இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கொஞ்சி பேசி .. 02..1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK022 Published on 16-02-2024

Total Views: 18513

ஓம் வேலனே சரணம்..


 அத்தியாயம் 02.


 சேத்துமடை ஊரை சேர்ந்த மற்றும் ஒரு பெரிய குடும்பம் அதாவது சத்தியநாதன் குடும்பம்..



 எவ்வளவு நவீனகரமான பொருட்கள் வந்தாலும் அந்த வீட்டில் பார்வதி ராமலிங்கத்தை திருமணம் செய்து வந்த போது இருந்த அதே சமையலறை இயற்கையான முறையிலேயே பின்பற்றி வருகிறார்..



 தற்பொழுது வெற்றிவேலின் அறையில் மட்டுமே ஏசி பொருத்தி உள்ளான்..


 முன்பு சத்தியநாதன் கிராமத்து பாணியில் கட்டியிருந்த வீட்டை ராமலிங்கம் ஓரளவுக்கு நவீனகரமாக மாற்றினார்..



 அந்த வீட்டில் என்னதான் மாற்றப்பட்டாலும் பூஜை அறை சமையலறை இரண்டும் பார்வதி விருப்பப்படியே இயற்கையான முறையில் இருந்தது..



சமையல் அறைக்கு தேவையான எத்தனையோ நவீனகரமான பொருட்கள் தற்பொழுது வந்துவிட்டது..


 பார்வதியின் சமையல் அறையில் இன்னமும் விறகடுப்பும் அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் மண்பானையில் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரும்..  தோட்டத்தில் இயற்கையாக அவர்கள் போட்டிருக்கும் மரக்கறி மற்றும் பழங்களின் தேவையானதை வீட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதுமாக இயற்கையான முறையிலேயே குடும்பத்தை இன்றும் பராமரித்து வருகிறார்..


 மேகலாவும் மாமியாரையே பின்பற்றினார்.. அதனால் அவருக்கு அது கஷ்டமாகவே தெரியவில்லை..


 ஆட்கள் எண்ணிக்கை கூடியதால் இப்பொழுது வேலை ஆட்கள் கொஞ்சம் தலை காட்டுகிறார்கள் அந்த வீட்டில்..



 முன்பு பார்வதி தான் அனைத்தையும் செய்து வந்தார்..

 மருமகள் அந்த வீட்டுக்கு வந்ததும் பார்வதி உதவி செய்ய  சமையல் வேலைகளை அனைத்தையும் மேகலாவே பார்த்துக் கொண்டார்..


 தற்பொழுது வேலையாட்கள் பார்வதியின் வழிகாட்டலில் அனைத்தையும் செய்வார்கள்..



 அப்படித்தான் அன்று இரவு உணவு லிஸ்ட்டை பார்வதி கூறியதை கலைவாணி கேட்டுக் கொண்டிருந்தாள்..


 வெற்றியைத் தவிர மற்ற அனைவருக்கும் ஒரே உணவு தான் வெற்றிக்கு படித்தமான பூரியும் அதுக்கு உருளைக்கிழங்கு மசாலாவும் செய்ய சொன்னார்..



 சத்தியநாதனின் சாயலை அப்படியே உரித்து வைத்து வெற்றி பிறந்திருப்பதால் அந்த வீட்டில் வெற்றிக்கு தான் எப்பொழுது முதலிடம்..


 அதனால் எப்போதுமே வெற்றியின் பேச்சு அந்த வீட்டில் எடுப்படும்..


“ ஏம்மா பொண்ணு வாணி  நான் சொன்னது எல்லாம் நல்லா கேட்டுகிட்டியா?..  வெற்றியும் மற்ற எல்லாரும் கோயிலில் இருந்து இப்ப வந்துடுவாங்க..   அதனால மாலை டிபன் பண்ணிட்டியா?.. எல்லாருக்கும் டீ போடு வெற்றிக்கு  காபி போடு.. அவன் வரும்போது சூடா காபி ரெடியா இருக்கணும்.. ” என்று கூறிவிட்டு பார்வதி அங்கிருந்து அவரது அறைக்கு கணவனை பார்க்க சென்று விட்டார்..


 வெற்றியும் அவன் அக்கா நந்தினியும் அவளது குழந்தைகள் மற்றும் வெற்றியின் முறைபெண் ஷாலினி.. அதாவது ராமலிங்கத்தின் தங்கை வசந்தகுமாரியின் மகள். இவர்கள் மட்டுமே விளையாட்டை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு கோவிலில் நின்று விட்டார்கள்..  மற்றவர்கள் அனைவரும் காலை பூஜை முடிந்ததுமே ஓய்வெடுப்பதற்காக வீட்டுக்கு வந்து விட்டார்கள்..



 பார்வதியின் வார்த்தை பலித்தது போல் அவள் காபி தயாரித்து தட்டில் அடுக்கும் நேரம் வெளியே வெற்றியின் சத்தம் கேட்டது..



 அவன் காரை விட்டு இறங்கியதும் அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் இறங்கி உள்ளே வர  காபி தட்டோடு அவர்கள் முன்பு வந்தாள் வாணி..


 முதல் வெற்றிக்கு காபியும் பலகாரத்தையும் தட்டில் வைத்து அவன் முன்பு போய் நீட்டினாள்..



 கைபேசியில் ஆழ்ந்திருந்தவன் முன்பு தட்டை நீட்டியதை வெற்றி கவனிக்காமல் கையை தூக்க தட்டு கீழே விழுந்து அவன் வெள்ளை வேட்டியில் காபி சூடாக கொட்டுப்பட்டது..



 காபி அவன் கையில் பட்டு நன்றாக  சூடு பட்டதால்  “ ஏய் அறிவில்ல இருடேட்டிங் இடியட்.. முன்னாடி வந்து நிற்கும்போது  கூப்பிட்டு வர தெரியாது?.. பாரு கைல சூடான காபி கொட்டி என் வேட்டி பாலா போயிடுச்சு.. இந்த வேட்டி எனக்கு ரொம்ப புடிச்சது நீ தான் கொஞ்சமும் கரை இல்லாம வாஷ் பண்ணி வைக்கணும்.. முன்னாடி மூஞ்ச காட்டிட்டு நிக்காம  இங்க இருந்து போடி…” என்றான் வெற்றி..



அவன் திட்டியதும் அவளுக்கு முகம் ஒரு மாதிரி போய்விட்டது..  ஆனாலும் தவறு தன் மேல் என்பதால் அவள் இந்த வீட்டுக்கு வேலைக்காரி என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு அங்கிருந்து கண்களில் கண்ணீர் வழிய சென்று விட்டாள்..



 எப்போதடா சான்ஸ் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வசந்தி புராணத்தை ஆரம்பித்தார்..



வெற்றியின் சத்தம் கேட்டு பார்வதியும் அங்கே வந்துவிட்டார்..


 வெற்றி கையில் கொட்டிய காபியால் சற்று கை பொங்கி இருந்ததை ஊதிக்கொண்டிருந்தான். அதை பார்த்து பார்வதியை பதறிப் போய் அவன் அருகே வந்தார்..


“ வெற்றி கையில என்னய்யா  ஆச்சு.. ஏன் சத்தம் அதிகமா இருக்கு..” என்றார்..


வெற்றி வாய் திறக்கும் முன்பே வசந்தி வாய் திறந்து விட்டார்..


“ அம்மா அதை ஏன் கேக்கற?..  இவன் தான் புதுசா  வேலைகேட்டு வந்தவளை வேலைக்கு சேர்த்து  இருக்கானே.. அந்த திமிர் பிடித்த கழுதை தான் இவன் கையில சூடான காபியை கொட்டிடுச்சு.. அதுதான் சொல்லுறேன் காலா காலத்தில என் பொண்ணு ஷாலினியை நீங்க வெற்றிக்கு கட்டி வச்சா அவ எல்லாத்தையும் சரியா பார்த்து வெற்றியையும் நல்லபடியாக கண்ணும் கருத்துமா பார்த்துப்பா.. அதை விட்டுட்டு அவனுக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்லாம இன்னமும் இந்த வீட்டுக்குள்ள வேலைக்காரின்னு பேர்ல சிலதுகளை உலாவ விட்டுட்டு இருக்கீங்க.. எல்லாம் உங்களை சொல்லணும்..  அவ  இந்த வீட்ல வேலைக்காரி மாதிரியா இருக்கா?.. எந்த ஊர் வீட்ல தான் வேலைக்காரிக்கு தனி ரூம் கொடுத்து சகல வசதியும் பண்ணி கொடுப்பாங்க.. மகாராணி அம்மாவுக்கு எல்லா வசதியுமே பண்ணி கொடுத்து வச்சிருந்தா அவளுக்கு கொழுப்பு இன்னும் அதிகமாக தானே செய்யும்..  அப்படி அவகிட்ட என்ன இருக்கு?..  ஏதோ கொஞ்சம் வாய்க்கு ருசியா சமைக்கிறா?.. அது மட்டும் தானே அதைத்தான் யார் வேண்டுமானாலும் பண்ணுவாங்களே.. இவதான் கட்டாயம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லையே.. ஏதோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் இனியாவது புத்தி இருந்தா நல்லபடியா யோசிச்சு நல்லது பண்ணுங்க..” என்றார் வசந்தி..



 வசந்தியை பக்கத்து ஊரில் திருமணம் செய்து கொடுத்த பத்து வருடத்திலேயே விபத்தில் கணவனை இழந்தபடியால் மீண்டும் தந்தை வீட்டில் வந்து இருந்து கொண்டாள்..

வசந்தி இங்கே வந்த கொஞ்ச நாட்களில் மேகலாவை மீண்டும் தொல்லை பண்ணியதை பார்த்து கண்டித்து வைத்தார் பார்வதி..



 அதன் பிறகு.  தான் இந்த வீட்டில் இருந்து  நினைத்ததை செய்து முடிக்க வேண்டுமானால் இப்படி சில்லறைத்தனமான வேலைகளை செய்யக்கூடாது என்ற முடிவை வசந்தி எடுத்ததால் மட்டுமே மேகலாவை தொல்லை பண்ணாமல் இருந்தார்..  இல்லையென்றால் யார் சொல்லியும் கேட்டிருக்க மாட்டார்..


 தன் மகள் ஷாலினியை எப்படியாவது வெற்றிக்கு திருமணம் செய்து வைத்து நிரந்தரமாக தன் விருப்பத்திற்கு சந்தோஷமாக வாழ்ந்து விட வேண்டும்  என்பதுதான் அவர் நினைப்பு..



 ஆனால் அதற்கு இன்னும் யாரும் பிடி கொடுக்காமல் இருக்கிறார்கள்..


 அண்ணன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்.. சாதி மதம் பார்த்து வெளியே யார் வீட்டிலும் பெண் எடுக்காமல் அனைத்து விதத்திலும் பொருத்தமான தன் மகளையே அண்ணன் தன் மகனுக்கு முடித்து வைப்பான் என்று 100% நம்பிக்கொண்டிருக்கிறார்..



 வசந்தியின் சிந்தனை சரி என்பது போல் அனைத்து விதத்திலும் நல்லவரான விஸ்வநாதன் ஜாதியும் பண வசதியையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்..



 சிறு வயதில் இருந்தே சத்தியநாதன்  பத்மநாதன் நட்பை பற்றி கூறி வளர்த்ததால் ராமலிங்கம்  சுந்தரலிங்கத்தோடு நல்லபடியாகவே நட்பாக இருந்தார்..



 தந்தை தாத்தாவின் நட்பை பார்த்து விஸ்வநாதனும் மணிமேகலை குடும்பம் அவர்கள் ஜாதி என்பதால் விளையாட்டு தோழியாக ஆரம்பித்த பழக்கம் திருமணத்தில் வந்து முடிந்து நல்லபடியாகவே அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்..



 அதனால் அவருக்குள் இருந்த ஜாதி வெறி இன்னமும் யாருக்கும் தெரிய வரவில்லை..


 விஸ்வநாதன் அந்த குடும்பத்தில் தலை எடுத்தபின் தன் தங்கை வசந்திக்கும் மகள் நந்தினிக்கும் அவர்கள்  ஜாதி மற்றும் வசதிக்கு ஏற்றவாறு மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்..



 அண்ணன் கூடவே இருந்து பழகியதால் தங்கை வசந்திக்கு மட்டும்  விஸ்வா குணம் தெரியும்.. அதனால் அதை தனக்கும் சாதகமாக பயன்படுத்த நினைத்தார்..



 அவர்கள் ஜாதிக்கு பெண் கிடைக்கும்..  ஆனால் பணத்தால் வசதியாக இருக்க போவதில்லை.. அப்படியே வசதியாக பெண் வந்தாலும் அவளுக்கு ஏதாவது ஒரு குறை இருக்கும்.. பழமை வாய்ந்த இந்த குடும்பத்தில் பொருந்தி போக கஷ்டமாக இருக்கும்..



 இப்படி அனைத்தையும் கணக்கிட்டு தன் மகளே இந்த குடும்பத்தில் மருமகளாக வரவேண்டும் என்று ஆசை கொண்டார்..


 அவர் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே..!


 அறைக்கு சென்ற வெற்றி குளித்து உடைமாற்றி விட்டு மீண்டும் அறைக்கு வரவும் அவன் கைபேசியில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது..



 அவன் தாய் மேகலாதன் அழைத்திருந்தார்..


 தாயின் அழைப்பை பார்த்து உடனே எடுத்து காதுக்கு பொருத்தினான்..



“ வெற்றி நீ எங்கப்பா இருக்க?..  உடனே சக்தி வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரமா வா வெற்றி.. இங்கே ஒரு பிரச்சனை ஆயிடுச்சு.. நீ அத்தை கிட்ட மட்டும் சொல்லி அத்தையையும் அழைச்சிட்டு வா.. ” என்று கூறிவிட்டு அவன் என்னவென்று கேட்கும் முன்பே அலைபேசியை துண்டித்து விட்டார்..



 பேசும்பொழுது அந்த பக்கம் கோமதி மற்றும் மல்லிகாவின் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தது..


ஓரளவுக்கு நடந்ததை  புரிந்து கொண்டவன் உடனடியாக கீழே இறங்கி சென்று பாட்டியை அழைத்துக்கொண்டு தன் மாமன் வீட்டிற்கு ஜீப்பில் வேகமாக வந்தான்..


அவன் வரவும் கோமதியும் மல்லிகாவும் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார்கள்..


 தாத்தா சுந்தரலிங்கத்துக்கு எதுவும் நடந்து விட்டதோ என்று தான் முதல் பயந்தான்..



 ஆனால் அவரோ யாருக்கு வந்த விருந்தோ என்று அந்த வீட்டில் நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார்..



 அவர் இருந்ததை பார்த்ததும் அப்படி என்றால் அவருக்கு ஒன்றும் இல்லை ஏன் இவ்வளவு சத்தம் என்று தெரியாமல் உள்ளே சென்றார்கள்..


அந்த வீட்டில் நடந்தவை இதுதான்..


 வழமை போல் திவ்யா காலையில் எழுந்ததும் கோமதி மருமகளுக்கு காபி கொடுத்து அவள் கொடித்ததும் அவள் குளித்து தயாராகி அவர்களுடன் காலை பூஜைக்கு கோயிலுக்கு கேமராவை எடுத்துக்கொண்டு சென்றாள்..


 கோமதி தான் பேத்தியை தன் கையில் வைத்திருந்தார்..


 பார்ப்பது அனைத்தையும் பிடித்திருந்தால் உடனே புகைப்படம் எடுக்க ஆரம்பித்தாள் திவ்யா..


 இப்படியே கோயிலுக்கு சென்று காலை பூஜை முடிந்து மற்றவர்கள் அங்கே இருக்க அவள் மட்டும் வீட்டுக்கு வந்து அவள் எதிர்பாத்த நேரம் வந்தது போல் உடைகளை மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டு அவள் தந்தை சீராக  கொடுத்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு கடிதத்தை எழுதி அவர்கள் அறையில் வைத்துவிட்டு அந்த வீட்டில் இருந்து சுதந்திர பறவையாக சுதந்திரத்தை தேடி சென்று விட்டாள்..


 குழந்தை உண்டானதில் இருந்து அவளுக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டு தான் இருந்தது..ஆனால் அதை கண்டுபிடித்து அதில் ஆழ்ந்து போனால் எங்கே தன் ஆசை லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்து நிறுத்திவிட்டாள்.. 


 குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் தான் கட்டாய உணவு என்று தெரிந்து கொண்டபடியால் பால் கொடுப்பதில் மட்டும் எந்த பிழையும் அவள் செய்யவில்லை..


 தினமும் குழந்தை பசிக்கு அழும் போது அவள் பால் மட்டும்தான் கொடுப்பது மற்ற அனைத்தையும் பார்த்து குழந்தையை கவனித்துக் கொள்வது கோமதி வேலை தான்..


 பால் கொடுக்கும் நேரங்களில் ஆழ்ந்து குழந்தையின் முகத்தை பார்த்தால் குழந்தையின் சிரிப்பு கை கால் அசைவு என அனைத்தும் அவள் மனதில் பதிந்து ஏதோ ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும்.. 


 இந்த உணர்வு தன் லட்சியத்திற்கு தடையாக வருமோ என்று பயந்து குழந்தை முகத்தை பார்க்காமல் தவிர்த்தாள்..


 அவள் லட்சியம் சிறந்த புகைப்பட கலைஞராக வேண்டும் என்பதுதான்..


 சிறுபிள்ளைத்தனமாக  சந்தோசமாக ஊர் சுற்றி பார்க்கும் ஆர்வத்திற்கும் இந்த வேலை ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு சந்தோசமாகவே அதை அனுபவித்து செய்தாள்..



 புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மகள் வெளி ஊர் சென்று ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொள்வாளோ?.  அல்லது திருமண வாழ்க்கையை அனுபவித்து வாழாமல் காடு மேடு என அலைந்து வயதை கழித்து விடுவாளோ?.  என்று பயந்து தான் அவள் தந்தை சக்திவேலின்  அன்பாக குணம் மற்றும் பொறுப்பை பார்த்து மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார்.. அவன் மகள் குணத்தை மாற்றி குடும்பப்பாங்கான பெண்ணாக திவ்யாவை மாற்றுவான் என்று நினைத்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்..


மகள் குழந்தை உண்டாகி இருப்பதை அறிந்து சந்தோஷமாக அவர்தான் பூரித்துப் போனார்..


குழந்தை வந்தால் மகள் தன் லட்சியம் ஆசை என்று அதை நினைத்துக் கொண்டிருக்க மாட்டாள் குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்வாள் என்று நினைத்தார்..


 இதோ அவர் நினைப்பையும் மகள் பொய்யாக்கி விட்டு வீட்டை விட்டு சென்று விட்டாள்..


 சக்தியின் அறையில் இருந்த மேசையில் கடிதம் ஒன்றை தெளிவாக தமிழில் எழுதி வைத்துவிட்டு தான் போயிருந்தாள்..


 குழந்தை பசிக்கு அழவும் கோமதி குழந்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து வீடு முழுக்க தேடி பார்த்து விட்டார் திவ்யாவை காணவில்லை..


 இன்னும் அவள் வீட்டுக்கு வரவில்லையோ என்று நினைத்து இடை நேரங்களில் குழந்தைக்கு கொடுக்கும் புட்டி பாலை கலந்து கொடுத்தார்..


 பாலை குடித்து நன்றாக உறங்கியதும் குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு மதிய சமையலுக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தார்..


 அப்போதுதான் இன்று அங்கு தான் அனைவருக்கும் உணவு என்பதால் கோமதியின் மூன்று பெண்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள்..


 ஆளுக்கு ஒரு வேலையாக வேகமாக செய்து மதிய சமையலையும்  முடித்து விட்டார்கள்..


மனைவியை விட்டு பிரிந்திருக்க முடியாமல்  விஸ்வநாதனும் நேரம் கிடைக்கும் பொழுது அங்கே வந்து செல்வார்..


 அப்போதுதான் குழந்தை அழும் சத்தம் கேட்டு ராசாத்தி மகள் சந்திரமதி குழந்தையை தூக்கி மடியில் வைத்து விளையாட்டு காட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்..


 வீட்டு மாப்பிள்ளைகளும் வர அனைவருக்கும் கோமதி உணவு பரிமாற எல்லாரும் சாப்பிட்டதும் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டார்..


இவ்வளவு நேரம் கடந்தும் திவ்யா வரவில்லை..    தினமும் இது அவள் பழக்கம் என்பதாலும் யாரும் அதை கணக்கில் எடுக்கவில்லை..


 மாலை நேரமும் வந்தது வீட்டுக்கு வந்த சக்தி அறைக்கு சென்று துணியை எடுத்துக் கொண்டு வந்து வெளியே கிணற்றடியில் குளித்துவிட்டு மீண்டும் உடையை மாற்றி விட்டு திரும்பும் பொழுது தான் அவன் கண்ணில் அந்த கடிதம் பட்டது..


அங்கே இருந்த கடிதத்தை எடுத்து படித்து பார்த்துவிட்டு அப்படியே சிலையாக கட்டிலில் அமர்ந்து விட்டான்..



 தம்பிக்காக காபியும் பலகாரமும் கொண்டு வந்த மல்லிகா தான் அவன் கையில் இருக்கும் கடிதத்தை பார்த்து அதை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு ஸ்பீக்கர் தொண்டையை வைத்து கத்தி வீட்டில் இருப்பவர்கள் மற்றும் ஊரில் இருப்பவர்கள் அனைவரையும் கூட்டி விஷயத்தை கூறிவிட்டார்..



 கோமதியும் மல்லிகாவும் சத்தம் போட்டு கத்தி ஒப்பாரி வைத்தார்கள்..


“ அடிப்பாவி மகளே..!  இந்த பச்சை மண்ணை விட்டுட்டு போறதுக்கு எப்படி மனசு வந்தது உனக்கு.. நீயும் ஒரு தாய் தானே..! இந்த பிள்ளை முகத்தை பார்த்து  கூடவா உனக்கு அந்த புள்ள பெருசா தெரியாம உன்னோட ஆடம்பர வாழ்க்கை உனக்கு பெருசா தெரியுது..



தாய் வாசம் மறக்காத பிள்ளையை தாய்ப்பாலுக்கும் தாய் பாசத்துக்கு தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்துட்டியே..

என் குடும்பத்தை இப்படி நிற்கதியில விட்டுட்டு போன நீ எங்க இருந்தாலும் நாசமாத்தான் போவ நல்லாவே இருக்க மாட்ட..


நீ எல்லாம் பெண் இனத்திற்கே கேடு சாபம்..


 என் குடும்பத்துக்கு கிடைத்த ஒரே ஒரு வரம் அவன்.. என் மகனோட வாழ்க்கை இப்படி இடையில நாசமாக்கிட்டு அறுத்துவிட்டு போயிட்டியே டி..



அப்படி என்னடி?.  உனக்கு கட்டுன புருஷன் பெத்த புள்ளைய விட லட்சியம் பெருசு.. ஆடம்பரம் பெருசுன்னு இருக்க உன்னை மாதிரியும் பொண்ணுங்க இந்த உலகத்துல இருக்காங்க தானே..” என்று ஒரு பக்கம் புலம்பி தள்ளினார் கோமதி..



ராசாத்தி பிள்ளையை கையில் எடுத்துக்கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தார்..


 மேகலா தாயின் அருகே இருந்து சமாதானம் கூறிக்கொண்டு இருந்தார்..


 அடுத்து மல்லிகா  அவர் பங்கிற்கு ஆரம்பித்தார்..


“ நாங்க இத்தனை பொண்ணுங்க இருந்தும் ஒருத்தர் கூட என் தம்பிக்கு பொண்ணு குடுக்குற நிலைமையில் இல்லாமல் போய்டோமே..


 எல்லாமே அவனை விட ரொம்ப சின்ன பொண்ணுங்களா இருக்காங்களே..


 ஒரு பொண்ணாவது அவனை கட்டிக்க ஏற்ற வயசுல இருந்திருந்தால் கட்டிக் கொடுத்துவிட்டு நாங்க எங்க குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்திருப்போம்..


இப்படி வெளிய இருந்து பொண்ணு எடுத்துட்டு வந்து அவள் இப்படி அறுத்துவிட்டு இடையில் போக வேண்டிய தேவையும் இல்லை..



 என் பொண்ணு கூட கொஞ்சம் பெரிய பொண்ண பிறக்காம போயிட்டாளே..

 என் தம்பிக்கு என்ன குறைச்சல் அவன் சிங்கக்குட்டி..


 அவனுக்கு இப்பயும் நான் நீன்னு பொண்ணுங்க போட்டி போட்டுட்டு வருவாங்க..


 போனவ உருப்படியான ஒரு வேலையை செஞ்சுட்டு போனாலே அது போதும்..

 அவனுக்கு நாங்க அடுத்த வாழ்க்கையை அமைத்து கொடுத்துடுவோம் சீக்கிரம்..


அவ இருந்தும் இந்த குடும்பத்துக்கு நல்ல மருமகளா?.  என் தம்பிக்கு ஒழுங்கான பொண்டாட்டியா?. என் மருமகளுக்கு ஒழுங்கான தாயாகவா?. இருந்தால்..


 அவ இல்லாதது இங்க யாருக்கும் இழப்பில்லை.. அவ போனதை நினைச்சு கவலைப்படாம விட்டது தொல்லைன்னு நினைச்சு அடுத்த வேலைய பாருங்க..


நாமதான் பிள்ளைக்கு புட்டி பால் கொடுக்க பழக்கி வச்சிருக்கோம் தானே.. அதையே கொடுத்து புள்ளையை நல்லபடியாக இத்தனை பேர் இருக்கோம் பார்த்துக்க மாட்டோமா என்ன?..” என்றார்  மல்லிகா..




Leave a comment


Comments


Related Post