இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கொஞ்சி பேசி .. 02..2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK022 Published on 16-02-2024

Total Views: 17698

அந்த கடிதத்தில் இருந்தவை இதுதான்..


‘ எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. விருப்பமே இல்லன்னு நான் எங்க அப்பா கிட்ட எவ்வளவோ சொல்லியும் எங்க அப்பா கேட்காம கட்டாயப்படுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டார்..


 கல்யாணம் பண்ணினா அன்னைக்கே நான் சக்தி கிட்ட எனக்கு இந்த கல்யாணம் புடிக்கல நம்ம சேர்ந்து வாழ்வது சரிவராதுன்னு என்னுடைய லட்சியம் எல்லாத்தையும் எடுத்து சொல்லி இருந்தேன்..


 அதையும் மீறி விபத்தா எங்க வாழ்க்கையை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்..


அதில் இரண்டு பேர் மேலயும் தவறில்லை இயற்கை செய்த சதி..


 எனக்கு இந்த குடும்பம் குடும்ப கூட்டுக்குள்ள கணவன் மனைவி குழந்தைகள் என்று வாழும் இந்த ஒரு வாழ்க்கை மட்டும் போதாது பிடிக்காது..


 ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வாழ என்னால முடியாது.. அதனால என்னோட லட்சிய பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன்..


 நான் இருந்தாலும் அங்கு யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லைன்னு எனக்கு தெரியும்..  நான் இல்லாட்டிலும் எல்லாரும் குழந்தையை நல்லபடியா பார்த்திருப்பீங்கன்னும் எனக்கு தெரியும்..  உங்க மேல இருக்க நம்பிக்கையில் இந்த விவாகரத்து பத்திரத்தில் நான் கையெழுத்து போட்டுவிட்டு  மன நிறைவோடு என் இலட்சியத்தை தேடி போகிறேன்..



 காலம் மீண்டும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு தந்தால் நான் என் லட்சியத்தை அடைந்த பின் மீண்டும் வரும்போது சக்தியை  குடும்ப ஆணாகவே பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..


சக்திக்கு தகுந்த பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைத்து குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்..


மீண்டும் எனக்கும் சக்திக்குமான வாழ்க்கை இனி இல்லை..


 ஒருமுறை கட்டாயம் உங்களையெல்லாம் பார்க்க வருவேனே  தவிர மீண்டும் இந்த வாழ்க்கையில் இணைய வரமாட்டேன்..


இன்று இல்லை இன்னும் பத்து வருடம் கடந்தாலும் கூட எனக்கு திருமண வாழ்க்கையில் பிடித்தம் வரப்போவதில்லை..


 நான் கையெழுத்து போட்டிருக்கும் விவாகரத்து பத்திரத்தில் சக்தியையும் கையெழுத்திட வைத்து அதை முறைப்படி கோர்ட்டில் நான் சுய நினைவோடு எழுதி வைத்துவிட்டு செல்லும் இந்த கடிதத்தை  சமர்ப்பித்தாலே கூடிய சீக்கிரம் சக்திக்கு விவாகரத்து கிடைக்கும்..


 மீண்டும் உங்கள் அனைவருடனும் வாழ்ந்த இந்த மூன்று வருட வாழ்க்கையில் என் தாயை நான் கோமதி அம்மாவின் வடிவில் பார்த்தேன்.. அவர் என்னை  சந்தோஷமாக நன்றாக பார்த்துக் கொண்டார்..

உங்கள் அனைவருக்கும் இதில் எதுவும் வருத்தம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி செல்லுங்கள்..’
என்று அந்த கடிதம் முடிந்திருந்தது..


 அதை படித்துவிட்டு அவர்கள் ஒப்பாரி வைக்கும் பொழுது தான் அங்கே நிலைமை சரியில்லை என்று தெரிந்து மேகலா உடனடியாக மகனுக்கும் மாமியாருக்கும் அழைத்து அவர்களை இங்கே வந்து இவர்களை சமாதானப்படுத்தும் படி கூறினார்..


 கடிதத்தை பார்த்தபின் அறையை விட்டு சக்தி வெளியே வரவே இல்லை..


 மல்லிகா கொடுத்த காபியும் பலகாரமும் அந்த மேசையில் ஆறிப்போய் இருந்தது..


 அங்கு வந்து சேர்ந்த பார்வதியும் மேகலாவிடம் நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டு வெற்றி உடனடியாக மாமனை சென்று பார்த்தான்.

 வெற்றியை பார்த்ததும் பாய்ந்து அவனை கட்டிக் கொண்டான் சக்தி..


“ திவ்யா இப்படி பொறுப்பில்லாம இருந்தாலும் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் டா வெற்றி..  ஆனா இப்படி திடீர்னு இடைல விட்டுட்டு போவான்னு நான் கனவுல கூட நினைக்கவேயில்லை.. இப்படி என்னை ஏமாத்திட்டாளே பாவி..!  நான் என்ன குறை வச்சேன் அவளுக்கு.. ” என்று கேட்டு அவன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவளுக்காக வடிந்தது..


“  விடு மாமா பார்த்துக் கொள்ளலாம்.. இது தெரிஞ்ச விஷயம் தானே..  உன் கல்யாணம் நடந்த அன்னைக்கே அந்த பொண்ணு இப்படி சொல்லுச்சுன்னு வந்து சொல்லிட்ட தானே .. அப்பவே நாம இதை எதிர் பார்திருக்கணும்..



 அப்பவே எனக்கு தெரியும் இது என்னைக்காவது ஒரு நாளைக்கு நடக்கும்னு.. ஆனா ஒரு குழந்தை வந்ததுக்கு பிறகு நடந்திருக்கு..  அந்த குழந்தையை நெனச்சு தான் எனக்கு கவலை..


 அந்த கவலையும் இனி எனக்கு இல்லை.. இப்பவே எனக்கு மனசுல ஒரு எண்ணம் தோன்றி இருக்கு..


 பார்ப்போம் சித்தி என்ன முடிவு எடுக்குறாங்கன்னு..


 வா எழும்பு சின்ன பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்காம முகத்தை தொடச்சிட்டு எழுந்து வந்து அம்மாச்சிக்கு பக்கத்துல இரு..


 நீ இப்படி கவலையா இருக்கிறதை பார்த்தா அவங்க இன்னமும் உடைஞ்சு போயிடுவாங்க..


 நடக்கிறது எல்லாம் நல்லதுன்னே நினைப்போம்.


 இந்த பொண்ணு மூலம் உனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து கடவுள் விடுதலை தான் தந்து இருக்கார்..


 எவ்வளவு காலத்துக்கு தான் அவங்க திருந்துவாங்கன்னு நீ காத்திருக்கிறது..


 அவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்னு கடவுளே முடிவெடுத்து தான் இப்படி பண்ணியிருக்காங்கன்னு நல்லதா எடுத்துக்கிட்டு கடந்து போவோம்..  இதுவும் நல்லதுக்கே தான்..” என்று பேசி பேசியே அவனை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான் வெற்றி.. 



 என்றாவது ஒரு நாள் குழந்தை குடும்பம் என்று வாழ ஆரம்பிப்பாள் என்று சக்தி காத்திருந்தான்..

 ஆனால் அவன் காத்திருப்பை பொய்யாக்கி விட்டு சென்று விட்டாள்..


 இவர்கள் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் வந்து என்னவென்று கேட்டு வாயில் கை வைத்துவிட்டு ஆளுக்கு ஒவ்வொன்றாக பேசிய விட்டு சென்றார்கள்..


விஷயம் கேள்விப்பட்டு திவ்யாவின் தந்தையும் வந்திருந்தார்..


 மல்லிகா தான் அவர் பெண்ணை வளர்த்திருக்கும் லட்சணத்தை  சுட்டிக்காட்டி திட்டினாள்..

பார்வதி தான் மல்லிகாவை கொஞ்சம் அடக்கி அமைதிப்படுத்தினார்..


 பார்வதி திவ்யாவின் தந்தையை வெளியே அழைத்து இங்கிருந்து செல்லும்படி கேட்டுக் கொண்டு அவரை அனுப்பி வைத்தார்..

 அவர் இன்னும் இங்கு இருந்தால் நிலைமை கை மீறி போய்விடும் என்று பார்வதிக்கு நன்றாக தெரியும்..


அதை தடுப்பதற்காகவே அப்படி செய்தார்..

 ஆளுக்கு ஒரு மூலையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருக்கும் பொழுது தான் 


 மல்லிகாவின் இளவரசி வீட்டில் நடந்த கலவரம் தெரியாமல் தோழிகளை மிரட்டி உருட்டி விளையாட்டில் ஜெயித்த பணத்தில் அவர்கள் மிரட்டலுக்கு பணிந்து அவளுக்கு விட்டுக் கொடுத்த காரணத்தால் அந்த பணத்தில் அவர்களுக்கு குல்பி ஐஸ் வாங்கி கொடுத்து  ரோடு முழுக்க குல்பியை குடித்து  அதை சட்டையிலும் தாவணியிலும் வடியவிட்டு அவர்களுடன் கதைத்து பேசி சிரித்து ஆறுதலாக ஊரை சுற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மல்லிகாவின் மகள் மலர்விழி..


தாய் மாமனை மிகவும் பிடிக்கும் ஆனால் அவன் அருகே நின்று பேச அவளுக்கு பயம்..


 அவனுக்கும்  அவளுடன்  நின்று பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை..


 அவள் வீட்டுக்கு வந்திருந்தாலோ பண்டிகை விடுமுறை நாட்களிலோ பார்த்தால் அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொடுத்துவிட்டு சிரித்து  இரண்டு வார்த்தை அவனே பேசிவிட்டு கடந்து சென்று விடுவான்..


 தாய்மாமன் என்ற எந்த ஒரு செல்லமோ விளையாட்டோ மலர்வழி வைத்துக் கொள்ள மாட்டாள்.. 

 வீட்டில் நடந்தவை தெரியாமல் சிரித்து குதித்துக் கொண்டு உள்ளே வந்த மகளை பார்த்து மல்லிகா எழுந்து வந்து அவளை அழைத்து தன் அருகே அமர்த்தி வீட்டில் நடந்தவற்றை புலம்ப ஆரம்பித்தார்..


 அதில் இருந்து அவள் தெரிந்து கொண்டது அத்தை வீட்டை விட்டு சென்று விட்டாள் என்பது மட்டுமே..


“ பாவி மகளே நீ ஏண்டி நான் கல்யாணம் முடித்த உடனே எனக்கு வந்து பிறக்காம போயிட்ட.. ஐந்து வருஷம் முன்னாடி பிறந்திருந்தால் நானே உன்னை என் தம்பிக்கு சந்தோசமா கட்டி கொடுத்து அவனோட வாழ்க்கையை நல்லபடியா அமைச்சு கொடுத்து இருப்பேனே..


 அவனுக்கு அந்த ஓடுகாலியோட கல்யாணம் நடக்கும்போது உனக்கு 15 வயசு தானடி..  நீ சின்ன பொண்ணா இருக்கவும் தானே நான் விட்டுட்டேன்..


நீ ஏன் இன்னும் அஞ்சு வருஷம் முன்னாடி பிறக்காம போயிட்ட.. ” என்று ஏதோ அப்படி பிறக்காமல் விட்டது அவள் தவறு என்பது போல் அவளை திட்டி பேசிக் கொண்டிருந்தார் மல்லிகா.. 


 மலர்விழியோ அவள் துடுக்குத்தனமான பேச்சால் அவள் வாழ்க்கையை சிக்கலாகி கொண்டாள்..



“ இப்ப மட்டும் என்னம்மா கெட்டுப்போச்சு..  எனக்கு தான் 18 வயசு ஆயிடுச்சு நான் ஏன் மாமாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது.. ” தாயின் எல்லா பேச்சுக்கும் எதிர் பேச்சு பேசுவது போல் இதற்கும் விளையாட்டாக எதிர்த்து பேசி விட்டாள்..


மகள் பேச்சால் உடனே அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு விட்டு அதை உடனே செய்யற்படுத்தினால் தம்பி வாழ்க்கையில் மீண்டும் ஒளி கிடைக்க போவதை உணர்ந்து மூன்று சகோதரிகள் மற்றும் கோமதி அவங்களுக்கு மேல் மாமனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று கவலைப்படும் வெற்றியின் கூட்டு சதியால் சுடச்சுட உடனடியாக  அவர்கள் நல்ல நேரத்திற்கு திருமணத்திற்கும் அது நல்ல நேரமாக இருக்க வேகமாக மல்லிகா சென்று  சக்தி வயலுக்காக அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்து பாட்டிலை கையில் எடுத்து கொண்டு தம்பியின் முன்னால் போய் நின்று அவர் நாடகத்தை அரங்கேற்றினார்..


சக்திவேல் மறுப்பு சொல்லியும் கேட்காமல் கோமதியும்  இணைந்து கொண்டு வெற்றியும் இல்லாதது பொல்லாதது எல்லாம் அவனிடம் பேசி அவன் மனதை மாற்றி ஒரு வழியாக தான் என்ன பேசினோம்?.. வீடு ஏன் இவ்வளவு பரபரப்பாக இருக்கிறது என்று மலர்விழி யோசித்து முடிக்கும் முன்பாகவே அனைவரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும்  வீட்டில் வைத்தே  திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள்..



 இதில் மலர்விழி தான் தன் மாமனைப் பார்த்தாலே பயந்து நடுங்குபவள் இனி தன் மாமன் மனைவி தான் என்று நினைத்து அதிகமாக நடுங்கி போனாள்..


 தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு மலர்விழி தான் உதாரணம்..

இனி மாமனுடன் தான் தன் வாழ்க்கை என்று நினைத்தாலே அவளுக்கு இப்போதே லூஸ் மோஷன் வர ஆரம்பித்தது..


 சக்தி திவ்யா மீண்டும் தனக்காக வருவாள்..  என்று எவ்வளவோ கூறினான்.. யாரும் அது எதையும் காதில் கேட்காமல் அவர்கள் நினைத்ததை முடித்து விட்டு தான் ஓய்ந்தார்கள்..


வெற்றியின் மனம் இப்பொழுது தான் நிறைவாக இருந்தது..



 எங்கே தன் மாமன் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்று கவலை கொண்டவனுக்கு தங்கயை திருமணம் செய்து வைத்த பின் தான் சந்தோஷமாக இருந்தது..


 அவனுக்கு மலர்விழி மேல் முழு நம்பிக்கை இருந்தது..  அதைவிட மல்லிகாவின் மீதும் நம்பிக்கை இருந்தது..


 போகப்போக இருவரும் தன் மாமனின் வாழ்க்கையை சீர்படுத்தி விடுவார்கள் என்று நம்பினான்..


 அதனால் தான் தன் சித்தியுடனும் பட்டியுடனும் சேர்ந்து அவர்களுக்கு இன்னும் நிறைய ஐடியாவை கொடுத்து ஏன் பூச்சி மருந்தை காட்டி அதை வைத்து மிரட்ட சொன்னதே வெற்றிதான்..

இப்படியாக மாமனை சரிகட்டி வெற்றி வேகமாக அனைத்து திட்டத்தையும் தீட்டினான்.. அதை சிறப்பாக மல்லிகாவும் கோமதியும் பூச்சி மருந்து போத்தல் கையில் எடுத்து நடிக்க ஆரம்பித்ததும் அதை பார்த்து பயந்து போய் அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு பாப்பா என்று அன்பாக அழைக்கும் அக்கா மகள் மலர்வழியை சக்திவேல் திருமணம் செய்து கொண்டான்..



 இங்கு நடந்ததை கேள்விப்பட்டு விஸ்வநாதன், ராமலிங்கம் என அனைவரும் வந்து புதுமண தம்பதியினரை ஆசிர்வதித்து இனியாவது சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்கள்..


 தாலி கட்டியதும் சக்தி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்..


வெற்றி தான் தன் மாமனை   போய் அழைத்து வருவதாக கூறிவிட்டு அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று மாமனுடன் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தான்..


 சக்தி அறைக்கு வந்து பார்க்கும் பொழுது முதலிரவு அறையாக அனைத்து வகை பூக்களும் வைத்து அலங்காரம் செய்து இருந்தது அறை..



மாமனை அழைக்க சென்று இடை வேளையில் தன் நண்பன் சங்கி என்று அழைக்கும் சங்கருக்கு அழைத்து வீட்டில் நடந்தவற்றை கூறி உடனடியாக பூக்களை வாங்கி வரும்படி கூறிவிட்டு தான் சென்றான்..



 எதிர்பாராமல் வாயை கொடுத்து தன் மாமனின் சிங்கக்குகைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.. புள்ளிமான்..



 மகள் கையில் தன் பேத்தியை கொடுத்து “ இனி இவள்தான் உன் முதல் குழந்தை  என்றும்..  இனி நீ  சுடருக்கு சித்தி இல்லை..  தாய்.. அதை மனதில் பதியவைத்துகொள்.. அதில் என்றும் மாற்றம் வரக்கூடாது..” என்று மகளுக்கு அறிவுரை கூறி கையில் குழந்தையை கொடுத்து தம்பியின் அறைக்கு அனுப்பி வைத்தார் மல்லிகா..



 முதலிரவுக்கு அனைவரும் பால் எடுத்து செல்வார்கள்.. ஆனால் இவள் கையில் குழந்தையை எடுத்துச் சென்றாள்..


 அவர்கள் வாழ்க்கை விந்தையிலும் விந்தையாக ஆரம்பித்தது..


 வீட்டில் இருந்த பெண்கள் அனைவருக்கும் தற்பொழுதுதான் மனதிற்கு நிம்மதியும் அமைதியும் கிடைத்தது..  மகன் மற்றும் தம்பியின் வாழ்க்கையை சீர்படுத்தி விட்டார்கள் என்று நினைத்தார்கள்..


  தம்பிக்கு இன்னொரு முகம் இருப்பதை அந்த பெண்கள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை..  இனி தான் சக்தியின் மற்றொரு முகத்தை பார்க்கப் போகிறார்கள்..



திவ்யா வருவாள் என்று எத்தனை வருடங்கள் ஆனாலும் தன் மகளை வளர்த்து காத்துக் கொண்டிருக்க தான் சக்தி முடிவெடுத்திருந்தான்… ஆனால் அவன் முடிவை  உணர்வுபூர்வமாக அவனை பிளாக்மெயில் செய்து ஒரு நொடியில் தாயும் அக்காவும் சேர்ந்து உடனடி திருமணம் ஒன்றை செய்து வைத்து விட்டார்கள் அவனுக்கு..



ஒரு வேலை அவள் மீண்டும் அவனைத் தேடி வந்தால் அவன் அப்பொழுது தனி மனிதனாக இருக்கப் போவதில்லை…


அவள் இதுதான் சந்தர்ப்பம் திருமணம் செய்து கொள் என்று கூறி விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததும்..  கிடைத்தது வாய்ப்பு என்று தான் வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டதாக அவள் தன்னை தவறாக நினைத்து அவள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வாளோ என்று பயம் அவனுக்கு இருந்தது..



 வீட்டில் இருந்த  பெரியவர்களுக்கு சக்திவேல் வாழ்கை சிறப்பாக அமையும் என்று வெற்றி மேலும் மலர்விழி  மேலும் நம்பிக்கை இருந்தது..


ஒவ்வொருவரும் மற்றவரை நம்பினார்கள்..


ஆனால் வாழ்க்கையை வாழ வேண்டியவன் தான் அதை முடிவெடுக்க வேண்டும்.. 


இரண்டாம் முறை அறையில் முதலிரவு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது அதை பார்த்ததும் சக்திவேல் ஏகப்பட்ட கடுப்பில் இருந்தான்..


அவன் கோவத்தை இன்னும் அதிக்கப்படுவது போல் மலர்விழி சர்வ அலங்காரத்தோடு தலை குனிந்து உள்ளே   கையில் குழந்தையுடன் அறைக்கு வந்தவளை  பார்த்து வேகமாக எழுந்து வந்து அவள் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி தன் அருகில் போட்டுவிட்டு இவ்வளவு நாளும் அக்கா மகள் என்று பாசமாக பார்த்த அவளை இன்று வெறுப்பாக பார்த்தான்..


 ஏனென்றால் அவள் ‘ நானே மாமனை திருமணம் செய்து கொள்கிறேன்..’  என்று கூறியதை அவனும் தான் கேட்டுக் கொண்டிருந்தான்..


 இவளும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தது போல் அவனுக்கு தோன்றியது..



 இனி அக்கா மகள் என்ற பாசம் தூரம் போய் தன் வேண்டாத மனைவியாக மலர்விழியை பார்த்து புள்ளி மானை வதைக்க போகிறான் அவள் மாமன் சக்திவேல்..



 வீட்டு பெரியவர்களின் நம்பிக்கையை வெற்றியும் மலர்விழியும் காப்பாற்றுவார்களா?..


அடுத்து நடக்கப் போவது என்ன?..  அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து என்னுடன் இணைந்திருங்கள்.. 












Leave a comment


Comments


Related Post