இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நிறங்கள் தந்த நிஜம் அவள் 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK015 Published on 16-02-2024

Total Views: 21861

நிறங்கள் தந்த நிஜம் அவள் 2

கருக்.. மொறுக்.. என முறுக்கை நொறுக்கி கொண்டிருந்தாள் ஆதிரா.. எத்தனை முறுக்கை நொறுக்கி தள்ளினாள் என்று அவளுக்கே தெரியாது. அவ்வளவு இன்ட்ரெஸ்ட்டாக 365 டேஸ் சீரிஸ் பார்த்து கொண்டிருந்தாள்.  "மசிமோ எவ்ளோ ஹண்ட்ஸாம்.. நல்ல ஹைட்.. நல்ல பாடி.. லுக்ஸ் சோ குட்.." தன்னையரியாமல் புகழ்ந்து கொண்டிருக்க டிவியை அனைத்தார் அவள் அன்னை சங்கவி.

"ம்.. ம்மா.. எவ்ளோ லைக் பண்ணி பாத்துட்டு இருக்கேன்.. ஏன் டிஸ்டர்ப் பண்ற??" விழி உருட்டி கேட்க,

"இந்த போட்டோஸ் எல்லாம் பாருன்னு சொல்லிட்டே இருக்கேன். என் பேச்ச காதுல வாங்குறியா டி நீ.." என்று சத்தம் போட்டு திட்ட, தன் அறையில் வேலை பார்த்து கொண்டிருந்த அவள் அண்ணன் ரியோ "ஏன் மா கத்துற??" என்ற படி வந்தான்.

"கத்துறேனா?? ஏன் டா கேக்க மாட்ட, இவளுக்கு கல்யாணம் ஆனா தான் நீ கல்யாணம் பண்ணிக்கிவேன்னு சொல்லிட்ட, சரி பொம்பள புள்ளைய முதல்ல கட்டி கொடுக்கலாம்னு இவளுக்கு வரன் பாத்தா வர்ற எல்லா மாப்பிளைளையும் ஏதாவது சொல்லி ஓட விட்டர்றா.. சரி போட்டோ பாத்து புடிச்சிருக்கன்னு சொல்லுன்னு சொன்னா நான் சொல்றதையே கவனிக்காம அவ பாட்டுக்கு முறுக்கு தின்னுட்டி டிவில வர்றவன ரசிச்சுட்டு இருக்கா.." மகனிடம் குற்ற பத்திரிக்கை வசித்தவர்

"எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும்.. இவ கல்யாணம் பண்ணிக்கிறாளா இல்ல கடைசி வரைக்கும் இந்த வீட்டுலையே இருந்து என் உசுர வாங்க போறாளா??  இல்ல எவனயாச்சும் லவ் பண்றளா?? இழுத்துட்டு ஓட பிளான் பன்றாளா?? எனக்கு இன்னைக்கே தெரியணும்.." உத்தரவாக சங்கவி கூற திடுக்கிட்டான் ரியோ.

"என்ன பேசுற மா?? பொண்ணுகிட்ட என்ன பேசணும்னு உனக்கு தெரியாதா?? அவ சின்ன குழந்தை.. அவகிட்ட என்ன பேசுற??" தங்கைக்காக வரிந்து கட்டி கொண்டு வர, "எதே.. இவ சின்ன குழந்தையா?? அடேய் மகனே இவ வயசுல எல்லாம் எனக்கு நீங்க ரெண்டு பேரும் பொறந்துட்டிங்க டா.. இவ என்னனா இன்னும் பொறந்த வீட்டுலையே உக்காந்துகிட்டு என் உசுர வாங்குறா.. இது பத்தாதுன்னு நீ வேற இவளுக்கு கல்யாணம் ஆனா தான் நான் கல்யாணம் பண்ணிக்கிவேன்னு சொல்லிட்ட, இவ இப்டியே இருந்தா நீயும் கெழவனா ஆகிடுவ, இவளும் கெழவி ஆகிடுவா.. ஒழுங்கா அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லு.." என்றவர் மகளை முறைத்துவிட்டு கிட்சனுக்குள் புகுந்து கொண்டார்.

அன்னை திட்டியதில் முகம் வாடிய ஆதிரா, அருகில் சென்று அமர்ந்த ரியோ "யாரையாச்சும் லவ் பண்றியா  ஆதி??" என்று கேட்க இல்லை என்று தலையாட்டினாள்.

அப்போதும் அவள் சோகமாக இருக்க "நீ ஓடியெல்லாம் போக மாட்ட.." என்று அவள் தோள் மீது கை போட்ட அண்ணனை பார்த்தவள் "என்மேல அவ்ளோ நம்பிக்கையா அண்ணா??" பூவிழி விரிந்து கேட்டாள்.

"நம்பிக்கைன்னு கூட சொல்லலாம்.." என்றவன் "சாப்பிடும் போது கூட நீயா எழுந்து போய் தண்ணி எடுத்து குடிக்க மாட்ட.. பேன் எழுந்து போட்டுக்க மாட்ட.. உலகமகா சோம்பேறி நீ. நீயாவது ஓடி போறதாவது வாய்ப்பே இல்ல.." என்றான் கிண்டலாக. மூச்சு வாங்க அவனை முறைத்தவள் "போடா எரும.." என்று திட்டி முகத்தை திருப்பி கொள்ள, "அப்போ சொல்லு.. ஏன் பாக்குற மாப்பிளை எல்லாம் வேண்டாம்னு சொல்ற?" என்று கேட்டான்.

அவனை பார்த்தவள் "நீ ஏன் அண்ணா இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணல??" பதில் கூறாமல் எதிர் கேள்வி கேட்டாள்.

 "ஏன்னா.. எனக்கு எந்த பொண்ணயும் பாக்கும் போது என் சோல், என் லைஃப், என் லவ்ன்னு தோணுனது இல்ல.. எந்த பொண்ண பாக்கும் போதும் எனக்கு உன் நியாபகம் தான் வரும். என் தங்கச்சி மாதிரி.. அப்டி தான் தோணும். அத தாண்டி எந்த பொண்ணு மேலயும் பீலிங்ஸ் வரல.." என்றான்.

"எனக்கும் அதே மாதிரி தான்.  எந்த பையன பாக்கும் போதும் எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும், சேர்ந்து வாழனும், அவன்கிட்ட என்ன பத்தி ஷேர் பண்ணிக்கணும்.. அவகூடவே வாழணும்னு தோணவே இல்ல ண்ணா.. இப்போ கூட இதுல எட்டு போட்டோ இருக்கு. இவங்க எல்லாரும் நல்ல ஹண்ட்ஸம்மா அழகா இருக்காங்க தான்.. ஆனா யாருமேலையும் எந்த பீலிங்ஸ்ம் வரல.. எனக்கு கூட இவங்கள எல்லாம் பாக்கும் போது என் அண்ணன் மாதிரின்னு தான் தோணுது.." என்றாள் தன் மனதில் உள்ளதை.

தலை சாய்த்து பார்த்தான். எழுந்து நின்றவள் "நான் யாரையும் லவ் பண்ணல.. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல.. நிச்சயம் கல்யாணம் பண்ணிக்குவேன்.. அப்டி நான் கல்யாணம் பண்ணிக்கிறவன் என் மனசுக்கு புடிச்சவனா இருக்கணும். அவனுக்கும் நான் புடிச்சவளா இருக்கணும். அப்டி ஒரு மாப்பிளை பாருங்க.. அப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்.. இப்போ மசிமோ பாக்க போறேன்.. என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.." என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளை பார்த்து இதழ் விரித்து சிரித்தான் ரியோ.. இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சங்கவி "இவளுக்கு புடிச்ச மாதிரி ஒருத்தன் வேணும்னா ஆர்டர் கொடுத்து தான் செய்யனும்.." சலித்து கொண்டார் அவர்.

பள்ளியில் தனது வகுப்பில் துருவன் மரக்கிளையில்  வாலை சுற்றி கொண்டு தலை கீழாக தொங்கும் குரங்கை வரைந்து சொல்லி கொடுக்க அணைத்து மாணவர்களும் ஆர்வமாக வரைந்து கொண்டிருந்தனர். கடைசி ரெண்டு பென்ச்க்கு முன் அமர்ந்திருந்த மாணவன் ஒருவன் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருப்பதை கண்டவன் அவன் அருகில் வந்தான்.

ட்ராயிங் நோட் திறந்த படி பென்சிலை கையில் பிடித்த படி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

"என்ன பண்ற??" தனக்கு அருகில் கேட்ட ஆசிரியர் குரலில் திட்டுகிட்டவன் எழுந்து நிற்க "என்ன பன்றேன்னு கேட்டேன்??" என்றான் மீண்டும்.

கோபம் இல்லாமல் சாந்தமாக கேட்க அவன் பதில் சொல்லவில்லை. மார்புக்கு குறுக்கில் கை கட்டி நின்றவன் அவனை புருவம் தூக்கி பார்க்க அவன் விழிகளில் கண்ணீர் வடிய தயாராக இருந்தது. அவன் மனம் ஒருநிலையாக இல்லாமல் ஏதோ சங்கடத்தில் இருப்பதை உணர்ந்தவன் "உக்காந்து வரை.." என்று அவனை அமர வைத்துவிட்டு சென்றான்.

அடுத்த pt வகுப்பிலும் மற்ற மாணவர்கள் விளையாட இவன் மட்டும் விளையாடாமல் அமர்ந்திருந்தான். அவனை கவனித்த துருவன் அவன் அருகில் வந்து அமர்ந்தான். ஆசிரியரை அருகில் பார்த்து திட்டுகிட்டவனிடம் "உனக்கு என்ன பிரச்சனை??" என்று கேட்டான்.

அவன் அமைதியாக இருக்க, "என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்.. உனக்கு ஒகே னா என்கிட்ட சொல்லு.." என்று கேட்க தயங்கிய மாணவன் "என் அப்பா தினம் குடிச்சிட்டு வந்து என்னையும் என் அம்மாவையும் போட்டு அடிக்கிறாரு.." என்றாள் கண்ணீரோடு.

அதிர்ந்தான் துருவன் "அம்மா வயித்துல பாப்பா இருக்கு. அது தெரிஞ்சும் அடிக்கிறாரு.. எனக்கு விழ வேண்டிய அடியையும் என் அம்மா வாங்கிக்கிறாங்க.. பாவம்.. அவங்களுக்கும் என் பாப்பாவுக்கும் ரொம்ப வலிக்கும்ல.. நேத்து ரொம்ப அடிச்சதுல என் அம்மா மயங்கி விழுந்துட்டாங்க.. பக்கத்து வீட்டுக்கு ஆண்டி தான் அம்மா முகத்துல தண்ணி தெளிச்சு எழுப்பினாங்க.. என்னால எதுவுமே செய்ய முடியல..  என் கண்ணு முன்னாடியே என் அம்மா அடிவாங்குறாங்க.." கண்ணீரோடு கூறினான் அந்த சிறுவன்.

தன்னையே பார்ப்பது போல இருந்தது அவனுக்கு. இதே போல் தானே தானும் அழுத்திருக்கிறேன்.. அன்று என்னிடம் என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களால் முடிந்த உதவியை எவரேனும் செய்திருந்தால் இன்று என் அம்மாவும் தங்கையும் என்னுடன் இருந்திருப்பார்கள் என்று நினைத்தவன் "உன் அம்மா என்ன வேலை பாக்குறாங்க??" என்று கேட்க "என் அம்மா அப்பா ரெண்டு பேரும் id ல தான் ஒர்க் பன்றாங்க.." என்றான்.

"சரி.. கண்ண தொட.." கண்ணம் வழிந்த அவன் கண்ணீரை துடைத்துவிட்டவன் "முகம் கழுவிட்டு கிளாஸ்க்கு போ.. இனிமே உன் அப்பா குடிக்க மாட்டாரு.." என்றான் உறுதியாக.

அவள் கேள்வியாக பார்க்க "போ.." என்று அனுப்பினான்.

தன் போனை எடுத்து தன் நண்பனுக்கு அழைத்து பேசியவன்  இரவு வரும் வரை காத்திருந்தான். இரவு எட்டு மணி அளவில் குடித்துவிட்டு வந்த அந்த சிறுவனின் தந்தை கர்ப்பிணி என்றும் பாராமல் தன் மனைவியை போட்டு அடிக்க அலறி துடித்தார் அவர். "அம்மாவ விடுப்பா.. ப்ளீஸ்.. ப்பா.." என்று அவன் கண்ணீருடன் கெஞ்ச போதையில் தள்ளாடி அடித்து கொண்டிருந்தவன் முதுகிலே விழுந்தது அழுத்தமான உதை.

ஒரே உதையிலே குப்புற விழுந்தவன் "எவன் டா என்ன அடிச்சது.. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாங்க டா.." என்று போதையில் பிதற்ற, காக்கி சீருடையில் இருந்த துருவனின் நண்பன் குமரன் ஓங்கி ஒரு அறை கொடுக்க சுற்றி கொண்டு விழுந்தான்.

அந்த சிறுவனும் அவன் தாயும் அதிர்ந்து போய் ஓரமாய் நின்று பார்க்க, "குடிச்சிட்டு வந்து பொண்டாட்டி புள்ளைய அடிக்கிறியா??" என்று மொத்து மொத்தென்று மொத்தினான்.

பொண்டாட்டியிடம் ஓங்கிய வீரம் இப்போது எங்கு போனதோ "என்ன விட்டுடுங்க சார்.. ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.." என்று கெஞ்ச "வாயும் வயிறுமா இருக்க பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சிருக்க.. அதுல அவங்க மயங்கி விழுந்திருக்காங்க.. இது கொலை முயற்சி.. டொமெஸ்டிக் வைலன்ஸ்  கேஸ்.. அதனால உன்ன அரெஸ்ட் பண்றேன்.." என்று இழுத்து செல்ல, மொத்த போதையும் வடிந்தது அந்த குடிகார ஆசாமிக்கு.

குமரன் அவனை இழுத்து செல்ல, "சார்.." என்று அந்த பெண் ஏதே பேச வர "கேஸ் இல்ல.. சும்மா மிரட்டி அனுப்ப சொல்றேன்.. சப் இன்ஸ்பெக்டர் என் பிரண்ட் தான்.." என்றான் துருவன்.

அவர் கேள்வியாக துருவனை பார்க்க "நான் உங்க பையன் ஸ்கூல்ல ட்ராயிங் டீச்சர்.." என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவன் "படிச்சிருக்கீங்க.. ஐஞ்சு இலக்கத்துல சம்பளம் வாங்குறீங்க.. ஆனாலும் ஏன் இப்டி கொடுமையெல்லாம் தாங்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்க அழுகை மட்டுமே அவரிடம் இருந்து கிடைத்தது.

"நீங்க நல்லா இருந்தா தான் உன் புள்ளைங்க நல்லா இருக்க முடியும். உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆணுச்சுனா.. இப்டி ஒரு குடிகாரன் கிட்ட உங்க புள்ள மாட்டிகிட்டு என்ன ஆவான்னு யோசிச்சு பாத்திங்களா??" என்று கேட்க அவரிடம் பதில் இல்லை.

"ரெண்டு நாள்ல உங்க புருஷன் வந்திருவாரு.. கொடுக்குற போலீஸ் டிரீட்மென்ட்ல இனிமே அவர் குடிக்கவே மாட்டாரு.." என்று எழுந்தான்.

தன் மாணவன் கேசம் கோதியவன் "நல்லா படிக்கணும்.." என்று சென்றான்.

இவ்வளவு நேரம் மிரண்டு போய் இருந்த அவன் முகத்தில் இப்போது  மகிழ்ச்சி…

தொடரும்..


Leave a comment


Comments


Related Post