இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 23-02-2024

Total Views: 19817

பாகம்-5

 சாத்தானைப் பற்றி நினைத்தால் அது எதிரில் வந்து நிற்குமா? எனக்குத்தெரியாது. நிரஞ்சனாவைக் கேட்டால் ஆமாவாம் ! இதோ நிரஞ்சனாவின் கண் முன் வந்து நிற்கிறது.  அது என்ன கையில் பத்திரிக்கை?

அது என்ன என்று அதுவே சொல்லும் வரை காத்திருப்போம்.

கதவை கூட தட்டாமல் திடுமென வந்து நின்றான் ராஜவேலு. "வீணாக அவங்களை தொந்திரவு  பண்ணாதீங்க" சொன்ன பாஸ்கரை பார்வையால் தள்ளி நிறுத்தினான் ராஜவேலு..

"என்னம்மா! என்ன யோசனை பலம்மா  இருக்கு? போலீஸ்காரம்மா வந்தார்களோ?ஆபீசு எரிஞ்சு போகக் காரணம் என்னன்னு  கண்டுபுடிக்க முடிலியா? பாவம்!  சீசிடிவில பார்த்துருக்கலாமே? அதுவும் ஆம்பளையா பொம்பளையான்னு கூட கண்டு பிடிக்க முடிலியாமே. கேள்விப்பட்டேன் . என்னவோ நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க போறதையாவது உன்னால முடிஞ்சா தடுத்து நிறுத்து "

அவனை முறைத்துக் கொண்டு கண்களில் கோபம் மின்ன அமைதியாக அமர்ந்திருந்தாள் நீரு . 

"வந்த விஷயத்தை மறந்துட்டு ஏதேதோ பேசிகிட்டு இருக்கேன் பாரு. நான் இங்க ஈஸியார்ல ஒரு பங்களா வாங்கி இருக்கேன். ஒனக்கு கூட அங்க பக்கத்துல ஏதோ ஒரு காட்டேஜ் இருக்கு இல்ல? நமக்கு எப்ப வேணுன்னாலும் பார்த்துக்க ஈஸியா இருக்குமே. அதுக்குத்தான் அதுக்கு பக்கத்துலையே வாங்கி  இருக்கேன். முடிஞ்சா அம்மாவோட கிரக ப்ரவேசத்துக்கு நீ வா. இல்லையா பரவால்ல. இனிமே அடிக்கடி நான் உங்க வீட்டுக்கு வரேன்.ஆம்பிளை இல்லாத வீட்டுக்கு துணை தேவைபடுமில்ல ? அவனே சொல்லிக் கொண்டிருந்தான். 

"பாவம் நீயும் தாலி வாங்கின புதுப் பொண்ணு.எத்தனை நாளைக்கு புதுப் பொண்ணாவே இருக்கறது?இள ரத்தம் வேற! "அவன் பேச்சு இவளுக்கு ஆத்திரத்தை கூடியது.

"ஒனக்கு என்னதான் வேணும்? எதுக்கு எங்களை டார்ச்சர் பண்ணற?"

"என்ன வேணுமா சொல்லறேண்டி. பணத்துக்காகத்தானே உங்கம்மா அந்த ராஜசேகரோட போனா. இன்னிக்கு அவனும் இல்ல. அவனோட பணமும் இல்ல. நான் இருக்கேன். அவனை விட பணக்காரனா"

"அவங்க உங்கள மனசால விரும்பல. அதுக்குக் காரணம் பணமில்லை.  பணம் தான்னு உங்களுக்கு மனசுக்குள்ள எண்ணமிருந்தா அதுக்கு அவங்க என்ன பண்ண முடியும்? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு? அவங்களுக்கு கல்யாணம் ஆகிப்  பொண்ணு நான் இருக்கேன். உங்களுக்கும் கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். எல்லாமே  நல்லாதானே போயிட்டுருக்கு. சம்பந்தமே இல்லாம எதுத்துக்கு எங்களோட வாழ்க்கைல வந்து குதிச்சு எங்களை டார்ச்சர் பண்ணறீங்க?"

"நான் டார்ச்சர் பன்னறேனா?  மொதல்ல ஒன்னு பைத்தியமா பொறந்து செத்து போச்சு. இதோ இப்ப இவன். இத்தனை பெரிய சாம்ராச்சியம். ஆளப்  பொறந்தவன். ஆனா அறிவு கம்மி. எதுனால ? உங்க அம்மாவால . அவ மட்டும் என்னை கல்யாணம் பண்ணி இருந்தா என்னோட வாழ்க்கையும் சந்தோசமா இருந்திருக்கும். நானும் அந்த ராஜசேகர் மாதிரி சந்தோசமா பணம், பதவி, அழகான பொண்டாட்டி, குழந்தைங்கன்னு இருந்திருப்பேன். அப்ப எங்கிட்ட என்ன இல்ல? ஒனக்கு ஒன்னு தெரியுமா? உங்கப்பாவை விட அப்ப நாந்தான் ரொம்ப அழகா இருப்பேன். பணம்! பணம்! அத்தனையும் பணம் பண்ண வேலை . அவ என்ன எட்டி ஒதச்சுட்டா"

வெறியுடன் சொல்லிக் கொண்டிருந்தவனின் பேச்சு அவளுக்கு பைத்தியக்காரத்தனமாக பட்டது. அவன் ஏதேதோ உளறுவதாக நினைத்தாள்.

"முடிஞ்சது முடிஞ்சு போச்சு.நாங்க  எந்த தப்புமே பண்ணல .புரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க" தழைந்துப்  போனாள். 

கண் விரித்து கெஞ்சியவளை அல்வாத் துண்டு போல வாயில் போட்டுக் கொள்ள வேணும் போல இருந்தது. 

"விட்டுடணுமா ? அப்ப இத்தனை வருஷமா நான் பட்ட கஷ்டம். இப்பவும் சமுதாயத்துல எனக்குன்னு ஒரு அந்தஸ்து இருந்தாலும் என்  புள்ளைய பாக்கறவன் என்ன மதிக்க மாட்டான். அது எல்லாத்தையும் நான் சரி செய்ய வேணாம்?"

"அதுக்கு?"

"நீ வந்து படுடி. அழகா அம்சமா உன்ன மாதிரியே ஒரு பொட்டப்  புள்ளைய பெத்துக்க குடு. பொத்திக்கிட்டு போறேன்" பல்லிடுக்கில்  அவன் வாயில் வந்த வார்த்தைகள்? எத்தனை கொடூரம்?

"சீ! என்னோட அப்பா வயசு ஆகுது . இந்த வயசுல இத்தனை மட்டமான நினைப்பா?"

" அப்பா வயசுன்னு ஒதுக்காத  செல்லம். வந்து பாரு. எத்தனை சீக்கிரமே உன்ன அம்மாவாக்கறேன்னு" சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென இடுக்கில் தெரிந்த இடுப்பில் கிள்ளி விட்டு கண்ணடித்து விட்டுப் போனான்.

அவன் வெளியில் வருவதற்காகவே காத்திருந்த பாஸ்கர் உள்ளே விரைந்தான்.

"நீரு !" அவள் தோள்  தொட்டு உயிர்பித்தான். சில நொடிகள் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக இருந்தவள் நினைவு வந்ததும் தலையில் அடித்துக் கொண்டாள் .

"ஏண்டா! ஏண்டா! எனக்கு இப்படி நடக்குது? பொம்பளையா பொறந்தாலே தப்பா?"

"என்னம்மா ஆச்சு? எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம். என்னாச்சுன்னு சொல்லு" 

"என்ன? என்ன ஆச்சா? அந்த கிழவன் கூட வந்து படுன்னு சொல்லிட்டு இடுப்புல கிள்ளிட்டு  போறாண்டா" தலையில் அடித்துக் கொண்டு சொன்னவள் கைகளை பிரித்து இடுப்போடுக் கட்டிக் கொட்டினான். முதுகை நீவினான். அசுவாசப் படுத்தினான். நண்பனாக அவனுக்கு வேதனை ஒரு புறம் என்றாலும் ஒரு நல்ல ஆண் மகனுக்கே வரும் வெறியும் சேர்ந்தே வந்தது. 

" விடக் கூடாதுடி ! அவன் சும்மா விடக் கூடாது"  அவள் முகத்தை நிமிர்த்தி கன்னங்களை துடைத்து விட்டான். டேபிளில் இருந்த தண்னீரை பருக வைத்தான். மனம் சமாதானமாகவில்லை. பதிலாக மூளை நேரம் பார்த்து அவனை அடிக்க வேண்டும் என்று  அறிவுரை சொன்னது.

"வா! வீட்டுக்குப் போலாம். போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. அடுத்து என்ன பண்ணறதுன்னு நிதானமா யோசிக்கலாம். பிரதீப்பை வரச் சொல்லவா?"

"ம்!" அதற்கு பிறகு இருவருமே எதுவுமே  பேசிக் கொள்ளவில்லை. 

வழக்கத்தை விடவும் விரைவாகவே வந்து சேர்ந்து விட்டனர். 

அங்கே அமர்ந்திருந்த செந்திலைப் பார்த்ததும் இவளுக்கு ஐயோ! என்றிருந்தது.

இன்னொரு ஆண்  மகனின் கை வளைவில் வந்து கொண்டிருந்த மனைவியை பார்த்தவனுக்கு மனம் முழுவதும் பரவசம்.(கிண்டல்)

"ஆஹா! வாரே  வாவ் " மனம் அவனைப்  பார்த்தே கொக்கரித்து. 

'டேய் ! அவன் கைக்குள்ள  நிக்கறது நீ தாலி காட்டின பொண்ணுதாண்டி'

அவன் மனம் அப்படி யோசிக்க இவள் மனம், 

"உன்னவன் வந்து விட்டான். ஓடிப் போ! அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொள் என்றது.

முகம் வியர்த்து தலை கலைந்து புடவை கலைந்து இன்னொருவனின் கை வளைவில் வந்து நின்றவளை அவனின் வார்த்தைகள் தள்ளி நிறுத்தியது.

"ஹலோ! நான் செந்தில். உங்களுக்கு நினைவிருக்கா?"

அன்னையையும் பாஸ்கரையும் பார்த்தாள் . 

"வாங்க நாம உள்ள போய்  பேசலாம்" 

அவனுக்கும் பாக்ஸர் எதிரில் எதுவும் பேச விருப்பமில்லை. அமைதியாகச் சென்றான்.

"ஏண்டா! என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க மனசுல? கேக்கறதுக்கு அப்பா இல்லன்னு அவ இஷ்டத்துக்கு ஆடுவீங்களா? எத்தனை நேரம்தான் சம்பந்தி  வீட்டுலேர்ந்து வந்து காத்துகிட்டு இருப்பாங்க. கொஞ்சமாவது ஒரு மட்டு மரியாதை வேணாம்? தாலி ஏறின அடுத்த நிமிஷமே மாலையை தூக்கி எறிஞ்சுட்டு போனவதானேன்னு கேக்கறாரு மாப்பிளை? நான் என்ன பதில் சொல்லுவேன்? "

அதுவரை அவள் பேசுவதை அமைதியாக கைக் கட்டி பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு நடந்ததை  எல்லாம் விவரித்தான். கடைசியில் நடந்த அசிங்கத்தையும் அவனின்  கேவலமான எண்ணத்தையும் மட்டும் சொல்லவில்லை. கடினப் பட்டு அடக்கிக் கொண்டான். வேறு ஏதோ தவறாக  நடந்திருக்கிறது. பூரணியும் புரிந்து கொண்டாள். கழுத்தை அறுத்துப் போட்டாலும் இவன் நம்மிடம் வாயை திறக்க மாட்டான். அவளுக்குத் தெரியும்.

உள் அறையில், செந்திலும் நிரஞ்சனாவும். அவள் ஆசைப்பட்ட தனிமை. அவளும் அவனும். அமர்ந்து பேச வேண்டும். இதோ அமர்ந்திருக்கிறார்கள். 

"சொல்லுங்க" அவன் கண்களை பார்த்து ஆராய்ந்தாள் .

"நான் சொல்லறதுக்கு என்ன இருக்கு? நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள் ஆச்சு. அதுக்கு முன்ன ஒரு பத்து நாள். இந்த இருவது நாள்ல  இதுதான் நம்மளோட ரெண்டாவது சந்திப்பு. தாலி கட்டினதுக்கு அப்புறம் இன்னும் ஒனக்கு நான் மெட்டி கூட போடல. எவ்ளோ ஆசையா ஒனக்கு பர்ஸ்ட்நைட்ல  கிப்ட் பண்ண மோதிரம் வாங்கி வச்சுருந்தேன் தெரியுமா? கண்ணோட கண் பார்த்து கை  சேர்த்து காதல் மொழி பேசி, முத்தங்கள் கொடுத்து, நெஞ்சுல சாச்சு தன பாட்டில் சொல்லிக் கொண்டிருந்தான். வேறு யாராவதாக இருந்திருந்தால் அவன் இத்தனையும் பேசி இருந்திருக்க மாட்டான். ஏனோ இவளிடம்.... என்ன வென்று தெரியவில்லை. தன்னுடைய நிராசைகளை சொல்லிக் கொண்டிருந்தான்.

"கட்டில்ல உருளணும். அதான?" ராஜவேலுவின் வார்த்தைகளுக்கு பதிலை இவனிடம்  கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

"ஆமா ! ஒரு புருஷனா நான் வேற என்ன எதிர்பார்க்க முடியும்?"

"எப்ப பார்த்தாலும் இந்த செக்ஸ். இதை தவிர வேற எதையுமே இந்த ஆம்பிளைங்களுக்கு யோசிக்கவே தெரியாதா?" அந்த வார்த்தையை  அவள் வேறு யாராவது ஒருவரிடம் சொல்லி இருந்தால் அது சரியாகவே இருந்திருக்கும். ஆனால்  கணவன் என்று வரும்போது? அந்த வார்த்தையின் வீரியத்தை அவள் உணரவில்லை. 

கோபத்தில் நெற்றியில் கை வைத்துக் கொண்டாள். விலகி இருந்த புடவை அவன் கிள்ளிய இடத்தை  வெட்ட வெளிச்சமாகியது.

செந்திலோ அருவருத்து முகம் சுளித்தான்.

"சரி! இப்ப என்னதான் வேணும் உங்களுக்கு?" அவளுக்கு பொறுமை இல்லை. 

"நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்"

இவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

"அவ்வளவுதானா?"

"ஒரே ஒரு வார்த்தை உனக்கு என்ன பிரச்சனை? கேட்டுருக்கலாமே?" மனம் ஏங்கியது. வாயாலேயே பேசிக் கொள்ளாதவர்கள் மனம் பேசுவது மட்டும் எப்படி அடுத்தவருக்கு தெரிந்துவிடப் போகிறது?

"அவ்ளவுதானவா? வெளில சொன்னா  அசிங்கம். உன்னை போட்டோல பார்த்த நாள்லேர்ந்து உன்கிட்ட பேச ஏங்கிகிட்டு இருக்கேன். ஒனக்கு நான் தாலி கட்டிட்டேன். பட்  இன்னும் முழுசா புருஷனாகலை . சரி என்ன விடு. எங்க அம்மாவும் மாமாவும் உன்கிட்ட உக்கார்ந்து பேசணுன்னு எத்தனை நேரமா காத்துக்கிட்டு இருக்காங்க  தெரியுமா? ஒங்க அம்மா? எத்தனை தடவை ஒனக்கு போன் பண்ணாங்க. ஒரே ஒரு தடவை பேஸினியா? இதோ வரேன்னு சொன்ன. அதுக்கு அப்புறம்? புடவை கிழிஞ்சு  தலை கலைஞ்சு வந்து நிக்கற. நல்ல வேளை எங்க வீட்டு  பெரியவங்க இங்க இல்ல. இருந்திருந்தா? எங்க அம்மாவால் தாங்க முடியாது. ஏற்கனவே அவங்க சுகர், பீ பி எல்லாத்தையும் வச்சுக்கிட்டு இருக்காங்க. உன்ன அந்த கோலத்துல பார்த்திருந்தாங்கன்னா ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். அவங்கள  வீட்டுக்கு போக சொல்லிட்டேன்.

"உன்னை பற்றி எனக்கு என்ன கவலை" என்று பேசிக் கொண்டிருந்தவனிடம் மனம் விட்டுப் போனது.  

கண்களை துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சினாள்."சரி  இனிமே என்ன? நாம் பிரியனும். அவ்வளவுதான?"

"ம்! "

" நீங்க  என்கிட்டேர்ந்து என்ன எதிர்பாக்கறீங்க?"

பதில் சொன்னான்.

"சரி! நீங்க  ஆசை பட்டபடியே உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல. நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கறதுல எங்க எந்த ஆட்சேபனையும் இல்லன்னு லீகலா டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணி அனுப்பறேன்"

அவசர கோலம்  அலங்கோலமாக முடிந்தது. முதல் நாள் தொடங்கிய  திருமணம் இதோ ஐந்தாவது அத்யாயத்தில் பிரிந்து நிற்பது எனக்குமே  வருத்தம் தான். இனி செந்திலின் வாழ்வில் மாதவி, நிரஞ்சனா தவிர வேறு யாராவது வருவார்களா? நிரஞ்சனாவின்  வாழ்வை வருங்காலத்தில் வசீகரிக்கப்  போவது யார்? பார்க்கலாம்.....

தொடரும்........

 

 


Leave a comment


Comments 2

  • அஸ்வதி
  • 3 months ago

    அடடா!! இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலயே... செந்திலின் கோபத்திலும் தவறில்லை. அவள் மீது குற்றம் சொல்லவும் முடியவில்லை. அப்போ இனி பிரிவு தானா? யாருக்கு யார் இணை ? அந்த பிரதீப்... அவன் நண்பன் மட்டும் தானே! ஏனோ, அவளுக்கு இணையாக வருவானோ என்று தோன்றியது அவன் வரும் போது.

  • P PMKK012 @Writer
  • 3 months ago

    பார்க்கலாம் sagodhari

  • அஸ்வதி
  • 3 months ago

    அடடா!! இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலயே... செந்திலின் கோபத்திலும் தவறில்லை. அவள் மீது குற்றம் சொல்லவும் முடியவில்லை. அப்போ இனி பிரிவு தானா? யாருக்கு யார் இணை ? அந்த பிரதீப்... அவன் நண்பன் மட்டும் தானே! ஏனோ, அவளுக்கு இணையாக வருவானோ என்று தோன்றியது அவன் வரும் போது.


    Related Post