இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 26-03-2024

Total Views: 24003

மோகன்ராம் குடும்பத்தினர் அபியிடம் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆர்வம் இருந்தாலும் இத்தனை நாள் பகட்டு வாழ்க்கை அந்த சிறிய வீட்டில் இருக்க ஒத்துழைக்க வில்லை நால்வருக்கும்… 

“சரி நீங்க பேசி முடிவு பண்ணி இடம் தேதி எல்லாம் சொல்லுங்க மோகன். நாங்க கிளம்பறோம்.” என்று சொல்லி கழண்டிருந்தனர்.

“அவங்க போன வரைக்கும் நல்லது..‌” வாய் விட்டே சொன்னான் ப்ரதீப்.

சற்று நேரம் எங்கு உடைகள் வாங்கலாம் யார் யாருக்கு வாங்க வேண்டும் என்று பேச்சு நீள “சரி நேரம் ஆகிடுச்சு… நான் டின்னருக்கு ஏற்பாடு பண்றேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு தான் போகனும்.” என்று பார்வதி அன்பாக கட்டளை விதிக்க

“பார்வதி அம்மா ரொம்ப சிரமப் பட வேண்டாம் உங்களுக்கு என்ன செய்வீங்களோ அதையே செய்ங்க போதும்.” என்று மோகன்ராம் சொல்ல

“ஆமா பார்வதி நான் கூட உங்க சமையலை சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு. ப்ரதீப் வயித்துல இருக்கும் போது நீங்க அடிக்கடி மாங்காய் ஊறுகாய் பச்சடி னு பண்ணி உங்க வீட்டுக்காரர் கிட்ட கொடுத்து விடுவீங்க இல்லையா?” என்று பத்மாவதி அந்த நாட்களை நினைவு கூற

“அம்மா அப்படியா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் அபிலாஷா.

“ஆமா அபி உன் மாமியார் நல்லா சமைப்பாங்க.. ப்ரதீப் வயித்துல இருக்கும் போது நானே அடிக்கடி அவங்ககிட்ட சமைச்சு தரச் சொல்லி கேட்பேன். ஆனா அப்பறம் அவங்க நம்ம கம்பெனில வேலை செய்யும் போது வீட்டையும் கவனிச்சுக்கிட்டு எனக்காக எதுக்கு சிரமம் னு விட்டேன்.” என்று பத்மாவதி சொல்ல

“சரி ஒரு அரைமணி நேரம் நான் வந்திடுறேன்.” என்று பார்வதி சொல்ல இம்முறை அக்சயாவோடு வேண்டாம் என்று சொல்லியும் அபிலாஷாவும் உடன் சென்று உதவ அரை மணி நேரத்தில் இட்லி தோசை ப்ரதீபுக்கு பிடித்தபடி காரசாரமாக தக்காளி சட்னி பத்மாவதிக்கு பிடித்தபடி இட்லி சாம்பார் என்று தயார் செய்து கொண்டு வர அனைவரையும் ஒன்றாக கீழே அமர வைத்து பார்வதி பரிமாற அக்சயா வேண்டுமளவுக்கு தோசைகளை சுட்டு கொண்டு வர அனைவரும் சாப்பிட்டு முடிக்க மற்றவர்கள் கை கழுவி வந்த பிறகு கடைசியாக ப்ரதீப் அபிலாஷா செல்ல

“என்ன ப்ரதீப் அம்மா சமையல் எப்படி இருந்தது?” என்று கேட்க

“ம்ம் சூப்பர் அபிஷா.. அபிஷா கொஞ்சம் நில்லேன்.  உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று ப்ரதீப் சொல்ல

“என்ன ப்ரதீ சொல்லு..‌” என்றிட

“ச்ச்” என்று தயங்கி நிற்க “ப்ரதீப்… என்ன சீக்ரெட் அப்படி சொல்லிட போற அபி” சொல்ல

“இல்ல அபிஷா சீக்ரெட் எதுவும் இல்லை… அது நீ இனி உன் வீட்டுக்கு ஐ மீன் அந்த வீட்டுக்கு போற மாதிரி இல்லையா?” என்று ப்ரதீப் கேட்க அபிலாஷா எதுவும் புரியாமல் உறுத்து விழிக்க 

“இல்ல தப்பான இன்டன்ஷன் இல்ல அபிஷா நீ சொல்லு அந்த வீட்டுக்கு நீ போறதா முடிவு இல்லைல?” என்றிட

“ப்ரதீ… எனக்கு என்னைக்கும் அந்த எண்ணம் இல்ல.” என்று உறுதியாக சொல்ல

“இல்ல அபிஷா அப்படினா நீ வேற ஏதாவது நல்ல வீடா கூட பார்க்கலாமே…” என்றிட 

“ஏன் ப்ரதீப் இந்த வீட்டுக்கு என்ன குறை?” என்றாள் அபிலாஷா.

“ஹேய் நான் குறை னு சொல்லலை… ஆனா உனக்கு கம்ஃபர்டா…” என்று ப்ரதீப் சொல்ல வர

“ப்ரதீப்… நீ சொல்ல வரது எனக்கு புரியுது. எனக்கு வசதி குறைச்சலா இருக்குமோ னு நீ ஃபீல் பண்ற… ஆனா இன்னைக்கு இந்த நிமிஷம் நான் போட்டிருக்க ட்ரெஸ் ல இருந்து இருக்கிற வீடு வரைக்கும் அபிநந்தனோட உழைப்பு… எனக்கு அந்த ஒரு சந்தோஷம் போதும்.” என்று சொல்ல

“ஹேய் நீ இப்போ சந்தோஷமா இல்ல னு நான் சொல்லலை அபிஷா.. இப்போதைக்கு இந்த வீடு உனக்கு ஓகே வா இருந்தாலும் பின்னாடி ஏதாவது ட்ரபுள்…” என்று இழுக்க

“ப்ரதீப்… இந்த வீடு உன்னை பொறுத்தவரை என்னை பொறுத்தவரை வெறும் செங்கல் சிமெண்ட் கலந்து கட்டின கட்டிடம்… ஆனா இங்க இருக்கிற பார்வதி அம்மாவுக்கும் நந்தன் அச்சுக்கும் இது அவங்க அப்பாவோட நியாபக சின்னம். 

சின்ன வயசுல கணவனை இழந்த பார்வதி அம்மா இந்த வீட்ல நிறைஞ்சுருக்க அவங்க கணவரோட நினைவுகளோட தன்னோட மீதி வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்க..‌ அதே போல குழந்தைங்களா இருந்த நந்தன் அக்சயா ரெண்டு பேருக்கும் அவங்க அப்பாவோட செலவிட்ட நாட்கள் இன்னும் இந்த வீட்ல நிறைஞ்சு இருக்கு… அதை ஏன் என்னோட சௌகர்யத்துக்காக அதை எல்லாம் இழக்க வைக்க முடியுமா?” என்று அபிலாஷா சொல்ல

“இருந்தாலும்…” என்று இன்னும் தயங்கி நின்றான் ப்ரதீப்.

“என்ன ப்ரதீப் சொல்லு.” என்று அபி ஊக்கிட

“இல்ல அபிஷா இப்போ உனக்கு இது போதும் னு தோணினாலும் இந்த வீடு எப்படி சரி வரும்..” என்று அவன் கேள்வியை பாதியாக கேட்க

“ச்ச் இப்போ என்ன ப்ரதீ… ஒருவேளை நாங்க வேற வீடு மாற தேவை வந்தா அது நந்தன் பார்த்துப்பாரு. அவரோட சக்திக்கு தகுந்த மாதிரி ஒரு வீட்டுக்கு நாங்க ஷிப்ட் ஆகப் போறோம்…” என்று இயல்பாக அபிலாஷா சொல்ல

“ஏய் நீ எவ்வளவு பெரிய ஆளு… உனக்கு அந்த வீட்டுக்கு போக முடியாட்டியும் அதே போல.. ஏன் அதை விட பெருசா ஒரு வில்லா வாங்க முடியும்.” அபிஷா என்று ப்ரதீப் சொல்ல

“ம்ஹூம்..‌ நானும் அதைத்தான் சொல்றேன் ப்ரதீப்… எனக்கு இனி எந்த தேவை இருந்தாலும் கண்டிப்பா நந்தன் அதை நிவர்த்தி பண்ணி வைப்பாரு. நந்தனுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் கொஞ்சம் அதிகம். எனக்கு அவர்கிட்ட பிடிச்சதே அதான்… என்கிட்ட பணம் இருக்கு வசதி இருக்கு னு காட்டிக்க அவரோட செல்ஃப் ரெஸ்பெக்டை நான் என்னைக்கும் காயப் படுத்த மாட்டேன்.

இனி என்னோட தேவை ஒவ்வொன்னும் அவரோட சம்பாத்தியத்துக்குள்ள அடங்கிடும்… நான் நல்லா இருக்கேன் சந்தோஷமா இருக்கேன் ப்ரதீப்… ஒரு ஃப்ரண்டா வெல் விஷ்ஷரா அண்ணனா உன்னோட கவலை எனக்கு புரியுது… ஆனா நான் இங்கே நல்லா சந்தோஷமா இருக்கேன் அதை நீ புரிஞ்சுக்கோ சரியா… சரி எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க நீ வா” என்று அழைத்து சென்றாள் அபிலாஷா.

“சரி பார்வதி நாங்க கிளம்பறோம்.” என்று பத்மாவதி மோகன்ராம் விடை பெற ப்ரதீப் அபிலாஷா அபிநந்தனிடம் சொல்லி விட்டு தன்னிச்சையாக அக்சயாவை பார்த்தவன் மேலும் கீழும் ஏற இறங்க ஒரு முறை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான்.

இவர்கள் செல்ல இவர்களை பற்றிய பேச்சில் சில நிமிடங்கள் கரைய உறக்கம் வருவதாக பார்வதி படுக்கையை விரிக்க நந்தனும் லாஷாவும் அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தனர்.

அமர்ந்த படியே அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அபிலாஷா புரட்டி கொண்டு இருக்க அவளின் கை மீது தன் கையை வைத்தான் அபிநந்தன்.

சட்டென்று இன்ப அதிர்ச்சி கொண்ட அபிலாஷா விழிகளை விரிக்க

“ரொம்ப தேங்க்ஸ் லாஷா” என்று சொல்ல புரியாமல்

“எதுக்கு நந்தன்…திடீர்னு?”

“ஏற்கனவே சொல்லி இருக்க..‌ தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் னு… ஆனாலும் ஒரு சாரியும் சொல்லிக்கிறேன்.” என்று நாக்கை கடித்து கொண்டு சொல்ல

“என்னாச்சு நந்தன் திடீர்னு தேங்க்ஸ் சாரி னு..” என்றிட

“அது வந்து ப்ரதீப்பும் நீயும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்.” என்று சொல்ல

“யூ மீன்…” (ஒட்டுக் கேட்டியா) என்ற அர்த்தத்தை பார்வையில் பொதித்து கேட்க

“இல்ல லாஷா ஒட்டுக் கேட்கலை ப்ரதீப்பையும் உன்னையும் காணோம் கிளம்ப நேரம் ஆச்சு னு மோகன் சார் சொன்னாரு. அதான் கூப்பிட வந்தேன். நான் முழுசா எல்லாம் கேட்கல… ஆனா கடைசியா ப்ரதீப் உன் ஸ்ட்டேட்டஸ் க்கு தகுந்த மாதிரி வில்லா வாங்கு னு சொன்னப்போ நீ என்னோட சம்பாத்தியத்துக்கு தகுந்த மாதிரி உன் தேவைகளை ஏற்படுத்திப்பேன் னு சொன்னல்ல… எனக்கு அவ்வளவு பெருமையா இருந்தது லாஷா..‌ ரொம்ப தேங்க்ஸ்.” என்று சொல்லி முடிக்க

இறுதி வரியை சொல்லும் போது செல்லமாக முறைத்தாள் அபிலாஷா.

“நான் ஒன்னும் இல்லாத எதையும் பேசலை நந்து… எதுக்கு இத்தனை தேங்க்ஸ்… சொல்லப்போனா நான் ப்ரதீப்கிட்ட சொன்னதை விட இன்னும் இன்னும் அதிகமா தான் நீங்க என்னை பாத்துக்கிறீங்க…” என்று சொல்ல

“சரி தூங்கலாமா லாஷா… கொஞ்சம் டயர்டா இருக்கு.” என்று அபிநந்தன் சொல்ல

“ம்ம் சரி…” என்ற அபிலாஷா புத்தகத்தை வைத்து விட்டு விளக்கை அணைத்து விட்டு அருகில் படுத்த அபிலாஷா “நந்து…” என்று ஆசையாக அழைத்திட நந்தனுக்கு ஏதோ செய்தது உள்ளுக்குள்.

“எ… என்ன லாஷா?” திக்கி திணறி கேட்க

“அது… இப்போ கொஞ்சம் முன்ன என் கை பிடிச்சிட்டு இருந்தீங்க ல்ல அதே போல இப்போவும் பிடிச்சுப்பீங்களா?” என்று கண்ணில் ஆசை தேங்க கேட்க சிறு புன்னகை முகத்தில் தவழ அழுத்தமாக இறுக்கமாக பிடித்துக் கொண்டான் அவளின் தளிர் விரல்களை…

அத்தோடு நில்லாமல் அவள் கையை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள உடல் சிலிர்த்து போனாள் பெண்ணவள்.

எதுவும் பேசவில்லை.. பேசவும் தேவை இருக்கவில்லை… ஆடவன் முகத்தை கண்ணில் நிறைத்துக் கொண்டு பூரண நிம்மதியோடு கண்களை மூடினாள் அபிலாஷா.

அவள் உறங்கியும் இரண்டு நிமிடங்கள் முழுதாக அபிலாஷா முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த நந்தன் தன் கையோடு பிணைத்திருந்த அவளின் கரத்தில் மென்மையாக அவள் அறியாமல் முத்தத்தை பதித்த அபிநந்தன் இன்னும் இறுக்கமாக அவள் கையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உறங்கி இருந்தான் அபிநந்தன்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post