இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நிறங்கள் தந்த நிஜம் அவள் 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK015 Published on 06-03-2024

Total Views: 13471

நிறங்கள் தந்த நிஜம் அவள் 5

துருவன் ஆர்ட் கேலரியில் நின்று கொண்டிருந்தாள் ஆதிரா. "ப்ளீஸ் சார்.. எனக்கு அவர பாக்கணும்.. அட்ரஸ், போன் நம்பர் ஏதாவது கொடுங்க சார்.. ப்ளீஸ்.." கேலரி கீப்பரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் ஆதிரா.. ஆனால் அவரோ "ம்மா.. சொன்னா புரிஞ்சுக்கோங்க மா.. ஆர்ட்டிஸ்ட் பர்சனல் டீடெயில்ஸ் எல்லாம் வெளில கொடுக்க கூடாது மா.. என் வேலையே போயிரும்.. ப்ளீஸ் இங்க இருந்து போ மா.." காலில் விழாத குறையாக கெஞ்சியவர்  தன் நிலையை கூற, அவள் நிலையை அவள் எப்படி கூறுவாள்?

இன்றுடன் பத்து நாட்கள் ஆகி போனது துருவனை பார்த்து. அன்றைய நாளுக்கு பின் அவனை பார்க்கவில்லை என்றாலும் பைத்தியக்காரி போல அவனையே நினைத்து கொண்டு திறிகிறாள். குழப்பத்தில் இருக்கிறாள் அவளாகவே தெளியட்டும் என ரியோவும் அவளை கண்டும் காணமாலும் இருந்தான்.

ஆதிராவை பார்க்க வந்த ஷாலு அவளை நிலை கண்டு "ஏதோ சரி இல்லையே இவ.." என்று நினைத்தவள் "ஏன் ஒரு மாதிரி இருக்க ஆதி.." என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை. எங்கோ வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

"ஏய்.. உன்கிட்ட தான் டி கேக்குறேன்.. ஏன் ஒரு மாதிரி இருக்க??" மீண்டும் கேட்க "எனக்கு துருவனை பாக்கணும் போல இருக்கு.." என்றாள். வருத்தம் தோய்ந்த குரலில்.

"எந்த துருவன்??"

"சார்க்கோல் ஆர்ட்டிஸ்ட்.." என்று கூற திட்டுக்கிட்டாள் அவள்.

"ஏய்.. நீ ஏன் டி அவர பாக்கணும்??" என்ற தோழியின் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதி காக்க, "என்ன லவ்வா??" புருவம் இடுங்க கேட்க தோழியை பார்க்க திறன் இல்லாமல் தெரியல.. சன்னமான குரலில் கூறினாள்.

"காதல்ல தெரியலங்குறதும் ஆமாங்குறதும் ஒன்னு தான்" என்று நிறுத்தியவள் "அதென்ன பாத்ததும் காதல்??" கேலியாகவே அவள் கேட்க, ஆதிராவிடம் அமைதியோ அமைதி.

அவளை அழுத்தமாய் பார்த்த ஷாலு "இங்க பாரு ஆதி.. இந்த கண்டதும் காதல் எல்லாம் உண்மை இல்ல.. அப்டியொரு காதல் உருவாக வாய்ப்பே இல்ல.. அதனால அத பத்தி யோசிக்காத.. உன்ன அவர் கற்பனைல வரைஞ்சு வச்சிருந்தால உனக்கு அவர் மேல ஒரு அட்றாக்ஷன் அவ்ளோ தான். அது புரியாம காதலென்னு சொல்லிக்கிட்டு திரியாத" என்றவள் "நாளைக்கு ஸ்கூல்ல உனக்கு ப்ரோக்ராம் இருக்கு.. ஒழுங்கா பிராக்டிஸ் பண்ணு.." என்று கூற அப்போதும் அமைதியாவே இருந்தாள் ஆதிரா..

கடுப்பான ஷாலு, ஆதிரா நாடி பற்றி தன்னை பார்க்க வைத்து "முதல் இந்த ப்ரோக்ராம்ம ஒழுங்கா முடி.. அப்புறம் சார்கோல் ஆர்டிஸ்ட் தேடலாம்.. தெரு தெருவா அலைஞ்சு திறிஞ்சாவது உனக்கு நான் கண்டு பிடிச்சு கொடுக்குறேன்.." என்று கூற சிறு புன்னகை அவளுக்கு.

"நாளைக்கு நடக்குற ப்ரோக்ராம் ரொம்ப முக்கியம். ஏழை குழந்தைகள் படிப்பு செலவுக்காக ஃபண்ட் கலேக்ட் பண்றதுக்காக நடத்துற ப்ரோக்ராம். அதுல சொதப்பி விட்டுறாத.. ஒழுங்கா பிராக்டிஸ் பண்ணு.." என்று அழுத்தி கூற தலையை ஆட்டினாள் ஆதிரா..

ஆதிரா டான்ஸ் ப்ராடிக்ஸ்க்கு செல்ல, துருவனை பற்றி இணையத்தில் தேடினாள் ஷாலு. சார்கோல் ஆர்ட்டிஸ்ட் என்பதை தவிர வேறு எந்த விவரங்களுக்கும் இல்லை. அவன் உண்மையான பெயர் கூட இல்லை. அதை அப்படியே பார்த்து கொண்டே வந்தவள் அவன் ஓவியங்களில் மூழ்கினாள்.

"சான்ஸே இல்ல.. இவரால மட்டும் தான் இது மாதிரியெல்லாம் வரைய முடியும். கலரே தேவை இல்லை. எவ்ளோ தத்ரூபமா வரைஞ்சிருக்காரு.." ஓவியனை பற்றி தேட போய் அவன் ஓவியத்திற்குள் மூழ்கினாள்.

மாலை மயங்கி இரவும் வந்தது. வேலை முடித்து வீட்டுக்கு வந்த ரியோவிடம் "இப்போல்லாம் ஆதி ஒரு மாதிரி இருக்கால?" அவன் தந்தை கேட்க,

அவனும் மறைக்காமல் "ஆமா ப்பா.. அவ லவ் பன்றா.." என்று கூற அதிர்ச்சிக்கு பதில் ஆச்சர்யம் அவருக்கு.

"நம்ம ஆதியா?? யாரு அந்த பையன்??" ஆர்வமா கேட்க அவரை பார்த்த ரியோ "பொண்ணு லவ் மேட்டர் தெரிஞ்சு எவ்ளோ ஆர்வமா கேக்குறீங்க.. கோபம் வரலையா உங்களுக்கு??" கிண்டலாக கேட்க,

"நான் ஏன் கோப பட போறேன்?? என் பொண்ணு லவ் பண்ணாலும் நானே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.. அப்புறம் எதுக்கு நான் கோப படனும்?? அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்லு அந்த பையன் யாரு??" மீண்டும் கேட்க,

ரத்தின சுருக்கமாய் ஆதிரா கூறியதை கூறியவன் "அவளுக்கு இன்னும் குழப்பம் இருக்கு. அத அவளே தீர்த்தத்துக்கட்டும்.. நீங்க அவகிட்ட எதுவும் கேட்டுக்காதீங்க ப்பா.." என்றான்.

அதிசயித்து போனார் முரளி. ஏதோ நாவலில் வருவது போல இருந்தது அவருக்கு. ஆனால் மகிழ்ச்சி தான். எந்த மாப்பிளையையை பார்த்தாலும் வேண்டாம்.. புடிக்கல.. இவன பாத்தா எனக்கு அண்ணன் பீலிங் வருது.. என்றெல்லாம் நாட்களை கடத்தி கொண்டே சென்றவள் தானாகவே காதல் கொண்டிருக்கிறாள் என்னும் போது மகிழ்ச்சியே அவருக்கு.

இங்கு ஆதிராவோ நடுரோட்டில் ஸ்கூட்டியை தள்ள முடியாமல் தள்ளி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். ப்ராக்டிஸ் முடித்து வீடுக்கு வந்து கொண்டிருக்கும் போது வண்டி பாதியிலே நிற்க ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. பக்கத்தில் மெக்கானிக் ஷாப்பும் இல்லாததால் தள்ளி கொண்டே வந்தாள். சாலையில் ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்க, பயம் இல்லாமல்  இருந்தது. ஆனால் எப்போது ஆள் நடமாட்டம் குறைந்து போய் சாலையே வெறிச்சோடி கிடக்க பய பந்து உள்ளுக்குள் உருண்டது.

"கடவுளே பத்திரமா என்ன வீடு கொண்டு போய் சேர்த்திடுப்பா.. உனக்கு ஒரு அர்ச்சனை பண்ணுறேன்.." வேண்டுதல்களை வைத்து கொண்டே வண்டியை நகர்த்தி கொண்டு செல்ல, "ஹெல்ப் வேணுமா??" என்று அவள் செவி அருகில் கேட்ட குரலில் பதறி சிதறி போனாள்.

அதிர்ச்சியில் உறைந்து போனவள் ஸ்லோ மோஷனில் மெல்ல திரும்பி பார்க்க துருவன் தான் அவள் அருகில் நின்றிருந்தான். அவனை கண்டவள் பூ விழி இரண்டும் விரிந்தது. இதழ் புன்னகை தேனை சிந்த அவன் சாதாரணமாக தான் நின்றிருந்தான்.

வண்டியை வைத்திருப்பது கூட தெரியாமல் "எங்க போனீங்க நீங்க?? உங்கள எங்கையெல்லாம் தேடுறது?? உங்கள பத்தி ஒரு தகவலும் தெரியல.. ஆமா.. நீங்க இங்க எப்டி??" கேள்விகனைகளை தொடுத்து கொண்டே போக, அவனோ "உனக்கு ஹெல்ப் வேணுமா??" என்று தான் கேட்டான்.

அதன் பின் தான் தன் வண்டி இருக்கும் நிலை உணர்ந்தவள், இவன பாத்ததும் எல்லாத்தையும் மறந்துட்டேன்.. ஆதி.." மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் "ஆங்.. ஆமா.. எனக்கு ஹெல்ப் வேணும்.. என்னன்னு தெரியல வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டிகிது.." என்று கூற, அவள் கையில் இருந்த வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் துருவன்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்த தன் செல்போன் எடுத்து டார்ச் ஆன் செய்து பார்த்து கொண்டிருக்க, "உங்களுக்கு மெக்கானிக் வேலை கூட தெரியுமா??" சாதாரண விஷயத்திற்கு ஆச்சர்யமாக கேட்டாள்.

அவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் "ஓரளவு தெரியும்" என்றான்.

"ஓரளவு னா?? எவ்வளவு?" தலை சாய்த்து அவள் கேட்க நிமிர்ந்து அவளை முறைப்பாக பார்த்தவன் "இங்க சரி பண்ண முடியாது.. இன்னும் கொஞ்ச தூரத்துல ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு.. அங்க கொண்டு போகணும்.." என்றிட

"அவ்ளோ தூரம் எப்டி கொண்டு போக முடியும்?? இவ்ளோ தூரம் தள்ளிட்டு வந்ததே பெரிய விஷயம்.." மலைப்பாக அவள் கூற, "உன் வண்டில உக்காரு.." தன் வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அவள் வண்டியை பின் பக்கம் இருந்து கால் வைத்து உந்துதல் கொடுக்க சீரான வேகத்தில் சென்றது இரண்டு வண்டியும்.

கால் மணி நேரத்தில் மெக்கானிக் ஷாப் வந்து சேர, மூடி இருந்த கடையை பார்த்து "கடை மூடி இருக்கு.." மீண்டும் டென்சன் ஆனாள்.

"மணி பாத்தாக போகுது.. இன்னுமா கடை திறந்திருப்பாங்க.." அவளை பார்க்காமலே பதில் கூறியவன் போன் எடுத்து கடை ஓனருக்கு போன் செய்தான்.

"ண்ணா.. நம்ம வண்டி ஒன்னு கடைல லாக் பண்ணி வச்சிருக்கேன்.. நாளைக்கு சீக்கிரமா ரெடி பண்ணி கொடுத்திரு ண்ணா.." என்று கூற எதிர் முனையில் சரி என்று கூற பட்டது.

"உன் வீடு எங்க ட்ராப் பண்ணட்டுமா??" என்று கேட்க, "வேண்டாம்.. உங்களுக்கு எதுக்கு சிரமம். என் அண்ணணுக்கு கால் பண்ணா போதும் அவன் வந்து கூட்டிட்டு போவான்.." என்றாள் பவ்யமாக.

"அப்போ கால் பண்ண வேண்டியது தானே? இவ்ளோ தூரம் ஏன் வண்டிய தள்ளிட்டு வந்த??" புரியாமல் அவன் கேட்க,

"என் போன் ஆஃப் ஆகிடுச்சு.." என்றாள் பாவமாக.

தன் மொபைல்லை நீட்டி "கால் பண்ணு.." என்று கூற, திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாக விழித்தாள்.

"என்ன??" அவன் அழுத்தி கேட்க "போன்ல நம்பர் சேவ் பண்ணி வச்சிருந்தேன்.." இழுவையாக கூற, "மைன்ட் ல சேவ் பண்ணல.. அப்டி தானே.." மார்புக்கு குறுக்கில் கை கட்டி கேட்க, தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்.

குழந்தை போல உதட்டை பிதுக்கி கொண்டு நின்றவளிடம் கோப படக்கூட முடியவில்லை அவனால்.

"என் கூட வா.. பக்கத்துல தான் என் வீடு.. வீட்டுக்கு போயிட்டு சார்ஜ் போட்டு உன் அண்ணன்கிட்ட பேசு.." என்று அழைக்க,  "ஆங்.. அதுக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பசிக்குது.. சாப்பிடலாமா??" கெஞ்சலாக கேட்க சிரிப்பே வந்துவிட்டது அந்த ரோபோக்கு.

'வீட்டுல அப்பா சமைச்சு வச்சிருப்பாரு சாப்பிடலாம் வா.. " என்று அழைக்க, "அப்பாவா?? உங்க வீட்டுல அம்மா சமைக்க மாட்டாங்களா??" அதி முக்கிய கேள்வியை கேட்க "இப்டியே கேள்வி கேட்டுட்டே இருந்த அப்டியே நில்லுன்னு விட்டுட்டு போயிடுவேன்.." மிரட்டலாக கூற அமைதியாக அவனுடன் பைக்கில் ஏறி கொண்டாள்.

அமைதியான பயணம். நூலளவு கூட நெருங்காமல் உரசாமல் அமர்ந்திருந்தாள். பிரேக் அடித்து அவளை தன் மீது விழ வைக்காமல் சீரான வேகத்தில் பைக் ஓட்டினான். இருட்டிலும் சைட் மிரரில் தெரிந்த அவன் முகம் கண்டு ரசித்தாள்.

அளவாக ட்ரிம் செய்த தாடி மீசை, மாநிறம், வசீகர முகம், அளவான மூக்கு, உதடு, அடர்த்தி இல்லாவிட்டாலும் போதுமா அளவுக்கு கருத்து வளர்ந்து வளைந்த புருவங்கள். முறுக்கேறிய புஜம், சிக்ஸ் பேக் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் தொப்பை இல்லை. வயிரோடு அணைத்து முதுகில் சாய்ந்து அணைத்து கொண்டு இந்த பயணம் நீண்டு கொண்டே போக பெண்ணவளுக்கு பேராசை எழுந்தது. ஆசைக்கு அணை போட முடியாமல் அவள் தடுமாற சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் துருவன்.

திடீரென அவன் வண்டியை நிறுத்த, மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமா?? கலக்கமாக அவள் பார்க்க "வீடு வந்திருச்சு இறங்கு.." என்றான்.

அருகில் இருந்த வீட்டை பார்த்த படி அவள் இறங்க, வண்டியை பார்க் செய்து பூட்டிவிட்டு அழைப்பு மணியை அழுத்த கதவை திறந்தார் பாஸ்கர்.

மகன் முதுகுக்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்தவர் அதிர்ச்சியாக, அவனோ சலனமே இல்லாமல் நின்றான். இந்த 
ராத்திரி வேளையில் ஏதோ ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறானே?? என்று அவர் பார்க்க, அவனோ "உள்ள வா.." என்று அழைத்துவிட்டு வீட்டுக்குள் செல்ல, வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து போனார். அவளே தான்.. ஓவியத்தில் அவன் வரைந்த அதே பெண் தான்.. இது எப்படி சாத்தியம்?? அதிர்ச்சியில் அவளையே பார்த்தார்…

தொடரும்..



Leave a comment


Comments


Related Post