இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 03-03-2024

Total Views: 12597

பாகம்- 6
அந்த நொடி செந்தில் கேட்டான், இவள் விலகி நிற்க சம்மதித்து விட்டாள் . இருவருமே நிதானத்தில் இல்லை. பொறுமையாக அமர்ந்து பேசி இருக்கலாமோ? அதை நாயகி புரிந்து கொள்வாள். செந்தில்? கடினம்தான்.
செந்தில் எப்படிப் பட்டவன்? ஆறடி ஆண் மகன். உரம் ஏறி இருந்த உடம்பு. இப்படி எல்லாம் வர்ணித்தால் போதுமா? அவனுக்கு நான் எந்த வர்ணனையும் கொடுக்கப் போவதில்லை. என்னுடைய நாயகன், நாயகி ஏன் மற்றவர்கள் கூட உங்களில் ஒருவர்தான். நீங்களே உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். 

அவர்கள் இருவரும் சந்தித்து இதோ ஒரு மாதம் ஆகி விட்டது. ராஜவேலு ஏனோ அதற்குப் பிறகு ஒன்றும் செய்யவில்லை. ஏன் ஆள் இருந்த இடம் தெரியவில்லை. நிச்சயம் பிரதீப் ஏதாவது செய்திருப்பான். பிரதீப் நாம் நினைக்கும் அளவிற்கு அமைதியானவன் அல்லவே. ஏதோ தன்னை சுற்றி இருப்பவர்களிடம் நல்ல மாதிரி நடந்து கொள்கிறான் அதற்காக எல்லாம் அவனுக்கு வேறு மாதிரி ஆட்களிடம் தொடர்பு இல்லை என்பதெல்லாம் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவர்களை அவனுக்குப்  பழக்கப் படுத்திய லிங்கமும் ஒத்துக் கொள்ள மாட்டார். ஏன் நிரஞ்சனாவுக்குமே தெரியுமே? 

"டேய் !  அந்த ராஜவேலுவை என்னடா செஞ்ச?"
"என்ன செய்யணும்?" அவளின் டேபிளில் இருந்த புது பம்ப்லேட்டை  பார்த்துக் கொண்டே கேட்டான். 
"உசுரு இருக்கா ?"
"ஏன்! அவரை பாக்காம கஷ்டமா இருக்கா ?"
"அடிங் ! நா என்ன பேசிகிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லற?"
"ஏ! சும்மா கத்தாத. எந்த பொண்ணு மேல கைய வச்சாலும் நான் சும்மா விட மாட்டேன்னு தெரியுமில்ல. அதுலயும் எங்க வீட்டு பொண்ணு மேலையே கை வச்சா சும்மா விட முடியுமா?"
"என்னவோ பண்ணித்  தொலை .உங்கம்மா அழுதாலே  உனக்கு மனசு இறங்காது. நான் சொன்னா  கேக்கவா போற ?"
"இந்த அசைன்மெண்ட் கொடுத்தது உங்க சித்தப்பாதான். ஒனக்கு வேணுன்னா அவருகிட்ட போயி சண்டை போடு போ" சொல்லி விட்டு எரிச்சலுடன் கிளம்பி விட்டான். 
"டேய் நில்லுடா" கூவிக்  கொண்டே இருந்தாள் நீரு . அவன் திரும்புவானா? திமிர் பிடித்தவன்.
லேசாக முன் தலையை தேய்த்து விட்டாள் . 
தன்னையுடைய கைப் பையையும் ஹாண்ட்பேகையும் எடுத்து கொண்டு கிளம்பியவள் நேராக சென்ற இடம் வங்கி. 
"என்ன ப்ரியா  இது? எத்தனை தடவ நான் வந்து வந்து போகறது? எங்களை மாதிரி ஆளுங்களுக்கு பேமண்ட் கேட் வே எவ்ளோ இம்போர்ட்டண்ட்ன்னு தெரியாதா? இந்த மாசத்துலையே இது மூணாவது தடவ. எப்ப பார்த்தாலும் உங்களுக்கு லெட்டர், கம்பனி சீல் வச்சிக்கிட்டு சுத்த முடியுமா?"
"சாரி ! சாரி ! மாம்.  இது டெக்கனிகல் டீம்லேர்ந்து வர்ற ப்ராப்லம். இனிமே இந்த  மிஸ்டேக்  வராதுன்னு சொல்லி இருக்காங்க.... அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவள் சொன்ன சமாதா னங்களை கேட்பதைத் தவிர நிரஞ்சனாவிற்கு வேறு  வழி  இல்லாமல் போனது. அமைதியாக கேட்டுக் கொண்டாள் 
"சாரி பிரியா! எனக்கு மறுபடியும் இந்த மாதிரி பிரச்சனை வந்த நான் வேற பாங்குக்கு  போக வேண்டி இருக்கும். பல வருசமா உங்களோட ரிலேஷன்ஷிப்ல இருக்கறதுனாலதான் நான் இங்க கண்டின்யு  பண்ணறேன். அடுத்த தடவ நான் உங்ககிட்ட பேசுவேன்னு நினைக்காதீங்க" முதலில் சாதாரணமாக பேச ஆரம்பித்தவள் முடிக்கும்போது சற்று கடுமையாகவேத்தான் பேச வேண்டியதாயிற்று. வேலை விஷயமாயிற்றே. சற்று கடுமையாகத்தான் இருக்க வேண்டும். 
ப்ரியாவிடம் பேசி விட்டு வெளியில் வந்த போது எதிரில்  வந்தவன் மீது இடிக்காமல் நகர்ந்துக் கொண்டாள் . வேறு யார்? சாட்சாத் அவள் கணவன் செந்தில் தான். 
ப்ரியாவிடம் சற்று கடுமையாகப்  பேசியவளின் கண்கள் கணவனை பார்த்ததும் சட்டென குளிர்ந்து விட்டது. அவள் ஏதோ பேச வாயெடுக்கும் முன்னரே, "நீயெல்லாம் ஒரு ஆளா" என்பது போல நக்கலாக ஒரு பார்வையுடன் எரிச்சலையும் கொட்டிவிட்டுச் சென்றான்.
"எக்ஸ் கியூஸ் மீ !" லேசாக கதவை தட்டி  விட்டு உள்ளே வந்தவனைப் பார்த்ததும் ப்ரியா கண்ணீர் சிந்தாமலா இருப்பாள்? 
மனைவிக்கு என்ன பிரச்சனையோ அதே தொல்லை தான் செந்திலுக்கும். அதிலும் கடையை வேறு விஸ்தரிக்கும் போது  இது  எல்லாம் தேவை இல்லாத தொல்லைகள். வெறுப்புடன் வெளியில் வந்தான். 
அவன் வெளியில் வந்தால் பேசலாம் என்று நினைத்தாளோ? காத்திருந்தாள். வேகமாக வெளியில் வந்தவனையோ பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த மனைவியை கண்டும் காணாதது போல வேகமாகச் சென்று விட்டான். தன்னையே நொந்து கொண்டவள் தனது பிரயாணத்தை ஆரம்பித்திருந்தாள். மனம் எங்கெங்கோ செல்ல நினைத்தாலும் சாலையில் இருக்கும் ட்ராபிக் அவளின் மூளையை அங்கே இங்கே எங்கும் செல்ல விடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டது. அதனால் தானோ என்னவோ இரண்டு பெரிய பேருந்துகளுக்கு நடுவில் வளைவில் மாட்டிக் கொள்ளாமல் தன்னை  நிதானப் படுத்திக் கொண்டாள் . ஆனால் நம் நாயகன்  முன் கோபக்காரன் அப்படி அல்லவே. எங்கோ போய்க்  கொண்டிருந்த மூளையை அவசரமாக வந்த ஆம்புலன்ஸ் தான் நினைவிற்குக் கொண்டு வந்தது. இல்லையென்றால் அவனே ஆம்புலனசில் செல்ல  வேண்டியதாக இருந்திருக்கலாம். 

அடுத்த சில நாட்களில் மீண்டும் அவனை வழியில் பார்த்தாள் . டிப் டாப்பாக இருந்தான். வண்டியில் யாரோ ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்தான். அவனா சிரித்துப் பேசுவது? நான் உன்னிப்பாய் கவனித்தேன். நீருவும்  கணவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏக்கத்தோடு ஒரு பெரு மூச்சு வந்தது. மனதில் ஏற்றுக் கொண்டவனாயிற்றே !
" நீரு! தண்ணீ  குழாய் எல்லாம் வீணா  போச்சும்மா. எல்லாத்தையுமே மாத்திரலாம்" ஏற்கனவே அன்னை சொல்லி இருந்தாள்.
ஒரு கஸ்டமரை  பார்த்து விட்டு வரும்போது வழியில் அந்தக் கடையை பார்த்தாள் .
புதிதாகத்  திறந்திருந்தார்களா?  கடைக்குள் சென்றாள். அதற்கு ஒரு முக்கியக் காரணம்  கடையின் பெயர். செந்தில் ஆண்டவர் ஹார்ட்வர்ஸ். உள்ளே நுழைந்து விட்டாள் . பெரியதாகத் தான் இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம்.
"என்ன பாக்கறீங்க மேடம்?" 
புடவையில் ஒரு பெண் வந்து நின்றாள். பார்க்க அழகாக இல்லை. ஆனால் இளமை அவளை அழகாக காட்டியது. முக மலர்ச்சியும் வரிசையான பற்களும்  நிச்சயம் அழகுதான். பெண்களுக்கு புன்னகைதான் அழகு. கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதில் தெரிந்தும் தெரியாமலும் ஒரு தங்கக் கம்மல். கண்கள் துறுதுறுவென இருந்தன. 
இவளை அவள் பார்க்க, அவளோ இவளைத் தான் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"எல்லாமே இப்படி அளவெடுத்து செய்தது போல ஒரு பெண்  இருக்க முடியுமா?"
"கடை புதுசா இருக்கே?"
"எஸ் மேடம் ஒரு வாரம் ஆச்சு"
"எனக்கு பாத்ரூம் குழாய்  பார்க்கணும்.என்னென்ன ப்ராண்ட்ஸ் இருக்கு?"  கேட்டுக் கொண்டே அந்த பெண்ணுடன் நடந்து சென்றவள் கால்கள் ஒரு நொடி நின்று அவளை பின் தொடர்ந்தன. 
அவள் முதலில் வந்தது என்னவோ தேவையானதை மட்டுமே வாங்கிச் செல்வதற்க்காகத்தான். தன்னவனின் கடை என்றால் விட்டுவிட முடியுமா? அந்த கண்ணாடி அறைக்குள் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். சேரில் இலகுவாக சாய்ந்துக் கொண்டு அவர் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்தப் பெண்ணைத் தொடர்ந்தவள், வேறு என்னென்ன இருக்கிறது எல்லாம் சுற்றி பார்த்தாள் . ஒரு புறம் சில வகை பெயிண்டுகள் செக்ஷன் இருந்தது. ஒரு ப்ளோர் முழுவதும் கம்மி விலை முதல் அதிக விலை பிராண்டட் பைப்ஸ், வாஷ் பேசின், ஷவர் பொருட்கள் எல்லாம் இருந்தன. இது ஒரு தனி பிரிவாக இருக்க எதிர் புறத்தில் ரெஸ்ட் ரூம் பொருட்கள் இருந்தன. வித விதமான அலங்காரத்தில் இருந்ததை  எல்லாம் பார்த்தவளுக்கு ஒரு நொடி சிரிப்பு வந்து விட்டது. 
"பண்ணப் போற வேலைக்கு இத்தனை அலங்காரமா?அதுவும் தங்க நிறத்தில்?" இந்த மாதிரி பொருட்களை பார்க்கும்போது இயல்பாகவே அவளுக்குத் தோன்றுவதுதான். மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள் அந்த பெண்.
அடுத்த மாடியில் முழுவதுமே விதவிதமான டைல்ஸ் வைத்திருந்தார்கள். அப்பப்பா  எத்தனை விதமான  டிசைன்ஸ்? "இங்க வா!" என்று அழைத்தன யானைகள். "என்ன பார்க்க மாட்டியா கேட்டன மான்கள்"." நான் அழகா? இல்ல  என்னோட கலர் அழகா?" வேறு யார் மயில்கள்தான். "நான் எப்படி ஜம்ப் பண்ணுவேன் தெரியுமா" காட்டிக் கொண்டிருந்தன டால்பின்கள். "மத்தவங்கள விட மனசுக்கு நான்தான் இதம் தருவேன்" வாசனை இல்லாமலேயே மயக்கின பல வர்ண பூக்கள். ரசித்தாள் ரசித்தாள் அத்தனையும் ரசித்தாள். ஏனோ அந்த நொடி தன்  எல்லாக் கவலைகளையும் மறந்து ஏதோ ஒரு நந்தவனத்திற்குள் நுழைந்தது போல இதமாக இருந்தது. ஏசியும் அளவாக இருந்தது. 
"இன்னும் வேற என்ன இருக்கு?"
"இங்க அவ்வளவுதான் மேடம். கிரௌண்ட் ப்ளோர்ல பீ வீஸீ பைப்ஸ், நட்டு, போல்ட், ஸ்க்ரூ, காலிங் பெல், இதெல்லாம் இருக்கு. நீங்க  இன்னும் டோர்  லாக்ஸ் பாக்கலியே மேடம்" அந்த செக்ஷனுக்கும் அழைத்துச் சென்று காட்டினாள்.
"நீங்க புதுசா வீடு எதுவும் கட்டறீங்களா மேடம்?" தன்னை மீறி வாய் விட்டாள் .
"ஏன் கேக்கறீங்க?"
"இல்ல மேடம்! வீடு கட்டறீங்கன்னா வீடு கட்ட தேவையான செங்கல் சிமெண்ட் எல்லாமே கூட இங்கையே கிடைக்கு. இந்த கடைக்கு பக்கத்துலேயே இருக்கு. டீ என்டீ  கம்பிகளும் கிடைக்கும். கிரில் கேட் போடவும் ஆளுங்க இருக்காங்க மேடம். சாரு கிட்ட சொன்னா  டிஸ்கவுண்ட்  கிடைக்கும் மேடம்" அழகாக மார்க்கெட்டிங் செய்தாள் . அவளை இவளுக்கு பிடித்து விட்டது.
"சாருன்னா அங்க அந்த கண்ணாடி ரூமுல இருந்தாரே அவரா?"
"ஆமாம் மேடம்! அவருதான் ஒனறு. செந்தில் சார்"
"ஓ !" புருவம் உயர்த்தினாள்.
அனைத்தையும் முடித்துக் கொண்டு பில் போட வந்தாள் . மேலே பிள்ளையார் சரஸ்வதி லஷ்மி படம் மாட்டி இருந்தது. பெரிய சாமந்தி மாலை மாட்டி இருந்தார்கள். மூவரும் அழகாக சந்தனம் குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்கள். இவளை பார்த்து அழகாய் புன்னகைத்தார்கள். அவர்களுக்கு கீழே யாரோ ஒரு பெரியவர் படம் மாட்டி இருந்தது. கன்னங்கள் உள்ளே ஒட்டிப் போய் இருந்தது. பார்ப்பதற்கு லேசாக வீரப்பனின் சாயல் இருந்தததோ?  பெரிய சந்தமாலையுடன் இருந்தவரும் இவளை ஆசையாகப்  பார்ப்பது போலவே இருந்தது.
திரும்பி நின்றுருந்தவளை செந்திலின் குரல் திரும்பி பார்க்க வைத்தது.
"மேம் ! உங்க பில்"
"ஹா! அவளுக்கு மிக அருகில் நின்றுருந்தான். ஒரு கையில் கவரும் மறு  கையில் பில்லும் இருந்தன.
அவனை ஆசையாக பார்த்தாள் .
" எனக்குன்னா டிஸ்கவுண்ட் எதுவும் இல்லையா" கண்கள் சிரித்தன.
"சாரி! என்ன கேட்டீங்க?"
"தள்ளுபடி! டிஸ்கவுண்ட் ?" கண்ணை விரித்தாள்.
"சாரி மேடம்! நோ டிஸ்கவுன்ட்ஸ் " பை இன்னமும் அவன் கையில் தான் இருந்தது.
"ஓ! ப்ச் ! போலி வருத்தம் காட்டினாள். போர்ஷே காரில் வலம் வருபவளுக்கு இந்த நூறு இரு நூறா பெரிய விஷயம்? தனது கைப்  பையில் இருந்து துணி பையில் அந்த பொருட்களை மாற்றிக் கொண்டாள் . அவள் ஸ்கேன்  செய்து பணம் கட்டிக்  கொண்டிருந்தபோது மாலை  வேளை  தேநீர் வந்தது. 
"டீ  குடிக்கறீங்களா மேடம்?"
"இஞ்சி டீ  யா? "
"இல்ல மேம். நார்மல் தான்"
"ஓகே ! குடுங்க"
சற்று சூடாகத்தான் இருந்தது. லேசாக ஊதி ஊதிக் குடித்தாள் . 
ஏனோ அந்த நிமிடத்தில் அந்த உதட்டை ஆள அவனுக்கு ஆசை வந்தது. வலிய  முகத்தை திருப்பிக் கொண்டான். தேநீரை குடித்து முடிக்கும் நேரம் ஏதோ சாமான்கள் வந்திறங்கின . 
உள்ளே குடோனுக்கு எடுத்துச்  சென்றார்கள். அவர்களுக்கு வழி  விட ச் சற்று நகர்ந்தவள் அவன் கையை பிடித்துக் கொண்டு அவனை  ஒட்டி நின்றாள். அவளின் சர்வமும் அவனின் புஜத்தில்  அடங்கி போனது. 
இருவருக்குமே உடலில் ஏதோ  ஒரு சிலிர்ப்பு. பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் .
அவள் பின்னோடே சென்றவனை பார்த்த வேலை பார்த்தப்  பெண்களுக்கு ஆச்சர்யம்தான். 
"நான் ரிவெர்ஸ்  எடுக்கவா?"
"இட்ஸ் ஓகே! நானே பார்த்துக்குவேன்" 
ஸ்டியரிங் வீலை கவனமாகத் திருப்பினாள் . 
பொசிஷனுக்கு வந்தவள், 
"நான் கிளம்பறேன் செந்தில்"
"ம்! பத்திரம்!" 
'பார்ரா புருசனுக்கு அக்கறையை !' மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் .
காரின் ஜன்னலில் இருந்த அவன் கையை லேசாக சுரண்டினாள் .
"என்ன?" லேசாக புருவம் உயர்த்தி அவள் முகம் அருகில் தன் முகம் கொண்டு வந்தவனைப் பார்த்ததும் இவள் மனம் கொள்ளை  போனது.
"யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்" அவன் கண்களுக்குள் தன் முகத்தைப் பார்த்துச் சொன்னாள் .
மற்றவர்கள் சொல்லும்போது மனதில் சிறுமகிழ்ச்சி மட்டுமே வரும் அது என்ன இவள் சொல்லும்போது மட்டும் கூடவே சேர்ந்து வெட்கம் வருகிறது? தன்னவனின் வெட்கம் எத்தனை அழகனானது?" 'இப்போதே அவனுக்கு முத்தமிட்டுவிடு' சொல்லும் மூலையை அடக்க முடியாது. பதிலாக காரை கிளப்பி விட்டாள் . அன்றைய நாள் இருவருக்குமே ஸ்பெஷல்தான். 

தொடரும் .











Leave a comment


Comments 1

  • அஸ்வதி
  • 3 months ago

    வாவ்!!!! போட வைத்த யூடி. அப்ப இவங்க தான் ஜோடி. அப்படா ஹேப்பி காப்பி ....


    Related Post