இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -16 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 28-03-2024

Total Views: 29798

"பாரு நந்து, அவன் எப்டிலாம் பேசறான் நான் என்ன இல்லாததையா சொல்றேன், ஊருக்குள்ள அந்த ராஜியையும், உன் அப்பனையும் சேர்த்து வெச்சி எவ்வளவு கேவலமா பேசறாங்க?,இதெல்லாம் கேட்டுட்டு நான் இன்னும் உசுரோட இருக்கறதே பெருசு. என்ன பேசினாலும் அந்த ---------- போனவ இவனை விட்டு தொலைய மாட்டிக்கிறாளே, என்ன வசதி இருந்தும் என்னதுக்கு ஆகுது? ஊருக்குள்ள மானம் மறுவாதில போய்டுச்சே," என்று மூக்கை சிந்திக்கொண்டே ஒப்பாரி வைப்பது போல் பேசுகிறான். 

"ஐயா கொஞ்ச நேரம் கம்முனு இருக்கியா?, அந்த ராஜி அப்பா இருக்கறப்ப வீட்டுக்கு வரதையே நிறுத்திடுச்சி, இந்த ஆளு செத்ததுக்கு தான் அப்பா எதோ காசுக் குடுத்து ஹெல்ப் பண்ணாரு. அவங்களை போய் தப்பா பேசிட்டு இருக்க." 

"உனக்கு ஒன்னும் தெரியாதுடா நீ சின்ன பையன்,தப்பு பண்றவீங்க எல்லோரும் பார்க்கவா பண்ணுவாங்க, அவ கேட்டது எதுக்கு காசைக் கொண்டுப் போய் கொட்டனும் சொல்லு.அவ உன்ற அப்பனை மயக்கி வெச்சிருக்காடா நந்து". என்றதும் 

"ச்சை அங்க தான் நிம்மதியா படிக்க முடியலைன்னு இங்க வந்தா, நீயும் பேசி என் உயிரை வாங்காத. கம்முன்னு இருக்கியா இல்ல எழுந்து போகட்டுமா?" என்றவனுக்கு கிருஷ்ணம்மாளின் புலம்பலைக் கேட்டு அழுது போய் விட்டது. 

வயது பையனிடம் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்ற இங்கிதமோ அறிவோ சிறிதுக் கூட இல்லை கிருஷ்ணம்மாளுக்கு. 

நந்தனிற்கும் தன் அப்பாவின் மீது சந்தேகம் இல்லை. ஊர் கிழவிகள் ஒன்று கூடி ஒரு குடும்பத்தைக் கெடுக்க நினைக்கிறது என புரிந்து கொள்ள முடியாத வயதில் நந்தனில்லை. 16 வயது முடியும் தருவாயில் இருப்பவனுக்கு இதுக்கூடவா புரியாது. 

கிருஷ்ணம்மாளின் புலம்பல் தாங்க முடியாமல் நந்தன் வீட்டிற்கே திரும்பி சென்று விட்டான். 

"அம்மா நாளைக்கு ஆத்துக்கு போய் திதி குடுக்கணுமே ஐயர் எப்ப வருவாங்க.?"என்று வளவன் ராஜியிடம் கேட்டுக்கொண்டிருந்தான். 

"காலையில நேரமா வந்துடுவாரு வளவா." 

"நீங்களும் வரீங்க தானே" 

"அவ எதுக்குடா?, நம்ப போய்ட்டு வந்தா பத்தாதா" என வளவனின் அத்தை ஜானகி கேக்க. 

அவரை முறைத்துப் பார்த்தவன்,எதுவும் பேசாமல் எழுந்துப் போகப் போக.தான் வாங்கிய துணிகளுடன் உள்ளே வந்தார் மணிமேகலை. 

"அத்தை." 

"வள்ளு இந்தா இதுல புது டிரஸ் இருக்கு, நாளைக்கு திதிக் குடுத்ததும் மூனுப் பேரும் போட்டுக்கோங்க"என்றார். 

"வேணாத்த, ஐயா சத்தம் போடுவாங்க" என வளவன் மறுக்க 

"ஆமா இதெல்லாம் நீங்க எதுக்கு வாங்கிக் குடுக்கறீங்க?.நீங்க என்ன ஓட்ட ஒரவா?" என ஜானகி விஷ வார்த்தைகளை வீசினார். 

"அண்ணி என்ன இப்படி பேசறீங்க? அவங்க தான்", என ஏதோ சொல்ல வருவதற்குள் அவரை கை நீட்டி தடுத்த மணிமேகலை.

“நீங்க சொல்ற மாதிரி நாங்க ஓட்டும் இல்லதான் உறவும் இல்லதான், ஆனா உறவா இருந்தும் நீங்க செய்ய வேண்டியதை செய்யாததால, ஓட்டு உறவு இல்லாத நாங்க செய்ய வேண்டியதா இருக்கே என்னப் பண்றது சொல்லுங்க.16 நாள் வீட்டுல அடுப்பைப் பத்த வைக்கக்கூடாதுன்னு தெரிஞ்சும் என்ன பண்றீங்க நான் சோறுக் கொண்டு வரவா வேண்டாமா, ஏதாவது தேவை இருக்கான்னு ஒரு போன் போட்டு இருக்காங்க. நீங்களா உறவா இருந்தா மட்டும் என்னத்தை செஞ்சி கிழிச்சிங்க?. தலையில வெச்சிருப்பாரு, பெருசா பேச வந்துட்டா ஓட்ட ஒரவான்னு கேட்டுட்டு" என்றவர். 

"ராஜி இந்தா துணி. நாளைக்கு நாங்க தான் சாப்பாட்டு செலவுன்னு தெரியும்ல, மறந்து இருந்தா நியாபகம் படுத்திட்டு இதை குடுத்துட்டு போலாம்னு தான் வந்தேன்.அப்புறம் ஜானகி தானே உன் பேரு. ஹா நீ வேற ரொம்ப ரோசமானவ ஓட்டு உறவு இல்லாத வீட்டுல பச்ச தண்ணிக் கூட குடிக்க மாட்ட, நாளைக்கு முழுக்க சாப்பிடாம எப்படி இருப்பன்னு நினைச்சா தான். கவலையா இருக்கு. அப்போ வரேன் ராஜி பார்த்து இரு சரியா?" என கிளம்பிவிட்டார். 

"அண்ணி அவங்க மனசுல எதுவும் வெச்சிக்க மாட்டாங்க நீங்க தப்பா நினைக்காதீங்க. வாங்க சாப்பிடலாம்"என முடிந்த வரை பிரச்சனையை முடித்து பார்த்தார் ராஜி. 

"என்ன நீ அவ இவ்வளவு பேசிட்டுப் போறா, எதுவும் பேசாம என்னை சாதாரணமா சாப்பிட கூப்பிடற,இதுதான் நீ மரியாதை குடுக்கற லட்சணமா..? கண்டவளை பேச விட்டு வேடிக்கை பார்க்கற அளவுக்கு நான் கேவலமா போய்ட்டனா?" என வராதக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அழ. வந்த சொந்தப் பந்தங்கள் கூடிவிட்டனர். 

"என்னடா இது புது பிரச்சனையா இருக்கு நாளைக்கு பதினாறு நடக்குமா நடக்காதா தெரியலையே" என ராஜி தலையில் கைவைத்து நின்றுவிட. 

ஒரு சிலர் ராஜிக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் ஜானகிக்கு ஆதரவாகவும் பேசினார். 

"அவங்க பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் அண்ணி தயவு செஞ்சு இந்த விஷயத்தைப் பெருசாக்காதிங்க" என கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்ட பிறகு தான் விட்டார் ஜானகி. 

இரவு சாப்பிட நந்தன் வீட்டில் அனைவரும் கீழே அமர்ந்து இருக்க. அனைவருக்கும் பரிமாறினார் மணிமேகலை. 

"மணி" 

"சொல்லுங்க" 

"ராஜி வீட்டுக்கு துணி எடுத்து குடுத்துட்டியா?" 

"ம்ம் கொடுத்துட்டேங்க." 

"எவ்வளவு ஆச்சி?" 

"அது நம்ப பசங்களுக்கு ஷாக் இன்னர்ஸ் எல்லாம் வாங்குனோம் எல்லாம் சேர்த்து 5 ஆயிரம் வந்துடுச்சிங்க" என மெதுவாக சொல்ல. 

"ஐயோ! ஐயோ! ஐயோ! யார் வீட்டுப் பணத்தை யாருக்கு அழறது? . அவளுக்கு துணி எடுத்து குடுக்கலைன்னா குடியா முழுகிப் போய்டும்?, நம்ப தரம் என்ன? தகுதி என்ன..?இப்படி கண்டுவளுக்கு செலவு பண்ணிட்டு திரியறானே,அவன் சொன்னானாம் இவ வாங்கிட்டு வந்தாளா நல்லக் கூத்தா இருக்கே.. கூடப் பொறந்தவ. மக சம்மஞ்சி உக்கார்ந்து இருக்கா, ஒரு பவுன் நகை சேர்த்து செய்ய முடியாம அப்புறம் பன்றேன்னு சொல்லிட்டு வந்தவன் கண்டவளுக்கு கணக்கு வழக்கு இல்லாம பணத்தை வாரி ஏறிக்கிறானே இந்த கூத்தை நான் எங்கப் போய் சொல்ல " என கிருஷ்ணம்மாள் வீடு அதிர ஒப்பாரி வைத்துவிட்டார்.

"அம்மா வாயை மூடுறியா? இல்லையா? இப்போ என்ன உனக்கு?,  என்னோட பரிட்சைக்கு கட்ட பணம் இல்லாமல் நின்னப்ப அவதானே ரெண்டாயிரம் குடுத்தா, அதைக் கூட நீ ஐஞ்சு வருஷம் கழிச்சி குடுத்தியே  நியாபகமில்லாம போய்டுச்சா?, அவகிட்ட பணம் கேக்கும் போது அப்போ உன் தகுதி தராதாரம் தெரியலையா?,இவ்வளவு நாள் பழகுனதுக்கு ஒரு அண்ணனா செய்ய  வேண்டியதை செய்யறேன்,குறுக்க விழுந்து கத்திட்டு இருந்தா அம்மான்னு கூடப் பார்க்க மாட்டேன்,  ஜாக்கிரதை," என கத்தி மார்த்தாண்டம் சாப்பிடாமல் கூட எழுந்து சென்று விட்டார்.

யார் சாப்பிட்டால் என்ன சாப்பிடலைன்னா என்ன என்று நந்தன் தட்டில் இருந்த உணவை உண்டு முடித்தவன்,எப்படியோ கத்திட்டு சாவுங்க என்பது போல்  வெளியே சென்று படுத்துவிட்டான்.

கிருஷ்ணம்மாள் பேசியே அனைவரையும் ஒரு வழியாக்கி விட்டு தன் கணவருக்கு உணவு எடுத்துக்கொண்டு புது வீட்டிற்கு சென்று விட்டார்.

"அம்மா"

'சொல்லு யுகி."

"இந்த ஆயா திருந்தவே திருந்தாதா..ஏன்மா இப்படி இருக்கு?" 

"பெரியவீங்கள அப்படி மரியாதை இல்லாம பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்."

"இதை சொன்ன நீங்க தான், மரியாதை கொடுத்தவீங்களுக்கு தான் மரியாதை கொடுக்க முடியும்னு சொல்லிக் குடுத்துருக்கீங்க. அவங்க பேசற வார்த்தை எல்லாம் பெரியவீங்க பேசற மாதிரியா இருக்கு.எங்ககிட்டையே அப்பாவையும் ராஜி அத்தையும் பத்தி தப்பு தப்பா பேசறாங்க"

"வயசானா அப்படி தான் இருப்பாங்க, நீ அவங்க பேசுனதுலாம் மண்டையில ஏத்திட்டு இருக்காம போய் படு நாளைக்கு ஸ்கூல் போகணும்."

"அம்மா நாளைக்கு ஸ்கூல் போகணுமா?"

"பின்ன வெட்டியா எத்தனை நாள் லீவ் போடலாம்ன்னு இருக்க?, அங்க காலையில்லையே பூஜை முடிஞ்சிடும் பார்த்துட்டு கெளம்பற வழியப் பாரு யுகி சும்மா லீவ் போட்டா எக்ஸாம் எழுத டேட் பத்தாம போய்டும்."

"நான் என்ன டெண்த்தா?  நைன்த்து தானேம்மா. அதெல்லாம் எழுத விடுவாங்க."

"ரொம்ப வாய் பேசுனா நானே எழுத விடாதீங்கன்னு ஸ்கூல்ல வந்து கம்பளைண்ட் பண்ணிட்டு வந்துடுவேன், பார்த்துக்கோ. ஒழுங்கா  ஸ்கூல் போற வழியைப் பாரு" என்றவர் பாயை விரித்து ஷாலினியின் அருகில் படுத்துக் கொண்டார்.

'பூனையோடு நாளை ஒருநாள் ஜாலியாக இருக்கலாம்' என ஆசையாக இருந்தவனின் ஜோலியை முடித்துவிட்டார் மணி.

அதிகாலை வேளை.  நுனிப்புல்லின் மேல் நுரையாக படர்ந்து இருந்த  பனி சூரியனின் வருகையால் தற்கொலை செய்துகொள்ள அழகாக விடிந்தது அந்த காலைப்பொழுது.

அனைவரும் ஆற்றில் திதிக் கொடுத்துவிட்டு அப்போது தான் வீடு திரும்பி இருந்தனர்.

"யுகி இங்க வாயே.."

"என்ன பூனை.?"

"இங்கபாரு இந்த புல்லு மேலைலா ஒரே நொரையா இருக்கு நீதானே பல்லை விலக்கிட்டு எச்சித்துப்புன்ன,"
புல்லின் மேல் படர்ந்து இருந்த பனியை எச்சில் என தவறாக புரிந்துக் கொண்டாள் நிலா.

"ஆமா எனக்கு இதுதான் வேலைப் பாரு. நான் பாத்ரூம்ல தான் பிரஸ் பண்ணுவேன்னு உனக்கு தெரியாதா.?"

"இல்லை நீதான் துப்பிருப்ப.. லூசு பையன் ஆடு மேயற இடத்துல துப்பிருக்க" என கால் கட்டை விரலை நிலத்தில் ஊன்றி யுகியின் காதை பிடித்து திறுகினாள்.

நந்தனை அடிக்க கொல்லை ஆசை. அவன் காதை பிடித்து திறுக வேண்டும்,முதுகில் மொத்த வேண்டும், என வித விதமாக ஆசை தான்,ஆனால் அதை அவனிடம் நிறைவேற்ற முடியாதே.

அதற்கு பலியாடு தான் யுகி. அவன் பூனை என்ன செய்தாலும் ரசிப்பான், அவளுக்கு அடிக்க வேண்டுமா? அடி திட்ட வேண்டுமா? திட்டு, என்ன செய்ய ஆசைப்படுறியோ? என்கிட்ட பண்ணு' என்பது போல் அமைதியாக நிற்பான்.

அதனால நந்தனை என்ன செய்ய வேண்டும் என நினைத்த அனைத்தையும்,யுகியை தான் பண்ணுவாள். நந்தன் எப்படி காரணமே இல்லாமல் கூப்பிட்டு வைத்து அடிக்கிறானோ அதேபோல் அவளும் யுகியை காரணமே இல்லாமல் அடிப்பாள்.

"இப்போ என்ன உனக்கு? இந்த எச்சியை நான் தான் துப்பிருப்பேன் அதானே"

"ஆமா"

"அடிக்கணும்"

"ஆமா"

"சரி அடி"

"வலிக்கலையா?"

"பூ அடிச்சி மரம் சாயுமா?"

"என்ன கவிதையா? நல்லாவே இல்ல". என்றவள், எட்டி எட்டி அவன் தலையில் கொட்டிவிட்டு சிரித்துக்கொண்டே ஓட  ஏனோ அதைப் பார்க்க பார்க்க சந்தோசமாக இருந்தது யுகிக்கு.

அவன் பூனையின் சந்தோசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஜீவன்.

காலையில் திதிக் குடுக்கச் சென்று விட்டனர், மதியம் வீட்டில் ஒரு ஹோமம் நடத்தி விருந்து போட,  நிலாவும் வளவனும் நந்தன் வீட்டு சாப்பாடு என்றதும் விருப்பம் இல்லாமல் சாப்பிட்டு முடித்தனர்.

மார்த்தாண்டத்தின் தங்கை செல்வராணி ராமனின் இறப்புக்கு மட்டும் வந்துவிட்டுப் போனார்.போகும் போது எல்லா நாத்தனார்களைப் போல அண்ணியை தாயிடம் குறைக் கூறாமல் ராஜியைப் பற்றி குறை கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

"என்னம்மா இனி உனக்கு நிம்மதியே இல்லப் போல, ஊரே அவன் செத்ததைவிட இவ  யாரை புருஷனாக்கிக்கப் போறான்னு தான் பேசுது. பார்த்து இருந்துக்கோ இல்லனா உனக்கே மருமகளா வந்தாலும்  சொல்றதுக்கு இல்ல "

"ஏன் செல்வா நீ வேற பீதியை கிளப்பற?"

"சொல்லுவாம்மா சொல்லுவா உனக்கு நல்லது சொன்னேன் பாரு, என்னய சொல்லணும் ஒழுங்கா அவளை இந்தப் பக்கம் விடறதை நிறுத்து எல்லாம் தானா நிக்கும்"  என்று பாம்பிற்கு மகுடி ஊதிவிட்டு சென்றிருந்தார்.

பதினாறுக்கு ராஜி அழைத்தும் தன் அண்ணன் தான்  விருந்து போடுகிறான் என தெரிந்ததும் வராமல் இருந்துக் கொண்டார்.

கிருஷ்ணம்மாள் மூலம் அவர்களுக்கு உடை எடுத்துக் கொடுத்த விஷயம்  வந்து சேர்ந்திருந்தது, 'தன் மகள்களுக்கு  ஒரு பவுன் சீர் சேர்த்து செய்ய முடியல, யாரோ ஒருத்தி குடும்பத்துக்கு டிரஸ் எடுத்துக் குடுக்கறானா உன் மகன்,  இந்த அளவுக்கு செய்யறானா ஊரு சொல்றது நிசம் தான் போல எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியுது" என தாயிடம் ஆடித் தீர்த்திருந்தார்.

யார் வந்தாலும் வராமல் போனாலும் தனக்கு கவலையில்லை என நடந்ததை சிறப்பாகவே செய்து விட்டார் ராஜி,

அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நாள் அழகாகவே முடிந்தது.

இனி ராஜி வேலைக்கு போகலாம் என்பதால் அடுத்த நாளில் இருந்தே தன் வேலைக்குச் சென்று விட்டார்.

வளவனும் பள்ளி முடித்து பகுதிநேர வேலையாக உணவகத்தில் வேலை செய்துவிட்டு இரவு பத்து மணிக்கு தான் வீட்டிற்கு வருவான்.

நிலா பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வருபவள். தனக்கு தெரிந்ததுப் போல் சின்ன சின்ன சமையலை செய்து வைத்து வீட்டில் இருக்கும் மற்ற வேலையை செய்து முடிப்பவள் பாடத்தை யுகியுடன் சேர்ந்து படிக்கத் தொடங்கிவிடுவாள்


Leave a comment


Comments


Related Post