இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-15(2) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 11-04-2024

Total Views: 35511

அத்தியாயம் -15(2)


மறுநாள் காலை கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த அஞ்சனாவிடம் வந்தவன், “சனா இன்னிக்கு கம்பெனில ஒரு பார்டி இருக்கு. நம்ம வின் பண்ணோம்ல அதுக்கு” என்று கூற, 

“அப்ப நான் லீவ் போடனுமா மாமா?” என்று கேட்டாள்.

அவள் மண்டையிலேயே ஒரு கொட்டு வைத்தவன், “செம் வரப்போகுது நினைவிருக்கட்டும். லீவ் போடுறாளாம். ஈவினிங் அம்மா வீட்டுக்கு போகாமா நேரா இங்க வானு சொல்ல தான் சொல்றேன்” என்று கூற, தலையை தேய்த்துக் கொண்டபடி “போங்க மாமா” என்று சென்றாள்.

மாலை அவன் கூறியது போலவே அர்ஜுனுடன் நேரே வீட்டுக்கு வந்தவள், “நீயும் வரியா அஜு?” என்று கேட்க, “பாப்பா.. இது ஒன்னும் வீட்டு பங்ஷன் இல்லை இஷ்டத்துக்கு யார் வேணாலும் வர்றதுக்கு. இது கம்பெனில நடக்குற பார்டி” என்று கூறினான்.

“ஸ்ஸ்.. ஆமால்ல? ஓகேடா. பை நான் அப்ப ரெடியாயிட்டு கிளம்புறேன்” என்று கூறியவள் அவனை அணைத்து விடுவித்து உள்ளே ஓடினாள்.

நேரே தங்கள் அறைக்கு ஓடியவள் உள்ளே நுழைய தனது கருப்பு நிற கோர்ட் சூட்டில் தயாராய் நின்று கொண்டிருந்த யஷ்வந்த் ஒரு கையால் தன் சிகையை சிலுப்பிக் கொண்டே வினோத்திடம் பேசிக் கொண்டிருந்தான்.

'எப்பவுமே பிளாக் தானா இந்த மாமாக்கு’ என்று எண்ணிக் கொண்டவள், ‘ஆனா இதுதான் செம்மயா இருக்கு’ என்று எண்ணி சிரித்துக் கொள்ள, ஆடவன் அவளை நோக்கி திரும்பினான். அதில் தன் சிரிப்பை நிறுத்தியவளுக்கு கன்னங்கள் அவள் அனுமதியின்றி செம்மையுறா, தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளை நோக்கினான்.

திருதிருவென விழித்தவள் வேகமாக குளியலறைக்குள் சென்றிட, அவள் சென்ற திசை கண்டு சிரித்துக் கொண்டவன் தன் பேச்சை தொடர்ந்தான். குளித்து முடித்து உடை மாற்றும் அறைக்கு சென்றவளை நிறுத்தி ஒரு பெட்டியை யஷ்வந்த் கொடுக்க, “என்னது மாமா? டிரஸ்ஸா?” என்று கேட்டாள். 

“ம்ம்” என்று அவன் கூற, அதை பிரித்துப் பார்த்தாள். அழகிய கடல் நீல நிறத்தில் மின்னிய புடவையை விழிகள் விரிய பார்த்தவள், “வாவ் மாமா.. செம்மயா இருக்கு” என்று உற்சாகமாய் கூற, லேசாய் சிரித்தவன் “ப்ளௌஸ் அதுலயே இருக்கு. எலாஸ்டிக் தான். சீக்கிரம் போய் ரெடியாகு” என்று கூறினான்.

வலையால் முழுக்கை வைக்கப்பட்டு மணிக்கட்டில் பூ வடிவ வடிவமைப்புக் கொண்ட அந்த அடர்நீல நிற ரவிக்கையை அணிந்துக் கொண்டு வலவலப்பான சாட்டின் புடவையை முந்தி மடிப்புகள் இன்றி தானே அழகுபட உடுத்தி அதற்கு தோதான ஆபரணங்களுடன் வந்தாள்.

கையில் பிரேஸ்லெட் அணிந்திருந்தவளை அதிருப்தியாய் பார்த்தவன், “சனா பேங்கிள்ஸ் எங்க?” என்று வினவ, “இதுக்கு நல்லா இருக்காதுல மாமா?” என்று கேட்டாள். “உனக்கு எந்த டிரஸ்கும் கண்ணாடி வளையல் தான் நல்லா இருக்கும்.. சரி வா” என்று கூறி அவன் சென்றிட, அவ்விடத்திலேயே தேங்கி நின்றவள் மனம் சலனம் பெற்றது.

தனக்குப் பிடித்த ஒன்று தன்னவனுக்கும் பிடித்தால், அது தானே காதலில் கொள்ளை இன்பம் கொடுக்கும்!? அந்த இன்பம் அவளைத் தாக்கி திக்குமுக்காட வைக்க, விரைந்து உள்ளே சென்றவள் புடவையின் ரவிக்கை நிறத்தில் கைநிறைய வளை பூட்டி கீழே வந்தாள்.

கூடத்தில் நின்றுகொண்டு யமுனாவுடன் பேசிக் கொண்டிருந்தவன் செவிகளை படிகளில் துறுதுறுப்பாய் இறங்கி வருபவளின் கண்ணாடி வளையலின் கிங்கினி நாதம் இன்பமாய் நிறைக்க, அவள் புறம் திரும்பியவன் இதழ்களில் கர்வமாய் ஒரு புன்னகை!

மகன் புன்னகைக்குமளவு என்னவானது என்ற ஆச்சரியத்துடன் திரும்பிய யமுனா அஞ்சனாவைக் கண்டு இதழ் விரிந்த புன்னகையுடன், “அஞ்சுமா.. அழகா இருக்கடா” என்றார்.

அதில் உற்சாகத்துடன் அவரிடம் வந்தவள் “தேங்ஸ் அத்தை” என்று கூறி, “நீங்க வரலையா அத்தை?” என்று கேட்டாள். “யாழி அவ பிரண்ட் வீட்டுக்கு போயிருக்காடா.‌ நைட் அங்க தான் ஸ்டே பண்ண போறா. அக்ஷரா அப்பாக்கு ரொம்ப முடியலையாம். அதான் நாங்க எல்லாம் பார்க்க போறோம்” என்று யமுனா கூற, “அச்சுச்சோ என்னாச்சு அத்தை?” என்றாள்.

“ஒன்னுமில்லைடா. அவங்க ஹார்ட் பேஷன். நாங்க போய் பார்த்துட்டு வந்துடுறோம்” என்று யமுனா கூற, “சரித்தை. அக்கா கிட்ட ஒன்னும் பயப்பட வேண்டாம் எல்லாம் ஓகே ஆயிடும்னு சொல்லுங்க” என்றுவிட்டு யஷ்வந்துடன் அவன் லம்போர்கினியில் புறப்பட்டாள்.

“மாமா.. எனக்கு புதுசு தான் எடுக்கப் போறீங்கனா நீங்களும் ப்ளூ கோட் எடுத்துருக்கலாம்ல? நாம மேட்சிங் மேட்சிங்கா போட்டிருக்கலாம்” என்று அவள் கூற, “ஆஹாங்?” என்றவன், “அங்க வந்து பாரு புரியும்” என்றான்.

“என்னது மாமா? சர்ப்ரைஸா?” என்று ஆர்வமாய் கேட்டவள் கண்டு சிரித்தவன், அமைதியாக வண்டியை இயக்க, சில நிமிடங்களில் நிறுவனத்தினை அடைந்தான். தன்னவளுடன் வேக வேகமாக அவன் உள்ளே நுழைய, அவனிடம் விரைந்து வந்தான் வினோத்.

'ஐயோ இந்த மாமா நல்லா கரெண்டு கம்பம் மாதிரி காலை வச்சுகிட்டு விறுவிறுனு போறாங்க. வத்தி குச்சிபோல காலை வச்சுகிட்டு நான் ஓடி தான் வரனும். காலு வலிக்குது’ என்று மனதோடு அவள் புலம்பிக் கொள்ள, வினோத் அவனிடம் விழா பற்றிய விவரங்கள் அனைத்தும் பேசினான்.

தற்செயலாக அஞ்சனாவின் உடையை நோக்கிய வினோத் விழிகள் விரிய, ஒரு நொடி அமைதியாகிப் பிறகு வினோத் துவங்கியதை கண்டுகொண்ட யஷ்வந்த் தன் சிரிப்பை மீசைக்குள் புதைத்துக் கொண்டான்.

'அப்ப மேம் டிரஸ்கு மேட்சிங்கா தான் டெகரேஷன்ல ப்ளூ ஆட் பண்ணாரா? சார் ரொமாண்டிக் கை மோட்குலாம் போவாரா?’ என்று வினோத் எண்ணிக்கொள்ள, “யோசிச்சு முடிச்சுட்டீங்கனா மேல போகலாம் வினோத்” என்று யஷ்வந்த் கூறினான்.

அதில் திடுக்கிட்டு விழித்தவன், “ச..சார்.. போகலாம் சார்” என்று கூற, “சனா..” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான். மேலே விழா நடைபெறும் அறைக்குள் நுழைந்த அஞ்சனா தன் செப்பு இதழ்தள் மெல்ல திறத்துக் கொள்ளும் வகையில் வியந்து அந்த அலங்காரங்களை நோக்க, தன்னுடை மற்றும் தன்னவன் உடை நிறத்தில் அலங்காரம் நடந்திருப்பது அவளுக்கு மேலும் உற்சாகம் கொடுத்தது.

“வாவ்..” என்று மெல்லிய குரலில் அவள் தன்னை மறந்து இயம்ப, “டெகரேஷன்ஸ் ஓகேவா மேம்?” என்று வினோத் கேட்டான். “ஓகேவா? இட்ஸ் ஜஸ்ட் ஆவ்சம். ரொம்ப அழகா இருக்கு” என்று அவள் கூற, திருப்தியான புன்னகையுடன் யஷ்வந்தை நோக்கினான்.

“இட்ஸ் ரியலி சூப்பர்ப் வினோத்” என்று யஷ்வந்த் மனமார பாராட்ட, “தேங்கியூ சார்” என்றான். 

விழா இனிதே துவங்கிட, கூட்டித்தில் ஒரு திடீர் அமைதி. ஆம்! அந்த அமைதிக்குக் காரணம் அர்ஷித்தைத் தவிர யாராக இருந்திட இயலும்? 

யஷ்வந்த் இதழில் ஒரு கோணல் புன்னகை எழ, அந்த அமைதியும் அவனது மர்ம புன்னகையும் கண்ட அஞ்சனாவும் வருவது அர்ஷித் என்று புரிந்துக் கொண்டாள். 

அழகிய அடர் சிப்பு நிற கோட் சூட்டில் கம்பீரமாய் வந்தவன் தன் வழமையான தோரணையில் மேடையில் குதித்தேற, யஷ்வந்த் இதழில் மெல்லிய புன்னகை!

தான் கொண்டு வந்த பூங்கொத்தை நீட்டிய அர்ஷித், “கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர். யஷ்வந்த் கிருஷ்ணா” என்க, “தேங்ஸ் மிஸ்டர் அர்ஷித் பிரசாத்” என்று கூறினான்.

அஞ்சனாவை ஒரு பார்வை பார்த்த அர்ஷித் சுற்றிலும் உள்ள அலங்காரங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு, “ஆர் யூ ஸச் அ ரொமாண்டிக் பெர்சன்? (நீ அவ்வளவு காதலுணர்வு கொண்ட மனிதனா?)” என்று வினவ, “வை நாட்?” என்று யஷ்வந்த் கூறினான்.

யஷ்வந்தைப் போல் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி சிரித்தவன், அஞ்சனாவிடம் கரம் நீட்டி, “ஹே லிட்டில் கேர்ள்.. கங்கிராட்ஸ்” என்று கூற, அவன் கரம் பற்றலாமா என்று யஷ்வந்தை நோக்கினாள்.

அவன் முகத்தில் எந்தவித பதிலோ உணர்வோ இல்லாதுபோக, தன் மனம் கொடுத்த உந்துதலுடன் அவன் கரத்தை பற்றி அழுத்தமான ஒரு குலுக்கலுடன் விடுவித்தாள்.
அதில் மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவன், “என்ஜாய் தி டே போத்” என்க, “யூ டூ” என்று அஞ்சனாவே பதில் கொடுத்தாள்.
தற்போது அவளை மெச்சுதலாய் பார்ப்பது யஷ்வந்தின் முறையானது.

நேரம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றபோதும் மணி இரவு பத்தையும் கடந்துவிட்டது. கால்கள் இரண்டும் ஓய்வுக்காகக் கெஞ்சி அழுவதை உணர்ந்த அஞ்சனா அவ்வப்போது யஷ்வந்தை நோக்க, அவனிடம் பெயருக்கும் சோர்வின் சாயலில்லை.

அவள்‌ பார்வையின் அர்த்தம் புரிந்தபோதும் தானாக முன்வந்து யஷ்வந்த் அவளிடம் ஏதும்‌ கேட்கவில்லை, அவளும் வாய்மொழியவில்லை. பத்தை கடந்த கடிகார முள், பதினொன்றரைரை கடக்கும்போதுதான் வந்தவர்கள் யாவரும் விடைபெற்றுச் சென்றனர்.

மீதம் இருக்கும் சொற்பான நபர்களும் கிளம்ப ஆயத்தமாகிட, வினோத்திடம் அலங்காரங்கள் கலைவதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விபரங்களைப் பேச யஷ்வந்த் சென்றான்.

சோர்ந்து போன கால்களுக்கும் வரண்டு போன தொண்டைக்கும் துளி நீர் கொடுத்து தேற்றிட எண்ணிய பாவை அங்கு வண்ண கண்ணாடி குவளைகள் அருகே இருந்த வண்ணமற்ற திரவத்திடம் வர, யஷ்வந்துடன் பேசிக் கொண்டிருந்த வினோத் தற்செயலாய் அதை கண்டு அதிர்ந்து விழித்தான்.

பேசிக் கொண்டிருப்பவன் அமைதியானதில் அவன் பார்வை செல்லும் திசையை யஷ்வந்த் நோக்க, தண்ணீர் என்று நினைத்துக் கொண்டு நிறமற்ற மதுபானத்தை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

'அடிப்பாவி..’ என்று அவளைத் தடுக்க வேண்டி ‘“வினோத் வன் செக்” என்று அவன் நீண்ட அடிகள் வைத்து வர, அதற்குள் குவளையை வாய்க்குள் கவிழ்த்து பருகியவள் முகம் அஷ்டகோலத்தில் சென்றது.

அருகே வந்தவன் ‘போச்சு’ என்று நினைக்க, அவனை பாவமாய் பார்த்தவள், “இந்த தண்ணி நல்லா இல்ல மாமா” என்க, ‘தண்ணியா? நாசமா போச்சு' என்று நினைத்துக் கொண்டான்.


Leave a comment


Comments


Related Post