இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 16-02-2024

Total Views: 30065

தான் சொல்லியிருந்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்னேயே வந்து காத்திருந்தாள் அபிலாஷா… நாளும் நேரமும் குறித்தது இவளாக இருந்தாலும் கேட்டது அபிநந்தனாயிற்றே..

ஆம்.. பார்வதியை மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீட்டிற்கு அழைத்து வந்த அபிநந்தன் சற்று முன்னர் அபிலாஷா அழைத்திருந்த எண்ணிற்கு அழைப்பு தொடுக்க ஏற்றவளுக்கு கனவில் இருக்கிறோமா? என்று கிள்ளிக் கொள்ள தோன்றியது.

“உங்களை நேர்ல பார்க்கனும்… எங்கே எப்போனு நீங்களே சொல்லுங்க…” என்று அவன் கேட்டிருக்க நாளை மறுநாள் வார இறுதி நாகரிகமாக குடும்பங்கள் வந்து செல்லும் உணவு விடுதி ஒன்றினை கூறி வரச் சொல்லி இப்போது அவனுக்கு முன்பு வந்து காத்திருந்தாள்.

அவள் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த அபிநந்தன் “சாரிங்க லேட்டாயிடுச்சா?” என்று கடிகாரத்தை பார்க்க

“நீங்க சரியான நேரத்துக்கு தான் வந்தீங்க.. நான் தான் கொஞ்சம் இயர்லியா வந்துட்டேன் மிஸ்டர் அபிநந்தன் உட்காருங்க..‌ என்ன சாப்பிடுறீங்க?” அபிலாஷா கேட்க

“எனிதிங்… யுவர் விஷ்.. மிஸ்.அபிலாஷா..” என்று சொல்ல

“இப்போ பார்ஷனலா தானே பேச கூப்பிட்டீங்க?” அபிலாஷா சந்தேகமாக கேட்க

“ஆ.. ஆமா..” என்று அபிநந்தன் தயங்க

“அப்போ ஏன் மிஸ்.அபிலாஷானு ஃபாரமலா கூப்பிடுறீங்க… யூ கேன் கால் மீ ஜஸ்ட் அபிலாஷா ஆர் அபி..” என்று அவள் சொல்ல சினேக சிரிப்பை உதிர்த்தவன் 

“நீங்கதான் முதல்ல மிஸ்டர்னு கூப்பிட்டு தொடங்கி வைச்சீங்க” என்று சிரிப்போடு சொல்ல


“ம்ம்… பரவாயில்ல நல்லாவே பேசுறீங்க… சரி சொல்லுங்க திடீர்னு கால் பண்ணி மீட் பண்ண கேட்டீங்க?” என்று வந்த நோக்கம் கேட்டிட

“அது வந்து அன்னைக்கு நீங்க செய்த உதவிக்கு தாங்க்ஸ் சொல்லத்தான்…” என்று அபிநந்தன் சொல்ல 


“அதான் அன்னைக்கே அத்தனை தாங்க்ஸ் சொன்னீங்களே… அதுவும் நீங்க இவ்வளவு தாங்க்ஸ் சொல்ல நான் பெரிசா எதுவுமே பண்ணலையே…” இலகுவாக தோளை குலுக்கி அவள் சொல்ல

“அப்படி இல்லைங்க… எனக்கு எல்லாமே அம்மாவும் தங்கச்சியும் தான்… அவங்களுக்கு நீங்க அந்த டைம்ல ஜஸ்ட் தண்ணீ தெளிச்சு எழுப்பி விட்டு போயிருக்கலாம்..‌ ஆனா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் நான் வர வரைக்கும் தங்கச்சி கூடவே இருந்து… எனக்கு இது பெரிய உதவி தான்…” அபிநந்தன் சொல்ல

“உண்மையை சொல்லட்டுமா அபிநந்தன்… உங்க குடும்பத்துல இருக்கிற இந்த பாண்டிங் தான் என்னை ரொம்ப இம்ரஸ் பண்ணுது… அதனால்தான் உங்களை பார்த்து பேச ஆஃபிஸ் வந்தேன்” அபிலாஷா சொல்ல 

“பொதுவா குடும்பங்கள் இப்படித்தானே இருக்கும்… அதென்னங்க உங்களுக்கு என்கூட ஃப்ரண்ட்ஷிப் வைச்சுக்க அப்படி ஒரு ஆசை..” அபிநந்தன் ஆச்சரியமாக கேட்க

“உங்ககூட மட்டுமில்ல உங்க மொத்த ஃபேமிலி அஃபெக்ஷனும் எனக்கு பிடிச்சிருந்தது… ஏன்னா எனக்கு இந்த மாதிரி குடும்பம் இல்லையேனு ஏங்க வைச்சது… அதான்…” 

“ஏன் உங்க ஃபேமிலி…?” அதற்கு மேல் கேட்க அபிநந்தன் தயங்க

“ம்ம்… இருக்காங்க அவங்க குடும்ப கௌளரவத்தை அவங்களோட பிஸ்னஸ் எல்லாம் கட்டிக்காக்க ஒரு ரோபோட் மாதிரிதான் வளர்த்தாங்க என்னை… அதனால்தானோ என்னவோ இப்படி வெளிப்படையான பாசத்தை காட்ற உங்க குடும்பம் மேல ஒரு ஈர்ப்பு…” என்று அபிலாஷா சொல்லிக் கொண்டு இருக்க அமைதியாக கேட்டுக் கொண்டான்.

“தன்னோட பையன் கஷ்டப்படுவான்னு செலவுகளை சுருக்க நினைக்கிற அம்மா.. ஆனா தங்கச்சி ஆசைப்பட்டதை அவ கேட்காமலேயே நிறைவேத்தி வைக்கிற அண்ணன்… இதெல்லாம் புதுசா இருந்தது. 

எனக்கு நிறையவே ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. எல்லாரும் என் ஸ்டேட்டஸ் பார்த்து பழகுறவங்க… ஒருசிலர் அவங்க உண்மையாவே என்மேல காட்டுற அன்புல நான் அவங்களோட க்ளோஸா பழகுவேன்… என்னதான் என்னை அவங்க குடும்பத்தோட சேர்ந்து நேசிச்சாலும் நான் அவங்க குடும்பம் இல்லையே… ஆனா உங்களை நான் பார்க்கும் போது நானும் ஒருத்தியா வாழனும்னு ஆசை வந்தது…” என்று அவள் சொல்லிக் கொண்டே போக

“ஒருநிமிஷம்…” என்று பேச்சை இடைநிறுத்தினான் அபிநந்தன். 

“என்னங்க என்னென்னவோ சொல்றீங்க? குடும்பத்துல ஒருத்தியா? எனக்கு புரியல அபிலாஷா…” அவன் குழப்பமாக கேட்க

“ம்கூம்…” என்று மூச்சை இழுத்து விட்டாள் அபிலாஷா

“யெஸ் அபிநந்தன்.. நான் உங்களை லவ் பண்றேன்.” என்று தெளிவான குரலில் உடைத்து சொல்லியிருக்க அபிநந்தன் அதிர்ந்து பார்த்தான்.

“வாட்? லவ்வா… அபிலாஷா என்ன பேசிட்டு இருக்கீங்க? ஜூவல்லரி ஷாப் ஆஃபிஸ் ஹாஸ்பிடல் இப்போ இங்க… மொத்தம் நாலு தடவை என்னை பார்த்திருப்பீங்க அதுக்குள்ள லவ் அதுஇதுன்னு..‌.” என்று கடுமையான குரலில் கேட்டான் அபிநந்தன்.

“இதிலென்ன தப்பு நந்தன்? நாம ஒருத்தரை எத்தனை முறை பார்த்தோம்னு தேவையில்ல அவங்க எந்தளவுக்கு நம்ம மனசுல பதிஞ்சாங்க என்பது தான் முக்கியம்… என் வாழ்க்கையில இனி ஒவ்வொரு நாளும் உங்களோட தான் இருக்கனும்னு என் மனசு உறுதியா நம்புது…” கண்கள் மின்ன கூறியவளை ஆச்சர்யமாக பார்த்தான் அவன்.

“இதோ பாருங்க இப்போ உங்களுக்கு ஏதாவது அட்ராக்ஷன்ல அப்படி தோணலாம்… இது நிரந்தரம் இல்லை.” என்று அவளுக்கு புரியவைக்கும் படி கூற

“ஜஸ்ட் ஏஜ் அட்ராக்ஷன்ல உளறும் அளவுக்கு நான் ஒன்னும் டீனேஜ் கேர்ள் இல்ல அபிநந்தன்… படிச்சு முடிச்சிட்டு உலக நடப்பை புரிஞ்சவதான்… அத்தோட ஒரு கம்பெனி ரன் பண்ற அளவுக்கு திறமை இருக்கு.” என்று அவனுக்கு தெரிவு படுத்தும் விதமாக சொன்னவளை

“ஓ…” என்று உதட்டை வளைத்து பார்த்தான் அபிநந்தன். அப்போ கம்பெனி ரன் பண்ற வேலையை நல்லபடியா பாருங்க… கேலியாக சொல்ல

“ம்ம்.. பரவாயில்லை அபிநந்தன்… யமுனா இன்டஸ்ட்ரீஸ்… கேள்வி பட்டுருக்கீங்களா? அது என் அம்மா பெயர்ல அப்பா துவங்கின கம்பெனி… இப்போ அதோட சேர்மன் நான்தான்” என்று விழிகள் மின்னும் புன்னகையோடு அபிலாஷா சொல்ல விழி விரித்து வியந்தான் அபிநந்தன்.

ஆம்… அவன் கேள்விப்பட்ட வரையில் யமுனா இன்டஸ்ட்ரீஸ் பெரிய நிறுவனம்… அதன் தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவது ஒரு பெண் என்று அறிந்திருந்தவன் அப்படிப்பட்ட அனுபவம் திறமையை எண்ணி வியந்திருக்கிறான். அத்தோடு தன் தங்கையையும் இப்படி திறமை வாய்ந்த பெண்ணாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் தான் தாய் அவள் கல்யாணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் தவிர்த்து தடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இன்று அவளே இவன் முன்பு… அதுவும் இவனை விரும்புகிறேன் என்று கூற ஆச்சரியம் தான்.. அதுமட்டுமின்றி அத்தனை பெரிய நிறுவனத்தை கட்டி ஆள்பவள் அன்பிற்காக யாசித்து தன்னை தன் குடும்பத்தை தேடி வந்திருப்பதாக கூறுவது வேதனையாக தான் தெரிந்தது..

‘ம்கூம்… பணம் இருப்பவர்கள் இப்படித்தான் போல’ என்று நினைத்துக் கொண்டு இருக்க

“என்ன அபிநந்தன் பேசமாட்டேங்கிறீங்க? தொழில் விஷயத்துல இதுவரைக்கும் தோல்வியே பார்க்காத சாதுர்யம் என்கிட்ட இருக்கு. அப்போ இது காதலிக்க தகுந்த வயசு தானே?” என்று கேட்டிட

“நான் ஒன்னு கேட்குறேன் தப்பா நினைக்காதீங்க… நான் இன்னும் சரியா செட்டில் ஆகாத சாதாரண மிடில் க்ளாஸ் ஆளு.. என்னை மாதிரி ஒருத்தனை எங்களுக்கு சமமானவங்களே அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல மாட்டாங்க… நீங்க எப்படி இவ்வளவு சர்வ சாதாராணமா சொல்றீங்க?” என்று அபிநந்தன் கேட்க வெற்றுச் சிரிப்பை உதிர்த்தவள்

“அதுக்கு எனக்கு அப்பா அம்மா இருக்கனுமே..” என்று சொல்ல 

“அப்போ உங்க ஃபேமிலி?” தயக்கமாக இழுக்க

“அதான் சென்னேனே… ப்ராப்பர்ட்டிஸ் எல்லாம் என் பெயர்ல இருக்கிறதால அதையெல்லாம் கட்டி காப்பாத்த வேண்டிய பொறுப்பு என்கிட்ட இருகிறதால அதுக்காக என்னை பாதுகாத்துட்டு வராங்க… 

அப்பாவோட தம்பி ஃபேமிலி தங்கச்சி ஃபேமிலி எல்லாரும் கூடவே தான் இருக்காங்க… ஆனா யார் சொல்ற பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிறேனோ அவங்களுக்கு தான் சொத்தெல்லாம் போகும்னு ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுட்டு இருக்காங்க..” விரக்தியாக சொல்ல அபிநந்தனுக்கு பாவமாக இருந்தது.

“பட்… இதோ பாருங்க அபிலாஷா நீங்க சொல்ற அளவுக்கு என்னால ஈசியா முடிவு எடுக்கவே முடியாது. ஏன்னா என்னோட ஃபேமிலி பேக்ரவுண்ட் வேற… எங்கப்பா இறக்கும் போது எங்க அம்மாவுக்கு முப்பத்திரண்டு வயசு கூட இந்த ஆகலை… அவங்க எனக்காகவும் என் தங்கச்சிக்காகவும் இந்த சமூகத்துல நிறைய போராடி இருக்காங்க. அதோட என் தங்கச்சி என்னை அவளோட அப்பாவா நினைச்சு வளர்ந்திட்டு இருக்கா… அவளோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். 

என்னால காதல் கீதல் னு சுத்தி அலைஞ்சு அவங்களோட எதிர்காலத்தை கோட்டை விட முடியாது.” என்று அபிநந்தன் பேசிக்கொண்டே போக முதலில் கூர்மையாக கேட்டவள் முடிவில் சிரித்திருந்தாள் அபிலாஷா. 

தான் எதுவும் தவறாக சொல்லி விட்டோமா என்று அவன் முழிக்க

“சாரிங்க…” என்று சிரித்ததற்கு மன்னிப்பு கேட்டு விட்டு “இல்லைங்க நான் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு ஏன் இப்போவே உங்களை உங்க குடும்பத்தை விட்டு வரச்சொன்ன மாதிரி பேசுறீங்க? 

அபிநந்தன் முதல்ல ஒருவிஷயம் புரிஞ்சுக்கோங்க… நான் விரும்பறது உங்களை மட்டும் இல்ல… உங்க அம்மா தங்கை உங்க குடும்பம் முழுசும் தான்.. நானும் அதுல ஒருத்தியா வாழனும்னு ஆசை படுறேனே ஒழிய உங்களை பிரிக்கிற எண்ணம் எனக்கு எப்போவும் இல்லை…

அத்தோட நாம உடனே கல்யாணம் பண்ணிக்க வேண்டும்னு சொல்லலை..‌ எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அந்த விருப்பத்தை உங்ககிட்ட சொன்னேன். அவ்வளவு தான்.” என்று முடித்தவளை விழி விரித்து பார்த்தான் அபிநந்தன்.

அவனுக்கு இதில் என்ன சொல்ல என்றே புரியவில்லை. உன்னை விரும்பவில்லை என்று சொல்ல தான் மூளை உரைக்கிறது. ஆனால் அவளிடம் மறுப்பு மொழி பேச மனம் ஏனோ தடுக்கிறதே… என்று குழம்பிப் போய் அமர்ந்திருந்தவனை நிகழ்விற்கு அழைத்து வந்தது குளம்பி மணம்.

“இந்தாங்க அபிநந்தன் வந்ததும் கேட்டேன் நீங்க சொல்லவே இல்லை அதான் நானே காஃபி ஆர்டர் பண்ணேன் குடிங்க..” இதுவரை பேசியதை யோசிக்க முடியாத வகையில் மிக இயல்பாக புன்னகையோடு பேசிய அபிலாஷா மீதிருந்த ஆச்சரியம் இன்னும் போகவில்லை அவனுக்கு… ‘என்னமாதிரியான பெண் இவள்?’ என்று குழம்பிய மனதை

“அதை அப்பறம் யோசிக்கலாம் முதல்ல காஃபியை குடி” என்று மூளை கட்டளையிட தனக்கு இந்த காஃபி தேவைதான் என்று எடுத்து உறிஞ்சினான் அபிநந்தன்.

தொடரும்….



Leave a comment


Comments


Related Post