இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 01-03-2024

Total Views: 26494

“அம்மா நான் என்ன கேட்டுட்டேன்னு கண்ணாலயே எரிக்குற?” என்று அக்சயா கேட்க 

“என்னடி… நீயும் தானே உங்கண்ணன் பேசினதை கேட்ட… அந்த வீட்ல அவங்க எவ்வளவு அவமானமா பேசிருக்காங்க… அவன் செய்தது சரிதான் சொல்லப்போனா துணிமணி வாங்கி கொடுத்தவனுக்கு ஒரு மஞ்ச கயிறை வாங்கிட்டு போய் கட்டி அவளை தன்னோட மனைவியாவே கூட்டிட்டு வர எவ்வளவு நேரம் ஆகிடும்… 

ஆனா அவன் அதை செய்யல. ஏன் தெரியுமா? அவனை பெத்து வளர்த்த என் கண்ணு முன்னாடி தான் அவனோட கல்யாணம் நடக்கனும்னு நினைச்சிருக்கான். அதனால தான்…” என்று மகனின் மனதை புரிந்து பார்வதி பேச

“ஆனாலும் நாளைக்கே கல்யாணம் அவசியமா அம்மா… அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் எப்படி பண்றது” அக்சயா சந்தேகமாக கேட்க

“கழுத்துல தாலி இல்லாம ஒரு வயசு பொண்ணு இப்படி எத்தனை நாள் நம்மகூட தங்கியிருப்பா… அந்த பொண்ணுக்கும் நம்ம குடும்பத்துக்கும் இது அவமானம் தானே..‌” என்று சொல்லியவாறு சமையலை பார்க்க

“ஸோ ஸ்வீட் அம்மா நீ…” என்று பின்னால் இருந்து அன்னையை கட்டிக் கொண்டாள் அக்சயா.

மாலை… 

கீர்த்தனா சதீஷ் வீட்டில் அபிலாஷா தோழிகளை தலை நிமிர்ந்து பார்க்க தயக்கமாக அமர்ந்திருக்க சதீஷ் இயல்பாக உரையாடி அபிநந்தன் தயக்கத்தை போக்க முயன்றான்.

“பார்த்தியா பவி அன்னைக்கு ஏதோ டைம்பாஸ் அதுஇதுன்னு நம்மகிட்ட கதை விட்டுட்டு இன்னைக்கு நம்ம யாருக்கும் தெரியாம கல்யாணம் வரைக்கும் போயிருக்கா..” ஜெனி குற்றப்பத்திரிகை வாசிக்க

“ஏய் அவ என்ன கல்யாணமா பண்ணிட்டு வந்து நிக்கிறா.. நாளைக்கு கல்யாணத்துக்கு நம்மளை இன்வைட் பண்ண வந்திருக்கா… போதும் விடு ஜெனி ரொம்ப கலாய்க்காத…” கீர்த்தனா அபிக்கு ஆதரவாக பேச பவித்ரா எதுவும் பேசாமல் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அதை கவனித்த கீர்த்தனா “பவி ஏன் இப்படி கோபமா பாக்குற… நாமளே அவகிட்ட அந்த ஃபேமிலி வெளியே அனுப்பு அவங்க குணம் சரியில்லனு எவ்வளவு சொல்லிருப்போம். அப்படி பண்ணினா அது நன்றி கெட்ட குணமாகிடும்னு தயங்கிட்டே இருந்தா… இன்னைக்கு அவங்க யாரும் வேண்டாம்னு அவளே வந்திருக்கா… அவளுக்கு நாமதான் சப்போர்ட் பண்ணனும்…” கீர்த்தனா சொல்ல

“ஏய் நான் எங்க அவமேல கோபமா இருக்கேன்… என்ன இவ்வளவு தூரம் நடந்தும் நம்மகிட்ட எதையுமே சொல்லவையே… அப்போ நாம அந்தளவுக்கு க்ளோஸ் இல்லையானு யோசிக்கிறேன்…” என்று பவி சொல்ல

“பவி என்ன பேசுற?” கரகரப்பான குரலில் கேட்ட அபிலாஷா எழுந்து சென்று பவியை கட்டிக் கொள்ள அவள் கேட்ட கேள்வி கண்ணீரை வரவைத்திருந்தது.

“என் லைஃப்ல எந்தவொரு மொமண்ட்டும் நீங்க இல்லாம நடந்ததே இல்லையே.. நான் இதை சொல்லலை தான்.. ஆக்சுவலா நான் நந்தன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி அவர் ஓகே சொன்னதும் உங்கிட்ட சொல்ல நினைச்சேன். ஆனா அவரு கொஞ்சம் டைம் வேணும்னு சொல்லவும் அதுவரை வெய்ட் பண்ண நினைச்சேன்.

பட் வீட்ல எல்லாரும் மேரேஜ்க்கு ஃபோர்ஸ் பண்ணவும் நான் லவ் பண்ற விஷயத்தை சொல்ல அவங்க நம்பலை..‌ அதான் நந்தனை நேர்ல வரவைச்சு பேச நினைச்சேன். ஆனா நானே எதிர்பார்க்காத அளவுக்கு இவ்வளவு நடந்திருச்சு…

நந்தன் அம்மா நாளைக்கே எங்களுக்கு மேரேஜ் பண்ணனும் உனக்கு வேண்டியவங்க யாராவது இன்வைட் பண்ணனுமானு கேட்ட உடனே எனக்கு உங்க மூணுபேர் நியாபகம் தான் வந்தது தெரியுமா?” என்று அபிலாஷா சொல்ல

“அப்போ என் நியாபகம் எல்லாம் உனக்கு வரவே இல்லை அப்படி தானே அபி?” மீண்டும் ஒரு செல்ல சண்டைக்கு தயாராக நின்றான் சதீஷ்.

“டேய் நீ வேற கீத்து வேறயா… சும்மா இரு நானே அவளை கலாய்க்கலாம்னு கேட்டு அழ வைச்சுட்டோம்னு கில்ட்டா ஃபீல் பண்றேன் நீ வேற திரும்ப கேட்டு கல்யாணப் பொண்ணை அழ வச்சிடாதே…” என்று பவி சொல்ல

கல்யாணப் பெண் என்ற வார்த்தை அபிக்கு வெட்கத்தை தந்திருந்தது அவளுக்கு. 

“அதுவந்து எங்களுக்கும் பெருசா சொந்தம் எல்லாம் கிடையாது. அக்கம் பக்கத்து ஆட்கள் தான்… அதேபோல அபிலாஷா சைட்ல நீங்க எல்லாம் தான் வந்து நல்லபடியா நடத்தி தரனும் மேரேஜை…” அபிநந்தன் கோரிக்கை வைக்க

“அண்ணா இதெல்லாம் நீங்க சொல்லனுமா… எனக்கும் சதீஷ்க்கும் ரிஜிஸ்டர் மேரேக்கு சாட்சி கையெழுத்தே அபிதான்… அவளோட கல்யாணத்துல நாங்க இல்லாம எப்படி?” கீர்த்தனா சொல்ல சதீஷ் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“எங்க ரெண்டு பேரோட மம்மிஸூம் எங்க மேரேஜ் விட இவ மேரேஜை எதிர்பார்த்து காத்திருக்காங்க… உங்களுக்கு முன்னாடி நாங்க நாளைக்கு கோவிலுக்கு வந்திடுவோம்.” என்று பவி சொல்ல

“டெபனட்லி…” என்று ஜெனி சொல்ல

“அபிலாஷா… அப்போ டைம் ஆச்சு நாம கிளம்பலாம். அம்மா அங்க எல்லா வேலையும் தனியா பார்த்திட்டு இருப்பாங்க..” என்று நந்தன் சொல்ல

“ஓகே நந்தன்… சரிடி நாங்க கிளம்பறோம். நந்தனோட நம்பர் சதீஷ்கிட்ட இருக்கும். எதுவா இருந்தாலும் அதுக்கு கால்பண்ணுங்க.” என்று சொல்லி அபிலாஷா கிளம்ப எத்தனிக்க

“அபி… நீ வேணும்னா நைட் இங்க தங்கு காலையில அண்ணா வந்து பிக் பண்ணிக்கட்டும்..‌” என்று கீர்த்தனா சொல்ல

“இல்ல கீத்து… அது சரிவராது.. அபி அண்ணா கூட இருக்கிறது தான் சேஃப்… அதான் அண்ணனோட அம்மா தங்கை எல்லாம் இருக்காங்களே…” பவி சொல்ல

“ஆமா கீத்து.. அதுதான் நல்லது” சதீஷ் சொல்ல சரி என்று விடைபெற்று கிளம்பினர் நந்தனும் அபிலாஷாவும்…

நந்தன் அபி வீட்டிற்கு வர சாப்பிட எடுத்து வைத்த பார்வதி “நந்தா! கோவில்ல பேசியாச்சு கல்யாணம் முடிஞ்சதும் அங்கேயே பதிவு பண்ணிடலாம். அப்பறம் பக்கத்துல ஒரு இருபது பேர் கிட்ட சொல்லிருக்கேன் அவங்களுக்கு கோவில் பக்கத்திலேயே ஒரு ஹோட்டல்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணிக்கலாம். வேற எதுவும் விட்டோமா நந்தா?” என்று பார்வதி கேட்க

“அம்மா மோகன்ராம் சார் ஃபேமிலி அழைக்க நினைச்சேன். அபிலாஷாவுக்கும் அவங்க ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ். ஆனா சார் பிஸ்னஸ் விஷயமா மும்பை போயிருக்காரு அவங்க பையன் அப்ராட்ல இருந்து இன்னும் வரலை…” நந்தன் சொல்ல

“ஆமா… அவங்களும் வரனும்னு எனக்கும் ஆசைதான்.. பட் அவங்க வந்தப்பறம் நேர்ல பார்த்து எல்லாம் பேசிக்கலாம்.” என்று அபிலாஷா சொல்ல 

“அம்மா எல்லாம் ஓகே தான்… ஆனா ட்ரெஸ் எதுவும் எடுக்க வேண்டாமா? அவங்களுக்கு புடவை.. அண்ணாக்கு வேஷ்டி சட்டை.. இதெல்லாம் வேண்டாமா?” என்று அக்சயா கேட்க

“ஆமால்ல… அம்மா எனக்கு கூட ட்ரெஸ் இருக்கு… ஆனா அபிலாஷாக்கு இந்த ஒரு சுடி மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன். இப்போ போய் எடுத்திட்டு வந்திடலாமா?” என்று நந்தன் கேட்க

“அதெல்லாம் இப்போ எதுக்கு நந்தா… அதான் போன மாசம் நான் வேணாம்னு சொல்லியும் இரண்டு புடவையை எடுத்து கொடுத்தியே… அதுல எதுவுமே நான் இன்னும் கட்டல.. அபி உனக்கு ரெண்டுல எந்த கலர் பிடிச்சிருக்கோ அதுக்கு இப்போ உடனே ப்ளவுஸ் நான் தைச்சு தரேன் நாளைக்கு உடுத்திக்கோ… இன்னொன்னு பொறாமையா தைச்சு தரேன்.” என்று பார்வதி சொல்ல

“அம்மா நந்தன் உங்களுக்கு ஆசையா எடுத்தது… அது உங்களுக்கே இருக்கட்டும்..” என்று அபிலாஷா தயங்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மா… எனக்கு அந்த மாதிரி கனமான பட்டுப்புடவை எல்லாம் விருப்பமே இல்லை தான்… ஆனா நந்தன் ரொம்ப வற்புறுத்தினான். சரி அவனை கட்டிக்க போற பொண்ணுக்கு ஒன்னு… அச்சுக்கு ஒன்னுனு நினைச்சு எடுத்துக்கிட்டேன். அதனால தான் நான் அதை உடுத்தாம வைச்சிருந்தேன். அதனால் உனக்கு பிடிச்சதை சொல்லு.” என்று பார்வதி சொல்லி விட்டு இரண்டு புடவைகளையும் எடுத்து காட்ட 

“அம்மா மெரூன் கலர் ரொம்ப நல்லா இருக்கு‌. இவங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும்.” என்று அக்சயா சொல்ல

“ஏய் அச்சு.. என்ன அவங்க இவங்க னு பேசிட்டு இருக்க? உன் அண்ணாவை கட்டிக்கப் போற பொண்ணு… அண்ணி னு கூப்பிடு…” பார்வதி சொல்ல அந்த வார்த்தையில் குப்பென்று சிவந்தாள் அபிலாஷா. 

“சரி அபி..‌ உனக்கு இது பிடிச்சிருக்காமா?” என்றிட

“நல்லாயிருக்கு அம்மா.. ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று பதில் சொல்ல பார்வதி அதற்கு ஏற்ப ப்ளவுஸ் தைக்க அறைக்கு அழைத்துச் சென்று அளவெடுத்து தைக்க அதை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் அபிலாஷா. 

அச்சுவிற்கு அடுத்தடுத்து வேலைகளை சொல்லிக் கொண்டே இரண்டு மணி நேரத்தில் தைத்து முடித்திருக்க 

“அம்மா நீங்க நல்லா ஸ்டிச் பண்றீங்க… எனக்கும் சொல்லி கொடுங்க” என்று அபிலாஷா சொல்ல

“அதெல்லாம் கண்டிப்பா சொல்லி தரேன். இப்போ ரொம்ப நேரம் ஆகிடுச்சு… சீக்கிரம் போய் தூங்கலாம் அப்போ தான் காலையில சீக்கிரம் எழ முடியும். நந்தா.. நீயும் சீக்கிரம் தூங்குப்பா..” என்று சொல்லி விட்டு அபிலாஷாவை தங்களோடு அறையில் தங்க வைத்து கொண்டார் பார்வதி.

காலை விடிந்து பார்வதி நந்தன் எழுந்து குளித்து கிளம்பி தயாராக பார்வதி அக்சயா அபிலாஷாவை எழுப்பி குளிக்க சொன்னார். 

அபிலாஷா குளித்து விட்டு வர சரியாக வந்து சேர்ந்தனர் கீர்த்தனா சதீஷ் இருவரும். கீர்த்தனா அக்சயா சேர்ந்து அபிலாஷாவிற்கு ஒப்பனை செய்ய பக்கத்து வீட்டில் இருந்து சில பெண்கள் வந்து சேர்ந்தனர் திருமண உதவிகள் செய்வதற்காக..

பின்னர் அனைவரும் தயாராகி கோவிலுக்கு வர அங்கே ஜெனி பவி பவியின் அம்மா இவர்களுக்காக காத்திருந்தனர்.

திருமணத்திற்கான வேலைகள் ஜரூராக நடக்க அபிலாஷா வீட்டில் யார் யாருக்கு என்னென்ன சொத்து என்று சொத்து பங்கீட்டை இரவே முடித்து அதை முறையாக கைப்பற்றும் நாளுக்காக காத்திருக்க அங்கு வந்து சேர்ந்தார் மனோகர் அபிலாஷா தந்தை சுகுமாரனின் ஆஸ்தான வக்கீலின் ஜூனியர்… சுகுமாரன் தம்பி சுரேந்தரின் கையாள்.

“வாங்க வக்கீல் நானே ப்ராப்பர்ட்டி ஷேர்ஸ் விஷயமா பேச உங்களை கூப்பிட நினைச்சேன்.” என்று சுரேந்தர் வரவேற்க

“இனிமே எங்கிருந்து சார் சொத்துக்களை பங்கிடுறது… நீங்க எல்லாரும் இந்த வீட்டை விட்டு வெளியேறி எங்க போறதுனு முடிவு பண்ணுங்க…” என்று மனோகர் சொல்ல

“என்ன வக்கீல்.. பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு. அதான் அபிலாஷா சொத்தே வேணாம்னு போய்ட்டாளே…” கிருபாகரன் சொல்ல

அடுத்தடுத்து வக்கீல் சொன்னதை கேட்டு அரண்டு போய் நின்றிருந்தனர் சுரேந்தர் ரூபவதி, கிருபாகரன் சுகந்தி நால்வரும்…

தொடரும்…





Leave a comment


Comments


Related Post