இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 16-03-2024

Total Views: 23187

காலையில் ஷாப்பிங் சென்ற போது அபிநந்தன் வாங்கி தந்த செல்ஃபோனோடு அபிலாஷா ஏற்கனவே பயன்படுத்தி கொண்டு இருந்த அதே எண்ணையும் சேர்த்து வாங்கி கொடுத்திருக்க சார்ஜ் ஏறிய ஃபோனில் தனக்கு நினைவில் இருக்கும் நண்பிகள் எண்ணை பதிந்து கொண்டு இருந்தாள் அபிலாஷா.

“லாஷா இன்னும் நீ சாப்பிடலையா?” என்றிட

“இல்ல நந்தன் ஈவ்னிங் ஃப்ரண்ட்ஸ் வந்ததால அம்மா ஸ்நாக்ஸ் பண்ணாங்க… அதை சாப்பிட்டதே வயிறு இன்னும் ஃபுல்லா இருக்கிற ஃபீல்.. எனக்கு எதுவும் வேணாம் நந்தன்…”

“இப்போ சாப்பிடாட்டியும் லேட் நைட் பசிக்குமே லாஷா… கொஞ்சமா எதாவது சாப்பிடு..” என்று நந்தன் வலியுறுத்த லேசாக சிரித்தாள் அபிலாஷா.

“மோஸ்ட்லி நான் நைட் சாப்பிடுறதே இல்ல நந்தன்… ஒருவேளை பசிச்சா பால் ஜூஸ் ஃப்ரூட்ஸ் இப்படியே பழகிடுச்சு…” அவள் சாதாரணமாக சொல்ல அவள் அருகில் அமர்ந்தான் அபிநந்தன்.

“லாஷா… அது ரொம்ப தப்பான பழக்கம்.. ஒரு பெரிய கம்பெனியை பொறுப்பா நடத்துற உனக்கு ஏன் டையட்ல இப்படி ஒரு பழக்கம்?” என்று நந்தன் வினவ விரக்தியாக இதழ் வளைத்தாள் லாஷா.

“உங்களுக்கு தெரியுமா நந்தன்.. சின்ன வயசுல சாப்பிட ரொம்ப அடம் பிடிப்பேன். அம்மா அவ்வளவு ஃபோர்ஸ் பண்ணி எனக்கு ஊட்டுவாங்க… எனக்கு பிடிச்ச ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து சமைப்பாங்க… அம்மா போன அப்பறம் என்னதான் வீட்ல சித்தி அத்தைனு இருந்தாலும் மேக்சிமம் எனக்கு சர்வ் பண்ணது வீட்ல வேலை செய்றவங்க தான்… 

ஒருவேளை என்னால அவங்களுக்கு ஏதாவது நடக்கனும்ன்னா அத்தையோ சித்தியோ பரிமாற வருவாங்க..‌ டீன் ஏஜ் வயசுல அவங்க குணம் புரியாம என்மேல அன்பை காட்டுறாங்க னு நினைச்சேன். பட் அவங்க குணம் புரிஞ்சப்பறம் நானே அவங்க சர்வ் பண்றதை தவிர்க்க வெளியே அதிகமா சாப்பிட பழகிட்டேன். 

அதிலும் நைட் டைம்ல சாப்பாடு சாப்பிடாம ரூம் ஃப்ரிட்ஜ்ல இருக்கிற மில்க் ஷேக் ஃப்ரூட்ஸ் ஸ்நாக்ஸ் இப்படியே பழகிடுச்சு…” என்று சொல்ல

“ரொம்ப தப்பு லாஷா… அம்மா சொல்லுவாங்க நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறதே இந்த சாப்பாட்டுக்காக தானே… இல்லாத நேரத்துல பட்னி கிடக்குறது வேற… ஆனா இருக்கும் போது சாப்பாட்டை வேஸ்ட் பண்ணி நம்ம உடம்பையும் கெடுத்துகிறது இந்த உணவை நமக்கு தந்த கடவுளுக்கு நாம செய்ற துரோகமும் கூட…” என்று நந்தன் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்க கதவு தட்டும் ஓசை கேட்டது.

“அபி…” என்று பார்வதி அழைக்க

“வாங்க அம்மா… கதவு திறந்து தான் இருக்கு…” என்று அவள் கட்டிலில் இருந்து எழ சாப்பாடு தட்டோடு வந்தார் பார்வதி.

அபிநந்தன் புரிந்து கொள்ள “ஏன்மா நீ ஏன் சாப்பிட வரலை?” அக்கறையை கொஞ்சம் அதட்டலாக வெளியிட

“அம்மா பசி இல்ல ம்மா…” என்று சொல்ல “அதுக்காக ராத்திரி வெறும் வயித்துல தூங்க போவீயா? கொஞ்சமாவது சாப்பிடனும் அபி.. இந்தா நீ உட்காரு… நானே ஊட்டிவிடுறேன்.” என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அமர வைத்து ஊட்டிட பல ஆண்டுகள் கழித்து அம்மாவின் கையில் உண்பது போன்ற உணர்வு கண் கலங்க வைத்தது அபிக்கு…

இரண்டு இட்லி என்று தொடங்கிய பார்வதி கொண்டு வந்த நான்கு இட்லிகளையும் முழுதாக ஊட்டி இருக்க சமத்து குழந்தையாக சாப்பிட்டு முடித்தாள் அபி. 

“ம்ம்… அவ்வளவு தான்.. இதுக்கு போய் குழந்தை மாதிரி பசிக்கலை னு அடம் நந்தா அந்த தண்ணீ எடுத்து கொடு… சரிப்பா நீங்க தூங்குங்க” என்று சொல்லி வெளியேறினார் பார்வதி.

அவர் சென்ற பின்பும் சிரித்த முகத்துடன் நந்தன் அவளை குறுகுறுவென பார்க்க “என்ன நந்தன்?” என்றாள் புரியாமல்…

“இல்ல பசிக்கலை னு சொன்ன நாலு இட்லி சாப்பிட்ட… இன்னும் ரெண்டு அம்மா சேர்த்து கொண்டு வந்திருந்தாலும் சாப்பிட்டு இருப்ப தானே..” கிண்டலாக சொல்ல

“ச்ச் கண்ணு வைக்காதீங்க நந்தன்…” என்று சிணுங்கியவள் “சின்ன வயசுல அம்மா ஊட்டின ஃபீல்… அம்மாவோட அன்புல மெஸ்மரைஸ் ஆகிட்டேன்.” என்று சிலாகித்து சொல்ல

“சரி நான் தூங்கனும் நாளைக்கு ஆஃபிஸ் போகனும்.” என்று நந்தன் படுக்க பாயை விரிக்க

“நந்தன் ஒரு நிமிஷம் ப்ளீஸ் பெட்ல படுங்களேன்… எனக்கு நேத்தே ஒரு மாதிரி இருந்தது நீங்க கீழே படுக்கிறது..” என்றிட

“இல்ல வேண்டாம் லாஷா.. எனக்கு இது கம்ஃபர்டபுள் தான்…” மீண்டும் அதையே நந்தன் சொல்ல

“சரி அப்போ நானும் கீழே படுக்கிறேன்…” என்று எழுந்து நிற்க

“ஹேய் லாஷா… வேண்டாம்… சரி நான் மேலே தூங்கறேன். நீ இப்போ தானே சாப்பிட்ட உடனே தூங்க கூடாது.” என்று அபிநந்தன் சொல்லிக் கொண்டு இருக்க

“நான் உடனே தூங்கல நந்தன் ஃப்ரண்ட்ஸ் நம்பர்ஸ் எல்லாம் சேவ் பண்ணிட்டு இருந்தேன். அவங்களுக்கு எனக்கு நம்பர் வந்திடுச்சுனு மெசேஜ் போட்டு அப்பறம் தூங்கறேன்.” என்று சொல்ல நந்தன் கட்டிலில் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டான்.

அபிலாஷா மெசேஜை பார்த்து விட்டு ஆன்லைன் வந்த நண்பிகள் அவர்களுக்கு என்று இருக்கும் புலன குழுவில் அரட்டையை தொடங்க அரைமணி நேரத்தை தாண்டி அரட்டை செல்ல எதர்ச்சையாக கண் விழித்த அபிநந்தன்

“லாஷா… லாஷா டெக்ஸ்ட் பண்ணது போதும் தூங்கு…” என்றிட அடுத்த நொடி தோழிகளிடம் விடை பெற்று ஃபோனை ஓரமாக வைத்து விட்டு படுக்கையில் சரிந்தாள் அபிலாஷா.

எதுவும் பேசாமல் ஒருவித மோன நிலையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே எப்போது உறங்கினோம் என்று அறியாமல் உறங்கினர் இருவரும்…



காலை பார்வதி எழுந்து குளிப்பதற்காக பின்பக்கம் செல்ல சரியாக குளித்து விட்டு வந்தாள் அபிலாஷா…

“குட்மார்னிங் அம்மா…” அன்றலர்ந்த மலராக புன்னகையோடு அவள் சொல்ல

“அபி… இவ்வளவு சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டியா? சரி போய் தலையை நல்லா காய வை… நான் குளிச்சிட்டு வரேன்.” என்று சொல்லி சென்றார் பார்வதி.

அபிலாஷா ஹாலுக்கு வர ஃபேனின் வேகம் குறைக்கப் பட்டிருந்ததால் காற்று வராமல் இங்கும் அங்கும் உருண்டு கொண்டு இருந்தாள் அக்சயா. 

முதலில் காரணம் புரியாமல் விழித்த அபி பின்னர் புரிந்து காற்றாடி வேகத்தை அதிகரிக்க மீண்டும் நல்ல உறக்கத்திற்கு சென்றாள் அக்சயா.

குளித்து விட்டு வந்த பார்வதி “ம்ம்… நந்தாவும் தினமும் இதே வேலை தான் பண்ணுவான். இன்னைக்கு அவனுக்கு பதிலா நீ செய்றியா… அச்சு இன்னும் நீ எழலையா… அப்பறம் நேரமாயிடுச்சு என்னால தான்னு கத்துவ… எழுந்திரி” என்று சத்தமாக சொல்ல 

“ம்கூம் அம்மா இன்னும் கொஞ்ச நேரம்…” என்று சிணுங்கினாள்.

“அம்மா… என்ன வேலை செய்யனும்? சொல்லுங்க நான் பண்றேன்.” என்று அபிலாஷா வந்து நிற்க

“வேண்டாம் அபி… உனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லைல… நானே பண்றேன்..” என்று மறுக்க

“பரவாயில்ல நான் பழகிக்கிறேன் சொல்லுங்க அம்மா…” என்று வலிய கேட்டு ஒவ்வொன்றாக பார்வதி சொல்ல சொல்ல செய்தாள் அபி.

“பரவால்ல அபி… ஒருதடவை சொன்னாலே நல்லா கத்துக்கிறேயே… அச்சு கூட இவ்வளவு சீக்கிரம் கத்துக்கல” என்று பார்வதி சொல்ல

“அம்மா உன் மருமகளை பாராட்ட என்னை டேமேஜ் பண்றியா… இரு உன்னை பார்த்துக்கிறேன்.” என்று மூக்கை சுருக்கி செல்ல கோபம் கொண்டாள் அக்சயா.

“முதல்ல போய் குளிச்சிட்டு வா… காலேஜ் போகனும் ல…” என்று அதட்ட ‘ம்கூம்’ என்று உதட்டை வளைத்து விட்டு சென்றாள் அக்சயா.

“அவ அப்படி தான் மா நீ இந்தா இதை மிக்சில போட்டு நல்லா அரைச்சிடு. நந்தாக்கு தக்காளி சட்னினா ரொம்ப பிடிக்கும் கூட கொஞ்சம் புதினா போட்டா ஒரு இட்லியோ தோசையோ அதிகமா சாப்பிடுவான்…” என்று யாருக்கு என்ன பிடிக்கும் என்ற பக்குவத்தையும் சொல்லிக் கொண்டே சமையலை கற்று தந்தார் பார்வதி.

நந்தன் தயாராகி சாப்பிட அமர அக்சயாவும் கல்லூரிக்கு தயாராகி வர “அண்ணா என்ன ஒன்னுமே சொல்லாம சாப்பிடுற? இன்னைக்கு எல்லாம் எப்படி இருக்கு?” அக்சயா கேட்க

“அம்மா சமையல் என்னைக்கும் நல்லா தானே இருக்கும் அச்சு…” நந்தன் சாதாரணமாக சொல்ல

“ஐயோ அண்ணா இன்னைக்கு அம்மா சொல்ல சொல்ல அண்ணிதான் சமைச்சாங்க…” என்றிட “அப்படியா?” என்று விழி விரிக்க

“ஆமாண்டா நந்தா… நான் சொன்னதை கேட்டு அப்படியே பண்ணினா… நல்லா இருக்குல நந்தா” என்று பார்வதி கேட்க தன்னவளை மெச்சும் பார்வை பார்த்தான் நந்தன்.

அவனின் பார்வையில் வெட்கி சிவந்தாள் அபிலாஷா. “நல்லா இருக்கு அம்மா..” என்றவன் சாப்பிட்டு எழும் போது “லாஷா.. நாளைக்கு மோகன் சார் ட்ரிப் முடிச்சிட்டு வர்றாரு… நாளை மறுநாள் நாம நேர்ல போய் பார்த்து பேசலாம்…” என்று சொல்ல

“ம்ம் சரி நந்தன் நாம போகலாம்.” என்றிட

“ஆமா அண்ணி நீங்க தானே உங்க கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்கீங்க… இப்போ நீங்க இல்லாம வேற யாரு அதெல்லாம் பார்த்துப்பா?” என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை அக்சயா கேட்க சற்றே முகம் மாறியது அபிக்கு.

“அச்சு… இப்போ எதுக்கு அதெல்லாம்… அதான் அது எதுவும் வேண்டாம் னு அபி வந்துட்டா ல்ல இனி அதை யாரு வேணும்னாலும் பார்த்திட்டு போறாங்க விடு.” என்று பார்வதி சொல்ல

“இல்ல அம்மா.. அப்படி விட முடியாது. அதாவது நாம இப்போ எப்படி மோகன் சார் கம்பெனி நம்பி இத்தனை காலம் இருந்தோமோ அதே போல அந்த கம்பெனி நம்பியும் நிறைய தொழிலாளிகளோட குடும்பம் இருக்கு. அதனால இத்தனை காலம் பொறுப்புல இருந்த அபிலாஷா தான் அவங்களுக்கான வழியை காட்டனும்.” என்று அபிநந்தன் விளக்க

“ஆமா அம்மா. நந்தன் சொல்றது உண்மைதான். நந்தன் நாளை மறுநாள் நாம மோகன் அங்கிளை பார்த்திட்டு அவரோட சேர்ந்து ஃபேமிலி லாயர் கோபாலன் சாரை பார்த்து பேசிடலாம்.” என்று அபிலாஷா சொல்ல சரி என்று சொல்லி கிளம்பினான் அபிநந்தன்.



தொடரும்…








Leave a comment


Comments


Related Post