இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நிறங்கள் தந்த நிஜம் அவள் 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK015 Published on 23-02-2024

Total Views: 19107

நிறங்கள் தந்த நிஜம் அவள்! 3

"எனக்கும் ஆர்ட்க்கும் ஏணி வச்சாலும் எட்டாது. என்ன ஏன்டி ஆர்ட் கேலரிக்கு கூப்டுற??" சலிப்பாக கேட்டாள் ஆதிரா.

"தனியா போக ஒரு மாதிரி இருக்கு டி.. ப்ளீஸ் என்கூட வாயேன்.. போயிட்டு சீக்கிரம் வந்திரலாம்.. சார்க்கோல் ஆர்ட்டிஸ்ட் பெயிண்டிங் நிறைய அங்க இருக்கும். எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்.. போயிட்டு வந்திரலாம் வா டி.." கெஞ்சினால் ஷாலு..

"சரி.. சரி.. வர்றேன்.."

"மெட்ரோ ஸ்டேஷன் வந்திரு.. நானும் வரேன் மெட்ரோலையே போயிட்டு வந்திரலாம்.." என்று கூறி இணைப்பை துண்டித்தாள் ஷாலு..

ரியோ பிஸியாக லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருக்க, "ம்மா.. நான் பிரண்ட் கூட வெளில போயிட்டு வந்தர்றேன்.." என்று தன் ஃபோன் கையடக்க பர்ஸ் எடுத்து கொண்டு சென்றவளை டோல் கேட் போல மறித்தான் ரியோ..

"என்ன ண்ணா??" என்று கேட்க, "எங்க போற??" இழுவையாக கேட்டான்.

"ஒரு பெரிய மனுஷி வெளில போகும் போது எங்க போறேன்னு கேக்குறியே நான் போற வேலை எப்டி உருப்புடும்.." மூக்கு சுருக்கி போலி கோபம் கொண்டாள்.

"சொன்னா போலாம். இல்ல.. வெளில போக முடியாது.." மார்புக்கு குறுக்கில் கை கட்டி நின்று அவன் கூற "எப்படியும் நம்மை விட மாட்டான் என்று எண்ணியவள் "ஆர்ட் கேலரிக்கு தான் போறேன் அண்ணா.." என்றாள்.

"சரி போ.. ஆனா துப்பட்டா போடுட்டு போ.." என்று கருப்பு நிற துப்பட்டாவை எடுத்து கொடுக்க, "இது ஸ்கர்ட், டாப்.. இதுக்கு போய் யாரவது துப்பட்டா போடுவாங்களா.?" அவள் கேட்க, "யார் போட்டா என்ன?? போடலைனா என்ன?? நீ போடு.." என்று அவள் கழுத்து வலைத்து போட்டுவிட்டான்.

"இப்போ போலாம்.." என்று வழிவிட "ஆனாலும் ரொம்ப ஸ்டிர்ட் ண்ணா.. நாளைக்கு உனக்கு வர போற பொண்டாட்டிகிட்டவும் இப்டியே இருக்குறியா பாக்குறேன்.." என்று வண்டியை எடுத்து கொண்டு சென்றாள்.

ஷாலுவும் அவளுக்காக காத்திருக்க இருவரும் பைக் ஸ்டாண்டில் வண்டியை போட்டுவிட்டு மெட்ரோ ஸ்டேஷன்க்குள் நுழைந்தனர். எஸ்கலேட்டரில்  ஷாலு ஏற, "ஸ்டெப்ஸ்லையே போலாம் ஷாலு.." அவள் கரம் பற்றி நிறுத்தினாள் ஆதிரா..

"இந்த ai யுகத்துல எஸ்கலேட்டர பாத்து பயப்படுற எங்ஸ்டர் நீயா தாண்டி இருப்ப.. ஒழுங்கா வா.." என்று அவளை இழுத்து தனக்கு முன் நிற்க வைத்து அவளுக்கு பின்னால் நின்றாள் ஷாலு.

போருக்கு போவது போல இருக்கத்துடனே நின்றாள் ஆதிரா.. கூட்டம் அதிகமாக இருக்கவே ஷாலு பக்கவாட்டில் ஒதுங்கி கொண்டாள். அதை கவனிக்காமல் பயத்துடன் நின்றவளை அலற வைக்கும் விதமாக எஸ்கலேட்டர் ஷேக் ஆக, பயத்தின் உச்சத்தில் சென்றவள் "அம்மா…" என்று அலறி கொண்டு தனக்கு பின்னால் நின்றவனை வயிரோடு அணைத்து நெஞ்சில் முகம் புதைத்து இருக்க கண் மூடினாள்.

எதிர் பாராத அதிர்வில் எஸ்கலேட்டர் நின்று போக, அவளோ பயத்தில் அவனை இன்னும் அதிகமாகவே அனைத்தாள். திடீரென ஒரு பெண் தன்னை அனைத்திருக்க அதிர்ந்து போய் பார்த்தான் துருவன். ஷாலு சற்று தள்ளி நிற்க ஆதிராவுக்கு பின்னால் வந்து நின்ற துருவனை தான் அணைத்து கொண்டாள்.  என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போய் அவன் நிற்க, எஸ்கலேட்டர் நின்றது கூட தெரியாமல் அவனை கட்டி பிடித்து கொண்டு நின்றாள். படியிறங்கி சென்றவர்களும் அவர்கள் நின்ற கோலம் கண்டு தங்களுக்குள் கிசு கிசுத்து கொண்டு சிரித்த படி சென்றனர்.

"ஹலோ.. மேடம்.." அவன் அவளை தன்னிடமிருந்து பிரிக்க பார்க்க பலன் இல்லை.. அப்போது தான் ஆதிரா அணைத்து கொண்டு நிற்பதையே பார்த்த ஷாலு "அடிப்பாவி.. இவ என்ன இப்டி கட்டி புடிச்சிட்டு நிக்கிறா??" என ஓடி வந்து அவளை குலுக்க, உறக்கத்தில் இருந்து எழுந்தவள் போல கண் திறந்தாள்.

"என்ன டி பண்ற?" அடிக்குரலில் ஷாலு கேட்க ஏதோ ஒரு ஆடவனை அணைத்து கொண்டு நிற்கிறோம் என்று உணர்ந்து வேகமாக அவனிடம் இருந்து விலக தடுமாற விழ போனாள் ஆதிரா. அவளை இடை வலைத்து  நிறுத்தியவன் மார்பிலே விழுந்தாள். தன் நெஞ்சோடு அணைந்து கொண்ட பெண்ணவள்  அழகு வதனம் பார்க்க அதிர்ந்து போனான்.

தன் கற்பனையில் தோன்றி கை வண்ணத்தில் வளர்ந்த கலர் ஓவியம் உயிர் பெற்று வந்தது போல தன் முன் நின்றவளை கண்டு அதிர்ந்து போனான். அவளோ முன் பின் தெரியாத ஆடவனை இத்தனை நேரம் அணைத்து கொண்டு நிற்கிறோமே என்று அவள் சங்கடமாக நெளிந்தாள்.

அவன் மாஸ்க் அணிந்திருந்ததால் அவன் முகம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் கருந்துளையாக இழுக்கும் காந்த கண்கள் அவள் இதயத்தில் பதிந்து போனது. "வா டி.." ஷாலு இழுத்து கொண்டு செல்ல, அவனை பார்த்த படியே அவள் இழுப்புக்கு சென்றாள் ஆதிரா..

உயிர் பெற்ற ஓவியத்தை கண்டு அதிர்ந்து நின்றவன் தன்னிலை உணர்ந்து அவள் சென்ற வழியில் ஓடி பார்க்க, அவள் எப்போதோ சென்றிருந்தாள். கருவிழி உருட்டி சுற்றி பார்த்தான். அவள் இல்லை. கண் முன் வந்த பெண்ணை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இது நிஜம் தானா?? அவள் நிஜம் தானா?? என்று யோசித்தவனின் சட்டையில் சாயம் பூசிய அவள் இதழ்கள் பதிந்த சுவடு அவள் உண்மை தான் சொல்லாமல் சொல்ல குழம்பி போனான்.

குழப்பத்துடனே கேலரிக்கு வந்து தன் கேப்பினுக்குள் நுழைந்து கொண்டான். மாஸ்க் கழற்றி முகம் கழுவி வந்தான். அதிர்ந்து விழித்த அவள் விழிகள் இன்னும் அவனை துளைப்பதாக உணர்ந்தான். அவள் நினைவில் இருந்து மீண்டும் வரவே முடியாமல் கேசம் கோதி கொண்டு சுற்றி சுற்றி நடந்தான்.

ஷாலு இயல்பாக இருந்தாலும், ஆதிராவால் இயல்பாக இருக்க முடியவில்லை. முன் பின் தெரியாத ஆடவன் ஒருவனை எப்படி பொது இடத்தில் அனைவரும் பார்க்க அணைத்து விட்டேனே?? என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டாள். ஆனாலும் அவன் விழிகளில் தன்னை பார்க்கும் போது இருந்த அழுத்தம் ஏன்?? அப்டி ஏன் பாத்தான்?? என்ற சிந்தனையில் வந்தவளை குலுக்கிய ஷாலு, "இங்க இருக்கு டி.." என்று காட்ட, "கேலரி எங்க இருக்குன்னு தெரியாம என்ன கூட்டிட்டு வந்துட்ட.." முறைப்பாக கூறினாள்.

"அதான் வந்தாச்சுல வாடி.." என்று இருவரும் கேலரிக்குள் நுழைந்தனர். Ac யினால் குளிரூட்டப்பட்ட அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த படங்களை பார்த்து கொண்டு சென்றனர் தோழிகள் இருவரும்.  துருவன் ஓவியம் மட்டும் அல்லாது மற்ற கலைஞர்களின் படைப்புகளும் அங்கு வைக்கப்பட்டது. சுற்றி சுற்றி பார்த்து வந்தவள் ஒரு சிவப்பு நிற பெயிண்டிங் முன் நின்று உற்று பார்த்தாள் ஆதிரா..

ஏதேதோ சில உருவங்கள் இருப்பது போலவும், அதெல்லாம் தீ பிடித்து எறிவது போலவும் சிவப்பு மேகங்கள் சூழ்ந்தது போலவும் இருந்த செந்நிற வானமும் இருந்தது. சாதாரணமாக பார்த்தால் போர்ட்டில் சிவப்பு பெயிண்ட் அடித்து வைத்தது போல தான் இருக்கும். ஆனால் ஆழ்ந்து பார்க்கும் போது தான் அதன் மொத்த உருவமும் தெரிகிறது.  ஆனாலும் அதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.

ஷாலுவிடம் கேட்க "இது சிலப்பதிகாரம்ல கண்ணகி மதுரைய எரிக்கிற காட்சி.." என்று கூறினாள்.

நம்பாமல் "அதெப்படி கரெக்டா சொல்ற??" ஆதிரா கேட்க, "மேல இருக்கறது  கோவில் கோபுரம் மதுரைய குறிக்குது, சிவப்பு வானம் அன்னைக்கு கோவலனுக்கு நடந்த அநியாயத்த சொல்லுது, கீழ எரியுற நெருப்பு குழந்தைகளை எதுவும் செய்யல. அரண்மனைய எரிக்குது.. அது கண்ணகி சாபம்.." என்று ஒவ்வொன்றாக சுட்டி காட்டி கூறியவள் "இது மாடன் ஆர்ட்.." என்று முடித்தாள்.

ஓவியம் பற்றிய எந்த விருப்பமும் இல்லாமல் இருந்தவள் இப்போது ஓவியத்தின் பால் ஈர்க்கப்பட்டாள்.

அடுத்தடுத்த ஓவியங்களை பார்த்தவர்கள் சார்கோல் ஓவியனின் படைப்பை பார்வையிட அடுத்த பிரிவுக்கு சென்றனர். அங்கிருந்து வந்தவர்கள் ஆதிராவை ஆச்சர்யமாக பார்த்து செல்ல, "ஏன் இப்டி பாக்குறாங்க??" என்று நினைத்து கொண்டு வந்த ஆதிரா, வண்ணத்தில் துருவனால் வரைந்து வைக்கப்பட்ட ஓவியத்தை கண்டு அதிர்ந்தாள்.

அப்படியே அவள் முகத்தை அச்சு பிசிறாமல் வரைந்து வைத்திருந்தான். இதில் இன்னும் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் அப்போது அவள் அணிந்திருந்த உடையும் கூட ஓவியத்திற்கும் அவளுக்கும் ஒத்து போனது.  அதே உடை, அதே உருவம். ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மிக சரியாக வரைந்திருந்தான். ஆனால் ஓவியத்தில் இருந்த ஆதிராவுக்கு புருவத்தில் சிறு வெட்டு தழும்பு இருந்தது. நிஜத்தில் ஆதிராவுக்கு வெட்டு தழும்பு இல்லை. அது ஒன்று தான் வித்தியாசம். 

தன் உருவத்தை ஒருவன் வரைந்து காட்சிக்கு வைத்திருக்கிறானே.. என்ற கோபம் எதுவும் அவளுக்கு இல்லை. ஆச்சர்யம் தான். ஆனாலும் ஷாலுவோ "நீ ஏதாவது ஆர்ட்க்கு மாடல்லா போஸ் கொடுத்தியா?" என்று கேட்க இட வலமாக தலையை ஆட்டினாள் அந்த ஓவியத்தை பார்த்த படியே.

"அப்புறம் எப்படி உன்ன அப்டியே வரைஞ்சு வச்சிருக்கான்.." என்று நினைத்த ஷாலு "இந்த ஆர்ட் வரைஞ்சவர நான் பாக்கணும்.." என்றாள்.

"சார்.. இங்க தான் இருந்தாங்க.." என்று தேடியவன் "அதே.. துருவன் சார்.. அங்க இருக்காங்க.. அவர் தான் இந்த பெயிண்டிங்க வரைஞ்சாரு.." என்று கூற, அதிர்ந்த ஷாலு "துருவன்னா.. சார்க்கோல் ஆர்ட்டிஸ்ட்டா??" என்று கேட்க "ஆமா மேடம் சார் வரைஞ்ச முதல் கலர் பெயிண்டிங் இது.." என்று கூறி சென்றான் அவன்.

அதிர்ந்தனர் இருவரும். நடந்து வந்த துருவனே  அவர்களை பார்க்க அதிர்ந்து போனான். ஆதிராவையும் ஓவியத்தையும் மாறி மாறி பார்த்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவன் ஏதோ சொல்ல வரும் முன், "இதுக்கு முன்னாடி என்ன பாத்திருக்கீங்களா??" என்று கேட்டாள் ஆதிரா.

இல்லை என்றான். 

"அப்புறம் எப்படி இவ்ளோ கரெக்ட்டா வரஞ்சிருக்கீங்க??" ஷாலு ஆச்சர்யமாக கேட்க, "இது என்னோட கற்பனை தான். முதல் முறையா நான் வரைஞ்ச கலர் பெயிண்டிங்.. இந்த மாதிரி ஒரு பொண்ணு இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை…" என்றான் ஆதிரா முகத்தை பார்த்த படி.

"என் முகம் கற்பனைல வந்திச்சு ஒகே.. இப்போ நான் போட்டிருக்க ட்ரெஸ் கூட கற்பனைல வந்திச்சா??" ஆச்சர்யமாக கேட்டாள்.

ஆமாம் என்பது போல தலையை ஆட்டினான். அவளை அழுத்தமாக பார்த்தவன் "இங்க பாருங்க.. இத நான் வேணும்னு பண்ணல.. எனக்கு இப்டி ஒரு பொண்ணு இருப்பான்னு தெரியாது. ஜஸ்ட் இமாஜின்ல வந்தத தான் நான் வரஞ்சேன். இது கோ இன்சிடென் தான்.." என்றான் அவள் பிரச்சனை செய்வாளோ என்று.

"எனக்கு தெரியும்.." என்றாள் அழுத்தமாக.

தெரியனா?? ஷாலு கேட்க, டிஸ்யூ பேப்பர் எடுத்து தன் புருவத்தில் வரைந்திருந்த மையை அழித்தாள். என்ன பன்றா இவ?? துருவன் அவளை விசித்திரமாக பார்க்க, அவள் புருவம் வெட்டு பட்டு இருந்தது. அதிர்ந்தாள் ஷாலு..

"இது சின்ன வயசுல எனக்கு அடி பட்டது. இப்டி என் ஐ ப்ரோவ் வெட்டு பட்டிருக்குன்னு என் அம்மா, அப்பா, அண்ணன் தவிர வேற யாருக்கும் தெரியாது. அத நீங்க ரொம்ப சரியா வரஞ்சிருக்கீங்க.. ஸோ இது கோ இன்சிடென்ட் தான்.." என்றாள்.

அவள் இயல்பாக இருக்க அவன் தான் குழம்பி போனான் இவன் ஏன் என் கற்பனையில் உதிக்க வேண்டும் என்று…

தொடரும்..



Leave a comment


Comments


Related Post