இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 21-03-2024

Total Views: 23814

“லாஷா இன்னைக்கு நான் ஃப்ரீயா தான் இருக்கேன் வேணும்னா இன்னைக்கே போய் அட்வகேட்டை பார்த்திடலாமா?” நந்தன் கேட்க

“இல்ல நந்தன்.. நான் நேத்தே ஜெனி மூலமா கோபாலன் சாரை கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணேன். பட் அவரு வேற ஒரு கேஸ்ல பிஸியா இருக்காராம். அதான் நாளைக்கு மோகன் அங்கிள் வந்ததும் அவரை பார்த்து பேசிட்டு அப்பறமா போகலாம் னு சொன்னீங்களே… இன்னைக்கு ஈவ்னிங் அங்கிள் வந்திட்டா நாளைக்கு அவரை மீட் பண்ணலாம் னு தானே நேத்து சொன்னீங்க?” என்று அபிலாஷா சொல்ல 

“அது… ஆமா.. ஆனா இன்னைக்கு லீவ் வீட்ல தானே இருக்கோம். அதான்…” என்று அபிநந்தன் சொல்லிக் கொண்டு இருக்க

“ஏன்மா அபி அந்த வக்கீலுக்கு இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சிருக்காதா என்ன?” பார்வதி கேட்க

“தெரிஞ்சிருக்கும் அம்மா… ஆனா முக்கியமான வேலையில மாட்டிக்கிட்டாருனு ஜெனி விசாரிச்சு சொன்னா அதுவும் இல்லாம நான் நேர்ல அவரை கான்டாக்ட் பண்ணனும் ல அதானே மரியாதையா இருக்கும்…” அபிலாஷா பதில் தர

“அண்ணி அதுக்கு ஏன் மோகன் சாருக்கு வெய்ட் பண்றீங்க? அவரோட பையன் தான் உங்க ஃப்ரண்ட்னு அண்ணா சொன்னாரு.” அக்சயா தன் சந்தேகத்தை சொல்ல

“ஆமா அச்சு நானும் ப்ரதீப்பும் சின்ன வயசுல இருந்து ஃப்ரண்ட்ஸ்… அதுக்கு முக்கிய காரணம் என் அப்பாவும் மோகன் அங்கிளும் அந்த அளவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அம்மா இறந்து அப்பா சாகும் போது கூட மோகன் அங்கிளை பார்த்து என்னதான் சொந்தங்கள் கூட இருந்தாலும் என் பொண்ணை நீ தான் பத்திரமா பார்த்துக்கனும்னு கடைசியா சொல்லிட்டு தான் அவரோட உயிர் பிரிஞ்சது… அந்த அளவுக்கு அவங்க நெருக்கமான நண்பர்கள். 

அதேப்போல நானும் ப்ரதீப்பும்… என்னோட மேரேஜ் டைம்ல கூட இருந்து எல்லா பேச்சு வார்த்தையும் அவனே பேசி எல்லா ஏற்பாடும் அவனே பண்ணுவேன் னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பான்.” என்று அபி சொல்லும் போது 

“ம்ம்.. அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது உனக்கு என்னை உனக்கு நியாபகம் இருக்கே…” என்று ஒரு ஆண் குரல் வாசல் பக்கம் கேட்க நால்வரும் திரும்பி பார்த்தனர். 

மோகன்ராம் அவர் மனைவி பத்மாவதி அவர்கள் மகன் ப்ரதீப் என்று வந்து நிற்க ஒரு நொடி அபிநந்தன் அதிர்ந்தாலும் “வாங்க சார்… வாங்க மேடம்” என்று உள்ளே அழைக்க

“மோகன் சார் வாங்க.. வாங்க அம்மா” என்று பார்வதி அழைக்க அபிலாஷா இன்னமும் அதிர்வில் தான் இருக்க

“பரவாயில்ல அப்பா அம்மா உங்களை கூப்பிட ஆள் இருக்கு.. ஆனா என்னை தான் சிலர் மறந்துட்டாங்க..” என்று ப்ரதீப் பேச இதுவரை பார்வதி அபிநந்தன் ப்ரதீப்பை பார்த்ததில்லை என்பதால் அமைதியாய் இருந்தவர்கள்

“ஐயோ அப்படி இல்லை சார்.. சாரி வாங்க..” அபிநந்தன் அழைத்தவன் ‘லாஷா கூப்பிடு…’ என்று சைகை காட்ட

“வாங்க அங்கிள் ஆன்டி… ப்ரதீப் ஆக்சுவலா நான் உன்னை திடீர்னு பார்த்து எக்ஸைட் ஆகிட்டேன் டா.. சாரி டா உள்ளே வா..” என்று அபிலாஷா அழைக்க

“ம்கூம் இப்போ கூட உன் அவரு… சொல்லித்தான் என்னை கூப்பிடுற இல்ல” என்று தோழியிடம் செல்ல கோபம் கொள்ள

“ச்ச் அப்படி எல்லாம் எதுவும் இல்லை டா.. வா வந்து உட்காரு.. சொல்லப்போனா அங்கிள் கூட ஆன்டியும் ஊருக்கு போய்டாங்க இன்னைக்கு தான் ஊர்ல இருந்து வருவாங்க. நாளைக்கு நாங்க வந்து உங்களை பார்க்கலாம் னு இப்போ தான் பேசிட்டு இருந்தோம் அங்கிள்.” அபிலாஷா சொல்ல

“அது வந்து நானே உங்களுக்கு கூப்பிட்டு இங்க நடந்த எல்லாத்தையும் சொல்ல தான் இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க” என்று பார்வதி சொல்ல

“அதனால என்ன பார்வதி அம்மா..‌. அபிநந்தனைப் பத்தியும் சரி அபிலாஷாவை பத்தியும் சரி எனக்கு நல்லா தெரியும். அவங்க ரெண்டு பேரும் திடீர்னு இப்படி ஒரு ஒரு முடிவு எடுத்திருந்தா அதுல கண்டிப்பா நியாயமான காரணம் இருக்கும் னு நான் நம்பறேன்.” மோகன்ராம் சொல்ல பார்வதி நந்தன் மனதின் கொஞ்சம் நிம்மதி பரவியது.

“அபி இங்க நடந்த எல்லா விஷயங்களையும் ஜெனியும் பவியும் அன்னைக்கே கோபாலனுக்கு எடுத்து சொல்லிருக்காங்க. அதேபோல எனக்கும் ஃபோன் பண்ணி 
சொன்னாங்க. உன்கிட்ட பேசலாம் னு நான் அப்போவே யோசிச்சேன். பட் உன் ஆன்டி தான் நேர்ல பார்த்து பேசினால்தான் நல்லதுனு சொல்லிட்டாங்க…” என்று மோகன்ராம் சொல்ல

“ஆமா… இல்லையா பின்னே? பார்வதி அம்மா!! ப்ரதீப் அபியை விட பெரியவன் தான். ஆனாலும் பிஸ்னஸ் ல அனுபவம் திறமை இது எல்லாமே அபிக்கு தான் அதிகம். அவ ஒரு முடிவு எடுத்தா சரியா இருக்கும் னு நம்பிக்கை தான்…

அத்தோட அபி எங்க இருக்கா? அபிநந்தன் சின்ன குழந்தையா இருக்கும் போது இருந்தே இவருக்கு நல்லா தெரியும். கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடி இவரு சின்னதா தொழில் தொடங்குன காலத்துல இருந்து உங்க அப்பா இவரோட இருந்தாரு. பார்வதி குணம் எனக்கே நல்லா தெரியும். இப்படி ஒரு இடத்துல அபி இருக்கா பாதுகாப்பா இருப்பா.. நாம நேர்ல போய் எல்லாம் பேசிக்கலாம். அதுவரை எதுவும் பேசி டென்ஷன் ஆக வேண்டாம் னு நான் தான் சொன்னேன் அபி. ஆனா இங்க வந்து பார்த்தா எங்களுக்கு முன்னாடி இவன் ஃபாரீன் ல இருந்து வந்து உடனே உன்னை பார்க்கனும் னு நிக்கிறான்.” என்று பத்மாவதி சொல்ல

“சாரி ப்ரதீப்… நந்தனை பத்தி உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன் தானே…” அபிலாஷா தன் பக்க நியாயத்தை விளக்க முயல

“வெறும் ஃப்ரண்ட் னு தானே சொன்னே..” என்று இடை நிறுத்தினான் முகத்தை சுருக்கி கொண்டு

“அது வந்து… அவரு அப்போ என் லவ் அக்சப்ட் பண்ணல ப்ரதீப். நந்தன் ஓகே சொன்ன உடனே உனக்கு தான் முதல்ல சொல்லனும் னு நினைச்சேன்.”

“ஆமா… அதான் அந்த பவி மூலமா எனக்கு தெரியப் படுத்திருக்க.‌.. சரி மேரேஜ் தான் அவசரமா நடந்தது. ஆஃப்டர் மேரேஜ் ஒரு கால் பண்ணி எனக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கலாமே..‌ உன் ஹஸ்பண்ட் வாங்கி கொடுத்த ஃபோன்ல இருந்து அவளுக்கு கால் பண்ணிருக்க மெசேஜ் பண்ணிருக்க.. ஆனால் என்னை நீ மறந்துட்ட அப்படி தானே அபி” என்று படபடவென்று பொரிந்து தள்ள

“ரொம்ப சூடா இருக்கீங்க ஜில்லுனு மோர் குடிங்க..‌” என்று டம்ளரை நீட்டிய அக்சயாவை தீயாக முறைத்தான் ப்ரதீப்.  நண்பர்கள் சண்டை என்று அபிநந்தன் முதற்கொண்டு யாரும் தலையிடாது இருக்க இவள் கொண்டு தன் தலையை நுழைத்துக் கொண்டாள் அக்சயா.

“அது வந்து… வீட்டுக்கு யார் வந்தாலும் முதல்ல தண்ணீ கொடுக்கனும் னு அம்மா சொல்லிருக்காங்க. அதனால முதல்ல தண்ணீர் தான் எடுத்துட்டு வர போனேன். இவரு ரொம்ப கோபமா பேசிட்டு இருந்தாரு. அதனால தான் மோரு எடுத்திட்டு வந்தேன்…” என்று தட்டை காட்ட

“அவன் அப்படி தான் மா.. நீ எங்களுக்கு கொடு” என்று மோகன்ராம் வாங்கிக் கொள்ள பத்மாவதியும் எடுத்துக் கொண்டார்.

“பார்வதி உங்க பொண்ணா இவ? கடைசியா கம்பெனி ல ஏதோ ஒரு பங்ஷன் அப்போ நான் இவளை பார்த்தது ஐந்தாவதோ ஆறாவதோ படிச்சிட்டு இருந்தா.. கடகடன்னு வளர்ந்துட்டா இல்ல..” என்று பத்மாவதி பேச

“பெண் குழந்தைங்க வளர்ச்சி அப்படி தானே அம்மா…” என்று பார்வதி ஆமோதிக்க

“ஆன்டி நான் இப்போ காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறேன்.” அக்சயா சொல்ல அப்போது தான் அவளை முழுமையாக பார்த்த ப்ரதீப் கேள்வியாக புருவத்தை வளைத்தவன் அவள் வைத்த மோரை எடுத்து இரண்டு மிடறுகள் உறிஞ்சினான்.

அவனுக்கு சற்று நேரம் கொடுத்த அபிலாஷா “ப்ரதீப் உன்கிட்ட சொல்லக் கூடாது னு இல்ல… நேர்ல சொன்னா என்னை புரிஞ்சுப்ப னு நினைச்சேன் டா..” என்று அபி விளக்கம் தர

“ச்ச் அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை அபிஷா… நீ என் கிட்ட ஃபோன்ல மேலோட்டமா கூட சொல்லி இருக்கலாம் ல அந்த பவி கால் பண்ணி தான் உனக்கு மேரேஜ் ஆன விஷயம் எனக்கு தெரியுது. அப்போ அவ சொல்ற மாதிரி என்னை விட அவதான் உனக்கு க்ளோஸா?” குழந்தை போல யாரை பிடிக்கும் என்று சண்டைக்கு நிற்க களுக் கென்று சிரித்திருந்தாள் அக்சயா.

“டேய்.. அவளுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகி வேற ஊருக்கு ஷிப்ட் ஆகப்போறா இன்னும் உங்க ப்ளே ஸ்கூல் சண்டையை விடலையா?” அபிலாஷா கேலியாக கேட்க

“எந்த வயசா இருந்தா என்ன நான் தான் உனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட் அதுவும் ஃபர்ஸ்ட் ஃப்ரண்ட்.. நியாபகம் இருக்குல?” ப்ரதீப் கெத்தாக கூற 

“ஆமாப்பா ஆமா… நீதான் என் ஃபர்ஸ்ட் பெஸ்ட் ஃப்ரண்ட்” என்று அடிபணிந்தது போல அபிலாஷா சொல்ல அனைவருமே சிரித்திருந்தனர். 

அந்த நேரம் சரியாக “அபி… அபி மா..” என்று வெளியே குரல் கேட்க அபிநந்தன் எட்டிப் பார்க்க அபிலாஷாவின் சித்தப்பா சித்தி அத்தை மாமா என்று வஞ்சக எண்ணத்தை நெஞ்சில் வைத்து போலிச் சிரிப்பை முகத்தில் பூசி நின்றிருந்தனர் நால்வரும்.

அபிநந்தன் திரும்பி உள்ளே இருந்தவர்களை ஒரு முறை பார்த்து விட்டு திரும்பி “வாங்க உள்ளே வாங்க…” என்று இயல்பாக அபிநந்தன் அழைக்க பின்னால் வந்த அபிலாஷாவிற்கு இவங்க ஏன் இங்க வந்திருப்பாங்க என்ற எண்ணம் மனதில் எழுந்தாலும் வெறுமனே “வாங்க” என்று அழைத்தாள்.

பார்வதி அக்சயா வந்தவர்கள் யார் என்று புரியாமல் குழம்ப அவர்களை அறிந்த அபிநந்தன் அபிலாஷா மட்டுமின்றி மோகன்ராம் பத்மாவதி மற்றும் ப்ரதீப் கூட எதற்காக வந்திருப்பார்கள் ஏதாவது பிரச்சினை செய்யவோ என்று குழப்பத்தில் நின்றனர்.

தொடரும்…




 


Leave a comment


Comments


Related Post