இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-09 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 24-03-2024

Total Views: 41310

அத்தியாயம் -09


“வாட்? கம் அகைன்?” என்று அவன் வினவ, “மு..முத்தம் குடுக்கக் கூடாது மா..மாமா. கன்னத்துல குழந்தைக்கும் ஹஸ்பண்டுக்கும் குடுக்கலாம். ஆனா இ..இது தப்புதானே மாமா. சா..சாரி மாமா” என்று அழுதாள்.

அவள் மனம், கேட்டு வந்த சில வாக்கியங்களுக்கும் தற்போது உணர்ந்த இனம்புரியாத படபடத்த உணர்வுக்கும் இடையே சிக்கித் தவித்தது.

“யாரு அஞ்சனா உனக்கு இப்படிலாம் சொன்னது?” என்று அவன் சற்றே எரிச்சலுடன் வினவ,

 “அ..அம்மா சொல்லிருக்காங்க மாமா” என்று விசும்பலோடு கூறினாள். 

'புல்ஷிட்' என்று முனுமுனுத்துக் கொண்டவன் “அப்படியெல்லாம் இல்லை அஞ்சனா.. உன்..உனக்கு ஏன் இப்படிலாம் சொல்றாங்க? ஸ்கூல் காலேஜ் போற பொண்ணு தானே நீ?” என்றவனுக்கு இப்போதுவரை ஒன்றும் புரியவில்லை.

அவன் தான் அவளது சிறுவயது பிரச்சினை ஏதும் அறியாதவன் ஆயிற்றே! விசும்பலோடு அவனைப் பார்த்தவள், 

“நான் ஸ்கூல் போலயே மாமா” என்றாள். 

“வாட்?” என்று அவன் கேட்க, அவள் உடலில் தனிச்சையாய் ஒரு நடுக்கம் ஒட்டிக் கொண்டது. 

கண் முன்னே கண்ட சம்பவம் நினைவுகளில் கலங்கலாகத்தான் காட்சிபட்டது என்றபோதும் அந்த சிறுமியின் கதறல் இன்றும் அவள் காதுகளில் தெளிவாகவே ஒலித்தது. 

அது கொடுத்த அச்சத்தில் இதழ் துடிக்க அவனைப் பார்த்தவள் “டாக்டர் அதை நினைக்கக் கூடாதுனு சொல்லிருக்காங்க” என்க, 

“எதை? என்கிட்ட சொன்னா தானே எனக்கு தெரியும்?” என்று கேட்டான்.

அவளது எண்ணங்கள் சில வருடங்களுக்கு பின்னே சென்று அந்த சம்பவத்தில் நின்றது.

ஐந்தாம் வகுப்பு மாணவியாக பட்டு ரோஜாவாய் அவள் வலம் வந்த காலமது. பள்ளியை விட்டு தனது மிதிவண்டியுடன் வெளியே வந்து நின்றவள் அர்ஜுனுக்காக காத்திருக்க, அவளது தோழி ஸ்ருதி அங்கு வந்தாள்.

“ஏ அஞ்சு.. என்ன அர்ஜுனுக்காக வெயிட்டிங்கா?” என்று ஸ்ருதி வினவ,

“ஆமா ஸ்ருதி” என்று புன்னகையாய் கூறினாள். 

தானும் தனது பெற்றோருக்காக காத்திருந்த ஸ்ருதி அஞ்சுவுடன் பேசிக் கொண்டிருக்க, அதி விரைவாய் அங்கு வந்த மகிழுந்து ஒன்று இருவரையும் சந்தேகம் வராதபடி நாசூக்காய் அள்ளிக் கொண்டு பறந்தது!

மிரண்டு போன குழந்தைகள் இருவரும் பதறியழ, முகமூடிக்குள் மறைத்திருந்த ஸ்ருதியின் மாமா, எங்கே தன் முகத்தை காட்டிக் கொடுத்திடுவரோ என்று மேலும் அந்த முகமூடியை சரிசெய்து கட்டிக் கொண்டான். 

“அம்மா‌.. அம்மாட்ட போகனும்” என்று ஸ்ருதி அழ,

 “அ..அஜு அஜு வெயிட் பண்ணிட்டு இருப்பான். நான் போனும்” என்று அஞ்சனா அழுதாள். 

அவர்கள் சத்தம் ஏதும் அவனைப் பாதிக்காத வண்ணம் வண்டியை அந்த அரவமற்ற பாதைக்குள் நுழைத்தான். 

சில நிமிடங்களில் வண்டி நின்றுவிட, இரு குழந்தைகளும் விசும்பிய வண்ணம் சுற்றி முற்றிப் பார்த்தனர். ஏதோ காட்டிற்கு நடுவே கட்டப்பட்டது போன்ற வீட்டைக் கண்டு இருவருமே அஞ்சி மிரண்டு விழிக்க, இருவரையும் தூக்கிக் கொண்டு அவ்வீட்டினுள் சென்றான்.

அவன் தூக்கிய விதமும், அவனின் பிரத்யேக மணமும் கொண்டு அவனைக் கணிக்க முடிந்த ஸ்ருதி, அவனைக் கூர்ந்து நோக்க, தன் மாமன் என்று கண்டுகொண்டாள். அதில் தன்னுடன் மாமா விளையாடவே பார்க்கின்றார் என்று அறிந்திட்ட குதூகலத்தில், “மாமா.. நீங்க தானா?” என்க, அவன் குழந்தையை அதிர்ந்து நோக்கினான்.

அவனது மற்றைய கரத்தில் ஏந்தப்பட்டிருந்த அஞ்சனாவிடம் திரும்பி, “அஞ்சு.. அழாத இவங்க எங்க மாமா தான். மாமா நம்ம கூட விளையாடிருக்காங்க” என்று பளிச்சென்ற சிரிப்புடன் கூற, அஞ்சனா பயம் விலகாதவளாய் அவனைப் பார்த்தாள். இருவரையும் இறக்கிவிட்டவன், 

“ரெண்டு பேரும் சமத்தா விளையாடுங்க மாமா வந்துடுறேன்” என்றுவிட்டு உள்ளே உள்ள மற்றைய அறைக்குச் செல்ல, முதலில் பயந்து நடுங்கிய அஞ்சனாவை ஸ்ருதி மெல்ல சமாதானம் செய்தாள்.

“நான் போனும் ஸ்ருதி. அஜு வெயிட் பண்ணுவான்” என்று அஞ்சனா கூறிக் கொண்டே இருக்க, சில நிமிடங்களில் குடிபோதையின் தள்ளாட்டத்தோடு அங்கே வந்தான் ஸ்ருதியின் மாமா வேலன்‌.

“மாமா..” என்று அவனிடம் ஓடிய சிட்டு, “அஞ்சு ரொம்ப பயப்படுறா மாமா. அவள போய் வீட்டுல விட்டுடலாமா?” என்று வினவ, 

போதையில் சிவப்பேறிய விழிகளுடன் அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் தன் தண்டுவடம் சில்லிடுவதைப் போன்று உணர்ந்த அஞ்சனா நடுநடுங்கி விழிக்க, தன் சொந்த தங்கையின் மகள், அதுவும் அத்தனை சிறிய பெண் என்றும் பாராமல், அக்குழந்தையை அங்கிருந்த பாய் கட்டிலில் கிடத்தி தன் இச்சையை தீர்க்கத் துவங்கினான்.

முதலில் புரியாமல் விழித்த குழந்தை பின்பு வலியில் கதறத் துவங்கிட, “ஆ.. ஸ்ருதி வா போலாம்.. அவள விடுங்க.. நாங்க போனும்” என்று அஞ்சனாவும் கதறத் துவங்கினாள்.

போதையின் பிடியில் பிஞ்சு அவள் தேகத்தை தன் இச்சையால் கொய்தவன் அவளது கதறல் ஒலியை காமன் ராகமாய் ஏற்று சுகித்து விலக, கதறிக் கதறி ஓய்ந்த அக்குழந்தை அப்பூவுடலின் ரணம் தாளாமல் இன்னுயிரை துறந்திருந்தாள். 

தோழியின் நிலையை கண்கொண்டு பார்த்த அஞ்சனா தான் கண்பதின் பொருளும் விளங்காது, தவறும் புரியாது மருண்டு விழித்தாள்.

“ஆ எனக்கு பயமா இருக்கு.. நான் போகனும்” என்று கதறிய அஞ்சனா, மதுபான வாடை, அவ்வறையில் புதிதாய் பரவிய உதிர வாடை, அழுகையின் சோர்வு என அனைத்தும் சேர்ந்து மயக்கத்தைக் கொடுக்க, அடுத்து அவளை சுகித்திட அவன் வந்த நொடி மேலும் பயந்து மயங்கினாள். அவள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ வேலனின் வண்டியை கண்காணிப்பு காமிராவில் கண்டுபிடித்து அவர்களிருக்கும் இடம் கண்டுகொண்டு வந்து சேர்ந்திருந்தனர்.

'தான் ஐந்தாம் வகுப்பு பயிலும்போது உடன் பயின்ற சிறுமிக்கு தன் முன்னே தவறு நடந்தது. அதில் அவள் இறந்துவிட்டாள் என்றும் அந்த சம்பவத்தில் அஞ்சி அலறி மயக்கம் போட்ட தான் அடுத்த ஐந்து வருட பள்ளிப் படிப்பை வீட்டிலேயே தான் கற்றதாகவும் கூறிமுடித்தவள், 

“குட் டச் பேட் டச் தெரியும் எனக்கும்” என்று கூற, 

நேற்று தான் அவள் இடை வளைத்துப் பிடித்ததை அவள் எப்படி நினைத்திருப்பாள் என்று யஷ்வந்துக்கு தற்போது தெளிவாய் புரிந்தது.

அவன் உள்ளத்தில் மெல்லிய வலியும், மலையளவு கோபமும் எழ, ‘ச்ச! என்ன வளர்த்துருக்காங்க? அதுவும் இந்த காலத்துல.. பெண்கள் எவ்வளவோ சாதிக்கும் காலத்துல வீட்டுல பூட்டி வைச்சு அவ குழந்தை பருவத்தையே உருக்குழைச்சிருக்காங்க' என்று எண்ணியபடி அவளைக் கண்டான்.

இன்னும் குற்றால அருவியாய் அவள் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க, அவள் உடலில் அந்த மெல்லிய நடுக்கம் அவன் கண்களுக்குத் தெளிவாய் தெரிந்தது. 

“சனா..” என முடிந்தவரை மென்மையாய் அழைத்தவன், அவள் நிமிரவும் அவள் முகம் தாங்கினான்.

“நீ நினைக்குற போலலாம் இல்லை” என்று விளக்க இயலாத நிலையில் கூற, 

“அம்மா சொன்னதை தப்புனு சொல்றீங்களா மாமா?” என்று கேட்டாள்.

சற்றும் தயங்காது அவன் ஆமென்று கூறிவிட,

 “அஜுவும் அடிக்கடி அப்படிதான் சொல்லுவான் மாமா. அம்மாகூட ரொம்ப சண்டை போடுவான். அம்மா சொல்றதை கேட்காத அஞ்சுனு சொல்லிட்டே இருப்பான்” என்று பாவம்போல் கூறினாள்.

“ரொம்ப சரியா சொல்லிருக்கான். அஃப்கோர்ஸ் நீ சின்ன பொண்ணுதான். ஆனா நீ இன்னும் சின்ன குழந்தை கிடையாது. நீ கேட்டு அறிந்த செய்திகள் எதுவுமே உண்மை இல்லை அஞ்சனா. உன்னை வளர்த்த விதமே தப்பு” என்று யஷ்வந்த் கூற, புரியாது விழித்தவளுக்கு இன்னும் தான் கண்ணீர் வந்தது.

தான் வாழ்ந்த பத்தொன்பது வருட வாழ்வே பிழையென்றால் எதுதான் சரியானது என்ற பயத்தின் சாயலே அந்த கண்ணீர். அது அவனுக்கு நன்கு புரிந்தும் இருந்தது. 

அதில் ஒரு பெருமூச்சு விட்டவன், “காதல்னா என்னனு தெரியுமா அஞ்சனா?” என்று கேட்க,

 “கணவன் மனைவி அன்பா இருக்குறது தானே மாமா” என்றாள். 

“அன்பானா?” என்று அவன் வினவ, 

“அன்பானா.. பாசமா.. அக்கறையா” என்று குழப்பமாய் விளக்கம் கொடுத்தாள்.

ஒரு குழந்தையிடம் கூட அந்த பாசமும் அக்கறையும் தோன்றுமே, அதற்கும் கணவன் மனைவியின் காதலுக்கும் வேறுபாடில்லையா? தன் இணையின் ஓரவிழிப் பார்வைக்கு தவம் கொள்வதும், குளிர்காய்வதும், தவித்து நிற்பதும் அல்லவா காதல்? 

தன் துணையின் சிறு ஸ்பரிசத்திற்கும் உடல் சிலிர்க்க இன்பம் கொள்வது அல்லவா காதல்!? 
தன் இணையின் அக்கறையிலும் அன்பிலும் புதுமை காண்பது அல்லவா காதல்!?

‘இதையெல்லாம் அவளுக்கு எங்கனம் உணர்த்திடுவது? முதலில் தனக்கு அவள் மீது அக்காதல் உள்ளதா? மனைவி என்ற உரிமையைத் தாண்டி அவள்மீது தனக்கு ஈர்ப்பாவது உள்ளதா?’ என்று நினைத்த ‘தி கிரேட் யஷ்வந்த் கிருஷ்ணா' தற்போது அவளுடன் இதழ் யுத்தம் நடத்தியதை மறந்துவிட்டான் போலும்!

யஷ்வந்த்தின் குழம்பிய முகம் கண்டு, “மாமா.. என்மேல கோவமா?” என்று அவள் கேட்க, 

சட்டென நிமிர்ந்து பார்த்தவன் கண்டு அஞ்சியவள் அவன் மார்பில் முகம் முட்டி “சாரி மாமா” என்று கதறியழுதாள். 

பெருக்கெடுத்து ஓடிய அவள் கண்ணீர் அவன் சட்டையை மட்டுமா நனைத்தது? மார்பு ரோமங்களின் வேரைக் குளிர்வித்த உவர் நீர் அவன் உள்ளத்தில் அனல் வீசவில்லையா? அந்த இரும்பனுக்குத்தான் வெளிச்சம்…

தன் பரந்த தோள்களை அவளைச் சுற்றி அணையிட்டுத் தட்டிக் கொடுத்தவன் “ஏய் கோழிக்குஞ்சு.. அழறத நிப்பாட்டுடி” என்க, 

“சாரி மாமா” என்றாள்.

 “முதல்ல இந்த சாரியை நிறுத்து. தப்பு செய்தா தான் சாரி கேட்கனும்” என்று அவன் கூற, துடிக்கும் இமைகளுடன் நிமிர்ந்தவள், 

“அப்ப இது தப்பில்லையா மாமா?” என்று கேட்டாள்.

அவள் ஈர விழிகளையும் சிவந்த கன்னங்களையும் கண்டு மெல்ல புன்னகைத்தவன், இடவலமாய் தலையாட்டி, “அழகான தப்பு தான்” என்று கூற, பேதையவள் ஒன்றும் புரியாது விழித்தாள்.

அவள் ஈரக் கன்னம் துடைத்து, “நீ தெரிஞ்சுக்க நிறையா இருக்கு. தேவையில்லாம அழாத சரியா?” என்று கூற, மெல்ல தலையசைத்தாள். “படு” என்று அவன் கூறவும் கட்டில் மெத்தையோடு ஒன்றியவள் சில நிமிடங்களில் உறங்கிப் போக, ‘நான் கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்க காலம் ஆகும்னு முடிவே பண்ணி எங்கம்மா எனக்கு ஒரு குழந்தையவே கட்டி வச்சுட்டாங்க போல’ என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை எழுந்தவளுக்கு தூக்கம் கொடுத்த தெளிவில் சோகம் கலைந்திருக்க, அவள் பேசியதில் அவளைப் பற்றி அறிந்து கொண்டவன் தான் மனதால் தடுமாறி இருந்தான்.

அவளிடம் தனக்கு எந்தளவு பிடிப்பு உள்ளது என்றும் அவன் முழுதாக உணராததால், சற்று பொருமையாகவே அவளைக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் இயந்திர கதியில் கிளம்பத் தயாரானான்.

பாவையும் தயார் நிலையில் கீழே வர, அர்ஜுன் அவளுக்காகக் காத்திருந்தான். காலை மனக்குழப்பத்துடன் சுற்றிய யஷ்வந்த் அஞ்சனாவை எழுப்பாததன் விளைவாய் அஞ்சனா தாமதமாக எழுந்திருக்க, அவள் தயாராகிக் கீழே வருவதற்குள் அர்ஜுன் வந்திருந்தான்.

அவனைக் கண்ட பின்பே வெகு தாமதம் ஆனதை உணர்ந்தவள், “அச்சோ அஜு.. சாரிடா தூங்கிட்டேன்” என்று கூற, “பரவாயில்லை பாப்பா. சீக்கிரம் சாப்பிட்டு வா” என்று கூறினான்.

“இல்ல அஜு லேட்டாகிடும் வா போலாம்” என்று கூறியபடி திரும்பியவள் முன் அவளவன் நிற்க, அவன்மீது மோதி தடுமாறியவள் “மா.. மாமா” என்று நிமிர்ந்து பார்த்தாள். 

அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன், அர்ஜுனை ஏறிட்டு “நீ கிளம்பு. சாப்பிட்டதும் நான் கூட்டிட்டு வரேன்” என்று கூற, ‘என்கிட்டியா பேசுறாரு?’ என்ற வியப்போடு பார்த்தான்.

நொடியில் தன்னிலை அடைந்த அர்ஜுன் “இல்ல இன்னும் டைம் இருக்கு. நானே கூட்டிட்டு போறேன்” என்ற அர்ஜுன் “பாப்பா போய் சாப்பிடுடா” என்று கூற, சரியென்று அஞ்சனா உண்ண சென்றாள்.

“நான் தான் சொல்றேன்ல? நான் கூட்டிட்டு வரேன் போ” என்று யஷ்வந்த் கூற,

 “பரவாயில்லை. நானே கூப்பிட்டு போறேன்” என்று அர்ஜுன் பிடிவாதமாய் நின்றான். இவர்கள் பேச்சுவார்த்தையைப் பார்த்தபடி அருகில் வந்த யாழினி,

 “அண்ணா நீங்க ஃப்ரீயா?” என்று கேட்டாள்.

தன் தங்கையை அவன் பார்க்க, அவளோ அவன் பார்வையைத் தவிர்த்து தனது பையை சரிபார்ப்பது போன்ற பாவனையுடன் “இன்னிக்கு மார்னிங் ஒரு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. என்னை கூட்டிட்டு போக முடியுமா?” என்று வினவினாள்.

இருவரின் பிடிவாதத்தில் தன் அண்ணி காலையே முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு சென்றிட நேரிடுமோ என்று எண்ணிய யாழினி, உண்மையில் தனக்கு அன்றிருக்கும் வகுப்பை காரணம் காட்டி வந்து நின்றாள்.

“உன் வண்டி என்ன ஆச்சு யாழி?” என்று யஷ்வா வினவ, “அ..அது.. கொஞ்சம் ஷோல்டர்லாம் பெயினா இருக்கு அண்ணா. அதான்” என்று சமாளித்தாள். 

அவளது சமாளிப்பை புரிந்துகொள்ள முடியாதளவு யஷ்வந்த் என்ன சிறுபிள்ளையா? அர்ஜுனுக்கு அவள் கூறுவது உண்மை போன்றே இருந்தாலும் யஷ்வந்துக்கு அது நடிப்பென்று புரிந்தது.

இருந்தும் அமைதியாய் அவளிடம் தலையசைத்தவன் அர்ஜுனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு யாழினியுடன் புறப்பட்டான். இங்கு உண்டு முடித்து அஞ்சனாவும் வந்துவிட, அவளைக் கூட்டிக் கொண்டு அர்ஜுனும் புறப்பட்டான்.

யாழினியை அவளது கல்லூரியில் இறக்கிவிட்ட யஷ்வந்த், “யாழி” என்று அழைக்க, இறங்கி சென்றவள் அண்ணனைக் திரும்பிப் பார்த்தாள். “அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெட்டரா ஆக்ட் பண்ணு” என்றவன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்ல, ‘கண்டுபிடிச்சுமா கூட்டிட்டு வந்தாங்க’ என்று வியந்து நின்றாள்.

தன் நிறுவனத்தினுள் சீறிக் கொண்டு வந்த தனது வாகனத்தை, வாகனம் தரிக்குமிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிய யஷ்வந்த் கிருஷ்ணா அதன் உயரத்தினை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டான். எப்போதும் போல் தனது கருப்பு நிற கோர்ட் சூட்டில் தோரணையுடன் உள்ளே நுழைந்தவனைக் கண்டு பல பெண்கள் யாருமறியா பெருமூச்சுக்களை விட்டு குளிரூட்டப்பட்ட இடத்திலும் உஷ்ணத்தை கிளப்பினர்.

தனக்கு வணக்கம் தெரிவித்தோருக்கு மட்டும் தன் தலையசைப்பில் பதில் கொடுத்தவனாய் தனது அறைக்குச் சென்றவன் அன்றைய பணிகளைத் தொடங்கினான்.

அவனது தனிப்பட்ட அறைக்குள் இருக்கும் மற்றொரு அறைக்குச் சென்றவன் சில நிமிடங்களில் முகம் மலர்ந்த பூரிப்புடன் வெளியே வந்தான். வந்தவன் முதலில் தனது இன்டர்காமை எடுத்து வினோத்தை அழைக்க, வினோத் அவன் அழைத்த வேகத்தில் அரக்க பறக்க ஓட்டமும் நடையுமாய் வந்தான்.

அவனைக் கண்டு என்றுமில்லா சிரிப்பை உதிர்த்த யஷ்வந்த், “ஏன்டா?” என்க, அரிதாய் அவன் இயம்பும் ‘டா’ என்ற உரிமை அழைப்பும், அரிதினும் அரிதாய் அவன் இதழ்களில் தோன்றும் புன்னகையும் வினோத்திற்கு ஒன்பதாவது அதிசயம் போல இருந்தது. (எத்தனை காலத்துக்கு தான் எட்டாவது அதிசயம்னே சொல்றது.. அதான் ஒன்பதாவது அதிசயமாக்கியாச்சு)

“ச..சார்” என்று வினோத் திக்கித் திணற, அவன் முன் ஒரு காகிதப்பையை எடுத்து வைத்தான். வினோத் புரியாது விழிக்க, “எடுத்து பாரு மேன்” என்று கூறினான். அதை எடுத்து பிரித்துப் பார்த்த வினோத்தின் விழிகள் வட்டமாய் விரிய, “சார்.. இ..இது?” என்று வியந்தான்.

யஷ்வந்த் இதழில் இன்னும் ஒரு இன்ச் புன்னகை விரிய, “சார் இட்ஸ் ஜஸ்ட் அமேசிங்” என்றவன் கரங்கள் அதனை முழுதாய் பிரித்துப் பார்க்க பரபரத்தது. “பிரிச்சு பாரு வினோத்” என்ற யஷ்வந்த்தின் சொல்லுக்கு காத்திருந்தவன் அவன் இயம்பிய மறுநொடி குழந்தையைக் கையாழுவதைப் போல் அதனைக் கையாண்டு பிரித்தான்.

அதுவோரு புடவை! புடவைக்கா இத்தனை மகிழ்ச்சி என்றால் ஆம்! அந்த புடவை ஒன்றல்ல இரண்டல்ல.. யஷ்வந்தின் நான்கு வருட உழைப்பு. தனது அயராத பனிச்சுமைக்குப் பின் பல இரவுகள் அவன் விழித்திருந்தும், பல உணவு வேளைகளை அவன் துறந்தும் தயாரித்த படைப்பு அது!

'ஆப்டிகல் இல்யூஷன் ஆர்ட்’ எனப்படும் ஒளியியல் மாயைப் படங்கள் வரைவதற்கு அத்தனைக் கடினமான ஒன்று. மற்ற படங்களைப் போல எளிதில் அவற்றை வரைந்திட இயலாது. அப்படியான சவாலான படங்கள் வரைவதற்கே இந்த நிலையென்றால், அவற்றை புடவையில் நெய்வது?

அப்படியான சவாலைத்தான் விரும்பியே செய்து இத்தனை வருட போராட்டத்தில் இன்று வெற்றியும் காண்கின்றான். அதுவும் அவனே தன் சொந்த உழைப்பாலும் கரங்களாலும் கைத்தறியில் நெய்த புடவை அது!

தூரத்திலிருந்து பார்க்க, மலையிலிருந்து வழிந்தோடும் வெள்ளிநதி போல் காட்சியளிப்பது, அருகிருந்து கவனித்தால் பல பெண்கள் வலைந்து நெழிந்து மலையின் மேலிருந்து கீழ்வரை நடனமாடும் தோரணையில் நிற்பது போன்று தெரியும். அப்படத்தையே விரும்பி ஏற்று அதை நெய்து புடவையாய் கொண்டு வந்திருக்கின்றான்.

இதற்கு அவன் எத்தனை போராடினான் என்பதை உடனிருந்தே பார்த்திருந்த வினோத்திற்கு அத்தனை மகிழ்ச்சி. பலமுறை இப்புடவையை உருவாக்க தோல்வியைத் தழுவிய போதும் யஷ்வந்த் அயராது மீண்டும் முயற்சித்ததன் விளைவாய் இன்று அப்புடவை வினோத்தின் கரங்களில்!


Leave a comment


Comments


Related Post