இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 22-02-2024

Total Views: 24642

பாகம்-3
 அங்கே யாரும் சட்டம் தெரிந்தவர்களோ அல்லது சட்ட நிபுணர்களோ அல்ல. இருந்தாலும் அப்போதைக்கு அவர்களின் வாயை அடைக்கவே அவன் அப்படி பேசினான் அது ரேணுகாவுக்கும் தாய் மாமாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ரேணுகா மனதில் சிரித்தாள் . ஆனால் அன்னைக்கு, திருமணம் ஆன அன்றே விவகாரத்தா?யோசிக்க  அதிர்ச்சியாக  இருந்தது. மாமாவுக்கும் இது சரியாகத்  தோன்றவில்லை. இனி அமைதியாக இருக்க முடியாது.  இப்போது பேசித்தான் ஆக வேண்டும் ஆனால் இவர்கள் முன்பு அல்ல. மீனாட்சியின் சகோதரர் கிளம்பும் நேரம்,
"இங்க பாரு செந்தில்! கல்யாணம்கறது வாழ்க்கைல ஒரு பார்ட். ரொம்ப  முக்கியமான பகுதி. அத ஜஸ்ட் லைக் தடன்னு எடுக்க முடியாது. எந்த ஒரு விஷயம் செய்யறதுக்கு முன்னாடி ஆயிரம் இல்ல, லட்ச முறை கூட யோசிக்கலாம். ஆனால் முடிவெடுத்தா அதுலேர்ந்து பின்  வாங்கக்  கூடாது. மஹாபாரதத்துல தருமர் மாதிரி இருக்கணும். மத்தவங்க எல்லாரும் யுத்தம் வேணுன்னு சொன்ன போது அதை தவிர்க்க நினைச்சார். அதனுடைய சாதகங்களும் அவருக்கும் தெரியும் பாதகங்களுக்கும் சேர்ந்தே தான் பயப்பட்டார். அதுவே யுத்தம்னு வந்ததுக்கு அப்புறம் அதுல  ஸ்திரமா இருந்தார் . இந்த மாதிரி எந்த பிரச்னையும் வந்துட கூடாதுன்னுதான் ஒங்கிட்ட அத்தனை முறை கல்யாணத்துக்கு முன்னாடியே யோசிக்க சொன்னேன். பொதுவாவே பெரிய இடத்துப்  பெண்கள் ஒரு மாதிரி அப்டி இப்படித்தான் இருப்பாங்க. ஆனா இந்த பொண்ணு கேரக்டர் நல்ல விதமாத்தான் தெரியுது. அதே சமயம் நம்ம வீட்டுக்கு ஏத்த மாதிரி இருப்பாளான்னு நீ பேசிப் பார்த்தாதான் தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடியே செஞ்சுருக்க வேண்டியது. பரவால்ல இருக்கட்டும். வேணுமா? வேண்டாமான்னு இப்பவே யோசிக்க வேணாம்.இப்ப அது எனக்கு சரியாத்  தோணல.முதல்ல அந்த பொண்ணே  வரட்டும். வந்து என்ன சொல்லறான்னு பாக்கலாம் .எதுவா இருந்தாலும்  இனிமேலாவது பார்த்து யோசிச்சு நடந்துக்க. . என்னோட சிந்தனையை, முடிவா நீ எடுக்கனுன்னு நான் சொல்லல. அதே சமயம் நீ பண்ணறது சரியான்னு யோசிச்சு பாரு. முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டு பேசுங்க. டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அந்த பொண்ண பார்த்தா அப்டி ஒன்னும் கெட்ட  பொண்ணு மாதிரி தெரியல. இதுக்கு மேல நான் வேற எதுவும் பேச விரும்பல.  இல்ல நான் விவகாரத்துதான் பண்ண போறேன்னு சொன்னா  நம்ம பாலு இருக்கான். அவன் கிடையே நாம பேசலாம்" ஏதோ தனக்கு தெரிந்ததைச்  சொல்லி விட்டார். இனி செந்தில் என்ன செய்வான்?
அதற்கு மேல் என்ன சொல்வது என்று அவருக்கும் தெரியவில்லை. அவனுக்கும் என்ன பதில்  தர வேண்டும் என்று தெரியவில்லை. மாமாவின் மன  வேதனையை அவன் அறிவான். அவருக்கு அவன் பிள்ளை போலத்தான். தன்னை மட்டுமில்லாமல் தன்னைச்  சேர்ந்தவர்களையும் இப்படி அழ வைத்து விட்டாளே  என்ற  ஆத்திரம் அவள் மீது இன்னும் அதிகரித்தது.
அவன் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறான். இப்போது நானோ நீங்களோ செல்ல வேண்டாம். நம்முடைய துணை இப்போதைக்கு அவனுக்குத் தேவை இல்லை. நிரஞ்சனாவிற்குத்தான் நம் துணை தேவை. நிச்சயம் அவளுடைய இந்த இழப்பிற்கு யாராலும் விலை தர முடியாது. மணமேடையில் இருந்து நேராக அலுவலகத்திற்கு வந்தவள் முதலில் சென்றது ஆங்காங்கே தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த இரண்டு காவலாளிகளை தான். உள்ளே ஏதோ எரியும் வாசனை வரவும் இருவரும் உள்ளே சென்று பார்த்தார்கள். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டு விட்டார். அவரை காப்பாற்ற சென்ற இன்னொருவரும் மாட்டிக் கொண்டார். ஒருவருக்கு இருபது சதவீதம் எரிந்து போய் இருந்தது. மற்றவருக்கு ஐம்பது சதவீதம். அலுவலக நாளாக இருப்பினும் மற்றவர்கள் அனைவரும் இவளின் திருமணத்திற்கு வந்து விட்டதால் வேறு யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இருவருக்கும் காயம் பட்டிருந்தாலும் எந்த உயிர் சேதமும் இல்லை என்று தான் சந்தோஷப்பட வேண்டும். கடவுள் காப்பாற்றினார்.மருத்துவமனையில் இருந்து நேராக அலுவலகத்து சென்றவள் அங்கிருந்த காவலரை பார்த்து பேசினாள். உங்களுக்கு யாராவது தொழில் முறை எதிரிகள் யாராவது இருக்காங்களா? வேற யாராவது ? நீங்க யாரையாவது சந்தேக படறீங்களா?  இது சாதாரணமா மின் கசிவினால் ஏற்பட்ட விபத்து மாதிரி எங்களுக்கு தெரியல. இன்னும் உங்க  கிட்ட கொஞ்சம் விசாரிக்கணும் . ஸ்டேஷனுக்கு வாங்க"
"நீங்க  முன்னாடி போங்க நான் இங்க கொஞ்சம் பார்த்து முடிச்சுட்டு வரேன்"

பாந்தமாக சொல்லி அனுப்பினாள்.
 தீயணைப்புத் துறையினர் எல்லா  இடங்களிலும் தீயை முழுவதுமாக அணைத்திருந்தனர். கிட்ட தட்ட பாதிக்கும் மேல் எரிந்து போய்  இருந்த கட்டிடத்தை பார்த்தாள் . அவளின் மன வேதனை சொல்ல முடியாதது.
அதிலும் அவள் அழகாக  மாடல் செய்து வைத்திருந்த அந்த மாடல்ஹோம்  கண்ணாடி உடைந்து கரித் தூளாக  இருந்தது. கையில் அள்ளி பார்த்தாள் . வெறும் சாம்பல். இதே போலத்தான் ஒரு நாள் அவள் தந்தையும் கையில் சாம்பலாக இருந்தார். ஏனோ அந்த சமயத்தில் அவள் தந்தையை மிகவும் தேடினாள் . கையில் கிடைத்தது சாம்பல்தான்  அது அவள் கல்லூரியில் படிக்கும் போது முதன் முதலில் மாடல் செய்தது. தந்தை ஆசையாக வைத்திருந்தது. அத்தனை நேரம் இரும்பாய் நின்றவள் அப்போதும் அழவில்லை . ஆனால் அவளையும் அறியாமல் கண்கள் மட்டும்  தன்னுடைய துக்கத்தை வெளிப் படுத்தியது. மற்ற அலுவலக நண்பர்கள் அவளை தாங்கிக்  கொண்டார்கள். அடுத்தடுத்து வேலைகளை பார்க்க வேண்டும். ஆனால் எங்கிருந்து தொடங்க வேண்டும்? புரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பனியில் இருந்தும் வருவார்கள். அதற்கு முன் அவள் காவல் நிலையம் செல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதியாக உள்ளே சென்று பார்த்தாள் . இது வேண்டுமென்றே செய்யப்பட்டது போலத்தான் அவளுக்கும் சந்தேகம் வந்தது . சர்வர் பகுதி முழுவதுமாக எரிந்து போய்  இருந்தது. நல்ல வேளையாக  வேறு ஒரு கம்பனியில் பாக்அப் வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தை சுத்த படுத்த வேண்டும். அதற்கு காவலர் பர்மிசன் தர வேண்டும். முதலில் ஒரு லீகல் ஒபினியன் வாங்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் சில வேலைகளை பிரித்து கொடுத்தாள் . "இன்சூரன்ஸ்லேர்ந்து வந்தா சாமிநாதன் சார் நீங்க  பார்த்துகோங்க. அந்தத் ரெண்டு பேருக்கும் கம்பனிலேர்ந்து ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கில்ல? அந்த டாகுமண்ட்ஸ் ஹாஸ்பிடல்க்கு கொடுத்தாச்சா? அவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது. செலவு முழுக்க நம்ம கம்பனியோடது" சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக காவல் நிலையத்திற்கு விரைந்தாள். அவள்  கூடவே ஓடிச் சென்ற பணியாட்கள்,
" நீங்க எதுவும் கவலை படாதீங்க மேடம். எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்" ஒன்று போலவே சொல்லி அனுப்பினார்கள். 
அவர்கள்தான் அவளின் பலம். தந்தையின் காலத்தில் இருந்தே வேலை செய்தவர்கள் சிலர். அவர்கள் இவளுக்கு தந்தை ஸ்தானத்தில்  இருந்து தொழில் கற்றுக் கொடுத்தார்கள். இல்லை என்றால் அவளால் இப்படி ஒரு நிறுவனத்தை தனியாக தொடங்கி இந்த  
நிலைமைக்குக்  கொண்டு வந்திருக்க முடியாது. பழைய ஆட்கள் மட்டும்தான் அப்படி என்று சொல்லி விட முடியாது. புதிதாக சேர்ந்திருந்தவர்களும் அவளுக்கு விசுவாசமாகவே இருந்தார்கள். என்றுமே  ஒரு முதலாளியாக  மட்டும்  இல்லாமல் நல்ல தோழியாக, அன்னையாக, சகோதரியாக இருப்பவளை எப்படி விட்டு விட முடியும்? விசுவாசம் என்பதையும் தாண்டி அனைவருக்குமே அவள் மீது ஒரு பாசமும் பந்தமும் இருந்தது. 
வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பாஸ்கரன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
"நீ என்ன நினைக்கற நீரு ? இது எதேச்சையா நடந்திருக்குமா?"
"இல்லடா! எனக்கு என்னமோ இது சதி வேலையாத்தான் இருக்குன்னு தோணுது"
"இப்ப போலீஸ் நம்மள கேள்வி கேக்கும்போது நம்முடைய அனுமானத்த அவங்க கிட்ட சொல்ல முடியாதில்லையா?"
"அது சரிதான் பாஸ்கர். இருந்தாலும் அது எப்படி கரக்ட்டா என்னோட கல்யாணத்தன்னிக்கு நடக்கும்? அதுவும் சரியா என்னோட கழுத்துல தாலி கட்டும்போது? அப்டின்னா யாரோ நான் நல்லா  வாழக்  கூடாதுன்னு தானே?"
"யாரோ என்ன யாரோ ஒனக்கு  தெரியாத அந்த யாரோ யாருன்னு" நக்கலாக சிரித்துக் கொண்டே சொன்னான் பாஸ்கரன்.
"நான் நல்லா வாழக் கூடாதுன்னு இன்னும் எத்தனைதான் என்ன அடிக்க போறாங்க பாஸ்கர். அப்பாவோட பிஸினஸ்ஸ மொத்தமா மூட வச்சிட்டாங்க. இப்போ என்னோடது"
"இருக்கட்டும் நீரு . அவங்க இன்னும் என்னதான் பண்ணறாங்கன்னு பாப்போம். எதுவா இருந்தாலும் நீ தளர்ந்து போய்டக் கூடாது"
"தெரிலடா. இன்னும் எப்படி எல்லாம் பிரச்சனை வர போகுதோ? நான் இன்னும் ஹாண்டில் பண்ண வேண்டிய பெரிய விஷயம் செந்தில். அவரை எப்படி என்ன சொல்லி புரிய வைக்கறது. யு நோ?  நானும் அவரும் இன்னும்  ஒரு நிமிஷம் கூட சேர்ந்து உக்காந்து பேசல. இந்த நிலமைல அவருகிட்ட நான் என்ன சொல்லி எப்படி புரிய வைக்க போறேன்னு தெரியல"
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வர வேண்டிய இடம் வந்து விட்டது.
அங்கே கம்பீரமாக கால்  மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார் அந்த இன்ஸ்பெக்டர் . உண்மையை சொன்னால் அந்த இன்ஸ்பெக்டரின் பார்வையும், கேள்வியும் இவளை சந்தேகப்படுவதாகவே இருந்தது. ஏன் இன்சூரன்ஸ் பணத்திற்காக இவளே கம்பனியில் தீ விபத்து ஏற்படுத்தி இருக்கக் கூடாது? சந்தேகம் வராமல் இருக்க திருமணத்தின் போதே செய்தால்,யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. பதிலாக பரிதாபம்தான் வரும் என்றே சந்தேகித்தார்.  
அங்கே வந்து நின்றவளை கண்டும் காணாதது போல அலட்சிய படுத்தினார். சில நிமிடங்கள் கழித்தே அமரச் சொன்னார். அவள் நின்றிருந்த போது அவளின் தலை முதல் கால் வரை அவளை பார்த்த பார்வை அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது. பேண்ட் போட்டிருந்தவளின் உடம்பில் ஊறிய அவன் பார்வை எங்கோ நின்றது 'எப்படா உக்கார சொல்லுவ ?' பல்லை கடித்து கொண்டிருதாள் .
"நாங்க ஒக்கரலாமா ?" பாஸ்கர் தான் வெறுப்பாய்  கேட்டான். வேறு வழி  இல்லாமல் 
"ம் !" அதில் வந்தது அந்த பொறுக்கியிடம் இருந்து. 
ஏதேதோ கேள்வி என்ற பெயரில் கடலை வறுத்தான். இதோ மதியம் ஆகி விட்டது. திருமணம் என்பதால் உள்ளுக்குள் ஏதோ ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருந்தது. விரதம் அது இதுவென்று நேற்று முதலே அவள் சரியாக உண்ணவில்லை. பசி வயிற்றை  இறுக்கி பிடித்தது. உடல் அயர்வு,மனச் சோர்வு, பசி எல்லாம் சேர்ந்து கேள்வி என்ற பெயரை அவன் படுத்திய கொடுமை அவளுக்கு எரிச்சலாக இருந்தது. பதில் சொல்ல வந்த பாஸ்கரனை வெளியில் நிற்க வைத்து விட்டார்.
"வரியா? இல்லையாடா?" கோபத்தில் யாரிடமோ கத்தினான் பாஸ்கரன். 
தனி அறையில் அந்த போலீசுடன் நிரஞ்சனா இருப்பது பாஸ்கருக்கு சரியாய் படவில்லை. மனம் பதை பதைத்தது . தான் ஒரு சாதாரண ஆள். தன்னால் என்ன செய்ய முடியும்?
இங்கே உள்ள, அமர்ந்திருந்தவளிடம் எழுந்து வந்து தன்னுடைய சந்தேகத்தை தீர்க்க கொள்வதற்கு விழைந்தார் அந்த காவலர்.
" நீங்களே ஏன் இந்த மாதிரி செட் பண்ணி இருக்கக் கூடாது?"

அவனின் கேள்வி இவளுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
"அப்டி எல்லாம் இல்ல சார். இது நான் ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கிய கம்பனி. அப்படி எல்லாம்  செய்ய மாட்டேன்" பொறுமையாயாகப் பேசினாள் . 
"அது எப்படி மேடம்? உங்க அப்பா கம்பனியும்  நஷ்டத்துல போய்  போன வருஷம்தான் மூடி இருக்கீங்க. அடுத்த  இந்த கம்பனி ஆரம்பிச்சு கொஞ்ச மாசத்துல இவ்ளோ பெரிய ஆளாகிடீங்க. ஒடனே கல்யாணம். கல்யாணத்தன்னிக்கு உங்க கடைல இவ்ளோ பெரிய தீ  விபத்து? ரெண்டு வாட்ச் மேன்  நெருப்புல  கருகி இருக்காங்க. ஆஸ்பத்திரில சீரியஸா இருக்காங்க. இது எல்லாம் உங்களுக்கே சந்தேகமா இல்ல"
"இதுல சந்தேகப் பட என்ன இருக்கு சார். என்னோட எல்லா ஸ்டாப்சும் என்னோட கல்யாணத்துல இருந்தாங்க. அவங்க ரெண்டுபேரு  மட்டும்தான் அங்க கம்பனில இருந்தாங்க. எதிர் பாராத  விதமா அவங்களுக்கு அடி பட்டிருக்கு. அதுவும் இங்க யாரும் சீரியஸா எல்லாம் இல்ல. நீங்கதான் ஒன்னும் இல்லாத விஷயத்தை இவ்ளோ பெரியஸா மாத்தி பேசறீங்க" இப்போது இவளும் சற்று காட்டமாகவே பேசினாள் . அப்போதுதான் என்னவானது என்பதை பார்க்க பாஸ்கரன் அங்கே வந்தான். பவி கால் செய்ததும் அப்போதுதான். எதிர் பார்க்காத நேரத்தில் பாஸ்கர் அங்கே வரும்போது நிரஞ்சனாவின் முகத்தின் அருகில் போலீசின் முகம் இருந்தது.  அவள் பேசும்போது அசைந்த உதடுகள் இன்ஸ்பெக்டரின் மூளையை குழப்பியது. ஏதும் செய்ய விடாமல் பாஸ்கர் என்ற கரடி அங்கே வந்து விட்டது. அது அவனுக்கு. 'பாவி பாவி! எப்படி வந்து மூஞ்சிய காட்டுது பாரு' மனதில் அருவறுத்துக் கொண்டிருந்த நீருவிற்கு  ஆபத் பாந்தவன் .
"யோவ்! கதவை தட்டிட்டு  வரணுன்னு தெரியாது?"
வள்ளென்று புடிங்கிய இன்ஸ்பெக்டரை பிரதீப்பின் குரல் அமைதிப் படுத்தியது. அமைதி என்றால் நல்ல விதத்தில் அல்ல. இது வாயடைத்துப் போகும் அமைதி.
"சொல்லுங்க சார். இன்னும் வேற எதுவெல்லாம் தெரிஞ்சுக்கனுன்னு  சொல்லிக் கொடுங்க. நானும் சேர்த்தே தெரிஞ்சுக்கறேன்"
யார் இவன்?
தொடரும்.................. 


Leave a comment


Comments 1

  • அஸ்வதி
  • 3 months ago

    வாவ் அருமை. அழகான பதிவு. இன்ஸ்பெக்டர் உன்னோட நாரவாயை ஏண்டா அவகிட்டே கொண்டு போய், வெறுப்பு ஏத்துறே? வந்துட்டான் பாஸ்கரன் ஆபத்பாந்தவன். அட அறிவு கெட்டவனே, யாராவது வேணும்னு தன்னோட அலுவலகத்துக்கு நெருப்பு வைப்பாங்களா? அதுவும் அவள் கல்யாணத்து அன்னைக்கு, அவளுக்கென இருக்கும் அலுவலகத்தை... சரியான சோத்து மூட்டை . மண்டையில் மூளைக்கு பதிலா களிமண் தான் இருக்கு போல...

  • P PMKK012 @Writer
  • 3 months ago

    Ha ha ha


    Related Post