இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வராது வந்த வான்நிலா அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK006 Published on 21-02-2024

Total Views: 23166

வராது வந்த வான்நிலா



டீசர்,

அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டில் அந்த காலை நேரத்திலும் அவ்வளவு சலசலப்பு… அனைவரும் அங்கு தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.. அத்தனை கூட்டம். இதை எல்லாம் பார்த்து அவர்கள் ஊர்க்காரர்களோ என்று நமக்கு சந்தேகம் வரும்.. ஆனால் அத்தனையும் அந்த வீட்டில் இருக்கும் வீட்டிக்காரர்கள் தான்.. அதனை பார்த்தே அட இத்தனை சொந்தங்களா அதும் இந்த காலத்தில் என்று அந்த ஊரே வியக்கதான் செய்யும்… கிட்டதட்ட அந்த குடும்பத்தில் முப்பது பேர் இருப்பார்கள்.. இப்போது புதிதாக வந்த வரவு.. அதாவது போன மாதம் பிறந்த குழந்தை முதல் ஆறு மாதத்திற்கு முன்பு புதிதாக திருமணம் செய்து வந்த மருமகளையும் சேர்த்து…

அந்த மதுரை மாநகரிலே முகவும் பெரிய குடும்பம் இவர்களது….. அந்த வீட்டில் தான் இப்போது சலசலப்பு அதிகமாக கேட்டுக்கொண்டு இருந்தது… இந்த சலசலப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒருத்தி அமைதியாக சோபாவில் உட்கார்ந்திருக்க… கடைசியாக அந்த சலசலப்பே அவளால் தான் அவளுக்கே தெரியும்.

 “ம்ச் இஞ்சாருங்க இது சரிவராது சொல்லிப்புட்டேன்…. நம்ம புள்ளைக்கி இந்த சம்பந்தம் வேணாம் விடுங்கோ….”என்றாள் அந்த வீட்டின் 30வருடங்களுக்கு புதிதாக மருமகள் கார்த்திகா…

 “ஏன் ஏன்றேன்… ஏன் வேணாம்… என்ற பேத்திக்கு இவ்ளோ பெரிய சம்பந்தம் வந்துருக்கு அத போய் வேணாம்னு சொல்ல உனக்கு எப்டி மனசு வந்துதுடி மருமகளே….”என்றார் குணவதி அந்த வீட்டில் அனைவருக்கும் ஆணிவேராக இருப்பவர்….

 “அம்மா தெரிஞ்சிதான் பேசிறியலா…..இந்த சம்பந்தம் நம்ம பாப்பாக்கு எப்டிமா சரிவரும்...”என்றார் அந்த வீட்டின் கடைகுட்டி பையன் சின்ராசு…

 “ம்ச் அதேதான் நானும் கேட்குறேன் சின்னவனே….. என்ற பேத்திக்கு என்ன குறையினு இவ்ளோ நாளா உன்ற அண்ணி அவளுக்கு கல்யாணம் ஆக மாட்டிக்கி ஆக மாட்டிக்கினு கோவில் கோவிலா சுத்துனதும் இல்லாம என்ற பேத்திய போட்டு வாட்டுனா…. இப்போ அவ வேண்டுனதுக்கும் மேல ஒரு சம்பந்தம் வந்துருக்கு…. இப்போ என்னனா நீங்க எல்லாரும் அதுக்கு எதிர்ல நிக்கிறியே….”என்றார் குணவதி

 “ம்ச் அத்த… நான் என்ற மகவளுக்கு இன்னும் கல்யாணம் கூடிவரலனு சாமிட்ட புலம்புனது உங்கள்ட்ட புலம்புனது எல்லாம் உண்மைதான்… ஆனா அதுக்காக இப்டிபட்ட சம்பந்தம் வேணுமா….”என்றாள் கார்த்திகா வருத்தமாக

 “ஏய் மருமகளே இந்த சம்பந்தத்துல என்ன குறைனு சொல்லேன்டி…..”என்றார் குணவதி அதட்டும் குரலில்

அதில் கார்த்திகா பயந்தவள் வழக்கம் போல அமைதியாக நிற்க….. இந்த பேச்சிகளை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்த வீரராசு.. அமைதியாக தன் முன்னால் தலைகுனிந்தவாறே உட்கார்ந்திருக்கும் மகளை பார்க்க… அவரது மகளோ… இன்னும் நிமிர்ந்து யாரையும் பார்க்காமல் உட்கார்ந்திருக்க…. அதில் வீரராசுவின் முகம் யோசனையில் சுருங்க…. அடுத்த நிமிடம் தனது மகளின் ஓரப்பார்வையில் அவளின் பார்வை போன திசையை பார்த்தவரின் முகம் இறுக….. தான் எடுத்த முடிவு சரிதான் என்று அவரின் மனம் அடித்து கூறியது….

அவளின் பார்வையோ தனக்கு கொஞ்ச தூரத்தில் தூணில் சாய்ந்தவாறே கையைக்கட்டிக்கொண்டு நிற்பவனையே துளைக்க……. அந்த தூணில் சாய்ந்து நின்றவன் பார்வையோ அவனுக்கு இரண்டு பேர் தள்ளி நின்றுக்கொண்டு இருக்கும் இன்னொரு இளம்பெண்ணை காதல் பார்வை பார்க்க…. அதில் சோபாவில் உட்கார்ந்தவளின் முகம் வேதனையில் சுருங்கியது…

 “ம்ச் அத்த இந்த சம்பந்தத்துக்கு என்ன குறையா….. ம்ச் அந்த பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு அத்த…. அதுமட்டும் இல்ல அவனுக்கு குழந்தை வேற இருக்கு…. நம்ம பாப்பாக்கு இப்டிபட்ட கல்யாணம் தான் நடக்கும்னும்னா அவளுக்கு கல்யாணமே நடக்க வேணாம்….”என்று கார்த்திகா படப்படவென பேச……

 “ஏய் மருமவளே என்ன பேச்சி பேசுற…..”என்று குணவதி கத்த…..

அதுவரை அமைதியாக இருந்த வீரராசோ…… "என்னம்மா கார்த்திகா வார்த்தையிலாம் அதிகமா வருது...”என்றார் அழுத்தமாக

அதுவரை தனது மகளின் நல்வாழ்வுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்த கார்த்திகாவோ தனது கணவரின் அழுத்தமான வார்த்தையில் கப்சிப் என்று வாயை மூடிக்கொள்ள…. குணவதி கூட அதுவரை பேசிக்கொண்டிருந்த வாயை இறுக்க மூடிக்கொண்டார்… மகன் ஒன்றை கையில் எடுத்துக்கொள்ளாத வரை தான் அவரின் தலையீடு இருக்கும்…. மகன் இறங்கிவிட்டால் குணவதி அமைதியாகிவிடுவார்… அது மகனின் மீது இருக்கும் மரியாதை..

வீரராசு மனைவியை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க… அதில் கையை பிசைந்தவாறே நின்ற கார்த்திகா அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை….சுற்றி சலசலத்துக்கொண்டு இருந்தவர்களும் வீரராசுவின் குரலில் அப்படியே அமைதியாகிவிட்டனர்…

 “என்ற மவளுக்கு யாரு பொருத்தமா இருப்பானு எனக்கு தெரியும்…. எனக்கு இந்த சம்பந்தம் தான் என்ற மவளுக்கு சரினு தோணுது… இருந்தாலும் உங்ககிட்ட எல்லாம் கேட்டுக்கலாம்னு தான் சொன்னேன்… "என்றவர்….. தனது மகளை திரும்பி பார்க்க…. அவளோ தன் தந்தையின் பார்வை தன்னை குறிவைப்பதை பார்த்தவள் அமைதியாக இருக்க…. “என்ற மவளுக்கு இதுல விருப்பம் இருந்தா போதும்…… "என்றவர் வார்த்தையில் இப்போது நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற உள்ளர்த்தம் இருக்க….

அதுவரை அமைதியாக இருந்தவளோ….. “எனக்கு சம்மதம்ப்பா...”என்றாள் கண்களை இறுக்க மூடிக்கொண்டே…. அதில் அனைவரும் அவளை பாவமாக பார்க்க… அவளின் பார்வையோ தனக்கு முன்னால் தன்னை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நிற்கும் தனது அத்தை மகனிடம் போய் நின்றது….

 “அம்மாடி… யாழு பாப்பா…. என் கண்ணு…"என்றவாறே குணவதி நிலா பாப்பா என்று அனைவராலும் அழைக்கப்படும் யாழ்நிலாவின் முகத்தை கைகளால் வழித்து திருஷ்ட்டி சுற்றி நெட்டி முறித்தவர்… "என் பேத்திக்கு சீமையில இருந்து துரை கணக்கா இல்ல மாப்ள வந்துருக்கு….”என்றார் ஆராவரமாக….

 ……………………………………………………………………………………………………………………

அமெரிக்காவில் இருக்கும் டல்லஸ் டவுன் ஆஃப் டெக்ஸாஸ் பகுதியில் வரிசையாக இருக்கும் அழகான வீடுகளில் ஒரு வீட்டின் பெட்ரூம் தான் அது… அந்த அறையில் இருக்கும் மிகப்பெரிய மெத்தையில் ஒரு நீண்ட உருவம் கால்களை நன்றாக நீட்டி முகத்தை போர்வையால் மறைத்தவாறே உறங்க…. அந்த உருவத்தின் அருகிலே அந்த உருவத்தில் கால்வாசி உயரம் கூட இருக்காத இன்னொரு குட்டி உருவமோ அந்த உருவத்தை போல போர்வையால் முகத்தை மறைத்தவாறே உறங்க…..

 “டேட் இட்ஸ் டைம் டு வேக் அப்…. டேட் இட்ஸ் டைம் டு வேக் அப்…. கம்மான் வேக் அப்….”என்ற பால்மனம் மாறாத பிஞ்சி குரலில் அலாரம் அடிக்க…. அதில் முகத்தை மூடிக்கொண்டு உறங்கும் அந்த நெட்டையான உருவமோ முகத்தில் இருக்கும் பெட்ஷிட்டை எடுத்தவாறே எழ….. 

 “பப்பு… இட்ஸ் டைம் டு வேக் அப்…. கம்மான் வேக் அப்,...”என்ற இன்னொரு குரலில் அந்த குட்டி உருவமும் தன் முகத்தில் இருக்கும் போர்வையை எடுத்தவாறே எழ….

இரண்டு உருவமும் தங்களை ஒருதரம் திரும்பி பார்த்தவர்கள் மெலிதான புன்னகையுடன்…. “குட்மார்னிங் டேட்….”என்று அந்த பிஞ்சி உள்ளம் கூற…

 “குட்மார்னிங் பப்பு...”என்று அவன் கூற… பப்பு என்று அழைப்படும் அந்த மொட்டை தூக்கியவனோ அதன் நெற்றில் அழுத்த முத்தமிட…. பதிலுக்கு முகத்தை சுருக்கிய அந்த மொட்டோ…. “அய்ய டேட் நீங்க இன்னும் ப்ரெஸ் பண்ல...”என்றான்…

அதில் புன்னகைத்தவனோ…. “இட்ஸ் ஓகே லவ்ல நோ டர்ட்டி….. எல்லாமே சுத்தம் தான்...”என்றவன்… "ம்ம் கம்மான் எழுங்க இன்னிக்கி கின்டர் கார்டன் இருக்குல… போங்க போங்க போய் ப்ரஸ் பண்ணுங்க டேட் இப்போ வரேன்...”என்றான் செல்லமாக சிணுங்கும் மகனை தூக்கி கட்டிலில் இருந்து இறக்கியவாறே….

 “ஓகே ப்பா...”என்றவன் அடுத்த நிமிடம் சுறுச்சுறுப்பாக ஓடிவிட்டான் பாத்ரூமிற்குள்….. சின்ன வாண்டு ஓடுவதையே அழகான புன்னகையுடன் பார்த்தவனோ…. பக்கத்தில் இருக்கும் இன்னொரு பாத்ரூமிற்குள் நுழைய அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் டைனிங்க் டேபிளில் ரெடியாக இருந்தனர்..

 “பப்பு… இன்னிக்கி நானி வரல.. சோ இன்னிக்கி அப்பாவோட கறுவுன ப்ரெட் தான்…. அஜெஸ்ட் பண்ணிக்கோம்மா...”என்று கெஞ்சலாக கேட்டான் அவன்…

அதில் தலையாட்டியவாறே புன்னகைத்த வாண்டோ…. “உன்னோட கறுவுன ப்ரெட் அந்த நானி செஞ்சி தர ஆம்லெட் டோஸ்ட்ட விட பெட்டர்ப்பா...”என்றான் நானி செய்து தரும் கொஞ்சமும் பட்டர் இல்லாமல் காய்ந்து போய் இருக்கும் ஆம்லெட் டோஸ்ட்டை நினைத்து முகம் சுருங்க….

அதனை பார்த்த அவனுக்கு தான் முகம் வேதனையாகி போனது…. “அந்த நானி செஞ்சித்தரது நல்லா இல்லையா பப்பு...”என்றான் தன் மகனை

அவனும் ஆம் என்று தலையாட்ட…. அதில் பெருமூச்சை விட்டவனோ…. “இட்ஸ் ஓகே… நாம வேற நானி பாக்கலாம்...”என்றான் சொல்யூஷன் கண்டுப்பிடித்தவனாக… அதில் பப்பு அவனை முறைத்தவன்… "இதுவரைக்கும் நாலு பேர் மாத்தியாச்சி டேட்… வந்த யாருமே உன் மனசுக்கு சேட்டிஸ்ஃபய்ட் ஆகல…. இனி வரப்போறவங்களும் நம்மள நல்லா பாத்துப்பாங்களா தெரில…. ஐ மிஸ் அப்பத்தா…. அவங்களோட பருப்பு அடையை நான் மிஸ் பண்றேன்...”என்ற பப்புவோ அப்பா தயார் செய்துக்கொடுத்த கறுவிய ப்ரெட்டை கொறித்தவன் பக்கத்தில் க்ளாஸில் இருந்த சூடான பாலை கையில் தொட முடியாமல் அலுத்துக்கொண்டவன்…. “இது ஆறுறதுக்குள்ள ஸ்கூலுக்கு டைம் ஆகிடும்…. நாம போலாப்பா...”என்றான் ஷூவை போட்டவாறே…

மகனின் இந்த செயலை பார்த்த அவனுக்குமே மனம் குற்றவுணர்வில் மிதக்க…. அதனை கண்டுக்கொண்ட அவனின் மகனோ…. “ம்ச் ப்பா இப்போ எதுக்கு ஃபீல் பண்ற… இதுக்குதான் நாம அடுத்த மாசம் இந்தியா போறோமே எனக்கு புது அம்மா அழைச்சிட்டு வர…. அவங்க வந்தா எல்லாமே சரி ஆகிடும்… அவங்க என்னை நல்லா பார்த்துப்பாங்க…. யூ டோன்ட் ஃபீல்..”என்றான் அவன்

அதனை கேட்டவனோ முகம் இப்போது தெளிவான முடிவினை எடுக்க முகம் தெளிந்தவன் தான் எடுத்த முடிவு சரிதான் என்றவாறே கிளம்பி தனது நாலு வயது மகன் பப்பு என்கிற அதிரனை அவனின் கின்டர் கார்டனில் விட்டுவிட்டு தான் வேலைப்பார்க்கும் டெக்ஸாஸ் மருத்துவமனைக்கு சென்றவன்….. “டாக்டர் வான்முகிலன் எம்.டி, எம்.எஸ் கைனோகோலிஸ்ட்"என்ற போர்ட் போடப்பட்டிருந்த அறைக்குள் சென்றவன் வெள்ளை கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அவசரமாக ஒரு டெலிவரிக்காக லேபர் ரூமிற்குள் சென்றான்..

………………………………………………………………………………………………………………….

வான்முகிலன் தனக்கு முன்னால் இருந்தவளை ஆழமாக பார்க்க… அவளோ தலையை குனிந்துக்கொண்டு நின்றிருந்தாள். அதில் சலித்து போனவன்… "என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கானு கேட்டேன் மிஸ் யாழ்நிலா...”என்றான் 

அதில் நிலா அவசரமாக நிமிர்ந்து பார்த்தவள்… "அது அது...”என்று இழுத்தவள்… "என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா...”என்றாள் அவன் பதிலை எதிர்ப்பார்த்தவாறே

அதில் வான்முகிலன் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற…. “ம்ம்… எஸ் பிடிச்சிருக்கு…. இப்போ நீங்க சொல்லலாம்ல….”என்று கேட்க

அதில் ஆம் என்று தலையாட்டியவளோ…. “நான் இப்டி இருந்தா உங்களுக்கு பிடிக்குமா…. ஏனா இங்க என் சித்தி பொண்ணு சொன்னா… உனக்கும் அவருக்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்ல… அவர் எவ்ளோ ஃபிட்டா இருக்காரு….. ஆனா நீ அவர மூணா சேர்த்த மாதிரி குண்டா இருக்க அப்டினு…. அதான் கேட்குறேன்.. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா… இல்ல உங்கள உங்க வீட்ல கம்பெல் பண்ணாங்களா...”என்று நிலா வெகுளியாக கேட்க

அதில் புன்னகைத்தவனோ….. அவளை அழுத்தமாக பார்த்தவாறே "என்னை கட்டாயப்படுத்தி ஒரு செயல யாராலையும் செய்ய வைக்க முடியாது நிலா….”என்றவன் அவளையே குறுக்குறுவென பார்க்க…. அதில் அவனின் நிலாதான் பார்வையை குனிந்துக்கொள்ள வேண்டியது இருந்தது..



 

(டீசர் முற்றும்..)


Leave a comment


Comments 1

  • P Pandimadevi
  • 1 week ago

    Teaser mattum thaan irukku.. kathai enge?


    Related Post