இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-07 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 19-03-2024

Total Views: 43019

அத்தியாயம்-7


தன்மீது கை கால்களைப் போட்டு கட்டிப்பிடித்தபடி படுத்திருக்கும் பஞ்சுப் பொதியைப் பார்த்தவனுக்கு இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது. 

ஆம்!!
அவன் இறுக்கமானவன் தான் ஆனால் இறக்கமற்றவனல்ல, 
அழுத்தமானவன் தான்,
ஆத்திரக்காரனல்ல;
புன்னகைக்காதவன் தான்,
ஆனால் புன்னகைக்க மறந்தவனல்ல;
அவன் செய்யாத அனைத்தையும் செய்விக்க,
பூந்தேரவள் வந்துவிட,
மறந்தவை கூட பிறந்திடும்,
மறவாதது பிறக்க நேரமா வேண்டும்!?

கலைந்து கிடந்த அவள் முடிகற்றைகளை காதுமடலுக்கு பின்னே ஒதுக்கிவிட்டவன், “ஏ கலர்கோழிகுஞ்சு..” என்க, அவளிடம் அசைவே இல்லை. அத்தனை எளிதில் எழுந்துவிட்டால் அவள் அஞ்சனா அல்லவே!

“அஞ்சனா..” என்று ஐந்தாறு முறை அவன் எழுப்பியதன் பலனாய் அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு எழ, ‘ரொம்ப கஷ்டம்டா யஷ்வா’ என்று அவன் மனம் எண்ணிக் கொண்டது.

“குட் மார்னிங் யஷு மாமா” என்று அவள் கூற, 

“குட் மார்னிங்” என்றவன் “குளிச்சு சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. எனக்கு ஒரு வேலை இருக்கு. மதியம் மேல தான் வருவேன். ஈவ்னிங் ரெடியா இரு போவோம்” என்றான்.

“எங்க போறோம்?” என்று அவள் புரியாமல் வினவ,

 ‘சுத்தம்’ என்று எண்ணிக் கொண்டவன் “என் ஆஃபிஸ்கு. நம்ம ரிசப்ஷன்” என்று கூறினான். 

“ஓ.. ஓகே மாமா” என்றவள் எழுந்து கொள்ள “ஓய் கோழிக்குஞ்சு” என்று அழைத்தான்.

குளியலறை நோக்கிச் சென்றவள் அவன் அழைப்பில் திரும்பி, “கோழிக்குஞ்சா?” என்று வினவ,

 “ம்ம் ஆமா. இங்க வா” என்றான். புரியாத பார்வையுடன் பாவை அவனிடம் செல்ல, “நான் யாரு?” என்று கேட்டான்.

“யஷு மாமா” என்று அவள் கூற, 

இடவலமாய் தலையாட்டி “உனக்கு யாரு?” என்று வினவினான்.

 “எனக்கு.. ஹஸ்பென்ட்” என்று அவள் கூற,

 “அப்படினா?” என்று அவள் கண்களை ஏறிட்டுக் கேட்டான்.

“அப்படினா.. என்னை நீங்க மேரேஜ் பண்ணிட்டீங்கனு அர்த்தம். இதெல்லாம் எதுக்கு மாமா கேக்குறீங்க?” என்று அவள் கேட்க,

 ‘பால்வாடி பாப்பா கிட்ட உணர்வுபூர்வமா பதில் எதிர்ப்பார்த்தது என் தப்புதான்டி’ என்று எண்ணியவன் “ம்ம்.. புருஷன்னா முத்தம் குடுப்பியானு கேக்க வந்தேன்” என்று கடுப்போடு கூறிச் செல்ல முற்பட, 

“ம்ம் குடுப்பேனே” என்றாள்.

'ஏதே' என்று விழி பிதுங்கத் திரும்பியவன் “என்னது?” என்று தடுமாற்றமின்றியே வினவ,

 “ம்ம்.. குடுப்பேன் மாமா” என்றவள் அவனை நெருங்கினாள்.

 'இது பாப்பா இல்லையா?’ என்று அவன் எண்ணி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பட்டும்படாமல் ஒரு முத்தம் வைத்தவள் குளிக்க ஓடிவிட, அதை கிரகித்துக் கொள்ளவே அவனுக்கு நேரம் தேவைப்பட்டது.

'இதைதான் சொன்னாளாக்கும்' என்று நினைக்கையில் சிறுபிள்ளைக்குக் கொடுப்பதுபோல் அவள் கொடுத்துச் சென்றதில் சிரிப்பாக வந்தது. அதே உவகையுடன் சென்றவன் தயாராகிக் கீழே செல்ல அவளும் சில நிமிடங்களில் வந்தாள்.

காலை உணவு அஞ்சனாவின் பேச்சுக்களோடு கலகலப்பாய் கழிய, யஷ்வந்த் தன் வேலைக்குப் புறப்பட்டான். உண்டு முடித்து வீட்டில் வேலை பார்ப்போரிடம் அறிமுகம் பெற்றுக் கொண்ட அஞ்சனா மீண்டும் தங்கள் அறைக்கு வர, செய்வதற்கு வேலைகள் இல்லாது அப்படியே உறங்கிப் போனாள். 

இரண்டு மணியளவில் யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து கண் திறந்தவள் யஷவ்ந்தைக் கண்டு அடித்து பிடித்து எழுந்து அமர, 

“கூல்.. நான் தான். அம்மா ரொம்ப நேரமா உன்னை ஆளைக் காணும்னு சொல்லும்போதே தூங்கிருப்பனு நினைச்சேன்” என்றான்.

தன் கண்களைக் கசக்கிக் கொண்டவள் தூக்கம் கலையாமல் மீண்டும் அவன் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, சட்டென அவள் அப்படிப் படுத்ததில் அந்த ஆறடி ஆண்மகன் சற்றே உள்ளுக்குள் தடுமாறித்தான் போனான்.

“அஞ்சனா..” என்று அவன் அழைக்க, 

“ஃபைவ் மினிட்ஸ் அஜு” என்றாள். அவ்வளவே! அத்தனை நேரம் அவனுள் நடந்த இன்பத் தடுமாற்றம் பொத்தென்று கீழே விழ, அவளை நன்கு உலுக்கியவன் “அஞ்சனா” என்றான். 

அதில் தூக்கம் கலையப் பெற்றவள், “யஷு மாமா” என்க,

 “ம்ம் நான் தான்” என்று அழுத்திக் கூறியவன், “ஃப்ரஷ் ஆயிட்டுவா” என்று கூற, சிறுதலையசைப்புடன் சென்றாள். மீண்டும் மதிய உணவு முடிய, சில நிமிடங்களில் அக்ஷரா வந்து அவளை அலங்கரித்தாள்.

அழகிய மாம்பழ நிற லெஹங்காவை அணிந்துக் கொண்டு தோதான நகைகளுடன் தயாரான தனது ஓரகத்தியின் அழகில் ஒரு நொடி சொக்கி நின்ற அக்ஷரா, 

“அழகா இருக்க அஞ்சு” என்க, 
“நிஜமாவா க்கா?” என்று அஞ்சனா பூரித்து வினவினாள்.

“நிஜமாடா” என்று அக்ஷரா கூற,

 “ஏ அஞ்சு செம்மயா இருக்க” என்றபடி யாழினி வந்தாள். 

“தேங்ஸ் அண்ணி” என்ற அஞ்சனா “நீங்களும் வரீங்களா அண்ணி? ஆஃபிஸ்ல தானே ரிசப்ஷன்?” என்று கேட்க, தண்ணீரே இன்றி யாழினிக்குப் புரையேறியது.

அக்ஷரா இதழ் மடித்து தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த, “நா.. நான் நான்லாம் வரலை அஞ்சு. நீயும் அண்ணாவும் மட்டும் போங்க. அம்மா, அண்ணாலாம் வருவாங்க பின்னாடி” என்று யாழினி கூறினாள்.

சரியென்ற அஞ்சனா தங்கள் அறைக்குள் நுழைய, யஷ்வந்த் உடைமாற்றும் அறைக்குள் இருக்கும் அரவம் கேட்டது. அவ்வறைக் கதவைத் தட்டியவள் “யஷு மாமா” என்று அனுமதி வேண்டி அழைக்க, “வா கோழிகுஞ்சு” என்றான்.

“கோழிக்குஞ்சு.. உவாக்.. நல்லாவே இல்ல” என்று கூறிக் கொண்ட அஞ்சு உள்ளே நுழைய, கண்ணாடி முன்னே நின்றுக் கொண்டு தனது அடர் சிவப்புநிற கோர்ட்டை அணிந்து கொண்டிருந்தவன் கைகள் தன் இயக்கம் நிறுத்தி உறைந்து நின்றது.

ஆம்.. அவளின் வருகையில் தான். பாவையின் பூசிய உடலை வாகாய் தழுவி நின்ற அந்த தாவணியும், அவள் நிறத்துடன் போட்டியிட்டு மிளிரும் அந்த உடையின் மாம்பழ நிறமும், அஞ்சனம் தீட்டிய அவள் குண்டு விழிகளும் என கண்ணாடி வழியே அவளைக் கண்டவனுக்கு முதன்முறையாய் அவள் மீது அந்த பெயர் தெரியாத உணர்வு தோன்றியது.

இவளை விட பேரழகிகளைப் பார்த்திடாதவன் இல்லையவன். ஆனால் முதன் முறை ஒரு பெண்ணின் அழகில் வியக்கவும் ரசிக்கவும் தோன்றுகிறதே! இவளிடம் தனக்குள்ள உணர்வின் பெயர் தான் என்ன? என்று தடுமாறி நின்றான்.

அதற்குள் இரண்டாம் முறையாய் “யஷு மாமா” என்று அவள் அழைத்திட,

 “ம்ம்.. சொல்லு” என்று கூறினான். 

“நான் எப்படி இருக்கேன்?” என்று சிறுபிள்ளை போல் கேட்டவள் கண்டு மென்மையாய் புன்னகைத்தவர், 

“ஒரு முத்தம் குடு சொல்றேன்” என்க, சற்றும் யோசிக்காது அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், “ம்ம் சொல்லுங்க” என்றாள்.

லேசாய் சிரித்தவன் “அழகா இருக்க” என்று உள்ளார்ந்த குரலில் கூற, 

“நீங்களும் அழகா இருக்கீங்க யஷு மாமா” என்றாள். அதே சிரிப்பை உதிர்த்தவன் அவளைக் கூட்டிக் கொண்டு கீழே வர,

 “சித்தா சூப்பர் ஸ்மார்ட். சித்தி ரொம்ப பியூடிஃபுல்” என்று யாதவனின் மகன் யதுநந்தன் கூறினான்.

குழந்தைக்கு முத்தமிட்டுக் கொஞ்சியவள் தன் நன்றியைக் கூற, “யஷ்வா நீ அஞ்சுவைக் கூட்டிட்டு முதல்ல போ. நாங்க வரோம்” என்று யமுனா கூறினார். யஷ்வந்த் விழிகள் யாழினியைத் தேட, சமையல் அறையிலிருந்து நீர் போத்தலுடன் வந்தவள் அண்ணனைக் கண்டு தடுமாறி நின்றாள்.

“நீ வரலை?” என்று யஷ்வா வினவ, 

“இ..இல்ல அண்ணா” என்று கூறி தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். 

அவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி அழுத்தமாய் பார்த்தவன் அவளிடம் வந்து, “வர விருப்பமில்லையா?” என்று வினவ,

 “அச்சோ அப்படிலாம் இல்லை ண்ணா” என்று பதறியவள் அவனது அழுத்தமான பார்வையைக் கண்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“அவ வரலைனா விடு யஷ்வா. நீ போ. நேரமாச்சு” என்று யமுனா கூறுகையிலேயே வினோத்திடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று காதில் வைத்தவன் அஞ்சனாவைப் பார்த்து ‘வா’ என்பதுபோல் கையசைத்துவிட்டுச் செல்ல, பாவை தன் மாமியாரைப் பார்த்தாள்.

“நீ போடா நாங்க வரோம்” என்று அவர் கூற, யாழினியைப் பார்த்துவிட்டு சிறு தலையசைப்புடன் சென்றாள். வெளியே வந்தவள் தன்னவன் அவனது கருப்பு நிற லம்போர்கினியில் சாய்ந்து நின்றபடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவனிடம் வந்தாள்.

அவளைக் கூட்டிக் கொண்டு தன் கருப்பு மகிழுந்தில் கிளம்பியவன் சடுதியில் தங்கள் நிறுவனத்தினை அடைய, வாகனம் விட்டு இறங்கியவள் அலங்காரங்களுடன் ஜொலித்த அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை வியப்புடன் பார்த்தாள்.

தானும் இறங்கி அவளருகே வந்தவன் “அஞ்சனா” என்க, 

“உங்க ஆஃபிஸ் இவ்வளவு பெருசா மாமா?” என்று வியப்புடன் கேட்டாள். 

“இது மெயின் ப்ரான்ச் அஞ்சு. இன்னும் மூனு பிரான்ச் இருக்கு” என்க, அவனை வியப்பாய் பார்த்தவளுக்கு அவன் உயரம் 

அப்போதே தெரிந்தது. 
அவளைக் கண்டு லேசாய் சிரித்தவன் “வா..” என்க, சிறு தலையசைப்புடன் வந்தாள். 

தங்கள் நிறுவனத்திற்குள் நுழைந்தவன் அவள் வெற்றிடையை சுற்றிக் கரம் போட்டு தன்னோடு நிறுத்திக் கொள்ள சிறு திடுக்கிடலுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

கூர்மையான பார்வையோடு அவளை ஏறிட்டவன் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி ‘என்ன?’ என்க, திக்கித்திணறி ‘ஒன்றுமில்லை’ என்பதைப் போல் தலையசைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

 அவர்களை நோக்கி வந்த வினோத் “ஹாப்பி ஈவினிங் சார். வெல்கம் மேம்” என்க, இதழ் பிரியாத புன்னகை ஒன்றை வரவழைத்துக் கொண்டு தலையசைத்தாள்.

“எல்லாம் ஓகேவா வினோத்?” என்று யஷ்வந்த் வினவ, தனது கையிலுள்ள டேப்பைக் (tab) காட்டி யார் யாரை அழைத்துள்ளான் யாரெல்லாம் வந்துள்ளனர் போன்ற விவரங்களைக் கூறினான்.

“குட். லெட்ஸ் மூவ்” என்று யஷ்வந்த் கூற, வினோத்தின் அலைப்பேசி ஒலிக்கவும் அனுமதி கேட்டுவிட்டு அவன் நகர்ந்து சென்றான். யஷ்வந்த் அஞ்சனாவுடன் லிஃப்டுக்குள் நுழைந்து மேல் தளத்திற்கான பொத்தானை அழுத்த, தன் குரலை கடினப்பட்டு சரிசெய்தவள் “மா..மாமா” என்றாள்.

அதில் ஆடவன் அவளைக் கேள்வியாக நோக்க, “நா..நானே வரேன் விடுங்க” என்று திக்கித் திணறி கூறினாள். அப்போதே இயந்திர கதியில் தான் செய்த செயலை உணர்ந்தான். உணர்ந்த பின்பு அதை கைவிட்டான் என்று நினைத்தால் அது தான் இல்லை. உணர்ந்த செயலை உணர்ந்து செய்ய வேண்டி அவளை மேலும் தன்னோடு நெருக்கிக் கொண்டவன் அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.

அவள் மனதின் படபடப்பு மேலும் எகுறித் துடிக்க, அவள் மூளையை ஒரு வாக்கியம் விடாமல் வலம் வந்தது. அவ்வாக்கியத்திற்கும் தான் உணரும் இனம் புரியாத உணர்வுக்கும் இடையே அவள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் வந்து சேரவேண்டிய தளம் வந்துவிட்டது.

அத்தளம் முழுதும் அழகிய வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற டூலிப் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதன் அழகை தன்னை மறந்த நிலையில் பார்த்த அஞ்சனாவின் விழிகளில் அத்தனை ரசனை பொங்கி வழிய, அதைக் கண்டு யஷ்வந்த் இதழ் பிரியாது புன்னகைத்துக் கொண்டான்.

அங்கே வந்த வினோத், “டெகரேஷன்ஸ்லாம் ஓகேவா சார்?” என்று வினவ,

 “அங்க கேளுங்க வினோத்” என்று தன் மனையாளைக் கண்காட்டினான்.

ரசனையோடு அந்த அலங்காரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறியவளைக் கண்டு மெல்ல புன்னகைத்த வினோத், 

“டெகரேஷன்லாம் ஓகேவா மேம்?” என்று வினவ,

 “ரொம்ப அழகா இருக்கு. இந்த டூலிப்ஸ்.. அதுவும் நான் வைட் டூலிப்ஸ் முதல் முறை பாக்குறேன்” என்று உற்சாகமாய் கூறினாள்.

“தேங்கியூ மேம்” என்ற வினோத் யஷ்வந்தை நோக்க, “போலாமா?” என்று யஷ்வ்ந்த கேட்டான்.

இருவரும் அங்கு நடுநாயகமாக இருந்த மேடையில் சென்று ஏறிக் கொள்ள, வினோத் ஒலிவாங்கி ஒன்றை எடுத்துக் கொண்டு விழாவுக்கு வந்திருந்த தொழில் துறை நண்பர்களுக்கான வணக்கவுரையை வழங்கினான். 

யஷ்வந்தின் தாய், அண்ணன் மற்றும் அண்ணி வந்துவிட, தொழில்துறை சார்ந்த மற்ற நிறுவனத்தார் அவர்களை சூழ்ந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைக் கூறி அந்த வாய்ப்போடு தங்கள் நிறுவனம் சார்ந்து பேச்சுக்களையும் அவர்கள் காதில் போட்டு வைத்தனர்.

அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வாயில் காவலன் பயத்தில் தன் எச்சிலைக் கூட்டி விழுங்கச் செய்யும் வகையில் அங்கே சிவப்பு நிற பி.எம்.டபள்யு ஒன்று கிரீச்சென்ற சத்தத்துடன் வந்து நின்றது.

வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கருப்புநிற கோர்ட் சூட்டில் தன் சிகையைக் கோதிய வண்ணம் வண்டியிலிருந்து குதித்திறங்கினான் ஓர் வாலிபன்.

அவன் கண்களின் தீட்சண்யமும், கூர்மையும் அக்கட்டிடத்தையே ஊசியாய் துளைக்கும் வல்லமையோடு இருப்பதான பிரம்மையே பார்ப்போருக்கு எழும் என்னும் வகையில் கூரிய பார்வையும் கொண்டோன், தான் கொண்டு வந்த பரிசுப் பெட்டியை தோரணையாய் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டு உள்ளே சென்றான்.

அத்தனை நேரம் சலசலத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு திடீர் அமைதி உருவாக, வினோத்துடன் பேசிக் கொண்டிருந்த யஷ்வந்தின் இதழ்களில் ஒரு கோணல் புன்னகை எழுந்தது‌.

அதே புன்னகையுடன் அவன் திரும்பிப் பார்க்க, நெடுநெடுவென்று தன் உயரத்திற்கு நிகரான உயரத்துடன் அவ்வாலிபன் இவர்களை நோக்கி வந்தான். அங்கு சுற்றி நின்ற அத்தனை நபர்களுக்கும் ஏதோ அக்னி பாத்திரத்திற்குள் நிற்பதைப் போல் வியர்த்து வழியத் துவங்க, அவர்களை குளிர்விக்க இயலாத ஆற்றாமையோடு குளிரூட்டிகளும் வெந்து போயின.

தொழில் துறையில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் இரு வாலிப ஜாம்பவான்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதென்றால் சாதாரண காரியமா என்ன? அதுவும் இருவரும் எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த ஜாம்பவான்கள் ஆயிற்றே!

மேடையில் அவன் ஏறியதும் யஷ்வந்த் அஞ்சனாவை சூழ்ந்திருந்தோர் விலகியும், சிலர் மேடையை விட்டே இறங்கியும் சென்றுவிட, தானாய் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்ட கர்வப் புன்னகையுடன் யஷ்வந்தின் அருகே சென்று தன் பரிசுப் பெட்டியை நீட்டினான்.

அதை வாங்காது யஷ்வந்த் அவனையே நோக்க, கீழே யமுனாவும் யாதவனும் ஏதும் பிரச்சனை நிகழ்ந்திடுமோ என்று ஒருவரை ஒருவர் பீதியுடன் நோக்கினர்.

அஞ்சனா யஷ்வந்தை புரியாது நோக்க, அவளைக் கண்டு ஒற்றை புருவம் உயர்த்தி ‘என்ன?’ என்பதுபோல் பார்த்தான். எப்போதும் போல் அந்த புருவத்தூக்கலில் தடுமாறியவள் திரும்பி அந்த வாலிபனைப் பார்க்க, அஞ்சனாவைப் பார்த்து புன்னகைத்தவன், “ஐ டிட்ன் எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரொம் யூ மிஸ்டர் யஷ்வந்த் கிருஷ்ணா” (I didn't expect this from you mr. Yashvanth Krishna) என்று கூற,

 “பட் ஐ எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரொம் யூ மிஸ்டர் அர்ஷித் பிரஷாத்” (But I expect this from you Mr. Arshith prasath) என்றபடி அந்த பரிசை வாங்கி வினோத்திடம் கொடுத்தான்.

அவனது பேச்சில் தன் பச்சரிசிப் பற்கள் தெரிய அவன் புன்னகைத்ததும் யஷ்வந்தும் இதழ் விரியாது புன்னகைக்க, அத்தனை பேரும் அதை எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்.

“ஹாப்பி மேரீட் லைஃப்” என்று அர்ஷித் கரம் நீட்ட, அதைப் பற்றி அழுத்தமாய் குலுக்கியவன் “தாங்க்ஸ் ஃபார் யுவர் ப்ளஷர் அட்டென்ஷன் அண்ட் விஷஸ்” (Thank you for your pleasure attention and wishes) என்று எள்ளல் புன்னகையுடன் ‘ப்ளஷர்’ என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி யஷ்வந்த் கூறினான்.

அதில் மேலும் ஒரு இன்ச் அதிகமாய் புன்னகைத்தவன் அஞ்சனாவைப் பார்த்து “கங்கிராஜுலேஷன்ஸ்” என்று கூற யஷ்வந்தை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள் “தேங்கி யூ” என்றாள்.

அஞ்சனா தோளை சுற்றி கரம் போட்டு தன்னோடு நிறுத்திக் கொண்ட யஷ்வந்த்,  “என்ஜாய் தி ஃபீஸ்ட்” என்று கூற

 “வித் ப்ளஷர்” என்றுவிட்டு மேடையிலிருந்து குதித்திறங்கினான். சில நிமிடங்களிலேயே அர்ஷித் புறப்பட்டுவிட, அத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை அனைவரும் வெளியிட்டனர்.

சில நிமிடங்களில் விழா முடிவுபெற்று அனைவரும் புறப்பட ஆயத்தமாக, அங்கு தன்னறையில் படுத்திருந்த யாழினியின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததாய் ஓசை எழுப்பியது.

அதை எடுத்துப் பார்க்க யஷ்வந்த் மற்றும் அர்ஷித் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி நின்றிருந்த தருணம் புகைப்படமாய் ஒளிர்ந்து அவள் கண்களையே நம்பத்தகாது உணர வைத்தது!


Leave a comment


Comments


Related Post