இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 31-03-2024

Total Views: 24607

காலை எழுந்த அபிலாஷா குளித்து விட்டு வந்ததில் இருந்து ஐந்தாறு தும்மல் போட்டுக் கொண்டே இருந்தாள்… அதை கவனித்த பார்வதி

“ம்கூம் தினமும் தலைக்கு குளிச்சிட்டு தலையை காய வை னு சொன்னா கேட்குறியா? இப்போ பாரு எவ்வளவு தும்மல்…” என்று கடிந்து கொண்டே வெளியே அழைத்து வந்து தலையில் இருந்த துண்டை அவிழ்த்து துவட்டி விட்டார் பார்வதி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மா… விடுங்க இன்னைக்கு கோபாலன் சாரை பார்த்திட்டு நந்தன் ஆஃபிஸ் போகனும் லேட் ஆகிடும்..” என்று அவள் சொல்ல நன்றாக தலையை உலர்த்தி விட்டே அவளை விட்டார் பார்வதி.

“லாஷா கிளம்பிட்டியா?” என்று வந்து நின்றான் அபிநந்தன். 

“ஆ… இதோ நந்தன் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்.” என்று உடை மாற்றி வர பார்வதி சாப்பிட எடுத்து வைத்தார்.

வக்கீல் கோபாலன் கூட மோகன்ராம் மனநிலையில் தான் இருந்தார். எப்படி இருந்தால் என்ன அபிலாஷா இனி வாழப்போகும் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும். நல்ல குடும்பம் அவளுக்கு அமைய வேண்டும். அதுவே அவரின் விருப்பம் கூட…

வந்தவர்களை வரவேற்று அபிலாஷாவின் தந்தை எழுதி வைத்த உயிலில் உள்ள அனைத்தையும் படித்துக் காட்டிய கோபாலன் “அபி… இனி உன் சொத்துல உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை… ஐ மீன் உன் கணவருக்கு கூட அந்த உரிமை இல்லை அபி… ஒரு வேளை உனக்கு சொத்துக்கள் வேண்டாம் னு நீ முடிவு பண்ணினா அதெல்லாம் நேரடியா உங்க அம்மா பெயர்ல அப்பா ஆரம்பிச்ச ஆசிரமத்துக்கு போய் சேர்ந்திடும்.” 

கோபாலன் சொல்லி முடிக்க அபிநந்தன் முகத்தில் எந்த சலனமும் இல்லை… அபியும் அப்படி தான் அமர்ந்திருந்தாள்.

“அபி… இனி உன் முடிவு தான்…” என்று அவளிடம் பொறுப்பை ஒப்படைக்க

“அங்கிள் எனக்கும் சரி நந்தனுக்கும் சரி சொத்து பணம் னு எது மேலயும் ஆசை இல்ல… ஆனா நான் என் கம்பெனியை நம்பி இருக்கிற வொர்க்கர்ஸ் அவங்க எனக்காகவும் கம்பெனிக்காகவும் நிறையவே பாடுபட்டிருக்காங்க..” என்று கூறியவள் நந்தனை நிமிர்ந்து பார்த்தாள் அபிலாஷா.

“நந்தன்.. நான் அந்த கம்பெனி பொறுப்புகளை ஏற்று நடத்தினா உங்களுக்கு ஏதாவது அப்சக்ஷன் இருக்கா?” என்று கேட்க

“எனக்கு எதுக்கு லாஷா இதுல அப்செக்ஷன்… உன்னோட வேலைகள்லயோ இல்ல முடிவுலயோ எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்.” என்று நந்தன் சொல்ல

“சரி அங்கிள்… கம்பெனி ப்ராஃபிட் ஷேர்ஸ் பத்தி எல்லாம் நான் அப்பறம் உங்களுக்கு சொல்றேன்…  ஆனா, என்னால முன்ன மாதிரி தினமும் வந்து ஆஃபிஸ் கவனிச்சுக்க முடியாது. அதுக்கு மட்டும் இப்போ ஏற்பாடு பண்ணனும்..” என்று சொல்ல

“லாஷா… ஏன் நீ தினமும் ஆஃபிஸ் போகலாமே… என்ன ப்ராப்ளம் வந்திட போகுது?” அபிநந்தன் கேட்க

“நோ! நந்தன்… எனக்கு நம்ம வீட்ல அம்மா அச்சு உங்க கூட எல்லாம் அதிக டைம் ஸ்பெண்ட் பண்ணனும் னு தோணுது… பழைய படி தினமும் ஆஃபிஸ் மீட்டிங் னு ஒரு எந்திர வாழ்க்கைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்க நினைக்கிறேன்.” என்று அபிலாஷா சொல்ல அபிநந்தன் மோகன்ராம் கோபாலன் மூவருக்குமே அது நியாயமாக பட்டது.

“சரி அப்போ நாங்க கிளம்பறோம்…” என்று அபிநந்தன் விடை பெற

“நான் ட்ராப் பண்ணட்டுமா ம்மா அபி” மோகன்ராம் கேட்க 

“இல்ல அங்கிள்… நாங்க பைக்லயே கிளம்பறோம்…” என்று விடை பெற்று வர

“லாஷா… எங்கயாவது வெளியே போகலாமா?” என்று நந்தன் ஆசையாக கேட்க மறுக்க தோன்றவில்லை அவளுக்கு… 

“நம்ம வீட்டுக்கு போற வழில ஒரு கோவில் இருக்கே அங்க போகலாம் நந்தன்…” என்று சொல்லி ஏறி அமர கோவிலுக்கு சென்று வண்டியை நிறுத்தியவன் வாசலில் அர்ச்சனை கூடையோடு மூன்று முழம் மல்லிப்பூ வாங்கி அபிலாஷா கையில் தந்தான் அபிநந்தன்.

அவனை பார்த்துக் கொண்டே ஆசையாக சூடிக் கொண்டாள் பூவினை பூவையவள்.

உள்ளே சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு வந்தவர்கள் “சரி, உனக்கு வேற எங்கேயும் போகனும் னு தோணுதா லாஷா?” என்று கேட்க

“இல்ல நந்தன் கொஞ்சம் டயர்டா இருக்கு. வீட்டுக்கு போகலாம்.” என்று அபிலாஷா சொல்ல சரி வண்டியை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தினான் அபிநந்தன்.

“ஆமா.. இன்னைக்கு கொஞ்சம் டல்லா தான் தெரியுற…” என்று பேசியபடி வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினான் அபிநந்தன்.

“என்னப்பா போன வேலை எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதா?” என்று இருவருக்கும் தண்ணீர் கொடுத்தபடியே பார்வதி கேட்க

“ம்ம் பேசிட்டோம் அம்மா…” என்று அபிநந்தன் அங்கு பேசியதை கூற

“ஏன் அபி! நந்தா சொன்ன மாதிரி நீ தினமும் ஆஃபிஸ் போய்ட்டு வரலாமே… நான் எதாவது சொல்லுவேன் ன்னு நினைச்சியா ம்மா?” பார்வதி கேட்க

“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல மா… எனக்கு உங்க கூட அதிக நேரம் ஸ்பெண்ட் பண்ண தோணுச்சு. ஏதாவது வேலை இருந்தா போய் பார்த்துக்க போறேன்…” என்று சொல்ல

“சரி வாங்க சாப்பிடலாம்.” என்று பார்வதி அழைக்க

“எனக்கு பசியே இல்ல ம்மா… எனக்கு வேண்டாம்.” என்று அபிலாஷா மறுக்க

“ஏன் மா.. என்னாச்சு காலையில இருந்து நீ அசதியாவே இருக்க எதுவும் முடியலையா அபி?” அக்கறையாக கழுத்து நெற்றி என தொட்டு பார்த்து பார்வதி கேட்க ஏனோ அவர் முகத்தில் தன் தாய் முகம் தெரிய அபியின் கண்கள் கலங்கியது.

“என்னாச்சு அபி ஏன் கண்ணு கலங்குது? பார்வதி கேட்க என்னாச்சு லாஷா?” நந்தனும் வர

“ஒன்னும் இல்ல அம்மா.. ஒன்னும் இல்ல நந்தன்.. அது லேசா தலை வலி… அதான்” என்றிட

“ம்ஹூம் பாரு இதுக்கு தான் தலையை நல்லா உலர்த்துனு சொன்னேன்… நீர் கோர்த்திருக்கும்.” பார்வதி சொல்ல

“இல்லம்மா… அது வந்து எனக்கு சின்ன வயசுல இருந்தே கோல்ட் வாட்டர் ல குளிச்சு பழக்கம் இல்ல… அதான் ஒத்துக்கல போல” என்று தயக்கமாக கூறியவள் “அம்மா நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வரட்டுமா?” என்று கேட்க

“ம்ம் போம்மா.. நான் தைலம் எடுத்துட்டு வரேன்…” என்று நெற்றியில் இருபக்கமும் மற்றும் கை முட்டி கழுத்து என்று தைலத்தை குழந்தைக்கு தேய்ப்பது போல தேய்த்து விட்டார் பார்வதி.

அப்படியே லாஷா உறங்கி போக அபிநந்தனுக்கு ஃபோனில் ஏதோ அழைப்பு வர “நான் ஆஃபிஸ் விஷயமா வெளியே போய்ட்டு வரேன் ம்மா” என்று கிளம்பி இருந்தான் அபிநந்தன்.

மாலை ஆகியும் அபிலாஷா எழவில்லை… அக்சயா கல்லூரியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அண்ணியோடு பகிர வந்தவள் அவள் சோர்ந்து போய் உறங்க கண்டு 

“அண்ணி… என்னாச்சு உங்களுக்கு?” என்று கேட்க அசையவே இல்லை அபிலாஷா. 

ஓடிச் சென்று தாயிடம் கூற “அவளுக்கு பச்ச தண்ணில குளிச்சது உடம்புக்கு ஒத்துக்கலை அச்சு… என்கிட்ட சொல்லிருந்தா வெந்நீர் போட்டு கொடுத்திருப்பேன். சாப்பிட கூப்பிட்டா வேண்டாம் னு சொல்றா.. நான் கஷாயம் வைச்சிருக்கேன் எடுத்திட்டு வரேன். அதுக்கு முன்ன கஞ்சி குடிச்சா கொஞ்சம் தெம்பு வரும். அப்பறம் கசாயத்தை குடிச்சா கொஞ்சம் சரியாகும்.” என்று பார்வதி சொல்ல

“அம்மா அண்ணா எங்கே? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்ல…” அக்சயா கேட்க

“சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி ஹாஸ்பிடல் மருந்து மாத்திரை னு ஓடக்கூடாது அச்சு… அதுவே அப்பறம் நம்ம உடம்பை பாதிக்கும். இந்த கஷாயம் நல்லா கேட்கும். கொடுத்து பார்ப்போம்.” என்று சொல்லியபடி அபியை எழுப்ப மேனி அனலாக கொதித்தது அபிலாஷாவிற்கு…

“அச்சோ… என்னடி இவ்வளவு கொதிக்குது…” என்று பார்வதியுமே பதற

“அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் னு சொன்னேன். நான் அண்ணனுக்கு கால் பண்றேன்.” அக்சயா ஃபோனில் அழைத்து விஷயத்தை சொல்ல அபிநந்தனும் விரைந்து வந்திருந்தான்.

அதற்குள் அபியை மெதுவாக எழுப்பி தன் தோளில் சாய்த்து வைத்தே கஞ்சியை குடிக்க வைத்திருந்தார் பார்வதி.

ஏற்கனவே வாய் கசப்பாக உணர்ந்தவள் வயிற்றை புரட்டிக் கொண்டு வர எழுந்து கழிவறை செல்லும் முன்னர் கால் பலமிழந்து கீழே விழப்போக சரியாக பார்வதியும் அக்சயாவும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டனர்.

இருவர் துணையோடு குடித்த கஞ்சியை அப்படியே வாந்தியாக வெளியேற்றி விட்டு சோர்ந்து போய் படுக்கையில் விழுந்தாள் அபிலாஷா. அவளை பார்க்க இருவருக்கும் மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசாத போதும் கூட எப்போதும் புன்னகை தவழும் வதனமாக இருப்பாள் அபிலாஷா. அவள் இன்று வாடிய கொடியாக கிடக்க வருத்தம் கொண்டார் பார்வதி.

“எனக்கு எதுவும் வேணாம் ம்மா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா காலையில சரியாகிடும்.” என்று மீண்டும் படுத்து விட்டாள் அபிலாஷா 

அபிநந்தன் முக்கிய வேலையில் இருந்தவன் இரவு ஏழு மணிக்கு தான் வந்தான். வந்ததும் “பாவம் அண்ணா அண்ணி…” என்று அக்சயா அனைத்தும் சொல்ல

“லாஷா… வாம்மா ஹாஸ்பிடல் போகலாம்..” அபிநந்தன் அழைக்க

“வேண்டாம் நந்தன் என்னால எழவே முடியலை..” திக்கி திணறி கூற

“திடீர்னு எப்படி ம்மா இப்படி ஃபீவர் வந்திருக்கும்?” அக்சயா கேட்க

“எனக்கு அப்படி தான் அச்சு… லைட்டா சைனஸ் ப்ராப்ளம் வந்தாலே ஃபீவர் வந்திடும்.” என்று அபிலாஷா சொல்ல 

“சரி அம்மா செய்த கஷாயத்தை குடி லாஷா உனக்கு உடனே ஃபீவர் போய்டும்…” என்று அபிநந்தன் சொல்ல

“நந்தா வெறும் வயிறா இருக்கா டா…” பார்வதி சொல்ல

“அம்மா கொஞ்சம் பால் சூடு பண்ணுங்க வீட்ல ப்ரெட் இருக்குல?” என்று கேட்க

“ஆ… இதோ அஞ்சு நிமிஷம்.” என்று சென்ற பார்வதி பால் மற்றும் ப்ரெட் கொண்டு வந்து தர வேண்டாம் என்று மறுக்க அபிநந்தன் வாங்கி அவனே ஊட்டி விட்டு கஷாயத்தையும் வற்புறுத்தி குடிக்க வைத்திட அவன் தோள் மீதே சாய்ந்து கொண்டாள் அபிலாஷா.

அக்சயா பார்வதி வெளியே சென்றிட “இந்த கஷாயம் நல்லா தூக்கம் வரும் லாஷா.. நல்லா தூங்கு சரியா…” என்று தட்டிக் கொடுத்து உறங்க வைக்க

“கூடவே இருங்க நந்தூ…” என்று உறக்கத்தில் அபிலாஷா புலம்ப மெல்லிய புன்னகை கீற்றை இதழில் மலர விட்டான் அபிநந்தன்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post