இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 25-02-2024

Total Views: 26734

“உங்க அம்மா தங்கச்சி எல்லாம் பார்க்கனும் போல இருக்கு என்னை உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ண மாட்டீங்களா நந்தன்?” அபிலாஷா கேட்க 

“ஒய் நாட்… ஆக்சுவலா அம்மாவே உங்களை வீட்டுக்கு இன்வைட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாங்க… ஓகே உங்களுக்கு ஃப்ரீயா இருக்கும் போது சொல்லுங்க கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரனும் அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்க…” என்று அவனும் மகிழ்வாக அழைப்பு விடுத்தான்.

“சரி அப்போ இந்த வீக் எண்ட் வரட்டுமா?” என்று அபிலாஷா சட்டென்று கேட்க

“என்னது?” என்று முதலில் அதிர்ந்தவன் “சரி வாங்க… ஆனா நாம இப்படி ஃப்ரண்ட்ஸா பழகுறது அம்மாக்கும் தங்கச்சிக்கும் தெரிய வேண்டாம். அச்சு ஆல்ரெடி ஏதேதோ சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்கா…” என்று அபிநந்தன் கோரிக்கை வைக்க

“சரிங்க…” என்று சொல்லி இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அபிலாஷா.

சொன்னபடி வார இறுதி நாளில் சரியாக அபிநந்தன் இருக்கும் பகுதியில் உள்ள பூங்காவில் அபிலாஷா காத்திருக்க அபிநந்தன் வந்தான்..

“வாங்க அபிலாஷா.. என் பைக்கை ஃபாலோ பண்ணுங்க. ஆனா அம்மா கேட்டா ஒரு ஃப்ரண்டை பார்க்க வந்தேன் அப்போ உங்களை பார்க்க வந்தேன்னு மட்டும் சொல்லுங்க” என்று சொல்லி அழைத்துச் சென்றான். அவன் பைக்கை தன் காரில் பின் தொடர்ந்தாள் அபிலாஷா.

வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு அவளை வரவேற்றவன் “அம்மா… அச்சு யார் வந்திருக்கா பாருங்க” என்று உள்ளே குரல் கொடுக்க பார்வதி அக்சயா இருவரும் வந்து

“வாம்மா… அபி எப்படி இருக்க? நானே உங்கூட பேசனும்னு நந்தா கிட்ட கேட்டுட்டே இருந்தேன். வாம்மா உள்ளே..‌” என்று மகிழ்வாக பேசி வரவேற்க

“வாங்க… உட்காருங்க..‌” அக்சயா கூறினாள். சிறு புன்னகையோடு உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்த அபிலாஷா “உங்களுக்கு இப்போ உடம்புக்கு பரவாயில்லையா அம்மா… நானும் உங்களைப் பார்த்து பேச நினைச்சேன் ஆனா வேலை சரியா இருக்கும்.” என்று பேச

“எனக்கு என்னமா நான் நல்லா இருக்கேன். ஆமா… என்ன சாப்பிடுற நீ?” என்று விசாரிக்க

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ம்மா நீங்க உட்காருங்க… அச்சு… எப்படி இருக்க உன் படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்று சாதாரணமாக அபிலாஷா கேட்க அவளை கூர் பார்வை பார்த்த அக்சயா

“என்னை அண்ணா மட்டும் தான் அச்சு னு கூப்பிடுவாரு அம்மாவே சில நேரம் தான் அப்படி கூப்பிடுவாங்க… உங்களுக்கு எப்படி அந்த பெயர் தெரியும்?” அக்சயா சந்தேகமாக கேட்க

முதலில் முழித்த அபிலாஷா “அது ஜூவல்லரி ஷாப்ல அம்மா அப்படி கூப்பிட்டாங்க. அப்பறம் உங்க அண்ணா ஹாஸ்பிடல்ல அம்மா இருந்தப்போ அப்படி கூப்பிட்டாரே… அதான் மைண்ட் ல ரிஜிஸ்டர் ஆகிடுச்சு..” என்று சமாளித்து கூற

“ஓ…ஹோ சரி நீங்க எப்படி கரெக்டா அண்ணா கூட வந்தீங்க?” என்று கையை கட்டிக் கொண்டு கேள்வி கேட்க

“அது… அவங்க ஃப்ரண்ட் யாரோ இந்த ஏரியால இருக்காங்களாம் அச்சு.. அவங்களை பார்த்துட்டு போகும் போது என்னை பார்த்து அம்மாவை நலம் விசாரிச்சாங்க அதான் நான் கூட்டிட்டு வந்தேன்.” அபிநந்தன் சொல்ல ஆமோதிப்பாக தலையசைத்தாள் அபிலாஷா.

“அப்படியா? இந்த ஏரியால உங்க ஃப்ரண்டா? ஆச்சரியம் தான்..‌ ஆமா அவங்க பெயர் என்ன?” அச்சு துருவி துருவி கேட்க

“ஏன்டி இது இப்படி ரொம்ப முக்கியமா?” பார்வதி கடிந்து கொள்ள

“இருக்கட்டும் அம்மா… அச்சு நான் சொன்னா உனக்கு தெரியுமானு தெரியல… பக்கத்து காலணில புதுசா ஒரு வீடு வாங்கி வந்திருக்காங்க..‌ கீர்த்தனா சதீஷ் னு… அவங்க தான்…” என்று சொல்ல

“ஓ… கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது இப்போ புதுகுடித்தனமா இங்க வீடு வாங்கி வந்திருக்காங்களே… அதுவும் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் கம்யூட்டர் கம்பெனில வேலை செய்றாங்க அவங்கதானே மா?” பார்வதி கேட்க

“ஆமா அம்மா… உங்களுக்கு அவங்களை தெரியுமா?” அபிலாஷா ஆச்சரியம் கொள்ள

“ஒரே ஏரியா தெரியாம எப்படி… அந்த பொண்ணு என்கிட்ட தான் துணி எல்லாம் தைக்க கொடுக்கும். அந்த பையனோட அம்மா கூட கொஞ்ச நாள் வந்து இவங்க கூட இருந்திட்டு போனாங்க ரொம்ப நல்ல மனுஷி நல்லா பழகுவாங்க…” என்று பார்வதி சொல்ல

“ஆமா சதீஷ் அம்மா ரொம்ப ஸ்வீட்..‌ நான் சதீஷ் கீர்த்தனா பவி ஜெனி எல்லாரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.. கீர்த்தனா சதீஷ் லவ் மேரேஜ்.. அவங்க மேரேஜ் அப்போ நான் வெளியூர்ல இருந்தேன். வீடு கிரகப்பிரவேசம் அப்போவும் வேலையால வர முடியாம போச்சு…

ரொம்ப நாளா வா வா னு ரெண்டு பேரும் கூப்பிட்டாங்க..‌ இன்னைக்கு நேரம் கிடைச்சது. அவங்களை பார்த்துட்டு வரும் போது தான் உங்க பையனை பார்த்தேன்.” என்று சொல்லி முடிக்கவே நாக்கு உலர்ந்த உணர்வு அபிலாஷாவிற்கு…

சரியாக பெரிய டம்ளர் நிறைய மோர் கலந்து எடுத்து வந்தான் அபிநந்தன். 

“அச்சோ நந்தா நீ ஏன்பா இதெல்லாம் பண்ணிட்டு.. ஏன்டி பொம்பளை பிள்ளை வந்தவங்களுக்கு குடிக்க சாப்பிட எதுவும் கொடுக்காம வாய் பார்த்திட்டு க்ராஸ் கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்று மகளை பொரிந்து தள்ளியபடி நந்தன் கொண்டு வந்ததை வாங்கி அபிலாஷாவிற்கு கொடுத்தார் பார்வதி.

“அம்மா பையன் பொண்ணு னு இப்படி பிரிச்சு பேசாதீங்கனு எத்தனை முறை சொல்லியிருக்கேன். ஏன் இந்த வேலையெல்லாம் ஆண்கள் செய்யக்கூடாதா?” என்று கேட்டவனை ரசித்து பார்த்தாள் அபிலாஷா.

அதை அவதானித்த அக்சயா “ம்க்கும்” என்று தொண்டையை செரும அபிநந்தன் அறைக்குள் சென்று விட அபிலாஷா பார்வையில் தாழ்த்திக் கொண்டாள் சிறு வெட்கத்தால்…

“அப்பறம் உன் வீட்ல யாரெல்லாம் இருக்காங்கமா? எங்க அச்சுவை விட பெரிய பொண்ணா இருப்ப… ஆனா இன்னும் கல்யாணம் ஆன மாதிரி தெரியலை.. அதான்” என்று பார்வதி தயங்கி கேட்க வந்ததை கேட்காமல் நிறுத்த

“என் அம்மா அப்பா ரெண்டு பேரும் நான் சின்ன வயசா இருக்கும் போதே ஒரு விபத்துல இறந்துட்டாங்க அம்மா… ஏதோ தொழில் போட்டியால எனிமீஸ் ஆக்ஸிடென்ட் பண்ணிட்டதா சித்தப்பா அடிக்கடி சொல்லுவாரு.” என்று அபிலாஷா சொல்ல உள்ளிருந்து அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான் அபிநந்தன்.

“அட பாவமே… தொழில் போட்டிக்காக இப்படி உயிரை எடுக்குற கல் நெஞ்சக்காரங்களை எல்லாம் எப்படி தான் அந்த ஆண்டவன் படைச்சானோ? ஏன்மா அப்போ உனக்கு குடும்பம் சொந்தம்னு?” என்று பார்வதி வருத்தமாக 

“சித்தப்பா சித்தி அத்தை மாமா அவங்க பசங்க னு எல்லாரும் என் கூட தான் இருக்காங்க அம்மா… ஆனாலும் அப்பப்போ அம்மா அப்பா இல்லனே ஏக்கம் வரத்தான் செய்யுது…” அபிலாஷா சோகமாக சொல்ல ஓடிச் சென்று அவளின் துயர் துடைக்க நினைத்த கரங்களை தன்னை கட்டுபடுத்தி கொண்டான் அபிநந்தன்.

“அம்மா என்ன இது வந்தவங்களை இப்போ நீ வருத்தப் பட வைச்சுட்ட? எங்க அம்மா அப்படித்தான்.. சரி நீங்க சொல்லுங்க உங்களுக்கு பூ வைக்க ரொம்ப பிடிக்குமோ?” என்று கேட்க பார்வதி அபிலாஷா விழிக்க

“இல்ல உங்களை முதல்முறை கடையில பார்த்தப்போ தலை நிறைய பூ வைச்சிருந்தீங்க… செகண்ட் டைம் கோவில்ல பார்த்தப்போவும் வைச்சிருந்தீங்க. இப்போவும் தலை நிறைய பூ இருக்கு.. இந்த காலத்துல யாரும் அப்படி வைக்கிறது இல்ல… ஏன் நானே அப்படி வைச்சுக்க மாட்டேன்.” என்று அக்சயா கேட்க மென்னகை புரிந்தாள் அபிலாஷா.

“ஆக்சுவலா என்னை விட அம்மாக்கு பூ வைச்சுக்க பிடிக்கும். அதுவும் மல்லிகை பூ.. சின்ன வயசுல அவங்க தலை நிறைய பூ வைச்சுட்டு எனக்கும் ரெட்டை ஜடை போட்டு பூ வைச்சுட்டு அழகு பார்ப்பாங்க.. அம்மா போன அப்பறம் நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன்… அம்மா வாசம் இல்லாம தூங்ககூட முடியாது. 

அதான் சின்ன வயசுல அவங்க நியாபகமா தினமும் பூ வைச்சுப்பேன். அப்பறம் அதுவே பழக்கமாகி இப்போ இந்த மல்லி பூ வாசம் எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிட்டு.. இந்த வாசம் என்கூட இருந்தா அம்மா என்கூட இருக்கிற மாதிரி ஒரு எண்ணம்..‌” என்று அபிலாஷா சொல்ல

‘அது என்னவோ உண்மை தான்மா… நமக்கு ரொம்பவே பிடிச்சவங்க நம்மை விட்டு போகும் போது அவங்களை நினைச்சு காலம் தள்ள நமக்கு இப்படி பல நினைவுகளை பரிசா தந்திட்டு போவாங்க..‌ இதோ இந்த வீடு… எங்களுக்கு கல்யாணம் ஆகும் போது பக்கத்துல ஒரு குடிசைப்பகுதில தான் வாழ்ந்தோம். அப்பறம் நந்தன் பிறந்த பிறகு சிறுக சிறுக சேர்த்து இந்த வீட்டை கட்டினோம். 

இந்த வீடு சின்னது தான் இதுல என் புருஷனோட வாழ்ந்ததும் கொஞ்ச நாள் தான்.. ஆனா ஆயுசுக்கும் அவரோட நினைவு இருக்கிற மாதிரி நியாபகங்கள் இந்த வீட்ல நிறைய இருக்கு. அது புரியாம இந்த அச்சு வீட்டை மாத்தலாம் வேற வீட்டுக்கு போகலாம்னு அடிக்கடி சொல்லிட்டு திரியுறா..

ஆனா என் பொண்ணை குறை சொல்லவும் முடியாது. நீயே பார்க்குறியே… இந்த வீடு ரொம்ப சின்னது. ஒரே ஒரு ரூம் தான் இருக்கு. அந்த காலத்துல நான் என் வீட்டுக்காரர் என் புள்ளைங்க வாழ இந்த வீடு போதுமானதா இருந்தது.. ஆனா இப்போ என் புள்ளை வயசு பொண்ணை இந்த வீட்ல வச்சுட்டு அவன் கல்யாணம் பண்ணிக்க தயங்குறான்..‌ ம்கூம் இதுக்கெல்லாம் எப்போதான் மாற்றம் வருமோ?” என்று பார்வதி அவர் போக்கில் புலம்பிக் கொண்டே இருக்க


“அம்மா போதும் அவங்களை போர் அடிக்காதே” என்று அடக்கினாள் அக்சயா.

‘ஓ… அப்போ நந்தன் என் லவ் அக்சப்ட் பண்ண தயங்குறதுக்கு இதுதான் காரணமா’ என்று புரிந்து கொண்டாள் அபிலாஷா.

சற்று நேரம் பேசிவிட்டு அபிலாஷா விடைபெற அபிநந்தன் வெளியே வந்த விடை கொடுத்தான். “அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போம்மா…” பார்வதி சொல்ல சரி என்று தலையசைத்து விடை பெற்றாள் அபிலாஷா.

இரவு அபிலாஷா நந்தனுக்கு அழைக்க ஏற்றவன் சாதாரணமாக பேசியபடி “சரி வீட்ல நடந்திட்டு இருந்த பிரச்சினை இப்போ எப்படி இருக்கு” என்று கேட்க

“நான் ஒரு முடிவு சொல்லாம பிரச்சினை ஓயாது நந்தன்… நான் முடிவு சொல்ல நீங்க தான் உங்க முடிவை சொல்லனும்.” என்று அவள் சொல்ல

“இதுக்கு ஏன் தயங்குறீங்க… நீங்க என்னை காதலிக்கிற விஷயத்தை உங்க வீட்ல சொல்ல வேண்டியது தானே அபிலாஷா…” என்று அபிநந்தன் இலகுவாக சொல்லி இருக்க

“என்ன சொன்னீங்க நந்து?” என்று இன்பமாக அதிர்ந்தாள் அபிலாஷா.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post