இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 27-02-2024

Total Views: 26102

“ஹலோ நந்தன்… நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா கொஞ்சம் பேசனும்…” மிகுந்த பதட்டம் குரலில் கொண்டு அபிலாஷா பேச

“சொல்லுங்க அபிலாஷா ஏன் ஒருமாதிரி பேசுறீங்க?” 

“அதுவந்து நீங்க கொஞ்சம் இங்கே என் வீடு வரைக்கும் வந்துட்டு போக முடியுமா?” என்று தயங்கி தயங்கி கேட்க

“வீட்டுக்கா என்னாச்சுங்க ஏதாவது ப்ராப்ளமா?” என்று இவன் பதற

“இல்லைங்க அதுவந்து… நீங்க வாங்களேன்…” என்று மீண்டும் சொல்ல

“அபிலாஷா நீங்க இப்படி சொல்லும் போதே பதட்டமா இருக்கு என்னனு சொல்லுங்க ப்ளீஸ்…” என்று அபிநந்தன் கேட்க

“நீங்க தானே நான் உங்களை லவ் பண்றதை வீட்ல சொல்லச் சொன்னீங்க… சொன்னேன். அவங்க நம்பல உங்களை நேர்ல பார்த்தா தான் நம்புவாங்களாம்… ப்ளீஸ் வாங்க நந்தன்..” அவள் கெஞ்சலாக சொல்ல கொஞ்சம் கரைந்து தான் போனான்.

ஏற்கனவே அன்று அவளிடம் உன் காதலை வீட்டில் சொல் என்று சொல்லிய போதே தன் மனதில் இருந்த காதலை அறிந்திருந்தான் அபிநந்தன். ஆனால் வீட்டின் சூழல் அதை வெளிப்படுத்த இயல வில்லை…

சில நொடிகள் யோசித்தவன் “சரி உங்க வீட்டு அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க அபிலாஷா.” என்றிட

“அப்போ நீங்க வரீங்களா? ஓ காட்… தாங்க்யூ நந்தன் நான் ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன். நீங்க நேர்ல வாங்க நாம பேசலாம்.” என்று வீட்டு முகவரி சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள் அபிலாஷா.

‘உஃப்’ என்று உதட்டை குவித்து காற்றை ஊதி தள்ளியவன் ‘என்ன இது அவங்க கூப்பிட்டாங்க னு நாமளும் வரதா ஒத்துக்கிட்டோம்‌. இப்போ அவங்க ஃபேமிலி முன்னாடி போய் நின்னு என்ன பேசுவேன்?’ என்று யோசிக்க

‘அதான் அந்த பொண்ணை நீ காதலிக்கிற தானே… அப்போ அது வீட்ல இது சம்பந்தமா நீதான் பேசனும்.’ என்று மனம் சொல்ல சரி என்று கிளம்பினான்.

போகும் வழியில் எல்லாம் ‘அபிலாஷா அவங்க சித்தப்பா சித்தி அத்தை மாமா அவங்க பசங்க னு இருக்கிறதா சொல்லிருக்காங்க.. ஆனா யாரு எப்படி பட்டவங்கனு சொன்னதே இல்லையே…’ என்று யோசிக்க

‘ம்ம் அந்த பொண்ணு சொல்லாட்டி ஒருநாளாவது அதோட குடும்பம் பத்தி நீ கேட்டியா?’ என்று கேள்வியை முன் வைத்தது முரணான மனது.

இவ்வாறான யோசனையோடே அபிலாஷா சொல்லிய விலாசம் முன்பு தன் பைக்கை நிறுத்த செக்கியூரிட்டி “யாரு நீங்க என்ன விபரம்” என்று கேட்க

இவன் “அபிலாஷாவை பார்க்க வேண்டும்” என்று சொல்ல

“மேடமை பார்க்கனுமா அப்பாய்ண்மெண்ட் இருக்கா” என்று செக்கியூரிட்டி கேட்க

“இல்ல அவங்க தான் வரச் சொன்னாங்க..” என்று இவன் சொல்லியும் நம்பவில்லை அவர். “விடமுடியாது தம்பி என்று இப்படி சொல்லி யாராவது உள்ளே போவீங்க இவங்களை ஏன் உள்ளே விட்டனு கடைசியில அவங்க மாமாவும் சித்தப்பாவும் என்னை திட்டுவாங்க என் வேலைக்கு உலை வைச்சிடாதீங்க… கிளம்புங்க” என்று சொல்லி கொண்டு இருக்க

“செக்கியூரிட்டி கேட்டை திறந்து அவரை உள்ளே விடுங்க முதல்ல.” ஆளுமையான குரல் அடையாளத்தில் கூறினாள் அபிலாஷா. அடுத்த நொடி பவ்யமாக கதவை திறந்து உள்ளே போங்க சார் என்று மரியாதையுடன் கூறினார் அந்த செக்கியூரிட்டி.

“வாங்க நந்தன்… சாரி நான் நீங்க வரதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும்னு நினைச்சேன்… செக்கியூரிட்டி அப்படி நடந்ததுக்கு…” என்று அதற்க்காக மன்னிப்பு கேட்கும் முன்

“இட்ஸ் ஓகே அபிலாஷா இது அவரோட டியூட்டி… விடுங்க… பட் நீங்க சொன்னீங்கனு நானும் கிளம்பி வந்துட்டேன். பாருங்க செக்கியூரிட்டி கூட என்னை மதிக்க தயாரா இல்ல… ஆனா இந்த வீட்டுல இருக்கிற மத்தவங்க..” என்று அபிநந்தன் தயங்கி நிற்க

“என்ன நந்தன் அவருக்கு நீங்க யாருன்னு தெரியாது… அதனால தானே..” சமாதானம் சொல்ல

“அதைத்தான் நானும் சொல்றேன்” அபிநந்தன் அழுத்தி சொல்ல

“இதோ பாருங்க எனக்கு வாழ்க்கை முழுக்க தேவையான அன்பை பாசத்தை தருவதற்கு உங்களால உங்க குடும்பத்தால தர முடியும். வேற என்ன வேண்டும்?” என்று சிலாகத்தபடியே உள்ளே அழைத்துச் சென்றாள் அபிலாஷா.

அறையில் இருந்தவள் திடீரென வேகமாக வாசல் பக்கம் ஓட ஹாலில் இருந்த சித்தப்பாவும் மாமாவும் புரியாமல் எழுந்து பின்னால் வர “யாரும்மா அது கேட்கிட்ட வந்த உடனே அக்கா இறங்கி ஓடுறா யாரும்மா அது அவ்வளவு முக்கியான ஆளு?” என்று அறை ஜன்னல் வழியே பார்த்த சித்தப்பா மகள் திவ்யா கிச்சனில் வந்து கேட்க அங்கிருந்த அத்தையும் சித்தியும் வெளியே வந்த போது மகிழ்வாக பேசியபடி அபிநந்தனை வீட்டினுள் அழைத்து வந்து கொண்டு இருந்தாள் அபிலாஷா.

அவன் வரும்போதே யார் என்று புரிந்தாலும் புரியாதது போல காட்டிக் கொண்டனர் பெரியவர்கள்.

“அபி யாரும்மா அது?” முகச்சாயம் போல சிரிப்பை பூசிக் கொண்டு கேட்டாள் அபிலாஷாவின் சித்தி ரூபவதி.

“சித்தப்பா மாமா.. இவரு தான் அபிநந்தன்…” என்று அறிமுகம் செய்தாள் அபிலாஷா.

“ஓ…” என்று ஏளனமாக இழுத்தவர் “ஏன் அபி இவனை விட எந்த விதத்துல என் பையன் முகில் குறைஞ்சு போய்ட்டான்…” கொஞ்சம் எகிறலாகவே கேட்டாள் அபிலாஷாவின் அத்தை சுகந்தி.

“ம்கூம் சுகந்தி உன் பையனுக்கும் இந்த பையனுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்… ஆனா என் வீட்டுக்காரர் பார்த்த மாப்பிள்ளை அப்படியா? ஏழு பிஸ்னஸ் இருக்கு… வீட்டுக்கு ஒரே பையன் அந்தஸ்து கௌரவத்துல நமக்கு இணையானவங்க… ஏன் அபி அப்படி பையனை விட்டு இப்படி ப்ளாட்பாரத்துல வாழ்ற பையன கட்டிக்க உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?” நீட்டி முழக்கினாள் ரூபவதி.

“இதோ பாரு ண்ணே உன் மனைவியை என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசச்சொல்லு… என்ன வந்த பையனை பத்தி பேசுற மாதிரி என் பையனை ஒன்னும் இல்லாதவனை பேசுற மாதிரி பேசுறாங்க…” சுகந்தி சொல்ல

இதுவரை மரியாதையாக பேசிக்கொண்டு இருந்தவர்கள் அபிநந்தனை முன் வைத்துக் கொண்டு அவனை தாழ்வாக பேசுவது அபிலாஷாவிற்கு சங்கடத்தையும் வருத்தத்தையும் தந்தது.

அபிநந்தனுக்கு அது தன் சுயமரியாதையை தூண்டும் விதமாக இருக்க அபிலாஷாவிற்காக கோபத்தை அடக்கி நின்றான் நந்தன்.

மற்றவர்கள் இந்த சண்டையை ஆர்வமாக பார்த்திருக்க “கொஞ்சம் நிறுத்துறீங்களா ப்ளீஸ்…” என்று அபிலாஷா கத்த அமைதி அடைந்தனர் இருவரும்.

“அத்தை… சித்தி… நான் முகிலையோ இல்லை நீங்க காட்டின எந்த மாப்பிள்ளையும் கட்டிக்காத கோபத்துல நீங்க பேசிட்டு இருக்கீங்க புரியுது… ஆனா அபிநந்தன் வசதி தகுதி பார்த்து என் மனசுல இடம் தரலை… எனக்கு அவரோட குணம் பிடிச்சிருந்தது.

அவர் அம்மாவோட பாசம் அக்கறை அவர் தங்கச்சிக்கு நம்ம திவ்யா வயசுதான் இருக்கும் அவளுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கு தெரியுமா.. எனக்கு அதுதான் பிடிச்சிருந்தது. மத்தபடி இந்த பணம் பதவி ஸ்டேட்டஸ் இதெல்லாம் என் மனசு பார்க்கவே இல்லை..” என்று முழுமூச்சாக அபிலாஷா சொல்லி முடிக்க

“அதைத்தான் அபி நாங்களும் கேட்குறோம்.. இத்தனை வருஷம் உன் சொந்தக்காரங்க நாங்க காட்டாத பாசத்தையா இவன் இந்த குறுகிய காலத்துல காட்டிட்டான்… ஒருவேளை அது ஆமானு நீ சொன்னா கண்டிப்பா சொல்றேன் அதெல்லாம் நடிப்பா தான் இருக்கும்.” உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தார் அபியின் மாமா கிருபாகரன்.

“நடிப்பா அதுக்கான அவசியம் என்ன மாமா?” கோபமாக அபி கேட்க

“வேற என்னமா எல்லாம் உன் சொத்து தான்…” அலட்சியமாக பதில் தந்தார் சித்தப்பா சுரேந்தர்.

இவர்கள் பேசப்பேச தாடை இறுக கை முஷ்டிகள் இறுக்கிக் கொண்டு தன்னை கட்டுப் படுத்த போராடிக் கொண்டு இருந்தான் அபிநந்தன்.

இயற்கையாகவே அவனுக்கு சுயமரியாதை அதிகம். அதுவும் அவன் தந்தை இறந்த பிறகு அவனின் குடும்ப பாரத்தை தன் தோளில் சுமந்தவன் அப்போது கூட தன் சுயமரியாதைக்கு எந்த இழுக்கும் வர விட்டதே கிடையாது.

இத்தனை அவமானங்கள் தாங்கி இங்க நிந்க அவனுக்கு விருப்பம் இல்லை தான்… பொறுத்துக் கொண்டு அமைதி காத்தான் அபிலாஷாவிற்காக…

“என்ன பேசுறீங்க சித்தப்பா… இவருக்கு என் சொத்து மேல ஆசைனு சொல்றீங்களா? கண்டிப்பா கிடையாது… சொல்லப்போனா அபிநந்தன் நான் இவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்த பொண்ணுனு சொன்ன அப்பறம் தான் என் கூட பழகவே ரொம்ப யோசிச்சாரு. ஒரு நிமிஷம் ஒரு நொடி கூட அவரு பணத்தை பத்தி சொத்தை பத்தி பேசுனதே ஒரு இல்ல…” நந்தனை அவமதித்த கோபத்தில் அபிலாஷா பேச

“அதெப்படி… ஏன் அபி ஆரம்பத்துலயே பணத்தை பத்தி பேசுனா நீ உஷாரா ஆயிடுவல்ல..‌ அதான் அடக்கி வாசிக்கிறான்… வேணும்னா இந்த சொத்து எதுவுமே அவனுக்கு உரிமை கிடையாதுனு சொல்லி பாரு அடுத்த நிமிஷம் காதலும் வேணாம் ஒன்னும் வேணாம் னு ஓடிடுவான்…” என்று நக்கலாக ரூபவதி சொல்ல மற்றவர்கள் கேலியாக சிரிக்க அபிநந்தன் கோபம் எல்லை மீறி இருந்தது.

“இதோ பாருங்க நீங்க எல்லாரும் என்னை சின்ன வயசுல இருந்து வளர்த்தீங்க என்னை பத்திரமா பார்த்துக்கிட்டீங்க..‌ ஆனா அதுக்காக நந்தனை தப்பா பேச உங்க யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.” உக்கிரமாக கூறினாள் அபிலாஷா.

என்னதான் இத்தனை காலம் தொழிலை அவள் திறம்பட நடத்தி வந்தாலும் வீட்டிலும் அவள் பேச்சிற்கு மறுபேச்சு இல்லாமல் ஆளுமை செய்தாலும் யாரையும் பெரிதாக ஏன் சத்தமாக கூட பேசியதில்லை அபிலாஷா. 

இன்று இவனுக்காக பேசியதில் வீட்டினர் இவனை ஏதோ விரோதி போல பார்க்க அபிநந்தன் தன் கண்கள் சிவக்க நின்று கொண்டு இருந்தவன் அபிலாஷா அருகில் வர

“நந்தன் ஆக்சுவலி சாரி… இவங்க எல்லாம் இப்படி பேசுனதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று வருந்த

“அபிலாஷா நீங்க என்னை உண்மையா லவ் பண்றீங்களா?” சிவந்த கண்கள் அழுத்தமான வார்த்தைகள் முயன்று முகத்தை அமைதியாக வைத்து கேட்ட அபிநந்தனை உறுத்து விழித்த அபிலாஷா

“ஆமா நந்தன் நான் உங்களை லவ் பண்றேன்…” என்றிட

“உங்க ஃபேமிலில என்னை பத்தி சொன்னாங்களே அப்புறமும் நீங்க லவ் பண்றீங்களா?” மீண்டும் அழுத்தி கேட்க

“யார் என்ன சொன்னாலும் எனக்கு உங்களை தெரியும் நந்தன் ஐ லவ் யூ எவர் அண்ட் எவர்…” உறுதியான குரலில் சொல்ல

“அப்போ எனக்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் இப்போ வந்திடுறேன்..‌” என்று வாசலை நோக்கி சென்றவனை அபிலாஷா புரியாமல் பார்க்க மற்றவர்களோ ‘இவன் இப்படி ஓடனும் னு தானே நாங்க அவ்வளவு பேசுனோம்… எப்படியோ எங்க விருப்பம் நிறைவேறிடுச்சு…’ என்று மகிழ்ந்து கொண்டனர் மனதுக்குள்.

தொடரும்…




Leave a comment


Comments


Related Post