இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 01-04-2024

Total Views: 24712

அத்தியாயம் : 2

தன்னுயிர்க் காதலனாக இருந்து கணவனாக மாறியவனின் வீட்டுக்கு அவனின் கரம் பற்றி உரிமைக் கொண்டு முன் வந்து நின்றாள்.

தீப்தி, புது தம்பதி இருவருக்கும் தன் கரங்களால் ஆரத்தி சுற்றி உள்ளே வரவேற்க்க, “வலது கால்லை எடுத்து வைச்சி உள்ளே போம்மா ?” அங்கிருந்த ஒரு பெண் கூறவே, சரியென்றாள்.


நந்தனின் கரங்களைப் பற்றிக் கொண்டு வலது காலினை எடுத்து வைத்து உள்ளே நுழைய, நேராக இருவரையும் பூஜை அறைக்கு தான் அழைத்துச் சென்றனர்.

பின் அங்கிருந்த தெய்வங்களை விளக்கேத்தி வணங்கி வர, சமையலறை அழைத்துச் சென்று அங்கிருந்த சம்பிரதாயங்களையும் முடித்து ஹாலுக்கு அழைத்து வந்தனர்.

அனைவரும் ஓய்வாக அமர மனோகரி,வாசுதேவன் சொந்தங்கள் என்று இருபது மேல் ஆட்கள் அங்கு இருக்கவே, அமர்ந்தனர். கூட்டத்தோடு கூட்டமாய் தான் அஞ்சனாவும் இருந்தாள்.

“இங்கே பாரும்மா, இங்கே இருக்குற எல்லாருமே இனி உன்னோட சொந்தம் தான். உனக்குன்னு யாருமே இல்லைன்னு நினைக்காதே சரியா ?” மென்மையான வார்த்தைகளோடு வாசுதேவன் கூற,  தலையசைத்தாள்.

பின் மற்றவர்கள் பேச, வேலைக்காரியோடு சேர்ந்து கவிநயா அனைவருக்கும் தேநீர் எடுத்துக் கொண்டு வந்துக் கொடுத்தாள். சிறுவர்கள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை அழைத்து சிற்றுண்டி கொடுத்து கவனித்தாள்.

மருமகளாக தன் கடமையை கவிநயா சரியாகச் செய்ய, மாமியாராக இருந்த மனோகரி அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசுவது மட்டுமில்ல அங்கே நடந்த இந்த செய்கையும் சேர்ந்து தான் கவனித்தாள் அஞ்சனா.

சொந்தங்கள் அனைவரும் சிறிது நேரம் இருந்து கிளம்பி விட, அவர்களை வழியனுப்பி வைத்து வீட்டுக்குள் வந்தனர்.

“தீப்தி உன் அண்ணியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போம்மா. கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்கட்டும் “ என்று மனோகரி கூற, புது அண்ணியை அழைத்துக் கொண்டு கீழே இருந்த தன்னறை நோக்கிச் சென்றாள் தீப்தி.

இரவு உணவு சமைக்க கவிநயா சென்று விட, மற்றவர்களும் அங்கிருந்துச் சென்று விடவே அவ்வளோ தான் விழாக்கோலமாக காட்சியளித்த வீடு பழைய நிலைக்கு திரும்பி விட்டது.

கீழே மூன்று படுக்கையறை, மேலே மூன்று படுக்கையறை, பூஜையறை, சமையலறை, டைனிங் ஏரியா என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக இருந்தது. இந்த வீட்டினை கவனிக்கும் முழுபொறுப்பும் மனோகரியிடம் இருக்கவே, மருமகளை தான் சம்பளமில்லா வேலைக்காரியாக மாற்றிக் கொண்டார்.


எதிர்க்க நினைத்தாலும் முடியாத அளவுக்கு தான் கவிநயாவை வைத்திருந்தனர். பெண் பிள்ளை இருக்கவே அதற்க்காகவே அனைத்தையும் சகித்துக் கொண்டு அந்த வீட்டில் வாழ்கிறாள்.

மணியோ இரவு ஒன்பது உணவினை சமைத்து முடித்து டைனிங் டேபிளில் சூடாகக் கொண்டு வந்து வைத்தாள். மேலே இருக்கும் கணவனையும், கொழுந்தனையும் மகளை அனுப்பி வரக் கூறிவிட்டு கீழே இருந்த மற்றவர்களை அழைத்தாள்.


வீட்டின் அனைவரும் இருந்தால் மட்டுமே ஒன்றாக உண்ண முடியும். மற்ற நேரங்களில் அவர்களுக்கு எப்போது விருப்பமோ, நேரமிருக்குமோ அப்போது உண்டுக் கொள்வர்.


இன்று அனைவரும் இருக்க, டைனிங் டேபிளுக்கு வந்தனர். அமர்ந்ததும் உணவினைப் பரிமாற, ஆறு வயது சின்மயியோ அன்னையிடம் சென்று ஊட்டி விட்டால் தான் உண்பேன் என்று அடம்பிடித்தாள்.

“என் செல்லம்ல நீ சாப்பிடு தங்கம் “ மகளை கொஞ்சிக் கொண்டே மற்றவர்களுக்குப் பரிமாற,

“பட்டு பாப்பா. இங்கே வாங்க தாத்தா ஊட்டுறேன் “ வாசுதேவன் அழைக்க மறுத்தாள்.

“சித்தப்பா கிட்ட வாடா, அத்தை கிட்ட வாடா “ என்று தீப்தி, நந்தன் இருவரும் அழைத்துப் பார்க்க, இப்போது சில நாட்களாக கவிநயா நேரமில்லாதுப் போனதை அந்த குழந்தையால் உணர முடியவில்லை.

திருமணம் வேலை என்று குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று மனம் தவித்தாலும், ஆறுதல் தேடி கட்டிய கணவனைக் காண, அவனோ எனக்கென்னவென்று உண்டுக் கொண்டிருந்தான்.

பல வருடங்களாக அவனிடமிருந்து கிடைக்கும் ஏமாற்றம் தானே ? பழகியப் போயிருக்க, விறுவிறுவென பரிமாறி முடித்தாள்.


“அக்கா என்ன வேணும்ன்னு கேட்டுப் பரிமாறுங்க “ அருகில் இருந்த வேலைக்காரியிடம் கூறி, தட்டில் உணவினை வைத்து மகளை அழைத்து சோபாவில் சென்று அமர்ந்தாள்.


துள்ளி குதித்து ஓடி விளையாடி அன்னையிடம் சந்தோஷமான உணவினை வாங்கி உண்ண, இங்கே அனைவரும் அதனைக் கண்டு பார்வையோடு நிறுத்திக் கொண்டனர்.


“மயி, அம்மாக்கு கொஞ்சம் வேலையிருக்கு நீ சாப்பிட்டு அப்பா கூட போய் படு. அம்மா வந்து உன் பக்கத்துல படுத்துக்குறேன் “ என்று உணவு ஊட்டிக் கொண்டு அடுத்து அதற்கு தான் அடம்பிடிப்பாள் என்பதை உணர்ந்தே முதலிலே கூறிச் சரிக்கட்டி விட்டாள்.

உணவருந்தி முடித்து ஆண்கள் அவரவர் அறையைப் பார்த்து சென்று விட, மகளையும் அவளின் தந்தையோடு அனுப்பி வைத்தாள்.

“கவி, பத்து மணிக்கு மேல சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் சொன்னாங்களே அதுக்கு தகுந்த மாதிரி பார்த்துக்கோ ? “எனக் கூறி மாமியாரும் சென்று விட்டார்.

“அஞ்சனா, நீ தீப்தி ரூமுக்கு போய் ரெடியாகு. நான் அரைமணி நேரத்துல எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு வந்துறேன் “ என்க,

“நானும் உங்க கூட ஹெல்ப் பண்ணுறேன் “ என்றதும், கட்டிய கணவனிடம் பல வருடமாக எதிர்பார்த்த வார்த்தை இன்று அஞ்சனாவின் அதரங்கள் மூலம் ஒலித்தது.

“முதல் நாளே வா. அதெல்லாம் வேண்டாம். நீ போய் கிளம்பு. கொழுந்தன் வேற உனக்காக காத்துக்கிட்டு இருப்பான். அப்பறம் “ என்று அதற்கு மேல் பேசவில்லை. வெட்கமோடு தலைகுனிந்தாள் அஞ்சனா.

தீப்தி உடனிருக்கவே, “உன் அண்ணியைக் கூட்டிட்டுப் போ “ என்றதும், அவள் அழைத்துச் செல்ல, சமையலறைச் சென்று எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

மீதமிருந்த உணவினை எடுத்து வேலைக்காரியிடம் கொடுத்து அவளை அனுப்பி வைத்து, பாலினைக் காட்சி எடுத்துக் கொண்டு தீப்தியின் அறை நோக்கிச் சென்றாள்.

அங்கே மெல்லிய டிசைனர் புடவை ஒன்றை உடுத்தி சிறிது அலங்காரம் செய்து தீப்தியோடு பேசிக் கொண்டிருந்தாள் அஞ்சனா.

உள்ளே வரவே, “நேரமாச்சு, இந்தா பால் சூடா இருக்கு. வா கொழுந்தனோட ரூமை காட்டுறேன் “ என்க,

“குட் நைட் அண்ணிஸ் “ என்று இருவருக்கும் சேர்ந்து தீப்தி கூற, அவர்களும் பதிலுக்கு கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினர்.


ஒரு முறை திரும்பி அனைத்தையும் பார்த்து விட்டு பின் மாடியேற, “என்னாச்சு அக்கா ?” என்றாள்.

“விளக்கு எல்லாம் அமர்த்திட்டேன்னா, கதவை பூட்டிட்டேன்னா பார்த்தேன். எங்க ரூம் மேல மாடில தான் இருக்கு. லெப்ட் சைட் எங்களுக்கு ரைட் சைட் உங்களுக்கு “ கூறியவாறு நடக்க,

“ஏன்க்கா எல்லா வேலையும் நீங்களே பார்க்குறீங்க ? இன்னும் ஒரு வேலைக்காரி வச்சிக்கிட வேண்டியது தானே ? அத்தை என்ன தான் பண்ணுவாங்க ?”

“அவங்க வேலைக்குப் போறாங்களே, உனக்கு தெரியாதா ?”


“ஆமா, நந்தன் சொன்னாரு. நான் தான் மறந்துப் போயிட்டேன். அதுக்காக வீட்டுல இருக்குற நேரம் கூடவா ஹெல்ப் பண்ண கூடாது “

“விடு அஞ்சனா. இப்போ எதுக்கு அது. கொழுந்தன் எப்படின்னு நான் உனக்கு சொல்லணும்ன்னு அவசியமே இல்லை. உனக்கே எல்லாமே தெரியும். பார்த்து நடந்துக்கோ. ரெண்டு பேரும் என்னைக்கும் சந்தோஷமா இருங்க. மனசு விட்டுப் பேசுங்க. சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை பெரிசா எடுத்துக்க கூடாது. விட்டுக்கொடுத்துப் போங்க “ என்று இன்னும் சில அறிவுரைகளை எல்லாம் வழங்கி அவர்களின் அறையைக் காட்டினாள்.

இரவு வணக்கம் கூறிக் கொண்டு அறைக்குள் அஞ்சனா நுழைந்து விட, இங்கே பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டு தங்களின் அறைக்குள் நுழைந்தாள்.

ராவணனைப் போல் ஓய்யாராக தன் படுக்கையில் அமர்ந்து கைபேசியை நோண்டியவாறு இருக்க, சத்தம் கேட்டு நிமிர்ந்து கவிநயாவைக் கண்டாள்.

மகளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சத்தமில்லாது குளியலறைச் சென்று இரவு உடையை மாற்றி வந்தாள்.

காலையிலிருந்து வேலைப் பார்த்த களைப்பில் நித்திரை அழைக்க, விழிகள் சொருக குழந்தையின் அருகில் சென்று படுக்கப் போனாள்.


“அதுக்குள்ள உனக்கு என்னடி தூக்கம் ?” ஒன்றை கேள்வி தான் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து கணவனைக் கண்டாள்.

“எதாவது தேவையாங்க ?”

“நான் ஏன் முழுச்சிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியாதா என்ன ? எத்தனை தடவைச் சொல்லுறேன். இவளை கீழே அப்பா, அம்மா, தீப்தி கூட தூங்க வைக்கப் பழகுன்னு. “ மகளுக்கு சத்தம் பலமாகக் கேட்க கூடாது என்ற எண்ணத்தில் பல்லை கடித்துக் கொண்டு பேசினான்.

“இவ போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா ?”

“எல்லாத்தைக்கும் ஒரு காரணம் மட்டும் சொல்லிரு. பக்கத்து ரூமுக்கு வா “ கூறிக் கொண்டு நிதின் எழுந்துச் சென்று விட, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

விழிகள் கலங்கத் துடிக்க அதற்கு கூட அவளுக்கு உரிமையில்லாமல் தான் போனது. மகள் உருண்டு விடாதவாறு படுக்க வைத்து அறையை விட்டு வெளியேறினாள்.


பக்கத்து அறைக்குள் நுழைய, “கதவை என்ன உங்க அப்பனை லாக் பண்ணுவான். “ சீற்றமோடு கத்தவே, பூட்டிக் கொண்டு அவனருகே வந்தாள்.

அதற்கு மேல் அங்கே வார்த்தைக்கு எங்கே இடம் இருக்க ? உயிரைப் பறித்தால் கூட நொடியில் செத்து விடலாம். ஆனால் கட்டியவன் கொடுக்கும் இந்தக் காயம் தீராது முடிவற்றுப் போனது.

பாதி உயிரே அவனே அவளிடமிருந்து பறித்துக் கொண்டு அவன் மட்டும் சுகம் தேடிக் கொள்ள, எழுந்து கூடச் செல்ல முடியாத நிலையில் தான் இருந்தாள் கவிநயா.

திரும்பி கணவனைக் காண தன் தாகம் தீர்ந்து விட்ட நிம்மதியில் அவனோ ஆழ்ந்த நித்திரையில் இருக்க, மெல்ல எழுந்து தன் உடையை சரி செய்துக் கொண்டாள்.

பால்வண்ண தேகமோ முரடனின் செயலால் சிவந்துப் போயிருக்க, அப்படியொரு வலி. கொலுசொலி ஓசைக் கூட கேட்காது சத்தமில்லாமல் மெல்ல அறையை விட்டு வெளியே வந்து தங்களின் அறைக்குள் நுழைந்தாள்.

சின்மயி நித்திரைக் கலையாது உறக்கத்தில் தான் இன்னும் இருக்க, நிம்மதியாய் மூச்சினை விட்டவளோ குளியலறைச் சென்று வந்து மகளின் அருகில் படுத்துக் கொண்டாள்.


அவள் படுத்த அடுத்த ஐந்து நிமிடத்திலே குழந்தையின் கரங்கள் அன்னையினைத் தேட, தன்னோடு அணைத்து தட்டிக் கொண்டு மௌனக் கண்ணீர் வடித்தாள் கவிநயா.

இங்கே அஞ்சனாவோ தங்களின் அறைக்குள் நுழைய சட்டென அறைக் கதவு மூடும் சத்தம் கேட்டது. கையில் இருந்த பால் கிளாஸ்சோடு திரும்பிக் காண, நந்தன் தான் புன்னகையோடு நின்றிருந்தான்.

காதல் கொண்ட கணவன் தான் என்றாலுமே பூட்டி வைத்த நேசமும், ஆசையும் வெளிப்படும் தனிமை நேரம் அல்லவா ! எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தில் தான் பெண்ணவள் தலைகுனிந்து நின்றாள்.

அருகில் வந்து கையில் இருந்த பால் கிளாஸ்சினை வாங்கி தள்ளி வைத்து விட, மெல்லத் தயங்கி நிமிர்ந்து நந்தனைக் கண்டாள்.

“ஆர் யூ ஓகே அஞ்சு ?” அவளின் தயக்கம் கண்டே கரம் கட்டிக் கொண்டுக் கேட்க, தலையை மட்டும் அசைத்தாள்.

“ஐ நோ, இந்த நேரம் உன்னோட எண்ணங்கள் எப்படி இருக்குன்னு தெரியும். இங்கேப் பாரு அஞ்சு, நான் என்னைக்கும் எப்பவும் உன்னோட நந்தன். நான் காதலிக்கும் போது எப்படி இருந்தேன்னோ அப்படி தான் இப்பவும் இருக்கேன் “ என்ற நொடி, அதிர்ந்தவளோ சட்டென நிமிர்ந்து அவனின் முகத்தைக் கண்டாள்.

முகத்திலோ குறும்பு தாண்டவமாட முறைப்போடு கண்டவளோ அலங்கரித்த மலர் படுக்கையில் சென்று அமர்ந்தாள்.

“எதுக்கு இப்படி பண்ணுறீங்க நந்தன் ?”

“ஹே ! இப்போ நீ சட்டுன்னு ஏமார்ந்த தானே ? இவன் என்ன கல்லா ஒரு ஆசையும் இல்லைன்னு சொல்லுறான்னே நினைச்சீல ? “

“போங்க நந்தன் “

“அஞ்சு “ கொஞ்சிக் கொண்டு மனைவியின் கரங்களை எடுத்து தன் கரங்களுக்கு வைத்துக் கொள்ள, நிமிர்ந்து கணவனின் முகம் கண்டாள்.

“முதலிரவை நினைக்கும் போது எல்லாருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்க தான் தெரியும். அதே மாதிரி தான் எனக்கும். அந்த இரவை மறக்க முடியாத இரவா தான் எல்லாரும் நினைக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க. அப்படி எல்லார் மாதிரி நான் இருக்கணும் நினைக்கலை. என்ன தான் நம்ம காதலிச்சி கல்யாணம் பண்ணுனாலும் ஒருத்தர்கொருத்தர் இன்னும் புரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு, இதுவரைக்கும் நமக்கான நேரம் அதிகமா கிடைக்கல. ஆனா இனி முழுக்க நமக்கான நேரம் தான். இன்னைக்கு நமக்குள்ள நடக்கப் போற இந்த தாம்பத்தியம் உறவு இன்னையோட முடிஞ்சிப் போறதில்லை. உனக்கு புரியுது தானே ?” புருவம் சுருக்கி தன்னவளின் முகத்தை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டுக் கேட்க,

“அப்போ நீங்க சாமியாராகப் போறீங்களா  என்ன ? எதுக்கு இவ்வளோ பேசுறீங்க ? “ இளநகை பூக்கக் கேட்டாள்.

“அடிங்க, நானும் நல்லவனா இருக்கலாம் பார்த்தா நீ என்னை விட மோசம் போலியே ? இனிமே பேச்சுக்கே இடம் கிடையாது. செயல் மட்டும் தான் “ கூறிக் கொண்டே மனைவியோடு படுக்கையில் சரிந்தான்.

விளக்கு அமர்ந்து மெல்லிய வெளிச்சம் மட்டுமே அறைக்குள் ஊடுருவ, மலர்ந்த மலரினைப் போன்று மங்கையவள் வாசம் ஆண்மகனை முற்றிலும் மயங்கச் செய்தது.

மனைவியின் சம்மதம் கிடைத்த பின் இன்னும் என்ன தடங்கல் ? உடலும், உயிரும் முழுவதும் உயிரானவளிடம் சென்று விட, தேகம் தீண்டி தேன்துளியைச் சுவைக்க ஆரம்பித்தான்.


அரும்பும் மலர்களின் இருக்கும் தேனினை உருகி உருகி பருக, அவளுக்கோ உதடு வறண்டு தான் போனது தன்னவனின் செய்கையால். இருந்தும் உதட்டசைவினால் அவள் இதழ் ஈரம் சுரக்க, கொடியிடையோ கரத்திற்குள் சிக்கி இன்பமாய் நெளிந்தது.

நாடி நரம்புகளின் அசைவுகள் முழுவதும் இளமை ரத்தம் பாய்ந்தோட, விழிகள் பேசும் அழகுப் பெட்டகத்தை நாணமோடு முத்தமிட்டு மூட வைத்தான்.

ஆடைகள் கலைய, விரல்கள் தீண்டி வெப்பங்கள் உருவாக, இருவரின் விழிகளும் காதல் கலந்த காமத்தோடு சொக்கிக் கொண்டது.

நெருப்பும், பஞ்சுமாய் பற்றிக் கொண்டு இணைந்து விட, கொஞ்சலுக்கு அங்கே பஞ்சமே இல்லை என்ற நிலை. கட்டிலில் அவர்கள் நடத்திய இந்த யுத்தத்தைக் காண முடியாது சந்திரன் கூட மறந்து விட்டது. ஜன்னல் வழியாகத் தெரிந்த சிறு வெளிச்சம் கூட முற்றிலும் மறைந்துப் போய் முழு இருட்டாக மாறியது அந்த அறை.

மேனி முழுவதும் நந்தனின் இதழ்கள் தீண்டியதில் பெண்மை துடிக்க, ஆண்மை அடக்கப் போராட, வியர்வை மழை தான். காதல் கொண்ட இரு உயிர்களும் உருகி நாணத்தை கூட மறந்து நீயா ! நானா என்ற போட்டி தான் இருவருக்கும்.

தீராத காதலில் பின்னிக்கொண்டு இருக்க பகலே வேண்டாம் என்ற எண்ணம் தான். ஒரே நாளிலே மொத்த உலகத்தையும் ஆட்சி செய்ய விரும்பினர்.


காதல் இல்லாத வாழ்க்கை இல்லை என்பது போல் காமம் இல்லா காதலும் இல்லை என்றே அவர்கள் செய்கை உணர்த்தியது.


உன்னுள் நீயும் என்னுள் நானும் என்பது போல் தொலைந்து போய் கூடல் முடிந்து அயர்வோடு பகலை எதிர்பார்த்து விழி மூடிக் கொண்டனர்.

தூய அன்போடு இரு உள்ளங்களும் நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்தது.

தொடரும்...


🙏 தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙏


Leave a comment


Comments


Related Post