இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 08-03-2024

Total Views: 24677

“நந்து இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு?” தன்மீது ஒரு சுடியை வைத்து காட்டி கேட்க

“ம்ம்.. நல்லாருக்கு லாஷா” என்றான். கண்களை விரித்து

“ச்ச்… என்ன நந்து எதை கேட்டாலும் நல்லா இருக்கு னு ஒரே வார்த்தையில சொன்னா என்ன அர்த்தம்?” சிணுங்கினாள். 

எப்படி சொல்வான் ஒவ்வொரு ஆடையும் தனியே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவள் மீது பொருத்தி பார்க்கும் போது அவளுக்காகவே அவை தறியில் இருந்து வெளிவந்தது போல இருக்கின்றதே.. ம்கூம் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான் நந்தன்.

“நந்தன் நீங்க எனக்கு அன்னைக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்தப்போ எனக்கே சர்ப்ரைஸா இருந்தது. இப்போ நான் எனக்கு எடுக்கவே இவ்வளவு குழம்பறேன். ஆனா நீங்க அன்னைக்கு தனியா அதுவும் வெறும் அரைமணி நேரத்தில எப்படி எடுத்துட்டு வந்தீங்க.. இன்னைக்கு கேட்டா இப்படி முழிக்கிறீங்க…” செல்லமாக குறைபட்டுக் கொள்ள

“அது… எல்லா ட்ரெஸூம் உனக்கு ரொம்ப பொறுத்தமா அழகா தோணுது லாஷா.. அதான்…” என்று அவன் சொல்ல வெட்கி சிவந்தாள் அபிலாஷா.

“ம்கூம் அச்சுக்கு நீங்க தான் எப்பவும் ட்ரெஸ் சூஸ் பண்ணுவீங்க உங்களுக்கு நல்ல டேஸ்ட் இருக்கு னு அச்சு சொன்னா… இப்போ நீங்க தான் எனக்கு ட்ரெஸ் சூஸ் பண்ணனும்.” என்று சொல்லி விட்டு அவள் கையை கட்டி அமர்ந்துவிட 

ஆடையின் அளவு துணியின் தரம் டிசைன் என்று பார்த்தவன் சட் சட்டென்று நான்கு சுடிதார்களை எடுத்து “இது நாலுமே உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் லாஷா.” என்று சொல்ல அபிலாஷா மட்டும் அல்ல அங்கிருந்த சேல்ஸ் கேர்ள் கூட அதிசயித்து பார்த்தனர்.

“லாஷா சுடிஸ் போதும் கொஞ்சம் புடவை எடுத்துக்கலாம்.” என்று புடவையும் நான்கைந்தை தேர்ந்தெடுத்து போட “எப்படி சார் இப்படி சட்டு சட்டுனு சூஸ் பண்றீங்க எலலாமே அழகா இருக்கு வேற…” என்று சேல்ஸ் கேர்ள் மலைத்துப் போக

“எந்த ட்ரெஸ் போட்டாலும் லாஷாக்கு அழகா தான் இருக்கும்.” என்று அவன் சிறு புன்னகையோடு சொல்ல

“மேடம் நீங்க நியூ மேரீடா?” அபிலாஷாவிடம் கேள்வி எழுப்பினாள் விற்பனை பெண்.

“ஆமா… நேத்து தான் மேரேஜ் முடிஞ்சது.” என்றவள் கூடுதல் தகவலாக “லவ் மேரேஜ்…” என்று சிறு வெட்கத்தோடு சொல்ல

“யூ ஆர் வெரி லக்கி மேம்…” என்று ஒரு நொடி அப்பெண் ஏக்க பெருமூச்சு விட தன்னவனை பெருமையாக பார்த்தாள் அபிலாஷா.

“நந்தன் எதுக்கு இவ்வளவு?” அவள் தயங்க

“இதுவே கம்மி தான் லாஷா… சரி ரெண்டு மூணு வெஸ்டர்ன் ட்ரெஸ் எடுக்கலாமா?” என்றிட

“அச்சோ இதுவே அதிகம்… பில் போட்டு கிளம்பலாம் நந்தன்.” என்று அழைக்க துணிக்கடையில் இருந்து வெளிவந்தவன் அதே மாலில் வேறொரு தளத்திற்கு நகரும் படிக்கட்டு மூலம் அழைத்து செல்ல சட்டென்று அவனின் கரங்களை பிடித்து கொண்டாள் அபிலாஷா.

சிறு மின்னதிர்வு இருவர் மேனியையும் தாக்க ஒரு நொடி இருவருமே நேருக்கு நேராக விழிகளை கலந்து கொண்டனர். 

“அது ஃப்ரண்ட்ஸ் கூட வரும்போது இப்படி பழகிடுச்சு..” என்று அவள் தயக்கமாக சொல்ல இதழ் பிரிக்காமல் சிரித்தான் அபிநந்தன்.

“நந்தன் ட்ரெஸ் வாங்கியாச்சு. இன்னும் எங்கே?” அபிலாஷா சந்தேகமாக கேட்க

“அதுக்கு மேட்ச்சா ஆக்சசரிஸ் வாங்கனும்ல…” என்று சொல்லி இதையும் அவனே பார்த்து பார்த்து வாங்க அவனை ரசித்தபடி உடன் நின்றாள் அபிலாஷா.

அதனோடு இவளின் தனி உபயோகத்திற்கு அலைபேசி ஒன்றை வாங்கி தர “இப்போ என்ன அவசரம் நந்தன்?” என்று மறுக்க

“உன் ஃப்ரண்ட்ஸ் உனக்கு கால் பண்ணனும்னா கூட என் நம்பருக்கு கால் பண்ண சொல்ற.. உங்களுக்குள்ள ஏதாவது பேசிப்பீங்க.. அவங்களுக்கும் கொஞ்சம் அதனால சங்கடம் ஆகும். அதான்..‌” என்று விளக்கமளித்தான். 

பின்னர் அதே மாலில் ஃபுட்கோட் அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கி தந்துவிட்டு பைக்கில் ஏறியவர்கள் “லாஷா.. அம்மா எங்கயாவது வெளியே போய்ட்டு வரச்சொன்னாங்க… எனக்கு எங்க போகனும்னு எந்த ஐடியாவும் இல்ல.. உனக்கு எங்க போகனும்னு சொல்லு. போகலாம்.” அபிநந்தன் சொல்ல

“நந்தன் என்னை வீட்ல ட்ராப் பண்ணிட்டு நீங்க ஆஃபிஸ் போங்க..” என்று சொல்ல திரும்பி கண்ணை சுருக்கி அவளை பார்க்க

“மோகன் அங்கிள் ஊர்ல இல்ல உங்களுக்கு ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கும். நீங்க இன்னைக்கு ஆஃபிஸ் போங்க இன்னொரு நாள் நாம வெளியே எங்காவது போகலாம்.” என்று அவனை புரிந்து பேசிட அழகாய் விகசித்தான் அபிநந்தன்.

வழியில் ஒரு பூக்கடை முன்பு வண்டியை நிறுத்தி “ஒரு அஞ்சு முழம் மல்லிப்பூ கொடுங்கம்மா…” என்று அபிநந்தன் கேட்க

“அம்மா அதை ரெண்டா கட் பண்ணிடுங்க…” என்றாள் அபிலாஷா.


“ஏன் லாஷா நீ அதிகமா வைப்பதானே..?” 

“இல்ல நந்தன் அச்சுக்கு…” அபி பதில் சொல்ல “அச்சு அதிகமா பூ வைச்சுக்க மாட்டா லாஷா அவளுக்கு தலைவலி வரும்னு சொல்லுவா. அதனால அவளுக்கு அளவா கட் பண்ணி கொடுத்திட்டு மீதி நீயே வச்சுக்கோ” என்று நந்தன் சொல்ல பூக்காரம்மா பூச்சரத்தை வெட்டி கொடுத்தார். 

“சரி நந்தன் நான் மீதியை ஃப்ரிட்ஜில் வைச்சு நாளைக்கு வைச்சுக்கிறேன்.” என்று அபி இயல்பாக சொல்ல நந்தன் புரியாமல் முழித்தான்.

அதன் பின்பே இவர்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்று நினைவு வர “ஸ்ஸ்..” என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டாள் அபிலாஷா.

“சாரி நந்தன்..” அவள் மன்னிப்பு வைக்க

“இட்ஸ் ஓகே லாஷா” என்று பயணத்தை தொடர்ந்தான். 

“என்ன நந்தா… உன்னை வெளியே எங்காவது போய்ட்டு வாங்க’னு தானே சொன்னேன்.” பார்வதி கேட்க

“அம்மா.. நான் தான் டயர்டா இருக்கு வீட்டுக்கு போகலாம்னு சொன்னேன்.” அபிலாஷா சொல்ல

“ஓ… சரிம்மா சாப்பிடுங்க முதல்ல அப்பறம் போய் ஓய்வெடு அபி.” என்று பார்வதி சொல்ல

“இல்லம்மா ஃபுட்கோட்ல சாப்பிட்டு தான் வந்தோம் கொஞ்ச நேரம் கழிச்சு நான் சாப்பிடுறேன்.” என்று அபி தன்னை தூய்மை படுத்திக் கொள்ள செல்ல அபிநந்தன் உடை மாற்றி தயாராகி வந்தான்.

“என்ன நந்தா?” 

“அம்மா அதான் சொன்னேனே ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கு மா இங்க சும்மா இருக்கிறதுக்கு நான் என் வேலையை முடிப்பேன்ல…” என்று சொல்லி கிளம்ப

“நான் சொன்னா எங்க கேட்க போற.. போ மோகன் சார் வரட்டும் நான் பேசிக்கிறேன்..” என்று கடிந்து கொண்டே அனுப்பி வைத்தார் பார்வதி.

மாலை கல்லூரி முடிந்து வந்த அக்சயா இன்று இவர்கள் சென்று வந்த ஷாப்பிங் பற்றி கிண்டி கிளறி கேட்டபடி வாங்கிய பொருட்களை ஆராய்ந்து கொண்டு இருக்க

“ஏன்டி எக்ஸாம் வருதுல படிக்காம எதுக்கு அண்ணியை இப்படி தொந்தரவு பண்ற?” பார்வதி அதட்ட

“அட போம்மா உன் பையன் தான் யாரோ ஒரு பொண்ணை இன்ஸ்ப்ரேஷன்னு சொல்லி எனக்கு பிடிச்சதை படிக்க விடாம என்னை டார்ச்சர் பண்றாரு. நீயும் கூட சேர்ந்து படி படி னு உயிரை வாங்குற…” அக்சயா சலித்துக் கொள்ள

“அச்சு நீ படிக்கிற கோர்ஸ் உனக்கு பிடிக்கலையா? உன்னை நந்தன் ஃபோர்ஸ் பண்ணி இந்த கோர்ஸ் எடுக்க வைச்சாரா? என்ன சொல்ற என்னால நம்பவே முடியல…” அபிலாஷா ஆச்சரியமாக கேட்க

“ஆமா அண்ணி சின்ன வயசுல இருந்து அம்மா தைக்கிறது பார்த்து எனக்கு ஃபேஷன் டிசைனிங் மேல தான் இன்ட்ரஸ்ட். பட் அண்ணா ஆஃபிஸ் ல மோகன் சார் ஏதோ யமுனா இன்டஸ்ட்ரீஸ்னு அதை ஒரு பொண்ணு ரன் பண்றாங்க. அதுவும் மோகன் சாரோட ஃப்ரண்டோட பொண்ணாம்… 

அந்த பொண்ணை ஒருமுறை கூட அண்ணா பார்த்ததே இல்ல. ஏன் பெயர் கூட தெரியாது. ஆனா அந்த பொண்ணோட திறமையை மோகன் சார் மூலமா கேள்வி பட்டு அதே மாதிரி என்னையும் ஆக்கனும் னு வெறி கொண்டு பிஸ்னஸ் கோர்ஸ் படிக்க சேர்த்து விட்டுருக்காரு.” என்று கதை போல சொல்ல 

எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்துக் கொண்டு இருந்தாள் அபிலாஷா.

“அப்போ நீ யாருன்னு இங்கே யாருக்குமே தெரியாதா அபி?” என்று வெளியே இருந்து குரல் கேட்க இவர்கள் மூவரும் பார்க்க பவித்ரா ஜெனி மற்றும் கீர்த்தனா மூவரும் வந்திருந்தனர்.

“வாங்க மா..‌” என்று பார்வதி வரவேற்க்க

“வாங்கடி சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்திருக்கீங்க…” என்று அபிலாஷா சொல்ல

மூவரும் உள்ளே வந்து “பார்த்தீங்களா அம்மா… ஏன்டி வந்தீங்க னு கேட்காம கேட்குறா எங்க உயிர் தோழி…” ஜெனி கிண்டலாக சொல்ல

“ஏய் வந்ததும் ஆரம்பிச்சிட்டியா? சரி உட்காருங்க குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.” என்று அபிலாஷா சொல்ல

“நீ இரும்மா நான் கொண்டு வரேன்.” என்று பார்வதி அனைவரும் டீ போட்டு கொண்டு வந்தார்.

திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேலியும் கிண்டலுமாக தோழிகள் சம்பாஷனை அரங்கேற

“அக்கா.. உள்ளே நுழையும் போது நீ யாருன்னு இங்கே யாருக்குமே தெரியாதா னு கேட்டீங்களே… எதுக்கு அக்கா அப்படி சொன்னீங்க?” அக்சயா கேட்க

“அது ஒன்னும் இல்ல அச்சு… இவ்வளவு நேரம் நீ சொல்லிட்டு இருந்தியே யமுனா இன்டஸ்ட்ரீஸ்… அதோட சேர்மன் அபிதான்.. அது உங்க யாருக்கும் தெரியாதா?” என்று பவி கேட்க அச்சுவும் பார்வதியும் அதிர்ந்து பார்த்தனர்.

அபிலாஷா பெரிய இடத்து பெண் என்பது தெரியும். ஆனால் தன் மகனே தனக்கு முன் மாதிரியாக நினைத்திருந்த பெண்தான் இவள் என்பது ஆச்சரியம் என்பதை விட சற்று அதிர்ச்சி தான் இருவருக்கும்…

“அண்ணி…” அச்சு கேள்வியாக நோக்க

“பவி அதெல்லாம் நேத்து வரைக்கும் தான்.. இப்போ நான் அபிநந்தனோட மனைவி. இந்த வீட்டு மருமகள்.. இதுமட்டும் தான் என்னோட அடையாளம்…” என்று கர்வமாக சொன்ன அபியை பெருமையாக பார்த்தார் பார்வதி.

தொடரும்…




Leave a comment


Comments


Related Post