இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 15 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 07-04-2024

Total Views: 22328

"அப்பா...." என அவன் கத்த,

"தம்பி...."என ஒருவனை அழைத்தார் அவர்.

அவர் அருகே வந்து நிற்க "இங்க பக்கத்துல ஒரு மலைக்கோவில் இருக்கு இல்ல....?!" என கேட்க.

"ஆமாங்க ஐயா...." என்றார் அவர்.

"இங்க இருந்து எவ்ளோ தூரம்...?" என கேட்டார்.

"ஒருகிலோ மீட்டர் தூரம் இருக்குங்கய்யா..." என அவர் கூற.

"வண்டி எடுத்துட்டு போய்... அம்மன் கழுத்துல இருக்க தாலிய எடுத்துட்டு வாங்க..." என்க.

அங்கு இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி என்றால் அருணாவிற்கும் பத்மினிக்கும் அருவியை நினைத்து கவலை. 

அருகில் நின்றிருந்த மனைவியை பார்த்தவர் "உன் பையன் எங்க இருக்கான்னு கேளு..." என்க.

"ஏன்...?" என்றார் அவர்.

"கேளு..." என்றதோடு சக்ரவர்த்தி நிறுத்தி கொள்ள.

சற்று நகர்ந்து சென்றவர் அவனை அழைத்தார்.

அவனோ ஒரே ரிங்கில் எடுத்தவன் "அம்மா... ஆல்மோஸ்ட் ரீச் ஆகிட்டேன்...." என்க.

"தோப்பு வீட்டுக்கு வா..."என்றார் அவர்.

"ஏன்... எல்லோருமே அங்கதான் இருக்கீங்களா... அந்த வாசு பையன்....?"என கேட்க.

"அவனும்தான்...." என்றவர் போனை அனைத்துவிட "வந்துட்டானாம்...." என கணவரிடம் தகவல் தெரிவித்தார்.

தாலி எடுக்க சென்றவரை நிறுத்தி "ரெண்டா எடுத்துட்டு வாங்க..." என கூற அங்கு இருந்த அனைவருக்கும் குழப்பம்.

அவரும் சரி என தலையசைத்து சென்றார்.

தான் நினைத்த காரியம் வெற்றி அடையும் தருவாயில் இருந்தும் மகிழாவினால் மகிழ முடியவில்லை.

காரணம் கழுத்தில் தாலி ஏறினால் மட்டுமே அவளுக்கு நிம்மதி.

ஆனாலும் அருவி தனக்காக பேசுவாள் என அவளும் எதிர்பார்க்கவில்லை.

பாலன் அவன் அன்னை என அனைவரும் உள்ளுக்குள் மகிழ்ந்து இருந்தனர்.

வாசுதான் தன் காதல் மொட்டு கருவிலேயே கருகியதை நினைத்து வெம்பிப் போனவனின் கோபம் அனைத்தும் மகிழாவின்மேல் திரும்பியது.

தோப்பு வீட்டினுள் கார் நுழைந்தது.

அங்கு கூட்டமாக இருந்ததை பார்த்து துணுக்கற்ற சுரேந்தர் சுந்தரிடம், "சுந்தர்... என்னடா ஒரே கூட்டமா இருக்கு...?" என கூற.

"எனக்கு மட்டும் எப்படி தெரியும்... வா... போய் பார்த்துக்கலாம்..." என்றவன் காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு இருவரும் இறங்கவும் தாலி எடுக்க சென்றவர் வரவும் சரியாக இருந்தது.

சுரேந்திரன் இறங்கியதும் அவன் கண்களில் முதலில் விழுந்தது அருவிதான்.

அவளை பார்த்ததும் அவன் கண்கள் கோபத்தை தத்தெடுக்க வந்ததும் இவ முகத்துலயா முழிக்கனும் என நினைத்தவன் கூட்டத்தை தாண்டி உள்ளே செல்ல அங்கு வாசு நின்றிருந்த கோலம் அவனுக்கு ஒருவித பதட்டத்தை உருவாக்க வேகமாக அவன் அருகில் சென்றான்.

"வாசு..."என அவன் குரலில் திரும்பியவன் "சுரேன்..." என அவனை அணைத்துக் கொண்டான்.

அவன் முதுகை நீவிவிட்டவாறு இருந்தவன் "என்னடா... ஏன் ஒரு மாதிரி இருக்க... என்ன இங்க கூட்டம்...?" என கேட்க.

அவன் எதுவும் பேசவில்லை.

அருவியும் அவனை பார்த்தவளின் கண்கள் அவன் நெற்றியைத்தான் முதலில் கண்டது.

வாசு கூறியது போல அவன் வெள்ளை முகத்தில் அந்த வலதுப்புற நெற்றித் தழும்பு நன்றாகவே தெரிந்தது.

அவனை பார்த்ததும் அவளும் திரும்பிக் கொள்ள .

"இந்தர்...." என அழைத்தார் சக்கரவர்த்தி.

அவரின் பிரத்யேக அழைப்பு அது.

அவரின் அழைப்பு அவனுக்கு ஏதோ போல இருக்க திரும்பி அவரை பார்த்தான்.

அவர் இருவரையும் பார்த்துவிட்டு "ரெண்டு பேரும் முன்னாடி வாங்க..." என அழைக்க.

வாசு அப்படியே நிற்க.

சுரேந்தர் முன்னால் வந்து என்ன என கேட்க.

அப்போது அவரின் அருகில் நின்றவரை பார்த்து "அவர் கையில இருக்க தாலிய வாங்கு...." என்றார்.

அவனுக்கோ அதிர்ச்சி

"அப்பா... என்ன சொல்றீங்க...?" என கேட்க.

"சொல்றத செய் வாசு நீயும் வா...." என்க.

"அப்பா... என்ன பண்ணிட்டு இருக்கீங்க...?" என கேட்டான் அவன்.

அவன் அருகில் வந்த அருணா "அப்பா சொல்றத கேளு..." என்க.

"ரெண்டு பேரும் அதை வாங்குங்க..." என்க.

பெருத்த அமைதிக்கு பின் வாசு முன்னால் வந்து அவர் நீட்டிய தாலிகளில் ஒன்றை வாங்கினான்.

"உனக்கு தனியா சொல்லனுமா வாங்கு..." என சக்கரவர்த்தி கூற.

அவரை பார்த்து முறைத்தவன் "தாலிய  வாங்கி அத அருவி கழுத்துல கட்டு..." என்க.

அவனுக்கு உலகம் தலைகீழாக சுற்றியது.

அங்கு இருந்த அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி.

"அப்பா..."என அவன் அழைக்க "உன்கிட்டதான் சொன்னேன் அருவி கழுத்துல கட்டுன்னு...." என அதிகாரமாக கூற.

அவளும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த முகமே கூற.

கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவளை பார்த்தான்.

மனதில் அவள்மீது அத்தனை வன்மம் அவனுக்கு அவளும் அவ தாவணியும் என நினைத்தவன் அவள் அருகில் சென்றான்.

அவளை நோக்கி அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் பார்த்தவளுக்கு ஏதோ எமன் அவளின் கண்முன்னால் நடந்து வருவதை போன்று இருக்க அவளை பார்த்து முறைத்துக் கொண்டே சென்றான்.

"அருவி... முன்னால வா..." என மனைவியை பார்க்க அவரோ வேகமாக அவள் அருகில் சென்றார்?

இப்போது வாசுவை பார்க்க அவனும் அவரைத்தான் பார்த்துக் கொண்டு நின்றான்.

"போய் கட்டு..." என கூற அவனும் மெல்ல அடி எடுத்து வைத்தான் மகிழாவை நோக்கி.

அவளும் நல்ல பிள்ளை போல குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.

அவன் அவளை நோக்கி வருவதை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் சொல்லெனா மகிழ்ச்சி ஊற்றெடுக்க அந்த மகிழ்ச்சி என்பதே இனி அவள் வாழ்வில் இருக்கக்கூடாது என முடிவெடுத்து சென்ற வாசு அவள் அருகில் நின்றான்.

"நாலுபேரும் முன்னாடி வாங்க..." என தர்மன் கூற.

அவர்களும் அப்படியே செய்தனர்.

"இப்ப தாலிய கட்டுங்க...." என்றார் அவர்.

ஒருமுறை கண்களை மூடித்திறந்த சுரேந்திரன் யோசிக்காமல் அருவியின் கழுத்தில் மஞ்சள் கிழங்கு கட்டி இருந்த மஞ்சள் கயிரை கட்டினான்.

அவளின் ஒருதுளி கண்ணீர் அவனின் கைகளில்பட்டது.

"இனி இதுதான் உனக்கு நிரந்தரம்..." என அவள் காதருகில் கூறியவனை ஏறெடுத்து அருவி பார்க்க அவன் கண்களிலோ அத்தனை வன்மம்.

உள்ளுக்குள் திக்கென இருந்தது அவளுக்கு.

வாசுவும் மகிழாவின் கழுத்தில் முடிச்சிட்டவன் "நினைச்சத சாதிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோஷப்படாத... இனிதான் இந்த வாசுவோட உண்மை முகத்த பாக்கப்போற..."என்றான் அவள் காதருகில்  அவளோ அவனின் வார்த்தையில் நிலைகுலைந்து போனாள்.

தாலி கட்டிய சுரேந்திரன் ஒருநிமிடம் கூட தாமதிக்காமல் அவ்விடம் விட்டு அகன்று காரை எடுத்துக்கொண்டு சீறிப்பாய்ந்தான்.

அவனின் வேகமே அவனின் கோபத்தின் அளவை கூறியது.

போகும் அவனையே வெறித்து பார்த்தாள் அருவி.

எப்போதும் இருவருக்கும் ஏழாம்  பொருத்தம் இனி இந்த திருமண வாழ்க்கையில் எப்படி பொருந்தி வாழ்வது என்ற பயம் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

வாசுவும் கிளம்பி போக பார்க்க "வாசு..." என்ற அதட்டலில் அப்படியே நின்றான்.

"ஜோடியாதான் வீட்டுக்கு வரனும்..." என்றார் சக்கரவர்த்தி.

அவன் அப்படியே நின்றுவிட்டான்.

இப்போது அங்கு கூடி இருந்த அனைவரையும் பார்த்து "இதுல உங்க எல்லோருக்கும் சந்தோஷம்னு நம்பறேன்... நாளைக்கு விருந்துக்கு வந்துடுங்க...." என்றவர் மகிழாவை பார்த்து "இப்பவும் வாசு இத செஞ்சு இருப்பான்ற நம்பிக்கை எனக்கு இல்ல... ஒரு பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடக் கூடாதேன்னுதான் இத செஞ்சது வாசு பண்ண தப்பு உண்மைன்னு நிரூபிக்கற வரைக்கும் நீ உன் வீட்டு ஆட்களோட எந்த உறவும் வச்சிக்க கூடாது இது  இந்த பஞ்சாயத்து தீர்ப்பு...." என்றவர் "கிளம்பலாம்..." என்க.

அவளுக்கு அதிர்ச்சி.

ஆனாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவள் சரி என்னும் விதமாக தலையாட்டினாள்.

அதுவும் அவருக்கு சந்தேகதத்தை வரவழைத்தது.

"சரி பார்ப்போம்..." என நினைத்தவர் எல்லோரும் கிளம்பலாம் என்க.

அவரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அனைவரும் கிளம்ப இப்போது அங்கு சக்ரவர்த்தியின் குடும்பம் மட்டுமே நின்றிருந்தனர்.

"தர்மா..." என அவர் தம்பியை அழைக்க அவரோ "சொல்லுங்கண்ணா..." என்றபடி முன்னால் வந்து நின்றார்.

"உனக்கு ஏதாச்சும் வருத்தமாப்பா...." என கேட்க.

"அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா... இப்படி ஒரு பழி வரும்னு நான் எதிர்பார்க்கல..." என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

பத்மினியோ "நீங்க எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் மாமா.. விடுங்க வாங்க வீட்டுக்கு போலாம்... சுரேந்தர் வேற கோபமா போயிருக்கான்..." என்க.

"ம்ம்ம்ம்.... என்றவர் அருணாவை பார்த்து "இப்ப உனக்கு சந்தோஷம்தான...?!" என கேட்க.

"சந்தோஷம்தான்....ஆனா வாசு அவன இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு...." என்றார் அவர்.

"விடு இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு சீக்கிரம் கண்டுபிடிக்கலாம்..." என்க.

அங்கு நின்றிருந்த மகிழாவிற்கு குப்பென வியர்த்தது.

எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என பயந்ததில் வேர்த்து வழிய அவளின் பதட்டத்தை குறித்துக் கொண்ட சக்கரவர்த்தி "என்னம்மா மகிழா... அதான் நீ நினைச்சது நடந்துடுச்சே... இன்னும் வேற ஏதாச்சும் பிளான் இருக்கா...?" என கேட்க.

"ஐயா..."என அவள் அதிர.

"இப்பவும் சொல்றேன்... என் பையன் அந்த மாதிரி பையன் இல்ல... அத நான் அடிச்சே சொல்லுவேன்... என்னால ஈசியா உங்க ரெண்டு பேரையும் செக் பண்ணி உண்மைய நிரூபிக்க முடியும்...  அப்பறம் ஏன் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்னு பாக்குறியா... அருவி கேட்டுக்கிட்டதாலதான்... ஆனா உன் வார்த்தை பொய்... என் பையன் தப்பு பண்ணலன்னு நான் இந்த ஊருக்கு நிரூபிப்பேன்... என் பையன் மேல விழுந்த கலங்கத்தை துடைப்பேன்..." என கூற.

அங்கு இருந்த ஒவ்வொருவரும் அவரின் வார்த்தைகளை கேட்டு மெய் மறந்து நின்றனர்.

எத்தனை அன்பு அவன் மீது இருந்து இருந்தால் இத்தனை திடமாகவும் உறுதியாகவும் அவளிடம் கூற முடியும் என நினைத்தவாறு இருக்க வாசுதேவன் பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டான்.

அவன் கண்ணீர்த் துளிகள் அவரது சட்டையை நனைக்க அவன் முதுகை நீவியவர் "எனக்கு உன்னை தெரியும்டா..." என்க.

"தேங்க்ஸ்ப்பா..." என்றான் அவன்.

"வாங்க வீட்டுக்கு போலாம்... கோபமா போனவன் என்ன பண்ணிட்டு இருக்கானோ...?" என அவர் கூற.

அருவிக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது.

ஏற்கனவே தன்னை கண்டாலே ஆகாது அவனுக்கு.

இப்போது காலம் முழுதும் அவன் உடனே வாழும் விதியை நொந்தவள் இனி என்னென்ன செய்வானோ என்ற பதட்டத்தில் இருக்க.

அவளின் முக மாறுதலை வைத்தே அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்த அருணா அவளின் தலையை வாஞ்சையாக தடவினார்.

"சுரேன நினைச்சு பயப்படுறியா... அருவி நாங்கலாம் இருக்கோம்... நீ எதுக்கும் பயப்பட கூடாது சரியா..." என்க.

அரைமனதாக தலையாட்டியவள் மனம் இன்னும் தெளியவில்லை.

"எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத சரியா வா போலாம்..." என அழைக்க அப்போது அவர்களின் அருகில் வந்த வேலு "அப்போ நாங்க கிளம்பறோம்ங்க..."என்க.

தர்மனோ "எங்க போற வேலு... பிள்ளைய வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போ..." என்க.

"பத்மினியும் ஆமாண்ணா..." என்க.

சுசிலா வந்து அருவியை அணைத்துக் கொண்டாள்.

மறந்தும் மகிழாவை பார்க்கவில்லை.

அவளை அணைத்தவள் "வீட்டுக்கு வந்துட்டு போடி..." என்க.

வேறு வழி இல்லாமல் சரி என தலையசைத்தாள் அவள்.

அருவி அங்கு தனியாக நின்றிருந்த மகிழாவை நோக்கி சென்றவள் அவளை அணைத்து அவள் காதருகில் "உனக்கு வாசுவ பிடிச்சுருக்குன்னா... அத நேராவே சொல்லி இருக்கலாம் மகி... இந்த குறுக்குவழி தேவைப்பட்டு இருக்காது... நானே மாமாட்ட பேசி உங்க கல்யாணத்த நடத்தி வச்சிருப்பேன்...ஆனா இன்னைக்கு நீ நடந்துக்கிட்டது... நம்ம இத்தனை வருஷ உறவ அசிங்கப்படுத்திட்ட... இன்னைக்குதான் உங்கூட பேசறது கடைசி... இனி எக்காரணம் கொண்டும் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்... என கூறிவிட்டு அருணாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

மகிக்கு அவளது வார்த்தைகள் அதிர்ச்சியை அப்படியே மயங்கி சரிந்தாள்.....



Leave a comment


Comments


Related Post