இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 05-03-2024

Total Views: 19938



பாகம்- 7

மறு  நாள் வெள்ளிக்  கிழமை. காலையிலே பெண்கள் மூவரும் தலைக்கு குளித்திருந்தனர். வாணிஜெயராமின் மஹாலஷ்மி ஸ்லோகம் வீட்டில் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது.வீடு எங்கும் சாம்பிராணி போட்டு முடித்திருந்தார் மீனாட்சி. எல்லா சாமி படங்களுக்கும் சந்தன குங்குமம் இட்டு பூ போட்டு முடித்திருந்தாள் ரேணுகா.ஒரு புறம் பக்தி மணம்  கமழ நம் அழகி பவித்ரா குட்டி நின்ற வாக்கிலேயே ஏதோ டெஸ்டுக்கு ரிவைஸ் செய்துக்  கொண்டிருந்தாள். அந்தக்  காலையிலேயே ஒரு பெரிய பார்சல் வந்தது குட்டி ஆட்டோவில்.

வண்டி வந்த சத்தம் கேட்கவில்லை. ரொம்ப யோசிக்காதீங்க. அது EV ஆட்டோ. 

"என்ன? வண்டி வந்து நிக்குது?" பெண்கள் மூவரும் வெளியில் வந்து பார்த்தார்கள்.

"மேடம்! இங்க செந்திலுங்கறது?"

"இருங்க  கூப்பிடறேன்"

அப்போதுதான் குளித்துவிட்டு சாமி கும்பிட்டு நெற்றியில் விபூதி கீற்றுடன் வந்தான். கட்  பனியனில் அசத்தலாக இருந்தான். நாயகிக்குதான் அந்த அழகை பார்த்து ரசிக்க கொடுத்து வைக்கவில்லை.

"என்ன இது?"

"தெரியலைங்க" பவ்யமாக ஒரு சிறு அட்டையை  கொடுத்தான் வந்தவன் . 

"இந்தாங்க! டீ செலவுக்கு" ஒரு ஐம்பது ரூபாயை நீட்டினான் செந்தில்.

"வரேங்க ! வரேன்மா" பவ்யமாகச் சென்று விட்டான்.

"இது என்ன?"

"இந்த விளக்கில் வரும் வெளிச்சம் போல உங்கள் வாழ்விலும் வெளிச்சம் பரவட்டும். வாழ்த்துக்கள் மை  டியர்" அருகில் ஒரு இருதய வடிவம். பார்த்ததுமே இவனுக்கு ஜிவ்வென்றிருந்தது.

"என்னடா என்ன எழுதி இருக்கு? யாரு அனுப்பி இருக்காங்க?"

சடக்கென பாண்ட்  பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். 

"ஏய் பவி! கத்திரிக்கோல் கொண்டு வா" 

பேச்சை மாற்றினான். பிரித்ததும் அவனைத் தவிர மற்ற மூவருக்கும் ஆச்சர்யம். பெரிய குத்து விளக்கு. எப்படியும் ஒரு நான்கு அடி  இருக்கும்.  

"ஐ! விளக்கு! அம்மா இங்க பாரேன்.எவ்ளோ அழகா இருக்கு? நீயும் சொல்லிகிட்டே இருந்தியே புது கடைல  விளக்கு வாங்கி வைக்கனுன்னு. பாரேன் கடவுளே  உன்னோட ஆசைய நிறைவேத்தி வச்சுட்டார் "

"இத குடுத்தது கடவுள் இல்ல பவி. நிரஞ்சனா. சரியாத்  தம்பி?" அன்னையின் பார்வை ஒரு மார்கமாகத் தான் இருந்தது. 

"சரி சரி! அதெல்லாம் இருக்கட்டும். யாரும் இதை தொட வேணாம். கடைலேர்ந்து வண்டி அனுப்பறேன். அவங்க வந்து எடுத்துக்கிட்டு போவாங்க . தூக்கறேன் நகத்தரேன்னு யாரும் கைல கால்ல  போட்டுக்காதீங்க"

"ஏய்! பவி நீதான் ஜாக்கரதையா இருக்கணும். எதையாவது பண்ணி வைக்காத. ரத்தம் சிந்தினா அபசுகனம் ஆகிடும்" அன்னையும் எச்சரித்தார்.

"ஆமா ! எதுக்கெடுத்தாலும் பவிதான் "

"எதை கெடுத்தாலும் பவிதான் "லேசாக பின்னந்தலையில் தட்டி விட்டுப்  போனான் செந்தில்.

அவனின் மாற்றம் ரேணுவிற்கேத் தெரியும்போது பெற்றவளுக்குத் தெரியாதா ?

அன்னையுடன் சமையல் அறைக்குள் நுழைந்தவள் "அது எப்படி ம்மா? அத அனுப்பியது அன்னிதான்னு கண்டுபிடிச்ச?"

"அந்த பேப்பர  அவன் படிச்சதுமே ஒரு பல்ப் எரிஞ்சுது. நீ பாக்கல ?'

அரைகுறையாக கேட்டுக் கொண்ட வந்த பவி, 

"எங்க பல்பு எரியுது?மாடிலையா? நான் போய் அனைக்கறேன்"

"ம்! ஆமா ! மேல் மாடிலதான் பல்பு எரியுது. போய்  அனைச்சுட்டு வா"

அன்னை சொன்னதும் கமுக்கமாக சிரித்துக் கொண்டாள்  ரேணுகா.

"இதுக்கு எவன் வந்து லைட் எரிய வைக்கப் போறானோ? லேசாக தலையில் அடித்துக் கொண்டார் மீனாட்சி.

================================================================="ஏண்டா பாஸ்கரா! ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிட்டு போடா"

"அம்மா நான் ஏற்கனவே படு லேட். நீரு வர்றதுக்குள்ள நான் மீட்டிங்குக்கு தேவையானது எல்லாம் செட் பண்ணி வைக்கணும். இது ரொம்ப பெரிய பெரிய ப்ராஜெக்ட்"

"நீ இப்ப சாப்பிட போறியா இல்லையா?"

"சொல்லிக்கிட்டு தானே இருக்கேன். புரியல ஒனக்கு" சாக்சைப்  போட்டுக் கொண்டே வள்ளென்று கத்தினான்.

"சத்யா! நிரஞ்சனாவுக்கு போன போடுடி. தினம் இதுவே தொல்லையா போச்சு. ஒரு வாய் சாப்பிட கூட முடியாதபடிக்கு அவ என் புள்ளைய வேலை வாங்கறாளா?"

"போனை எடு" சொன்ன போதே தான் முதல் இட்லி தொண்டைக்குள் ட்ராவல் செய்து கொண்டிருந்ததே!

ஒரு கப்பில் தண்ணீரை வந்து நீட்டினாள் சத்யா. அப்படியே அருகில் இருந்த மண்ணில் கையை கழுவி விட்டு, இருந்த மீதத்தை வாயிலும் ஊற்றிக் கொண்டான். அன்னையின் புடவை முந்தியை உருவி கைகளைத் துடைத்துக் கொண்டான்.

தங்கையின் கையில் இருந்து அவசரமாக லஞ்சையும் வண்டி சாவியையும் பிடுங்கி கொண்டவன், 

"பை பா!" சத்தமிட்டுக் கொண்டே ஓடினான். அடுத்த இரண்டடியில் திரும்பி வந்து அன்னைக்கு கன்னத்தில் முத்தமிட்டு உடன் பிறந்தவளுக்கு பை  சொல்லி விட்டு அவசரமாகக் கிளம்பினான். 

மகனின் இட்லி முத்தத்தில் மனம் மகிழ்ந்தாலும் , "ஆமா !ஒழுங்கா ஒரு கல்யாணத்த பண்ணி இருந்தா பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டியதை இன்னமும் எனக்கு குடுக்குது பாரு"

"சும்மா நடிக்காத பட்டு. அவன் மட்டும் பொண்டாட்டிக்கு குடுத்துட்டு ஒனக்கு குடுக்கலைன்னா அப்ப இருக்குடி அவனுக்கு" பின்னே தோட்டத்தில் வேலை செய்து விட்டு கைகளை கழுவிக் கொண்டு வந்தார் கணவர்.

" அது சரி அது எப்படி விட முடியும். அது அம்மாவோட உரிமையாச்சே?" இது சத்யா. 

"சரி! சரி! என்ன கால வாரலைன்னா  உங்களுக்குகெல்லாம் நாளே விடியாதே "

வெளியில் மகளைத்  திட்டினாலும் திக்கி திக்கிப் பேசும் மகளை பார்த்து மனதிற்குள் வருத்தமாகத் தான் இருந்தது பட்டுவிற்கு .

போகாத கோவில் குளம் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. முதல் வகுப்பில் இருந்த ஒரே பள்ளியில் படித்ததால் எந்த குழந்தைக்கும் அவளிடம் மாறுபாடு தெரியவில்லை போலும். அல்லது அவர்கள் குழந்தைகளாகவே இருந்தார்கள்போல. அதுவே கல்லூரிக்குள் நுழைந்த போது அவளின் இந்த திக்கு வாய் பெரிதாகப் பட்டது. இல்லை இல்லை பெரியதாக காட்டப் பட்டது. எந்த மேக்கப்பும் இல்லாமல் அழகாக இருக்கும் ஒரு பெண்ணை மற்ற பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு பொறாமை வாட்டுகிறதே ? அவர்கள் கிண்டலடிக்க கிடைத்தது பெரிய விஷயம். விடுவார்களா? ஆண்களும் அதற்கு இளைத்தவர்களா  என்ன? சீனியர்கள் சீனியர் என்ற போர்வையில் கொடுமைப்  படுத்தினார்கள். முதலில் எல்லாம் இல்லை அவள் எல்லாவற்றையும் தாண்ட வேண்டும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று சொன்ன பாஸ்கரே , "இல்லை அவள் இனிமேல் கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என்று உறைக்கும்படி ஆனது.

 ஒருநாள் கல்லுரியில் ,

அவளின் பையை பிடுங்கி, புத்தகங்களை கிழித்து, ஏன் அவளின் ஷாலை பிடுங்கி கொஞ்சமா அவர்கள் செய்தது? கை,கால் இல்லாதவர்களை கூட ஊனமுற்றவர் என்று பரிதாபம் காட்டும் மக்கள் ஏனோ திக்கு வாயை ஏற்றுக் கொள்வதில்லை. கேலிப்  பொருளாக பார்க்க ஒரு விஷயம் கிடைத்தால் போதும். யாரும் சந்தர்ப்பங்களை விடுவதில்லை. பிறகு வீட்டிலேயே கரஸில் படித்து கோல்ட் மெடல் வாங்கினாள் . பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு பயந்து நடுங்காமல் தைரியமாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் நிர்வாகம். கல்லூரிக்கு கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் வேறு எங்கோ சென்று விட்டது. மூன்று வருடம் அனைத்து பாடங்களிலும் டிஸ்டின்க்ஷன், வகுப்பிலேயே முதல் என்றால் சும்மாவா? எத்தனை பரிசுகள் தான் கொடுப்பார்கள். கை  தட்டி தட்டி வலித்துப்  போன பெற்றோருக்கு ஒரு நேரத்தில் கண்களில் ஆனந்தக் கண்ணீர்  வந்தது.  அதற்காக அவள் அழுதிருப்பது கொஞ்சமா? ஏனோ அந்த நேரத்தில் மற்ற பெற்றோருக்கும் அது ஆனந்தமாகவே இருந்தது. ஏதோ சில நொடிகள் தன் வீட்டு பிள்ளையை போலவே எண்ணினார்கள்.

அவள் வெளியில் எங்கும் வேலைக்குப் போகவில்லை. வீட்டில் இருந்தபடியே தையல் தைத்துக் கொடுத்தாள் . ஆரி  வர்க்  செய்து கொடுத்தாள். நல்ல வருமானம் கிடைத்தது. தங்கையின் நிலையை எண்ணி வருத்தத்தில் இருந்த பாஸ்கரை  தேற்றி சத்யாவுக்கும்  ஊக்கம் கொடுத்து இந்த நிலைக்கு நிற்க வைத்திருப்பது நிரஞ்சனாதான். பாஸ்கர் முதலில் வேலை செய்தது வேறு  ஒரு நிறுவனத்தில்தான். அதிகப்படியானக்  கவலையில் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்தான். "வேலைக்குச் செல்" என்று சொல்லும் நிலையில் வீட்டில் யாருமே இல்லை. அப்போதுதான் எதேச்சையாக நிரஞ்சனா அவன் வீட்டிற்கு வந்தாள் . பாஸ்கரும் நிரஞ்சனாவும் பள்ளி முதலே நண்பர்கள். இருந்தாலும் இந்த நிலையை அவனால் அவளிடம் கூற முடியவில்லை.எதேச்சையாக வீட்டிற்கு வந்தவளுக்கு எல்லாமே தெரிந்து  போனது. 

"இதற்கு ஏன் இப்படி இடிந்து போய்  அமர வேண்டும்?"

அனைவரையும் இயல்பாக்கினாள் . பாஸ்கரை தன்னுடைய புது நிறுவனம் ஆரம்பித்தது முதலே அருகில் வைத்துக் கொண்டாள் . நம்பிக்கையான தோழனாய், நன்றியுள்ள செகரெட்டரியாய்  உடன் சுற்றும் நண்பனாய், பாதுகாப்பான சகோதரனாக எப்போதுமே அவளுடனே இருந்தான். 

"மத்த பொண்ணுங்க மேல கைய வைச்சலே சும்மா விட மாட்டேன்" சொன்ன பிரதீப் சும்மா இருப்பானா?நிரஞ்சனாவும் பாஸ்கரும் பள்ளி நண்பர்கள் என்றால்  நிரஞ்சனா மூலம் பிரதீப்பும் பாஸ்கரும் நண்பர்கள். அநேகமாக இவர்கள் மூவருமே சேர்ந்து தான் சுற்றித் திரிவார்கள். ஆண்  நண்பர்களுக்கு நிரஞ்சனா இருந்ததில் வேறு பெண் தோழிகள் தேவைப் படவில்லை. அதே தான் நிரஞ்சனாவுக்கும். இவர்களை மீறி எந்த ஆண்  நண்பர்களும் அருகில் வந்ததில்லை. அன்னையைத் தவிர வேறு எந்த பெண் தோழிகளையும் அவள் ஏற்றுக் கொண்டதில்லை. அன்று சத்யா அவமானப் படுத்தியவர்களுக்கு நேர்ந்த கதி அவர்களைப் பார்த்த யாருக்கும் மற்றவர்களை சும்மா கூட கேலி செய்ய வைக்காது. 

"என்னடா இது இப்டி செஞ்சு  வச்சுருக்க?" பிரதீப்பின் சட்டைக்  காலரை பிடித்து இழுத்தான் பாஸ்கர்.

"நீ பண்ணல. அதான் இன்னொரு அண்ணனா இருந்து நான் பண்ணேன்" கை  கட்டி நண்பனின் முகத்தை கூர்மையாக நோக்கினான் பிரதீப்.

ப்ரதீபிடம் சண்டை போட  வந்தவனுக்கு கண்களில் கண்ணீரே வந்து நின்றது. தன்னுடைய இயலாமையை நினைத்து குலுங்கி குலுங்கி அழுதான். 

கைகளுக்குள் முகம் மூடி அழுத நண்பனை தன்  வலிய  நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டான். தோழனை சிறிது நேரம் அழவிட்டான் பிரதீப். இது நடுத்தர மக்களின் இயலாமை. அவனுக்குத் தெரியும். பயம், எதையும் எதிர்த்து நிற்க  பயம். என்ன செய்து விடுவார்களோ என்ற பயம். காவலர்களையும் நம்ப முடியாது. பணம் பாதாளம் வரை பாயும். அதனால் தான் பாஸ்கர் செய்ய வேண்டியதை பிரதீப் செய்தான். என்ன செய்தான்? தெரிய வேண்டுமா? ஏதோ ஒரு கோரமான சம்பவம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

======================================

பிட்டு பாக்க போன சாரி !சாரி!  அந்த பிட்டு பேப்பரை பாக்கப் போன நம்ம அய்யா என்ன பண்ணாருன்னு தெரிய வேணாம்? காத்திருங்கள் .

தொடரும்....

 

 

 

 

 


Leave a comment


Comments 4

  • அஸ்வதி
  • 3 months ago

    அச்சச்சோ!! அந்த செந்தில் நிரஞ்சனா காட்சி வரும்னு பார்த்தா இவர்களைப் பற்றியே வந்துருச்சு... சீக்ரைம் அடுத்த யூடியோடு வாங்க.

  • அஸ்வதி
  • 3 months ago

    அச்சச்சோ!! அந்த செந்தில் நிரஞ்சனா காட்சி வரும்னு பார்த்தா இவர்களைப் பற்றியே வந்துருச்சு... சீக்ரைம் அடுத்த யூடியோடு வாங்க.

  • அஸ்வதி
  • 3 months ago

    அச்சச்சோ!! அந்த செந்தில் நிரஞ்சனா காட்சி வரும்னு பார்த்தா இவர்களைப் பற்றியே வந்துருச்சு... சீக்ரைம் அடுத்த யூடியோடு வாங்க.

  • அஸ்வதி
  • 3 months ago

    அச்சச்சோ!! அந்த செந்தில் நிரஞ்சனா காட்சி வரும்னு பார்த்தா இவர்களைப் பற்றியே வந்துருச்சு... சீக்ரைம் அடுத்த யூடியோடு வாங்க.


    Related Post