இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 11-04-2024

Total Views: 22689

செந்தூரா 9


ஏற்கனவே சுபாஷ் கண்டிப்பாக நடந்துக் கொண்டதாலும் தாரிகா பள்ளி இறுதி ஆண்டில் இருப்பதாலும் செந்தூரன் மற்ற இளைஞர்களை போல அவளிடம் நெருக்கம் காட்டாமல் பாசத்தையும் அன்பையும் காட்டினான்.


கல்லூரி இறுதி ஆண்டில் அவன் படித்துக் கொண்டு இருக்கும் போது, சுபாஷ் தன் தொழிலை நன்றாக விரிவுபடுத்தியிருந்தார், அதற்காக தன் திருமண நாள் அன்று நெருங்கிய நண்பர்களுக்கு அவருடைய வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.


செந்தூரனை அழைத்து, “ஆட்களை அனுப்பி வைக்கிறேன், வீட்டை கொஞ்சம் பூச்சரங்களால் அலங்காரம் செய்து வைக்க முடியுமா?” என்று கேட்டார். முதன்முறையாக அவராக வந்து அவரிடம் இப்படி கேட்கவும், “வெளி ஆட்கள் எல்லாம் வீட்டிற்குள் எதற்கு? நானே பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.


அவனை ஒரு முறை நம்பாமல் பார்த்து விட்டு, “சரி உன் இஷ்டம், தேவைப்பட்டால் ஆட்களை கூப்பிட்டுக் கொள்” என்று சொல்லிவிட்டு சென்றார்.


“செந்தூரா நீ ஏன்டா இதையெல்லாம் செய்துக்கிட்டு படிக்கிற வேலையை பார்” என்றார் சாரதா. “இல்லை அத்தை, நான் பார்த்துக்கிறேன்” என்றான். “தனியாக எப்படி செய்வ? எனக்கும் சமையல்கட்டில் வேலை இருக்கு, சரி இரு நான் தாரிகாவை உனக்கு உதவ சொல்லி அனுப்பறேன்” என்று விட்டு போனார்.


செந்தூரன் பூச்சரங்களை கையில் எடுத்து கொண்டிருந்த நேரம், தாரிகா சிவப்பும் தங்க நிறமும் கலந்த பெரிய லெகங்காவை அணிந்துக் கொண்டு அவன் முன்னே வந்து நின்றாள். “என்ன மாமா ஹெல்ப் பண்ணனும்?” என்றவளை நிமிர்ந்து பார்த்தான். இமைக்கவும் மறந்து போனான்.


அந்த சிவப்பு நிற லெகங்கா முழுவதும் தங்க ஜரிகைகளால் டிசைன் செய்யப்பட்டு இருந்தது. வெண்ணிற இடை முழுவதுமாக தெரிய அங்கிருந்து பார்வையை நகர்த்த முடியாமல் சில நிமிடங்களை கடத்தியவன் சற்றே மேல் நோக்க கண்களை விரித்தான். தங்க நிறத்திலான மேல்சட்டையில் அவள் மேனியும் தங்கம் போல ஜொலித்தது. அவள் மேனி காந்தம் போல் அவன் கண்களை இழுத்துக் கொண்டிருக்க, தன்னை மறந்து அவளை மேலிருந்து கீழாக ரசித்து பார்த்தான்.


அவன் நிலையை உணராமல் அவன் முன்னே தன்னை அப்படியும் இப்படியும் திருப்பி காட்டி, “டிரஸ் நல்லா இருக்கா மாமா? எப்படி என் செலக்சன்?” என்றாள்.


அவளை அழுத்தமாக பார்த்து தொண்டையை செருமியபடி, “ஏண்டி மேல எதுவும் போடாம வந்திருக்க?” என்றான் கிசுகிசுப்பான குரலில். தோள்பட்டையில் ஓரமாக படரவிட்டிருந்த மெல்லிய தங்க நிற மேலாடையை காட்டினாள். “இதோ இருக்கே மாமா?” என்றாள்.


அதை மேலே போட்டாலும் போடாவிட்டாலும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை என்று நினைத்தவன், “இப்படியா என் முன்னாடி வந்து நிப்ப? நல்லவேளை வெளியாட்களை வரவேண்டாம்னு மாமா கிட்ட சொல்லிட்டேன். காயத்ரி போடுவது போல தாவணி கட்டிட்டு வா, அன்றைக்கு என்னவோ தாவணி போட்டுட்டு என் முன்னாடி வரவே வெட்கப்பட்டுனு ஓடி ஒளிஞ்சிக்கிட்ட. இப்ப என்ன தாவணியே போடாமல் என் முன்னாடி வந்து நிக்கிற?” என்றான் அவளை பார்த்து முறைத்தவாறு.


“ஐயோ மாமா, இது லெகங்கா, டிசைனே இப்படித்தான்” என்றவளை முறைத்தான். “அப்போ இந்த உடையில் தான் பங்கஷனில் இருக்க போறியா? போய் முதல்ல டிரஸ் மாத்திட்டு வா” என்றான்.


“போடா செவப்பா, அப்பா சொல்றது போல நீ பட்டிக்காடு தான். இன்னைக்கு விருந்துக்கு வரும் பெண்களை பாரு, எப்படி எல்லாம் உடுத்திட்டு வர்றாங்கனு” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அவள் சொல்வதும் சரிதானே? இன்றைய நாகரீக உலகில் பெண்கள் இவளை விட கவர்ச்சியான உடை அணியத்தான் செய்கிறார்கள். அதைகாட்டிலும் இது ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை என்று அவனும் உணர்ந்தே இருந்தான். ஆனால் அவளை இந்த உடையில் பார்க்கும் போது அவனுக்கு அல்லவா தலை கிறுகிறுத்துபோனது. 


விருந்துக்காகவே பிரத்தேயகமாக உடுத்தியிருந்தவளை உடை மாற்றச் சொல்லியதால் கோபித்துக் கொண்டாள் என்று உணர்ந்தவன், “சரி சரி, அந்த மேலாடையாவது நல்லா போட்டுக்கோ, நீ மட்டும் என்னை சர்ட் பட்டன் ஒழுங்கா போடுனு சொன்னதுக்கு நான் கேட்டேன் தானே” என்று அவளை மடக்கினான்.


“சரி என்னை உப்பு மூட்டை தூக்கி எத்தனை நாளாச்சு? நீ என்னை தூக்கிட்டு போய் என் அறையில் விட்டால் தான் நீ சொன்ன மாதிரி செய்வேன்” என்று அவனிடம் டீல் பேசினாள்.


ஒருமுறை அவளை ஏற இறங்க பார்த்தவன் தலையை உதறிக் கொண்டு முடியாது என்பது போல தலையை ஆட்டினான். “அப்போ நானும் இப்படித்தான் இருப்பேன்” என்றாள்.


“உங்கம்மா எனக்கு உதவி செய்ய தான் அனுப்பினாங்க. நீ என்னடி இப்படி வம்பு பண்ணிட்டு இருக்க? நீ எந்த ஆணியும் புடுங்க வேணாம், நானே எல்லாம் பார்த்துக்கிறேன், முதலில் கிளம்பு” என்று கறாராக சொல்லி விட்டு பூச்சரத்தை எடுத்து ஜன்னல் கம்பியில் மாட்ட முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் முதுகின் மேல் குதித்து ஏறி அவன் கழுத்தில் தன் கைகளை போட்டாள்.


அதை சற்றும் எதிர்பாராததால் அவன் அப்படியே தடுமாறி பின்புறமாக சாய்ந்தான், அங்கே இருந்த பெரிய சோபாவில் அவள் விழ, அவன் அவள் மேல் விழுந்திருந்தான்.


தன் கழுத்திலிருந்த அவள் கைகளை கோபமாக விலக்கி, உடலை அப்படியே வேகமாக திருப்பினான். எங்கே அடிக்க போகிறானோ என்று கண்களை இறுக்கமூடி பக்கவாட்டாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.


ஆத்திரத்துடன் அவளை திட்ட எத்தனித்தவன், அப்போது தான் அவர்கள் இருந்த கோலத்தை உணர்ந்தான். அவனின் ஒரு கை பேலன்ஸ்க்காக சோபாவின் ஒருமுனையை பிடித்திருக்க மறுகையோ தரையில் ஊன்றி இருந்தது. அவனுக்கு கீழே சோபாவில் அவள் கண்களை மூடி லயித்திருக்க, அவன் அவள் மேலே பட்டும் படாமல் படுத்திருந்தான். 


செந்தூரன் அவளை உப்பு மூட்டை தூக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது, இப்போதெல்லாம் அவளிடம் அவன் விளையாடுவதில்லையே என்ற எண்ணத்தில் சற்றும் யோசிக்காமல் அவள் இப்படி செய்துவிட்டிருக்க, இப்போது என்ன செய்வானோ என்ற பயத்தில் மேல்மூச்சு வாங்க, இதழ்களை கடித்தபடி, கண்களை இறுக்க மூடி படுத்திருந்தவளை ரசனையாக பார்த்தான் செந்தூரன்.


தன் கட்டுப்பாட்டை எல்லாம் மறந்து வஞ்சனையில்லாமல் அவன் கண்கள் அவளை மேலிருந்து கீழாக ரசனையாக பார்த்தது. அவள் தன் பற்களால் கடித்திருந்த அவளின் இதழ்களுக்கு அவன் இதழ்களால் விடுதலை கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, அவளின் இதழை நோக்கி குனிந்தான்.


அப்போது தான் உள்ளே வந்த சுபாஷ், செந்தூரனும் தாரிகாவும் இருந்த கோலத்தை பார்த்து, “செந்தூரா” என்று சத்தமாக கத்தினார்.


அந்த சத்தத்தில் சுயம் பெற்றவன் சட்டென்று அவள் மேலிருந்து அகன்று எழுந்து நின்றான். சுபாஷ் அவனை சுட்டெரிப்பதை போல பார்த்தார். அவன் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை என்றாலும் அவர் வந்த போது அவர்கள் இருந்த கோலம் யாருக்கும் கோபத்தை வரவழைக்கும் என்பதால் பின்புறமாக தலையை கோதியபடி பக்கவாட்டாக திரும்பி, “சாரி ஏதோ எதிர்பார்க்காமல்..” என்றவனை “போதும் உன் விளக்கம்” என்று அவனை அதட்டினார் சுபாஷ்.


அவரின் கோபம் புரியாமல் விழித்த தாரிகாவோ, “அப்பா மாமா மேல் தப்பு இல்லை, நான் தான் அவரை உப்பு மூட்டை தூக்க சொல்லி…” என்று ஆரம்பித்தவளை தீப்பார்வை பார்த்தார். 


“இப்போ உடனே உன் அறைக்கு போகலைனா, கன்னம் பழுத்திடும்” என்றார் கர்ஜனையாக. எதற்காக இத்தனை கோபப்படுகிறார் என்று புரியாமல் தந்தையின் அதட்டலில் கண்கள் கலங்க மாடியை நோக்கிச் சென்றாள்.


இப்போது செந்தூரனை நோக்கி திரும்பியவர், “அன்றைக்கு தாரிகா அறைப்பக்கம் போகாதேனு சொன்னதுக்கு உனக்கு கோபம் வந்துச்சே, இப்போ புரியுதா எதுக்கு அப்பவே உன்னை எச்சரித்தேன்னு, இப்படி எல்லாம் நீ நடந்துக்குவனு முன்கூட்டியே எனக்கு தெரியும், உன்னை நம்பி எப்படி என் பெண்ணை இனி வீட்டில் விட்டுட்டு போகமுடியும்?” என்று மேலும் பேசிக் கொண்டே போனவரை இடைமறித்தான் செந்தூரன்.


“மாமா போதும் நிறுத்துங்க. நான் வேணும்னு எதுவும் செய்யலை, எதிர்பார்க்காமல் நடந்துவிட்டது, நானும் இத்தனை நாள் கட்டுப்பாட்டோடு தான் இருந்தேன்” என்றான் அழுத்தமான குரலில்.


“பார்த்தேனே இன்று உன் கட்டுப்பாட்டோட லட்சணத்தை” என்றார் அவர் வெறுப்பாக. இப்போது சுபாஷின் மேல் செந்தூரனுக்கு கோபம் வந்து விட்டது, “தப்பு செய்யணும்னு நினைக்கிறவன், இப்படி ஹாலில் கதவை திறந்து போட்டுட்டு செய்ய மாட்டான், நான் நினைச்சால் அவளை தட்டி தூக்கிட்டு போகும் உரிமையும் எனக்கு இருக்கு. அவளோட திருமண வயதிற்காகத் தான் பொறுமையாக காத்திருக்கேன்” என்றான்.


சத்தம் கேட்டு சாரதா அப்போது தான் அங்கே வந்திருந்தார். என்னவாயிற்று என்று கணவரையும் செந்தூரனையும் திரும்பி திரும்பி பார்த்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கிடையே இத்தனை நாளாக இருந்த பனிப்போரை விடுத்து நேராக சண்டைப் போட்டுக் கொள்ள தயாராக இருந்தனர். ஒருவரை ஒருவர் கோபமாக பார்த்துக் கொண்டிருக்கவும் சாரதாவிற்கு கவலையாக இருந்தது.


“என்ன சொன்னே? என் பெண்ணை தட்டி தூக்கிட்டு போவியா? யார் உனக்கு அந்த உரிமையை கொடுத்தது? முறை மாமனாக பிறந்து விட்டால் அதுவே தாரிகாவை கட்டிக் கொள்ள தகுதியாகி விடுமா? இப்போது என்னோட ஸ்டேடஸ் என்ன தெரியுமா உனக்கு? தி கிரேட் சாரதா இன்டஸ்டிரியின் ஓரே வாரிசான என் மகளுக்கு போயும் போயும் விவசாயம் படித்து வயக்காட்டில் வேலைச் செய்பவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பேன்னு கனவிலும் நினைக்காதே” என்றார் கோபமாக.


சாரதா கணவனின் பேச்சில் விக்கித்து நின்றார்.”என்னங்க பேசறீங்க? சின்ன வயசில் இருந்து செந்தூரனுக்கு தான் நம்ம தாரிகானு பேசி முடிச்சது தானே? கோபத்தில் என்ன பேசறோம்னு தெரியாமல் பேசாதீங்க” என்றார் பதட்டமாக.


இப்போது மனைவியின் பக்கம் திரும்பியவர், “நான் தெரியாமல் பேசறனா? நீயும் உன் முட்டாள் குடும்பமும் தான் என் மகள் பிறந்ததிலிருந்து அவள் தான் இந்த செந்தூரனின் மனைவினு சொல்லிட்டு இருக்கீங்க. நான் ஒரு போதும் அப்படி சொன்னதில்லையே?” என்று வார்த்தைகளை அமிலமாக உமிழ்ந்தார்.


“நீங்க சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. என் அத்தை மகள் எனக்கு தான், உங்கள் சம்மதமோ அனுமதியோ அதற்கு அவசியமே இல்லை” என்றான் செந்தூரன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அழுத்தமான குரலில்.


“ஓ அப்படியா? என் சம்மதம் தேவையில்லையா? அப்போ அவள் சம்மதமும் வேண்டாமா? கட்டாயத்திருமணம் செய்யப் போறியா?” என்றார் சுபாஷ் எள்ளலாக.


“நான் ஏன் கட்டாய திருமணம் செய்யணும்? என் தாராவிற்கு என்னை மிகவும் பிடிக்கும், அவள் என்னை கல்யாணம் செய்ய மறுக்க போகிறாளா என்ன?” என்றான் செந்தூரன் விட்டேற்றியாக.


“இப்போ அவளுக்கு பதினேழு வயது, இன்னும் மேஜர் ஆகலை. அதுவும் இல்லாமல் உன் குடும்பம் மொத்தமும் நீதான் அவள் கணவன்னு சொல்லி அவள் மூளையில் ஏத்தி விட்டு இருக்கீங்க. அதனால் ஒரு பூம்பூம் மாடு மாதிரி கல்யாணத்துக்கு தலையாட்டுவாளே தவிர, உன்னை முழுதாக உணர்ந்து விரும்பி உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள்” என்றார் சுபாஷ்.


“அவள் மேஜர் ஆகும்வரை காத்திருக்க என்னால் முடியும், அவள் சம்மதம் சொன்னாலும் நீங்கள் ஏத்துக் கொள்ள போவதில்லை என்று உங்கள் பேச்சிலேயே தெரிகிறது. அவள் என்னை முழுசம்மதத்துடன் தான் ஏற்றுக் கொண்டாள் என்று உங்களுக்கு எப்படி நிருபிப்பது?” என்றான்.


“இப்போது தான் சரியாக கேட்டிருக்கே செந்தூரா, அவளின் கல்லூரிப்படிப்பு முடியும் வரை நீ அவள் முன்னே வரக்கூடாது. நீ எங்கே போவியோ எனக்கு தெரியாது. நீயும் அவளை பார்க்க முயற்சி செய்ய கூடாது, அவளும் உன்னை நேரில் பார்க்கும் வாய்ப்பை அவளுக்கு தரக்கூடாது. அவளிடம் பேச வேண்டி வந்தாலும் உன் காதல் வசனங்களை பேசாமல் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே இருக்க வேண்டும்” என்றார் சுபாஷ்.


“அப்படி செய்தால்?” என்று புருவம் சுருக்கினான் செந்தூரன்


“அப்படி செய்தால், தாரிகாவின் கண்ணில் நீ படமாட்டாய். கண்ணில் படாதது கருத்தில் நிலைக்காதுனு சொல்வாங்க. ஒரு மூன்று வருஷமோ ஐந்து வருஷமோ நீ விலகி இருந்தால், அவள் உன்னை மறந்தே விடுவாள்” என்றார் சுபாஷ்.


“அவள் அப்படி மறக்கவில்லை என்றால்?” என்று அவன் பதில் கேள்வி கேட்க “நானே என் மகளை உனக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன், ஆனால் ஒன்று நமக்கிடையே நடந்த இந்த பேச்சு வார்த்தை நம்ம மூன்று பேரிடம் மட்டும் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தாரிகாவிற்கு சொல்லக்கூடாது. ஏன் உன் குடும்பத்திற்கும் சொல்லக்கூடாது” என்றார். 


பின்பு மனைவியிடம் திரும்பி, “உனக்கும் தான். நீயும் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது” என்று எச்சரித்தார்.


“என்னங்க ஆச்சு உங்களுக்கு என்னென்னவோ பேசறீங்க? என்னோட செந்தூரன் தான் தாரிகாவிற்கு கணவனாக வேண்டும் என்பது அவன் விருப்பம் மட்டும் இல்லைங்க, என் ஆசையும் அதுதான். என் ஆசையை நிறைவேற்ற மாட்டிங்களா?” என்றார் கண்கலங்க.


“என் பெண்ணை ஒரு நல்ல பிசினஸ் மேனுக்கு தான் கல்யாணம் செய்து கொடுப்பேன். வயக்காட்டில் வேலை செய்யப் போகும் உன் அண்ணன் மகனுக்கு என் பெண்ணை கொடுத்து அவள் வாழ்க்கையை சீரழிக்க நான் தயாராக இல்லை” என்றார் சுபாஷ் இறுகிய முகத்துடன் 


அதிர்ச்சியுடன் நின்றிருந்த சாரதாவின் கைகளை பற்றி அழுத்தினான் செந்தூரன், “அத்தை நீங்க கவலைபடாதீங்க, நான் தாரிகாவின் கழுத்தில் தாலிக்கட்டி உங்கள் ஆசையை நிறைவேற்றுவேன். அவர் சொன்ன மாதிரி நான் இன்றிலிருந்தே விலகி இருக்க போகிறேன். ஐந்து ஆண்டுகள் கழித்து உங்களை வந்து சந்திக்கிறேன். எனக்கு தாரிகாவின் மேல் நம்பிக்கை இருக்கு, நாங்க எங்களோட காதலை இதுவரை எங்களுக்குள் சொல்லிக் கொண்டதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவள் என்னைத் தான் விரும்புகிறாள் என்று எனக்கு நன்றாக தெரியும். நீங்க அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான் செந்தூரன்.


“செந்தூரா எங்கேடா போக போறே?” என்றார் சாரதா பதறிய குரலில்.


“என்னோட இன்ஜினியரிங் படிப்பு இந்த மாதத்தோட முடிவதால் மாஸ்டர்ஸ்க்கு ஏற்கனவே கலிபோர்னியாவில் அப்ளை செய்திருந்தேன். அங்கே ஒரு யுனிவர்சிட்டியில் எனக்கு வாய்ப்பும் கிடைத்திருக்கு. போறதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தேன். இப்போ போறதுனு முடிவு செஞ்சுட்டேன்.


அங்கே போய் உங்க கணவர் எதிர்பார்க்கிற பிசினஸ் மேனாக விவசாயத்திலேயே வளர்ந்து முன்னேறி காட்றேன். அப்படி முன்னேறிய பின்பு தான் நான் இந்தியா வருவேன். அதுக்கப்புறம் நான் என் தாராவோட சேர்வதை யாராலும் தடுக்க முடியாது, நான் இப்போதே ஊருக்கு கிளம்புகிறேன். அப்பா அம்மா காயத்ரி எல்லாம் இங்கே தான் வந்துட்டு இருக்காங்க. அவங்க கிட்ட இதைப்பற்றி எதுவும் சொல்லாதீங்க. நான் பேசிக்கிறேன். இப்போ கிளம்பறேன்” என்றவன் மாடியை ஒரு முறை பார்த்தான்.


கீழ்தளத்தில் நடப்பது எதுவும் தெரியாமல் தாரிகா அவள் அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டு ஹெட்போனை காதில் பொருத்தி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.


தாரிகாவின் மேல் இருந்த நம்பிக்கையில் செந்தூரமித்ரன் அவன் சொன்ன வாக்கை காப்பாற்ற அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post