இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -18 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 05-04-2024

Total Views: 32584

நிலாவைக் கண்டாலே கோப அனல் எரிய, அவளை அடிக்கும் விதம் மாறியது.

முன்பாவது கொட்டு, கிள்ளு, என சிறிய சிறிய அடியோடு விட்டிருந்தவன், அதை தாண்டிப் போய் பார்க்கும் போதெல்லாம் குச்சியாலும் கிரிக்கெட் மட்டையாலும் தாக்க ஆரம்பித்திருந்தான்.

"ப்ளீஸ் அடிக்கக்காதீங்க வலிக்குது இனி உங்க வீட்டுக்கு வர மாட்டேன்."

"அவன் என்னடி உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரான், இனி அவன் வந்தான் நீ செத்த பார்த்துக்கோ,. நான் அடிக்கிறதை எவங்கிட்டையும் சொல்லக்கூடாது".

"சொல்ல மாட்டேன்".

"சொன்னா என்ன பண்ணலாம்?"

"இல்ல சொல்ல மாட்டேன்".

"சொன்னா என்ன பண்ணலாம்னு கேட்டேன்.?"

"அடிங்க."

"ம்ம் நீயே சொல்லிட்ட, இனி அதைதான் செய்யப் போறேன்  உன்னை  அவனோட பார்த்தேன் முதுகு எலும்பை எண்ணிடுவேன், ரெண்டுபேரும் சேர்ந்துட்டு என்னைய அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்களா?" என யுகியை அடிக்க முடியாத கோவத்தில் நிலாவை அடித்தான்.

"வலிக்குது யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன் விடுங்க ப்ளீஸ்" என கீழே அமர்ந்து அழ 

"போ". என நிலாவை அனுப்ப அவள் ஒரே ஓட்டம் தான் அங்கிருந்து ஓடியே விட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் ராஜியிடம் ஒரே அழுகை.

"அம்மா நம்ப இங்க இருந்து வேற எங்கையாவது போய்டுலாம்மா, எனக்கு இந்த ஊரே பிடிக்கல. இங்கையே இருந்தா நான் செத்துடவேனோன்னு பயமா இருக்கும்மா, அம்மா போய்டலாம்மா ப்ளீஸ்" என நிலா கதறி அழுதாள் தாயால் அதைப் பார்க்க முடியவில்லை. சிறிய குழந்தையின் வாயிலிருந்து செத்துடுவேனோன்னு பயமா இருக்கு என  அழும் குழந்தையை எப்படி விட முடியும்.

"அம்மு இப்படிலாம் பேசக்கூடாது. யார் என்ன பண்ணாங்கன்னு சொல்லு?அம்மா வந்து கேக்கறேன், புள்ளைய இந்த அளவுக்கு பயமுறுத்தி வெச்சிருக்காங்க, எவன்னு தெரிஞ்சா கையை காலை உடைச்சி மிரட்டுன வாயை கிழிச்சிடுவேன்" என்றார் கொண்டையை தூக்கிப் போட்டுக்கொண்டே.

எங்கு இவரிடம் சொன்னது தெரிந்து நந்தன் அதற்கும் அடிப்பானோ என பயம் எழ , "இல்லை யாரும் எதும் சொல்லல்ல நான்  தான் ஆயா திட்டிட்டே இருக்குதேன்னு சொன்னேன்" என பேச்சை மாற்றி விட்டாள்.

"ஆயா சொன்னதுக்கு தான் அழுதியா அம்மு வேற ஒன்னுமில்ல தானே"

"இல்லம்மா"  என்று தலையை ஆட்டிவிட்டு அவரது மடியில்லையே படுத்து உறங்கிவிட்டாள்.

அடுத்து வந்த நாட்கள்  யாவிலும் நந்தன் கண்களுக்கு தெரியாமல் பதுங்கி பதுங்கி வாழ்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவன் நிழலைக் கூட அடையாளம் கண்டுக் கொண்டு அவன் இருந்த திசைப் பக்கம் கூட திரும்பாமல் பார்த்துக்கொண்டாள்.

ஒருவாரம் கடந்திருக்கும்  அதுவரையிலும் யுகியிடம் கூட மாட்டாமல் இருந்த நிலா ஒரு மாலைப் பொழுதில் யுகியின் கையில் வசமாக சிக்கிக்கொண்டாள்.

"பூனை நில்லு"

"யுகி." அவனை மட்டும் தான் பெயர் சொல்லி அழைப்பாள் அதை கேட்டுக் கூட கிருஷ்ணம்மாளும் நந்தனும் சத்தம் போட்டிருக்கின்றனர். நந்தன் சொன்ன அனைத்தையும் மாற்றிக் கொள்ள முடிந்த அவளால் யுகியை பெயர் சொல்லி அழைப்பதை மட்டும்  மாற்றிக் கொள்ள முடியவில்லை.

"எதுக்கு இப்போ என்கிட்ட பேச மாட்டிங்கிற.?"

"யுகி பிரச்சனை வேண்டாமே ஏற்கனவே" என ஆரம்பித்தவள் எங்கு உளறி விடுவோமோ என்று இருக்கரம் கொண்டு வாயை மூடிக் கொண்டாள்.

"என்ன ஏற்கனவே?" என கண்கள் இடுங்க கூர்ந்துப் பார்த்தான்..

"அது..ஒன்னுமில்ல, இங்கப் பாரு நான் ஏதாவது சொல்லுவேன் அப்புறம் நீ போய் உன் அண்ணனை அடிப்ப,அப்புறம் பிரச்சனை பெருசாகும் இதெல்லாம் தேவையா.?%

"அதுக்காக தான் என்கிட்ட பேசலையா?"

"அதுவும் காரணம் தான், இருந்தாலும் நீ அவரை அடிச்சிருக்கக் கூடாது யுகி தலையில ரத்தம் வர அளவுக்கா அடிப்ப"

"அவன் மட்டும் என்ன உன்னைய வேலைக்காரின்னு சொல்றான்"

"அவர் சொன்னாலும்,சொல்லலைன்னாலும் நான் வேலைக்காரி தானே,  என்ன தான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லும்,  உங்கக் கூட பழகறோம்ன்னு நாங்களும் உங்க தகுதிக்கு வந்துட முடியாதுல"

"உன்கிட்ட பேசுனா நீ இதையே தான் சொல்லிட்டு இருப்ப.."

"வேற என்ன சொல்லணும்.?"

"என்கிட்ட  ஏன் பேசல அதை சொல்லு".

"பேசறேன்"

"இவ்வளவு நாள் ஏன் பேசலைன்னு கேட்டேன்"

"அண்ணனும் தம்பியும் ஒரேப் போல கேள்வி கேட்டு உயிரை வாங்கறாங்கப்பா முடியல" என பெரும்மூச்சி வாங்க,

"சரி பெரும்மூச்சி விடாத. வா இனி பேசாம இரு உன் மண்டையையும் உடைக்கறேன்" என்றான்.

ம்ம் என்று எப்போதும் போல் பேச ஆரம்பித்து விட்டாள்.

"யுகி."

"என்ன.?"

"நான் உங்கிட்ட பேசுறேன்ல"

"அதுக்கு?".  அவள் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் தான் இந்த இழு இழுப்பாள் என தெரியும் இப்போது என்ன காரியம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்தான்.

"அது  நீயும் அவங்களும் பேசிக்கறது இல்லைன்னு ஷாலு சொன்னா, எனக்காக நீங்க பேசிக்காம இருக்கறது கஷ்டமா இருக்கு, அவங்ககிட்ட ஏற்கனவே அத்தை பேசறதில்ல இதுல பேசாம இருந்தா அந்தக் கோவம் மொத்தமும் என்மேல தான் வரும்."

"இல்லனா மட்டும் அவன் பேசிக் கிழிச்சிடுவான்  கம்முன்னு இரு, எனக்கு தெரியும் எப்போ பேசனும்னு." என்று முடித்து விட்டான்.

அந்த வாரம்  முழுவதும் காரணமே இல்லாமல் நிலா நந்தனிடம் அடிவாங்கினாள்.

ஒருநாள் மார்த்தாண்டம் கடையில் இருந்து நேரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டார். வந்தவர் கையில் ஐஸ்கிரீம் வித விதமாக இருந்தது,அவரது குழந்தைகளுக்கு வாங்கி வந்திருந்தார்.

அனைவரும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்,

நேராக உள்ள வந்தவர்,  "ஷாலு,நிலாவும் வளவனும் இருந்தா  கூட்டிட்டு வா.."

"ம்ம் சரிப்பா" என்றவள் நிலாவின் வீட்டை நோக்கி ஓடிப் போக, அங்கு வளவன் இல்லை, நிலா மட்டும் தான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

"நிலா அப்பா உன்னைய வர சொன்னாரு வா.? உங்க அண்ணா எங்க?"

"என்னயவா.. அண்ணா வேலைக்குப் போயிருக்கான்"

"ம்ம்"

"உங்க அண்ணா இருக்காங்களா?"

"ஆமா ஏன்?"

"அவங்க இருந்தா  எதுக்கு வந்தேன்னு அடிப்பாங்க இதை இவகிட்ட சொல்ல முடியுமா?" என்று மென்று முழுங்கியவள்,"ஒன்னுமில்ல சும்மா தான் கேட்டேன் வரேன் போ" என்றாள்.

"நீ வா கையோட  கூட்டிட்டுப் போறேன் இல்லனா அப்பா என்னைய தான் பேசுவாரு"

"சரி," என ஷாலினியுடன் நடந்தாள்.

"இந்தாங்க இதுல ஐஸ்கிரீம் இருக்கு சாப்புடுங்க." என்று நிலாவும் ஷாலினியும் வந்ததும் மார்த்தி சொன்னார்.

"ஐ  எனக்கு வெண்ணிலா தான் வேணும்." என முதல் ஆளாக யுகி ஓடிப் போய் எடுக்க..

"டேய் எல்லாமே கோன் தாண்டா இருக்கு, சாக்லேட் நல்லா இருக்கும்.

"இல்லை எனக்கு வெண்ணிலா தான் வேணு"ம் என யுகி அடம்பிடித்தான். 

"என்னத்தையோ தின்னுங்க?" என்றுவிட்டு சோபாவில் தலை சாய்த்து படுத்துவிட்டார். 

யுகியும் ஷாலினியும் எடுத்ததுப் போக இரண்டு தான் மிச்சம் இருந்தது, நந்தன் எடுத்ததும் தான் எடுக்கலாம் என தள்ளி நின்றுக் கொண்டாள் நிலா. 

அவனோ உள்ளே இருந்த இரண்டு ஐஸ்கிரீமையும் மாறி மாறிப் பார்த்தவன். 

"அப்பா இதுல வெண்ணில தான் இருக்கு"". 

"இருக்கறதை எடுத்துக்கோ நந்து நான் எல்லாத்துலயும் ஒன்னு போடச் சொன்னேன் கடைக்காரன் வெண்ணிலாவே போட்டுட்டான் போல" 

"எனக்கு வெண்ணிலா புடிக்காது" என நிலாவைப் பார்த்துக்கொண்டே அழுத்தமாகச் சொன்னான். 

"அதுக்காக மாத்தவா முடியும்? இருக்கறதை சாப்பிடுடா." "இவ பேர் இருக்க எதையும் நான் சாப்பிட மாட்டேன், எனக்கு வேண்டா.. எவனுக்கும் வெண்ணிலா புடிச்சிருக்கோ அவன்கிட்டயே குடுங்க 

" என்று எழுந்து மார்த்தியின் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்தவன். 

"எனக்கு எது வேணுமோ அதை வாங்கிக்கறேன்" என அங்கிருந்து சென்று விட்டான். 

அவள் பெயர் இருக்க ஒரே காரணத்திற்காக வேண்டாம்  

என்கிறானா ஒருவருடத்திற்கு எந்த விசேஷமும் செய்யக் கூடாது என்று விட்டனர்.வளவனும் 

, நந்தனும் பனிரெண்டாம் வகுப்பிற்கு செல்ல, யுகிக்கு இந்த வருடம் பத்தாம் வகுப்பு. எப்போதும் மாலை சிறப்பு வகுப்புகள் தான், ஷாலினியையும் பள்ளியிலயே டியூசன் சேர்த்திவிட்டனர், ஓடிக்கொண்டே இருந்தனர் 

. படிப்பில் கவனத்தை செலுத்துவதால் நந்தனால் நிலாவின் பக்கம் செல்ல முடியவில்லை. 

அந்த வருடம் மாரியம்மன் கோவில் திருவிழா போட்டனர். எப்போதும் கோலாகலமாக நடக்கும் திருவிழா அது. இரண்டு வாரம் திருவிழாப் போட்டு மூன்றாம் வாரம் மாவிளக்கு, தீசட்டி எடுத்தல் தீமிதி திருவிழா , கெடாவெட்டு, மஞ்சள்நீர் என மூன்று வாரமும் ஊர் கலகலவென்று இருக்கும். 

அதுபோல தான் இந்த வருடமும் ஆரம்பமானது, ஆனால் முடிவு நிலா நந்தனின் கையில் சிக்கி தவித்தாள். 

மாவிளக்கு எடுத்துச் செல்ல வேண்டும், ராஜி அதற்காக மாவை இடித்துக் கொண்டிருந்தார். 

மணிமேகலை ராஜி இடித்த மாவை சளித்துக் கொண்டிருக்க, கிருஷ்ணம்மாள் பாகு காய்த்துக் கொண்டிருந்தார். 

"மணி, இன்னைக்கு செல்வா வரேன்னு சொன்னாலே அவளுக்கு மாவிளக்கு கட்டிக்க புடவை எடுத்து வெச்சியா.?" 

"அத்தை வெச்சிட்டேன்." 

"அதோட உன்னோட காசுமாலையையும் எடுத்து வாய் போட்டுக்கட்டும் " 

வேறொரு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக கிருஷ்ணம்மாளிடம் எதிர்த்து பேசியிருப்பார்.மணிமேகலை மார்த்தியிடம் அமைதியாக போவது போல் கிருஷ்ணம்மாளிடமும் அமைதியாக போய்விடுவார்.


Leave a comment


Comments


Related Post