இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 02 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 13-03-2024

Total Views: 22818

காதலொன்று கண்டேன்!

தேடல்  02


"எதுக்கு ரெண்டு பேரும் கல்யாணம் வேணாம்னு சொன்னீங்க..?"

"..............."

"என்னோட மொகத்துல என்ன படமா ஓடிகிட்டு இருக்கு..அதயே பாத்துகிட்டு இருக்கீங்க..நா கேக்கற கோள்விக்கு பதில் சொல்லுங்க.வாய்ல துணி வச்சிருக்குறவங்க மாதிரி அமைதியா இருக்காம.."

"எனக்கு இந்த காதல் கல்யாணம் மேல எல்லாம் நம்பிக்க இல்ல.." என்பதாய் இருவரின் குரலும் ஒருமிக்க ஒலித்திட வினாத்தொடுத்தவனின் இதழ்களில் ரகசிய முறுவலொன்று.

"என்னங்கடா ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே பதில சொல்றீங்க..சரி நா பர்ஸ்ட் ஆர்த்தி கிட்ட கேக்கறேன்..ஆர்த்தி உன்னோட பர்சனல் ரீசன் என்னது..? எதுக்கு வீட்ல கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிகிட்டு இருக்க..?"

"அது ஒன்னுல்ல அத்தான்..எனக்கு அப்போல இருந்தே பசங்க மேல நம்பிக்க கம்மி..அதுல இப்ப இருக்குற பசங்கள கொஞ்சமும் நம்ப முடியல..இந்த காலத்துல காதல் கல்யாணம் ரெண்டுமே பொய்யா தான் இருக்கு..அத்தான் எந்த பையன் தான் உண்மயா ஒரு பொண்ண லவ் பண்றான்..? பிபோர் மேரேஜ் கூட ஓகே..ஆனா இப்போ கல்யாணத்துக்கு அப்றமும் இன்னொரு பொண்ணோட சுத்துற ஆளுங்க தான் ஜாஸ்தி..இதுல எந்த நம்பிக்கைல கழுத்த நீட்றது..?" அவள் சொல்லி முடிக்கும் வரை
அமைதியாய் கேட்டுக் கொண்டு இருந்த வினய்யின் முகத்தில் கோபத்தின் சாயல் இருக்கத் தான் செய்தது.

"ஓகே..ஓகே..ஆர்த்தி காம் டவுன்..முடிவா நீ சொல்றது எந்த ஒரு பையனும் உண்மயா லவ் பண்ண மாட்டான்..?
ஐ மீன் யார் லவ்வும் ட்ரூவா இல்ல.."

"யெஸ் அப்கோர்ஸ்..அதுதான உண்ம.." ஆர்த்தியின் விழிகளில் கொஞ்சம் அலட்சியமும் படர்ந்திருந்தது.

"ஓகே..இப்ப வினய் உன்னோட டர்ன்..நீ எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற..?"

"அது இவங்க சொன்ன அதே ரீசன் தான் கிருஷ்ணான்னா..ஐ டோன்ட் பிலீவ் இன் லவ்..அதுவும் பொண்ணுங்க லவ் மேல நம்பிக்கயே இல்ல கொஞ்சங்கூட..எல்லாருமே ஏமாத்த தான் செய்றாங்க..அவங்களுக்கு தேவ பணமும் பந்தாவும் மட்டுந்தான்..
மத்த படி ஒன்னும் பாக்க மாட்டாங்க..நல்ல பசங்கள கண்டுக்குறதும் இல்ல..அப்டி கண்டுகிட்டு லவ் பண்ணாலும் அந்த லவ் பாதில ப்ரேக் அப்ல தான் நிக்கும்..அவ்ளோ தான்..அதனால தான் சொல்றேன்..ஈவின் எல்லாரும் பணத்துக்காக தான் பசங்கள அலய விட்றாங்க.."என்றவனின் குரலில் அப்படியொரு கோபம் கொந்தளிக்க அதை புரிந்த ஆர்த்தியின் இதழ்கள் எள்ளலாய் வளைந்தன.

"ஓகே..ஓகே..ரெண்டு பேரோட மெய்ன் ப்ராப்ளம் என்னன்னு எனக்கு இப்ப தான் புரிது..ஆர்த்தி உனக்கு பசங்க லவ் மேல நம்பிக்க இல்ல.."

"ம்ம்ம்ம்.."

"வினய்..உனக்கு பொண்ணுங்க லவ் மேல நம்பிக்க இல்ல.."

"ஆமா.."

"இங்க பாருங்கடா..உங்கள விட கொஞ்சம் மூத்தவன்..மூத்தவனுங்குற தாட்ல சொல்றேன்..
பர்ஸ்ட் ஒப் ஆல் எல்லாமே நாம பாக்குற கண்ணோட்டத்துல தான் இருக்கு..நூறு பேர் இருக்குற எடத்துல ஒருத்தன் தப்பு செஞ்சா சுத்தி இருக்குற தொண்ணுத்தொம்பது  பேரும் தப்பு செய்றதா அர்த்தமா..?"

"இல்ல.."

"இதுல மட்டும் ரெண்டு பேரும் கோரஸ் போடுங்க..ஒருத்தர் தப்பு அப்டி அர்த்தம் ஆகாதுன்னா..அதே மாதிரி நூறு பேர் இருக்குற எடத்துல தொண்ணுத்தொம்பது பேர் தப்பு செஞ்சானுங்கன்னுங்குற காரணத்துக்காக மிச்சம் இருக்குற ஒருத்தனும் தப்பானவனா இருக்க முடியாதுல.."

"அது மாதிரி நாம வாழ்ற இந்த சொஸைட்டியும்..உண்ம தான் லவ்ங்குறதுக்குரிய அர்த்தம் இப்போ ரொம்ப மாறி இருக்குன்னு பார்த்தாலே தெரியுது..அது சரியா பிழயா ரைட்டா தப்பான்னு நா பேச வர்ல..அது அவங்கவங்க தாட்..அதுல யாரோட தாட்டயும் நம்மலாள திணிக்க முடியாது..ஆனா என்ன தான் இந்த சொஸைட்டி மாறுனாலும் இந்த சொஸைட்டிலயும் மாறாத உண்மயான லவ்வும் இருக்கத் தான் செய்யுது.."

"ம்க்கும்..நீங்க எழுத்தாளர்னு இப்டிலாம் பேசறீங்க அத்தான்.."

"அண்ணா..இது உங்களுக்கே ஓவரா தெரில..கத எழுதுறங்குறதுக்காக நீ சொல்ற எல்லாத்தயும் நம்பனுமா நாம.."

"டேய் டேய் அமைதியா இருங்கடா..நா சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க..சரி ஆர்த்தி உன் கிட்ட கேக்கறேன்..இந்த காலத்துல பொண்ணுங்க கூட பேச தயங்குற பசங்க இருக்காங்களா..?"

"இருக்காங்களாவா..? பொண்ணுங்கன்னாலே வளவளன்னு பேசுவானுங்க..சான்ஸ் மிஸ் பண்ண கூடாதுன்னு.."

"ம்ம்..வெய்ட்..வினய் நீ பொண்ணுங்க கூட பேசுவியா..?"

"பேசுவியாவா..?மிக்ஸ்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன்..ஆனா எந்த பொண்ணுங்க கூடவும் பேசுனது இல்ல..இப்ப கம்பனில கூட யார் கூடவும் பேச மாட்டேன்..தேவன்னா கூட நம்ம கதிர் கிட்ட தான் சொல்லி பேச சொல்லுவேன்..கட்டாயத்தேவன்னா மட்டுந்தான்.."

"ம்ம்..ரைட் ஆமா உனக்கு தெரிஞ்ச வர தன்னோட தேவக்காக பசங்க கிட்ட கட் அன்ட் ரைட்ட பேசற பொண்ணுங்கள கண்டிருக்கியா..?"

"ம்ஹும்..அப்டி பொண்ணுங்க இருக்காங்களா என்ன..?தேவன்னா போய் வழிறது தான அவங்க ஹேபிட்.."

"ம்ம்..ஆர்த்தி நீ சொல்லு நீ எப்டி பசங்க கிட்ட பேசுவ..?"

"இவரு சொல்ற மாதிரி ஆளு நா கெடயாது..ஆம்பளன்னாலே நா வெட்டு ஒன்னு துண்டு ரெண்ணு தான் பேசுவேன்..இவர் சொல்ற மாதிரி இல்ல.."

"சரி...சரி நீங்க ரெண்டு பேரும் வச்சிருக்கிற தாட்ஸ்கான ப்ரேக்கிங் பாய்ண்ட்ஸ் உங்க கண்ணு முன்னாடியே இருக்குல..அதே மாதிரி தான் லவ் பத்தின உங்க தாட்ஸ்கும் ப்ரேக்கிங் பாய்ண்ட் இருக்கு புரியுதா..?" எனக் கூறிய படி ஓரமாய் போடப்பட்டிருந்த புத்தக அடுக்கில் இருத்து இரண்டு புத்தகங்களை கையில் எடுத்தான்,கிருஷ்ணா.

அவற்றின் முகப்பு படத்தை பார்க்கையிலேயே அவனின் இதழ்களில் மென்மையான புன்னகை துளிர்த்தது.

"ஆர்த்தி இந்தா..வினய் இது உனக்கு.."

"அத்தான்..என்ன இது..அவளுக்கென ன்னு டைடில் இருக்கு..எனக்கு லவ் ஸ்டோரி புடிக்காது..அதுவும் இது ஒரு பையனோட லவ் ஸ்டோரி..நா படிக்கவும் மாட்டேன்.."

"ஆர்த்தி..உன்னோட தாட்ட மாத்த தான் இந்த புக்..கண்டிப்பா உனக்குள்ள இருக்குற எண்ணங்கள் இத படிச்சப்றம் மாறும்..மாறலன்னா அவனோட லவ்கு அர்த்தமே இல்ல..ஐ ப்ராமிஸ் யூ..படிச்சு பாரு..யூ வில் பீல் சம்திங் டிபரன்ட்..பயப்டாத..ரொமான்டிக் ஸ்டோரி கெடயாது..என் ப்ரெண்டோட லவ் ஸ்டோரி தான்.."

"கிருஷ்ணான்னா..அவங்களுக்கு ஒரு புக்..இது என்ன எனக்கு..அவனுக்காக ன்னு ஒரு புக்..அப்போ இது ஒரு பொண்ணோட லவ் ஸ்டோரியா..?"

"இல்ல டா அது..அது டபுள் சைட் லவ்..பொண்ணோட பையனோட லவ் ரெண்டும் இருக்கும்..
ஆனா அதுல பொண்ணு லவ் தான் கொஞ்சம் அழகா இருக்கும்..அதான் அந்த நேம்..இதுவும் எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேரோட கத தான்.."

"இத வாசிச்சு நா திருந்திருவேனா..?"

"ஆமாண்ணா..இத படிச்சு இந்த வினய் மாறுவானா..?"

"ஆமா..கண்டிப்பா..இப்போ டைம் மார்னிங் டென்..இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள நீங்க வந்து அவங்கள பாக்கனும்னு சொல்லுவீங்க..ஆர்த்தி நீ அந்த பையன பாக்கனும்னு ஒத்த கால்ல நிப்ப..வினய் நீ அந்த ஜோடிய பாக்கனும்னு வருவ..நடக்கலனா பாரு.."

"சரிண்ணா பாக்கலாம்.."

"ஆமா அத்தான் அதயும் பாக்கலாம்.."

              ●●●●●●●●

முகப்புப் படத்தை பார்த்தவாறு அந்த புத்தகத்தை புரட்டிய வினய்யிற்கு படிக்கும் எண்ணம் துளியும் இல்லை,
என்பது மறுக்க இயலாத உண்மை தான்.

கட்டிலில் புரண்டவாறு தற்செயலாய் அதில் இருந்த சில வரிகள் அவனின் கவனத்தை ஈர்க்க சிறு புருவ நெறிப்புடன் தான் படிக்காலானான்,அதையும்.

"ஆழியென தன்னை சுருட்டிக்கொள்ளும் அவள் விழிகளில் அவன் ஆண்மை கரைந்தோடும் மாயம் காதலின்றி வேறேது..?"

படித்ததும் ஆழம் தாக்கின,அந்த வரிகள்.
வரிகளை ரசித்துப் படிப்பவன் என்றிருக்க இந்த வரிகள் அவனை பெருமளவு ஈர்த்திருந்தது.

புன்னகையுடனேயே படிக்கத் துவங்கினான்,அவன்.

அதே நேரம்,
அங்குமிங்கும் திருப்பி பார்த்தவாறு யோசனை செய்த ஆர்த்திக்கு ஒருமுறை படித்துப் பார்த்தால் என்னவாகிடும் என்கின்ற எண்ணம் தான்.

"இந்த பெட்ல ஜெயிக்கிறதுக்காவது நீ முழுசா படிக்கனும் ஆர்த்தி.." தனக்குள் முணுமுணுத்தபடி அவள் புரட்ட அவளின் கவனமும் அந்த கதையில் முழுதாய் பதிந்தது.
 
இருவரின் அறையையும் சத்தம் செய்யாது எட்டிப் பார்த்த கிருஷ்ணாவின் இதழ்களில் புன்னகை குடி கொண்டிட படியில் இறங்கி வரும் போது சத்தமிட்டது,அவனின் அலைபேசி.

திரையில் மின்னிய எண்ணைக் கண்டதும் ஒரு நொடி யோசித்த படி அழைப்ப ஏற்றவனுக்கு அந்த நொடி தான் மறந்து விட்ட விடயம் நினைவில் வந்தது.

"ஹலோ..சொல்லு மாணிக்கம்.."

"சார் இன்னிக்கு சாயந்தரம் ஐயாவோட நினைவா அனாத ஆசிரமத்துக்கு போய் சாமான் கொடுக்கனும்..ஞாபகம் இருக்கா..?"

"ஆமா மாணிக்கம் நா எதயும் மறக்கல..நீங்க மூணு மணி மாதிரி அங்க போயிருங்க..நா ஒரு நாலு நாலர மணிக்கு வந்துர்ரேன்..இன்னிக்கு கொஞ்சம் வர்க் இருக்கு.."

"சரி சார்.." என்று அவன் அழைப்பை துண்டிக்க கிருஷ்ணாவிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று.

             ●●●●●●●●●

*அவளுக்கென..*

கலைந்திருந்த சிகையை வாரிய படி தன் உருவத்தை கண்ணாடியில் ஆராய்ந்து திருப்தி பட்டுக் கொண்டது,அவன் மனது.

கறுப்பு நிற ஷேர்ட்டும் கறுப்பு நிற டெனிமும் அணிந்திருந்தவனின் தேகத்தில் அதே கரிய நிறத்தில் ப்ளேசரும் சேர்ந்திருக்க ஏதோ ஒரு தனித்துவமான அழகு அவனிடத்தில்.

ஆளுமையாய் கம்பீரமாய் இருந்த அவனின் தோற்றத்தை ஒருபோதும் அவன் மெச்சிக் கொண்டதில்லை என்பதே உண்மை.

அவனைப் பொருத்த வரை அழகு என்பது குணத்திலும் நடத்தையிலும் தான்.
வாழ்வில் அடிபட்டு அவன் கற்றுக்கொண்ட பாடம் அது.

கைக்கடிகாரத்தை சரி பார்த்த படி வீட்டுக் கதவை அடைத்துக் கொண்டு அவன் வர அவனுக்காக வீட்டு வாசலில் காத்திருந்தான்,அவனின் பிரத்தியேக காரியதரிசி தரணிவேந்தன்.

இறுக மூடியிருந்த இதழ்கள் அவனின் வதனத்துக்கு பெரும் அழுத்தத்தை தர அது கூட அழகாய்த் தான் இருந்தது,காளையவனுக்கு.

காரில் ஏறி அமர்ந்து அவனே காரைக் கிளப்ப அவனின் வேகத்தில் மிரண்டாலும் வாய் திறந்து பேசிடும் தைரியம் அவனுக்கு ஒரு போதும் வந்தது இல்லை,அவனின் பாவப்பட்ட பி ஏ விற்கு.

தரணி வாயைத் திறந்தாலும் காளையின் கண்ணசைவு அடுத்த நொடி அவனின் இதழ்களை பூட்டிக் கொள்ளச் செய்து விடும்.ஏனென்று தெரியாமல் அவன் மீது மரியாதை கலந்த பயம்.

அவனின் அழுத்தமா..?
இல்லை,அவனின் நிமிர்வா..? தைரியமா..?
ஆளுமையா..? ஏதோ ஒன்று காளையிடம் அவனுக்கு சிறு பயத்தை தந்து விட்டிருந்தது,என்னவோ உண்மை தான்.

அடுத்த பத்து நிமிடங்களில் வண்டி அவர்களின் அலுவலகத்தை அடைய இறங்கி நடந்தவனின் நடை சற்றே வேகம் தான்.அவனின் நடைக்கு ஈடுகொடுத்த தரணிக்குத் தான் மூச்சு வாங்கியது.

முன்பெல்லாம் கஷ்டப்பட்டாலும் நாட்களின் சுழற்சியில் காளையின் நடைக்கு ஈடுகொடுக்கும் வேகத்திற்கு அவன் பழகியிருந்தாலும் ஒரு சில சமயங்களில் அவன் களைப்படைந்து தான் போகிறான்.

காலடிச்சத்தத்தை வைத்தே வருவது யார் எனப் புரிய அந்த இடம் முழுவதும் சட்டென அமைதியாகிட அதன் காரண கர்த்தாவோ அந்த அமைதிக்கும் தனக்கும் துளியும் சம்பந்தமில்லாதவன் போல் தன் கேபினுக்குள் நுழையவே மூச்சு வந்தது,ஊழியர்களுக்கு.

போகும் அவனை விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்,தீப்தி.
இன்று தான் பிரதான கிளைக்கு மாற்றலாகி வந்திருக்க வாட்டசாட்டமாய் கம்பீரமாய் காளையவனைக் கண்டவுடன் ஒரு வித பரவச ஊற்று.

காளையின் கம்பீரமும் அவனின் கண்டு கொள்ளாத பாவனையும் அவன் மீது சிறு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டிருக்க அவன் உருவம் மறையும் வரை அவள் இமைக்கவில்லை.

"ப்ரியா..என்னடி இது..எம் டி இப்டி ஸ்மார்ட்டா இருக்காரு..நீ சொல்லவே இல்ல..சைட் அடிச்சிட்டே இருக்கலாம் போல இருக்கே.."

"ஆமா..பாக்க நல்லா தான் இருப்பாரு..சைட் கூட அடிக்கலாம் தப்புல்ல..ஆனா அவருக்கு தெரிஞ்சதுன்னு வையி..உன்ன கொன்னுருவாரு..ரொம்ப டெரர் பீஸு ஜாக்கரத.."

"என்னடி இப்டி இன்ட்ரோ கொடுக்கற.."

"இப்டியாவது கொடுக்கறேன்னு சந்தோஷப்படு.சிசிடீவி ல பாத்துகிட்டு தான் இருப்பாரு..பேசாம வேலய பாரு..இல்லன்னா ஓவர் டைம் போட்டு சாவடிப்பாரு.."

"ம்ம்ம்ம்" என்றவாறு தனது கணினியை உயிர்ப்பித்தாலும் அவளின் மனதில் காளையின் விம்பம் தான் ஓடிக் கொண்டிருந்தது.

"என்னா அழகு..என்னா ஸ்மார்ட்..வாவ்..இப்டி இருக்காரு..செம்ம ஸ்மார்ட்.." தனக்குள் சிலாகித்தவாறு இருந்தாலும் விரல்கள் தன் வேலையை செய்து கொண்டு தான் இருந்தன.

அடிக்கடி அவளின் பார்வை அவனை எதிர்பார்த்து அந்த இடத்தை அலசுவது புரிய ப்ரியாவிற்கு திக்கென்றது.

"தீப்..என்னடி கண்ணு எல்லாம் அங்க இங்க போகுது..? சார் வர்ராரான்னு பாக்கறியா..?"

"ம்ம்..ஆமாடி..ரொம்ப அழகா இருந்தாரு..பாக்கனும் போல இருக்கு..என்னா கண்ணு டி அது..இவ்ளோ அம்சமா இருக்காரு..அதுலயும் அவரோட ஸ்டைல் செம்மல.."

"மெதுவாடி..மெதுவா..எங்க எம் டீ நீ நெனக்கிற மாதிரி ஆளு கெடயாது..எந்த பொண்ணயும் நெருங்க கூட விட்டதில்ல..ஏன் எந்த பொண்ணு கிட்டயும் சிரிச்சு பேசனது கூட இல்ல.."

"ஏன் அவரு என்ன ரோபோவா..? வேணுன்னா நா அவர் கூட ப்ரெண்ட் ஆகி காட்டவா..?" என்று கேட்க  அதைக் கேட்ட ப்ரியாவிற்கு தான் உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

தேடல் நீளும்.

2024.03.13

என்னப்பா எல்லாரும் சைலன்ட் ரீடர்ஸா இருக்கீங்க..!😔


Leave a comment


Comments


Related Post