இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கொஞ்சி பேசி .. 01..2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK022 Published on 15-02-2024

Total Views: 23220




ஒரு முறை குடிக்க காசு கேட்டு கோமதி இல்லை என்று மறுத்ததும் கோமதிக்கு அடிக்க போகவும் இடையில் சக்திவேல் வந்து தந்தையை மறைத்து தடுத்து திட்டி தீர்த்தான்..



 சுந்தர்  என்ன நினைத்தாரோ தெரியாது அன்றோடு குடியையும் விட்டு அனைத்தையும் விட்டுவிட்டார்.. பத்மநாதன் செய்ய முடியாத ஒன்றை சக்தி செய்து விட்டான்..


 முதல் கோமதி கொஞ்சம் அடக்கி வீட்டில் வைத்திருந்தார்..


 கொஞ்சம் மாதங்களுக்குப் பின் மீண்டும் சுந்தரம் தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்..


சிறுவயதில் இருந்தே தந்தை குடித்து விட்டு சண்டை பிடித்து இப்படி  செய்வது சக்திக்கு பிடிக்காது..


 அதற்கு பொறுமை பறந்து இன்று தந்தைக்கு அவன் நினைத்ததை செய்து விட்டான்..


அன்றோடு அனைத்தையும் விட்டுவிட்டார் சுந்தரலிங்கம்..


ராமலிங்கத்திற்கு சந்தோசம் பிடிபடவில்லை.. முன்பு போல் நண்பனுடன் சந்தோஷமாக சிரித்து பேச ஆரம்பித்தார்..


 சுந்தரம் ஒரு ஆள் திருந்தி சந்தோசமாக சிரிக்க ஆரம்பித்ததும் இரண்டு குடும்பமுமே மிகவும் சந்தோஷமாக இருந்தது..


 அடுத்தடுத்து ராசாத்தி மல்லிகா திருமணம் நடைபெற்றது..


 அந்த குடும்பத்தில் ராசாத்தி தான் காலேஜ் வரை சென்று படித்து அங்கேயே சந்திரன் என்பவரை விரும்பி தாய் தந்தையின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்..


 மல்லிகா அந்த ஊரில் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்..

ராசாத்திக்கு ஒரு ஆணும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது..


 மல்லிகாவுக்கு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது..




 சக்திக்கு 25 வயதாக இருக்கும்போது அந்த கபடி போட்டியை ஆரம்பித்து வைத்தான்..


 சக்தியும் வெற்றியும் மாமன் மாப்பிள்ளையாக சந்தோசமாகவே சுற்றி திரிவார்கள்..


 சக்தி அயராத உழைப்பை கொடுத்து ஓரளவுக்கு நிலத்தை இன்னும் கொஞ்சம் விரிவுப்படுத்தினான்..


 அதில் கோமதிக்கு ரொம்பவே சந்தோசம்..


 மாமனாரின் பெயரை தன் மகன் காப்பாற்றி விடுவான் என்று நம்பினார்..


வருமானம் வருந்ததும் மூன்று அக்காவுக்கும் ஒரே போல் தீபாவளி சீர் பொங்கல் சீர் வருஷா வருஷம் கொடுக்க ஆரம்பித்தான்..



சக்தி வளர்ந்து வருவதை பார்த்த பார்வதி ஒரு முறை அவனை வீட்டுக்கு அழைத்து கண்டித்து அனுப்பினார்..


 மேகலா தான் பார்த்து வளர்த்த பெண் அவளுக்கு இனி சீர் செய்ய கூடாது என கட்டளையாகவே கூறினார்..


 இப்பொழுதுதான் சக்தி ஒரு அளவிற்கு வளர்ந்து வருகிறான் இன்னும் சீர் அது இது என பணத்தை அதிகமாக செலவழித்தால் அவன் உழைத்து முன்னேறுவதற்கு இன்னும் காலங்கள் எடுக்கும் எப்படி அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொடுப்பது இந்த கவலை அவருக்கு..



 வெற்றி நன்றாக படித்து அக்ரிகல்ச்சர் எடுத்து காலேஜில் அதையும் சிறப்பாக படித்தான்..


 சக்திக்கு வரும் சந்தேகங்கள் அனைத்தையும் சரியான முறையில் தீர்த்து வைப்பான்..


 விஸ்வநாதன் வெற்றியென அனைவரும் சக்திக்கு துணையாக நின்று தோள் கொடுக்கவும் சக்தியும் ஓரளவுக்கு கொஞ்சம் சுயமாக தொழில் செய்து அவனுக்கு கீழ் ஒரு ஐந்து பேரை வைத்து வேலை செய்யும் நிலைமைக்கு வந்து விட்டான்..



 அவனது ஆயிராத உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்த பார்வதியின் அத்தை மகன் தன் மகளை சக்திக்கு திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார்..



 தந்தையால் அந்த குடும்பம் பட்ட சீரழிவு போதாது என்று தந்தையின் குணத்தை பிரதிபலிக்கும் எதிர் பாலினமாக சக்திக்கு மனைவியாக வந்து சேர்ந்தாள் திவ்யா..



 திவ்யாவை முன்பே தெரிந்ததால் வெற்றி இந்த திருமணத்தை வேண்டாம் என்று தான் கூறினான்..  ஆனால் திவ்யாவின் அப்பா சக்தியின் காலில் மட்டும் தான் விழவில்லை அவ்வளவு கெஞ்சி கேட்டு அந்த திருமணத்தை செய்து வைத்தார்..



 திவ்யாவிற்கு வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை.. ஆனால் குடும்ப பொறுப்பு இல்லாத செல்லமாக வளர்ந்த ஒற்றைப் பெண்..


 திவ்யாவின் தாய் சிறுவயதில் இறந்து விட தந்தை செல்லமாகவே வளர்த்து விட்டார்..


 அவளுக்கு இந்த குடும்பம் கணவன் பிள்ளைகள் மாமியார் என ஒரு கட்டுக்குள் வாழ பிடிக்காது..



 லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற மகளை தன் உடல்நிலை காரணமாக வீட்டுக்கு வரவழைத்து உடனடியாக அவள் என்னவென்று உணரும் முன்பே சக்திக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்..


 முதலிரவு அன்றே திவ்யா கட்டன் ரைட்டாக சக்தி யிடம் கூறிவிட்டாள்..


‘ எனக்கு இந்த குடும்பம் வீட்டு வேலைகள் பொறுப்பு எதுவுமே செட் ஆகாது.. அதைவிட இந்த ஊரே எனக்கு பிடிக்காது.. நான் சுதந்திரமா சுதந்திர பறவையா சந்தோசமா எந்தக் கட்டுப்படும் இல்லாமல் வாழ விரும்புறேன்.. நீங்க கொஞ்சம் பொறுத்துக்கோங்க எங்க அப்பாவுக்கு உடல்நிலை சரியானதும் நான் இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலன்னு வீட்ல சொல்லிட்டு நான் போய்டுறேன் அதுக்கு அப்புறம் நீங்க வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழுங்க..’ என்றாள்..


அவள் கூறியது போன்று வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டாள்..  அந்த வீட்டில் வசதி குறைவால் அவள் பொருந்தி போகவே மிகவும் சிரமப்பட்டாள்..


 கோமதி மருமகளை மிகவும் அன்பாகத்தான் பார்த்துக் கொண்டார். ஆனாலும் ஒரு அளவிற்கு மேல் அவளது அட்ராசிட்டி தாங்க முடியவில்லை..



 நாகரிக உடையும் மேகப் போட்டுகொண்டு கையில் கேமராவையும் எடுத்துக்கொண்டு காலையில் எங்கே போவாள்.. எப்போது வருவாள் என்று தெரியாது.. அனைத்தையும் புகைப்படம் எடுத்து சந்தோஷமாக சுற்றி பார்த்துவிட்டு வருவாள்..



வேறு ஆண் தொடர்பு என்றும் அவளை பற்றி தவறாக கூற முடியாது.. அது அவளுக்குமே படிக்காத ஒன்றும் கூட..



 அவள் கட்டுப்படாத சுதந்திர பறவையாக இருக்க வேண்டும்.. அது மட்டும் தான் அவளுக்கு வேண்டும்..



திருமணம் ஆகி இரண்டு வருடத்தின் பின் ஒரு மழை நாளில் இதே போல் அவள் பக்கத்து ஊருக்கு சென்று சுத்தி பார்த்து புகைப்படம் எடுத்துவிட்டு தாமதமாக வீட்டிற்கு வரும்போது மழையில் நனைந்து அதிக காய்ச்சல் வந்து விட்டது..



காய்ச்சல் தாங்க முடியாமல் மிகவும் துடித்து துவண்டு விட்டாள் திவ்யா..


கோமதி கை மருந்து செய்தும் காய்ச்சல் குறையவில்லை..



சக்தி டவுனில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று காய்ச்சலுக்கு உண்டான மருந்தை வாங்கி வந்து கொடுத்து பார்த்தான் அப்பொழுதும் கேட்கவில்லை..


 அருகே படுத்திருந்த கணவனை திவ்யா நெருங்கி நெருங்கி வந்தாள்..


 அவனும் முப்பத்தி மூன்று வயது ஆண்மகன் தானே அவன் உணர்வை கட்டுப்படுத்தி பார்த்தான்.. அது முடியாது போய்விட்டதால் அவளின் அணைபில் அவனும் கட்டுண்டு அவளுடன் வாழ்க்கையை தாம்பத்தியம் மூலம் ஆரம்பித்தான்..



 அவனுக்கு குற்ற உணர்வாக  தான் இருந்தது காய்ச்சலில் நெருங்கி வந்தவளை இப்படி அவளுக்கு தெரியாத நேரத்தில் இப்படி பண்ணி விட்டோமே என்று..




 ஆனால் அவளுக்கு அப்படி இல்லை போல் முன்பு போலவே இருந்தாள்..



இரண்டு நாட்களுக்கு பின் ஒரு முறை அவனிடம் பேசினாள் ‘  காய்ச்சல் வந்த அன்னைக்கி என்ன நடந்தது என்று தெரியும்..  நான் எதையும் மறந்து போகல.. எதார்த்தமா நடந்தது. அதை போட்டு மனசுக்குள்ள கஷ்டப்பட வேண்டாம்.. இது ஒன்னும் என்னை பாதிக்காது..’ என்றாள்..


 அவனும் உடலால் ஒன்று சேர்ந்து ஆகிவிட்டது..  நீ மனதால் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என்று அவளுக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பது அவள் கேட்டதை செய்வது என சந்தோஷமாகத்தான் பார்த்துக் கொண்டான்..



 அனால் அவள் பிடியில் வீட்டை விட்டு போகும் நோக்கத்திலேயே இருந்தாள்.. எதுவும் அவனுக்கு விட்டுக் கொடுத்து இணைந்து போகவில்லை..



 அவளே எதிர்பாராத விதமாக  அவள் கருத்தரித்துவிட்டாள்..



 சக்திக்கு சந்தோசம் தாங்கவில்லை தனக்கும் ஒரு குழந்தை என்று நினைத்து பூரித்து போய்விட்டான்..


 வெற்றிடம் சொல்லிச் சொல்லி கொண்டாடி கொண்டாடி சந்தோஷப்பட்டு கொண்டான்..


தாய் மாமன் சந்தோஷத்தை பார்த்து அது நிரந்தரம் இல்லை என்று தெரிந்தாலும் தற்பொழுது அவன் இருக்கும் சந்தோசமான நிலையை அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம் என்று அதை விட்டுவிட்டான் வெற்றி..


 கோமதி மருமகளை நன்றாக தான் பார்த்துக் கொண்டார்.. திவ்யாவின் தந்தையும் வந்து மகளுக்கு சீர் செய்து அனைத்தையும் கொடுத்து சந்தோஷமாக பார்த்துவிட்டு சென்றார்..


 பார்வதியும் மேகலாவும் நன்றாகவே அவளை பார்த்துக் கொண்டார்கள்..


 ராசாத்தி மல்லிகாவும் கூட தம்பி மனைவியை பார்த்துக் கொண்டார்கள்..


 தம்பி பிள்ளை மகன் பிள்ளை என பிள்ளையை கருத்தில் கொண்டு திவ்யாவை பார்க்கவில்லை..

  தங்கள் வீட்டு மருமகள் என்று நினைத்துதான் அனைவரும் அவளை சந்தோஷமாக பார்த்துக் கொண்டார்கள்..  அந்த சந்தோஷத்தில் அவள் ஒரு சுற்று உடல் பெறுத்துதான் போனாள்.. 



 சக்தி திவ்யா தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது..


 குழந்தையின் முகம் சிரிப்பு அழுகை அசைவு என குழந்தையும் பார்த்து பார்த்து சக்தி மிகவும் சந்தோஷமாக இருந்தான்..



 வெற்றி மாமன் மகளுக்கு தன் பங்கிற்கு தோடு வளையல் கொலுசு என அனைத்தையும் வாங்கி போட்டான்..


 பார்வதி மேகலா என அனைவருமே நகையாக வாங்கி குவித்தார்கள்..



  ராசாத்தி மல்லிகா என அவர்கள் பங்குக்கு அவர்கள் செய்ய வேண்டியது செய்தார்கள்..


 சக்தி ஊரை அழைத்து விருந்து வைத்து மகளுக்கு காது குத்தினான்..


 ஆறு மாதங்கள் ஆகிவிட்டது மகள் நன்றாக பிறக்க வேண்டும் என்று அவன் வைத்த நேத்திக்கடனையும் செய்துவிட்டு இன்று விளையாட்டில் ஈடுபட்டு விட்டான்..



“ அப்பாடா ஒரு வழியா அந்த சுந்தரமும் திருந்தி மனுஷன் ஆகி இப்ப ரெண்டு குடும்பமும் சம நிலையில் இல்லை என்றாலும் சக்தி ஓரளவுக்கு சந்தோஷமாகவே வளர்ந்து வருகிறான் அப்படித்தானே?..”


“ அப்படியேதான்.. ”


“ ஆமாம் மாரி.. நீ ஆரம்பத்துல சொன்னியே இந்த விளையாட்டில் யாரு ஜெயிக்க போறான்னு உனக்கு எப்படி தெரியும்?. எதை வைத்து சொல்ற நீ..  எனக்கு என்னமோ ரெண்டு பேருமே தீவிரமாவே விளையாடற மாதிரி தோணுது..”


“ அட போப்பா காளி..  இப்பதானே இவ்வளவு கதை சொன்னேன்.. அவங்க ரெண்டு பேரும் மாமா மாப்பிள்ளை. ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொருவர் விட்டுக் கொடுத்து ஒருவர் ஜெயிப்பான்.. அதனால் இந்த வருஷம் சக்தி ஜெயிக்கும் முறை சக்தி தான் ஜெயிப்பான்..” என்றார்..


“ அட இது என்ன கொடுமையா இருக்கு..  அப்படி அவங்களே போட்டி வச்சு அவங்களே மாறி மாறி விட்டுக் கொடுத்து ஜெயிக்கிறதா இருந்தா எதுக்குப்பா இப்படி ஒரு போட்டியை வைப்பானே.. எதுக்கு ஒரு பரிசு தொகையை செலவழிப்பானேன்.. ” என்றார் காளி..



“ நாள் முழுக்க உழைத்து ஓடா தேயும் பிள்ளைகளுக்கு இப்படித்தான் சந்தோஷம் கிடைக்கும்.. அதனால அதை சந்தோஷமா கொண்டாடுதுக..”


“ ஆமா மாரி.. அக்கா பொண்ணுங்க இத்தனை பேர் இருக்கும்போது எப்படி சக்தி அந்த பொண்ண கட்டிக்க ஒத்துக்கிட்டான்.. ”



“ அது ஒரு பெரிய கதை எல்லாருமே ஒத்துக்களை தான் முன்னாடி..  ஆனா என்ன பண்ணுறது மல்லிகா தன்னோட பொண்ணுக்கு வயசு பத்தலன்னு கல்யாண பேச்சு எடுக்கல.. நந்தினிக்கு  கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க.. 
 ராசாத்தியோட பொண்ணு பட்டணத்தில் படித்த பொண்ணு அதனால அவங்களும் தம்பிக்கு கட்டிக் கொடுக்கணும்னு நினைக்கல போல.. எந்த ஒரு பிக்கல் புடுங்கலும் இல்லாம சந்தோஷமாவே சக்தியின் கல்யாணம் நடந்து.. 



 அதோ பாரு பொண்ணுங்க கூட்டணி இருக்கு பாரு..  அதுல அந்த பச்சை கலர் தாவணியும் மஞ்சள் கலர் பாவாடையும் குடுத்தி இருக்கே அந்த பொண்ணு தான் மல்லிகாவோட பொண்ணு  வானர கூட்டத்து தலைவி..



கோமதி துடுக்கான பொண்ணு தான் ஆனா பாட்டி துட்டுக்கு தனத்தையே மூன்று மடங்கா கொண்டு வந்ததுதான் மல்லிகாவோட பொண்ணு..



 இங்கே இவனுக்கு விரும்பி இப்படி விட்டுக் கொடுத்து ஜெயிக்கிறானுங்க..


ஆனா அங்க அந்த பொண்ணு இப்ப என்ன தெரியுமா செய்யும்.. எல்லாததுலயுமே போட்டி போடுற எல்லாரையுமே  அது தான் ஜெயிக்கணும்னு மிரட்டி பணிய வைக்கும்..” என்றார் மாரி..



 அவர் வார்த்தையை பொய்யாக்காமல் அவளும் அப்படியே தான் செய்து கொண்டிருந்தாள்..


ஒவ்வொரு வருடமும் தான் தன் மாமன் மற்றும் அண்ணன் கையால் பரிசு வாங்க வேண்டும் என்று கூறி அனைவரையும் விட்டுக் கொடுத்துடும்படி மிரட்டினாள்..


வழமை போன்று அவர்களும் சரி என்று தலையாட்டி விட்டார்கள்..



 மல்லிகா மிகவும் சத்தமாக தான் பேசுவார்..  தாயின் சத்தத்தையும் எடுத்துக்கொண்டு பிறந்தாலோ தெரியாது அவள் அருகே இருந்து பேசினாலே ஊருக்கே கேட்கும்.. அப்படி ஒரு சவுண்ட் ஸ்பீக்கர் அவள்..



 இப்படியே அனைத்தும் முடிந்து அனைவரும் எதிர்பார்த்த போட்டியின் முடிவுகள் வெளியாகியது..


 போட்டியில் சக்தி டீம் வெற்றி பெற்றது மாரி சொன்னது போல்..


 ஏனய போட்டிகள் அனைத்திலும் மல்லிகாவின் மகள் தான் வெற்றி பெற்றாள்..



அவள் வெற்றி பெற்ற விதம் தெரியாமல் சக்தியும் வெற்றியும் அவளைப் புகழ்ந்து பேசி பாராட்டி பரிசுக் பொருட்கள் மற்றும் அவளுக்கான பணத்தொகையையும் வழங்கினார்கள்..


சிரித்த முகத்துடன் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கீழே வந்தாள்..


 ஊர் திருவிழாவிற்காக ராசாத்தியும் குடும்பத்துடன் வந்திருந்தார்..


 இந்த மூன்று நாட்களாக சக்தி வீடு சத்தமாகவும் சந்தோஷமாகவும் நான் இருந்தது..


பார்வதியும் மேகலாவை அங்கே அனுப்பி வைத்தார்..



 அனைத்தையும் முடித்துவிட்டு சக்தி வெற்றி இருவரும் வீட்டுக்கு கூட வந்து விட்டார்கள்.. 


 ஆனால் மல்லிகாவின் வாரிசு இன்னும் வீடு வந்து சேரவில்லை..



 அப்பொழுதுதான் வீட்டுக்குள்ளே சென்று அவன் அறைக்கு சென்ற வெற்றிக்கு சக்தியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது..


 வீட்டு வாசல் படியில் கால் வைத்த சக்தியை மல்லிகாவின் அழுகுரலும் கோமதியின் அழுகுரலும் தான் வரவேற்றது..


 அத்தைக்கும் பாட்டிக்கும் போட்டியாக சக்தியின் மகளும் அழுதாள்..



 சத்தம் கேட்டு அனைவரும் வீட்டுக்கு முன்பு கூடி விட்டார்கள்.. 




 சக்தி வீட்டில் நடந்தது என்ன?..


 தெரிந்து கொள்ள கதையை தொடருங்கள்.. 
 

































Leave a comment


Comments


Related Post