இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நிறங்கள் தந்த நிஜம் அவள் 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK015 Published on 29-02-2024

Total Views: 15972

நிறங்கள் தந்த நிஜம் அவள் 4

ஆறுவயதில் சைக்கிள் ஓட்டுகிறேன் என்கிற பெயரில் கீழே விழுந்து வாறி நெற்றியில் அடிபட்டு ரத்தம் கொட்டியது ஆதிராவுக்கு. பதறி அடித்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தையல் போட பட்டது வெட்டு பட்ட இடத்தில். அதன் பின் நாட்கள் செல்ல, காயம் ஆறி வடுவாக அந்த வெட்டு மாறி போனது. அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கு இடையில் வெட்டு தழும்பு அசிங்கமாக இருக்கவே சங்கவி அவளுக்கு மை வைத்துவிட்டார். அதனாலே ஆதிராவுக்கு இப்படி ஒரு வெட்டு இருக்கிறது என அவள் குடும்பத்தினரை தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஷாலு முதற்கொண்டு.

ஆனால் அந்த வெட்டு காயத்தை கூட அவன் எப்படி சரியாக வரைந்திருந்தான்?? புருவத்தை நீவி கொண்டு சோஃபாவில் குஷனை கட்டி பிடித்த படி அமர்ந்திருந்தாள் ஆதிரா.. துருவனும் அவன் வரைந்த ஓவியமும் அவள் மனதை மூளையை ஆக்கிரமிப்பு செய்திருக்க, சுற்றம் மறந்து அமர்ந்திருந்தாள்.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த ரியோ சோர்வாக லாப்டாப் பேகை வைத்துவிட்டு அமர, அவன் வந்தது கூட தெரியாமல் துருவன் நினைவிலே மூழ்கி போயிருந்தாள். இவ என்ன இப்டி இருக்கா?? என்று நினைத்தவன் "ஆதி..  என்னாச்சு??" அவள் தோள் பற்றி குலுக்க, "ஆங்.. அ.. அண்ணா.." தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல விழித்தாள்.

"என்ன பிரீஸ் ஆகி உக்காந்திருக்க??" என்று கேட்க

"ஒன்னும் இல்ல ண்ணா.." என்று தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அவள் முதுகை வெறித்தவன் எப்பவும் எண்ணையில் போட்ட கடுக்காக வெடித்து சிதறுபவள் இன்று அமைதியாக இருக்கிறாளே?? என்று நினைத்த படி தன் அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி வந்தான்.

இரவு உணவு உண்ணும் போது கூட அவள் ஒரு நிலையாக இல்லை. எதையோ பறி கொடுத்தவள் போல பெயருக்கு உணவை கொறித்துவிட்டு "எனக்கு போதும்.." என்று எழுந்து சென்றுவிட்டாள்.

"என்னாச்சு இவளுக்கு?? ஈவினிங்ல இருந்து ஒரு மாதிரி இருக்கா.." சங்கவி புலம்பினார்.

உண்டு முடித்து எழுந்த ரியோ கை சுத்தம் செய்து கொண்டு ஆதிரா அறைக்கு சென்றான்.

"ஆதி.." என்றழைக்க "என்ன ண்ணா??" என்றாள் வழக்கு இல்லாத சோர்வான குரலில்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க??"

"ஒன்னும் இல்ல ண்ணா.. தலை வலிக்குது.." என்றாள் அவனை பார்க்காமலே. அவனை நேருக்கு நேர் பார்த்தால் கண்டு பிடித்து விடுவானே.. வேறு எதுவும் அவன் கேட்கவில்லை. ஏதோ இருக்கிறது என்று மட்டும் உணர்ந்து கொண்டவன் அவளாகவே சொல்லட்டும் என்று தன் அறைக்கு சென்றான்.

விட்டத்தை பார்த்த படி படுத்திருந்த ஆதியின் இமை மூடிய விழிக்குள் துருவன் பிம்பமாக வந்து செல்ல, "எனக்குன்னு பொறந்தவன் கற்பனைல கூட நான் இருக்கணும்.. அப்டி ஒருத்தன பாக்கும் போது நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.." என்று அன்னையிடம் ஆதி கூறியது அவள் செவியில் ரீங்காரமிட திடுக்கிட்டு கண் திறந்தாள்..

இங்கு துருவனுக்கும் அதே நிலை தான். ஏனோ தானோ என்று உண்டுவிட்டு படுக்கையில் புரண்டவனை கேள்வியாக பார்த்தார் அவன் தந்தை பாஸ்கர். எப்போதும் படுத்தவுடன் உறங்குபவன் இன்று அதிசயமாக நடு இரவு தாண்டியும் புரண்டு கொண்டிருக்கிறானே.. சரி இல்லையே என்று நினைத்தவர் அங்கிருந்து செல்ல, அவள் நினைவில் இருந்து மீண்டு வரமுடியாமல் வரைய ஆரம்பித்தான்.

வண்ண படம் தான். நளினம் கொண்டு அபிநயம் பிடித்து, நீண்ட சடை வீச, கை விரல்கள் மடக்கி, கண்ணால் நவரசம் காட்டும் நாட்டிய பெண்ணின் வரைபடம். விடிய விடிய அமர்ந்து வரைந்தவனுக்கு  ஆச்சர்யம். மீண்டும் அவளை தான் வரைந்த வைத்திருந்தான். அதற்கு எதிரில் அமர்ந்து "யார் நீ?? எதுக்காக என்ன டிஸ்டர்ப் பண்ற?? என் கற்பனைல நீ எப்படி நுழைஞ்ச?? அவன் ஓவியத்தில் சிரிக்கும் அவளிடம் கேட்டு கொண்டிருந்தவன் அப்படியே உறங்கியும் போயிருந்தான் அதிகாலை நேரத்தில்.

வாழ்க்கைமான நேரத்திற்குள் மெட்ரோ ஸ்டேஷன் வந்தவன் எஸ்கலேட்டரில்  ஏறிய போது இன்றும் அவள் வருவாளா?? அவள் அழகு வதனம் காணும் வாய்ப்பு கிடைக்குமா? என்று சுற்றி சுற்றி பார்வையை படரவிட்டு வந்தான். அவள் இல்லை.. உப்.. என ஊதி கொண்டவன் கேசம் கோதி நடந்தான்.

அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து வந்த ஆதிரா அவனை போல அதே மெட்ரோ ஸ்டேஷன்னில் பார்வையை படரவிட்டு அவனை தேட அவன் தரிசனம் கிடைக்கவில்லை. பெரு மூச்சோடு சென்றாள்.

பள்ளி வந்த துருவன் வகுப்புக்கு செல்ல, "சார் உங்கள HM கூப்பிடுறாங்க.." என்று பியூன் கூறினார்., "ஆங்.. வர்றேன்.." என்று தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றான்.

அனுமதி கேட்டு சென்றவனை அமர சொல்லி "நம்ம ஸ்கூல்ல ஆனுவல் டே செலிப்ரட்டின் இருக்கும் போது பெரிய அளவுக்கு ட்ராயிங் காம்படிஷன்னும் வைக்கலாம்னு ஸ்கூல் கரஸ்பானண்ட் அண்ட் டீம் முடிவு பண்ணிருக்கோம்.. நீங்க என்ன சொல்றிங்க??" என்று கேட்க,

"நல்ல விஷயம் சார்.. இதுவரைக்கும் பெரிய அளவுல ட்ராயிங் போட்டி நம்ம ஸ்கூல்ல நடக்கல.. அதனால பண்ணலாம் சார்.." என்றான்..

"அதுக்கான பொறுப்பு உங்ககிட்ட கொடுக்குறேன்.. நீங்க தான் பாத்துக்கணும்.. என்னென்ன வேணும்னு லிஸ்ட் கொடுங்க.. ஏற்பாடு பண்றேன்.." HM கூற "கண்டிப்பா ரெடி பண்ணி தர்றேன் சார்.." என்றான்.

"ஆங்.. அப்புறம் நம்ம ஸ்கூல் ஓல்ட் ஸ்டுடென்ட் ஒரு பொண்ணு கிளாசிக் டான்ஸ்ல pm அவார்ட் வாங்கி இருக்காக.. அந்த பொண்ணோட டான்ஸ் இருக்கும்.." செய்தியாக  அவர் கூற அவனுக்குள் ஒரு அதிர்வு..

என்னவோ ஆகுது எனக்கு  சமீப காலமாக என்று நினைத்தவன் ஒகே சார்.. என்றுவிட்டு தன் வேலைகளை பார்த்தான்.

மாலை மெட்ரோ ஸ்டேஷனில் வேலை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ரியோ மீது எதிரில் வந்த பெண் மோத, அவன் திடமாக தான் நின்றான். அவள் தான் தடுமாறி விழுந்தாள். கடுப்பான அந்த பெண் "ஹேய்.. அறிவு இல்ல.. கண்ணா தெரியல உனக்கு?? பாத்து வரமாட்ட?? இப்படி எருமை மாதிரி மோதுற?? இடியட்.." மூச்சு விடாமல் திட்ட,

"ஹலோ மேடம்.. போன் பேசிட்டே வந்த நீங்க தான் என்மேல இடிச்சிருக்கீங்க.. நான் உங்கள இடிக்கல.." பொறுமையாக எடுத்து சொல்ல, "ஆமா அப்டியே இவரு மன்மதன் இவர நாங்க தானா வந்து இடிக்கிறோமா?? போதைல இருக்கியா??" சீரியஸ் மோடில் கோபமாக அவள் கேட்க அதிர்ந்தான் அவன்.

"ஹேய்.. என்ன பேசுற??" பதிலுக்கு அவன் சீற, "உன்கிட்ட எனக்கு என் பேச்சு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.." என்றவள் "வேற யாரையும் இப்டி இடிச்சு விளையாடாம ஒழுங்கா பாதைய பாத்து போ சார்.. எல்லாரும் என்ன போல நல்லவங்களா இருக்க மாட்டாங்க.." என்று கூறி செல்ல ங்கே… என்று விழித்தான் ரியோ.

"யார்ரா இவ?? வந்தா, இடிச்சா, திட்டுனா, போய்ட்டே இருக்கா.." அவள் சென்ற திசையை பார்த்தவன் "இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் போனுக்குள்ள மூழ்கி போயிருக்காங்க.. இவங்கள.. திருத்தவே முடியாது என்றுவிட்டு தன் வழியில் செல்ல, அங்கு நின்று கொண்டிருந்த தங்கையை பார்த்தான்.

"இந்த நேரத்துல இங்க என்ன பன்றா??" கை கடிகாரத்தில் நேரம் பார்த்தவன் "இவளுக்கு கிளாஸ் முடிஞ்சு இந்நேரம் வீட்டுக்கு போயிருக்கணுமே.." என்று நினைத்தவன் அவள் அருகில் செல்ல, எதிரில் வந்த அண்ணனை கண்டு துணுக்குற்றாள் ஆதிரா..

"இங்க என்ன பண்ற வீட்டுக்கு போலாம் வா.." என்று அழைக்க மறுபேச்சு இல்லாமல் அவனுடன் சென்றாள்.

உண்டு முடித்து தங்கை அறைக்கு சென்றவன் "என்ன பிரச்சனை உனக்கு ஆதி??" என்று கேட்க அமைதியாக இருந்தாள்.

"எதுவா இருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்குவ தானே.. இப்போ என்ன பிரச்சனை உனக்கு??" அழுத்தமாக அவன் கேட்க அமைதியாகவே இருந்தாள்.

அவள் அமைதி அவனுக்கு பயத்தை கொடுக்க "அம்மா எதுவும் சொன்னாங்களா??" என்று கேட்க அதற்கும் அமைதி. அன்னை தான் எதுவும் கூறியிருப்பார் என்று நினைத்தவன் "அவங்கள…" அன்னையை திட்ட அவன் செல்ல போக "நான் லவ் பன்றேன்னு நினைக்கிறேன்.." என்றாள் மெல்லிய குரலில்.

அவள் வார்த்தைகள் கேட்டு திட்டுகிட்டவன் "என்ன?? என்று கூர்ந்து கேட்க, தமயணை நிமிர்ந்து பார்த்தவன் நடந்ததெல்லாம் கூறி "நான் அவர லவ் பன்றேன்னு நினைக்கிறேன் அண்ணா??" என்றாள் கலக்கமாக.

தங்கையை தலை சாய்த்து பார்த்தவன் "நினைக்கிறியா??" புருவம் சுருக்கி கேட்க, "ஆமா.. லவ் பீல் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது.. ஆனா அவர நினைக்கும் போது மனசுக்குள்ள ஒரு நல்ல பீல் வருது.. எனக்காக பொறந்தவனை பாக்குற மாதிரி பீல்.." என்று நிறுத்தியவள் "அவர பாக்கும் போது எனக்கு என் அண்ணன் நினைவு வரல ண்ணா.." என்றாள்.

சில நொடிகள் அவளை பார்த்தவன் "அவர பத்தி உனக்கு என்ன தெரியும்??" என்று கேட்க தனக்கு தெரிந்ததெல்லாம் கூறினாள்.

"ஒகே.. பைன்.. அவர்கிட்ட பேசு.. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்.. இப்போ நீ தூங்கு.." என்றுவிட்டு சென்றான் ரியோ.

படுக்கையில் சரிந்தவளுக்கு "நேற்று பார்த்தவன் மீது காதல் உணர்வு. அதுவும் எனக்கு. ஏன்?? எப்படி?? தெரியவில்லை அவளுக்கு.

பல விடை தெரியாத கேள்விகள் உள்ள உலகத்தில் காதலுக்கும் காரணம் உண்டோ??

தொடரும்…


Leave a comment


Comments


Related Post