இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -14 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 24-03-2024

Total Views: 29823

'இவனுக்கு நல்லது செஞ்சதுக்கு கூட இப்படி நாயா மேலே விழுந்து கடிக்கிறான்' என மனதுக்குள் மட்டும் தான் நினைக்க முடிந்தது. 

"இனி பேச மாட்டேன் விடுங்க ப்ளீஸ்" என கெஞ்ச, "ம்ம்ம்" என்றவன் கையை அவளது காதில் இருந்து எடுத்த அடுத்த நொடி, யுகியாவது யோகியாவது எதற்கு வந்தோம் என்ற நினைவுக் கூட இல்லாமல் விட்டால் போதும் என ஓடிவிட்டாள். 

எப்போதும் அவன் இருக்கும் போது வீட்டிற்கு வராத நிலா இன்று வந்திருக்கவும் ஏதாவது வேலையாக இருக்குமோ என எண்ணியவன். 

"ஏய் வியா..எதுக்குடி வந்து சொல்லிட்டுப் போ.?" 

அவளுக்கு இவன் குரல் கேட்டாலும் 'நின்றால் பாருடா' என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டாள். 

தந்தை இறந்து மூன்று நாளில்லையே பள்ளி செல்ல தொடங்கிவிட்டனர், இந்த நாட்களில் எழுதாதப் பாடத்தை யுகியின் தலையில் கட்டி விட்டால்,அவன் எழுதிக் கொடுத்துவிடுவான் என தான் அவனைத் தேடிச் சென்றாள். ஆனால் அவனோ மணிமேகலையுடன் புது வீட்டின் சுவர்களுக்கு தண்ணீர் விட சென்றிருக்க ,தன்னுடைய பாடத்தைப் படித்துக் கொண்டு நந்தனிடம் மாட்டிக் கொண்டாள். 

"ஏய் பூனை.. எதுக்கு இப்படி ஓட வர்ற?" என ஓடி வந்தவளைப் பிடித்து நிற்க வைத்தான் யுகி. 

"நீ எங்கடா போன..? உன்னைய தேடி தான் உன் வீட்டுக்குப் போனேன்,அங்கப் போனா உங்க அண்ணன் இருக்காங்க.காதைப் புடிச்சி திறுகி,ஜடையை பிடிச்சி இழுத்துன்னு எப்போ பாரு என்னைய பார்த்தா அவங்க கை அடிக்க பரபரக்கும் போல" என கண் கலங்க சொல்ல, 

அவள் தலையில் செல்லமாக கொட்டியவன். "அவன் அடிச்சா திருப்பி அடிக்க வேண்டியது தானே,என்னைனா மட்டும் அடி வெளுக்குற, அவனைப் பார்த்தா மட்டும் பம்புறது, சரியான கேடி பூனை இது" என்றவன் "எதுக்கு? அங்கேப் போனன்னு சொல்லவே இல்லை." 

"அதுவே மறந்துப் போச்சி போ" என்றாள் செல்ல சிணுங்கலுடன். 

"மூனு நாள் ஸ்கூல் போகாம இருந்தில அப்போ நடத்துன நோட்ஸ்ல எழுதுனியா இன்னைக்கு. இல்ல பிரண்ட்ஸோட சேர்ந்து சும்மாவே அரட்டை அடிச்சிட்டு நேரத்தை ஓட்டிட்டு வந்துட்டியா?"  

"ஹா அத சொல்ல தான் வந்தேன்,எழுதி தாடா நாளைக்கு நோட் சைன் வாங்கணும்"  

"நினைச்சேன் பூனை, இதுக்கு தவிர இந்த பூனை எதுக்கு என்னைய தேடப் போகுதுன்னு" 

"பொய் சொல்லாத..அண்ணாக்கு அப்புறம் எனக்கு எல்லாமே நீதானே பண்ணி தர. அப்புறம் என்னமோ நோட் எழுத மட்டும் தான் தேடற மாதிரி சொல்ற. .வா நோட் தரேன்". 

"உங்க வீட்டுக்கு வந்தா குளிக்கணும்னு ஐயா உயிரை வாங்கும்." 

"எனக்காக குளிக்க மாட்டியா யுகி?". 

"நெஞ்சை நக்குதே இந்தப் பூனை. நீ என்னதான் உருக்கமா பேசுனாலும் வேலைக்கு ஆகாது, போய் நோட்டை எடுத்துட்டு வா. அப்புறம் உங்க அம்மாவை சீக்கிரம் வீட்டை பூச சொல்லு எத்தனை நாளைக்கு அங்க வராம இருக்கறது". 

"அப்போ நீ என்னைய தொடவும் கூடாதுன்னு ஐயா சொல்லுச்சுல நீ கொட்டிட்ட இரு ஆயாகிட்ட சொல்லி வைக்கிறேன்". 

"பூனை இந்த மாதிரி வேலையில பார்த்தா அப்புறம் எழுதி தரவே மாட்டேன். எழுதணுமா?" வேண்டாமா?" 

"எழுதணும், நீ என்னப் பண்றன்னா வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி தண்ணி தொளிச்சிக்கோ, தீட்டு சேராம உனக்கு ஏதாவது ஆகிடப் போகுது".

"ஏய் லூசு அதெல்லாம் பார்த்துக்கலாம் எனக்கு எதுவும் ஆகாது". 

"எனக்கு பயமா இருக்கு சொன்னதை செஞ்சிட்டுப் போவேன்".

"சரி விடு செஞ்சிக்கறேன் போதுமா?, லேசா கொட்டுன என்னையே இந்த பாடுபடுத்தற நந்து உன்னோட காதை பிடிச்சி திருகி இருக்கான் அவனுக்கு மட்டும் தீட்டு இல்லையா..?" 

"அவர் எப்படி போனா எனக்கு என்ன, எனக்கு உன்னோட நலன் மட்டும் தான் முக்கியம்" 

"இதை மட்டும் நந்து கேட்கட்டும் இன்னும் நாலு அடி சேர்த்துக் குடுப்பான்," 

"குடுப்பாங்க குடுப்பாங்க நானும் திருப்பிக் குடுப்பேன்" என்று வேகமாக சொல்லிவிட்டு, 'எங்கு யாராவது கேட்டுவிடுவார்களோ?, ஏன் நந்தனேக் கூட கேட்டுவிட்டால் அவ்வளவு தான், யாரும் இல்லாத நேரம் பார்த்து அடித்து கஷ்டப்படுத்துவானே' என அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தாள். 

யாரும் இல்லை என்றதும் தான் மூச்சே வந்தது. 

யுகியின் புது வீட்டின் பின்புற வாசல் தான் நிலாவின் வீட்டின் முன்புறம் வாசல், இரண்டும் அந்த வீதியின் முடிவில் இருந்தது. 

இந்தக் காலத்தில் தான் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவே வெகு நாட்கள் ஆகிறது, அப்படியே தெரிந்தாலும் ஹாய்,ஹெலோ என்ற வார்த்தைகளுடன் அந்த உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. 

90 காலக்கட்டங்களில் அப்படி இல்லை, தங்கள் வீடுகளில் அதிகம் இருந்ததை விட,சிறியவர்கள் பக்கத்து வீடுகளிலும், வீதிகளிலும், பெரியவர்கள் கோவில்களிலும் டீக் கடைகளிலும் இருந்தது தான் அதிகம் மக்கள் அங்கு தான் கூடி தங்கள் பொழுதுகளை கழிப்பார்கள். ஒரு பஞ்சாயத்து தொலைக்காட்சியில் ஒரு ஊரே கூடி படம் பார்க்கும் சேனல்களை மாற்ற வேண்டிய அவசியமே அங்கு இருந்ததில்லை. .தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என தெரிவதற்கு முன்பு அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது? யார் யார் வருகிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள் அதற்காகவே தெருவிற்கு நாலு ரேடியோ செட்டைப் போல் நாலு கிழவிகள் இருப்பர். 

அதுபோன்று மக்கள் வந்து தங்கி செல்லவும், தங்கள் களைப்பை இளைப்பாறவும், வீட்டின் முன் திண்ணையும், அதன்மீது பானையில் தண்ணீர் இல்லாமல் நீர் மோரோ இருந்து கொண்டே இருக்கும், 

இப்போது இருக்கும் நவீன உலகில் 500 சதுரடி நிலத்தைக் கூட விடாமல் பெட்டி பெட்டியாக வீட்டை கட்டி அடுக்கி விடுகிறார்கள். கிராமப்புறங்களில் ஐந்து அறிவு ஜீவன்களுக்கு கூட பார்த்து பார்த்து கொட்டகைகள் அமைக்கப்படுகின்றன. 

30 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டை நம்பி குழந்தைகளை வேலைக்கு விட்டுவிட்டு, ஊருக்கு, நாடகக் கோவில்களுக்கு கூட சென்று வருகிறார்கள், இப்போது பிள்ளைகளை யாரையும் நம்பி விட்டு அடுத்த தெருவிற்கு கூட செல்ல முடியவில்லை, பாலியல் தொல்லைக் கொடுத்து கொன்று புதைத்துவிடுகின்றனர். எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துக் கொண்டே இருக்கிறதோ அதைவிட வேகமாக பல விஷயங்களில் கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறோம்.  

நிலாவின் வீட்டின் முன்பு திண்ணை இல்லை என்றாலும், நாலுப் பேர் வசதியாக அமரக்கூடிய சலவைக்கல் இருபுறமும் போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து தான் யுகி நிலாவின் விடுபட்ட பாடங்களை எழுதிக்கொண்டிருந்தான். 

வளவனும் அவன் அருகில் அமர்ந்து அவனது பாடத்தை எழுத நிலா இருவரையும் மிரட்டிக் கொண்டிருந்தாள்.

"ஏய் யுகி என்ன கையெழுத்து இது ஒழுங்கா எழுது, இப்படி எழுதுனா இது என்னது இல்லைன்னு சொல்லி அடிப்பாங்க,  அவங்க அடிச்சா  வீட்டுக்கு வந்து திருப்பி உனக்கு கொடுத்துடுவேன் பார்த்துக்கோ, என்னோட ஹேண்ட்ரைட்டிங் எவ்வளவு அழகா இருக்கும் உன்னுது பாரு கோழி கிறுக்குனது போல," என மிரட்டிக் கொண்டிருக்க வீட்டிற்கு தண்ணீர் விட்டுவிட்டு வந்து மணிமேகலை.

"ஹோய் நிலா என்ன? என் பையனை மிரட்டறியா? இரு ஆயா வரட்டும்" என்று விளையாட் டாக ஆரம்பித்தவர் சொல்லி முடிக்கக் கூடயில்லை,  நிலா அழுக ஆரம்பித்து விட்டாள்.

"ஐயோ அத்தை ஆயாக்கிட்ட சொல்லிடாதீங்க, திட்டுவாங்க.அவங்கள மாதிரி காதை பிடிச்சி திறுகுவாங்க,அப்புறம் என் பேரனை மிரட்டற அளவுக்கு வந்திட்டியான்னு அடிப்பாங்க"என்று அழ.

அவள் சொன்ன அவங்க யார் என யுகிக்கும், வளவனுக்கும் புரிந்தது. மணிமேகலை அதையெல்லாம் கவனிக்கவில்லை நிலா அழுகிறாள் என்றதும்.

"ஐயோ அம்முக்குட்டி அத்தை சும்மா சொன்னேன்டா தங்கம் இதுக்குப் போய் அழுவாங்களா?, இங்க வா"  என நிலாவை இழுத்து தன் மடியில் வைத்துக்கொண்டவர்.

"நீ யாரை வேணா மிரட்டு, அத்தையை  கூட மிரட்டு,  மிரட்டுறீயா?," என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டார்.

"அம்மா உங்களுக்கு ஒன்னு தெரியுமா?, பூனை ஒன்னு அழுது மயக்கிடுவா, இல்லையா சிரிச்சி மயக்கிடுவா".என்ற யுகியை முறைத்தாள்.

நந்தனும் கிருஷ்ணம்மாளும் மட்டும்  அந்த இடத்தில் இல்லை என்றால் நிலா தான் அங்கு ராணி.

"ஷாலினி எங்க அத்தை?". வளவன் தான் கேட்டான் அவனுக்கு ஷாலினி என்றால் தனிப் பிரியம்,  அவன் பணத்தில் நிலாவிற்காக என்ன வாங்கினாலும் ஷாலினிகாகவும் ஏதாவது வாங்குவான்.

"அவ டூசன் போயிருக்கா வளவா."

"அம்மா ஷாலு இல்லனா வளவனுக்கு ரொம்ப போர் அடிக்கும் தெரியுமா?, இவன் நம்பகிட்ட பேசறதைவிட ஷாலுக்கிட்ட தான் அதிகம் பேசுவான், எப்போ பாரு ஷாலு ஷாலுன்னுட்டு" என சாதாரணமாக யுகி சொல்லிவிட மணிமேகலையின் புருவங்கள் சுருங்கியது.

அதைப் பார்த்த வளவன் "ஐயோ அப்படிலாம் இல்ல அத்தை, இவன் சும்மா சொல்றான் ஷாலினி ஏதோ கணக்குல டவுட் இருக்குன்னு கேப்பா, நான் சொல்லி தருவேன், அதை இவன் தப்பா புரிஞ்சிகிட்டான்" என அவசரமாக அவன் பக்க விளக்கத்தைக் கொடுக்க, 

"நான் தப்பா நினைக்கல வளவா பிரீயா விடு" என்று சொன்னவர் அதோடு விட்டுவிடுவார் என  வளவன் நினைக்க ,

"சரி வீட்டுக்கு போங்க, நானும் போறேன்" என எழுந்தவர். வளவனை தனியாக அழைத்துச் சென்று,

"வளவா  ஷாலினியை பத்தி உனக்கு முழுசா தெரியும், கொஞ்சம் அவங்க ஆயா கண்ணை கசக்கி அழுது உனக்கு எதிரா ஏதாவது சொன்னா சரின்னு செய்யறவ, அவமேல தேவையில்லாமல் ஆசையை வளர்த்து உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காத. நீ நல்லா படிக்க வேண்டியப் பையன். உங்க அம்மா கஷ்டபடறதை பார்க்கற தானே,"

"அத்தை நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை" என்ற வளவன் கண்கள் கலங்கி விட்டது.

"எதுவும் இருக்கக்கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன் வளவா பார்த்துக்கோ. இதை நான் உனக்காக மட்டும் தான் சொல்றேன்" என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.

அவர் மனம்,   எதுவும் அறியா பையனை கஷ்டப்படுத்துகிறோமே என கவலைப்பட்டது. இப்போதே கண்டித்துவிட்டால் அவன் மனதில் எந்த எண்ணமும் எழாது அதனால் அவன் வாழ்க்கையும் பாதிக்காது என்ற எண்ணத்தில் தான் மணிமேகலை செய்தார்.

ஆனால் அதுவே இருவரையும் நெருங்க வைக்கும் என அவர் யோசிக்கவில்லை.


Leave a comment


Comments 2

  • F Fajeeha Fathima
  • 3 months ago

    சூப்பரா இருக்கு இந்த யூடி மணிமேகலை சொன்னதை கொஞ்சம் கேட்டு இருக்கலாம் டா வளவா

  • பிரியாமெகன் @Writer
  • 2 months ago

    Tq sis

  • பிரியாமெகன் @Writer
  • 2 months ago

    Tq sis

  • M Mathi
  • 3 months ago

    Nice

  • பிரியாமெகன் @Writer
  • 2 months ago

    Tw sis


    Related Post