப்பும் வரை உறங்கி கொண்டிருந்தான். மகனை பார்த்தவர் சிறு புன்னகை இதழில். வருத்ததின் வெளிப்பாடாக வந்தது அந்த புன்னகை.. அவன் புஜம் பற்றி குலுக்க மெல்ல கண் திறந்தான்.

அவனுக்கு எதிரில் இரவு அவன் வரைந்த ஓவியத்தை கண்டு துணுக்குற்றவர் "நீ வரஞ்சியா??" என்று கேட்க ம்ம்.. என்று எழுந்து சென்றான்.

ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு. வண்ணங்கள் கொண்டு தன் மகன் வரைந்த ஓவியத்தை கண்டு. வெளிச்சத்திற்கு பயந்து இருளில் வாழும் தன் மகனின் வாழ்க்கையில் இனியாவது ஒளியும் வண்ணங்களும் வருமா?? என்ற எதிர்பார்ப்புகளும் ஏக்கமும் வந்து சென்றது.

குளித்து உடை மாற்றி வந்தவன் மேசையில் இருந்த உணவை பெயருக்கு கொரித்துவிட்டு சென்றான். தந்தை மகன் மட்டும் வாழும் இல்லம். கலசம் இல்லாத கோவில் போன்ற வீட்டை கண்டு அவனுக்கு வெறுமை தான்.

தந்தை மகனுக்குள் பெரிய ஒட்டுதல் இல்லை. இன்று பாஸ்கர் நல்ல தந்தையாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. குடிக்கு அடிமையாகி தினமும் போதையில் தான் வீட்டுக்கு வருவார். சிறு வயதில் அவர் வண்டி சத்தம் கேட்டாலே பயந்து நடுங்கி ஒளிந்து கொள்வான் துருவன். குடியோடு நிறுத்தாமல் வீட்டுக்கு வந்து மனைவி மகனை அடித்து துவைப்பார்.  அப்பா என்றாலே அவனுக்கு பயம். நடு நடுங்கி போவான்.

அவ்வப்போது போதையில் அங்கும் இங்கும் விழுந்து எழுந்து முகத்தை, கை, காலை உடைத்து கொண்டு வருவார். அவன் அன்னை சாவித்ரி தான் அவரை தூக்கி வந்து வைத்தியம் பார்த்து கவனித்து கொள்வார். உடல் நிலை சரியாகும் வரை வீட்டில் இருக்கும் அமைதி அதன் இருக்காது. மீண்டும் குடி, மீண்டும் சண்டை. சாவித்ரி தான் பாவம் தன் மகனுக்கு விழும் அடியையும் தான் வாங்கி கொள்வார்.

இது இப்படியே தொடர சாவித்ரி இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருந்தார்.  வழக்கம் போல குடித்துவிட்டு வந்த பாஸ்கர் அடித்து துவைக்க வயிற்றில் பலமாக அடி பட்டது. வயிற்றை பிடித்து கொண்டு அலறி துடித்தார் சாவித்ரி. அவர் அலறல் அதிகமாக இருக்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். வயிற்றில் பட்ட அடியில் குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்து போய்விட்டதாக கூறி குழந்தையை அறுவை சிகிக்சை செய்து வெளியே எடுத்தனர்.

இறந்த சிசுவை பார்த்து கதறி அழுதார் சாவித்ரி. அவரால் இந்த இழப்பை ஏற்று கொள்ளவே முடியவில்லை. குழந்தை நினைவிலே அழுது கரைந்தவருக்கு உடல்நிலை இன்னும் மோசமாக அடுத்த மூன்று மாதத்தில் உடல் நளிவடைந்து இறந்து போனார். துடித்து போனான் துருவன்.

எல்லாமுமாக இருந்த அன்னை இறந்த பின் அவன் முழுமையாய் மாறி போனான். தனிமையே அவனுக்கு துணையானது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல மனைவி இறந்த பின் குடியை விட்டு திருந்தினார் பாஸ்கர். ஆனாலும் துருவன் மனம் மாறவில்லை. அன்றிலிருந்து அவரிடம் ஒருவார்த்தை கூட பேசுவதில்லை.

ஒரே வீடு, ஒரே சமையல்  இரு மனிதர்கள் இருவேறு திசைகளில் என்று ஓடி கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை. அப்பா.. என்று ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும் மகனை போதையின் பிடியில் சிக்கி சீரழிந்த போது தொலைத்துவிட்டு இப்போது தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் சிறுவயது துருவனை தேடி கொண்டிருக்கிறார் பாஸ்கர்.

தன் ஆர்ட் கேலரிக்கு வந்தான் துருவன். இந்த மாதம் ஒரு ஓவியம் கண்காட்சி நடக்க இருப்பத்தால் அதில் வைக்க பட போகும் ஓவியங்கள் பார்வையிட்டான். ஆழமான அர்த்தம் உள்ள ஓவியங்களை தேர்வு செய்தான். எங்கு எந்த ஓவியம் இருக்க வேண்டும், எந்த அடிப்படையில் ஓவியத்தை அடுக்க வேண்டும் என தன் வேலையாட்களிடம் கூறினான். அவர்களும் அவன் உத்தரவை ஏற்று வேலையை கவனிக்க தன் பள்ளி ஓவிய ஆசிரியர் வேலைக்கு வந்தான்.

இருக்கமான முகம் சீராக செதுக்க பட்ட மீசை தாடி, டக்இன் செய்யாமல் விட பட்ட காட்டன் சட்டை, முட்டி வரை ஏற்றி விட பட்ட ஸ்லீவ், சிரிப்பை அறியாத இதழ்கள், மாநிறம், படிக்கட்டு வயிறு இல்லை என்றாலும் தொப்பை இல்லாத கட்டு கோப்பான தேகம். இது தான் துருவன். கலைந்த கேசத்தை  கோதி கொண்டு தன் வகுப்புக்குள் நுழைந்தான். எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு முதல் வகுப்பாக ஓவியத்தை சொல்லி கொடுத்தான்.

எளிமையாகவும், ஈசியாகவும் அவன் ஓவியம் வரைதலை சொல்லி கொடுக்கும் விதத்தில் குழந்தைகள் கூட இப்போதெல்லாம் ஓவியம் வரைந்து தள்ளினர்.

"நிறைய திறமை இருக்கு சார் உங்களுக்கு. நீ ஏன் ஆர்ட் காலேஜ் ஒர்க்க்கு அப்லே பண்ண கூடாது சக ஆசிரியர் ஒருவர் கேட்க தான் அனுபவித்த கசப்பான நிகழ்வுகளை நினைத்து பார்த்தவன் "இந்த வேலையே எனக்கு போதும் சார்.." என்று முடித்து கொண்டான்.

பற்று இல்லாமல் செல்லும் அவன் வாழ்க்கையில் பற்றுகோலாக பெண்ணவள் வருவாளா??

தொடரும்… 


Leave a comment


Comments


Related Post