இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 28-02-2024

Total Views: 26001

“உங்க வீட்டு ஆளுங்க சொன்ன மாதிரி எனக்கு வசதி இல்லை இப்போவும் நீங்க என்னை உண்மையா லவ் பண்றீங்களா?” என்று அபிநந்தன் கேட்க

“யார் என்ன சொன்னாலும் எனக்கு உங்க மேல இருக்கிற காதல் மாறாது நந்தன்..” உறுதியான குரலில் அபிலாஷா சொல்ல

“அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதோ வரேன்.” என்று வெளியே சென்று விட அபிலாஷா குழப்பமாக அவன் சென்ற வழி பார்த்திருக்க ‘இவன் இப்படி ஓடனும்னு தானே இவ்வளவு நேரம் நாங்க இப்படி பேசுனோம்.’ என்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டனர் அவளின் உறவினர்கள்.

“என்னமா அவனுக்கு ஆதரவா எங்ககிட்ட இவ்வளவு கோபப்பட்டு பேசிட்டு இருந்த இப்படி அவன் எதுவும் சொல்லாம ஓடிட்டான்.” கிருபாகரன் நக்கலாக அபிலாஷாவிற்கு கண்ணீர் திரண்டது‌.

“நந்தன் வரேன்னு சொல்லிட்டு போயிருக்காரு கண்டிப்பா வருவாரு…” என்று சொல்லி விட்டு அவள் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள் அபிலாஷா.

அறைக்குள் வந்தவள் அபிநந்தனுக்கு தொடர்ந்து அழைக்க அவன் எடுக்கவில்லை… வழிந்த கண்ணீரை துடைக்க மறந்து அமர்ந்திருக்க மீண்டும் ஒரு முறை அவனுக்கு அழைக்க இம்முறை அழைப்பை ஏற்று

“இதோ வந்துட்டு இருக்கேன் லாஷா…” என்று உரிமையாக கூறியிருக்க அந்த நிலையிலும் மெல்லிய நகை இதழ்களில் பூசிக் கொண்டாள் அபிலாஷா.

அடுத்த கால்மணி நேரத்தில் வாசலில் மீண்டும் அபிநந்தனின் பைக் சத்தம் கேட்க ஆவலாக வெளியே வந்தாள் அபிலாஷா.

இம்முறை செக்கியூரிட்டி பணிவாக கேட்டை திறந்து விட உள்ளே வந்து வீட்டின் முன்பு பைக்கை நிறுத்த 

“என்னங்க அப்படியே போய்டுவான்னு பார்த்தா திரும்ப வரான்..?” சுகந்தி சொல்ல

“வந்து மட்டும் என்ன பண்ணிட போறான் விடு சுகந்தி திரும்ப அவனோட சுயமரியாதையை சீண்டுற மாதிரி நல்லா கேட்க நாலு கேள்வி ரெடி பண்ணி வைச்சுக்கோ” என்று கிருபாகரன் அறிவுரை சொன்னார்.

“நந்தன்… என்னாச்சு நந்தன் ஏன் திடீர்னு போனீங்க.. ஆக்சுவலி இவங்க பேசுன எல்லாத்துக்கும் நான் சாரி சொல்றேன்.” என்று அபிலாஷா சொல்லிக்கொண்டு இருக்க அவன் கையில் இருந்த கவரை அவளிடம் நீட்டினான் அபிநந்தன்.

அவள் புரியாமல் பார்க்க “என்னை உனக்கு பிடிக்கும்ல லாஷா?” அவள் நயனங்களை பார்த்து கேட்டிருக்க

“யெஸ் நந்தன்…” அவள் மொழிய

“இதுல உனக்கு ட்ரெஸ் இருக்கு லாஷா… இந்த வீட்டு பணத்துல இருந்த உனக்கு எதுவும் வேண்டாம் சேஞ்ச் பண்ணிட்டு வா…” என்று சொல்ல வாங்கிக் கொண்டு அறைக்கு ஓடினாள் வேகமாக…

மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் வாயை பிளந்து நின்றிருக்க அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி ஹாலுக்கும் வாசலுக்கும் இடையே இருந்த வராண்டாவில் நின்று கொண்டான் அபிநந்தன்.

கவரை பிரித்து பார்த்த அபிலாஷா அசந்து தான் போனாள். அவளுக்கு தகுந்தவாறு உடை அதற்கு பொறுந்தும் காதணி வளையல் ஏன் ஒரு ஸ்டிக்கர் பொட்டு அட்டை கூட உள்ளே இருக்க அவனின் அன்பில் உயர்ந்து நின்றான் அவள் மனதில்…

அனைத்தையும் அணிந்து கொண்டு இவள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் அந்த அறையிலேயே வைத்துவிட்டு இறங்கி வந்தாள் அபிலாஷா.

தனக்காக இத்தனை செய்தவனை கர்வமாக அவள் பார்க்க முதல் முறை அப்பட்டமாக அவள ரசித்து பார்த்தான் அபிநந்தன்.

“நந்தன்…” அவள் குரலில் தெளிந்தவன் 

“லாஷா… என்னால வாழ்வோட கடைசி நிமிடம் வரை உனக்கு தேவையானதை கவனிச்சுக்க முடியும்னு நம்பினா நீ என்னோட வரலாம்…” என்று சொல்லியிருக்க

“என்னோட வாழ்க்கைக்கு நீங்க மட்டும் போதும் நந்தன் எனக்கு இனி எல்லாமே நீங்களும் உங்க குடும்பமும் தான்… இந்த சொத்து சுகம் எதையுமே நான் இதுவரைக்கும் பெருசா நினைச்சதே இல்ல…” அபிலாஷா உருக்கமாக கூற 

“சரி நாம போகலாம் லாஷா… ஹான்.. உன் ஃபோன் கூட வேண்டாம்..” என்று சொல்ல

“அதை நான் ரூம்லயே வைச்சுட்டு வந்திட்டேன் நந்தன்.. நாம போகலாம்.” என்றவள் தன் குடும்பத்தினர் பக்கம் திரும்பி பார்த்தவள், “ இத்தனை வருஷம் என்னை வளர்த்தீங்க.. அதுக்கு ரொம்ப நன்றி.. ஆனா அதுக்கு காரணம் நீங்க என் பெயர்ல இருக்கிற சொத்துகளை அனுபவிக்க நான் தடை போட்டிட கூடாதுனு தானே… 

இனி தடை விதிக்க யாரும் இல்லை இந்த சொத்து சுகம் எதுவுமே எனக்கு தேவையில்லை… நான் கிளம்பறேன்.” என்றவள் அவர்கள் பதிலுக்கு காத்திராமல் வாங்க நந்தன்.. என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் அபிலாஷா.

“ஏங்க உங்க அண்ணன் பொண்ணு பார்த்தீங்களா இத்தனை வருஷம் வளர்த்த நன்றி கூட இல்லாம இப்படி பேசிட்டு போறா…” என்று ரூபவதி கண்ணீர் கசியவிட

“ஆளில்லாத தியேட்டர்ல யாருக்கு அண்ணி நடிச்சிட்டு இருக்கீங்க” என்று கேலி செய்தாள் சுகந்தி.

“ரூபா… சுகந்தி சொல்றது உண்மைதானே.. இந்த சொத்துக்காக தானே இத்தனை வருஷம் பாசமா இருக்கிற மாதிரி நடிச்சோம்.. இப்போ தான் சொத்து நமக்கே நமக்குனு ஆகிடுச்சே… விடு… கிருபா இனி நமக்குள்ள எந்த பாகுபாடும் இல்லாம சரி சமமா பிரிச்சுக்கலாம்…” என்று சொல்லி கொண்டே கால்மேல் கால் போட்டு கை இரண்டையும் பக்கவாட்டில் விரித்தபடி கூற

“என் பொண்டாட்டிக்கு வரவேண்டிய பங்கு சரியா வந்திட்டா நான் என்ன பிரச்சினை பண்ண போறேன்…” என்று கிருபாகரன் தன் பெருந்தன்மையை உணர்த்தினார்.

அபிநந்தனோடு பைக்கில் சென்ற அபிலாஷா செருப்பு கூட அணியவில்லை என்பதை கொஞ்சம் தள்ளி வந்து தான் பார்த்த நந்தன் ஒரு கடை முன்பு நிறுத்தியவன்

“அது… ட்ரெஸ் அச்சுக்கு வாங்கி பழக்கம் இருக்கு வாங்கிட்டேன்… பட் ஃபுட்வேர் வாங்க தெரியல..‌ நீ வழக்கமா போய் ஷாப்பிங் பண்ற அளவுக்கு பெரிய ஷாப்பிங் மால் இல்ல.. பட் குவாலிட்டி இங்க நல்லா இருக்கும்.” என்று அபிநந்தன் விளக்கம் சொல்ல

“இட்ஸ் ஓகே நந்தன் எனக்கு எல்லாமே கம்ஃபர்டபுள் தான்…” என்றபடி அவள் கடைக்குள் செல்ல சிறு புன்னகையோடு அவளை பின் தொடர்ந்தான். பின்னர் மீண்டும் இவர்கள் பயணம் தொடர சற்று தயக்கத்துடன் அவன் தோளில் கை வைத்தாள் அபிலாஷா. 

அபிநந்தன் உடலில் லேசான அதிர்வை வெளியிட “ரொம்ப தேங்க்ஸ் நந்தன்… எனக்கு இன்னைக்கு எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா? இன்னைக்கு ஒரே நாள்ல எனக்காக நீங்க என்னவெல்லாம் பண்ணிருக்கீங்க?” அவள் மகிழ்வாக சம்பாஷித்துக் கொண்டே வர பைக்கை நிறுத்தினான் அபிநந்தன்.

அவள் நிமிர்ந்து பார்க்க அபிநந்தன் வீடு வந்திருந்தது. இறங்கி அவனோடு சேர்ந்து நடந்து வாசலில் வந்து நிற்க பார்வதியும் அக்சயாவும் இவர்களை பார்த்து வாசலுக்கு வந்தனர்.

“நந்தா… என்னப்பா இந்த நேரத்துக்கு? அபிலாஷா வாம்மா” என்று அழைக்க

“என்ன அண்ணா இப்போவும் இவங்களை எதார்த்தமா பார்த்து தான் கூட்டிட்டு வந்தீங்களா…” கேலியாக கேட்டாள் அக்சயா.

“அம்மா அதுவந்து…” என்று சற்று தயங்கிய அபிநந்தன் “அம்மா… அபிலாஷா என்னை விரும்புறாங்க… இவங்க வீட்ல உள்ளவங்க வேற வரன் பார்த்ததுனால என்னை விரும்பினதை பத்தி சொல்லி என்னை அவங்க வீட்ல உள்ளவங்களுக்கு அறிமுகப்படுத்த கூப்பிட்டாங்க நானும் போனேன்..” என்றவன் அங்கிருந்தவர்கள் இவனை குறித்து அவமானமாக பேசியதையும் கூறியவன் அதற்காக தான் எடுத்த முடிவையும் கூற பார்வதி அக்சயா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் சில நொடிகள்..

அதிர்வில் இருந்து முதலில் தெளிந்தது பார்வதி தான்… “நந்தா ஏன் வெளியவே நின்னு பேசனும் உள்ளே அழைத்துச்சிட்டு வா… அச்சு.. அபியை கை பிடிச்சு உள்ளே கூட்டிட்டு வா…” என்று சொல்ல ஆச்சரியம் நீங்காமல் அன்னை சொன்னதை செய்தாள் அக்சயா.

“உட்காருமா…” என்றவர் அனைவருக்கும் குடிக்க தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு “சரி நந்தா..‌ இப்போ என்ன யோசிச்சிருக்க? அடுத்து என்ன செய்ய போற?” என்று கேட்க

“அது தான் எனக்கும் சரியா தெரியலம்மா..‌ அவங்க அப்படி பேசுனதும் ஏதோ வேகத்துல எல்லாம் அந்த முடிவு எடுக்கல… அங்க போய் நின்னதும் அவங்க சிரிப்புலயே ஒரு நடிப்பு இருக்கிறது தெரிஞ்சது ம்மா… அங்க அபிலாஷா இருக்க வேண்டாம்னு தோணுச்சு… ஆனா உடனடியா வாழ்க்கையில அடுத்த கட்டம் இதெல்லாம் யோசிக்கவே இல்ல…” அபிநந்தன் தெளிந்தும் தெளியாமல் இருப்பது போல பேச

“சரிப்பா…” என்ற பார்வதி “நீ என்னமா முடிவு எடுத்திருக்க?” அபிலாஷாவை பார்த்து கேட்க

“அம்மா… நந்தன் தான் என் வாழ்க்கைனு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன் அம்மா… இனி நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அதுல சரிதான்…” என்று அபிலாஷா சொல்ல

பார்வதி காலண்டரை எடுத்து ஒரு முறை தேதி எல்லாம் பார்த்து விட்டு “சரிப்பா நாளைக்கு நல்ல நாளா இருக்கு பக்கத்துல இருக்குற அம்மன் கோயில்ல கல்யாணத்தை கல்யாணத்தை வைச்சுக்கலாம்.

அக்கம் பக்கம் இருக்கிற ஒரு நாலஞ்சு குடும்பத்தை அழைச்சுக்கலாம்.. என்று சொல்லி விட்டு ஏன்மா அபிலாஷா உனக்கு ஃப்ரண்ட்ஸ் வேண்டியவங்க யாராவது இருக்காங்களா கூப்பிடனுமா?” என்று பார்வதி அவளை பார்த்து கேட்க

“அம்மா… சொந்தம் வேண்டியவங்க அதெல்லாம் யாரும் இல்லை… ஆனா என் ஃப்ரெண்ட்ஸ் இரண்டு மூன்று பேரை கூப்பிட்டுக்கலாமா?” என்று கேட்க

“தாராளமா அபி.. அவங்களை ஃபோன் பண்ணி வரச் சொல்லு” என்று சொல்ல தலையை சொறிந்தவள் “இல்லம்மா எனக்கு அவங்க யார் நம்பரும் தெரியாது.. ஃபோன் எடுக்க வேண்டாம் னு நந்தன் சொல்லிட்டாரு” என்று சொல்ல

“அது ஒரு ரெண்டு மூணு நாள்ல புது ஃபோன் வாங்கிடலாம்..” அபிநந்தன் சொல்ல

“அது பரவாயில்ல நந்தன் ஆனா என்னோட லைஃப் ல எப்போதும் அக்கறை உள்ள பவி ஜெனி அவங்க பேரண்ட்ஸ்.. இருக்கனும்னு விரும்புறேன்..” என்று சொல்ல

“உங்ககிட்ட தானே ஃபோன் இல்ல உங்க ஃப்ரண்ட் கீர்த்தனா.. அவங்ககிட்ட இருக்குமே” என்று அச்சு யோசனை சொல்ல

“ஆமால்ல… டேய் நந்தா.. சாயங்காலம் அபிலாஷாவை கூட்டிட்டு போய் அந்த பொண்ணு வீட்லயும் சொல்லிட்டு அந்த பொண்ணு மூலமா அபி சொல்ற எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு வந்திடுங்க.. நான் மதியத்துக்கு உங்களுக்கு சேர்த்து சமைக்கிறேன்.” என்று பார்வதி உள்ளே செல்ல அவரை பின் தொடர்ந்த அக்சயா

“அம்மா… என்னமா இவ்வளவு ஈசியான அம்மாவா இருக்க? உன் பையன் திடீர்னு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கான். நீ என்னடான்னா சட்டுனு அவனுக்கு அந்த பொண்ணோட கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ற?” அக்சயா ஆச்சரியமாக கேட்க அவளை எரிக்கும் படி பார்த்தார் பார்வதி.


தொடரும்…





Leave a comment


Comments


Related Post