இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 04-03-2024

Total Views: 25988

அபிநந்தன் அறைக்குள் வர புதுவித பரவசம் உடலில் தாக்க வெட்கப் புன்னகையோடு எழுந்து நின்றாள் அபிலாஷா.

சினேகப் புன்னகை ஒன்றை தர முயன்று அசடாய் முடித்தான் அபிநந்தன். 

“லா…லாஷா அதுவந்து…” நாக்கு உலர்ந்து போக பேச்சு தடைபட்டது அபிநந்தனுக்கு. 

“என்னாச்சு ரொம்ப த்தேர்ஸ்டியா ஃபீல் பண்றீங்களா நந்தன் தண்ணீ…” என்று தேடியவள்

“சாரி ரூம்ல தண்ணீ இல்ல பால் இருக்கு குடிங்க நந்தன்…” என்று எடுத்து நீட்ட 

“அது.. பரவாயில்ல லாஷா… கொஞ்சம் பேசனும்…” என்றிட

“எதுக்கு இவ்வளவு நர்வஸா இருக்கீங்க உட்கார்ந்து பேசலாமா?” அபிலாஷா இயல்பாக பேசினாள்.

கட்டிலில் ஒரு ஓரமாக அபிநந்தன் அமர அவனுக்கு எதிர்பக்கமாக அமர்ந்தாள் அபிலாஷா.

“சொல்லுங்க நந்தன் என்ன பேசனும்?” அவள் கேட்க 

“அதுவந்து லாஷா… இந்த ரெண்டு நாள்ல நடந்த எதையுமே நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. ஜஸ்ட் நீ உங்க வீட்ல மீட் பண்ணி பேச கூப்பிட்ட.. பட் அங்க யாருமே எதிர்பாராத விஷயங்கள் நிறைய நடந்திடுச்சு… நான் வேற மாதிரி ப்ளான்ல இருந்தேன். அதாவது தங்கச்சி படிப்பை முடிச்சு அவளுக்கு நல்ல லைஃப் அமைச்சு கொடுத்து… 

ஆனா, எல்லாமே தலைகீழா நடந்திடுச்சு… எதிர்பார்க்காம நம்ம கல்யாணம் நடந்திடுச்சு.. அது.. நீ தப்பா எதுவும் எடுத்துக்காதே.. ஆக்சுவலி நான் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு மேரேஜ் பத்தி யோசிக்க நினைச்சேன். பட் சடனா…” என்று அபிலாஷா தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று என்ன சொல்கிறோம் என்று அவனுக்கே புரியாமல் உளறிக் கொண்டு இருக்க

“நந்தன்… இப்போ எதுக்கு எனக்கு இப்படி விளக்கம் தந்திட்டு இருக்கீங்க? அது எதுவுமே தேவையில்லை நந்தன்.. எனக்கு உங்களை முழுசா தெரியும் நந்தன்..” அபிலாஷா சொல்ல கொஞ்சம் தெளிந்தான் அபிநந்தன்.

“தாங்க்ஸ் லாஷா.. அண்ட் இன்னொரு விஷயம். அதுவந்து அம்மா ஏற்கனவே அச்சுக்கு நிறைய வரன் வருதுனு சொன்னாங்க.. இப்போ நம்ம மேரேஜூம் முடிஞ்சிடுச்சு. சோ, கூடிய சீக்கிரம் அம்மா அச்சுக்கு மேரேஜ் பண்ணி வைக்க அம்மா கண்டிப்பா பேசுவாங்க… அது வந்து நான் என்ன சொல்றேன்னா வயசுப் பொண்ணை வீட்ல வச்சிட்டு கல்யாணம் குடும்பம்னு எனக்கு ஒரு மாதிரி எம்பாரிஸிங்கா…” என்று சொல்லி கொண்டு இருக்கும் 

“நந்தன் என்ன சொல்ல வரீங்கனு எனக்கு புரியுது… உங்களுக்காக நான் எத்தனை காலம் வேணும்னாலும் காத்திருப்பேன்னு சொல்லிருக்கேனே… இப்போ கூடுதல் அங்கீகாரமா உங்க மனைவிங்கிற உறவையும் கொடுத்திருக்கீங்க… எனக்கு தெரியும். உங்களுக்கு டைம் வேணும்னு.. உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் டைம் தேவைதான்.. 

நாம ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி நான் உங்களை லவ் பண்றேன். நீங்க ஃப்ரண்ட்லியா பழகுங்க… அதுக்கப்புறம் நடக்க வேண்டியதை அப்பறம் பார்க்கலாம். சரியா? சரி ரொம்ப டயர்டா இருக்கு நந்தன் தூங்கலாமா?” என்று அபிலாஷா அவன் மனதில் போட்டு அழுத்தி வைத்திருந்த அனைத்தையும் இலகுவாக சொல்லி முடிக்க ஆச்சரியமாக பார்த்தான் அபிநந்தன்.

“நான் சொல்லாமலே என்னை இவ்வளவு புரிஞ்சுக்கிற… ரொம்ப தாங்க்ஸ் லாஷா.. சரி நீ தூங்கு. எனக்கு தூக்கம் வரும்போது கீழே பாய்ல தூங்கிக்கிறேன். என்று அபிநந்தன் சொல்ல

“ஏன் நந்தன்… எனக்கு அது கில்ட்டா ஆகும். ப்ளீஸ் நீங்களும் பெட்ல படுங்க..” என்று சொல்ல ‌

“இட்ஸ் ஓகே லாஷா எனக்கு கீழே படுத்தே பழகிடுச்சு… நீ ஃபீல் பண்ணாம தூங்கு…” என்று அவனும் இலகுவாக பேச படுத்த உடனே உறங்கிப் போனாள் அபிலாஷா.

இதற்கு முன்பு தன் வீட்டில் ஆளை உள்ளே இழுத்துக் கொள்ளும் மென்மையான பஞ்சு மெத்தை சகல வசதிகளும் அடங்கிய படுக்கையறை கூட ஏதோ ஒரு அசௌகரியத்தையே தர எத்தனையோ நாட்கள் உறக்கமின்றி தவித்திருக்கிறாள்.

அப்படி உறக்கம் வந்தாலும் இன்று போல படுத்த உடனே வரும் உறக்கமல்ல… பல முறை கட்டிலில் புரண்டு ஒரு அசதியை வரவைத்தே உறங்குவாள். 

நல்ல உறக்கம் காலை விடிந்தது கூட தெரியவில்லை அவளுக்கு. அதிகாலை எழும் பழக்கத்தை உடைய அபிநந்தன் எழுந்து விரித்து படுத்த பாயை எடுத்து மடித்து வைத்து விட்டு குளிக்க சென்றுவிட்டான். அவன் அறையை திறந்து வெளியேறிய பின்பே அறைக்கு வந்து தன் கல்லூரி உடமைகளை எடுக்க வந்த அக்சயா எதையோ கை தவற விட அது எழுப்பிய ஓசையில் பதறி எழுந்தாள் அபிலாஷா.

என்ன நடந்தது என்று புரியாமல் சில நொடிகள் அவள் குழம்ப “என்னாச்சு அண்ணி ஏன் இப்படி பதட்டமா எழுந்தீங்க?” என்றிட

“இல்ல அச்சு ஏதோ சத்தம் கேட்டது. அதான்..” என்று அபிலாஷா சொல்ல அதற்குள் அறையில் கேட்ட சத்தத்தில் அடுப்படியில் இருந்து வேகமாக வந்தார் பார்வதி.

“அக்சயா இப்படி தான்மா எதையாவது உருட்டிக்கிட்டே இருப்பா… சரி நீ குளிச்சிட்டு வாம்மா” என்று அலமாரியை திறந்து

“இது அச்சுவோட சுடிதார் இப்போ இது போட்டுக்கோ அப்புறமா சாப்பிட்டு நந்தாவை கூட்டிட்டு கடைக்கு போய் உனக்கு வேண்டியதை வாங்கிக்கோ” என்று பார்வதி ஒரு சுடியை எடுத்து தர

“பரவாயில்ல அம்மா… அன்னைக்கு நந்தன் வாங்கி கொடுத்த ட்ரெஸ் இருக்கே அதே போதும்.” என்று சொல்ல

“அண்ணி காலையிலதான் அம்மா அந்த ட்ரெஸ் வாஷ் பண்ண ஊற வைச்சாங்க.. இந்த சுடி உங்களுக்கு மேட்சா இருக்கும் போட்டுக்கோங்க.” அக்சயா சொல்ல “சரி” என்று குளியலறை நோக்கி சென்றாள் அபிலாஷா.

அபிநந்தன் குளித்து தயாராகி அலுவலகத்துக்கு செல்ல கிளம்பி வர “நந்தா எங்கப்பா கிளம்பிட்ட?” பார்வதி கேட்க

“என்னமா இப்படி கேட்குறீங்க ஆஃபிஸ் தான்… ஆல்ரெடி ரெண்டு நாள் லீவ் ஆகிடுச்சு.. நிறைய வேலை பெண்டிங்ல இருக்கும்.” என்றபடி சாப்பிட அமர பரிமாறிய படியே

“அதான் ரெண்டு நாள் லீவ் ஆகிடுச்சுல இன்னைக்கும் லீவ் போடுப்பா…” என்று சாதாரணமாக பார்வதி சொல்ல

“என்னது? எதுக்கு ம்மா இன்னைக்கு லீவ்?”

“டேய் அபியை கூட்டிட்டு வெளியே போய்ட்டு வா… பாவம்டா நீபாட்டுக்கு ஒரே ஒரு சுடி மட்டும் வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்துட்ட அந்த பொண்ணுக்கு மாத்த வேற ட்ரெஸ் வாங்கனும். அப்படியே கூட்டிட்டு போய் ட்ரெஸ் வாங்கிட்டு அங்க இங்க ஜோடியா போய்ட்டு வாங்க” என்று பார்வதி சொல்ல

“அம்மா அதெல்லாம் வேற ஒரு நாள் எல்லாரும் போகலாம். இன்னைக்கு ட்ரெஸ் மட்டும் நீங்க கூட போய் வாங்கிட்டு வாங்களேன். நான் எதுக்கு?” என்று அபிநந்தன் தயங்க

“நந்தா…” என்று அதட்டும் குரலில் அழைத்த பார்வதி “ஏன் நந்தா… உனக்கு கல்யாணத்துக்கு கூட லீவ் தரமாட்டாங்களா.. ஒருவேளை உன்னோட கல்யாணம் எல்லாரும் பேசி நடந்திருந்தா கல்யாணத்துக்கு முன்னாடி பத்து நாள் பின்னாடி பத்து நாள்னு லீவ் போட்டுருப்ப தானே… இப்போ ரெண்டு நாள் லீவ் போட்ட இன்னும் ஒருநாள் வீட்ல இருந்தா ஒன்னும் ஆகாது. வேணும்னா மோகன்ராம் சார்கிட்ட நான் பேசுறேன் ஃபோன் போட்டு கொடு.” என்று பார்வதி அதிரடியாக கேட்க

“அம்மா மோகன் சார் பிஸ்னஸ் விஷயமா மும்பை போயிருக்காரு ம்மா அதான் லீவ் போடமுடியாது னு சொல்றேன்.” என்று அபிநந்தன் சொல்லிக் கொண்டு இருக்க அபிலாஷா குளித்து விட்டு வந்தாள்.

“சரிப்பா.. இன்னைக்கு ஒரு நாள்தானே…” என்று மீண்டும் சொல்ல அபிலாஷா முன்பு மறுக்க இயலாது “சரிம்மா…” என்று முடித்துக் கொண்டான்.

“உட்காரு அபி நீயும் சாப்பிடு.. அச்சு இன்னும் என்ன செய்ற? இன்னைக்கு காலேஜ் இருக்குல” என்று மகளை அழைத்தபடி பரிமாற

“சாரிம்மா.. எப்பவுமே சீக்கிரம் எழுந்திடுவேன். பட் இன்னைக்கு என்னனே தெரியல நல்லா தூங்கிட்டேன்.” என்று மன்னிப்பு கோர

“இதுக்கு எதுக்கு அபி சாரி எல்லாம்… நேரம் தெரியாத அளவுக்கு தூங்கிருக்கன்னா அந்த அளவுக்கு நிம்மதியா இருக்கன்னு தானே அர்த்தம். என் பையனை கல்யாணம் பண்ணி நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கன்னா எனக்கு அது சந்தோஷம் தானே…” என்று பார்வதி சொல்ல

“அம்மா நீங்க ரொம்ப ஸ்வீட்… உண்மைய சொல்லனும்னா எனக்கு நந்தனை விட உங்களைத் தான் ரொம்ப பிடிக்கும்.” அபி சொல்ல

“ம்ம் ம்ம்… அண்ணி மாமியாரை மட்டும் தான் பிடிக்குமா? இந்த நாத்தனார் தயவு எல்லாம் வேணாமா?” என்று கேலியாக கேட்டபடி அவளும் அமர்ந்து சாப்பிட

“அம்மா மட்டும் இல்ல எனக்கு உன்னையும் ரொம்ப பிடிக்கும் அச்சு.” என்றிட

“நல்லா ஐஸ் வைக்கிறவங்க அண்ணி… எங்களோட உங்களுக்கு அதிகம் பழக்கமே இல்லையே.. அப்பறம் எப்படி எங்களை பிடிச்சது?” அக்சயா கேட்க

“உங்களோட நேரடியா பழகலைன்னா என்ன அச்சு.. அதான் நந்தன் தினமும் காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நீ செய்ற குறும்பு எல்லாமே சொல்லுவாரே…” என்று அபி போட்டுடைக்க நாக்கை கடித்து கொண்டான் அபிநந்தன்.

“எது? அம்மா நான் அன்னைக்கே இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு வந்தது சந்தேகமா இருக்குனு சொன்னேன்ல நீதான் நான் சொன்ன எதையும் நம்பாம உன் பையனை பத்தி ஆஹா ஓஹோனு சொன்ன.. பாரு இப்போ அண்ணியே சொல்றாங்க ஒரு விஷயம் விடாம ஷேர் பண்ணுவாருன்னு… பாரு பார்வதி இனியாவது நான் சொன்னா நம்பு உன் பையன் பெரிய அமுங்குனி..” என்று அக்சயா பேசிக் கொண்டே போக அவள் தலையில் செல்லமாக கொட்டினார் பார்வதி.

“அம்மா” என்று அவள் சிணுங்க “பேசாம சாப்பிட்டு காலேஜ் கிளம்பற வழியை பாரு…” மகளை அதட்டி விட்டு

“நீ எதுவும் நினைச்சுக்காதே அபி.. அவ அப்படி தான்…” என்று இலகுவாக பார்வதி பேச

“அம்மா நீ ஒரு குட் மதர் இன் லா தான். பட் வெரி பேட் மதர் ஃபார் மீ…” என்று சலிப்பாக கூறிய அக்சயா அங்கிருந்து உள்ளே ஓடி விட்டாள். பின்னர் யார் அருகில் இருந்து அடி வாங்குவது.

அக்சயா குறும்பில் சிரித்த அபிநந்தன் அபிலாஷா இருவரும் தாயிடம் விடை பெற்று கிளம்பினர் திருமணம் முடிந்து முதல் முறை தம்பதிகளாக…

தொடரும்…












Leave a comment


Comments


Related Post