Total Views: 26065
பாகம் 1
அந்த பெரிய மண்டபத்தில் ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார். “சுக்லாம் பரதரம்” தலையில் கொட்டிக் கொண்டு அடுத்தடுத்து வரிசையாக அவர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். மணப்பெண்ணும், மணமகனும் ஒன்றாக அமர்ந்து அவர் சொல்லி கொடுத்ததை எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். மணமகள் நிரஞ்சனா. மணமகன் செந்தில். கட்டம் போட்ட கூரை புடவை. காட்டன் தான் செந்தில் வீட்டு வழக்கம். அதிலும் கூட பேரழகியாக இருந்தாள் . அவனுக்கு அவளை பார்க்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் அவள் தலை குனிந்து அடக்கமாய் அமர்ந்திருந்தாள். முதன் முதலில் அவளை பார்த்த பெண்ணிற்கும் இவளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். அவளோ போர்ஷே காரில் வந்திறங்கியவள், பேண்ட் சட்டையின். மேலே பார்மல்ஸ் கோட் அணிந்திருந்தாள். ப்ளூ ஷர்ட்டும் ரோஸ் நிற. கோட்டும் அவளுக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. பெரியதாக மேக் அப் இல்லை. பார்மலாக இருந்தாள். அலுவலகத்தில் இருந்து வந்தாளா? அல்லது வேறு ஏதாவது மீட்டிங் போய் விட்டு வந்தாளா ? அப்போது கேட்க நினைத்தான். முடியவில்லை. அதற்குள் அவளுக்கு ஏதோ அவசர கால் வந்தது. கட் செய்தாள் . இவனிடம் கை குலுக்கினாள் . அழகாய் சிரித்தாள்.
“நான் நிரஞ்சனா. நீங்க செந்தில் ரைட் ?”
“எஸ்!”
அவள் பேசும் ஆங்கிலமும் தமிழும் எத்தனை அழகு?மீண்டும் மீண்டும் போன் வந்து கொண்டிருக்கவே வேறு வழி இல்லாமல் அட்டண்ட் செய்தாள் .போனில் அவளின் தோரணை பார்த்து சற்றே மிரண்டு போனான் செந்தில்.
‘இவ நமக்கு செட்டாவாளா ?’ யோசித்தான்.
போனை கட் செய்தவள் அவனிடம்,
“சாரி! கொஞ்சம் இன்வெஸ்டர்ஸ் கிட்ட பேசிகிட்டு இருக்கோம். அதான். சடனா ஒரு மீட்டிங் . நீங்க இப்ப எதுல வந்தீங்க?”
"பல்சர்"
"இப் யூ டோன்ட் மைண்ட் என்ன கொஞ்சம் ***இடத்துல டிராப் பண்ண முடியுமா?”
அவளை காபி ஷாப்பில் மீட் செய்யவென்று சென்று விட்டு அவளை வேறு ஒரு மீட்டிங்கிற்கு விட்டு விட்டு வந்தான். இருந்தாலும் ஏனோ மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி. இவள் நமக்கு சரியாக வருமா என்று யோசித்தவனுக்கு அவள் வண்டியில் பின்னே அமர்ந்து கொண்டதும் உலகமே மறந்து தான் போனது.
"சாரி! நாம் பேச கொஞ்சம் நேரமாகுமேன்னு காரை வீட்டுக்கு அனுப்பிட்டேன். அம்மாவுக்கு எங்கையோ வெளில போகனுன்னு சொன்னாங்க. இப்ப தேவை இல்லாம உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்”
"அதெல்லாம் பரவால்லங்க" கூச்சத்துடன் பதிலளித்தான். அவன் சொல்லவே இல்லை. உரிமையுடன் அவன் தோளை பிடித்துக் கொண்டாள் . அவள் சாதாரணமாக தான் இருந்தாள். இடம் சொன்னதும் அவன் மூளை அந்த இடத்திற்கு தானாகவே ஜி பி எஸ் போட்டுக் கொண்டது.
மங்கை பின்னே இருக்கும் போது மனம் மட்டுமா பறக்கும்?வண்டியும் சேர்ந்தே பறந்தது. அடுத்த பத்தே நாட்கள் . அப்போது பார்க்க ஆரம்பித்த மனம் இதோ அவள் கழுத்தில் மஞ்சள் சரடை கட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
"மாங்கல்யம் தந்துனா நேநா..."
மூன்று முடிச்சுட்டு அவளை மனைவியாக ஆக்கிக் கொள்ள ஆசை தான்.ஆனால் போட்டிக்கு அவனின் மூத்த தங்கை வந்து நின்றாளே 🤭இரு முடிச்சுகளை அவனும் மூன்றாவதை அவன் பெரிய தங்கையும் இட்டு முடித்தார்கள்.
அவளை தோளோடு அணைத்து நெற்றியில் குங்குமம் இட்டான். அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அவனுக்கும் தான். அவன் வைத்த பொட்டில் அவனே சுருண்டு போனான்.
"அண்ணா! ஐயறு பாக்கறாரு. நைட் முழுக்க சைட் அடி . இப்ப அடிக்கி வாசி"
நாத்தனார் சொன்னதில் நிரஞ்சனா லேசாக சிரித்துக் கொண்டாள் . ஏதேதோ சடங்கு செய்தார்கள்.
அப்போது அவளுக்கு ஒரு போன். கேட்டவள் முகத்தில் அத்தனை கலவரம். அமர்ந்திருந்தவள் அப்படியே எழுந்து விட்டாள் . அடுத்த பத்தாவது நிமிடம் உடை மாற்றி பேண்ட் ஷர்ட்டில் வந்து நின்றாள் .
நடப்பது ஏதும் புரியாமல் திகைத்து நின்றிருந்த அய்யரிடம் இருந்து மைக்கை வாங்கி,
“உங்க எல்லார் கிட்டையும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்னோட ஆபிஸ்., மூச்சு வாங்கி கொண்டாள் . என்னோட ஆபிசுல பயர் ஆக்சிடன்ட். நான் இப்ப ஒடனே போகணும். நீங்க எல்லாரும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. இருந்து சாப்பிட்டுட்டு போங்க. கண்ணாலேயே கணவனுக்கு சொல்லி விட்டு அவள் நண்பன் பாஸ்கருடன் வெளியேறி இருந்தாள் .
தொடரும்...........
வணக்கம் மக்களே!
நான் உங்கள் தோழி pmkk012. ஆரம்பமே கொஞ்சம் ஓவரா தான் போகுதுதோ?ப்ளீஸ் என்ன யாரும் திட்டாதீர்கள் .
அடுத்த பகுதிக்கு காத்திருங்கள்.
வசீகரன் வருவான்..,
Very nice start. Anal Antha ponu Marriage annikae ippadi vittuth oduthu... enna Vellai parkuthu.. Mappilai reaction thenjuka asai...