இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -17 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 02-04-2024

Total Views: 30397

நாட்கள் தெளிந்த நீரோடைப் போல் ஓடியது. எப்போதும் பிரச்சனை மட்டுமே நடக்க வேண்டும் என்று இல்லையே நல்லதும் நடக்கும் தானே.அந்த நல்லது நடந்த நாட்கள் தான் இவை.

மார்த்தாண்டத்திடம் வாங்கிய கடனை கொஞ்சம்  கொஞ்சமா கொடுத்தனர் ராஜியும், வளவனும்.

"அம்மா பொங்கல் வரதுல இந்த வருஷம் நம்ப பொங்கல் வைக்கலாமா?" 

"அப்பா இறந்து வருஷம் ஆகாம எதும் செய்யக்கூடாது பாப்பா."

"இல்லனா மட்டும் வருஷம் வருஷம் பொங்கல் வைக்கறோமாக்கும்,அவங்க வீட்டுக்கு தானே பொங்கலுக்கு போவோம்,இப்போ என்ன பாப்பு புதுசா கேக்கற?" என வளவன் கேக்க 

"இல்லை அங்க போய் சாப்பிடணுமா ஒரு மாதிரி இருக்கும்,அந்த நந்தன் திமிரா பேசுவான். பார்ப்பான் அவன் இருக்கும் போது எது பண்ணவும் பிடிக்க மாட்டிங்குது" என வளவனுக்கு மட்டும் கேக்க சொன்னாள்.

"சரி விடு நம்ப போகாம இருந்துக்கலாம் அம்மா மட்டும் போகட்டும்" என்று விட்டான் வளவன்.

ஆனால் அவன் சொன்னதற்கு மாறாக தான் நடந்தது

இப்போது குடியிருக்கும் வீட்டில் இடமில்லை. கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் மாடு கட்டுவதற்கு எந்த வசதியும் இல்லாததால்  வளவன் வீட்டு மண் வாசலில் தான் இவ்வளவு நாளும் மாட்டைக் கட்டியிருந்தனர்.இப்போது பொங்கல் வைக்கவும் அங்கு இடம் இல்லை என்பதால் மாடு கட்டியிருக்கும் இடத்தையே சுத்தம் செய்துவிட்டு அங்கையே பொங்கல் வைக்கலாம் என முடிவு செய்திருந்தனர் நந்தன் குடும்பத்தில்.

அது வளவனின் வீட்டில்  என்பதால் நந்தன் வரமுடியாது என   ஆட ஆரம்பித்துவிட்டான்.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.? பொங்கலுக்கு என்னோட பிரண்ட்ஸ் எல்லாத்தையும் இன்வைட் பண்ணிருக்கேன், அந்த குடிசையில  போய் பொங்கல் வெச்சா எல்லோரும் என்னைய கேவலமா நினைக்க மாட்டாங்க, உங்களுக்கு பொங்கல் வைக்க வேற இடமே கிடைக்கலையா? போயும் போயும்  அந்த மண் குடிசையில வைக்கறீங்க. ச்சை" என முகம் சுளிக்க.

"அம்மா நீங்க என்ன பண்ணுவீங்களோ அங்க தான் பொங்கல் வைக்கணும்,  மாடு கட்ட அவங்க வீடு வேணும் பொங்கல் வைக்கறதுன்னா மட்டும் கசக்குதா?, மாடு கட்டும் போது தெரியலையா அது மண் குடிசையின்னு?. உனக்கு கேவலமா இருந்தா உன் பிரண்ட்ஸை வர வேண்டாம்னு சொல்லு. யாரைக் கேட்டு பிரண்ட்ஸை வர சொன்ன?" என யுகியும் ஷாலினியும் ஒருப் பக்கம் குதித்தனர்.

ஷாலினிக்கு வேறு வளவனின் விலகல் எதனால் என்று தெரியாமல் மண்டை காய்ந்தது. இந்த பொங்கலை வைத்தாவது அவனை நெருங்கலாம் என நினைத்திருக்க, அதற்கும் ஆப்பு வைக்கும் அண்ணனை யாருக்கு தான் பிடிக்கும்.

"நந்தா நீ மட்டும் தான் வீம்பு பண்ற. உன் பிரண்ட்ஸை வேணும்னா நம்ப புது வீட்டுக்கு கூட்டிட்டுப் போ,அதான் வேலை கிட்ட தட்ட முடிஞ்சிடுச்சில, அங்க பொங்கல் வெச்சாலும் சாப்பாடு புது வீட்டுல தானே போடறோம் அப்புறம் என்ன பிரச்சனை? என்றார் மார்த்தாண்டம்

"ம்ம்" என கோவமாக முகத்தை காட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

பொங்கல் நாளும் வந்தது.

கிருஷ்ணம்மாள் பொங்கல் வைக்க. மணிமேகலை வடை பாயாசத்துடன் மதிய உணவு தயாரித்தார்.

"ஏய் நிலாக்குட்டி."

"ஆயா."

"அந்த வெல்லத்தை தட்டிக் குடு"

"ம்ம்". என்றவளுக்கு எதை வைத்து தட்ட என  தெரியவில்லை.பேந்த பேந்த முழித்துக்கொண்டு உக்கார்ந்து இருக்க

"என்ன நிலா.. அப்படி பார்த்துட்டு இருக்க.?"

"ஷாலு இந்த வெல்லத்தை எதுல தட்டறதுன்னு தெரியல".

"நான் செஞ்சி தரேன் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்" 

"என்ன?" 

"உங்க அண்ணனை என்கிட்ட பேச சொல்லணும்." 

"ஏன் ரெண்டுபேரும் சண்டைப் போட்டுக்கிட்டிங்களா?" 

"ஆமா. அவன் என்கிட்ட டூ விட்டுட்டான்". 

"சரி அப்போ இதை தட்டி ஆயாகிட்ட குடு நான் போய் அண்ணனை கூட்டிட்டு வரேன்" என்று அங்கிருந்து நழுவி விட்டாள். 

வளவன்,யுகி,அவர்களது நண்பர்கள் என அனைவரும் சுற்றி நின்று பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவில் சென்ற நிலா. 

"அண்ணா ஷாலுக்கிட்ட டூ விட்டுட்டியா அவ பேச சொல்லிக் கேக்கறா வந்து பேசு வா" என வளவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஷாலினியிடம் வந்தாள். 

"பேசு." 

"பாப்பா உனக்கு புரியாது நீ போ.?! 

"என்ன புரியாது எல்லாம் புரியற வயசுதான் சொல்லு." 

"பாப்பா உன்னைய போன்னு சொன்னேன்" என வளவன் பல்லைக் கடிக்க. வளவனின் புது அவதாரத்தில் பயந்துவிட்ட நிலா அழுதுகொண்டே அங்கிருந்து சென்று விட்டாள். 

"இப்போ எதுக்கு அவளை திட்டுற வள்ளு, இப்போலாம் நீ என்கிட்ட பேசு மாட்டிங்கற நான் வரதைப் பார்த்தாலே அங்க இருந்து போய்டற என்ன பண்றேன் நானு.. இப்போ எனக்கு பதில் வேணும் சொல்லு" என வளவன் வீட்டின் பின்புறம் நின்று அவன் சட்டையைப் பிடித்துக் கேட்டுக்கொண்டிருக்க. 

அவளது கையைத் தட்டிவிட்டவன். "லூசு மாதிரி பேசாத நான் எப்போவும் போல தான் இருக்கேன் நீதான் பணம் இருக்கிற திமிர்ல மாறிட்டே இருக்கு. என்னய்ய விட பணக்கார பிரண்ட் கிடைப்பான் அவன்கிட்ட போய் பேசு போ" என ஷாலினியின் கையை தட்டிவிட்டவன் அங்கிருந்து செல்லப் போக. 

"ப்ளீஸ் வள்ளு என்கிட்ட பேசாம இருக்காதா என்னால தாங்க முடியல, ஐ லவ் யூ வள்ளு, என்னால நீ இல்லாம இருக்க முடியாது நீ பேசாம ஒவ்வொரு நாளும் செத்துடலாம் போல இருக்கு., என்னோட லவ்வை அக்செப்ட் பண்ணிக்கோ,ப்ளீஸ்" என கெஞ்சத் தொடங்கி விட்டாள் ஷாலினி. 

இருவரும் எப்போதும் போல் பேசிக்கொண்டே இருந்திருந்தால் இந்த அளவிற்கு விஷயம் சென்றிருக்குமா என்று தெரியவில்லை, எப்போதும் வளவன் பேசாமல் விலகி போக ஆரம்பித்தானோ அன்றிலிருந்து ஷாலினி வளவனை கவனிக்க ஆரம்பித்து விட்டாள் 

. நாட்களில் பாசத்திற்கு ஏங்கும் அதுபோல தான் வளவனின் பாசத்திற்கு ஷாலினி ஏங்க ஆரம்பித்து விட்டாள் வளவனின் அன்பு பாசம் காதல் அனைத்தும் வாழ்க்கை முழுவதும். வேண்டும் என்று யாரைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் காதல் சொல்லிவிட்டாள் 

. . 

காதல் என்றால் என்ன என்று கூட தெரியாத வயதில் காதலிக்கிறேன் என்று சொல்லும் மாதுவை நம்பி எப்படி வாழ்க்கை முழுக்க செல்ல முடியும். வயது கோளாரில் வரும் இனகவர்ச்சிக்கு கூட அவர்கள் பாஷையில் காதல் என்று தான் அர்த்தம். 

"ஏய் நிலா." 

"ஐயா" . என்றவள் "இதுகிட்ட இருந்து தான் இந்த ஏய் வந்துருக்கும் போல அந்த நந்தனுக்கு, அதான் எப்போ பாரு ஏய் ஏய்ன்னு ஏலம் போடறான்" என நினைத்துக் கொண்டாள்.

"போய் சாப்பாடு ரெடியான்னு கேட்டுட்டு வா, வீட்டுக்குள்ள போகாத சரியா.?"

"இதுலைலா உஷாரா இருக்கும் இந்தக் கிழவி," என முனவியவள் "ம்ம்ம்" . என்றவள் வேகமாக ஓடிச் சென்று நந்தனின் வீட்டின் முன் நின்றாள். 

குளித்து சாதாரண பாவாடை சட்டை அணிந்திருந்தாள், தலை முடி சீவாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கியது. 

அவளைப் பார்த்ததும் நந்தன் தான் முதலில் வெளியே வந்தான் குப்பைத் தொட்டில் காகிதத்தைப் போட கதவின் பின் பக்கம் இருந்த குப்பைத்தொட்டியின் அருகில் வந்த போது தான் வெளியே நின்ற நிலாவைப் பார்த்தான். 

"ஏய் இங்க எதுக்கு வந்த.?" 

"அது ஐயா சோறு" 

"என்ன சோறு அறிவில்ல உனக்கு அவங்க தான் சொன்னாங்கன்னு பிச்சைக்காரி மாதிரி வந்து நிற்கற. என்னோட பிரண்ட்ஸ் என்ன நினைப்பாங்க?. அவங்களா யாருன்னு தெரியுமா எவ்வளவு பெரிய பணக்காரங்க" என்று சொல்லிக் கொண்டிருக்க. 

நந்தனின் நண்பன் ஒருவன் அங்கு வந்துவிட்டான். 

"நந்து இந்த பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லை." 

"ஹா இது. எங்க வீட்டுக்கு வேலைக்கு வரவப் பொண்ணு". என்றுவிட்டான். 

"இந்தப் பொண்ணப் பார்த்ததும் அதான் நினைச்சேன். நீயே சொல்லிட்டா.." என்றவன் நிலாவை மேலும் கீழும் இளக்காரமாகப் பார்த்தான். 

அவனின் வார்த்தையில் நிலாவின் கண்கள் கலங்கிவிட்டது. 

அம்மா வருவாங்க நீ போ என நந்தன் நிலாவை அங்கிருந்து துரத்த முயல. 

"பூனை எப்போ வந்த?ஐயா பொங்கல் வெச்சிட்டாங்களா..?" 

"ம்ம்ம்" என கலங்கிய கண்களுடன் செல்லப் போனவளைக் கைப் பிடித்து நிறுத்திய யுகி 

"என்னாச்சி எதுக்கு அழற அடிச்சானா?" என்றான் நந்தனைப் பார்த்து. 

நண்பர்கள் முன்னாள் மானம் போகப் போகிறது என இறுகிய முகத்துடன் நிலாவைப் பார்த்து 'இல்லைன்னு சொல்லு' என தலையை ஆட்ட. 

அவன் சொல்வதற்கு முன்பே அவளது தலை அப்படி தான் அசைந்தது. 

"இல்லை யுகி". 

"நந்து என்ன வேலை செய்யற பொண்ணு உன் தம்பியை பேர் சொல்லிக் கூப்பிடுது. எங்க வீட்டுலைல ஐயா சார்ன்னு மரியாதையை தான் பேசுவாங்க." என்றான் நந்தனின் நண்பன். 

"இங்கையும் அப்படி தான்". என நந்தன் சொல்வதற்கு முன்பே. 

"யாரை வேலை செய்யற பொண்ணுன்னு சொல்ற அடிச்சா மூச்சு முகரை பேந்துடும். சீ இஸ் மை பிரண்ட்,இவ என்னுடைய பிரண்ட் புரியுதா? இவன் சொன்னானா இவ வேலைக்காரின்னு" என்று கேட்டவன் "அவன் சொன்னா நீ அழுதுட்டு நிற்பியா?" என்று நிலாவையும் திட்டினான். 

"இங்க பாரு நந்து உனக்கு புடிக்கலைன்னா விலகி நில்லு, இனி பூனைப் பக்கத்துல வந்த அப்புறம் அண்ணன் கூடப் பார்க்க மாட்டேன் கையை உடைச்சி விட்டுருவேன்" என யுகி சத்தம் போட. 

நண்பன் முன்னாள் தன்னை அவமானப்படுத்தி விட்டான் என நந்தனுக்கு கோவம் வர. 

"வந்தா என்னடா பண்ணுவ?, எங்க கையை உடைப் பார்ப்போம்" என நிலாவின் கையைப் பிடித்து இழுத்து தன்பக்கம் கொண்டு வந்தவன். "என்னடி அடிக்க ஆள் சேர்க்கரியா?யாருக்கும் தெரியாதவாறு அவளது புறங்கையில் தன் கட்டை விரல் நகத்தை வைத்து குத்தி கிள்ளினான். 

"சத்தம் வெளியே வந்தது கொன்னுடுவேன்" என அவள் காதில் சொல்லவும் நந்தன் மறுக்கவில்லை. 

"டேய் அவளை விடுடா.. நந்து இப்போ நீ மட்டும் அவ மேலே இருந்து கையை எடுக்கல"

"என்ன பண்ணுவியோ பண்ணுடா" என நந்தனும் சத்தம் போட.. பூனையின் மீது இருந்த அதீத அன்பின் காரணமாக பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து தன் அண்ணன் என்றும் பாராமல் நந்தனின் தலையையே வேகமாக போட்டுவிட்டான் யுகி. 

இவர்களின் சத்தம் கேட்டு வீட்டின்னுள் இருந்து அனைவரும் ஓடிவர. அதற்குள் யுகி நந்தனின் தலையில் அடித்திருந்தான்.நந்தனின் தலையில் இருந்து ரத்தம் வடிந்தது. 

"டேய் என்னடா பண்ற யுகி? எந்த மார்த்தாண்டம் சின்ன மகனை அதட்டவோ அடிக்கவோ நேரமில்லாமல், பெரிய மகனை தன் இருசக்கர வாகனத்திலையே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். " ஏன் 

யுகி இப்படி பண்ணுனா? எங்க இருந்துடா உனக்கு இவ்வளவு கோவம் வந்துச்சி?" என மணிமேகலை அழுக. 

,, ஷாலினி,வளவன் என அனைவருமே வந்து விட்டனர். 

"நான் பேசிக்கறேன் நீ வாயை திறக்காத" என நிலாவை வேறு மிரட்டி வைத்திருந்தான் யுகி. 

நந்தனின் நண்பன் நந்தனை பிடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றதால் அங்கு நடந்ததை யுகி நிலாவை தவிர யாராலும் சொல்ல முடியவில்லை. 



"நான்தான் அடிச்சேன்" 

"அதுதான் எதுக்கு அடிச்ச?". " 

அவன் சும்மா இல்லாம என்னைய சீண்டிட்டே இருந்தான் கோவம் வந்துச்சி அடிச்சிட்டேன்" என்றான் சாதாரணமாக 

நிலா அந்த இடத்தில் இருக்கும்போதே அண்ணன் தம்பிக்கு இடையில் என்ன சண்டை வந்திருக்கும்?என அறியாதவாரா மணி 

? ,இருந்தாலும் அதை வெளிக்காட்டி மேலும் தன் மீது இருக்கும் விருப்பமின்மையை வளர்க்க வேண்டும் மணிமேகலை. 

அவரும் ஒரு தாய் தானே, அந்த கோவத்தில் பேசக் கூடாது என முடிவு எடுத்திருந்தாலும், அவனாக வந்து பேசுவான் என பல நாள் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என கவிஞர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்?. அவர்கள் சொன்னது போல் நந்தன் தான் ஏதோ கோவத்தில் மணியை ஒதுக்கி வைத்தது போல் அவர் இருந்த பக்கம் கூடப் போவதை தவிர்த்து விட்டான். 

இப்போது யுகிக்கு ஆதரவாக பேசினார் என தெரிந்தால் அவர் கையால் சாப்பிடுவதைக் கூட விட்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச பாசத்தையும் கெடுக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார். 

பொங்கலில் நந்தன் மண்டை பொங்கியது தான் மிச்சம். 

ஒருமணி நேரம் கழித்து மருத்துவமனையில் இருந்து வந்த நந்தனும் மார்த்தாண்டமும். 

உடன் சென்ற நந்தனின் நண்பன் அப்படியே வீட்டிற்குச் சென்று விட்டதால் இவர்கள் இருவர் மட்டும் வந்திருந்தனர். 

வண்டியில் இருந்து இறங்கும் போதே "எங்கடி அவன்?" என கேட்டுக்கொண்டே தான் இறங்கினார் மார்த்தாண்டம். 

"ஏங்க என்னங்க சொன்னாங்க?" 

"நொன்னங்க சொன்னாங்க" என்றவர் "இங்க தான் இருக்கியா வாடா" என யுகியை தரவென்று இழுத்துக் கொண்டு வீட்டின்னுள் சென்றவர்,கதவை அடைத்துவிட்டு யுகி அடி வெளுத்து விட்டார். 

அத்தனை அடி வாங்கினாலும் சத்தம் மட்டும் வரவேயில்லை.அடித்து அடித்து குச்சி உடைந்து மார்த்திக்கு கை வலித்தது தான் மிச்சம். 

அடித்து ஓய்ந்தவர் கதவை திருந்துக்கொண்டு வெளியே வர.மணிமேகலை அவசரமாக உள்ளே ஓடினார்.

அண்ணன் தம்பி பிரச்சனைக்கும்,இப்போது யுகி அடி வாங்குவதற்கும் காரணம் தான் தான் என்று நினைக்கும் போது அழுகை அழுகையாக வந்தது நிலாவிற்கு.

இனி நந்தன் என்ன செய்தாலும் யுகியிடம் சொல்லி அவனை பிரச்சனைக்குள் இழுத்து விடக்கூடாது என்று மட்டும் புரிந்துக் கொண்டாள்.

ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும், அதை புரிந்து கற்றுக் கொள்பவர்கள் மிக சொற்பமே.வளவனின் தங்கையான நிலாவிற்கு அனுபவம் கற்றுக்கொடுக்கும் பாடத்தை கற்றுக் கொள்வதில் சிரமமாக இருக்கவில்லை.

யுகி ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான்.

"யுகிம்மா வலிக்குதாடா..?"

"அம்மா அவன்தான்ம்மா பூனையை வேலைக்காரின்னு சொல்லி  அவன் பிரண்ட் முன்னாடி அவமானப்படுத்தினான். அதுக்கு தான் சண்டை வந்தது" என இவ்வளவு நேரமும் ஏன்  அடித்த என்று கூட கேக்காமல் அடித்த தந்தையிடம் அழக் கூடாது என வீம்பாக இருந்தவன், தாய் வந்து ஒற்றை வார்த்தை கேட்டதும் உடைந்து அழுதுவிட்டான்.

கைகால்கள் முழுதும் அடித்த தடம் தோல் தடித்துக் காணப்பட எல்லோருக்கும் பொங்கல் எப்படி சந்தோசமாக இருக்கும் தங்களுக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்க வேண்டும் என தாயாக கண்ணீர் உகந்ததைவிட  வேறு எதுவும் செய்ய முடியவில்லை மணிமேகலையால்.

"ஏய் மணி அழுதுட்டு உக்கார்ந்து இருந்தா எப்போ சாமிக் கும்பிடறது.நல்ல நேரம் போயிட்டே இருக்கு சீக்கிரம் வா" என கிருஷ்ணம்மாள் வேறு சத்தம் போட்டு விட்டு சென்றார்.

நிலாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நந்தனைப் பார்த்தால் அவன் வெட்டுவது போல் பார்ப்பான்.வளவனிடம் போனால் நீ எதுக்கு அங்கப் போன என தன்னை தான் கடிவான்.எந்தப் பக்கம் போவது என தெரியாமல் ஒரு ஓரமாக நின்றுக்கொண்டாள்.

நந்தனின் நண்பர்கள் இருவர் நந்தனிடம் என்ன நடந்தது என கேக்க அவனோ எதுவும் சொல்லாமல் "நீங்க வாங்க சாமி கும்பிடலாம்" என அழைத்துக் கொண்டு புது வீட்டிற்கு சென்று விட்டான்.

எப்படியோ சாமிக் கும்பிட்டு சாப்பிட்டும் முடித்தாகி விட்டது. நிலாவும் வளவனும் அங்கு சாப்பிட செல்லவில்லை.

மணிமேகலையும், மார்த்தாண்டமும் கூட சாப்பிட அழைத்துப் பார்த்தார்கள்

வளவன் ஒரே பேச்சில்.

"இல்ல மாமா ஏற்கனவே நந்தன் கோவமாக இருக்காங்க இதுல நாங்க அங்க வந்தா இன்னும் கோவமா ஆகிடுவாங்க. இங்கையே இருந்துக்கறோம் அம்மா சமைச்சி வெச்சிட்டு தான் போனாங்க. இப்போ வந்துடுவாங்க"  என மறுத்துவிட்டான்.

அவன் மறுத்தாலும் மனம் கேக்காமல் சாப்பாடு பொங்கல் அனைத்தையும் அங்கிருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு தான் சென்றார் மணிமேகலை.

அன்றில் இருந்து  யுகியும் நந்தனிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.

யார் பேசினாலும் பேசவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் என்னுடைய கவுரவத்தை பிடித்துக் கொண்டு தான் சுற்றுவேன் என நந்தனும் யாரிடமும் பேசவில்லை. தாயிடமும் சகோதரனிடம் பேசாமல் இருந்த நந்தனால் நிலாவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.


Leave a comment


Comments 2

  • P Priyarajan
  • 3 months ago

    Ithu enga poi mudiumo.... Eagarly waiting for nxt epi😍😍😍😍😍

  • பிரியாமெகன் @Writer
  • 2 months ago

    Tq sis

  • F Fajeeha Fathima
  • 3 months ago

    பொங்கலில் நந்தனின் மண்டை பொங்கியது தான் மிச்சம்... இதை படிக்கிறப்போ சிரிப்பு சிரிப்பா வருது... நல்லா இருக்கு ஸ்டோரி எல்லாரையும் பகச்சிக்கிட்டு நீ தனியாளா இருக்கப்போறியாடா நந்தா

  • பிரியாமெகன் @Writer
  • 2 months ago

    Tq sis


    Related Post